தன்னெழுச்சிப் போராட்டங்கள் குறித்த முக்கியமான ஒரு கட்டுரையை உ.வாசுகி எழுதியுள்ளார். இந்தப் பிரச்சனை குறித்து தத்துவார்த்த தளத்தில் நீண்ட விவாதங்கள் மார்க்சிய இயக்கத்தில் நடந்துள்ளன.
தமிழகத்தின் சமூக, பொருளாதார,பண்பாட்டுப் பின்னணியில் இந்த மக்கள் திரள் நிகழ்வுகளை புரிந்துகொண்டு, நடைமுறை வியூகங்களை அமைக்க வேண்டிய அவசரக் கடமை நம் முன்னால் உள்ளது. அதற்கு பயிற்றுவிக்கும் கட்டுரையாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.
தமிழக நிதிநிலை அறிக்கையின் தன்மையை வெளிப்படுத்தும் கட்டுரையை வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதியுள்ளார். கேள்வி பதில் மற்றும் கட்சி திட்டம் பற்றிய தொடர் கட்டுரை பகுதி 4 வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த 5 மாநிலத் தேர்தல்கள் குறித்த ஆய்வுக்கட்டுரை இந்த இதழில் வெளியிட்டுள்ளோம்.உத்தர பிரதேசத்தில் தேசியவாத,மதவாத,சாதிய,அடிப்படையில் வாக்கு சேகரித்த பாஜகவின் ஜனநாயக விரோதங்களை கண்ணன் தொகுத்துள்ளார்.
”வளர்ச்சி”கோஷத்தினை எழுப்பி அவர்கள் செய்த தில்லுமுல்லுகளும் வெற்றிக்கு உதவியுள்ளது. ஜனநாயக,மதச்சார்ற்ற சக்திகள் எச்சரிக்கையாக இதனை எதிர்கொள்ளவேண்டும். அந்த நோக்கத்துடன் எழுதப்பட்ட கட்டுரை. அது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் உடன் மேற்கொண்ட பிரத்யேக நேர்காணலும் இந்த இதழில் இடம்பெறுகிறது.
தத்துவார்த்த ரீதியிலான இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் மார்க்சிஸ்ட் இதழில் வருவதில்லை என்ற குறையை போக்கும் வகையில் “முகிலினி”நாவல் விமர்சனக் கட்டுரையை ரகுராம் எழுதியுள்ளார். ஆளும் வர்க்க சித்தாந்தங்களோடு போராட ஒரு முக்கியமான களம், இலக்கிய களம். எனவே மார்க்சிஸ்ட் இந்த துறையிலும் பங்களிப்பு செய்திடும்.
ராகுல சாங்கிருத்தியாயன் பற்றிய வரலாற்றுக் குறிப்பு அவரது நினைவினைப் போற்றும் வகையில் வி.ப.கணேசன் எழுதியுள்ளார்.
மாக்சிஸ்ட் இதழின் ‘செயலி’ வெளியாகியுள்ளது. தோழர்கள் அதன் வழியே பழைய கட்டுரைகளை வாசிக்கலாம். குறிப்புகள் எடுக்கலாம். உடனுக்குடன் கருத்துக்களை அனுப்பலாம்.
ஏப்ரல் மாதத்தில் மார்க்சிஸ்ட் சார்பாக தமிழகப் பொருளாதாரம், பண்பாடு-மக்கள் எழுச்சி, இந்துத்துவ அச்சுறுத்தல் – இடது மாற்று என்ற முக்கியத் தலைப்புக்களில் சேலம், தஞ்சை, காஞ்சிபுரம் (சிங்கபெருமாள் கோயில்) திருநெல்வேலி ஆகிய இடங்களில் மண்டல கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.
இத்துடன், சந்தா சேர்ப்பு பணியும் நடைபெற உள்ளது. அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பினை நல்கிட வேண்டுகிறோம்.
– ஆசிரியர் குழு.
Leave a Reply