மார்க்சிஸ்ட் இதழிலும்,தொடர்ந்து அவரது வாழ்க்கை குறித்தும், சிந்தனைகள் குறித்தும், விசேட படைப்புக்களை வெளியிட எண்ணியுள்ளோம்.
மார்க்சிய லெனினியம் காட்டும் பாதையில்தான் மார்க்சிஸ்ட் இதழின் அனைத்து படைப்பாக்கங்களும் அமைய வேண்டுமென்ற உறுதிப்பாடு கொண்டது, மார்க்ஸிஸ்ட் இதழ்.
முதலாளித்துவ பொருளாதார முறை மட்டுமின்றி, அதற்கு பக்கபலமாக உள்ள கருத்தியல் அனைத்தையும் அறிவதற்கு மார்க்ஸ் எழுத்துக்களும், மார்க்சியம் உருவாக்கிய இயக்கவியல, வரலாற்றியல் பொருள் முதல் வாதமும் உதவுகிறது.
முதலாளித்துவ அமைப்பை அறிவதற்கு மட்டுமல்லாமல், அதனை தூக்கியெறிந்து சோசலிசம் படைக்கவும் உலக பாட்டாளி வர்க்கத்திற்கு வழிகாட்டுவது, மார்க்சின் எழுத்துக்கள்.
முதலாளித்துவ அறிவுலகம் மார்க்சின் சிந்தனையை மறைக்கவும், திரிக்கவும், திசைதிருப்பவும் முயற்சித்து வருகிறது. அந்த முயற்சிகளை முறியடிக்க கம்யூனிஸ்ட்கள கருத்துப் போராட்டக்களத்தில் தீவிரமாக செயலாற்றிட வேண்டியுள்ளது. மார்க்சிஸ்ட் இதழ் தனது பங்கினை ஆற்றிடும்.
இந்த இதழில் தோழர் ஆத்ரேயா மார்க்சின் 200-வது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி அவரது மகத்தான பங்களிப்பினை விளக்கி கட்டுரை எழுதியுள்ளார்.
வலதுசாரி போக்குகளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளி வர்க்க இயக்கத்தினை சரியான பாதையில் கொண்டு செல்வதில் ஆழமான புரிதல் தேவை. இந்த நோக்கோடு, தோழர்கள் ஏ.கே.பத்பனாபன், ஹேமலதா ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மேற்கு வங்கத்தில்,மார்க்சிஸ்ட் கட்சி,கட்சி அணிகளுக்கு அரசியல் தத்துவார்த்த கல்வியை அளிக்கும் வகையில் எடுத்த முயற்சியை தோழர் சிரிதிப் பட்டாச்சாரியா விளக்கியுள்ளார்.
மேற்குவங்கத்தில் செய்யப்பட்ட வாசிப்பு வட்டம் குறித்தான கட்டுரை மிக அருமை. மிக அவசியமான ஒன்றாக மேற்குவங்கத்தில் செய்ததை போல மிகப்பெரிய முயற்சி தமிழகத்தில் செய்யவேண்டும் என்பது எனது அவா.
LikeLike
மார்க்ஸின் 200 வது பிறந்த ஆண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸ்’ என்ற கட்டுரை, மார்க்ஸ் ஒரு சிந்தனாவாதியாக மட்டுமல்ல எழுச்சிப் போராட்டங்களிலும் பங்கெடுத்த சமூகப் போராளி என்பதையும் நாம் அறிய் வைத்துள்ளார். மாறிவரும் மனித சமூக அமைப்புகள் , உற்பத்தி , மற்றும் உற்பத்தி உறவு கள் பற்றிய அறிவியல் ரீதியான அணுகுமுறை பற்றிய விளக்கம் என உள்ள இந்தக் கட்டுரை ‘ நம்முன் உள்ள போராட்டம் நீண்ட நெடிய ஒன்று, இந்தப் பயணத்தின் இறுதிப் பரிசு அனைத்து மானுடத்தின் விடுதலைதான்’ என எளிமையாகவும் நம்பிக்கையளிக்கும் விதத்திலும் எழுதப் பட்டுள்ளது.
LikeLike