மேற்குவங்கத்தில் பிரம்மாண்டவாசிப்புஇயக்கமும், அனுபவமும்


(மேற்குவங்கத்தில் நடைபெற்ற கட்சித் திட்டத்தின் மீதான வாசகர் வட்ட இயக்கத்தின் சிறப்பம்சங்களை விளக்குகிறது இந்தக் கட்டுரை)

  • சிரிதிப்பட்டாச்சார்யா

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அதன் அரசாங்கமும் கட்டவிழ்த்துட்டுள்ள பாசிச அடக்குமுறைக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஜனநாயக மீட்புக்கான போராட்டத்தின் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழு தனது கட்சிஅணிகளுக்கு கட்சி அரசியல்கல்வியை தீவிரமாகப் பயிற்றுவிப்பதென முடிவு செய்தது.

புரம்மோத் தாஸ்குப்தா கல்விமையத்தில் நிரந்தர கட்சிப் பள்ளி மாநிலஅளவில் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதில் தொடர்ச்சியாக மாநிலஅளவிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவிலும் கட்சிவகுப்புகள் முறையாக நடைபெற்று வருகின்றன. சில மாவட்டக் குழுக்களும் நிரந்தரக் கல்விமையத்தை உருவாக்கி நடத்தி வருகின்றன.

கட்சித் திட்ட கூட்டு வாசிப்பு:

2015-ல் நடைபெற்ற கல்கத்தா கட்சி ஸ்தாபனத்திற்கான பீளினம் கட்சி தோழர்களின் தரத்தை உயர்த்தி கட்சி கல்வி அளிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தி இருந்தது. இதன் பின்னணியில் மேற்குவங்கத்தில் கட்சிக் கல்வி குறித்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கட்சிக்கல்வி அளிப்பதற்கான தீவிரமான முயற்சிகளை மேற்குவங்க மாநிலக்குழு மேற்கொண்டு வந்தபோதிலும் மாநிலம் முழுவதும் உள்ள கட்சிகிளைகள், உறுப்பினர்கள், துணைக்குழுஉறுப்பினர்களுக்கு கட்சிக்கல்வி முழுமையாகச் சென்றடையவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது. எனவே மாநிலம் முழுவதும் உள்ள வாசிப்பு வட்டங்களை மேலும் வலுப்படுத்தி கட்சி முழுவதும் இப்பணியில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது. மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து கட்சிக்கிளைகளும் வாசிப்புவட்டங்கள் மூலம் கட்சித்திட்டத்தை கொண்டு செல்வது; இதில் கட்சி உறுப்பினர்கள், துணைக்குழுஉறுப்பினர்களை பங்கேற்க வைப்பது என திட்டமிடப்பட்டது.

திட்டமிடல்:

இந்த முடிவு சற்று நெகிழ்வுத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டது. அதாவது மார்ச் 19 அன்று இந்த வாசிப்பு வட்டத்தை நடத்தமுடியாத கிளைகள் மார்ச் 26க்குள் ஏதாவது ஒருதேதியில் நடத்தலாம் என ஆலோசனை தரப்பட்டது.

கிட்டதட்ட 2 1/2 மாதங்களுக்கு முன்பாகவே இந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சிகளை மிகவும் வெற்றிகரமாக நடத்தும் வகையில் இதற்கான திட்டமிடல்களும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. வாசிப்புவட்டத்தின் அவசியம் குறித்து கட்சிஅணிகள் முழுமைக்கும், கட்சித்தலைமைக்கும் உணரவைக்கும் வகையில் முதல்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலக்குழு அதற்கான குறிப்பு ஒன்றை தயாரித்து வாசிப்பு வட்டம் எத்தகைய முறையில் நடத்தப்பட வேண்டும் என்று வழிகாட்டியது. இந்த குறிப்பின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் எவ்வாறு இந்த பயிற்சிபட்டறைகள் நடத்துவது;அதில் மாவட்ட தலைவர்களும், வகுப்பினை துவக்கிவைக்கும் ஆசிரியர்களும் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. இது ஒரு கட்சித்திட்டத்தின் மீதான கூட்டுவாசிப்பே தவிர இது ஒரு கட்சிவகுப்பு அல்ல என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த வாசிப்பு வட்டத்தை உயிரோட்டமாக நடத்திட இந்தத் தலைப்பின்மீது விவாதத்தை துவக்கிவைப்பது அவசியமாகிறது. கட்சித்திட்டம் குறித்து ஒரு சுதந்திரமான விவாதம் நடத்திட இத்தகைய ஒரு தூண்டுதல் அவசியமாகிறது. கட்சித்திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய ஆர்வத்தை தூண்டுவதே இந்த வாசிப்புவட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகிளைகளும் 2லட்சத்திற்கும் அதிகமான கட்சிஉறுப்பினர்களும் உள்ள மேற்குவங்கத்தில் அனைத்து கட்சிகிளைகளிலும் வாசிப்புவட்டம் நடத்துவது என்பது பேராசைகொண்ட விஷயமாகவே தோன்றும். மாநிலகுழு இதனை பெரும்சவாலாக எடுத்துக் கொண்டது. கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இத்தகைய ஆர்வத்தை தூண்டிவிட ஆயிக்கணக்கான முன்முயற்சியாளர்களை உருவாக்க வேண்டியிருந்தது. இத்தகைய முயற்சிக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமானதாக இருந்தது. கட்சித்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து மிகக்குறைவான நேரத்தில் அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறுகுறிப்பு தயார்செய்வது. இதன் மூலம் வாசிப்புவட்ட இயக்கம் துடிப்புமிக்க நிகழ்ச்சியாக மாறியது.

இரண்டாவதாக இந்தக்குறிப்பின் உதவியுடன் ஏராளமான முன்முயற்சியாளர்களை உருவாக்கும் வகையில் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவது. வாசிப்புவட்டத்தை மார்ச் 19 அன்று நடத்துவது மட்டுமே கட்சியின் முக்கிய பணி என்று மாநிலக்குழு அறிவித்தது.

நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள்:

மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பிரச்னைகளுக்காக மாவட்டங்களில் வர்க்க,வெகுஜன போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருந்தபோதிலும் மாவட்டக்குழுக்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டன.

கிளைமட்டத்தில் முன்முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் மாவட்டங்களில் பயிற்சிப்பட்டறைகள் நடைபெற்றன. ஏராளமான முன்முயற்சி வட்ட ,பகுதிக்குழு மட்டத்திலும் பயிற்சிப்பட்டறைகள் நடைபெற்றன. வாசிப்புவட்டங்களில் மூன்று மணிநேரம் விவாதம் நடைபெறும் வகையில், கட்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைப்பவர் 30 அல்லது 35 நிமிடங்களுக்கு மிகாமல் தங்களது அறிமுக உரையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கட்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைப்பவர் குறித்த நேரத்தில் தனது உரையை முடித்துக்கொள்வதற்கு உதவியாக மாநிலக்குழு தயாரித்த குறிப்பும் அதற்கேற்றவகையில் சுருக்கமாக இருந்தது.

பயிற்சிப்பட்டறைகளிலும் அந்தக்குறிப்பு 30 நிமிடங்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சி உறுப்பினர்கள், துணைக்குழு உறுப்பினர்கள் வாசிப்புவட்டத்தில் கலந்து கொள்வதற்குமுன் கட்சித்திட்டத்தை படித்துவிட்டு வரும்படி கோரப்பட்டது. எனவே பெரும்பாலான கட்சிஉறுப்பினர்கள் வாசிப்புவட்டத்திற்கு வந்து பங்கேற்பதற்கு முன்னதாகவே கட்சித்திட்டத்தை படித்து விட்டு வந்திருந்தனர். கல்கத்தாவில் உள்ள நேஷனல் புக் ஏஜென்சி, மாவட்டத்தில் உள்ள புத்தக விற்பனைநிலையங்களில் ஏராளமான கட்சித்திட்ட பிரசுரங்கள் வங்காளி, ஹிந்தி, உருது மொழிகளில் விற்பனையாகின. 39,000 பிரதிகள் வங்க மொழியிலும் 1,700 பிரதிகள் ஹிந்தியிலும் 80 பிரதிகள்உருதுமொழியிலும் கட்சித்திட்ட பிரசுரங்கள் விற்பனையாகின.

இந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் உள்ள கட்சித்தோழர்கள் பெருமளவில் உற்சாகத்துடன் பங்கேற்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். மாநிலமையம், மாவட்ட, பிராந்திய கமிட்டி மையங்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு, வழிகாட்டுதல் காரணமாக இந்த இயக்கம் பெரும் வெற்றி பெற்றது.

மிகச் சிறந்தஅனுபவம்:

மார்ச் 19 அன்று காலை முதலே மாநிலம் முழுவதும் உள்ள கட்சிஊழியர்கள் மத்தியில் ஒருவித விழாக்கோல உற்சாகம் காணப்பட்டது. மாவட்டத்தில் உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப இரண்டு, மூன்று கட்சிக்கிளைகளை இணைத்தும் கூட இந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் இந்த வாசிப்பு வட்டங்கள் நடைபெற்றன. சில தீவிரவாதப் பகுதிகளில் உள்ள தோழர்கள் வாசிப்புவட்டங்களில் கலந்துகொள்வதற்கு வசதியாக மாற்றுஇடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் மட்டும் அன்றைய தினம் 21 கட்சிக்கிளைகள் தங்கள் வாசிப்புவட்ட நிகழ்ச்சிகளை நடத்தின. இந்த ஒருதகவல் மட்டுமே இந்த இயக்கம் எத்தகைய ஆர்வத்துடன் தீவிரமாக நடைபெற்றது என்பதற்குச் சான்றாகும்.

மார்ச் 31 அன்று மாநிலக்குழு இந்த இயக்கம் குறித்து ஒருவிரிவான பரிசீலனையை மேற்கொண்டது. ஏழு கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை இந்த பரிசீலனைக்கூட்டங்கள் நடத்துவதற்கு முன்பாகவே மாவட்டக்கமிட்டிகளுக்கு மாநிலக்குழு அனுப்பி வைத்தது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சிக்கல்விக்கான பொறுப்பாளர்களை இந்த பரிசீலனை அறிக்கையில் இருந்து இந்த நிகழ்ச்சி மூலம் கட்சிக்குள் ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்க்க முடிகிறது. இந்த வாசிப்புவட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டதாக உள்ளது. மாநிலரீதியான சராசரிவருகை என்பது 72 சதவிகிதமாகும். குறைந்தபட்ச வருகை 52 சதமும், அதிகபட்ச வருகை 80 சதம் என்றவகையிலும் இது இருந்தது. மாவட்டக்கமிட்டிகள் அனுப்பிய அறிக்கை மூலம் இந்த வாசிப்பு வட்டங்களில் பங்கேற்காத தோழர்களை மீண்டும் இத்தகைய வாசிப்புவட்டத்தில் பங்கேற்க முயற்சி நடப்பதாக அறியமுடிகிறது. எனவே இறுதியாக இத்தகைய முயற்சிகள் நடக்கும்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் விகிதாச்சாரம் மேலும் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.

மூன்று மாவட்டங்களின் வருகை இங்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம்:

வடக்கு 24 பர்கானா, மேற்குமிட்னாபூர், டார்ஜிலிங் ஆகிய மூன்று மாவட்டங்கள் மாநிலத்தில் வேறுபட்ட பகுதிகளில் அமைந்துள்ளன. 24 பர்கானா மாவட்டத்தில் 75 சதம்பேர் இந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இம்மாவட்டத்தில் உள்ள ஒரு பிராந்தியக் கமிட்டியான ஹக்ராவில் வாசிப்புவட்டத்தில் கலந்துகொண்டவர்களின் வருகை 92 சதமாகும் மொத்தமுள்ள 32 பிராந்திய கமிட்டிகளில் 8 கமிட்டிகளில் மட்டும் 80 சதவிகிதத்திற்கும் மேலான கட்சிஉறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேற்குமிட்னாபூரில் சராசரி வருகை 56 சதமாகும். மொத்தமுள்ள 33 பிராந்தியகமிட்டிகளில் 8 கமிட்டிகளில் மட்டுமே 70 சதவிகிதத்திற்கும் மேலான தோழர்கள் கலந்து கொண்டனர். டார்ஜிலிங் மாவட்டத்தில் சராசரி வருகை 70 சதமாகும். ஆனால் கிராமப்புற, 62 பிராந்தியங்களில் வருகை சற்றுகுறைவாக இருந்தது.

இந்த வாசிப்புவட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஈடுபாடு பலவகைளில் மாறுபட்டதாக இருந்தது. கட்சித்திட்டத்தின்மீது மட்டுமல்லாமல் இதர பிரச்சனைகள் குறித்தும் இந்த வாசிப்புவட்டத்தில் பலவித கேள்விகள் எழுப்பப்பட்டன. கட்சித்தோழர்களின் உணர்வுமட்டம் குறித்துப் புரிந்து கொள்வதற்கு இந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சியை லெனின் பிறந்ததினமான மார்ச் 22 அன்று நடத்துவதற்கு கல்கத்தா மாவட்டக்குழு மாநிலக்குழுவிடமிருந்துஅனுமதி பெற்றிருந்தது.

பரிசீலனையின்போது இந்த வாசிப்புவட்ட இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முன்முயற்சியாளர்கள் எதிர்காலத்தில் கட்சிக்கு மதிப்புள்ள சொத்தாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றதன் விளைவாக கிளைமட்டத்தில் பெரும்ஆர்வம் உருவாகியுள்ளது. இந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தவேண்டும் என அவர்கள் வலியுறுத்துவதாக மாவட்டக்கமிட்டிகளின் அறிக்கையில் இருந்து அறிய முடிகிறது.

மேற்குவங்க மாநிலக்குழுவில் அதேமுறையில் திட்டமிடுவது என யோசித்து வருகிறது. வரும்ஆகஸ்ட் 5 அன்று நமது நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினை ஸ்தாபித்தவர்களில் ஒருவரான முசாபர் அகமது அவர்களின் பிறந்ததினத்தன்று மாநிலம் முழுவதும் இந்த வாசிப்புவட்ட இயக்கத்தை நடத்துவது என தீர்மானித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நாளில் மாநிலம் முழுவதும் வாசிப்புவட்டம் நடத்திய தனித்துவம்மிக்க அனுபவத்தை பரிசீலித்த மாநிலக்குழு கட்சிஅணிகள் மத்தியில் இந்த வாசிப்புஇயக்கம் ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்ற முடிவுக்கு வந்தது.

இந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சிகள் எவ்வாறு கட்சியின் இயக்கம், போராட்டங்களை கட்சிக்கல்விக்கான இயக்கத்துடன் சுலபமாக ஒன்றிணைக்கமுடியும் என்பதை தெளிவுபடுத்தவும் உதவியுள்ளது.

தமிழில்: .உதயகுமார்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s