1989 ஆம் ஆண்டு முதல் வெளியாகிவரும் தத்துவார்த்த மாத இதழ் மார்க்சிஸ்ட். எமது பயணத்தின் அடுத்த தொழில்நுட்ப வளர்ச்சியாக அமைந்தது மார்க்சிஸ்ட் செயலி.
மார்க்சிஸ்ட் ரீடர் – ஆண்ட்ராய்ட் செயலி ஏப்ரல் 5, 2017 அன்று வெளியிடப்பட்டது. நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் ஆசிரியர் என்.குணசேகரன் தலைமையேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் செயலியைத் தொடங்கிவைத்தார்.
மார்க்சிஸ்ட் செயலியை தரவிறக்கம் செய்ய, ஆண்ட்ராய்ட் அலைபேசியில் இருந்து Marxist Reader : https://play.google.com/store/apps/details?id=com.marxist.android இந்த முகவரியை சொடுக்கவும்.
செயலியில் உள்ள வசதிகள்:
1) மார்க்சிஸ்ட் இணையதளத்தில் கட்டுரைகள் ஏற்றப்பட்ட அடுத்த நொடியில் கட்டுரைகளைப் பெறலாம்.
2) இரவுக்கும், பகலுக்கும் ஏற்ற முறையில் வண்ணங்கள் மாற்றும் வசதி.
3) 5 வண்ணங்களுக்கிடையே தேர்வு செய்துகொள்ளும் வசதி.
3) கட்டுரைகளை தானாக புக் மார்க் செய்து, விட்ட இடத்திலிருந்து தொடரும் வசதி.
4) உடனுக்குடன் கருத்துக்களை அனுப்பலாம். தனித்தனியாக கட்டுரைகள் மீதும், மொத்தமாகவும்.
5) இணையத்தில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் தேடுபொறியைப் பயன்படுத்தி சுலபமாகத் தேடலாம்.
6) மாத வாரியாகத் தேட, பெட்டக வசதி உண்டு.
7) வாசகர் வட்டங்களில் இணைந்திடுவதற்கான வசதி.
8) கட்டுரைகளில் இருந்து மேற்கோள்களை எடுத்து பகிரும் வசதி.
9) மார்க்சிஸ்ட் இணைய லின்க் எங்கிருந்து தேர்வு செய்தாலும், செயலியில் படிக்கும் வசதி.
விரைவில் வாட்சாப், இ-மெயில், டெலகிராம், பேஸ்புக் குழுக்கள் ஏற்படுத்தி, அதிலும் தொடர்ந்து இணைந்திருக்கவும், மார்க்சியக் கல்வியை வளர்த்துக்கொள்ளவும் செய்யலாம்.
செயலியை தரவிரக்கம் செய்துகொண்டு, மார்க்சிஸ்ட் இதழ்களைத் தொடர்ந்து வாசிக்கவும், விவாதிக்கவும், தத்துவார்த்த விவாதங்களைத் தொடரவும் கேட்டுக் கொள்கிறோம்.
சிறப்பான முறையில் செயலியை வடிவமைத்த தோழர் கலீல் ஜாகீர் பாராட்டுக்குரியவர். முகப்பு ஓவியம் கோ.ராமமூர்த்தி.
– ஆசிரியர் குழு.
செயலியை வடிவமைத்த அனைத்து தோழர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிஸ்ட் புத்தகத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்க என் போன்றவர்களுக்கு இது அற்புதமான செயலி. இடதுசாரி சிந்தனையுள்ள எனக்கு தெரிந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் பலரும் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
LikeLike