ஜி.ராமகிருஷ்ணன்
இந்தியா 1947- ல் சுதந்திர நாடானது. 2 ஆண்டு களுக்கு பிறகு 1949- ல் மக்கள் சீனத்தில் புரட்சி அரசு அமைந்தது. அண்டை நாடுகளான இவ்விரண்டின் கடந்த 70 ஆண்டு வளர்ச்சியில் இரண்டு வேறு பட்ட சமூக பொருளாதார அமைப்புகள் உருவாகி யுள்ளதை நாம் காணமுடிகிறது.
இந்தியாவில் நேரு தலைமையில் அமைந்த காங் கிரஸ் அரசு முதலாளித்துவ பாதையை கடைப் பிடிக்கத் துவங்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைந்த மக்கள் சீன குடியரசு சோசலிச பாதையை தேர்வுசெய்தது. மாசேதுங் தலைமையிலான சீன அரசு நில விநியோகம் உள்ளிட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்தியாவிலோ 1948-51 ஆண்டு காலகட்டத்தில் ஆந்திராவின் தெலங்கானா பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நிலச்சுவான்தார்களை எதிர்த் தும் நிஜாம் மன்னருடைய கொடுங்கோன்மை ஆட்சியை எதிர்த்தும் தெலங்கானா புரட்சி நடை பெற்றது. நிலவிநியோகமும் நடைபெற்றது. ஆனால், விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப் பட்ட உபரி நிலங்களை மீண்டும் நிலச்சுவான் தார்களுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை நேரு தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டது. இடதுசாரிகள் ஆட்சியமைத்த மாநிலங்கள் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் தவிர இந்தியா வின் பிறபகுதிகளில் நிலச்சீர்திருத்தம் மேற் கொள்ளப்படவில்லை.
வார்த்தை ஜாலங்களும், வர்க்கச் சார்பும்
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கொடியை இறக்கி விட்டு, தேசியக்கொடியை பறக்கவிட்டு 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் பண்டித நேரு ஆற்றிய உரை நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர் பார்ப்பை உருவாக்கியது.
“எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் சரி, நாம் அனைவரும் சமமான உரிமைகளை, சலுகைகைளை, கடமைகளை கொண்டவர்களா வோம். நம்மால் வகுப்புவாதத்தையோ அல்லது குறுகிய மனப்பாங்கையோ ஆதரிக்க முடியாது. ஏனெனில் சிந்தனையிலோ அல்லது செயலிலோ குறுகிய மனப்பாங்குடைய மக்களைக் கொண்ட எந்தவொரு நாடும் மகத்தான நாடாக உருவாக முடியாது.”
“அறியாமை, நோய், வாய்ப்புகளில் நிலவும் சமத்துவமற்ற நிலை ஆகியவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.”
“துயரம் மிகுந்த வறுமைக்கும் சுரண்டலுக்கும் ஒரு முடிவு; நிலம், நியாயமான ஊதியம், வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சமூகத் தீங்குகளான சாதியம், சமூகப் பகைமை போன்ற வற்றிலிருந்து விடுதலை” கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பை பண்டித நேரு ஆற்றிய உரை மக்கள் மத்தியில் உருவாக்கியது. மேற்சொன்னவை வார்த்தை ஜாலங்கள் அல்ல; இந்திய அரசின் வர்க்கத் தன்மை தான் எதிர்கால வளர்ச்சியை தீர்மானித்தது.
பெருமுதலாளிகளின் தலைமை
ஆம், இந்தியாவில் புதிய அரசுக்கு தலைமை ஏற்றது பெரு முதலாளி வர்க்கமே.
மத்திய அரசு பிரதிநிதித்துவப்படுத்திய பெரு முதலாளித்துவ வர்க்கம் (நிலச்சீர்திருத்தம் மேற் கொள்ளாமல்) நிலப்பிரபுகளுடன் ஒரு கூட்டணியை அமைத்துக் கொண்டதோடு ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டது. முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கூட்டின் பிரதிபலிப்பாகவே காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கொள்கைகள் இருந்தன. தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில் பின்பற்றப்பட்ட முதலாளித்துவ பாதையின் திசைவழி ஆளும் வர்க்கங்களின் இந்த தன்மையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது.
முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம், உருக்கு, நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்றவற்றின் உற்பத்தி அடிப்படையானது. இத்துறைகளில் தங்களால் மூலதனமிட இயலாது என்பதால் அரசே மேற்கண்ட துறைகளில் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்திக்கு திட்டமிட இந்திய பெருமுதலாளிகள் வலியுறுத்தினார்கள். இதுதான் 1940 களில் பிர்லா திட்டம் முன்வைத்த ஆலோசனை.
நில விநியோகம் செய்து நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், ஏழை விவசாயிகளின் வருமானத்தை பெருக்கியிருந்தால் அவர்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, சந்தை விரிவடைந்து, முதலாளித்துவ வளர்ச்சிக்கு வழிவகுத்திருக் கும். ஆனால், மத்திய அரசு கடைப்பிடித்த பொருளாதாரப் பாதையோ நெருக்கடியைத் தான் உருவாக்கியது. ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி கடனைப் பெற்று, அவை விதித்திடும் நிபந் தனைகளை மைய அரசு ஏற்று, இந்திய பொருளா தாரத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு திறந்து விட்டது.
ஏகாதிபத்தியத்தின் சுரண்டல்
1980கள் வரையில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியினால் பலன் பெற்ற பெரு முதலாளிகள் தற்பொழுது தங்களிடம் மூலதனம் உள்ளது. எனவே பொதுத்துறை நிறுவனங்களை தங்களுக்கு (அடி மாட்டு விலைக்கு) விற்றுவிட மத்திய அரசை வலியுறுத்தினர். கேந்திர தொழில்கள் பொதுத் துறையில் இருப்பது சந்தையில் தங்களுக்குச் சவாலாக இருக்கும் என்பதால், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட வேண் டும் என ஏகாதிபத்தியம் இந்திய அரசை நிர்ப் பந்தப்படுத்தியது. பெரும்பான்மையான காலனி நாடுகள் விடுதலை அடைந்த பிறகு, ஏகாதிபத்திய நாடுகளின் நேரடியான ஆதிக்கம் நின்றது. தங்கள் நாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகளில் இருந்து மீள நவீன தாராள மய கொள்ளையை தங்கள் நாட்டில் அமலாக்கியதோடு, இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீதும் திணித்தது.
1947 க்கு முன்பு அடிமை இந்தியாவில் ஏகாதி பத்தியம் நேரடியாக நிர்வாகத்தில் ஆதிக்கம் வகித்தது. 1947 வரையில் இந்தியாவில் வைஸ் ராயாக, நீதிபதிகளாக, அதிகாரிகளாக, நேரடி நிர்வாகத்தில் இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் கொள்ளையடித்து தங்கள் நாட்டு வளர்ச்சிக்கு மூலதனத்தை சேர்த்தது. தற்பொழுது நேரடி நிர்வாகத்தில் இல்லாமலேயே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி நவீன, தாராளமய கொள்கையின் மூலம் பல மடங்கு கொள்ளை லாபம் ஏகாதிபத்திய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் சேர்க்கின்றன.
தாராளமய காலகட்டம்
கடந்த 25 ஆண்டு கால நவ தாராளமய பொருளாதார கொள்கையை மத்தியில் ஆண்ட இரண்டு கட்சிகளும் தங்கு தடையின்றி கடைப் பிடித்தன. கடந்த மூன்றாண்டு காலமாக பாஜக தலைமையிலான அரசு வேக வேகமாக தாராளமய பொருளாதாரக் கொள்கையை அமலாக்கி வருகிறது. பொருளாதார கொள்கையில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
கடந்த 70 ஆண்டு காலத்தில் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி நீடித்த போதும், வேறுபல பின்தங்கிய நாடுகளை ஒப்பிடுகிற போது ஒருபகுதி முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த வளர்ச்சியின் பலன் யாருக்கு என்பது தான் கேள்வி. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போதும், பாஜக தலைமையிலான ஆட்சியின் போதும் கடைப் பிடிக்கப்பட்ட பொருளாதார கொள்கையினால் மக்கள் மத்தியில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள இடைவெளிபோல் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியா வின் ஒரு சதவீத செல்வந்தர்கள் நாட்டின் ஒட்டுமொத்த சொத்துக்களில் 58.4 சதவீதத்தை உடைமையாக்கிக் கொண்டுள்ளனர். (2014 -2017 காலகட்டத்தில் சுமார் 10 சதவீத சொத்துக்கள் பணக்காரர்களின் கைக்கு மாற்றப் பட்டுள்ளன) 2000-ம் ஆண்டில் இந்த அளவு 36.8 சதவிகிதமாக இருந்தது. நாட்டின் செல்வச் செழிப்பில் தற்போது காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள 70 சதவீ தம் பேரின் சொத்துக்கள் வெறும் 7 சதவீதம் மட்டுமே. இதே 70 சதவீத இந்தியர்களின் பங்கு 2010ம் ஆண்டில் இதை விட இரண்டு மடங்காக அதாவது 14 சதவீதமாக இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒன்றுமேயில்லாத ஏழை களின் கைகளில் இருந்து சொத்துக்கள் உறிஞ்சப் படுகின்றன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர் களாக, ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆனார் கள் என்பதை மத்திய அரசு மேற்கொண்ட சமூக, பொருளாதார ஆய்வறிக்கையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
நாட்டில் உள்ள உழைப்பு சக்தியில் 90 சதவீதம் பேர் (விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்டு) முறைசாரா தொழிலாளர் குடும்பங்களே. குறிப் பாக கடந்த 25 ஆண்டு கால நவீன தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட காலத்தில் கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் தொழி லாளர்களிடையே முறைசாரா தொழிலா ளர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைமையிலான மாநில அரசுகள் அமலாக்கி வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை பெரும்பகுதியான உயர் நடுத்தர வர்க்கம் ஆதரிக் கிறது. இக்கொள்கை அமலாக்கம் நடுத்தர வர்க்கம் மற்றும் உயர்நடுத்தர வர்க்கம் மீது மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
தொடர்ந்து பல ஆண்டு காலமாக விவசாயத் தில் நீடித்து வரும் ஆழமான நெருக்கடியின் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று ஆண்டு காலத்திலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் விவசாயிகள் பல மாநிலங் களில் தன்னெழுச் சியாக போராடத் துவங்கி யிருக்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை அதிகமாக நிகழ்ந்த மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தொடர்ந்து பல நாட்கள் போராடிய விவசாயிகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தில் போராடிய விவசாயிகள் மீது பாஜக மாநில அரசு தொடுத்த துப்பாக்கிச் சூட்டில் 9 விவசாயிகள் கொல்லப் பட்டனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. பல மாநிலங்களிலும் விவசாயி கள் போராட்டம் நடந்து வருகிறது.
அதிகரித்து வரும் வேலையின்மை
ஆண்டு தோறும் சுமார் 1.5 கோடிபேர் வேலை தேடி வேலையில்லா பட்டாளத்தில் சேருகிறார் கள். ஆனால் பாஜக ஆட்சியில் கடந்த ஆண்டில் 1.5 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைகிடைத் துள்ளது. ஆனால் பாஜகவோ 2014 தேர்தல் காலத் தில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பு மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின்படி பணமதிப்பு ரத்து நடவடிக்கைக்குப் பிறகு 2017ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டுமே 15 லட்சம் வேலைவாய்ப்புகள் காணாமல் போயுள்ளன. இந்த ஆய்வில் பங்கேற்ற முதலாளிகளில் 73 சதவீதம் பேர் அடுத்த மூன்று மாதங்களுக்கு தங்கள் நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப் பிற்கு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவின் பெரும்பணக்காரர் களில் 20 பேரின் சொத்து ரூ. 3.20 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் மோடி அரசு
பாஜக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.4.20 லட்சம் கோடி கார்ப்பரேட் கம்பெனி களுக்கு சலுகை அளித்துள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகள் தேசிய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத தொகை (வாராக் கடன்) ரூ.7.11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை மேல் சலுகை அளித்து வரும் பாஜக அரசு பொதுவிநியோக முறையை சீர்குலைத்து வருகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகிதம் குறைந்தது. ஜி.எஸ்.டி. வரிவிதிப் பால் விலைகள் உயர்ந்து மக்களின் வாங்கும் சக்தி குறைந்து மேலும் பொருளாதார வளர்ச்சி குறையும்.
மத்தியில் அதிகாரம் குவிப்பு
அரசியல் சட்டம் கூட்டாட்சி தன்மை கொண்டது என்றாலும் நாளடைவில் மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. இதிலும் காங்கிரசுக் கும், பாஜகவிற்கும் வேறுபாடில்லை. நிர்ப்பந்தத் தால் மொழிவழி மாநிலங்கள் அமைக்க மத்திய அரசு ஏற்றுக் கொண்டாலும், அரசியல் சாசனத் தின் 356வது பிரிவு அரசியல் நோக்கத்திற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு களை கலைத்திட பயன்படுத்தப்பட்டன. பாஜக மொழிவழி மாநிலம் என்ற அம்சத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. இத்தகைய காரணங்களும் சேர்ந்து பல மாநிலக் கட்சிகள் பலமடைய வழிவகுத்தது. மாநில உரிமைகள், அதிகாரப் பரவலாக்கம் ஆகியவை முக்கிய ஜனநாயகப் போராட்டமாக நீடிக்கின்றன.
வகுப்புவாத அரசியல்
நாட்டின் ஆளும் வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தோடு சமரசம் செய்து கொண்டதோடு மதச்சார்பின்மையை யும் பாதுகாக்கத் தவறியுள்ளது. ஆளும் வர்க்கங் களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக மத்தியில் அதிகாரத்தை பயன்படுத்தும்போது காங்கிரஸ் கட்சி வகுப்புவாதத்தை எதிர்த்து உறுதியாக நிற்கவில்லை. சுதந்திரப் போராட்ட காலத்திலேயே இந்து வகுப்புவாத சக்தி உருவாகியது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக காங்கிரசின் சில தலைவர்கள் இந்து மத அடையாளத்தையும் பயன்படுத்தினார் கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடித்து வகுப்புவாத மோதலை உருவாக்கியது.
1925-ல் ஆர்எஸ்எஸ் உருவானது. முஸ்லிம்கள், கிறித்துவர்கள், கம்யூனிஸ்டுகள் தான் ஆர்எஸ் எஸ்-சின் எதிரிகள் என கூறியது. இந்துத்துவா என்ற கருத்தியலை அவர்கள் முன் வைத்தனர். சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆர்எஸ்எஸ், இந்தியா -பாகிஸ்தான் பிரிவினை யின் போது வகுப்பு மோதலை உருவாக்கியது. இஸ்லாமிய வகுப்பு வாதமும் எதிர்வினையாற்றி நாட்டின் பல பகுதிகள் ரத்தக் களரியானது. வகுப்பு மோதலை எதிர்த்த காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சார்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட் டார். சிறிது காலம் ஆர்எஸ் எஸ் தடை செய்யப் பட்டது. இப்பின்னணியில்தான் ஜனசங்கம் உருவானது.
1977 ஜனதா தளத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஜனசங்கத்தினர், 1980 இல் அதிலிருந்து வெளியேறி பாஜகவை உருவாக்கினர். ஜனதாதள கட்சியின் பிளவில் இருந்த ஒரு பகுதி அணிகளை ஈர்த்துக் கொண்டது. பாபர் மசூதி இயக்கத்தை துவங்கி ரத யாத்திரை நடத்தி பாபர்மசூதியை தகர்த்தார்கள். 1982-ல் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக அடுத்தடுத்து பலம் பெற்று 1999 முதல் 2004 வரை மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைத்தது. அதிகாரத்தை பயன்படுத்தி இந்துத்துவாவை பல துறைகளில் புகுத்திட முயற்சித்தது. 2014-ம் ஆண்டு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. கடந்த மூன்று ஆண்டு காலமாக பாஜக ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என இந்துத்துவா கருத்தியலை, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டு செல்கிறது. மாட்டிறைச்சி தடைச்சட்டம் உள்ளிட்டு பல சட்டங்கள், நடவடிக்கைகள் மூலம் செய்கிறது.
மேலும் சங்பரிவார அமைப்புகள் நாடு முழுவ தும் கிராமங்களிலும், நகரங்களிலும் இந்துத்துவ கருத்தியலை பல வடிவங்களில் கொண்டு செல் கிறது. பாசிஸ தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பாஜக தனது வளர்ச்சிக்கு இடது சாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடையாக இருப்பதாகக் கருதி கேரளா, திரிபுரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இடதுசாரிகளை குறிவைத்துத் தாக்குகிறது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுயேச்சையாகவும், இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்தும், பாஜகவின் வகுப்பு வாதத்தை உறுதியாக எதிர்த்து போராடி வருகிறது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சங்பரிவார அமைப்புகளின் நடவடிக் கைகளை எதிர்ப் பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது.
இந்தியாவில் கடந்த பல நூறு ஆண்டு காலமாக நிலவி வரும் சாதிய அமைப்பு முறையை முகலாய மன்னர்களும், அடுத்தடுத்து வந்த மன்னராட்சிகளும் உடைக்கவில்லை. பிரிட்டிஷ் அரசும் கூட, சாதிய, நிலப்பிரபுத்துவ அமைப்பினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.
1947-ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக சாதி அமைப்பு முறைக்கு ஆதர வாக இருந்தார்களேயொழிய அகற்ற முற்பட வில்லை. சாதிய ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டுவ திலும், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு தோல்வி கண்டுள்ளது.
நாடுதழுவிய அளவிலும், தமிழகத்திலும் தலித் மக்கள் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டு வருகின்றனர். அரசியல் சட்டம் உள்ளிட்டு தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பதற்கு பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் பல வடி வங்களில் தீண்டாமைக் கொடுமை நீடிக்கிறது. தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களில் கடந்த மூன்றாண்டுகளில் 118 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சாதிக் கொடுமைகளை எதிர்த்து போராட வேண்டுமென்ற உணர்வு தலித் மக்கள் மத்தியில் உருவாகி வருகிறது. இந்த உணர்வு ஜனநாயக உள்ளடக்கம் கொண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய அளவிலும், தமிழகத்திலும் சாதி கொடுமைக்கு எதிராக உறுதியாக போராடி வருகிறது. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அளப்பரிய பங்காற்றியுள்ளது. சுதந்திரத்திற் குப் பிறகு 1957-ம் ஆண்டு கேரளத்தில் தேர்தல் மூலமாக தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் தலைமையில் ஆட்சி அமைந்தது. முதலாளித் துவ, நிலப்பிரபுத்துவ அரசு கடைபிடித்து வரும் கொள்கைக்கு மாறாக ஒரு மாற்றுக் கொள் கையை முன்வைத்து இ.எம். எஸ். தலைமை யிலான கேரள அரசு முன்மாதிரியாக திகழ்ந்தது. உபரி நில விநியோகம், உள்ளாட்சி அமைப்பு களுக்கு கூடுதல் அதிகாரம், கல்வி, சுகாதாரத் திற்கு முன்னுரிமை, அரசு நிர்வாகத்தில் ஜன நாயக அணுகுமுறை ஆகிய நடைமுறையை மேற் கொண்ட இ.எம்.எஸ். தலைமையிலான அரசை அன்றைய மத்திய அரசு 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைத்தது.
தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்குவங்கம், திரிபுரா, கேரளாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. இப்போதும் திரிபுராவிலும், கேரளாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தில் உள்ளது. இந்த மூன்று மாநிலங் களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான அரசுகள் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டு மாற்றுத் திட்டத்தை கடைப் பிடித்தன. மேற்கு வங்கத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்த வரை மதமோதலோ, சாதி மோதலோ இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. மேற்கு வங்கத்தில் மட்டுமே 12 லட்சம் ஏக்கர் உபரி நிலம் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோ கம் செய்யப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதில் நாட்டுக்கே முன்மாதிரி யாக மேற்கு வங்க இடது முன்னணி அரசு திகழ்ந்தது. மேற்குவங்கத்தில் இடதுசாரி இயக்கத் திற்கு பின்னடைவு ஏற்பட்டாலும் 34 ஆண்டு காலம் அந்த அரசு அமலாக்கிய திட்டங்கள் இன்றைக்கும் நாட்டிற்கே முன்மாதிரியான நட வடிக்கைகளாகும்.
இடது ஜனநாயக அணி
சுதந்திர இந்தியாவில் காங்கிரஸூம், பாஜகவும் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகளும், அதிலிருந்து முரண்படாத பிற கட்சிகளின் கொள்கைகளும் ஆதிக்கம் செலுத்தின. அவை, உழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைக் கொடுப்பதாக இல்லை. எனவே, இடது ஜனநாயக மாற்றை மார்க்சிஸ்ட் கட்சி முன்நிறுத்துகிறது.
தேசிய அளவில் பிஜேபி – காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவ – நிலப்பிரத்துவ சக்திகளுக் கான உண்மையான மாற்று இடது ஜனநாயக அணி தான். இடது ஜனநாயக அணியினுடைய திட்டம் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சி களின் கொள்கைகளுக்கு நேர்விரோதமானது. முற்றிலும் மாறுபட்டதொரு திட்டத்தின் அடிப் படையில் இடதுசாரி ஜனநாயக சக்திகளை திரட்டிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்து வருகிறது.
தொழில், விவசாயம், கல்வி, சுகாதாரம், பண்பாடு போன்ற பல்வேறு அம்சங்களில் ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மக்களைத் திரட்டும் மகத்தான பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
மதிப்பிற்குரிய ஜி.ரா அவர்களுக்கு,
பள்ளிக்கல்வி முதலே யாரோ
எழுதி வைத்த வியங்களை மட்டும் படித்து பழகி, சமுதாயத்தில் நம் நிலை பற்றி உணராமல், நாட்டைப்பற்றி பேசியே நாட்கள்
வீணாக்கப்படுகின்றன. மார்க்சியப்பார்வை என்பது வெகுஜன பாமர மக்களின் பார்வையாக உள்ளதை
இன்று நான் உணர்கிறேன். சுதந்திர இந்தியாவில் எவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும்
இன்றளவும் நம் தமிழகத்தில் எத்தனையோ இலட்சம் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த
அல்லல்படும் அவல நிலை. உழைக்கும் வர்க்கத்தினரின் உழைப்பை நவீன கணினிமயமாக்கல்
முறையில் சுரண்டி வரும் முதலாளித்துவம், தனியர் நிறுவனங்களிலும் அரசு நிறுவனங்களிலும் பணியாளர்களைப்பற்றி எள்ளளவும் நினைத்துப்பார்க்காத முதலாளிகளும் அவர்களின்
துதிபாடிகளான அரசு நடத்தும் அரசியல்வாதிகளும்(அரசியலின் வியாதிகள்), என முன்னேற்றத்தை
எட்டாக்கனியாக்கி விட்டன. அடிப்படைவ hழ்வாதாரமான உண்ண உணவு, உடுக்க உடை, கல்வி
வேலைவாய்ப்பு, உழைப்பிற்கேற்ற ஊதியம்(சோசலிசத்தின்படி), என எதையும் பெற முடியாத
மக்களிடம் pயலவஅஇ தழை
phழநெஇ 4பஇ5ப என வாழ வழி சொல்லும் நாட்டை ஆள்பவர்களை வைத்துக்கொண்டு நமது சுதந்திர தினங்களை வருடா வருடம்
கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் . எப்படி ஒரு மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர்,
விவசாயிகள் இணைந்த ர்யப்புரட்சி வெகுஜன மக்களுக்கும் உலக மக்களுக்கும் நல்வழி காட்டியதோ
அதைப்போலவே, இங்கு நம் நாட்டிலும் பொது மக்களையும் விவசாயிகளையும், அரசை
இயந்திரத்தை வழிநடத்தும் அரசு ஊழியர்களையும் ஒருங்கிணைத்து, பொருளாதாரத்தில்
ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயத்தை உருவாக்குதலே சாதியையும் மதத்தையும், கீழடி
அகழ்வாய்வில் மண்ணைப்போட்டு மூடியவர்களையும் மக்கள் புரட்சி மூலம் மனம் திருந்தச்செய்ய
ஒரே வழி.
போராடும்
பொதுவுடைமைப்போராளி நாடாள வேண்டும் … தமிழ் நாடாள வேண்டும் அய்யா.
நன்றி
சு.பாலகணே;,
மாதவன்குறிச்சி,
பின்கோடு -628206.
தூத்துக்குடி மாவட்டம்.
LikeLike