கட்சி திட்டம் – 11
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதி பூண்டுள்ள அதனுடைய லட்சியமான சோசலிச மற்றும் கம்யூனிச சமூகத்தை நிர்மாணிக்க பாட்டாளி வர்க்க அரசின் தலைமை அவசியம். ஒரு பின்தங்கிய முன்னாள் காலனி நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் நிலப்பிரபுத்துவ ஒழிப்பு ஜனநாயகப் புரட்சியை நடத்தும் திட்டத்தை முன் வைத்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்). மக்கள் ஜனநாயகத்திட்டத்தின் பிரதான குறிக்கோள் விவசாயப்புரட்சி. முற்போக்கான நிலச்சீர்திருத்தம் மூலம் நிலப்புரபுத்துவத்தை ஒழித்துக் கட்டுவது மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இலவசாக நிலம் வழங்குவது போன்ற குறிக்கோளை நோக்கி நகரும்.
சமூக விடுதலை மற்றும் சோசலிச மாற்றம் என்ற வழிமுறையானது நீண்டகாலத் தன்மையுடையதும் சிக்கலானதுமாகும். முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்வதானது ஒரே தடவையில் நிகழ்ந்து விடக்கூடியதல்ல. ஆனால், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னவரும் கூட வர்க்கங்களன் தீவிரமான போராட்டம் நீண்டதொரு காலம் நடக்கும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. (கட்சித் திட்டம் பாரா 2.4)
வேகமாக மாறிவரும் அரசியல் சூழலின் தேவைகளை சந்திக்க பல்வேறு இடைக்கால கோஷங்களை கட்சி உருவாக்க வேண்டியிருக்கும் என்பது வெளிப்படையானதாகும். (கட்சித் திட்டம் பாரா 7.17)
எனவே தான், கட்சியின் 21வது காங்கிரஸ், இடது ஜனநாயக அணியை இடைக்கால முழக்கமாக, அரசியல் நடைமுறை உத்தியின் ஒரு பகுதியாக அறிவித்து, அந்த அணியை கட்டுவதற்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளது.
இடது ஜனநாயக அணிக்கும் மக்கள் ஜனநாயக அணிக்கும் உள்ள வித்தியாசம்
மக்கள் ஜனநாயக அணி என்பது நமது இலக்கின் முக்கிய பகதி. அதனை எட்டுவதாற்கு இடது ஜனநாயக அணி என்ற நடைமுறை உத்தி பயன்படும். இரண்டிலும் நாம் அணி திரட்ட வேண்டிய பகதியினர் ஒன்றுதான். மக்ள் ஜனநாயக அணிக்கு தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கமூ. மக்கள் ஜனநாயக அணி புரட்சியின் மூலம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும். அரசு கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்து மக்கள் ஜனநாயக அரசை அமைக்கும். எனவே, மக்கள் ஜனநாயக அணியின் திட்டம் வேறு. இடது ஜனநாயக அணியின் திட்டம் வேறு. இடது ஜனநாயக அணி மக்களின் அரசியல், பொருளாதார உடனடி முன்னேற்றங்களுக்காக பாடுபடும். இந்த அணியின் அஸ்திவாரமாக இடது சாரி கட்சிகள், மற்றும் அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள் இடம்பெறும். மேலும் இடதுசாரி குழுக்கள், அறிவு ஜீவிகள் போன்றவர்களும் இந்த அணியில் இடம்பெறுவர். தமலும், பல்வேறு கட்சிகளில் சிதறிக் கிடக்கும் சோஷலிஸ்டுகள், மதச்சார்ப்ற்ற முதலாளித்துவ கட்சிகளில் இருக்கும் ஜனநாயகப் பகுதியினர், பழங்குடியினர், தலித்‘, பெண்கள், சிறுபான்மையினர் மத்தியில் செயல்படும் அமைப்புகள், ஒடுக்கப்படும் பகுதியினரின் பிரச்சனைகளை எடுக்கும் சமூக அமைப்புகள் போன்றவர்களை ஒருங்கிணைத்து பொது மேடைக்குக் கொண்டு வருவோம். மக்கள் ஜனநாயக அணிக்கு வர வேண்டிய வர்க்கங்களை ஒன்றிணைக்கும் பணிக்கு இடது ஜனநாயக அணி அவசியம்.
மக்கள் ஜனநாயக அணி
தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் விவாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டணி அமைப்பது என்பது மக்கள் ஜனநாயக அணியின் மையமான அம்சம். மேலும் இந்த அணியில் அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் அணி திரட்டலாம். விவசாயிகள் எனும் போது ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், நிலப்பிரபுக்கள் அல்லாத பணக்கார விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் இந்த அணியில் திரட்டப்படுவர். அதே போல கிராமப்புற நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர், அறிவு ஜீவிகள் எனும் பகுதியினர், கல்வி மருத்துவம் உள்ளிட்ட சேவைத் துறைகளில் உள்ளவர்கள், பெரு முதலாளிகள் அல்லாத முதலாளிகள், தொழில் முனைவோர், மாதர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் இந்த அணியின் கீழ் ஒன்றுபடுத்த வேண்டும். அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகளும் இந்த அணியின் கீழ் திரட்டப்படுவர். இந்த அணியின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்தப்படும். மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்றவுடன் மக்கள் ஜனநாயக அரசு அமைக்கப்படும். புரட்சியின் கடமைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். கூடவே சோசலிச மாற்றத்திற்கான பணிகள் துவக்கப்படும்.
தனது அணியில் மிகவும் மேம்பட்ட, மிகவும் செயலூக்கமுள்ள, சற்றும் சுயநலமற்ற உழைக்கும் மக்களின் புதல்வர்களையும், புதல்விகளையும் ஒன்றுபடுத்தி அவர்களை உறுதிமிக்க மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்டுகளாகவும், பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதிகளாகவும் வளர்த்தெடுக்க கட்சி அயர்வின்றி முயற்சி மேற்கொள்கிறது. (கட்சி திட்டம் பாரா 8.7)
மக்கள் ஜனநாயக அரசு என்னவெல்லாம் செய்யும்?
இப்போதைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதே முதன்மையான முக்கியமான தேவையாகும். இந்தியப் புரட்சியில் நிறைவேறாத ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமே நாட்டை சோசலிசத்திற்கான பாதையை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். மக்கள் ஜனநாயக அரசு பின்வரும் கடமைகளையும், திட்டங்களையும் நிறைவேற்றும். (கட்சித் திட்டம் பாரா 6.2)
அடிப்படை உரிமை என்று கருதப்படுகிற சமூக உரிமைகளே மக்கள் ஜனநாயக அரசின் அடிப்படையான கோட்பாடாக அமையும். (கட்சித்திட்டம் பாரா 6.3(19))
தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடுகளின் பன்முகத்தன்மை மதிக்கப்படுவதோடு வெற்றுமையில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான கொள்கை வகுக்கப்படும். (கட்சித்திட்டம் பாரா 6.3(5))
முழுமையான மனித உரிமை உத்தரவாதப்படுத்தப்படும். மக்களின் உரிமைகள் மீறப்படாமல் பாத்துக் கொள்ளப்படுவதோடு, நாட்டின எந்தப் பாகத்திலும் குடியேறும் உரிமையும் பாதுகாக்கப்படும். ….மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு உரிமை, பேச்சுரிமை, பத்திரிக்கை சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை, வேலை நிறுத்தம் சேய்யும் உரிமை, அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் அமைக்கும் உரிமை, இடம் பெயரும் மற்றும் பணியாற்றும் உரிம, மாற்று கருத்துக் கூறும் உரிமை ஆகியவை உத்தவராதப்படுத்தப்படும். ( கட்சித் திட்டம் பாரா 6.3(11))
தொழில் துறை
தொழில் துறையில் உற்பத்தி சாதனங்களை சமூகமயமாக்குவது. பிரதான உற்பத்தி வடிவமாக பொதுத்துறைகளை உருவாக்குவது, உள் நாட்டு, வெளி நாட்டு ஏக போக நிறுவனங்களின் பிடிகளை சிறிது சிறிதாக தளர்த்துவத,போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசுத்துறை, கூட்டுறவு துறை தனியார் துறை ஆகிய அனைத்து வகை சொத்துடமைகளும் நீடிக்கும். தேசியமயமாக்கல் மற்றும் வேறு வடிகவங்களில் சமூக உடைமையாக்கும் முயற்சிகளம் மேற்கொள்ளப்படும். தொடிழலாளாகளும், ஊழியர்களும் கூட்டாக உரிமையாளர்களாக விளங்கக்கூடிய அமைப்புகளையும் கூட்டுறவு துறைகளையும் உருவாக்குவது, அதிநவின தொழில் நுட்பம் தேவைப்படும் துறையில் மட்டும் அன்னிய மூலதனம் அனுமதிக்கப்படும்.
மொழிக் கொள்கை
அனைத்து தேசிய மொழிகளுக்கும் சம உரிமை, அனைவருக்கும் (மொழிச் சிறுபான்மையினர் உட்பட) தாய் மொழி வழிக் கல்வி அடைப்படை உரிமை ஆக்கப்படும். உருது மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும். அனைத்து மொழீகளுக்கும் சம அந்தஸ்து கொடுப்பதன் மூலம் மட்டுமே நாடு முழுவதும் ஏற்க்க் கூடிய தொமடர்பு மொழியாக இந்தி வர முடியும். அது வரை தொடர்பு மொழியாக இந்தியையும், ஆங்கிலத்தையும் பயன்படுத்தும் தற்போதைய ஏற்பாடு தொடர வேண்டும்.
கூட்டாட்சி கோட்பாடு
ஜனநாயகப் பூர்வமானசமஷ்டி அரசு அமைப்புகள் உருவாக்கப்படும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை இருக்கும். மாநிலங்களுக்கு உண்மையான தன்னாட்சி மற்றும் சம அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படும். மலைவாழ் மக்களுக்கு சுயாட்சி அமைப்புகள் இருக்கும். அதிகாரப் பரவல் என்பது உத்திரவாதப்படுத்தப்படும். அனைத்து சமூக அரசியல் நிறுவனங்களும் ஜனநாயக முறையில் செயல்படுத்தப்படும். அரசியல் கட்சிகளையும் சங்கங்களையும் அமைக்கும் உரிமைகள் உறுதிபடுத்தப்படும். பல கட்சி ஆட்சி அமைப்பு முறை நீடிக்கும்.
ஜனநாயக மதச்சார்பற்ற அணுகுமுறை கொண்ட ஒரு புதிய முற்போக்கான மக்கள் பண்பாட்டை வளர்த்தெடுக்க நமது மக்களின் ஆக்கப்பூர்வமான திறமைகளை மக்கள் ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கம் உரமூட்டி வளர்க்கும். ………சாதிய, பாலியல் பாகுபாடுகள், மதவெறியில் எழும் வெறுப்புணர்வுகள், அடிமைப்புத்திகள், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுவிக்க உதவும் அறிவியல் அணுகுமுறையை வளர்த்தெடுக்கும். ……இதர நாடுகளில் வாழும் மக்களோடு நமது மக்களுக்கு சகோதரபூர்வமான உணர்வு வளர பாடுபடுவதோடு, இன மற்றும் தேசிய அடிப்படையிலான பகை உணர்வை கைவிடுவதற்கான உணர்வும் வளர்க்கப்படும். (கட்சித் திட்டம் 6.3(20))
உலகம் முழுவதும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நெருக்கடிக்கு மக்கள் மாற்றினை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நாடுகளில் மக்கள் விரும்பும் மாற்றினை தங்களுடைய கோஷங்களாக மாற்றி மக்கள் முன்பு மிகத் திறமையாக வைக்கின்ற சக்திகள் (அவை வலதுசாரி சக்திகளாக இருந்தால் அவையும், இடதுசாரி சக்திகளாக இருந்தால் அவையும்) ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் அப்படிப்பட்ட சூழல் தான் இன்று ஏற்பட்டுள்ளது. இதை யார் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பதே நம் முன் உள்ள கேள்வி. கம்யூனிஸ்ட்டுகளை பொறுத்த வரையில் புறச்சூழல் நமது வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது. அகச்சூழலை பலப்படுத்திக் கொண்டால் நமது இலக்கினை நோக்கி நாம் முன்னேற முடியும். இதைத்தான் கட்சித் திட்டம் வலியுறுத்துகிறது.
ஆர். எஸ். செண்பகம், திருநெல்வேலி.
Leave a Reply