இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த காந்தியை மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆராய்வதன் முக்கியத்துவம் குறித்து தோழர் வெ.ஜீவகுமார் எழுதியுள்ள கட்டுரையை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.
இந்தியாவின் கடந்த கால வரலாற்றில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து பல்வேறு அறிஞர்களின் பதிவுகளை முன்வைத்து பேரா. ஷிரீன் மூஸ்வி அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவத்தின் இறுதிப் பகுதி இந்த இதழில்வெளியாகியுள்ளது.
திட்டமிட்ட பொருளாதாரம் என்ற முறையை அறிமுகம் செய்த சோவியத் யூனியனின் அனுபவங்களிலிருந்து துவங் கி இத்தகைய திட்டமிடலின் அவசியம்மற்றும் அதன் வரலாறு பற்றி இன்றைய நிதி ஆயோக் பின்னணியில் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா விரிவானதொரு கட்டுரையை வழங்கியுள்ளார். வாசகர்களின்ஆழ்ந்த வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் உகந்த ஒன்றாகவும் இக்கட்டுரை திகழ்கிறது.
இன்றைய நவதாராளமயம்- உலகமயமாக்கலோடு பின்னிப் பிணைந்த வகையில் எங்கணும் பரவியிருக்கும் ஊழலின் பல்வேறு அம்சங்கள் அதன் ஊற்றுக் கண் பற்றி தோழர் எஸ். கண்ணன் எழுதியுள்ள கட்டுரையும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது. வாசகர்களின் நேரிய விவாதத்திற்கும் பரந்த வாசிப்பிற்கும் உரியகட்டுரை இது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமைமிகு திட்டம் வரிசையில் 12வது கட்டுரையாக தொழில் வளர்ச்சி குறித்த கட்சியின் பார்வையை எடுத்துக் கூறி விளக்கியுள்ளார் ஆராய்ச்சியாளர் தீபா.
ஏற்கனவே அறிவித்தபடி, இந்த மாத இறுதியில் மார்க்சிஸ்ட் கைபேசி செயலியின் புதிய அம்சங்கள் வெளியிடப்பட உள்ளன. மேலும் அதிகமான வாசகர்களைசென்றடையும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அம்சங்களை பரவலாகக் கொண்டு செல்ல வேண்டுகிறோம்.
மார்க்சிஸ்ட் வாசகர் வட்டம், வாசகர்கள் தொடர்ந்து இதழ் குறித்த கருத்துக்களை விவாதித்து, ஆசிரியர் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுகிறோம்.உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளுமே மார்க்சிஸ்ட் இதழை மேலும் சிறப்பாகவும் பரவலாகவும் கொண்டு செல்ல உதவும்.
– ஆசிரியர் குழு