ஆராய்ச்சியாளர் தீபா
இருபதாம் நூற்றாண்டில் நிகழ்த்த பல முக்கிய நிகழ்வுகள் நவீன உலகம் உருவாக அடிப்படையாக அமைத்தது. மனித குலத்திற்கே விடிவெள்ளியாய், ஒரு புதிய ஏற்றத்தாழ்வற்ற சமூகம் என்றால் எப்படி இருக்கும் என்ற கனவை நிகழ்த்தி காட்டிய சோவியத் புரட்சியில் தொடங்கி சீன , கியூபா என பல நாடுகளில் சோசலிச அரசுகள் அமைத்ததும் இந்த நூற்றாண்டில் தான் . இருபதாம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியின் தாக்கம் மற்றும் முக்கிய புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதகுல முன்னேற்றத்திற்கு இதுவரை இல்லாத அளவு புதிய பாதையை உருவாக்கியது.
இந்த நவீன உலகத்தில் எந்த ஒரு சமூகமோ அல்லது நாடோ வளர்ச்சி பெற தொழில் துறையின் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்துறை மற்றும் உற்பத்தி சக்தியின் பிரம்மாண்ட வளர்ச்சி என்பது அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவே. ஆகவே உற்பத்தி சக்தி மற்றும் தொழில்துறையின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை மேன்பட பயன்படுத்த வேண்டும். இது எப்போது சாத்தியமாகும். இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்று புரிந்து கொண்டால் தான் மக்களுக்கான வளர்ச்சி எப்படி சாத்தியப்படும் என்று தெளிவடைய முடியும்.
இந்திய விடுதிக்கு பின் : பெரும் பகுதி மக்களின் பங்கேற்பின் விளைவாகவே விடுதலை அடைத்தது இந்தியா . ஆனால் முதலாளி வர்க்கத்தின் கையில் தான் தலைமை இருந்தது. இதன் விளைவாக “புதிய அரசுக்குத் தலைமையேற்ற பெரு முதலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை கடமையை பூர்த்தி செய்ய மறுத்தது. உற்பத்தி சக்திகளின் விலங்குகளை உடைத்தெறிவதில்தான், இந்திய சமூகத்திற்கு புத்துயிரளிக்கும் பாதை அமைகிறது. புல்லுருவித்தனமான நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு விவசாயத் தொழிலாளர்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அன்னிய மூலதன ஆதிக்கப் பிடியிலிருந்து தொழில் வளர்ச்சி விடுவிக்கப்பட்டிருந்தால், சுயசார்பு பொருளாதாரத்துடன் கூடிய முன்னேறிய தொழில் வளர்ந்த நாடாக மாற வழியேற்பட்டிருக்கும்” (para 3.2)
இதன் விளைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது இல்லாமல் முதலாளிகளின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்பட்டன . முழுமையான மக்கள் ஜனநாயக புரட்சிக்கு இட்டு செல்லாமல் இந்திய முதலாளிகள் நிலப்பிரபுக்களுடன் கூட்டணியும் ஏகாதிபத்தியத்துடன் சமரசமும் செய்து கொண்டது. இதன் விளைவாக பல முரண்களை இந்திய முதலாளிகள் சந்திக்க நேர்ந்தபோதும் தங்களின் வளர்ச்சிக்காகவே அரசை முழுமையாக பயன்படுத்தினர்.
விடுதலைக்கு பின்னான ஆரம்ப காலகட்டங்களில் பெரும் அளவிலான திட்டங்களுக்கு முதலீடு செய்யும் அளவுக்கு இந்திய முதலாளிகளிடம் மூலதனம் இல்லை. ஆகவே ஆரம்ப கால கட்டமைப்புத்துறை, கனரக தொழில்கள், எந்திர தயாரிப்பு தொழில் ஆகியவை பொதுத்துறை மூலம் சோவியத் உதவியுடன் வளர்க்கப்பட்டது. வங்கி, காப்பீட்டு துறை, எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை தேசிய மயமாக்கியதன் மூலம் அரசு துறை விரிவாக்கப்பட்டது. “அரைகுறை மனதோடு எடுக்கப்பட்டாலும், தொழில் மயமாக்கு வதற்கான வேறு சில கொள்கை முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, புதிய காப்புரிமைச் சட்டம், நமது சந்தையில் அன்னிய பொருட்கள் மற்றும் மூலதனம் நுழைவதற்கு கட்டுப்பாடு, சிறுதொழில்களுக்கு பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் நிலவிய இந்தச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளால், ஏகாதிபத்திய சக்திகளையே சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலைமையையும், பின்தங்கிய பொருளாதார தன்மையையும் ஓரளவுக்கு மாற்ற உதவியதோடு தொழில் வளர்ச்சிக்கான தொழில்நுட்ப அடித்தளமும் நிறுவப்பட்டது”.(para 3.7)
அரசு கட்டமைப்புகளை முதலாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். இதன் விளைவாக குறுகிய காலத்திலேயே தங்களுக்கு போதுமான மூலதனத்தை முதலாளிகள் சேர்த்துக்கொண்டனர். “1980களின் மத்தியில் அரசிற்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கேந்திரத் தொழில்களில் நுழையவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தாங்களே எடுத்துக் கொள்ளவும், அன்னிய மூலதனத்துடன் சேர்ந்து புதிய பகுதிகளில் விரிவடையும் அளவிற்கும் பெரு முதலாளிகள் தயாராக இருந்தனர். இத்துடன் அரசு கடைப்பிடித்து வந்த முதலாளித்துவ பாதையில் ஏற்பட்ட நெருக்கடியும் சேர்ந்து தாராளமயத்தை புகுத்துவதற்கான உள்நாட்டு அடித்தளம் அமைக்கப்பட்டது” para 3.10)
புதிய பொருளாதார கொள்கைக்கு பிந்தைய காலகட்டங்களில் இன்று வரை பொது துறை மாற்று அரசு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் முதலாளிகளின் ஏகபோக வளர்ச்சிக்கு இட்டு செல்லும் வகையான பொருளாதார மற்றும் அரசின் அனைத்துக் கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. சர்வதேச அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி பெரும் முதலாளிகளின் வளர்ச்சி கட்டுக்கடங்காத ஏகபோக வளர்ச்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உற்பத்தி சத்தி மற்றும் அணைத்து தொழில் வளர்ச்சியும் முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்காக அணைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலாளிகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற மாயையை உருவாக்கி அறிவியல் மாற்று தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் முதலாளிகளின் லாப நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த படுகின்றது. உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டலின் விளைவாகவே முதலாளிகளும், பெரும் ஒப்பந்த காரர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் லாபம் ஈட்டி வருகின்றனர். முதலாளித்துவ சமூகத்தில் லாபம் பெருக்க தொழிலாளர் ஒடுக்குமுறைகள் இன்றியமையாதது. இதை அரசு நிறுவனங்களின் உதவியுடன் நேர்த்தியாக நிறைவேற்றி வருகிறது. உற்பத்தி சத்தி மற்றும் தொழிற்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அணைத்து வகையான முயற்சியும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் கருத்துருவாக்கமும், தலையீடும் செய்ய முழுமுயற்சியில் இறங்கியுள்ளது முதலாளித்துவம். புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி உற்பத்தி சக்திகளை தொடர்ந்து வளர்த்துவந்தும்கூட, முதலாளித்துவமானது நெருக்கடியைத் தன்னகத்தே கொண்டதாகவும், அடக்குமுறை, சுரண்டல், அநீதி ஆகிய தன்மை கொண்டதாகும்.
முதலாளித்துவ வளர்ச்சி என்பது சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கு நேர் எதிரானது. உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டலின் மீது கட்டமைக்கப்படுவதே முதலாளித்துவத்தின் லாபம். இதற்கு மாற்று சோசலிச பாதையே. மக்களின் பொருளாதார முன்னேற்றம் என்பது இல்லாமல் முதலாளிகளின் லாப அதிகரிப்பு என்ற அடிப்படையே கொண்டதான பொருளாதார கொள்கைகளின் காரணமாக தொழில்துறை ஏகபோக நிறுவனங்களின் பிடியிலும் அன்னிய மூலதன ஊடுருவல் என ஒட்டுமொத்தமாக தனியார் மற்றும் முதலாளிகளின் பிடியில் உள்ளது. இது ஏற்றத்தாழ்வு நிறைத்த சமூகத்தையே உருவாக்கி உள்ளது.
தொழில் துறை மற்றும் உற்பத்தி சாதனங்களை பொது மயமாக்குவது, பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தும் நடவடிக்கை, தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் மேன்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் தொழில் துறையின் முன்னேற்றத்திற்கான தேவையின் பொறுத்தே கட்டுப்படுத்த பட்ட அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படும். வாழ்க்கைச் சம்பளம் என தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும், பணி நேரம் குறைக்கப்படும், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உத்திரவாத படுத்தப்படும். தொழிற்சங்க அங்கீகாரம், கூட்டுப்பேர உரிமை, அதேபோன்று வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை, குழந்தை தொழில் ஒழிப்பு என நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் உழைக்கும் மக்களின் மீதான அணைத்து ஒடுக்குமுறையும் மக்கள் ஜனநாயக ஆட்சியில் மாற்றியமைக்கப்படும் இது இடது சரி அரசியல் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் தான் சத்தியம். அதற்கான நமது பணியை முழு அர்ப்பணிப்புடன் செயல்முறை படுத்துவோம்.
Leave a Reply