இந்திய தத்துவத் தளத்தில் வர்க்கப் போராட்ட வேர்களை வெளிக்கொணர்ந்த கோடிட்டுக் காட்டிய தேவிபிரசாத் சட்டோபாத்யாயா நூற்றாண்டு தொடங்கியுள்ளது. அவரது நினைவாக இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் நிகழ்த்திய உரை, சமூக மாற்ற போராளிகள், இந்தியாவில் நடைபெற்ற தத்துவப் போராட்டங்களை ஏன் உள்வாங்கி செயல்படவேண்டும் என்பதன் அவசியத்தை விளக்குகிறது. இக்கட்டுரையை தமிழில் கொடுத்துள்ளார் இரா.சிந்தன். தேவிபிரசாத் சட்டோபாத்யாயா நூற்றாண்டு சிறப்புக் கட்டுரையை என்.குணசேகரன் எழுதியுள்ளார்.
கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் இளமைக்கால அரசியல் போராட்டங்களை படம்பிடித்துக் காட்டும் யங் கார்ல் மார்க்ஸ் திரைப்படம் குறித்த ஒரு அறிமுகக் கட்டுரை இந்த இதழில் வெளியாகிறது. சுதிர் இக்கட்டுரையை நமக்கு கொடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்தியக் குழு உறுப்பினர் ராம்தாஸ் எழுதிய கட்டுரையைத் தழுவி, பேராசிரியர் ஹேமா எழுதியுள்ள முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த கட்டுரை இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.
நவம்பர் புரட்சியின் தனித்துவம் மிக்க பங்களிப்பை விளக்கும் கட்டுரையை தோழர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார். கியூபாவில் சமீபத்தில் நடந்துள்ள மிக முக்கியமான மாற்றமான அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தைக் குறித்த கட்டுரையை ஆர்.எஸ்.செண்பகம், தமிழில் கொடுத்துள்ளார்.
மார்க்சிஸ்ட் இதழ் ஒலி இதழாக வருவதை அறிவீர்கள், ஆங்கில மார்க்சிய கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு இனி இணைய வழி மற்றும் செயலி வழி வாசகர்களுக்கு கிடைக்கவுள்ளது. தமிழ் மார்க்சிஸ்ட் சந்தா சேர்ப்பும், வாசகர் வட்டங்களும் அதிகரிக்கும்போதுதான் இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும். சந்தா கூடுதலாக்கி, வாசிப்பை முன்னெடுக்க ஒவ்வொரு வாசகரையும் வேண்டுகிறோம்.
– ஆசிரியர் குழு
Leave a Reply