குருப்ஸ்கயா
1890களில் மார்க்சிஸ்ட் வாசகர் வட்டங்கள் துவக்கப்பட்டபோது மார்க்சின் “மூலதனம்” வாசிக்கப்பட்டது. கடும் சிரமங்களுக்கிடையே “மூலதனம்” புத்தகத்தை எங்களால் அப்போது பெற முடிந்தது. ஆனால் மார்க்சின் மற்ற புத்தகங்கள் எங்களுக்கு கிடைப்பது பெரும் சிரமமாகவே இருந்தது.
இன்னும் சொல்வதானால், வாசகர் வட்டத்தின்
பெரும் பகுதியினர் “கம்யூனிஸ்ட்
அறிக்கை”யை கூட வாசிக்காதவர்களாகவே
இருந்தனர். உதாரணமாக நானும்கூட 1898ல் ஜெர்மனிக்கு நாடு
கடத்தப்பட்டிருந்தபோதுதான்
“கம்யூனிஸ்ட்” யை வாசிக்க முடிந்தது.
மார்க்ஸ்,
எங்கல்ஸ்சின் எழுத்துக்கள் முற்றிலுமாக
தடுக்கப்பட்டது. உதாரணத்திற்கு
சொல்வதென்றால், 1897ல்
லெனின் “புதிய உலகம்” என்கிற பத்திரிக்கையில்
“பொருளாதார கற்பனாவாதத்தின் பண்புகள்” என்கிற
கட்டுரையை எழுதினார்.
அக்கட்டுரையில், மார்க்ஸ், மார்க்சியம் மற்றும்
மார்க்சிய உள்ளீடுகள் பற்றி எழுதுவதை
தவிர்க்குமாறு அவர்
நிர்பந்திக்கப்பட்டார். கட்டுரையை வெளியிடும் பத்திரிக்கை
சிரமங்களுக்கு ஆட்படுவதை தவிர்க்கவே இந்த நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டது.
லெனினுக்கு பல மொழிகள் தெரியும். ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் மொழிகளில் இருந்த மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுத்துக்களை தன்னால்இயன்றவரை முனைந்து படித்தார். பிரெஞ்ச்மொழியில் இருந்த மார்க்சின் “தத்துவத்தின்வறுமை” என்கிற புத்தகத்தை லெனின் எவ்வாறுதனது தங்கை ஓல்காவுடன் படித்தார் என்பதைஆனா இலியானிஷ் விளக்குகிறார்.
மார்க்ஸ்,எங்கல்ஸ் எழுத்துக்கள் பலவற்றை லெனின்ஜெர்மன் மொழியிலேயே படிக்க வேண்டியிருந்தது. தன்னை ஈர்த்த மார்க்ஸ், எங்கல்சின்எழுத்துக்களின் குறிப்பான பகுதிகளை லெனினேரஷ்ய மொழிக்கு மொழிப்பெயர்த்தார்.“யார் மக்களின் நண்பர்கள்” என்கிற லெனினின்முக்கியமான முதல் பிரசுரம் 1894-ல் மறைமுகமாக வெளியிடப்பட்டது. இதில் மார்க்சின் “கம்யூனிஸ்ட் அறிக்கை”, “அரசியல் பொருளாதாரம்குறித்த விமர்சனம்”, “தத்துவத்தின் வறுமை,“ஜெர்மன் தத்துவம்”, 1843-ல் மார்க்ஸ் ரூக்கிற்குஎழுதிய கடிதம் மற்றும் எங்கல்ஸின் “டூரிங்கிற்குமறுப்பு”, “குடும்பம், தனிசொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” உள்ளிட்ட புத்தகங்களில் உள்ளபல குறிப்புகள் உள்ளடங்கியிருந்தது.
மார்க்சியம் குறித்து மிக சொற்பமான அறிமுகம் இருந்த அப்போதைய பெரும்பான்மையானமார்க்சியவாதிகளிடம் “யார் மக்களின் நண்பர்கள்”என்கிற பிரசுரம் ஓர் ஆழமான மார்க்சியகண்ணோட்டத்தை விரிவுபடுத்தியது. இப்பிரசுரம் பல்வேறு முக்கியமான கேள்விகளை முற்றிலும் புதிய வகையிலான வழியில் எதிர் கொண்டதோடு மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.லெனினுடைய அடுத்த படைப்பு “நிரோத்தனிக்குகளின் பொருளாதார பயிற்றுவித்தலின்உள்ளீடு” பற்றியதாகும். இதில் “பதினெட்டாம்புரூமர்”, “பாரீசில் உள்நாட்டு யுத்தம்”, “கோத்தாதிட்டம் பற்றிய விமர்சனம்” மற்றும் “மூலதனம்”நூலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதியிலிருந்து பல மேற்கோள்கள் உள்ளடங்கி இருந்தது.மார்க்ஸ், எங்கல்ஸ் எழுத்துக்களை கூடுதலாகவாசித்து நன்கு புலமைபெற லெனினுக்கு அவர்நாடு கடத்தப்பட்ட கால கட்டம் மேலும் உதவியது.
“கிரானட்” என்கிற பல்பொருள் விளக்கும்கலை களஞ்சியத்தில் 1914ம் ஆண்டு மார்க்சின்வாடிநக்கை வரலாற்றை லெனின் எழுதியிருந்தார்.இப்பதிவானது லெனினுக்கு மார்க்சின்எழுத்துக்கள் மீதிருந்த அளப்பரிய அறிவாற்றலைமிக தெளிவாக புலப்படுத்தும்.மார்க்சின் எழுத்துக்களை லெனின் வாசிக்கும்போது கணக்கிலடங்காத அளவு அதன் உள்ளடக்கங்களை குறிப்பெடுத்துக் கொள்வார். லெனின்மையத்தில் மார்க்சின் புத்தகங்களை படித்துஅவர் எடுத்திருந்த பல குறிப்பேடுகள் உள்ளன.மார்க்சின் எழுத்துக்களை அவர் மீண்டும்,மீண்டும் படித்து, குறிப்புகள் எடுத்து அதன்உள்ளீடுகளை தனது எழுத்துக்களில் கொண்டுவந்தார். மார்க்சின் எழுத்துக்களை நன்கு அறிந்தவராக மட்டும் லெனின் இருந்துவிடவில்லை.மார்க்சின் போதனைகள் மீது தனது ஆழமானசிந்தனையையும் செலுத்தினார். “கம்யூனிசம்என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக்கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சிமற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவேஎழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்” என்று ரஷ்ய இளைஞர்களின் மூன்றாவதுமாநாட்டில் (1920) லெனின் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்து
தரவுகள் மீதும் விமர்சனப்பூர்வமான
அணுகுமுறையோடு, கடினமான, பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்யாமல், கம்யூனிசம்பற்றிய ஆயத்தபதில்களை ஒரு
கம்யூனிஸ்ட் எதிர்பார்பாரேயானால் அவர் மோசமான கம்யூனிஸ்ட்டாகத்தான்
இருப்பார்”.
லெனின் மார்க்சை படிப்பதோடுமட்டும்
நிற்கவில்லை. மார்க்ஸ் பற்றியும், மார்க்சியம்
பற்றியும்எதிர்நிலை எடுத்து எழுதிவந்த
முதலாளித்துவவாதிகள் மற்றும் குட்டி
முதலாளித்துவ வாதிகள்எழுதியவைகளையும்
வாசித்தார். இவர்களின்கருத்திற்கு
எதிர்வாதம் செய்வதன் மூலம்
மார்க்சியத்தின் அடிப்படை நிலைகளை
விளக்கினார்.விமர்சனங்களை லெனின் மிக
கவனமாகதொகுத்துரைப்பார். தெளிவான, அதன் குண இயல்புகளை எடுத்து சுட்டிக்காட்டி அதற்குமாற்றாக
மார்க்சின் எழுத்துக்களை முன்வைப்பார். விமர்சனங்களை மிக கவனமாக பகுப்பாய்வுசெய்து, முக்கியமான
பிரச்சனைக்கு அவர்கள்முன்வைக்கும்
தீர்வுகள் குறித்து கேள்வி எழுப்பி,அதன் வர்க்க தன்மையை
லெனின் எடுத்துரைப்பார்.
Leave a Reply