ஸ்டாலின் தொகுப்பு நூல்களில் இருந்து…
– தமிழில் வீ.பா. கணேசன்
1907 ஆம் ஆண்டு, ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் லண்டன் காங்கிரஸில் பங்கேற்ற பிரதிநிதி என்ற வகையில், அந்த மாநாட்டு செயல்பாடுகளை ஆய்வு செய்து பகுப்பாய்ந்து ஆழமான ஒரு குறிப்பை தோழர் ஸ்டாலின் எழுதினார். முழுமை பெறாத இந்தக் குறிப்பு ஸ்டாலின் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. கட்சிப் பிளவுக்கான முயற்சிகளை தொழிலாளி வர்க்க தத்துவக் கண்ணோட்டத்துடன் எதிர்கொண்டு போல்ஷ்விக்குகள் நடத்திய போராட்டத்தை இதில் பதிவு செய்திருக்கிறார் ஸ்டாலின். தாராளவாதத்திற்கு எதிரான தத்துவப் போராட்டத்தை புரிந்துகொள்ள ஏதுவான ஒரு சிறு பகுதியினை இங்கே பிரசுரித்துள்ளோம்.
330 பிரதிநிதிகள் பங்கேற்ற லண்டன் காங்கிரஸில் 302 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். உடல் உழைப்பு தொழிலாளர்கள் 116 பேரும், இதர தொழிலாளர்கள் 24 பேரும், முழு நேர புரட்சியாளர்கள் 56 பேரும் என இம்மாநாட்டு பிரதிநிதிகளின் வர்க்க பின்னணியை ஸ்டாலின் விளக்குகிறார். இம்மாநாடு எப்படி போல்ஷ்விக் முன்வைப்புகள் சரியானவை என்று உரசிப்பார்க்க உதவியாக இருந்தன என புள்ளிவிபரங்களுடன் விளக்குகிறார். போல்ஷ்விக்குகளை ‘அறிவுஜீவிகளின் குழு’ என்று விமர்சித்து வந்த மென்ஷ்விக்குகளின் விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையிலும், போல்ஷ்விக்குகளின் கண்ணோட்டமே சரியானது என அறிவிக்கும் வகையிலும் இம்மாநாட்டு முடிவுகள் அமைந்தன. ஸ்டாலின் தொகுப்பில் வெளிவரவுள்ள இக்கட்டுரையில், புரட்சிக்கான செயல்திட்டம் குறித்த கீழ்க்காணும் பகுதியை மட்டும் மார்க்சிஸ்ட் இதழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம். – –ஆசிரியர் குழு
நமது புரட்சியை அதன் இறுதிவரை எப்படி எடுத்துச் செல்வது? இந்தப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின், விவசாயி வர்க்கத்தின், தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்தின் பங்கு என்ன? போராடும் சக்திகளின் எத்தகைய கூட்டணியைக் கொண்டு இந்தப் புரட்சியை அதன் இறுதிவரை கொண்டு செல்ல முடியும்? யாரோடு சேர்ந்து நாம் நடை போடுவது? யாரை எதிர்த்து நாம் போராடுவது? போன்ற கேள்விகள் எழுகின்றன. இங்குதான் நமது கருத்து வேறுபாடு கள் துவங்குகின்றன.
மென்ஷ்விக்குகளின் கருத்து
நமது புரட்சியானது முதலாளித்துவப் புரட்சி என்பதால் முதலாளித்துவ வர்க்கம்தான் புரட்சி யின் தலைவராக இருக்க முடியும். பிரான்சில் நடந்த மகத்தான புரட்சிக்கு முதலாளித்துவ வர்க்கம்தான் தலைமை தாங்கியது. இதர ஐரோப்பிய நாடுகளில் நடந்த புரட்சியின் தலை மையிலும் அதுவே இருந்தது. எனவே நமது ரஷ்ய புரட்சியின் தலைவராகவும் அந்த வர்க்கம் தான் இருக்க வேண்டும். இந்தப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம்தான் முக்கிய போராளியாக இருக்கிறது. எனினும் அது முதலாளித்துவ வர்க்கத்திற்குப் பின்னால்தான் நடைபோட்டபடி முதலாளித்துவ வர்க்கத்தை உந்தித் தள்ள வேண் டும். விவசாய வர்க்கமும் கூட புரட்சிகரமான தொரு வர்க்கம்தான். எனினும் அதற்குள்ளே அதிகமான அளவில் பிற்போக்குத் தனங்கள் நீடித்து நிலைத்துள்ள நிலையில் தாராளவாத ஜனநாயக முதலாளித்துவத்தோடு கூட்டாக செயல்படுவதை விட மிகக் குறைவான வாய்ப்பு களே அமைகின்றன. விவசாய வர்க்கத்தை விட முதலாளித்துவ வர்க்கமே பாட்டாளி வர்க்கத் திற்கு நம்பிக்கையான கூட்டாளி ஆகும். தலைமைப் பொறுப்பில் தாராளவாத ஜனநாயக முதலாளித்து வத்தைச் சுற்றியே அனைத்துப் போராடும் சக்தி களும் அணிதிரள வேண்டும். எனவே முதலாளித் துவ கட்சிகளை நோக்கிய நமது அணுகுமுறை என்பது அரசிற்கும் தாராளவாத முதலாளித்து வத்திற்கும் எதிராக விவசாய வர்க்கத்துடன் சேர்ந்து நிற்பது; அதன் தலைமைப் பொறுப்பில் பாட்டாளி வர்க்கம் இருப்பது என்ற புரட்சிகர கொள்கையால் தீர்மானிக்கப்பட முடியாது. மாறாக அது சந்தர்ப்பவாதக் கொள்கையாகத் தான் இருக்க முடியும்; அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்துடனும் இணைந்து நிற்பது. அதன் தலைமைப் பொறுப்பில் தாராள வாத முதலாளித்துவம் இருப்பது; இப்படித்தான் தாராளவாதிகளுடன் சமரசம் செய்து கொள் வது என்ற நடைமுறைத் தந்திரம் மேற்கொள்ளப் படுகிறது.
மென்ஷ்விக்குகளின் கருத்து இவ்வாறாகத் தான் இருந்தது.
போல்ஷ்விக்குகளின் கருத்து: நமது புரட்சி யானது ஒரு முதலாளித்துவப் புரட்சி என்பது உண்மைதான். ஆனால் நமது தாராளவாத முதலாளித்துவ வர்க்கம்தான் அதன் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அதற்குப் பொருளல்ல. 18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சியின் தலைமைப் பொறுப்பில் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் இருந்தது. ஆனால் ஏன்? ஏனென்றால் பிரெஞ்சு பாட்டாளிவர்க்கம் அப் போது பலவீனமாக இருந்தது. அது சுயேச்சை யாக வெளிவரவில்லை.. அது தனது சொந்த வர்க்கத்திற்கான கோரிக்கைகளை முன்வைக்க வில்லை. அதற்கு வர்க்க உணர்வோ அல்லது அதற்கென்று ஓர் அமைப்போ கொண்டதாக இருக்கவில்லை. பின்னர் அது முதலாளித்துவ வர்க்கத்தின் வாலைப் பிடித்துக் கொண்டு சென்றது. முதலாளித்துவ வர்க்கமும் தனது வர்க்க நோக்கங்களுக்காக அதை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது. நீங்களே பார்க்கலாம். அப்போது பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக ஜாராட்சியைப் போன்ற வடிவில் கூட்டாளி எதுவும் முதலாளித்துவ வர்க்கத்திற்குத் தேவைப் படவில்லை. ஏனென்றால் பாட்டாளி வர்க்கமே அதன் கூட்டாளியாக இருந்தது என்பதோடு மட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் சேவ கனாகவும் அது இருந்தது. எனவேதான் அப்போது முதலாளித்துவ வர்க்கம் புரட்சிகரமானதாக இருந்தது என்பது மட்டுமின்றி புரட்சிக்காக முன்வரிசையில் அது நடைபோட்டது. இங்கே ரஷ்யாவில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைத்தான் காண முடியும். ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தை எந்த வகையிலும் பலவீனமான ஒன்று எனக் கூறிவிட முடியாது. ஏற்கனவே பல வருடங்களாக அது தனியாகவே, சுதந்திரமாகவே செயல்பட்டு வருகிறது. தனது வர்க்கத்தின் சொந்தக் கோரிக் கைகளை அது முன்வைக்கிறது. தனது சொந்த நலன்களை உணர்வதற்கு ஏற்ற வகையில் வர்க்க உணர்வு பெற்றதாகவும் இருக்கிறது. அது தனக்குச் சொந்தமான கட்சியிலேயே ஐக்கியமாகி இருக்கிறது. அதன் கட்சியானது ரஷ்யாவிலேயே வலிமையான கட்சியாகும். அது தனக்கேயுரிய திட்டத்தையும் நடைமுறைத் தந்திரம், அமைப்பு போன்ற குறிக்கோள்களையும் கொண்டதாகவும் விளங்குகிறது. இந்தக் கட்சியின் தலைமையில் முதலாளி வர்க்கத்திற்கு எதிராக பல மகத்தான வெற்றிகளையும் அது ஏற்கனவே பெற்றுள்ளது… இத்தகைய ஒரு பின்னணியில் தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்தின் வால் என்ற பங்கோடு இந்த முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் பரிதாபகரமான ஒரு கருவி என்ற பங்கோடு பாட்டாளி வர்க்கம் திருப்தி அடைந்துவிட முடியுமா? இந்த முதலாளித்துவ வர்க்கத்தின் பின்னே நடைபோடவும், அந்த வர்க்கத்தை தனது தலைவராகவும் அது ஏற்றுக் கொள்ள முடியுமா? புரட்சிக்குத் தலைமை தாங்கிச் செல்லும் வர்க்கம் என்பதைத் தவிர வேறு ஏதாவதாகவும் அதனால் இருக்க முடியுமா?
நமது தாராளவாத முதலாளித்துவ முகாமில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான உணர் வைக் கண்டு நமது முதலாளித்துவ வர்க்கம் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது. புரட்சிக்குத் தலைமை தாங்கி முன்னால் நடைபோட்டுச் செல்வதற்குப் பதிலாக எதிர்ப்புரட்சியை அது ஆரத் தழுவ ஓடுகிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக அதனோடு கூட்டணி வைத்துக் கொள் கிறது. அதன் கட்சியான, கேடட் கட்சி, உலக முழுவதும் காணும் வகையில் ஸ்டோலிபின் உடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்கிறது. ஜாராட்சிக்குப் பயனளிக்கும் வகையில் மக்களின் புரட்சிக்கு எதிராக பட்ஜெட், ராணுவம் ஆகிய தீர்மானங்களுக்கு ஆதரவாக அது வாக்களிக் கிறது. ரஷ்யாவின் தாராளவாத முதலாளித்துவ வர்க்கம் என்பது ஓர் எதிர்ப்புரட்சி சக்திதான் என்பது இன்னமும் தெளிவாகவில்லையா? அதற்கு எதிராக இடைவிடாத போராட்டத்தை நடத்த வேண்டும் என்று புலப்படவில்லையா? பாட்டாளி வர்க்கம் சுதந்திரமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது முதலாளித் துவ வர்க்கம் தன் புரட்சித் தன்மையை இழந்து விடுகிறது என்று தோழர் காட்ஸ்கி கூறியது சரிதானே?
எனவே ரஷ்யாவின் தாராளவாத முதலாளித் துவ வர்க்கமானது புரட்சிக்கு எதிரான ஒரு சக்தியே ஆகும். புரட்சியின் உந்துசக்தியாக அதனால் இருக்க முடியாது; புரட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தகுதியும் அதற்கு இல்லை; அது புரட்சியின் தீவிரமான எதிரி என்ற வகையில் அதை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டியதே அவசியமாகிறது.
நமது புரட்சியின் ஒரே ஒரு தலைவராக, ஜாராட்சியின் அதிகார வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடுக்க, ரஷ்யாவின் புரட்சிகர சக்திகள் அனைத்திற்கும் தலைமை தாங்கும் விருப்பமுள்ள, அவ்வாறு தலைமை தாங்கும் திறன் கொண்டதாக இருப்பது பாட்டாளி வர்க்கம் மட்டுமே. நாட்டின் புரட்சிகர சக்திகளை தன்னைச் சுற்றி அணிதிரளச் செய்யும் திறன் கொண்ட, நமது புரட்சியை அதன் இறுதி வரை கொண்டு செல்வதற்கான தகுதி உடைய ஒரே வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் மட்டுமே இருக் கிறது. இந்தப் பாட்டாளி வர்க்கம் புரட்சியின் தலைமைப் பொறுப்பை வகிப்பதற்கான தயாரிப்பு கள் அனைத்தையும் செய்வதுதான் சமூக ஜன நாயகத்தின் முன்னுள்ள கடமை ஆகும்.
இதுதான் போல்ஷ்விக்குகளின் கண்ணோட்டத் தில் மையக் கருத்தாகும்.
அப்படியென்றால், புரட்சியை அதன் இறுதி வரை கொண்டு செல்வது என்ற கடமையை நிறைவேற்ற பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பகமான கூட்டாளியாக யார் இருப்பார்கள்? என்ற கேள்விக்கு போல்ஷ்விக்குகள் இவ்வாறுதான் பதில் அளித்தார்கள். பாட்டாளி வர்க்கத்தின் ஒரே ஒரு கூட்டாளியாக, எந்தவகையிலும் நம்ப கமான, வலிமை வாய்ந்த கூட்டாளியாக விளங்கு வது புரட்சிகர விவசாய வர்க்கம் மட்டுமே தவிர, நயவஞ்சக தாராளவாத முதலாளித்துவ வர்க்கம் அல்ல. நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தூக்கிப் பிடிக்கும் அனைத்துப் பழமை வாதத்திற்கும் எதிராக, பாட்டாளி வர்க்கத்தோடு இணைந்து நின்று, தோளோடு தோளாகப் போராடுகின்ற ஒரே வர்க்கமாக இருப்பது புரட்சிகர விவசாய வர்க்கம்தான்.
இதன்படி, முதலாளித்துவ கட்சிகள் மீதான நமது அணுகுமுறையானது இந்தக் கருது கோளின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். ஜாராட்சிக்கும் தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எதிராக, புரட்சி கர விவசாய வர்க்கத்தோடு இணைந்து நின்று, அதன் தலைமைப் பொறுப்பில் பாட்டாளி வர்க்கம் நிற்பதாக அது அமைய வேண்டும். எனவே கேடட்டுகளின் மேலாதிக்கத்தை (தலைமையை) எதிர்த்துப் போராடுவதன் அவசியமும், கேடட்டு களுடன் எவ்வித சமரசத்தையும் அனுமதிக்கலா காது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
போல்ஷ்விக்குகளின் கருத்து இவ்வாறாகத் தான் இருந்தது.
இந்த இருவிதமான நிலைபாட்டின் கட்டமைப்புக் குள் இருந்தபடிதான் லெனின், – மார்ட்டினோவ் ஆகியோரின் உரைகளும், மற்ற அனைத்து பேச்சாளர்களின் உரைகளும் அமைந்திருந்தன.
ரஷ்யப் புரட்சியின் மேலாதிக்கத்தை பாட்டாளி வர்க்கம் கைக்கொள்வதை மறுதலித்தும், கேடட்டு களுடன் ஓர் அணியாகச் செயல்படுவது என்ற கருத்தை ஆதரித்தும் மிகத் தீர்மானகரமான முறையில் மென்ஷ்விக்குகளின் கருத்தோட்டத் தின் ஆழ்ந்த தன்மையை தோழர் மார்ட்டினோவ் தனது உரையின் மூலம் அதன் ஆழத்திற்கு எடுத்துச் சென்றார்.
இதர பேச்சாளர்களில் பெரும்பாலானவர்கள் போல்ஷ்விக் நிலைபாட்டின் உயிரோட்டத் தோடு தங்களை பிணைத்துக் கொண்ட வகையில் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.
இவற்றில் மிகுந்த கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது தோழர் ரோசா லக்சம்பர்க்கின் உரை யாகும். ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளின் சார்பில் காங்கிரஸிற்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர், நமது கட்சிக்குள் நிலவும் கருத்து வேறு பாடுகள் குறித்த ஜெர்மன் தோழர்களின் கருத்து களை விளக்கிப் பேசினார். (இரு வேறு தருணங் களில் அவர் ஆற்றிய உரைகள் இங்கு ஒன்றாக இணைக்கப்படுகிறது)
புரட்சியின் தலைவர் என்ற வகையில் பாட்டாளி வர்க்கத்தின் பங்கு, எதிர்ப்புரட்சி சக்தி என்ற வகையில் தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்தின் பங்கு ஆகியவை போன்ற கேள்வி களில் போல்ஷ்விக்குகளுடனான தனது முழுமை யான உடன்பாட்டை வெளிப்படுத்திய தோழர் ரோசா லக்சம்பர்க், மென்ஷ்விக் தலைவர்களான ப்ளெக்கனோவ், ஆக்சல்ராட் போன்றோரை சந்தர்ப்பவாதிகள் என்று விமர்சித்ததோடு, அவர்களது நிலைபாட்டை பிரான்ஸ் நாட்டின் ஜாரேசிஸ்டுகளின் நிலைபாட்டிற்கு இணை யானது என்றும் குறிப்பிட்டார். மேலும், “போல்ஷ் விக்குகளும்கூட ஒரு சில குறைபாடுகளை, தொட்டால் சிணுங்கித் தனத்தை கொண்டவர் களாக இருக்கிறார்கள் என்பதோடு, ரொம்பவு மே கறாராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் கருதுகிறேன். என்றாலும் நான் அதை முழுமையாக உணர்ந்து அவர்களை மன்னித்து விடுகிறேன். ஏனென்றால் மென்ஷ்விக்குகளின் சந்தர்ப்பவாதம் போன்ற கழுவின மீனில் நழுவின மீனாக, அடர்த்தியற்ற நிலையைப் பார்க்கும் போது, ஒருவரால் கறாராக நடந்து கொள்ளா மல் இருக்க முடியாது. இதே மாதிரியான அதீத மான கறார்த் தன்மையை பிரான்சில் இருந்த கூடிஸ்டுகளிடையேயும் காண முடிந்தது. * கூடிஸ்டுகள் – சூலே கூட்-இன் ஆதர வாளர்கள். பிரெஞ்சு சோஷலிஸ்டுகள் மத்தியில் நிலவிய இடதுசாரி மார்க்சியப் போக்கைப் பின்பற்றியவர்கள். கூடிஸ்டுகள் 1901ஆம் ஆண்டில் பிரெஞ்சு சோஷலிஸ்டு கட்சியைத் தோற்று வித்தனர். பிரெஞ்சு தொழிலாளர் இயக்கத்தில் நிலவிய சந்தர்ப்பவாதிகளை அவர்கள் எதிர்த்துப் போராடியதோடு, முதலாளித்துவ வாதிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் கொள்கையையும் முதலாளித்துவ அரசுகளில் சோஷலிஸ்டுகள் பங்கேற்பதையும் அவர்கள் எதிர்த்தனர். ஏகாதி பத்திய உலகப் போர் வெடித்தெழுந்தபோது, தாய் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற தேசியவாத நிலைபாட்டை கூட் எடுத்தது மட்டு மின்றி, முதலாளித்துவ அரசிலும் பங்கேற்றார். புரட்சிகர மார்க்சியத்திற்கு உண்மையாக இருந்த கூடிஸ்டுகளில் ஒரு பிரிவினர் பின்னர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
அந்தப் பிரிவின் தலைவரான கூட் தனது புகழ்பெற்ற தேர்தல் சுவரொட்டியில் இவ்வாறு அறிவித்திருந்தார்: “ ஒரே ஒரு முதலாளி கூட எனக்கு வாக்களிக்கத் துணிய வேண்டாம். ஏனென்றால், நாடாளுமன்றத்தில் அனைத்து முதலாளிகளுக்கும் எதிராக பாட்டாளிகளின் நலன்களை மட்டுமே நான் பாதுகாப்பேன்.” அவர்கள் இத்தகையவர்களாக இருந்தபோதி லும், ஜெர்மன் சமூக-ஜனநாயக வாதிகளாகிய நாங்கள் மார்க்சிய துரோகிகளுக்கு எதிரான, ஜாரேசிஸ்டுகளுக்கு எதிரான அவர்களது போராட்டத்தில் கூடிஸ்டுகளின் பக்கத்தில்தான் எப்போதும் இருந்தோம். போல்ஷ்விக்குகளைப் பற்றியும் அப்படித்தான் சொல்ல வேண்டும். மென்ஷ்விக் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிரான அவர்களது போராட்டத்தை ஜெர்மன் சமூக- ஜனநாயகவாதிகளாகிய நாங்கள் ஆதரிக்கவே செய்வோம்… கிட்டத்தட்ட இதுதான் தோழர். ரோசா லக்சம்பர்க் சொன்னது.
ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சியின் மத்தியக் கமிட்டி காங்கிரஸூக்கு அனுப்பியிருந்த, ரோசா லக்சம்பர்க் காங்கிரஸ் பிரதிநிதிகளிடையே படித்த புகழ் பெற்ற கடிதம் இதைவிட மேலும் ஈர்ப்புக்குரியதாக இருந்தது. அவ்வாறு இருந்தது ஏனென்றால், தாராளவாதத்திற்கு எதிராக போராடுமாறு அது ஆலோசனை கூறியதோடு, ரஷ்யப் புரட்சியின் தலைவர் என்ற வகையில் ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் வகிக்கும் சிறப்பான பங்கினை அது அங்கீகரித்ததோடு, அதே அடிப்படையில் போல்ஷ்விசத்தின் அனைத்து முக்கிய கருத்தோட்டங்களையும் அது அங்கீ கரித்ததுமே அதற்குக் காரணமாக இருந்தது.
இவ்வாறுதான் ஐரோப்பாவின் மிக அதிக மான தாக்குதலுக்கு ஆளான, அவ்வகையில் அனுபவம் நிறைந்த பெரும் புரட்சிகர கட்சியாக உருவெடுத்த ஜெர்மன் சமூக-ஜனநாயக கட்சி யானது மிகவும் வெளிப்படையாகவும், தெளிவாக வும், மார்க்சியத்திற்கு துரோகம் செய்பவர்களுக்கு எதிராகவும், மென்ஷ்விக்குகளுக்கு எதிராகவும் அவர்கள் நடத்தி வந்த போராட்டமே அவர் களை உண்மையான மார்க்சிஸ்டுகளாக மாற்றி யுள்ளது என்ற வகையிலேயே போல்ஷ்விக்கு களை ஆதரித்தது.
நமது கவனத்தைப் பெறுகின்ற மற்றொன்று தலைமைக் குழுவில் போலந்து பிரதிநிதிகளின் சார்பாக தோழர் டிஸ்கா ஆற்றிய உரையின் பல பகுதிகள் ஆகும். தோழர் டிஸ்கா தனது உரையில், “இரண்டு குழுவினருமே மார்க்சிய கண்ணோட் டத்தில் உறுதிபட நிற்பதாகவே நமக்கு உறுதி யளித்தார்கள். போல்ஷ்விக்குகளா? மென்ஷ்விக் குகளா? உண்மையிலேயே இந்தக் கண்ணோட்டத் தில் யார் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை அனைவராலும் எளிதாக உணர முடியாது. ‘இடது’ பக்கத்தில் அமர்ந்திருந்த பல மென்ஷ் விக்குகள் குறுக்கிட்டு குரல் கொடுத்தார்கள்: “நாங்கள் மார்க்சிய கண்ணோட்டத்தின் பக்கம் தான் நிற்கிறோம்!”. டிஸ்கா அவர்களுக்கு பதிலளித்தார்: “இல்லை தோழர்களே! நீங்கள் அதன் பக்கத்தில் இல்லை. நீங்கள் அதன்மீது தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதில் நீங்கள் வெளிப்படுத்திய கையறு நிலை அனைத்தும், மாபெரும் மார்க்ஸின் மகத்தான வார்த்தைகளை உருப்போட்டுக் கற்றுக் கொண்டீர்களே தவிர, அவற்றைப் பொருத்திப் பார்ப்பதில் உங்களுக்கு இருந்த இயலாமை ஆகிய அனைத்துமே நீங்கள் மார்க்சிய கண்ணோட்டத்தோடு இருக்கவில்லை; மாறாக, அதை கைவிட்டுவிட்டீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது!”
மிகச் சரியான வார்த்தைகள்!
உண்மை. பின்வரும் விஷயத்தை மட்டுமே எடுத்துக் கொள்வோம். பாட்டாளி வர்க்கத்தை தனிப்பட்டதொரு அரசியல் சக்தியாக மாற்று வது எங்கும் எப்போதும் சமூக ஜனநாயகத்தின் கடமை என்று மென்ஷ்விக்குகள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்கள். அது உண் மையா? நிச்சயமான உண்மை! இவை மார்க்ஸின் மகத்தான வார்த்தைகள்; ஒவ்வொரு மார்க்சிஸ் டும் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய வார்த்தைகள். ஆனால் மென்ஷ்விக்குகள் அவற்றை எப்படி அமல்படுத்துகிறார்கள்? உண்மையில் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தை எப்போதும் சூழ்ந்துள்ள பெருவாரியான முதலாளித்துவ அம்சங்களிலிருந்து விடுவித்து, அதை ஒரு சுயேச்சையான, தன்னிறைவு பெற்ற ஒரு வர்க்கமாக மாற்றுவதற்கு உதவுகிறார்களா? புரட்சிகர சக்திகளை பாட்டாளி வர்க்கத்தைச் சுற்றி அணிதிரட்டி, புரட்சியின் தலைமை என்ற பாத்திரத்திற்கு பாட்டாளி வர்க்கத்தை தயார் படுத்துகிறார்களா? இவை எதையுமே மென்ஷ் விக்குகள் செய்வதில்லை என்பதைத்தான் நடை முறை உண்மைகள் நமக்கு எடுத்துக்காட்டு கின்றன. அதற்கு மாறாக, தாராளவாத முதலாளித் துவ வர்க்கத்தோடு ஒப்பந்தங்களை போடும்படி தான் பாட்டாளி வர்க்கத்திற்கு மென்ஷ்விக்குகள் அடிக்கடி ஆலோசனை வழங்குகிறார்கள். அதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தை சுயேச்சையான தொரு வர்க்கமாக பிரிப்பதற்கு பதிலாக முதலாளித் துவ வர்க்கத்தோடு இணைக்கவே அவர்கள் உதவுகிறார்கள். புரட்சியின் தலைமைப் பாத் திரத்தை கைவிட்டு விடுமாறு, அந்தப் பாத் திரத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு விட்டுக் கொடுத்துவிடுமாறு, முதலாளித்துவ வர்க்கத்தைப் பின்பற்றுமாறுதான் மென்ஷ்விக்குகள் பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவுறுத்துகிறார்கள். இதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தை சுயேச்சையானதொரு அரசியல் சக்தியாக மாற்றுவது என்பதற்கு மாறாக முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு தொங்கு சதையாக மாற்றுவதற்கே அவர்கள் உதவுகிறார். கள்.… அதாவது சரியான மார்க்சிய கண்ணோட்டத் திலிருந்து அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதற்கு நேர் எதிரான வேலையைத்தான் மென்ஷ் விக்குகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆம். மார்க்சிய கண்ணோட்டத்தின் பக்கத்தில் அல்ல; மென்ஷ்விக்குகள் அதை கைவிட்டு விட்டார்கள் என்று தோழர் டிஸ்கா சொன்னது மிகவும் சரியான ஒன்றுதான்.
விவாதத்தின் முடிவில், மென்ஷ்விக்குகள் சார்பில் ஒன்றும், போல்ஷ்விக்குகள் சார்பில் ஒன்றும் என்ற வகையில் இரண்டு நகல் தீர்மானங் கள் காங்கிரஸின் முன் வைக்கப்பட்டன. இந்த இரண்டில், போல்ஷ்விக்குகள் முன்வைத்த நகல் தீர்மானம் பெருமளவிலான வாக்குகள் வித்தி யாசத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
அதன்பிறகு, இந்த நகல் தீர்மானத்திற்கு திருத்தங்கள் வந்தன. சுமார் 80 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. முக்கியமாக நகரில் இருந்த இரண்டு கருத்துகளின் மீது. ஒன்று புரட்சியின் தலைமைப் பொறுப்பில் பாட்டாளி வர்க்கம் பற்றியது. மற்றொன்று கேடட்டுகள் ஓர் எதிர்ப் புரட்சி சக்திதான் என்பதைப் பற்றியது. இவை தான் விவாதத்தில் கவனத்தைக் கவரக்கூடிய பகுதியாக இருந்தன. ஏனென்றால் இங்கேதான் பல்வேறு குழுக்களின் உண்மையான நிறம் சிறப் பாக வெளிப்பட்டது. முக்கியமான முதல் திருத்தத்தை தோழர் மார்ட்டோவ் முன்மொழிந் தார். “புரட்சியின் தலைவராக பாட்டாளி வர்க்கம் இருக்கிறது” என்ற தொடருக்குப் பதிலாக “பாட்டாளி வர்க்கம் முன்னணிப்படையாக விளங்குகிறது” என்பதாக திருத்த வேண்டும் என்று அவர் கோரினார்.தனது திருத்தத்திற்கு ஆதரவாக அவர் கூறுகையில், “முன்னணிப் படை என்பது தெள்ளத் தெளிவாக இருக்கும்” என்று கூறினார். அவருக்கு தோழர் அலெக் சென்ஸ்கி பதிலளித்தார். அவர் கூறுகையில் துல்லியமான வார்த்தை என்பது இங்கே விஷய மல்ல; மாறாக இதில் முற்றிலும் ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துகள் பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார். ஏனென்றால் ‘முன்னணிப் படை’ என்பதும் ‘தலைவர்’ என்பதும் முற்றிலும் வேறுபட்ட கருத்தாக்கங்கள். முன்னணிப் படை என்பது (முன்னால் உள்ள படைப்பிரிவு) முன் வரிசையில் நின்று போராடுவதைக் குறிப்பதாக, எதிரியின் தாக்குதல் மிக வலிமையாக வந்து விழும் இடத்தில் இருப்பதாக, தன் சொந்த ரத்தத்தை சிந்துவதாக, ஆனால் அதே நேரத்தில் மற்றவர்களால் தலைமை தாங்கப்படுவதாக இருக்கும் நிலையை, இந்த இடத்தில் முதலாளித் துவ ஜனநாயகவாதிகளால் தலைமை தாங்கப்படு வதை, குறிப்பதாக உள்ளது. முன்னணிப்படை யானது எப்போதுமே பொதுவான ஒரு போராட்டத் தினை தலைமை தாங்கி நடத்துவதில்லை. முன்னணிப்படையானது எப்போதுமே தலைமை தாங்கப்படுவதுதான். அதற்கு மாறாக, ஒரு தலை வராக இருப்பது என்பது முன்னணி வரிசையில் நின்று போராடுவது மட்டுமின்றி, பொது வானதொரு போராட்டத்திற்குத் தலைமை தாங்குவதாக, அதன் இலக்கை நோக்கி அதற்கு வழிகாட்டுவதாகவும் அமைகிறது. போல்ஷ்விக்கு களாகிய நாங்கள் முதலாளித்துவ ஜனநாயக வாதிகளால் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கப்படுவதை விரும்பவில்லை. மக்களின் போராட்டம் முழுவதையுமே பாட்டாளி வர்க் கம் தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும், ஜனநாயக குடியரசை நோக்கி அதற்கு வழி காட்டுவதாக இருக்க வேண்டும் என்றுமே நாங்கள் விரும்புகிறோம்.
இதன் விளைவாக, மார்ட்டோவ் கொண்டு வந்த திருத்தம் தோற்கடிக்கப்பட்டது.
இதே போன்ற வகையில் கொண்டு வரப்பட்ட இதர திருத்தங்களும் அவ்வாறே தோற்கடிக்கப் பட்டன.
கேடட்டுகள் பற்றிய கருத்துகளுக்கு எதிராக வேறு பல திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன. கேடட்டுகள் இன்னமும் புரட்சிக்கு எதிரான நிலைபாட்டை மேற்கொள்ளவில்லை என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்று மென்ஷ்விக்குகள் முன்வைத்தார்கள். ஆனால் இந்தக் கருத்துருவை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள மறுத்தது. இந்த வகையில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் அனைத்துமே மறுதலிக்கப்பட்டன. ஒரு சில விஷயங்களிலாவது குறைந்தபட்சம் ஏதாவ தொரு வகையிலாவது ஒப்பந்தங்களை கேடட்டு களுடன் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கருத்தையும் மென்ஷ்விக்குகள் முன்வைத் தார்கள். இந்த முன்வரைவையும் காங்கிரஸ் மறுதலித்ததோடு, இதே போன்ற வகையில் கொண்டு வரப்பட்ட இதர திருத்தங்களும் தோற்கடிக்கப்பட்டன.
இறுதியில் இந்தத் தீர்மானம் ஓட்டுமொத்த மாக வாக்களிப்பிற்கு முன்வைக்கப்பட்டது. போல்ஷ்விக்குகளின் தீர்மானத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. மற்றவர்கள் வாக்களிப்பில் பங்கேற்க வில்லை.
பெரும் வாக்குவித்தியாசத்தில் போல்ஷ்விக்கு கள் முன்வைத்த தீர்மானத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.
அந்த நேரத்திலிருந்தே போல்ஷ்விக்குகளின் கண்ணோட்டம் என்பது கட்சியின் கண்ணோட்ட மாக மாறியது. மேலும் இந்த வாக்குப்பதிவு இரண்டு முக்கிய மான விளைவுகளை ஏற்படுத்தியது.
முதலாவதாக, காங்கிரஸில் அதுவரை நிலவி வந்த போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள், போலந்து பிரிவினர், லெட்டுகள், பண்டிஸ்டுகள் போன்ற செயற்கையான, மேலோட்டமான பிரிவுகளுக்கு அது முடிவு கட்டியது. மேலும் குறிக்கோள்களின் அடிப்படையிலான புதிய தொரு பிரிவினையை, அதாவது (அனைத்து போலந்து பகுதியினர், பெரும்பான்மையான லெட்டுகள் ஆகியோரை உள்ளடக்கிய) போல்ஷ் விக்குகள், (கிட்டத்தட்ட அனைத்து பண்டிஸ்டு களையும் உள்ளடக்கிய) மென்ஷ்விக்குகள் என்ற பிரிவினையை அது அறிமுகப்படுத்தியது.
இரண்டாவதாக, இந்த வாக்குப்பதிவானது தொழிலாளர் பிரதிநிதிகள் எவ்வாறு இந்தப் பிரிவுகளுக்கிடையே பங்கிடப்பட்டிருந்தார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டு வதாக இருந்தது. போல்ஷ்விக் குழுவில் முன்பு குறிப்பிட்டதைப் போல 38 அல்ல; 77 தொழி லாளர்கள் இருந்தனர். (38 உடன் 27 போலந்து பகுதியினர், 12 லெட்டுகள்) மென்ஷ்விக் குழுவில் முன்பிருந்த 30 தொழிலாளர்களுக்குப் பதிலாக 39 பேர் (30 பேருடன் 9 பண்டிஸ்டுகள்) இருந்தனர். மென்ஷ்விக் குழுவானது அறிவுஜீவிகளின் குழு என்பதாக மாறியது.
பாகு , 1907
பாகின்ஸ்கி ப்ரோலிடெரி எண் 1 & 2 இல்
ஜூன் 20 மற்றும் ஜூலை 10, 1907இல்
முதலில் வெளியிடப்பட்டது.
கோபா இவனோவிச் என்று கையெழுத் திட்டிருந்தார்.
தோழர் ஸ்டாலின் தேர்வு நூல்கள் – முன் வெளியீட்டுத் திட்டம்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் என்ற வகையிலும், ரஷ்யாவில் சோஷலிசத்தை மறு கட்டுமானம் செய்த நிபுணர் என்ற வகையிலும், மார்க்சிய-லெனினிய தத்துவத்தை உலகமெங்கும் முன்னெடுத்துச் சென்றவர் என்ற வகையிலும், தோழர் ஸ்டாலினது பங்கினை காய்தல் உவத்தல் இன்றி மதிப்பீடு செய்வது மிக முக்கியமான கடமையாகும். இதற்கு அவரது எழுத்துக்கள், உரைகள் ஆகியவையே உரைகல்லாக அமையும்.
இந்த நோக்கத்துடன் சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் மத்தியக் குழுவின் தீர்மானத்திற்கு இணங்க அதன் கீழ் செயல்பட்டு வந்த மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின் கழகம் தோழர் ஸ்டாலினின் எழுத்துகள், உரைகள் ஆகியவற்றைத் திரட்டி 1946 காலப்பகுதியில் ருஷ்ய மொழியில் வெளியிட்ட தொகுப்பு நூல்களின் ஆங்கிலப் பதிப்பு 1952-55 காலப் பகுதியில் வெளியிடப்பட்டது.
15 தொகுதிகள் கொண்ட இந்தத் தொகுப்பு இப்போது அலைகள் வெளியீட்டகத்தினரால் முதன்முறையாகத் தமிழில் வெளியிடப்படுகிறது.
முன்பதிவு விவரம்
ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் – 15 தொகுதிகள் – பக்கங்கள் (சுமார்) 6700 – அளவு 1 /8 டெம்மி – விலை: ரூ. 6,000/- முன்பதிவுச் சலுகை விலை: ரூ. 3,500/- (அஞ்சலில் பெற, கூடுதலாக ரூ. 500/-) நூல் தேவைப்படுவோர் ரூ. 500/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும். மீதித் தொகையை ஒரே தவணையிலோ அல்லது மூன்று தவணைகளிலோ செலுத்தலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நூல்கள் கிடைக்கும். இத் தொகுப்பு நூல்கள் 2019 நவம்பர் புரட்சி தினத்தன்று வெளியிடப்படும். முன்பதிவு இறுதி நாள்: 31.08.2019. முன்பதிவு தொகையை ALAIGAL VELIYEETAGAM என்ற பெயரில் கீழ்கண்ட முகவரிக்கு பணம், காசோலை, வரைவோலையாக (Cash/Cheque/Demand Draft) செலுத்தலாம்.
அலைகள் வெளியீட்டகம் 5 / 1 A, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,சென்னை- 600 089. தொடர்புக்கு: 98417 75112
Leave a Reply