சூரியன்
திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டு வரலாறு டையது. திராவிட இயக்கங்கள் மற்றும் கட்சிகள், அவற்றின் பங்களிப்புகள் ஆகியன ஆய்வுலகின் கவனத்தைப்பெற்றுவந்துள்ளது.குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக உருவான பிறகு (1960களில்) ஏராளமான ஆங்கிலேய, அமெரிக்கஆய்வாளர்கள்நீதிக்கட்சி, அதன்தோற்றம், அதன் சாதிய, வர்க்க உள்ளடக் கங்கள் குறித்தும் அது எவ்வாறு பிராமண ரல்லாத இடைநிலை சாதிகளின்நலனுக்காக பணியாற்றி வந்தது குறித்தும் அதிகமான கவனத்தை பெற்றுவந்தது. இதன் காரணமாக, ஏராளமான ஆய்வுகள்தமிழிலும்ஆங்கிலத்திலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஆரம்பகாலங்களில் வந்த ஆங்கில நூல்களில் சில, திமுக-வை பாசிசஇயக்கமென்றும், வகுப்புவாத அமைப்பு என்றும் வகைப்படுத்தின (க்ஷயசநேவவ 1976; ளுhinn 1971). எவ்வாறாயினும், திராவிட இயக்கமும், அதன் அரசியல்நீட்சியானதிமுக-வும்ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தன என்பதில் இருவேறுகருத் தில்லை.
அதேபோல, ஆய்வுலகைத்தாண்டி அரசியல் உலகிலும்தனக்கான கவனத்தை திராவிட அரசி யல் தொடர்ந்து பெற்றுவருகின்றது. திராவிட அரசியலின் வெற்றி, அதன் அணிதிரட்டல்யுக்தி, அதன் தத்துவார்த்த பங்களிப்பு என பல தளங் களில் இதுகுறித்து ஆய்வுகள்வந்தவண்ணம் உள்ளன. இவ்வாய்வுகளில் சில திராவிட சித்தாந் தத்தை பாராட்டி வந்துள்ள அதே வேளையில், அதனை முற்றாக நிராகரித்தும், அதனை குறுகிய இனவாதபோக்காகக்கருதியும் கூட நூல்கள் வந்துள்ளன. திராவிட அரசியலை முற்றாக நிரா கரிக்காமல், அதேசமயத்தில்அவ்வியக்கம் குறித்த சரியான மதிப்பிடலை மேற்கொள்ளும் நூல்கள் சொற்பமே. அதேபோல, மார்க்சியபுரிதலின் அடிப்படையில் திராவிட இயக்கங்களின், கட்சி களின் உள்ளார்ந்த பங்களிப்புகள் குறித்து வெளி யானவிமர்சனநூல்களும்மிகக்குறைவே. அருணன் (1981) மற்றும் பி.ராமமூர்த்தி (1983) ஆகியோரின்நூல்களுக்குப் பிறகு, கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக எந்த நூல்களும் திரா விட இயக்கங்களின் அரசியல் குறித்து விமர்சித்து வரவில்லை என்பது கவலையளிக்கக் கூடியது.
இந்நிலையில், ஏறத்தாழ 36 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்சியஅணுகுமுறையில் இருந்து திரா விட இயக்கங்கள் குறித்தும், தமிழகத்திற்குரிய பிரத்யேகசூழலில் இருந்து இவ்வியக்கங்களின்/கட்சிகளின் பங்களிப்பு குறித்தும் என்.குண சேகரன் எழுதிய “மறுவாசிப்பில்: திராவிட இயக்கம்” எனும் நூல் வெளிவந்துள்ளது. இந்நூலாசிரியரே முன்னுரையில்குறிப்பிட்டுள்ளபடி“சரியாக புரிந்துகொள்ளப்படாமல் இருக்கும் திராவிட இயக்கத்தின் சில பரிமாணங்கள் பற்றி சரியான புரிதல் ஏற்படுத்தும்” (பக். 6) முயற்சிக்கு இந்த நூல் உதவியாக உள்ளதா என்பதைக் காண்போம்.
இந்தநூல், திராவிட இயக்கமாக பின்னர் பரிணமித்தபிராமணரல்லாதோர் இயக்கத்தின் தோற்றம் முதல் அதன் பிற்கால அரசியல் நீட்சியானதிமுக ஆட்சி பொறுப்பேற்கும் காலம் வரையான ஏறக்குறைய ஐம்பதாண்டு கால வரலாற்றை ஆய்வு செய்கிறது. இக்காலக் கட்டத்தில் திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல் கட்சிகளும் சந்தித்துவரும் நெருக்கடிக் கான தோற்றுவாயைக் கண்டடையும் முயற்சியில், திராவிட சித்தாந்தத்தின் அடிப்படைக் கட்டமைப் பில் காணப்படும் குறைகளை ஆசிரியர் அடை யாளப்படுத்துகிறார்.
பிற்காலத்தில், திமுக, அனைத்திந்திய அண்ணா திமுக (அஇஅதிமுக) உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் அரசியல் தளத்தில் மேற்கொண்ட சமரசப்போக்கிற்கான விதை பெரியாரின் காலத்தி லேயே உருவானதை ஆசிரியர் விவரிக்கிறார். உதாரணமாக, சிங்காரவேலருடன் இணைந்து பெரியார் தயாரித்த “ஈரோட்டு திட்டம்”, அக் கால கட்டத்தில் நிலச் சீர்திருத்தம் உள்ளிட்ட புரட்சிகரமான திட்டங்களை முன்மொழிந்தது. ஆனால், இத்திட்டத்தைத் தயாரித்த பெரியாரே பின்னர் அதனை கிடப்பில் போட்டு அதனை கிஞ்சிற்றும் ஏற்காத நீதிக்கட்சியை ஆதரித்தது குறித்தும், அதன்பின்னர் பெரியார் மற்றும் சிங்காரவேலரிடையே நடைபெற்ற விவாதம் குறித்தும் விரிவாக விவாதிக்கிறார் (பக். 49-31).
அதுபோல, திராவிட இயக்கத்தினை வலுவாகக் கட்டமைக்கஉதவிய பல்வேறு காரணிகள் குறித் தும்- இன அரசியல், மொழி அரசியல், சமூக சீர்திருத்த பணிகள்- அதனுடைய பொருத்தப் பாடு குறித்தும் இப்புத்தகம் விரிவாக எடுத்துரைக் கிறது. மேலும், நீதிக்கட்சியுடன் சுயமரியாதை இயக்கம் இணைந்து பின்னர் திராவிடர் கழகமாக பரிணமித்தது குறித்தும், பின்னர் அதில் பிளவு ஏற்பட்டுஅதன் அரசியல் நீட்சியாகதிமுக உருவான தன் பின்னணி குறித்தும் விளக்கமாக ஆராயப்பட் டுள்ளது. மேலும், திக-வில் இருந்து திமுக உரு வான நிலையில் அதுதனதுவெகுமக்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள மேற்கொண்டபல்வேறு பணிகளை, அதன் தேர்தல் வெற்றியை இப்புத்த கம் வெளிக்கொணர்ந்துள்ளது. இவைகுறித்து ஏற்கனவே பல்வேறு புத்தகங்கள்வெளிந்திருந் தாலும் கூட, இந்நிகழ்வுகள் குறித்து வேறு ஒரு புதிய பார்வையை வாசகர்களுக்கு இப்புத்தகம் வழங்குகிறது.
வரலாற்று நிகழ்வுகள் குறித்து
ஏற்கனவே குறிப்பிட்டது போல், இப்புத்தகம் பல்வேறு வரலாற்றுநிகழ்வுகள் குறித்து விவாதித் திருந்தாலும் சில விவரங்கள் இப்புத்தகத்தில் விடுபட்டுள்ளன. குறிப்பாக, மத்திய – மாநில உறவுகள் குறித்து திராவிட அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஆசிரியர் கூறியுள்ள தகவல் கள் போதுமானதாக இல்லை. உதாரணமாக, மத்திய-மாநில உறவுகளைசீரமைப்பது குறித்து திராவிட இயக்கங்கள் வலியுறுத்தவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் (பக்.12). ஆனால், திமுக ஆட்சியமைத்த பிறகு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிபி.வி.இராஜமன்னார் தலைமை யில் மூன்றுபேர் கொண்ட (பி.வி.இராஜ மன்னார், ஏ.லட்சுமணசாமிமுதலியார் மற்றும் பி. சந்திரா ரெட்டி) கமிஷன் (1971) அமைத்து அதன் அடிப் படையில் மாநில சுயாட்சி குறித்த தீர்மானத்தை யும் (1974) கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு நிறைவேற்றியது. பின்னாளில், காங்கிரஸ் கட்சி அமைத்த சர்க்காரியாகமிஷனுக்கான (1983) அடிப்படையாக இராஜமன்னார்கமிஷன் இருந் தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2007-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குகூட்டணியின் போதும் பூஞ்சிகமிஷன்அமைப்பதிலும் திமுக-வின் முதன்மையான பங்கினை கவனத்தில் கொள்ள வேண்டும். நூலின் அடுத்த தொகுதியில் இவை கொண்டுவரப்படுவதாக இருந்தாலும், மத்திய, மாநில உறவுகள் குறித்து பேசும்போது இவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
அடுத்தபடியாக, “தமிழக அரசு அலுவலகங் களில் நிர்வாக மொழியாக தமிழ் மொழி பயன் படுத்தப்படவில்லை” (பக்.61). என்கிறார். இதனை 50 ஆண்டுக்கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் இன்றும் உயர் நீதிமன்றவழக்காடு மொழியாக தமிழ் இல்லை; அரசாணைகள் மிகவும் கால தாமதமாகவே தமிழில்வெளியிடப்படுகின்றன, அரசு உத்தரவுகள்பலவும் ஆங்கிலத்தில்தான் வருகின்றனஎன்ற போதும், காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழ் ஆட்சி மொழி சட்டம்- 1956 ல் நிறைவேற்றப்பட்டது முதல் மாநிலத்தில் தமிழே ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக உள்ளது. தமிழ் ஆட்சி மொழிச்சட்டத்தை அரசு அலுவல கங்களில்நடைமுறைப்படுத்துவதற்குத் தமிழக அரசு ஆட்சி மொழிக்குழு ஒன்றை 1957 ஆம் ஆண்டில் அமைத்தது. தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பரவலாகவும் முழுமையாகவும் செயல்படுத்தும் நோக்கில் அரசு தமிழ் வளர்ச்சி இயக்ககம்எனும்தனித்துறைத் தலைமை அலுவல கத்தை 1971-ல் அரசு அமைத்துள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திடுவது, தமிழில் பதிவேடுகளைபராமரிப்பது மற்றும் எழுத்து சீர்திருத்தத்தைஅமலாக்கியது உள்ளிட்ட பணிகளை திராவிடகட்சிகளின் அரசுகள் மேற்கொண் டுள்ளன. இவைகளின் அமலாக்கத்தில் குறைகள் இருக்கலாம், ஆனபோதும் திராவிட கட்சிகளின் மேற்கண்ட செயல்பாடுகளை குறிப்பிடாமல் கடந்து போவது சரியான ஆய்வு முறையாக அமையாது. இதேபோல, திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில் கல்வி பரவலாக்கம் குறித்து விவாதிக்கும்போது கேரளாவுடனான ஒப்பீட்டு முறையிலும் சில குறைபாடுகள் உள்ளன.
ஆசிரியர் நூலாய்வுக்குபயன்படுத்திய நூல்கள் குறித்த தகவல்கள் (நூற்பட்டியல்) இப்புத்தகத் தில்இணைக்கப்படவில்லை. மாத இதழில் தொடர் கட்டுரையாகவந்ததால் நூல் பட்டியல் இணைக்கப்படாமல்இருந்திருக்கலாம். புத்தகமாகி வெளியிடும் போது நூற்பட்டியல் இணைக்கப்படுவது அவசியம்.
இவ்வாறானசிற்சில குறைகள் இருந்தாலும் ஒரு நீண்டகால இடைவெளிக்குப் பிறகு திராவிட இயக்கம் குறித்த விவாதத்தைஇப்புத்தகம் மீண் டும் தூசிதட்டியிருப்பது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாகும். இப்புத்தகத்தின் அடுத்த பதிப்பில், மேற்குறிப்பிட்டவிவாதங்களையும், விடுபடல்களையும் நூலாசிரியர் களைவார் என எதிர்பார்க்கலாம்.
Leave a Reply