மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)


இம்மாத இதழ் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு சிறப்பிதழாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் அடுத்த ஓராண்டுக்கு முக்கியமான பல கட்டுரை களை நமது மார்க்சிஸ்ட் இதழில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம் .

1920-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி அப்போதைய சோவியத் ரஷ்யாவில் அமைந்திருந்த தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே 1925-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி “Communist Party of India” இந்தியாவில் துவங்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்த ஆவணங்கள் ” என்ற விரிவான ஆவணத் தொகுப்பில் 1920-ம் ஆண்டு துவக்கப்பட்ட முதல் கிளை குறித்த ஆவணங்களை அதன் முதல் தொகுதியில் வெளியிட்டுள்ளது. அதில் இந்த கிளை அமைப்பு குறித்த மூன்று ஆவணங்கள் உள்ளன.

இந்த ஆவணங்கள் அனைத்தும் “இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான வரலாறு” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இவ்விதழின் முதல் கட்டுரைக்கு இடையே தனியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது எழுதப்பட்டதாகும். வரலாற்றுச் சான்றாவணங்களுடன் தனது நெடிய இயக்க அனுபவத்தோடு தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு, தமிழகத்தில் வாழ்ந்த தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டின் தலைவருமான தோழர் சிங்காரவேலரின் பங்களிப்பு அளப்பரியதாகும். “சிங்காரவேலரும் இந்திய கம்யூனிச இயக்கத்தின் தோற்றமும்” என்ற பி.கோவிந்தப்பிள்ளை அவர்களின் கட்டுரை அதை எடுத்துரைக்கிறது. இதில் சிங்காரவேலரின் பங்களிப்பு குறிப்பிடப்படுவதோடு உலக அனுபவங்களுடன் வளர்ந்த இந்திய கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சியும் விரிவாக விளக்கப்பபட்டுள்ளது.

ஃபிரண்ட்லைன் இதழுக்கா க.ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ் பி.எம் ஆகியோர் பே ரா.அய்ஜா ஸ் அகமத் உடன் நடத்திய பே ட்டியின் அடுத்த பகுதியான “உலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் ” என்ற பகுதி இவ்விதழில் வெ ளியாகிறது. இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூறா ண்டு நிகழ்வுகள் குறித்து சிந்திக்கும் இத்தருணத்தில் அய்ஜாஸ் அகமதுவின் இடதுசாரிகளின் பங்கு பற்றிய கருத்து முக்கியத்துவம் பெ றுகிறது.

இந்திய மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கததை துவங்கியதில் முக்கிய பங்கு வகித்த தோழர் அமீர் ஹைதர்கான் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை, தீரம்மிக்க இயக்க பங்களிப்பை விளக்கும் கட்டுரை யாக இரா. சிந்தன் எழுதியுள்ள “அடிமைச் சங்கிலியைத் தகர்த்த தாதா அமீர் ஹைதர்கான்” எனும் கட்டுரை அமைந்துள்ளது.

  • ஆசிரியர் குழு


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: