பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
கொரோனா தொற்று கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றின் பாதிப்பு மட்டுமின்றி, திட்டமற்ற, முன்பின் முரணான, மைய அரசின் அணுகுமுறை மிகவும் அதிகமான அளவில் மக்களை குழப்பியுள்ளது; அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, 4 மணி நேர அவகாசம்கூட தராமல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அமலாக்கியது கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், சிறு-குறு தொழில் முனைவோர், தினக்கூலி அடிப்படையில் சகல துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளிகள், முறைசார் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் சாதாரண உழைப்பாளி மக்கள் என்று மொத்த உழைப்புப் படையில் 80%க்கும் அதிகமானவர்கள் பணியிழந்து, ஊதியம் இழந்து, கடினமான சூழலை சந்தித்து வருகின்றனர். ஒரே காலத்தில், தொற்றுசார்ந்த சுகாதார சவாலையும், வாழ்வாதாரம் சார்ந்த பொருளாதார சவாலையும் பெரும்பகுதி மக்கள் இன்று எதிர்கொண்டு போராட வேண்டியுள்ளது. இதோடு மைய அரசின் தவறான கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்தும் போராட வேண்டியுள்ளது.
மையஅரசின்பொருளாதாரஅணுகுமுறை
கொரோனா தொற்று காலத்தில் மிகப் பெரிய பாதிப்பை முதலில் எதிர் கொண்டவர்கள் புலம்பெயர் தொழிலாளிகள். உணவிற்கும் உறைவிடத்திற்கும் எந்த ஏற்பாடுமின்றி கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எப்படியாவது சென்றாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, இதற்கான பொது போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் நடந்தே செல்வது என முடிவெடுத்து தங்கள் உயிர்களையே பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டது.
ஆலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டதால் பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் வாழ்வு நிலைகுலைந்தது. அண்மையில் சிஎம் ஐ இ (CMIE) ஆய்வு நிறுவனம் ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள தகவல்படி நாட்டு அடங்கு நடவடிக்கைகளின் விளைவாக சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்த இடங்களில் நாட்டு அடங்கின் காரணமாக அவற்றை விற்க இயலாமல் தவிக்கின்றனர். சாகுபடி வேலைகளை செய்வதும் கடினமாகியுள்ளது. அழியும் பயிர்களை அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், முற்றிலும் கோளாறான ஜிஎஸ்டி கொள்கை அமலாக்கமும் சிறுகுறு தொழில் முனைவோரையும் வணிகர்களையும், பொதுவாக ஒட்டுமொத்தமாக முறைசாரா துறைகளையும் பலவீனப்படுத்தியிருந்த நிலையில் நாட்டு அடங்கு இப்பகுதியினரை மேலும் படுகுழியில் தள்ளியுள்ளது.
இத்தகைய சூழலில் இதுவரை மைய அரசு முன்வைத்துள்ள பொருளாதார நிவாரணம் என்பது தேச உற்பத்தி மதிப்பில் 0.5% என்ற அளவில்தான் உள்ளது. நிதி அமைச்சர் அறிவித்த 1.7 லட்சம் கோடி ரூபாய் நிவாரண தொகுப்பில் பல ஒதுக்கீடுகள் ஏற்கெனவே மத்திய பட்ஜட்டில் இடம்பெற்றவையே. நிகரமாக பார்த்தால், நிவாரணத் தொகுப்பின் மொத்த மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் கூட இருக்காது. மருத்துவமனைகளை மேம்படுத்தவும் ஆரோக்கியம் சார்ந்த இதர செலவுகளுக்கும் என்று நாடு முழுவதற்குமாக பிரதமர் அறிவித்த ரூ. 15,000 கோடி என்பது மிகவும் குறைவானது; பொருத்தமற்றது என்பதுடன் அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கான செலவுக்கு என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஒரு விமர்சகர் கூறியதுபோல், மைய அரசு ஒருபுறம் மக்களை அடிக்கடி கைகழுவச் சொல்லிவிட்டு, மறுபுறம் மக்களை கைகழுவி விட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. மார்ச் 14 மற்றும் மே 5 ஆகிய இரு தினங்களில் பெட்ரோல், டீசல் மீதான புதிய சிறப்பு கூடுதல் கலால் வரிகள் மற்றும் ரோடு செஸ் விதித்து சுமார் ரூ. 2 லட்சம் கோடி மக்களிடம் இருந்து மைய அரசு அபகரித்துள்ளது. அரசு அறிவித்த நிகர நிவாரணத்தைபோல் இரு மடங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மந்தநிலையில்பொருளாதாரம்
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் சரிந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். தேச உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் மைய அரசின் 2020-21 நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்பொழுதே அரசின் மிகையான கணக்குப்படியே கூட ஆண்டுக்கு 4.5% என்ற நிலையில்தான் இருந்தது. உண்மை அளவில் இதை 2.5% என்று கொள்ளலாம். ஆனால் பிரச்சினை வளர்ச்சி விகிதக் கணக்கு பற்றி மட்டுமல்ல. மூன்று முக்கிய பிரச்சினைகளை அன்றும் இன்றும் நாடு எதிர்கொள்கிறது.
ஒன்று, பல ஆண்டுகளாக தொடரும் கடுமையான வேளாண் நெருக்கடி. மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டது மட்டுமின்றி அரசின் ஆதரவு மறுக்கப்பட்டு அதன் தாராளமய கொள்கைகளால் ஏழை, நடுத்தர விவசாயிகளும், இதர உடல் உழைப்பு தொழிலாளிகளும் நிலமும் வருமானமும் இழந்து வருவது தீவிரமாகியுள்ளது. பன்னாட்டு, இந்நாட்டு பெரும் வணிக நிறுவனங்களின் செல்வாக்கு வேளாண்துறையில் பெருகியுள்ளது. பயிர் சாகுபடி பெரும்பகுதி விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத தொழிலாகியுள்ளது.
இரண்டாவது, பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம். 2011-12 இல் இருந்து 2017-18 வரையிலான காலத்தில் வேலையின்மை விகிதம் மூன்று மடங்கு ஆனது. இளம் வயதினர் (வயது 15 – 29 ஆண்டுகள்) மற்றும் படித்தவர்கள் (12 வகுப்புகளும் அதற்கு மேலும்) மத்தியில் இது 20%ஐ நெருங்கியது. இந்த விவரங்களை கொண்ட தேசீய புள்ளியியல் ஆணையத்தின் அறிக்கையை 2019 தேர்தலுக்கு முன்பாக வெளிவராமல் பார்த்துக் கொண்டது மோடி அரசு. இன்று நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
மூன்றாவது, 2011-12 மற்றும் 2017-18 ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது, கிராமப்புறங்களில் குடும்பங்களின் மாதாந்திர சராசரி தலா நுகர்வுசெலவு 8.8% குறைந்துள்ளது. நகரப் பகுதிகளில் 2.2% என்ற அளவிற்கு சிறு அதிகரிப்பு இருந்தாலும், அங்கும் குறைந்தபட்சம் சரிபாதி குடும்பங்களுக்கு சரிவே ஏற்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள ஆறு ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 6%, 7%, 8% அதிகரித்ததாக எல்லாம் அரசு கணக்கு கூறினாலும், நிகழ்ந்த வளர்ச்சி பெரும்பகுதி மக்களை சென்றடையவில்லை என்பது தெளிவாகிறது.
மேலே கூறப்பட்டுள்ள மூன்று அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால்

மேலே கூறப்பட்டுள்ள மூன்று அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால் இந்தியாவின் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரு ஆழமான கிராக்கி நெருக்கடி நிலவுகிறது என்பது தெளிவாகத் தெரியும். மைய அரசு இந்த நெருக்கடி இருப்பதாகவே இன்றுவரை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. மந்த நிலை பற்றி பெருமுதலாளிகள் பகிரங்கமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் -செப்டம்பர் மாதங்களில் பேசினர். அதன்பின் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக பல நடவடிக்கைகளை மைய அரசு மேற்கொண்டது. இவற்றின் மூலம் முதலாளிகளுக்கும் பங்குச்சந்தையில் ஊகவணிகம் செய்து லாபம் ஈட்டும் அன்னிய நிதிமூலதனங்களுக்கும் ஏற்றுமதி ஊக்குவிப்பு என்ற பெயரிலும் வேறுவகைகளிலும் பிப்ரவரி மாத பட்ஜட்டுக்கு முன்பாகவே ரூ. 2.25 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளை மைய அரசு வாரி வழங்கியது.
மேலும் 2020-2021 பட்ஜட்டில் சுமார் ரூ. 65,000 கோடி அளவிற்கு செல்வந்தர்களுக்கு வருமான வரிச்சலுகைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடியை செல்வந்தர்களுக்கு தூக்கிக் கொடுத்துவிட்டதால் அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுகட்டவும் அரசின் பற்றாக்குறையை குறைக்கவும் ரூ. 2.10 லட்சம் கோடி அளவிற்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக அரசு பட்ஜட்டில் அறிவித்தது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை வெட்டிச் சாய்த்தது.
இதற்கு இரண்டு உதாரணங்கள் போதும்: ரேகா திட்ட ஒதுக்கீடு சென்ற ஆண்டு (2019-20) ரூ.71,000 கோடி, நடப்பு ஆண்டில் ஒதுக்கீடு ரூ 61,500 கோடி தான். உணவு மானியம் ரூ. 75,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வரிச்சலுகைகள் பெற்ற பெரும் கம்பனிகள் முதலீடுகளை முன்னெடுக்கவில்லை. கிராக்கி சரிந்துள்ள நிலையில் முதலீடுகள் நிகழவில்லை. மந்த நிலையும் தீவிரமடைந்தது. அரசின் வருமானமும் சரிந்தது. உலக நாடுகளில் பலவும் – குறிப்பாக முன்னணி முதலாளித்துவ நாடுகளும் – கொரோனாவின் கடும்தாக்குதலுக்கு உள்ளாகி, ஏற்கெனவே மந்தத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பன்னாட்டு பொருளாதாரமும் வரும் ஆண்டில் பெரும் சரிவை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.
இத்தகைய சூழலில்தான் கொரொனா தொற்றை நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பிற பல நாடுகளின் அரசுகள் கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்ள நாட்டடங்கு அமல்படுத்துவதால் ஏற்படும் வாழ்வாதார பிரச்சினைகளை சமாளிக்க நிவாரணமாகவும் பொருளாதார மீட்சிக்காகவும் அவரவர் தேச உற்பத்தி மதிப்பில் 10% க்கு குறையாமல் பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்திய அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுகிறது. முன்பு நாம் குறிப்பிட்ட தேசஉற்பத்தி மதிப்பில் வெறும் 0.5% என்ற அளவிலான நிவாரணம் தவிர எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, கலால் வரிகளை உயர்த்தி கூடுதல் வரிச்சுமையை மக்கள்மீது திணித்துள்ளது. இவற்றிற்கு மத்தியில், நாட்டு அடங்கை முடிவுக்கு கொண்டுவந்து ஆலைகளையும் அலுவலகங்களையும் திறக்க முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. பல வாரங்கள் உற்பத்தி தடைப்பட்டதால் ஆலைகளையும் அலுவலகங்களையும் திறப்பது மட்டுமின்றி, திறந்த பின் தொழிலாளர்கள் இழந்த வேலைநாட்களை ஈடுசெய்யும் வகையில் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், சில ஆண்டுகளுக்கு தொழிலாளர் உரிமை சட்டங்களை அமல்படுத்த வேண்டாம் என்ற தொனியிலும், முதலாளி வர்க்கம் தனது ஊடக ஊதுகுழல்கள் மூலம் உரக்கப் பேசுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப்பிரதேசம், உத்திரப் பிரதேசம், கர்னாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றில் இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் அமலாக உள்ளன. கொரோனா பெரும் தொற்று காலத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஆளும் வர்க்கம் களம் இறங்கியுள்ளது. படிப்படியாக நாட்டுஅடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில் நாம் இதனை கணக்கில் கொள்ள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
உடனடியாகவும் தொடர்ந்தும் பொருத்தமான சில கோரிக்கைகளின் அடிப்படையில் நாம் மக்களை திரட்ட வேண்டியுள்ளது. கருத்து ரீதியாகவும் களப்பணியாகவும் நாம் இதனை செய்ய வேண்டும். கீழ்காணும் ஆலோசனைகள்/ கோரிக்கைகள் பரிசீலிக்கத்தக்கவை:
உடனடிக் கோரிக்கைகள்
- அனைத்து புலம்பெயர் தொழிலாளிகளுக்கும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவரவர் சொந்த ஊருக்கு மைய அரசு செலவில் பாதுகாப்பாக பயணிக்க உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
- கிட்டத்தட்ட எண்பது சதவீத குடும்பங்களுக்கு உடனடியாக மைய அரசு ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 7500 என்ற அடிப்படையில் மூன்று மாதம் நிவாரணத்தொகை வழங்கவேண்டும்.
- இக்குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ தானியம் ஆறு மாத காலத்திற்கு விலையின்றி வழங்க வேண்டும். அரசு கணக்குப்படி கிட்டத்தட்ட 7.5 கோடி டன் தானியம் இந்திய உணவு கார்ப்பரேஷனின் கிடங்குகளில் உள்ளது. குளிர்கால பயிர் அறுவடை முடிந்துவரும் நிலையில், மேலும் 4 கோடி டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. எனவே விலையில்லா தானியம் கொடுப்பது சாத்தியமே. தானியம் மட்டுமின்றி பொருத்தமான அளவு பருப்பு, சமையலுக்கான எண்ணெய் போன்ற இதர அத்தியாவசிய மளிகை பொருட்களும் தரப்பட வேண்டும்.
- சமைத்து உண்ண இயலாதவர்களுக்கு மதிய உணவு திட்ட வசதிகளை பயன்படுத்தி சமைத்த உணவு அளிக்கப்படலாம்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தேச உற்பத்தி மதிப்பில் 3% என்ற அளவில்தான் செலவு ஆகும். இதற்கான வளங்களை பின்னர் பெரும் செல்வந்தர்கள் மீது வரிகள் விதிப்பதன் மூலம் திரட்ட இயலும். எனினும் உடனடி சூழலில் ரிசர்வ் வங்கி மைய அரசுக்கு இத்தொகையை கடனாக வழங்க வேண்டும். இன்றைய நாட்டு அடங்கு சூழலிலும் மந்த கிராக்கி நிலையிலும் இதனால் பணவீக்கம் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. மேலும் ரிசர்வ் வங்கியிடம் ஏறத்தாழ 50,000 கோடி அமெரிக்க டாலர்கள் கையிருப்பு உள்ளதால் தேவை ஏற்பட்டால் அவசியமான இறக்குமதி மூலம் விலைஉயர்வை கட்டுப்படுத்த இயலும். ரொக்கத் தொகையும் தானியம் மற்றும் மளிகை பொருட்களும் மைய அரசால் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். மாநிலங்கள் பணம் மற்றும் பொருள் விநியோகத்தை உள்ளாட்சி ஜனநாயக அமைப்புகள் மூலம் இதை அமலாக்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு தரவேண்டிய பாக்கிகளை – ஜிஎஸ்டி நட்டஈடு, ஜிஎஸ்டி பங்கு, நிதிஆணைய பரிந்துரைபடி மாநிலங்களுக்கு தரப்பட வேண்டியவை, இன்ன பிற – உடனடியாக மைய அரசு கொடுக்க வேண்டும். மிக முக்கியமாக, இக்காலத்தில், மைய அரசின் உதவி அதிகரித்தாலும், மாநில அரசுகள் அதிகமான செலவுகளை செய்ய வேண்டி இருப்பதால், அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடன் வரம்பை இரட்டிப்பாக்க வேண்டும். மேலும் ரிசர்வ் வங்கி நேரடியாக மாநில அரசுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்க வேண்டும். இதற்கான விதிமுறை மாற்றங்களை மைய அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும்.
கொரோனா பெரும்தொற்றை எதிர்கொள்ள பொதுத்துறையில் உள்ள மருத்துவ வசதிகள் மட்டும் போதாது என்ற நிலையில் உடனடியாக பல்வேறு அரசு மானியங்களை அனுபவித்துவரும் தனியார் மருத்துவமனைகள அரசு குறிப்பிட்ட காலத்திற்காவது கையகப்படுத்தி பயன்படுத்த வேண்டும். இம்மருத்துவமனைகளில் பணிபுரிவோரின் ஊதியங்களை அவற்றைப் பயன்படுத்தும் காலப்பகுதி வரையில் அரசு கொடுக்கலாம். விரிவான அளவில் தொற்று அறியும் சோதனைகளை செய்வதற்கும் இது அவசியம்.
இவ்வாறு மைய அரசு கூடுதல் செலவுகளை ஏற்கும்பொழுது அதன் பற்றாக்குறை கணிசமாக அதிகரிக்கும். இதனால் நிதிமூலதனம் நாட்டைவிட்டு பிற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். இத்தகைய சூழலில், மூலதனம் நாட்டைவிட்டு வெளியேறுவது என்ற நடவடிக்கைமீது வலுவான கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். மேலும் ஐ எம் எஃப் அமைப்பில் அனைத்து நாடுகளுக்கும் கூடுதல் சிறப்புபணம் பெரும் உரிமைகளை (Special Drawing Rights or SDRs) அளித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை இந்திய அரசு வலுவாக ஆதரிக்க வேண்டும்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
மேற்கூறிய நடவடிக்கைகள் நிவாரணம் அளிக்கும் தன்மையில்தான் உள்ளன. அடுத்தகட்டமாக உற்பத்தி மீட்பையும் மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, விவசாயிகள், சிறு-குறு தொழில் முனைவோர், நகர, கிராம கூலி தொழிலாளர்கள் ஆகிய பகுதியினரின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். இதில் முக்கிய அம்சங்கள் ஐந்து: மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதி திட்டம் (ரேகா); சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு; புலம்பெயர் தொழிலாளிகள் மீண்டும் பணிகளில் இணைவது; அத்தியாவசிய பண்டங்களின் அளிப்பை உறுதி செய்தல்; ஊரக பொருளாதார மீட்சி.
ரேகாவில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொழிலாளிகளின் சம்பள பாக்கியை கொடுப்பது, ஊர் திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளிகள் அனவருக்கும் வேலை அட்டை கேட்காமல் பணி கொடுப்பது, ஒவ்வொரு ஊரக குடும்பத்திற்கும் 100 நாள் வேலை என்பதற்கு பதில் உழைக்க முன்வரும் அனைத்து வயது வந்த குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 100 நாள் வேலை அளிப்பது, வேலை கொடுக்க இயலாத பட்சத்தில் வேலையின்மை உதவிதொகை ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். மேலும் நகரப் பகுதிகளுக்கும் ரேகா போன்ற திட்டம் கொண்டுவந்து இதன் மூலம் சிறு-குறு தொழில் முனைவோருக்கு உதவி செய்வது என்பதும் ஒரு முக்கிய கோரிக்கை.
சிறு-குறு தொழில்களுக்கு ஒரு ஆண்டு காலம் கடன் திருப்புதல் ஒத்திவைக்கப்பட வேண்டும். குறைந்த வட்டியில் அரசின் உத்தரவாத அடிப்படையில் தாராளமாக கடன் வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான ஒரு முறை கடன் ரத்து என்பதை அமலாக்க வேண்டும். பால் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையில் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளிகளில் மீண்டும் நகரங்களுக்கு சென்று பணிபுரிய முன்வருவோருக்கு உரிய ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.
நீண்டகால நடவடிக்கைகள்
இந்திய நாட்டின் முதன்மையான சவால் வேளாண் பொருளாதாரத்தின் புரட்சிகர மாற்றம் ஆகும். இதற்கு அடிப்படை முழுமையான நிலச்சீர்திருத்தம். நிலஉச்சவரம்பு சட்டங்கள் கறாராக அமல் செய்யப்படுவதன் மூலம் கிடைக்கும் உபரி நிலங்களும் அரசு தரிசு நிலங்களும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவது அவசியம். மேலும் பல ஆண்டுகளாக விவசாயத் துறையிலும் ஊரக கட்டமைப்பு துறைகளிலும் அரசு முதலீடு குறைக்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் ஊரக கட்டமைப்பிற்கான அரசு முதலீடுகள் பன்மடங்கு உயர்த்தப்பட வேண்டும். பாசன விரிவாக்கம், வேளாண் ஆராய்ச்சி விரிவாக்கப் பணி அமைப்புகள் வலுப்படுத்துதல் உள்ளிட்டு பன்முக நடவடிக்கைகள் தேவை.
உள்நாட்டு சந்தையை மையப்படுத்தியதாக நமது வளர்ச்சி இருக்க வேண்டும். கட்டற்ற உலகமயம் ஏற்புடையதல்ல. வலுவான பொதுத்துறை, சுயச்சார்பு அடிப்படையிலான அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி, அரசின் வரிக் கொள்கைகளில் நேர்முக வரிகளின் பங்கை அதிகப்படுத்தும் முயற்சிகள், மத்திய மாநில நிதி உறவுகளில் ஜனநாயக தன்மையிலான மாற்றங்கள் ஆகியவையும் அவசியமான நீண்டகால நடவடிக்கைகள். சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு ஆகிய துறைகளில் கணிசமான பொதுமுதலீடுகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
இவற்றின் மூலம் முதலாளிகளுக்கும் பங்குச்சந்தையில் ஊகவணிகம் செய்து லாபம் ஈட்டும் அன்னிய நிதிமூலதனங்களுக்கும் ஏற்றுமதி ஊக்குவிப்பு என்ற பெயரிலும் வேறுவகைகளிலும் பிப்ரவரி மாத பட்ஜட்டுக்கு முன்பாகவே ரூ. 2.25 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளை மைய அரசு வாரி வழங்கியது.
மேலும் 2020-2021 பட்ஜட்டில் சுமார் ரூ. 65,000 கோடி அளவிற்கு செல்வந்தர்களுக்கு வருமான வரிச்சலுகைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடியை செல்வந்தர்களுக்கு தூக்கிக் கொடுத்துவிட்டதால் அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுகட்டவும் அரசின் பற்றாக்குறையை குறைக்கவும் ரூ. 2.10 லட்சம் கோடி அளவிற்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக அரசு பட்ஜட்டில் அறிவித்தது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை வெட்டிச் சாய்த்தது.
இதற்கு இரண்டு உதாரணங்கள் போதும்: ரேகா திட்ட ஒதுக்கீடு சென்ற ஆண்டு (2019-20) ரூ.71,000 கோடி, நடப்பு ஆண்டில் ஒதுக்கீடு ரூ 61,500 கோடி தான். உணவு மானியம் ரூ. 75,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வரிச்சலுகைகள் பெற்ற பெரும் கம்பனிகள் முதலீடுகளை முன்னெடுக்கவில்லை. கிராக்கி சரிந்துள்ள நிலையில் முதலீடுகள் நிகழவில்லை. மந்த நிலையும் தீவிரமடைந்தது. அரசின் வருமானமும் சரிந்தது. உலக நாடுகளில் பலவும் – குறிப்பாக முன்னணி முதலாளித்துவ நாடுகளும் – கொரோனாவின் கடும்தாக்குதலுக்கு உள்ளாகி, ஏற்கெனவே மந்தத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பன்னாட்டு பொருளாதாரமும் வரும் ஆண்டில் பெரும் சரிவை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.
இத்தகைய சூழலில்தான் கொரொனா தொற்றை நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பிற பல நாடுகளின் அரசுகள் கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்ள நாட்டடங்கு அமல்படுத்துவதால் ஏற்படும் வாழ்வாதார பிரச்சினைகளை சமாளிக்க நிவாரணமாகவும் பொருளாதார மீட்சிக்காகவும் அவரவர் தேச உற்பத்தி மதிப்பில் 10% க்கு குறையாமல் பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்திய அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுகிறது. முன்பு நாம் குறிப்பிட்ட தேசஉற்பத்தி மதிப்பில் வெறும் 0.5% என்ற அளவிலான நிவாரணம் தவிர எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, கலால் வரிகளை உயர்த்தி கூடுதல் வரிச்சுமையை மக்கள்மீது திணித்துள்ளது. இவற்றிற்கு மத்தியில், நாட்டு அடங்கை முடிவுக்கு கொண்டுவந்து ஆலைகளையும் அலுவலகங்களையும் திறக்க முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. பல வாரங்கள் உற்பத்தி தடைப்பட்டதால் ஆலைகளையும் அலுவலகங்களையும் திறப்பது மட்டுமின்றி, திறந்த பின் தொழிலாளர்கள் இழந்த வேலைநாட்களை ஈடுசெய்யும் வகையில் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், சில ஆண்டுகளுக்கு தொழிலாளர் உரிமை சட்டங்களை அமல்படுத்த வேண்டாம் என்ற தொனியிலும், முதலாளி வர்க்கம் தனது ஊடக ஊதுகுழல்கள் மூலம் உரக்கப் பேசுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப்பிரதேசம், உத்திரப் பிரதேசம், கர்னாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றில் இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் அமலாக உள்ளன. கொரோனா பெரும் தொற்று காலத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஆளும் வர்க்கம் களம் இறங்கியுள்ளது. படிப்படியாக நாட்டுஅடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில் நாம் இதனை கணக்கில் கொள்ள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
உடனடியாகவும் தொடர்ந்தும் பொருத்தமான சில கோரிக்கைகளின் அடிப்படையில் நாம் மக்களை திரட்ட வேண்டியுள்ளது. கருத்து ரீதியாகவும் களப்பணியாகவும் நாம் இதனை செய்ய வேண்டும். கீழ்காணும் ஆலோசனைகள்/ கோரிக்கைகள் பரிசீலிக்கத்தக்கவை:
உடனடிக் கோரிக்கைகள்
- அனைத்து புலம்பெயர் தொழிலாளிகளுக்கும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவரவர் சொந்த ஊருக்கு மைய அரசு செலவில் பாதுகாப்பாக பயணிக்க உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
- கிட்டத்தட்ட எண்பது சதவீத குடும்பங்களுக்கு உடனடியாக மைய அரசு ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 7500 என்ற அடிப்படையில் மூன்று மாதம் நிவாரணத்தொகை வழங்கவேண்டும்.
- இக்குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ தானியம் ஆறு மாத காலத்திற்கு விலையின்றி வழங்க வேண்டும். அரசு கணக்குப்படி கிட்டத்தட்ட 7.5 கோடி டன் தானியம் இந்திய உணவு கார்ப்பரேஷனின் கிடங்குகளில் உள்ளது. குளிர்கால பயிர் அறுவடை முடிந்துவரும் நிலையில், மேலும் 4 கோடி டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. எனவே விலையில்லா தானியம் கொடுப்பது சாத்தியமே. தானியம் மட்டுமின்றி பொருத்தமான அளவு பருப்பு, சமையலுக்கான எண்ணெய் போன்ற இதர அத்தியாவசிய மளிகை பொருட்களும் தரப்பட வேண்டும்.
- சமைத்து உண்ண இயலாதவர்களுக்கு மதிய உணவு திட்ட வசதிகளை பயன்படுத்தி சமைத்த உணவு அளிக்கப்படலாம்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தேச உற்பத்தி மதிப்பில் 3% என்ற அளவில்தான் செலவு ஆகும். இதற்கான வளங்களை பின்னர் பெரும் செல்வந்தர்கள் மீது வரிகள் விதிப்பதன் மூலம் திரட்ட இயலும். எனினும் உடனடி சூழலில் ரிசர்வ் வங்கி மைய அரசுக்கு இத்தொகையை கடனாக வழங்க வேண்டும். இன்றைய நாட்டு அடங்கு சூழலிலும் மந்த கிராக்கி நிலையிலும் இதனால் பணவீக்கம் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. மேலும் ரிசர்வ் வங்கியிடம் ஏறத்தாழ 50,000 கோடி அமெரிக்க டாலர்கள் கையிருப்பு உள்ளதால் தேவை ஏற்பட்டால் அவசியமான இறக்குமதி மூலம் விலைஉயர்வை கட்டுப்படுத்த இயலும். ரொக்கத் தொகையும் தானியம் மற்றும் மளிகை பொருட்களும் மைய அரசால் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். மாநிலங்கள் பணம் மற்றும் பொருள் விநியோகத்தை உள்ளாட்சி ஜனநாயக அமைப்புகள் மூலம் இதை அமலாக்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு தரவேண்டிய பாக்கிகளை – ஜிஎஸ்டி நட்டஈடு, ஜிஎஸ்டி பங்கு, நிதிஆணைய பரிந்துரைபடி மாநிலங்களுக்கு தரப்பட வேண்டியவை, இன்ன பிற – உடனடியாக மைய அரசு கொடுக்க வேண்டும். மிக முக்கியமாக, இக்காலத்தில், மைய அரசின் உதவி அதிகரித்தாலும், மாநில அரசுகள் அதிகமான செலவுகளை செய்ய வேண்டி இருப்பதால், அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடன் வரம்பை இரட்டிப்பாக்க வேண்டும். மேலும் ரிசர்வ் வங்கி நேரடியாக மாநில அரசுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்க வேண்டும். இதற்கான விதிமுறை மாற்றங்களை மைய அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும்.
கொரோனா பெரும்தொற்றை எதிர்கொள்ள பொதுத்துறையில் உள்ள மருத்துவ வசதிகள் மட்டும் போதாது என்ற நிலையில் உடனடியாக பல்வேறு அரசு மானியங்களை அனுபவித்துவரும் தனியார் மருத்துவமனைகள அரசு குறிப்பிட்ட காலத்திற்காவது கையகப்படுத்தி பயன்படுத்த வேண்டும். இம்மருத்துவமனைகளில் பணிபுரிவோரின் ஊதியங்களை அவற்றைப் பயன்படுத்தும் காலப்பகுதி வரையில் அரசு கொடுக்கலாம். விரிவான அளவில் தொற்று அறியும் சோதனைகளை செய்வதற்கும் இது அவசியம்.
இவ்வாறு மைய அரசு கூடுதல் செலவுகளை ஏற்கும்பொழுது அதன் பற்றாக்குறை கணிசமாக அதிகரிக்கும். இதனால் நிதிமூலதனம் நாட்டைவிட்டு பிற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். இத்தகைய சூழலில், மூலதனம் நாட்டைவிட்டு வெளியேறுவது என்ற நடவடிக்கைமீது வலுவான கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். மேலும் ஐ எம் எஃப் அமைப்பில் அனைத்து நாடுகளுக்கும் கூடுதல் சிறப்புபணம் பெரும் உரிமைகளை (Special Drawing Rights or SDRs) அளித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை இந்திய அரசு வலுவாக ஆதரிக்க வேண்டும்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
மேற்கூறிய நடவடிக்கைகள் நிவாரணம் அளிக்கும் தன்மையில்தான் உள்ளன. அடுத்தகட்டமாக உற்பத்தி மீட்பையும் மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, விவசாயிகள், சிறு-குறு தொழில் முனைவோர், நகர, கிராம கூலி தொழிலாளர்கள் ஆகிய பகுதியினரின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். இதில் முக்கிய அம்சங்கள் ஐந்து: மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதி திட்டம் (ரேகா); சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு; புலம்பெயர் தொழிலாளிகள் மீண்டும் பணிகளில் இணைவது; அத்தியாவசிய பண்டங்களின் அளிப்பை உறுதி செய்தல்; ஊரக பொருளாதார மீட்சி.
ஊரக வேலை உறுதி திட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொழிலாளிகளின் சம்பள பாக்கியை கொடுப்பது, ஊர் திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளிகள் அனவருக்கும் வேலை அட்டை கேட்காமல் பணி கொடுப்பது, ஒவ்வொரு ஊரக குடும்பத்திற்கும் 100 நாள் வேலை என்பதற்கு பதில் உழைக்க முன்வரும் அனைத்து வயது வந்த குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 100 நாள் வேலை அளிப்பது, வேலை கொடுக்க இயலாத பட்சத்தில் வேலையின்மை உதவிதொகை ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். மேலும் நகரப் பகுதிகளுக்கும் ரேகா போன்ற திட்டம் கொண்டுவந்து இதன் மூலம் சிறு-குறு தொழில் முனைவோருக்கு உதவி செய்வது என்பதும் ஒரு முக்கிய கோரிக்கை.

Leave a Reply