March 2023
-
லெனினும் இயங்கியலும்
லெனின் ஒரு புரட்சியாளர். உலகத் தலைவர். ஆனால், இந்த வண்ணமிகு புகழாரங்களைத் தாண்டி, அவர் “மார்க்சிய தத்துவத்தை செயலில் நிறுவிக் காட்டியவர்” என்பதுதான் நமக்கு முக்கியமான படிப்பினையாக இருக்கும். Continue reading
-
அதானி ஊழல், குற்றவாளிக் கூண்டில் கார்ப்பரேட்-இந்துத்துவா அரசு!
பொதுத்துறையை நாசமாக்கி அடிமாட்டு விலைக்கு விற்க வெறிபிடித்து அலையும் ஒன்றிய அரசு அதற்குப் பதில் ஸ்டேட் வங்கி, ஆயுள் காப்பீட்டுக்கழகம் போன்ற நிதி நிறுவனங்கள் வருடம் தோறும் ஈட்டும் உபரிகளை ஏன் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் மக்கள் நல முதலீடுகளுக்கும் பயன்படுத்த மறுக்கிறது? Continue reading
-
’நான் என்றும் மக்கள் ஊழியனே’ – ஏ.கே.கோபாலன்
பொதுமக்கள் பார்வையில் இருந்து விலக்கி எங்களை சிறையில் அடைப்பது ஏகாதிபத்தியத்தின் தேவையாக இருந்தது; கைது செய்வதைத் தவிர்ப்பதும், வேலை செய்வதும் எங்களுடைய தேவையாக இருந்தது. எனவே, தலைமறைவாக வேலை செய்வதே, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக நான் கண்டேன். Continue reading
-
சர்வதேச மகளிர் தினம் பற்றி அலெக்சாண்ட்ரா கொலந்தாய்
ரஷ்யாவில் முதன்முதலாக 1913ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று (பழைய நாட்காட்டி அடிப்படையில் பிப்ரவரி 23) உழைக்கும் மகளிரின் சர்வதேச ஒற்றுமையின் வெளிப்பாடாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு கொண்டாட்டத்திற்கு ஒருவார காலத்திற்கு முன்பு அலெக்சாண்ட்ரா கொலந்தாயின் இக்கட்டுரை ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் இதழான பிராவ்தாவில் வெளியானது. Continue reading
-
தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம்; சீர்திருத்தமும் எதார்த்தமும்
உழுபவருக்கே நிலம் என்பதுதான் நியாயம். கூடுதல் விளைச்சலும் இதனால் ஏற்படும் என்றேன். தாகுவா என்னுடைய ஆலோசனையை உடனே புரிந்துகொண்டார். ஏற்றுக்கொண்டார். உடனே அதை சரி செய்தார். (இந்தியாவின் மற்ற பகுதிகளும் மேற்கு வங்கமும் வேறுபாடானவை. மேற்கு வங்கக் குத்தகை விவசாயிகளில் 46 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர், 6 சதவீதம் பேர் பழங்குடிகள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூக வர்க்கங்களிலேயே அடித்தளத்தில் இருக்கிற சாதிகள்தான் குத்தகையாளர்களாக இருக்கிறார்கள்)” Continue reading
-
திராவிட மாடல் நூல்: தொடரும் விவாதம்
அமெரிக்காவில் உள்ள பிரௌன் பல்கலைக் கழகத்தில் உள்ள Watson Institute for International and Public Affairs என்ற துறையின் சார்பாக இந்தப் புத்தகத்தைப் பற்றிய விவாதம் நடந்தது. அதை பாட்ரிக் ஹெல்லர் தலைமை தாங்கி நடத்தினார். புத்தகத்தின் ஆசிரியர்கள் என்ற முறையில் விஜய பாஸ்கரும் கலையரசனும் கலந்து கொண்டார்கள். அந்த விவாதத்தில் பார்த்தா சாட்டர்ஜி, ரீனா அகர்வாலா, பார்பரா ஹாரிஸ் ஒய்ட் போன்ற அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இவர்கள் அனைவரும் சமூகவியல் வல்லுனர்கள். மார்க்சீயம்… Continue reading
-
மதங்களும், அரசியலும் – ம.சிங்காரவேலர்
இவ்வளவு பேரும் கற்பனையை வளர்த்தும், ஆதரித்தும், கோடான கோடி மாந்தர்கள் மூடபழக்கத்தில் ஜீவனத்தை நடத்தி வருகின்றார்கள் என்றால் மதங்கள் மிகவும் தலைமுறையாக ஆழ்ந்து கிடந்துவர தங்கள் பொருளாதார நன்மையாக இருந்து வருகின்றதென்று சமுதாயிகள் அதாவது சமதர்மவாதிகள் சொல்வது எவ்வளவு பொருத்தமுள்ளது என்பதை நினைக்க வேண்டி இருக்கின்றதென்பதைப் பாருங்கள்? இவ்வளவு ஆதிக்கத்தையும், செல்வாக்கையும், ஜீவஉபாயத்தையும், மதங்கள் கோடான கோடி மக்களுக்கும் அளிப்பதென்றால் மதங்களை ஒழிப்பது லேசான காரியமாகுமா? Continue reading
-
’புதிய’ இந்தியாவின்அரசியல்சாசனம்
அரசு நிர்வாகத்தை மதத் தலைவர்கள் நடத்துவதுதான் இந்துத்துவ ராஷ்டிரம் என இதனை எளிமையாகப் புரிந்து கொண்டு விடக்கூடாது; உள்ளடக்கம் அதை விட ஆழமானது, ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் அசமத்துவ அடிப்படையில், இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் அடிப்படையில், நிர்மாணிக்கப்படும் என்று சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சி நிரலுக்கு, இன்றைய அரசியல் சாசனம் பெரிதும் எதிராக இருப்பதால், அதனை சீர்குலைத்து, பிற்போக்கான மாற்று கதையாடலை முன்னிறுத்தும் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. Continue reading
-
சர்வதேசியஒருமைப்பாடுதான் நம்மை மேம்படுத்தும் – அலெய்தா குவாரா
உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த மனிதரென்றாலும், அவருடன் ஒருமைப்பாடு பாராட்டுவதென்பது, கியூப மக்களுக்கு புரட்சி கற்றுத் தந்த அழகான விஷயங்களில் ஒன்று. உதாரணமாகச் சொன்னால், பல்கலைக்கழகத்தில் என்னுடன் படித்த முன்னாள் மாணவர் ஒருவர், எபோலாவை ஒழிக்க வேறொரு நாட்டிற்குச் சென்று பாடுபடுவதைப் பார்ப்பது எவ்வளவு பூரிப்பாக இருக்குமென்பதை விவரிப்பது கடினம். Continue reading
-
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24:மக்கள் மீதான துல்லிய தாக்குதல்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஆட்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்–பாஜக அரசின் இறுதி முழுநிதிநிலை அறிக்கை பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1இல் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல நிதி அமைச்சர் பட்ஜெட் உரை வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாக அமைந்தது. பங்கு சந்தையையும் பெரு முதலாளிகளையும் குஷிப்படுத்த பல அறிவிப்புகள் அவரது உரையில் இருந்தன. ஆளும் கட்சி உறுப்பினர்கள் வழக்கம் போல, அவ்வப்பொழுது குரல் ஒலியும் கர ஒலியும் எழுப்பினர். இருந்தும் அன்றைய தின பங்குச்சந்தை நிலவரங்கள் அரசின் அறிவிப்புகளால் உற்சாகம்… Continue reading