April 2023
-
செயற்கை நுண்ணறிவும் உழைக்கும் வர்க்கமும்
ஆதிகால மனிதனை உழைப்புதான் இன்றைய முன்னேறிய நிலைக்கு எடுத்துவந்துள்ளது. முன்னர் உழைப்பே அவர்களது பலமாகவும் அடுத்தடுத்த வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் அமைந்தது. வர்க்கங்களும் அதன் விளைவான சுரண்டலும் உருவான பிறகு, உழைப்பு என்பதன் பொருளும் மாற்றத்திற்கு ஆளாகியுள்ளது. சுரண்டலின் அளவு மேலும் மேலும் உச்சத்தைத் தொட்டுள்ள முதலாளித்துவ சமூகம், உழைப்பை விற்கும் நிலைக்கு மனிதர்களை தள்ளுகிறது. உழைப்பை அவரிடமிருந்து பிரித்து அவருக்குச் சொந்தமானதாக இல்லாமல் செய்கிறது. “அது உழைப்பை துன்பமளிப்பதாக, பலத்தைப் பலவீனமானதாக, வளமையை மலடாக” மாற்றுகிறது. Continue reading
-
தென்னகத்தில் இடம்பெயர் தொழிலாளர்: வருகையும் பின்னணியும் !
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் சிக்கல், வட இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து தென்னகம் நோக்கி இடம்பெயரும் தொழிலாளர்களைப் பற்றியது மட்டுமே. ஆனால் இது அவர்களுடைய சிக்கல் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டங்களின் இடையிலும் இடம் பெயர்தல் நடக்கின்றன. வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து உழைக்கும் தொழிலாளர்களும் மூலதனத்தால் சுரண்டப்படுகிறார்கள். Continue reading
-
லெனின் 153 : புதியதோர் பொன்னுலகமே, இன்றைய நிகழ்ச்சிநிரல்!
என்.குணசேகரன் மார்க்சிய தத்துவம் நடைமுறைக்கு வழிகாட்டி; புரட்சிகரமான முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தத்துவமாக மார்க்சியம் விளங்குகிறது. மார்க்சியத்தால் ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்பதற்கு சான்றாக லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது. அத்துடன் மார்க்சியமே மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மாபெரும் தத்துவம் என்பதை உறுதியாக நிரூபிக்கும் வரலாறாகவும் லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது. அவர் வாழ்ந்த காலம், முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சி அடைந்த காலம். அந்த காலச் சூழலில் புதிய நிலைமைகளை சரியாக மதிப்பீடு செய்து ரஷ்யாவில் புரட்சியை… Continue reading
-
வைக்கம் 100 : போராட்டக் களம் தரும் பாடங்கள் !
போராட்டம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த காந்தியாரும் கூட வைக்கம் மகாதேவர் ஆலையத்தை நிர்வகித்த இண்டம்துருத்தி மனைக்கு உள்ளே அனுமதிக்கப்படாத செயலும் நடந்தேறியது. ஆலையத்தைச் சுற்றிலும் இருந்த பொது வழியை அனைவரும் பயன்படுத்த உரிமை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. காந்தியாரை அனுமதிக்க மறுத்து அவமதித்த அந்த மனை தற்போது ‘கள் இறக்கும் தொழிலாளர்களுடைய சங்கத்தின்’ அலுவலகமாக செயல்படுகிறது. வரலாறானது முன்னோக்கியே நகரும் என்பதற்கான முன்னுதாரணம் இது. Continue reading
-
2023-24: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து
பட்ஜெட்டில் எந்த திசைவழியில் தமிழக பொருளாதாரம் செல்லவேண்டும், மக்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கான பாதை எது, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு ஆகிய முக்கிய பிரச்சினைகளில் பட்ஜெட் எத்தகைய பங்கு ஆற்ற முடியும் போன்ற கேள்விகள் குறித்து ஆழமான சிந்தனைகள் எதுவும் பட்ஜெட்டில் வெளிப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமான சில ஒதுக்கீட்டு மாற்றங்கள், கவனம் ஈர்க்கும் ஓரிரு சேமநல திட்டங்கள் என்ற வகையில்தான் பட்ஜெட் அமைந்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி பற்றியோ, மக்கள் சந்திக்கும் வாழ்வாதார சவால்கள் பற்றியோ எந்த ஒரு… Continue reading