மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


May 2023

  • முதல் விடுதலைப் போரின் முன்னோடி வேலூர்ப் புரட்சி

    18ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றுப் பின்னணி தென் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவன வணிகர்களாக வந்த ஆங்கிலேயர்கள், தங்களது மேலாண்மைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய தென் தமிழகப் பாளையக்காரர்கள் பூலித்தேவன் (நெற்கட்டும்செவல்: 1755-67), வேலுநாச்சியார் (சிவகங்கை: 1780-96), வீரபாண்டிய கட்டபொம்மன் (பாஞ்சாலங்குறிச்சி: 1790-99) மருது சகோதரர்கள் (சிவகங்கை: 1801) ஆகியோரை, தங்களது பிரித்தாளும் சூழ்ச்சியாலும் பீரங்கி பலத்தாலும் வென்றனர். இதே காலகட்டத்தில், ஹைதர் அலிக்குப் பிறகு ஆங்கிலேயரை எதிர்த்த… Continue reading

  • ரஷ்யாவை ‘அடக்க முயலும்’ அமெரிக்க ஆட்டம் !

    ஏகாதிபத்தியமும் இயற்கை வளங்களும்: ரஷ்யாவை ‘அடக்க முயலும்’ அமெரிக்க ஆட்டம் ! பேரா. பிரபாத் பட்நாயக் உலக நாடுகள் அடைந்துள்ள ‘வளர்ச்சி’ நிலைக்கும், இயற்கை வளங்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டிற்கும் இடையில் மிகப்பெரும் அசமத்துவம் நிலவுகிறது. உதாரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளின் குழுவான ஜி-7 நாடுகளை எடுத்துக்கொள்வோம். இந்த நாடுகளில், உலகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் மட்டுமே வாழ்கிறார்கள். ஆனால்,… Continue reading

  • கட்சி ஸ்தாபனத்தின் உடனடி கடமைகள்

    கட்சியின் தினசரி செயல்பாட்டில் கிளைகளின் செயல்பாடு மிக முக்கியமானது. கிளைதான் அந்தந்த பகுதி மக்களுடன் நேரடி தொடர்ப்பில் இருக்கிறது. கிளைகளில்தான் உறுப்பினர்களின் தரமும் மதிப்பீடு செய்யப்பட்டு, உறுப்பினர் புதுப்பித்தல் நடைபெற வேண்டும். எனவே தொடர்ச்சியாக செயல்படாத கட்சிக் கிளைகளை மீண்டும் செயல்படுத்தி அவர்களை அரசியல் மற்றும் ஸ்தாபன வேலைகளில் கட்சி ஈடுபடுத்த வேண்டும் என்று கொல்கத்தா ப்ளீனம் கூறுகிறது. Continue reading

  • கார்ல் மார்க்சின் இறுதி ஆண்டுகள்

    கார்ல் மார்க்சுக்கு நல்ல ஆறுதலளித்து வந்த கார்ல்ஸ்பாத் வெந்நீர் ஊற்றுச் சிகிச்சையை ஜெர்மானிய சோசலிசத் தொழிலாளர் இயக்கத்துக்கு எதிராக பிஸ்மார்க் கொண்டு வந்த சட்டங்கள் தடுத்தன. 1878இலிருந்தே அவரது உடல் துன்பம் அதிகமாகி அவரது பணியையும் பெருமளவிற்குப் பாதித்தது. ஆனால் நோய்க்கும், வலிக்கும் விட்டுக் கொடுக்கும் மனிதரல்ல அவர். அந்த வகையில் அவர் இறுதி வரை தன் உடலோடு போராடிக் கொண்டேயிருந்தார். Continue reading