சிபிஐ(எம்), 23 வது காங்கிரஸ் அரசியல் நகல் தீர்மானம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

மத்தியக்குழு

23வது காங்கிரசுக்கான அரசியல் தீர்மான நகல்

ஆங்கில மூலம் (பிடிஎப்) | Link

(2022 ஜனவரி 7 முதல் 9 வரை ஹைதராபாத் நகரில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது)

0.1     22வது காங்கிரஸிற்குப் பிந்தைய காலப்பகுதியில் பாஜக தன்னை மேலும் நிலைநிறுத்துக் கொண்டதையும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில் பாசிஸ ஆர்.எஸ்.எஸ். ஸின் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை மிகத் தீவிரமாக பின்பற்றி வருவதையும் காண முடிந்தது. நவதாராளவாத சீர்திருத்தங்களை வெறித்தனமாகப் பின்பற்றுவதன் மூலம் வகுப்புவாத- கார்ப்பரேட் கூட்டணியை வலுப்படுத்துவது; நாட்டின் சொத்துக்களை சூறையாடுவது; தனக்கு நெருக்கமான முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்துவது; அரசியல் ரீதியான ஊழலை சட்டபூர்வமான ஒன்றாக மாற்றியமைப்பது; எதேச்சாதிகாரத்தை முழுமையான வகையில் திணிப்பது என பல்வேறு வகையான தாக்குதல்களை அது மக்களின் மீது தொடுத்து வருகிறது.

0.2    2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேலும் அதிகமான இடங்களை வென்று, அதிக வாக்குவிகிதத்துடன் பாஜக வகுப்புவாத, தேசியவாத வெறித்தனத்தை ஊட்டி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதன்பின்னர் வகுப்புவாதத் திரட்டலைத் தீவிரப்படுத்தியும், நமது மதச்சார்ப்பற்ற ஜனநாயக அரசியலைப்புச் சட்டத்தைப் புறந்தள்ளியும், சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-க்களை நீக்கி ஜம்மு-காஷ்மீர் அரசைக் கலைத்தது. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றியது. அயோத்தியாவில் (ராமர்) கோயில் கட்டுமானத்தைத் தொடங்கியது.கொடூரமான தடுப்புக் காவல் சட்டங்களை முற்றிலும் தவறான வகையில் பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் மீது இரக்கமேதுமின்றித் தாக்குதல் தொடுத்தது.அரசமைப்புச் சட்ட ரீதியான இந்திய குடியரசின் தன்மையையே மாற்றியமைக்கத் தொடர்ச்சியான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

0.3     இந்தக் காலப்பகுதியில் உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினரிடமிருந்து மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையும் காண முடிந்தது. தொழிலாளர்களுக்கான புதிய விதிமுறைகள், தனியார் மயமாக்கல் முயற்சிக்ள் ஆகியவற்றுக்கு  துறைவாரியாகவும் பொதுவாகவும் தொழிலாளி வர்க்கம் வேலைநிறுத்தங்களின் மூலம் தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. அரசமைப்புச் சட்டம், குடியுரிமை ஆகியவற்றைச் சீர்குலைப்பதற்கு எதிரான பெருந்திரளான மக்களின் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இயக்கம் வலுப்பெற்றது. விவசாயிகளின் மிகப்பெரிய, நீண்ட காலத்திற்கு நீடித்த போராட்டமானது மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெற வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு வெற்றியில் நிறைவடைந்தது.

0.4      கடந்த நான்காண்டு காலத்தில் பாஜக அரசு அமெரிக்காவின் யுத்த தந்திர ரீதியான, அரசியல் ரீதியான, பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் அனைத்திற்கும் முற்றிலுமாக அடிபணிந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ்ப்படிதலுள்ள, உறுதியான கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. இது நமது அண்டை நாடுகள் உடனான உறவுகளிலும், சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதையிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இன்றைய நிலைமைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான உலகளாவிய நிகழ்வுகளின் பின்னணியிலேயே இத்தகையதொரு சூழல் உருவாகியுள்ளது.

சர்வதேச நிலைமை

1.1     22வது காங்கிரஸிற்குப் பிந்தைய காலத்தில் சர்வதேச நிலைமைகளில் உருவாகியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

அ)    பேரழிவான கொரோனா பெருந்தொற்று வெடித்தெழுந்துள்ளதோடு, அது  புதிய பல வடிவங்களை எடுப்பதால் அதன் தாக்கம் தொடர்ந்து வருகிறது. 

ஆ)    இந்தப் பெருந்தொற்று மற்றும் அதனோடு தொடர்புடைய பிரச்சனைகளை சமாளிப்பதில் முதலாளித்துவ நாடுகள், சோஷலிச நாடுகள் ஆகியவற்றுக்கு இடையே முற்றிலும் வேறுபட்ட தன்மை நிலவுகிறது. 

இ)    ஆழமாகி வரும் உலகளாவிய பொருளாதார தேக்கநிலை.

ஈ)    இந்தப் பொருளாதார தேக்கநிலைக்கு எவ்விதத் தீர்வையும் தரவியலாதவாறு நவதாராளமயம் திவாலாகிப் போயுள்ளது. பொருளாதாரத்திற்குப் புத்துயிர் ஊட்டும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட ஊக்கத்திட்டங்கள் அதற்கு முற்றிலும் மாறான வகையில், நவதாராளமய செயல்பாட்டை அதிகபட்ச லாபம் ஈட்டுவதற்கான ஒரு வழியாக மேலும் வலுப்படுத்தியுள்ளது. 

உ)    உலகளாவிய பொருளாதாரத்தின்மீது நிதி மூலதனத்தின் பிடிப்பு மேலும் வலுப்பட்டுள்ளது. 

ஊ)    மக்களின் வாழ்க்கையின் மீதும், வாழ்நிலைகளின் மீதும் பேரழிவுமிக்க தாக்கம்; அதனோடு கூடவே, உலகளாவிய பட்டினி நிலை, வறுமையின் அளவு, வேலையின்மை மற்றும் கல்வி மறுப்பு ஆகியவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன

எ)    உலகின் வல்லமை மிக்கதொரு சக்தியாக உருவாகி வரும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது.

ஏ)    சீனாவை கட்டுப்படுத்தி, அதைத் தனிமைப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகள்.

ஐ)    உலகளாவிய அளவில் அரசியல் ரீதியாக வலதுசாரி திசையை நோக்கிய மாற்றம் தொடர்கின்ற போதிலும், அதற்கு எதிரான எதிர்ப்பும் வளர்ந்து கொண்டே வருகிறது. 

ஒ)    அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான மேலாண்மைக்கு எதிராக லத்தீன் அமெரிக்காவில் எதிர்ப்புணர்வு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிலி, வெனிசுவேலா, பொலிவியா, பெரு, ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில் இடதுசாரிகளும் முற்போக்கு சக்திகளும் பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் மூலம் வெற்றிகளைப் பெற்றுள்ளன. 

ஓ)    இக்காலப்பகுதியின் முக்கியமான நிகழ்வு என்பது அமெரிக்கா- நேட்டோ கூட்டுப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து ஆஃப்கானிஸ்தானில், தாலிபான்கள் அந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியுள்ளதன் மூலம் உருவாகியுள்ள நிலை. 

ஒள)    நம்மைச் சுற்றியுள்ள நாடுகளிடமிருந்து இந்தியா தனிமைப்படும் நிலை அதிகரித்துள்ளது. பெரும்பாலான அண்டை நாடுகளுடனான நமது உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன.

ஃ)    புவி வெப்பமயமாதலால் மிக மோசமான அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளன. பருவநிலை மாற்றம் குறித்து உறுதியான நடவடிக்கையும் உடனடியாகத் தேவைப்படுகிறது. 

பேரழிவு மிக்க கொரோனா பெருந்தொற்று

1.2      2019 டிசம்பரில் வெடித்தெழுந்த கொரோனா பெருந்தொற்று இன்னமும் உலகளாவிய அளவில் மிகப்பெரும் பிரச்சனையாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் அது தொடர்ந்து பேரழிவையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பிறழ்மாற்றம் பெற்று வருவதோடு, அதன் புதிய வடிவங்களும் வெளிப்பட்டு பரவலாகப் பரவி வருகின்றன.அதன் சமீபத்திய வடிவமான ஒமைக்ரான் உலக அளவில் மிக அதிகமான வேகத்தில் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 30 கோடி பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.இவர்களில் கிட்டத்தட்ட 55 லட்சம் பேர் ஏற்கனவே இந்தத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

1.3     தடுப்பூசி: அனைவருக்குமான, உலகளாவிய ஒரு திட்டத்தின் மூலம் தீவிரப்படுத்தப் படவில்லையெனில், இந்தப் பெருந்தொற்று தொடர்ந்து அழிவை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கும். (இந்தப் பெருந்தொற்றிலிருந்து) அனைவரும் பாதுகாக்கப்பட்டவர்களாக  மாறாத வரையில் எவரொருவருமே பாதுகாப்பானவர்களாக இருக்க முடியாது. உலகளாவிய அளவில் தடுப்பூசி பெறுவதில் நிலவி வரும் அசமத்துவம் இத்தகைய பாதுகாப்பான நிலை உருவாவதைத் தடுக்கிறது.இந்த அசமத்துவமானது கொரோனா வைரஸ் புதிய புதிய வடிவங்களில் வெளிப்படுவதற்கும் வழிவகுக்கிறது.வளர்ச்சியடைந்த, பணக்கார நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்குத் தேவைப்படுவதை விட அதிகமான அளவில் தடுப்பூசிகளை பதுக்கி வைத்துக் கொண்டு அவற்றை பயன்படுத்திக் கொள்வதென்பது இதில் ஒரு அம்சம். அதிக வருமானமுள்ள நாடுகளில் உள்ள மக்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் முழுவதும் தடுப்பூசி பெற்றவர்களாக இருக்கும் அதே நேரத்தில் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ள மக்களில் 2.5 சதவீத மக்களுக்கு மட்டுமே அதுபோல தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிக வருமானமுள்ள நாடுகளில் உள்ள மக்கள் தொகை அளவில் 150 சதவீத அளவிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள அதே நேரத்தில் குறைந்த வருமானமுள்ள நாடுகளில் உள்ள மக்கள் தொகையளவில் 7 சதவீத அளவிற்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஆப்ரிக்கா கண்டத்திலுமே வயது வந்தவர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி விஷயத்தில்  உருவாகியுள்ள இந்த அசமத்துவத்தின் மற்றொரு அம்சம் என்பது அதிக வருமானமுள்ள நாடுகளில் ஒரு சில தடுப்பூசி குறித்த காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றை நீக்குவதற்கு மறுப்பதே ஆகும். மிகப்பெரும் மருந்து உற்பத்தி நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் கூடிய இந்த மறுப்பானது, தடுப்பூசியின் விலையை அதிகரிப்பதோடு, ஏழைநாடுகள் அவற்றை வாங்க முடியாத நிலையையும், அவற்றை தங்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்யமுடியாத நிலையையும் உருவாக்கி பெரிய மருந்துக் கம்பெனிகளை பாதுகாக்கிற ஏற்பாடாகும்.

1.4      பொது சுகாதார வசதிகளின் பற்றாக்குறை:  முதலாளித்துவத்தின் கீழ் பொது சுகாதார வசதிகள் போதுமான அளவிற்கு இல்லாத நிலையை இந்த  கொரோனா பெருந்தொற்று மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக வளரும் நாடுகளில் இது மிகவும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.அதிகபட்ச லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட நவதாராளவாத கொள்கைகள் சுகாதார வசதிகளை பெருமளவில் தனியார் மயமாக்குவதற்கு இட்டுச் சென்றன. குறைந்தபட்ச சுகாதார வசதிகள் இருக்கும் இடங்களிலும் கூட காப்பீட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக அமைகின்ற சுகாதாரக் காப்பீட்டு வசதியின் மூலமாகவே அந்த வசதிகளைப் பெற முடியுமே தவிர, அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக அது நடைபெறுவதில்லை. தனியார் மருத்துவ வசதியை பெற முடியாத நிலையானது பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பாதுகாக்கும் வாய்ப்பை தடுத்து நிறுத்துவதோடு, பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதையும் இயலாத ஒன்றாக ஆக்கி விடுகிறது. தடுப்பூசி விஷயத்தில் நிலவும் அசமத்துவத்தைப் போலவே இதுவும் மக்களின் வாழ்வில், குறிப்பாக ஏழ்மை நிறைந்த நாடுகள், வளரும் நாடுகள்  ஆகியவற்றில் வசிக்கும் மக்களின் உயிர்வாழ்வில்,  பேரழிவுமிக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

1.5      சோஷலிச நாடுகள்: மக்களை மையமாகக் கொண்ட அவற்றின் கொள்கைகள், பொது சுகாதார வசதிக்கான கட்டமைப்புகள் ஆகியவற்றின் விளைவாக, இந்தப் பெருந்தொற்றினை சோஷலிச நாடுகள் முற்றிலும் வேறுபட்ட வகையில் கையாண்டன. இந்தப் பெருந்தொற்றுச் சவாலை முதலாளித்துவத்தை விட மிகச் சிறப்பான வகையில் அவற்றால் எதிர்கொள்ள முடிந்தது என்பதோடு, சோஷலிசத்தின் மேன்மையையும் அவை மீண்டும் ஒருமுறை நிரூபித்தன. இந்தப் பெருந்தொற்று சீனாவை மிக மோசமாக சோதித்த போதிலும், அதைக் கட்டுப்படுத்தி, அதன் விளைவாக தனது பொருளாதாரத்தை உயிர்ப்பிக்கவும், பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிர் ஊட்டவும் அதனால் முடிந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அது தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் கொடூரமான பொருளாதார தடையின் விளைவாக கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வந்தபோதிலும், வெளிநாடுகளிலிருந்து கருவிகள், மருந்துகள் ஆகியவற்றை பெற இயலாதபோதிலும், கியூபா உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை உருவாக்கியதோடு, உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவது உள்ளிட்டு மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்தது. அதைப் போன்றே கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை பரவுவதை வியட்நாம் சிறப்பான வகையில் கட்டுப்படுத்தியதோடு, அதைத் தொடர்ந்து வந்த டெல்டா அலையையும் சமாளித்தது.

உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி

1.6     2008ஆம் ஆண்டு எழுந்த உலகளாவிய நிதித்துறை நெருக்கடி தீவிரமடைந்து அமைப்பு ரீதியான பொருளாதார நெருக்கடியாக பரிணமித்தபின் முதலாளித்துவ மீட்சியினால் அதற்கு முந்தி இருந்த அளவை எட்ட முடியவில்லை. பன்னாட்டு நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கூற்றுப்படி, உலகளாவிய ஒட்டுமொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது.2009ஆம் ஆண்டில் 5.4 சதவீதமாக இருந்த இந்த விகிதம் பெருந்தொற்று வெடித்தெழுவதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டில் 2.8 சதவீதமாகக் குறைந்தது.இந்தப் பெருந்தொற்றின் கூடவே வந்த பொதுமுடக்கம், உற்பத்தி மையங்களின் மூடல் ஆகியவற்றின் விளைவாக 2020ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதாரம் மைனஸ் 4.4 சதவீதமாகச் சுருங்கிப் போனது.பன்னாட்டு நாணய நிதியமும் உலக வங்கியும் வரும் ஆண்டுகளில் நல்லதொரு வளர்ச்சி இருக்கும் என்று தெரிவித்த அதேநேரத்தில் தொடர்ந்து நீடித்து வரும் உலகளாவிய தடுப்பூசி அசமத்துவம் போன்ற மிக வலுவான அறிகுறிகள் உலகப் பொருளாதாரம் பெருமளவிற்கு மீட்சி அடைவதை தடுப்பதாக உள்ளன என்றும் எச்சரித்துள்ளன. 2022ஆம் ஆண்டின் உற்பத்தி விகிதம் பெருந்தொற்றுக்கு முன்பு உலகளாவிய உற்பத்தி விகிதம் குறித்த முன்மதிப்பீடுகளை விட 2 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. 

1.7      அமெரிக்க –ஐரோப்பிய ஒன்றிய ஊக்கத்திட்டங்கள்:  உலகளாவிய உற்பத்தி குறித்து சர்வதேச அமைப்புகள் முன்வைக்கின்ற முன்மதிப்பீடுகள் பெருமளவிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அறிவித்துள்ள புதிய ஊக்கத் திட்டங்களால் ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் (பொருளாதார) மீட்சியையே அடிப்படையாகக் கொண்டவை ஆகும். அமெரிக்கா 1.9 ட்ரில்லியன் டாலர் (1,90,000 கோடி டாலர்) மதிப்புள்ள ஊக்கத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் தனது பட்ஜெட்டின் மூலம் நேரடியான உதவியாக 1.8 ட்ரில்லியன் யூரோக்கள் (2.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புடைய ஊக்கத் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. இத்திட்டங்கள் உழைக்கும் மக்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகக் குறைந்த அளவிலேயே நேரடியாகப் பயன் தருபவையாக இருக்கும். அதே நேரத்தில் இதன் மூலம் மிகப்பெரும் பணப்பயன்களை பெற்றுள்ள பெரும் வணிக நிறுவனங்களும் நிதி மூலதனமும் அதீத லாபத்தைக் குவிப்பதற்கான நவதாராளமய நிகழ்ச்சி நிரலை மேலும் முன்னெடுத்துச் செல்கின்றன. பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து அனைத்து வகையிலும் உலகளாவிய அளவில் நிதி சார் ஊக்கத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகை 16.9 ட்ரில்லியன் (16,90,000 கோடி டாலர்) அமெரிக்க டாலர்களாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. உலகளாவிய வகையில் செலவிடப்படவுள்ள இத்தொகையில் கிட்டத்தட்ட 86 சதவீதத்தை உலகின் முன்னேறிய நாடுகள் கைப்பற்றிக் கொண்டுள்ளன. இந்த ஊக்கத்தொகையில் பெரும்பாலானவை நிதிசார் வங்கி அமைப்புகளிலிருந்து பெறப்படும் கடன்கள் முன்பணம் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மிகச் சிறிதளவே மக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பவையாக இருக்கும். இத்தகைய ஊக்கத் திட்டங்களுக்கான நிதியாதாரம் அரசு கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் பணப்பத்திரங்கள் ஆகியவற்றின் வழியாகவே திரட்டப்படவுள்ளன.இவ்வாறு ஊதிப் பெரிதாக்கப்பட்ட பங்குச் சந்தை என்பது இதுவரை கண்டிராத செயற்கையான வீக்கத்துக்கு வழிவகுப்பதாகவே இருக்கும்.

1.8     அதிகரித்து வரும் அசமத்துவ நிலை: பங்கு சந்தையின் வளர்ச்சி போன்ற வெடிப்புகளை ஏற்படுத்துகின்ற வகையில், ஊக்கத் திட்டங்களுக்கு இதுபோன்று நிதியுதவி செய்வது என்பதே மிக அலங்கோலமான வகையில் அசமத்துவம் அதிகரிப்பதற்கு பங்களிப்பது ஆகும். 2020 ஜூலையில் உலகத்திலுள்ள பில்லியனர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு புதியதொரு உச்சத்தை எட்டி 10.2 ட்ரில்லியன் டாலர்களாக மாறி உள்ளது.கடந்த ஆண்டில் உலகின் மிகப்பெரும் செல்வந்தர்களின் சொத்து 413 பில்லியன் டாலர்கள் அதிகரித்தது.இந்தத் தொகையை வைத்துக் கொண்டு 2021ஆம் ஆண்டில் மனிதநேயப்பணிகளுக்காக ஐ.நா.சபை உலக நாடுகளிடம் கோரியிருந்த தொகையைப் போல பதினோரு முறை வழங்கியிருக்க முடியும். கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் மிகப்பெரும் ஏகபோக மருந்து உற்பத்தி நிறுவனங்களின் மூலம் உலகளாவிய அளவில் ஒன்பது புதிய பில்லியனர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு அருவருக்கத்தக்க அளவிற்கு சொத்துக் குவிப்பு என்பதே முதலாளித்துவச் சுரண்டல் மற்றும் மூலதன சேகரிப்பின் அடிப்படையான குணமாக அமைகிறது.வணிக நிறுவனங்களுக்கு உலக அளவிலான குறைந்தபட்ச வரியாக 15 சதவீதம் விதிக்கப்பட வேண்டும் என்பதை உலகிலுள்ள 136 நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. எனினும் செலுத்தவேண்டிய வரிகளை செலுத்தாமல் ஏய்ப்பதிலிருந்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் மிகப்பெரும் செல்வந்தர்களையும் தடுத்து நிறுத்தி இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுட வைத்திட முடியுமா? என்ற சந்தேகம் நீடித்தே வருகிறது.

1.9  உலகளாவிய நிதி மூலதனம்:  வருவாய் மற்றும் செல்வம் ஆகியவற்றில் நிலவும் ஏற்றத்தாழ்வினை மேலும் கெட்டிப்படுத்தும் செயலை சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையில் செயல்படும் நவதாராளமயம் ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்ச லாபத்தை ஈட்டுவது என்ற அதன் குறிக்கோள் மேலும் வலுப்பட்டுள்ளதன் அடையாளமாகவே இது அமைகிறது. 22வது கட்சிக் காங்கிரஸ் சுட்டிக் காட்டியதைப் போல, பொருளாதார நெருக்கடிக்கு எந்தவித தீர்வையும் வழங்குவதில் அதன் இயலாமையை நவதாராளமயம் தொடர்ந்து நிரூபித்து வந்துள்ளது. இந்த நெருக்கடியே அதன் கொள்கைகள் மற்றும் முன்வைத்த ஆலோசனைகள் ஆகியவற்றால் உருவானவை ஆகும். அதற்கு மாறாக, அதிகபட்ச லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டதன் விளைவாக இந்த நெருக்கடியை அது மேலும் மோசமாக்கவே செய்துள்ளது. எனினும் உலகளாவிய பெருந்தொற்று நிலையில் ஏற்பட்டுள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டு அது தனது பிடியை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முயல்கிறது. அது வடிவமைத்துள்ள ஊக்கத்திட்டங்களும் கூட செல்வந்தர்களை மேலும் கொழுக்க வைப்பதற்காகவே உள்ளது ; உலகளாவிய நிதி மூலதனத்தின் பிடியை பொருளாதாரத்தின் மீது மட்டுமின்றி, நவதாராளவாத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்த முனையும் பல நாடுகளின் அரசியல் அமைப்புகளை வடிவமைப்பதிலும் கூட தனது பிடியை மேலும் இறுக்குவதற்கான சூழலையும் அது உருவாக்கியுள்ளது. 

அதிகரித்து வரும் மக்களின் துயரங்கள்

1.10     பெருந்தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவானது தீவிரமாக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதார சுரண்டல்; அதிகரித்துக் கொண்டே வரும் உலகளாவிய பட்டினி நிலை; அதிகரித்து வரும் வறுமையின் அளவு; அதிகரித்துக் கொண்டே வரும் வேலையின்மை; உலகம் முழுவதும் குழந்தைகளில் பெரும்பாலோருக்கு தீவிரமான வகையில் கல்வி மறுக்கப்படுவது என மக்களில் பெரும்பான்மையினரின் மீது பேரழிவுமிக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

1.11     அதிகரித்து வரும் பட்டினி: ஒவ்வொரு நிமிடமும் உலகில் 11 பேர் பட்டினியால் இறந்து போகின்றனர் என ஆக்ஸ்ஃபாம் அறிக்கை மதிப்பிட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் பத்து சதவீதம் பேர், அதாவது சுமார் 81.1 கோடி பேர், போதிய ஊட்டச்சத்து அற்றவர்களாக இருக்கின்றனர்; 15 கோடி  குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர்;   4.5 கோடி குழந்தைகள் உடல்நலம் குறித்த தரவீடுகளை விட குறைந்த நிலையில் உள்ளவர்களாக உள்ளனர் என யுனிசெஃப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டில் 18 கோடி பேருக்கும் மேற்பட்டோர் தொடர்ச்சியான பட்டினி நிலையை எதிர்கொண்ட நிலையில், 2020ஆம் ஆண்டில் உலகின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 237 கோடி பேர், போதுமான அளவிற்கு உணவு கிடைக்க வழியில்லாதவர்களாக இருக்கின்றனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒரே ஆண்டில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை  32 கோடி அதிகரித்துள்ளது. 

1.12      வறுமை: மிக மோசமான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டின் இறுதியில் 10 கோடி அதிகரித்து 74.5 கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலக முழுவதிலும் உள்ள பெண்களிடையே வேலையிழப்பு என்பது 2020ஆம் ஆண்டில் 800 பில்லியன் வருவாய் இழப்பை சுட்டிக் காட்டுகிறது.2021ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் மேலும் 4.7 கோடி பெண்கள் கடுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1.13      வேலையின்மை: 2019ஆம் ஆண்டில்  18.7 கோடியாக இருந்த உலகளாவிய வேலையின்மை 2022ஆம் ஆண்டில் 20.5 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் உலகளாவிய நெருக்கடியினால் ஏற்பட்ட வேலை இடைவெளி 7.5 கோடியை எட்டும் என உலக தொழிலாளர் அமைப்பு முன்மதிப்பீடு செய்துள்ளது.உலகளாவிய வேலைநேரம் 2020இல் 8.8 சதவீதம் குறைந்துள்ளது.இது 25.5 கோடி முழு நேர வேலைஇழப்பிற்கு சமமானதாகும்.2019இல் 3.9 சதவீதமாக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பு சரிவு 2020இல் 5 சதவீதமாக அதிகரித்துள்ளது.உலக அளவில் வயதுவந்தோரின் வேலை வாய்ப்பு 3.7 சதவீதம் குறைந்தது எனில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு 2020இல் 8.7 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு நிலவிய வேலையின்மை, அரைகுறையான வேலை, மோசமான வேலைநிலைமைகள் என தொடர்ந்து உச்சத்திலேயே நீடித்த நிலைமைக்கு மேலாகவே வேலைவாய்ப்பிலும் வேலைநேரத்திலும் இந்த அதீதமான சரிவு ஏற்பட்டுள்ளது. 

1.14     தீவிரமாகியுள்ள சுரண்டல்:  அதிகபட்ச லாபத்தை பெறவேண்டும் என்ற நவதாராளவாதத்தின் விதிமுறைகள் உழைக்கும் மக்களின் பொருளாதார ரீதியான சுரண்டலை தீவிரப்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, மறுபுறத்தில் அது உள்நாட்டுத் தேவையை நசுக்கி வளர்ச்சியை எதிர்மறையான வகையில் தடை செய்வதன் விளைவாக நீடித்த முதலாளித்துவ நெருக்கடிக்கான சூழ்நிலையை உருவாக்குகின்றன. 2008லிருந்து தொடர்ந்து நீடித்து வரும் நெருக்கடி மற்றும் மந்தநிலைஆகியவற்றால்  பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் போன்ற வளர்ச்சிபெற்ற நாடுகளில் உண்மை ஊதியம் குறைந்து வருவதைக் கண்டது. 2008 நெருக்கடிக்குப் பிறகு அமலாக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக இந்த நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் உண்மையான ஊதியத்தை விட (14.3 சதவீதம்) தொழிலாளர் உற்பத்தித் திறன் (21.8 சதவீதம்) மிக வேகமாக அதிகரித்துள்ளது. சமூகப் பாதுகாப்பைப் பொறுத்த வரையில் மொத்த மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதம் பேர், அதாவது 400 கோடி பேர், சமூகப் பாதுகாப்பு அற்றவர்களாக, அல்லது பெயரளவிற்குப் பாதுகாப்பு பெற்றவர்களாக உள்ளனர். 2019க்கும் 2020க்கும் இடையில் வேலை இழப்பு அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் உலகளாவிய தொழிலாளர் வருவாயில் 10.7 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.இது 3.5 ட்ரில்லியன் டாலர்களுக்கு சமமாகும்.இது 2021இல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.இவ்வாறு தீவிரப்படுத்துப்பட்டுள்ள சுரண்டல் என்பது முதலாளித்துவத்தின் அடித்துப் பிடுங்கும் உள்ளார்ந்த தன்மையையே வெளிப்படுத்துகிறது.

1.15      கல்வி மறுப்பு: பெருந்தொற்றுக் காலத்தில் உலக முழுவதிலும் உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேரின் கல்வி பாதிக்கப்பட்டது என யுனெஸ்கோ அமைப்பு தெரிவிக்கிறது. 2021 மே மாத நிலவரப்படி, 26 நாடுகளில் பள்ளிகள் முற்றிலுமாக மூடப்பட்டன; இதர  55 நாடுகளில் ஓரளவிற்கே செயல்படுகின்றன. குழந்தைகள் வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்; கல்வியின்மீது அவர்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது; அவர்களது நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப இலவச அல்லது மானிய உதவி பெற்ற கல்விப் புலத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் பல லட்சக்கணக்கான மாணவர்களைப் பொறுத்தவரையில், அவர்களது கல்வியில் ஏற்பட்டுள்ள தற்காலிகமான இடையூறாக இது இல்லாமல், திடீரென்று அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளதையே உறுதிப்படுத்துகிறது. பெருந்தொற்றுக் காலத்தில் இணையவழி கல்வியும் கூட, கல்விப்புலத்தில் நிலவும் ‘டிஜிட்டல் வகைப்பட்ட ஏற்றத்தாழ்வை மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.

வலதுசாரி அரசியலை நோக்கிய மாற்றம்

1.16     21வது கட்சி காங்கிரஸிலிருந்தே, உலக அளவில் பிற்போக்கு சக்திகள் மற்றும் இயக்கங்கள் எழுச்சி பெற்றுவருவதை நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.22வது கட்சி காங்கிரஸில், உலக அளவில் ஒரு அரசியல்ரீதியான வலதுசாரி மாற்றம் உருவாகி வந்துள்ளதையும் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம். பெருந்தொற்று மற்றும் அதனோடு தொடர்புடைய சுகாதார நெருக்கடிகளின் தாக்கத்தின் கீழ் பொருளாதார நெருக்கடி மேலும் ஆழமாகி வரும் இன்றைய சூழ்நிலையில், வலதுசாரி அரசியலை நோக்கி மாறிச் செல்லும் இந்தப் போக்கு தொடர்கிறது.

1.17     22வது கட்சிக் காங்கிரஸின் அரசியல் தீர்மானம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: “ தீவிரமான, உலகளாவிய பொருளாதார நெருக்கடியின்போது, அதிகரித்து வரும் மக்களின் அதிருப்தியை யார் முன்னெடுத்துச் செல்வது என்பதற்கான அரசியல்ரீதியான போர் மேலெழுந்துள்ளது. மக்களின் இந்த அதிருப்தியை அணிதிரட்டுவதன் மூலம், இடது மற்றும் முற்போக்கு சக்திகள் ஒரு முக்கியமான மாற்று அரசியல் சக்தியாக உருவாகாமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் அரசியல் ரீதியான வலதுசாரி அணி முன்னேறிச் செல்கிறது.” (பாரா 1.14)

1.18     தீவிரமாகிக் கொண்டே வரும் சுரண்டலுக்கு எதிரான மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து பிளவுபடுத்துவதற்கென உணர்ச்சிகளை தூண்டுவது, பிளவுவாத கோரிக்கைகளை முன்னெடுப்பது, இனவாதம், இனவெறி, மதரீதியான பிளவுவாதம், மத அடிப்படைவாதம், பிரதேச வாதம் போன்றவற்றை வளர்த்தெடுப்பது ஆகியவற்றை மேற்கொண்டு உழைக்கும் மக்களின் அணிதிரட்டப்பட்ட, ஒன்றுபட்ட கண்டனங்கள் வலுப்பெறுவதை சீர்குலைக்க வலதுசாரி சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. 

1.19     எதிர்நிலைப் போக்குகள்: இருப்பினும், இந்த வலதுசாரி அரசியல் மாற்றத்தை எதிர்த்துப் போராடும் போக்குகளும் வளர்ந்து வருகின்றன. பொலிவியா, வெனிசுலா, நிகரகுவா, பெரு மற்றும் சிலி போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இதைத் தெளிவாகக் காண முடிகிறது.”கருப்பு உயிர்களும் முக்கியம்” என்ற அமைப்பின் எதிர்ப்பும் கூட அமெரிக்காவில் டிரம்பின் தோல்விக்கு பங்களித்தது. 1959க்குப் பிறகு இன்று ஸ்காண்டிநேவிய பகுதியில் உள்ள ஐந்து நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் அனைத்துமே சமூக ஜனநாயக கட்சிகள் அல்லது மத்திய-இடதுசாரிகளைக் கொண்டதாக அமைந்துள்ளன.

வளர்ந்து வரும் கண்டன அலைகள்

1.20     22வது காங்கிரஸிற்குப் பிந்தைய காலத்தில், பெருந்தொற்றுக்கு முன்பு நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக முன்வைக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள், தீவிரமாக்கப்பட்ட சுரண்டல் ஆகியவற்றிற்கு எதிராகவும், பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் மீது திணிக்கப்பட்ட துயரங்கள், பொதுமுடக்கங்கள், மக்களின் நலனுக்கான போதுமான ஏற்பாடுகள் இல்லாதது ஆகியவற்றுக்கு எதிராகவும் மக்களின் எதிர்ப்புணர்வு வளர்ந்து வந்ததைக் காண முடிந்தது. பெருந்தொற்று நிலவியபோதிலும் கூட உலகின் பல பகுதிகளிலும் வேலைநிறுத்தங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றன. இத்தகைய கிளர்ச்சிகள் லத்தீன் அமெரிக்காவில் பரவலாக நடைபெற்றன. அர்ஜெண்டினா, பிரேசில், கொலம்பியா, சிலி, ஈக்வடார், மெக்சிகோ, உருகுவே போன்ற பல நாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்கள் வேலைநிறுத்த நடவடிக்கைகள், மிகப்பெரும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை மேற்கொண்டனர். 

1.21    ஐரோப்பாவில், தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் பிற சேவைத்துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். உலகளாவிய மாபெரும் நிறுவனமான அமேசான் தனது நிறுவனத்தில் எந்தவொரு தொழிற்சங்கமும் செயல்படுவதைத் தடை செய்த போதிலும்,  அதன் ஊழியர்கள் பல்வேறு நாடுகளிலும் வேலைநிறுத்தம் செய்தனர். பல்வேறு நிலைகளில் நடந்த இந்த எதிர்ப்புக்கள், சிக்கன நடவடிக்கைகளால் மோசமாகப் பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு, சிறந்த வேலை நிலைமைகள், ஊதியங்கள் மற்றும் பிற சமூகநல நடவடிக்கைகள் மற்றும் தொற்றுநோய்க்கு எதிராக போதுமான பாதுகாப்பு ஆகியவற்றைக் கோரின. பிரான்ஸ்  நாடு தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களையும், அதிகரித்த வரிச்சுமைக்கு எதிராக மஞ்சள்வேட்டிகளின் போர்க்குணமிக்க நடவடிக்கைகளையும் எதிர்கொண்டது. பல நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள், தொழிலாளர் நல சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள், ஊதிய வெட்டுக்கள், ஓய்வூதியங்கள் மற்றும் நீண்ட வேலைநேரம் ஆகியவற்றிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தொழிலாளர்களின் போராட்டங்கள் ‘வீட்டிலிருந்துவேலை’ என்ற நிபந்தனையை சட்டபூர்வமாக்க போர்ச்சுகல் போன்ற நாடுகளை கட்டாயப்படுத்தின. கிரீஸ் நாடும் பெரும் வேலைநிறுத்த நடவடிக்கைகளை எதிர்கொண்டது. உழைக்கும் மக்களின் இந்தப் போராட்டங்களுக்கு விவசாயிகள், பெண்கள், பசுமைஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களும் தீவிரமாக ஆதரவு அளித்து அதில் கலந்துகொண்டனர் என்பது இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளின் வலிமையானது முற்போக்கு மற்றும் வலதுசாரிகள் அல்லாத சக்திகளுக்கு ஆதரவாக தேர்தல்களில் தாக்கத்தை பல நாடுகளில் ஏற்படுத்தியது.

சீனாவின் உலகளாவிய எழுச்சி

1.22     பெருந்தொற்றினை கட்டுப்படுத்தி தனது பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதில் சீனா மிகச் சிறப்பாகச் செயல்பட்டது.உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற தனது உலகளாவிய நிலையை அது வலுப்படுத்திக் கொண்டது. 2021 ஜூலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நூறாண்டு நிறைவைக் கொண்டாடுகையில் தனது நூறாண்டு குறித்த இரண்டு இலக்குகளில் ஒன்றை, அதாவது 2020ஆம் ஆண்டிற்குள் ஓரளவுக்கு செழுமையான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், மக்கலின் வருவாய், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் மேம்பாடு என்ற இலக்கை, அடைந்து விட்டதாகவும் அது அறிவித்தது. 

1.23     நாட்டில் முழுமையான வறுமையை முற்றிலுமாக அகற்றிவிட்டதாக 2021 பிப்ரவரியில் சீனா அதிகாரபூர்வமாக அறிவித்தது.உலக வங்கியின் சர்வதேச வறுமை குறித்த தரவீடுகளின்படி, உலகளாவிய வறுமை விகிதத்தில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட வறுமையை குறைத்ததற்கு சீனாவின் வறுமை ஒழிப்பே காரணம் என்று தெரிய வந்துள்ளது. அதன் வருடாந்திர வளர்ச்சி இலக்கு 6 சதவீதமாக இருந்தபோதிலும், 2021ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டு பகுதியில் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 9.89 சதவீதமாக இருந்ததைக் காண முடிந்தது. 2006ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு ஆண்டும் உலகத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் சராசரியாக 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட வளர்ச்சி சீனாவின் வளர்ச்சி காரணமாக உள்ளது.

1.24     அமெரிக்க- சீன மோதல்: சீனாவின் உலகளாவிய செல்வாக்கு அதிகரித்து வருவதைக் கண்டு அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலை தனது உலகளாவிய மேலாதிக்கத்தினை அச்சுறுத்துவதாகவும் அது கருதுகிறது. பொருளாதார வலிமை கொண்டதொரு சக்தியாக சீனா நிலையான வகையில் வளர்ச்சி பெற்று வருவதும், பெருந்தொற்றினை மிகச் சிறப்பான வகையில் அது கையாண்டதும், அதன் பொருளாதாரம் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளதும் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையிலன ஓர் அச்சுறுத்தல் என்றே அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து கருதி வருகிறது. சீனாவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அதைத் தனிமைப் படுத்தவும், யுத்த தந்திரரீதியாக ஓர் எதிரி என்பதாக சீனாவை வகைப்படுத்தவும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. சீனாவின் பொருளாதாரத்தை பலவீனப் படுத்தும் வகையில் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டுள்ளது. ஹாங்காங்கில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களை உதாரணமாகக் காட்டி, ஜனநாயகம் குறித்த பிரச்சனைகளை அது எழுப்பி வருகிறது.சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பிரச்சனைகளை எழுப்பி வருகிறது.‘ஒரே சீனா கொள்கை’ யை முறியடிக்க தைவான் பகுதியை ராணுவத் தளவாடங்களைக் கொண்டு அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது. தென் சீனக் கடல் பகுதியை தங்குதடையற்ற வகையில் அணுக அனுமதிக்க வேண்டும் என்றும் அது கோருகிறது.சீனா இணைய வழியிலான யுத்தத்தை நடத்தி வருகிறது என்றும் அது புகார் எழுப்புகிறது.

1.25  (அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியாவை உள்ளடக்கிய) குவாட் என்ற அமைப்பினை ராணுவ மற்றும் யுத்த தந்திர கூட்டணியாக உருவாக்கியதை தொடர்ந்து, அமெரிக்கா இப்போது (ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்காவை உள்ளடக்கிய) ஆகஸ் என்ற அமைப்பினை தொடங்கியுள்ளது. இந்தோ-பசிஃபிக் கடல்களில், குறிப்பாக இந்துமாக்கடலில் சீனாவின் இருப்பையும் செல்வாக்கையும் குறைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த நாடுகளின் கூட்டான ராணுவம், கூட்டு ராணுவ ஒத்திகைகள், பல வகையான யுத்தப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவை தனிமைப்படுத்த முயல்கிறது. 

1.26     ட்ரம்ப் நிர்வாகத்தின்போது சீனாவின் மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளை தற்போது பைடென் நிர்வாகத்தின் கீழும் அமெரிக்கா தொடர்ந்து நீடித்து வருகிறது.இதன் விளைவாக 2018க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் சீனாவிலிருந்து அமெரிக்காவின் இறக்குமதி மற்றும் இருதரப்பு சேவைகளுக்கான வர்த்தகம் ஆகியவை சரிவடைந்துள்ளன. எனினும் 2020ஆம் ஆண்டில் 659.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாக சீனா திகழ்கிறது. முதலீடுகள், கடன் ஆகியவற்றின் பின்னிப் பிணைந்த நிலையில் சீனா உடனான வர்த்தகத்தை அமெரிக்காவினால் கைவிட்டு விட முடியாது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளின் மீதான தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள (தொலைத் தொடர்பு துறையின்) 5ஜி வலைப்பின்னலில் சீனா ஈடுபடுவதிலிருந்து விலக்கி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பது போன்றவற்றின் மூலம் இத்துறையில் சீனாவின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. 

1.27      சீனாவை தனிமைப்படுத்த வேண்டும் என்ற உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக ஜி7, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகிய தனது கூட்டாளிகளை அமெரிக்கா அணிதிரட்டி வருகிறது. உலகின் 150க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ள உலகின் மிகப்பெரும் கட்டமைப்பினை உள்ளடக்கிய வர்த்தகப் பாதையான சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சிக்குப் போட்டியாக  ‘ சிறந்த உலகத்தை மீண்டும் கட்டமைப்போம்’ என்ற போட்டித் திட்டம் ஒன்றை ஜி7 அமைப்பு அறிவிப்பதற்கு அமெரிக்கா முன்முயற்சி எடுத்தது. அமெரிக்காவின் செல்வாக்கின்கீழ் உள்ள நேட்டோவின் உச்சிமாநாடு சீனா ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற அறிக்கையை வெளியிட்டது. “சீனாவில் மனித உரிமைகள்” என்ற பிரச்சினையில் அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனுடன் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து செயல்படும் அதேவேளையில், சீனா அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தாலும், பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களில் அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துப் போகவில்லை. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் கூட சீனாவுடன் உறவுகளை “துண்டிக்க” ஆர்வமாக இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த மனிதஉரிமைத் தடைகளுக்குப் பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சில நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை சீனா பதிலடியாக கொடுத்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய வணிகக்குழு கவலையடைந்துள்ளது. அமெரிக்க-ரஷ்ய உச்சிமாநாட்டின்போது சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயுள்ள யுத்ததந்திர ரீதியான கூட்டணியில் பிளவை ஏற்படுத்த அமெரிக்கா எடுத்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. 

1.28      அமெரிக்கா- சீனாவிற்கு இடையேயான இந்த மோதல் ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையேயான மையமான முரண்பாட்டின் மீது தாக்கம் செலுத்துவதாகவும் இருக்கும். 

சீனரஷ்ய கூட்டணி

1.29      சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான யுத்த தந்திர ரீதியான கூட்டணி சமீப ஆண்டுகளில் மேலும் ஆழமடைந்து வலுப்பெற்றுள்ளது. உக்ரைன் தொடர்பாக அமெரிக்கா-நேட்டோ மற்றும் ரஷ்யா இடையே அதிகரித்த பதட்டங்கள் மற்றும் சீனாவை தனிமைப்படுத்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா உந்துதல் ஆகியவற்றின் பின்புலத்தில்தான் டிசம்பர் 2021 இல் ஜி ஜின்பிங்-புடின் மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றது. நவம்பர் 2021 இல், ரஷ்யா மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்கள் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான இராணுவ ஒத்துழைப்புக்கான 2021-25 காலகட்டத்திற்கான தொலைநோக்குத் திட்டத்தில் கையெழுத்திட்டனர். சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான யுத்த தந்திர ரீதியான உறவுகளை வலுப்படுத்துவது என்பது அமெரிக்க தலைமையிலான மேலாதிக்கக் கூட்டணிக்கு யுத்த தந்திர ரீதியான எதிர்வினையாக இருக்கும்.

உக்ரைனில் மோதல் 

1.30     ரஷ்யாவிற்கும் மேற்கத்திய கூட்டணியான நேட்டோவிற்கும் இடையே ஒரு முக்கிய கேந்திரப் புள்ளியாக உக்ரைன் மாறியுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நேட்டோவின் கிழக்குநோக்கிய விரிவாக்கத்திற்கு மேற்குநாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இப்போது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. சோவியத் யூனியனின் முன்னாள் குடியரசான உக்ரைனை நேட்டோவின் வளையத்துக்குள் கொண்டுவருவதை ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது. கிரிமியாவின் இணைப்பு மற்றும் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் மோதல் ஆகியவை இந்த சச்சரவின் விளைவாகும். உக்ரைன் உடனான நேட்டோ உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக உக்ரைனுடனான எல்லையை நோக்கி ரஷ்ய துருப்புக்கள் நகர்கின்றன. உக்ரேனுக்கு எதிராக இராணுவ ரீதியாக நகர முற்பட்டால் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று ஜி-7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்துகின்றன. அதேநேரத்தில் உக்ரேனை மேற்கத்திய கூட்டணியில் இணைக்கும் முயற்சிக்கு ரஷ்யா சில “அபாயக்கோடுகளை” போட்டுள்ளது.

உலகளாவிய முக்கிய சமூக முரண்பாடுகள்

1.31     வளர்ந்துவரும் சீன-அமெரிக்க மோதல் மற்றும் கியூபா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகியவற்றின்மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு தோரணை ஆகியவை ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான மையமான முரண்பாட்டினை கூர்மைப்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

1.32     ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் பரப்பில், டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் ஏகாதிபத்தியக் கூட்டணியின் ஒற்றுமை மோசமாகப் பாதிக்கப்பட்டது என்பதை 22வது காங்கிரஸில் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக அனைத்து ஐரோப்பிய மற்றும் நேட்டோ நட்புநாடுகளை அணிதிரட்டுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் பைடென் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றிற்கிடையே வேறுபாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

1.33     லத்தீன் அமெரிக்கா, மேற்குஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான ஊடுருவலின் விளைவாக ஏகாதிபத்தியத்திற்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடும் வளர்ந்து வருகிறது. வளரும் நாடுகளின் கடன்சுமை தாங்கமுடியாததாகி விட்டது. மேலும் பணக்கார நாடுகள் புவி வெப்பமடைதலுக்கான வரலாற்று ரீதியான தங்களது பொறுப்பை ஏற்க மறுத்து, பருவநிலைக்கு உகந்த நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க மறுக்கின்றன.

1.34 தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகள் மீதான பெரிய தாக்குதல்களால் தொழிலாளர் மற்றும் மூலதனத்திற்கு இடையேயான முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு மேலும் தீவிரமடைந்து வருகிறது. சிக்கன நடவடிக்கைகள், வேலையிழப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு தொழிலாளர்களை மாற்றுவது ஆகியவற்றின் மூலம் தீவிரமான சுரண்டல். இந்தத் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளி வர்க்க எதிர்ப்பும் வளர்ந்துள்ளது.

ஆக்ரோஷத்துடன் செயல்படும் அமெரிக்க ஏகாதிபத்தியம்

1.35     உலகின் பல்வேறு பகுதிகளில்,  அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அமெரிக்கஏகாதிபத்தியம்ஆக்ரோஷமாகத்தொடர்ந்துதலையிடுகிறது. 2020 இல், அமெரிக்க இராணுவச்செலவு 778 பில்லியன் டாலரை எட்டியது. இது 2019 ஐவிட 4.4 சதவீதம்அதிகமாகும்; இது அமெரிக்க இராணுவ செலவினங்களின் வளர்ச்சியின்மூன்றாவது தொடர்ச்சியானஆண்டாகும். ஆனால், பலபகுதிகளில், ஏகாதிபத்திய ஆதரவு அரசாங்கங்களுக்கு எதிரான எதிர்ப்பும் வளர்ந்துவருகிறது. மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கும் சவால்விடப்பட்டு வருகிறது. 

லத்தீன் அமெரிக்கா

1.36     22வது காங்கிரஸூக்குப் பிந்தைய காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்கா வலதுசாரி எதிர்த்தாக்குதலை எதிர்கொண்டது. பிரேசிலில், தீவிர வலதுசாரி வேட்பாளர் ஜெய்ர்போல்சனாரோ 2018 இல் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று வலதுசாரி எதேச்சாதிகார ஆட்சியை நிறுவத்தொடங்கினார். பொலிவியாவில், 2019 இல் நடந்த தேர்தலுக்குப் பிறகு, ஈவோ மொரேல்ஸ் தலைமையிலான சோஷலிசத்திற்கான இயக்கம் (ஆஹளு) வெற்றி பெற்ற போதிலும் அமெரிக்க ஆதரவுடன் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தது. மொரேல்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. ஹோண்டுராஸில், பெரிய அளவிலான மோசடி குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், அன்றிருந்த அதே ஜனாதிபதி மீண்டும் பதவியேற்பதை உறுதிசெய்ய அமெரிக்கா தலையிட்டது. வெனிசுவேலாவில் நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்க ஆதரவு வலதுசாரி சக்திகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

1.37     இந்தப் பின்னணியில், எதேச்சதிகாரம் மற்றும் வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்களும் இடதுசாரிசக்திகளும் இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது இடதுசாரிகள் மீண்டும் நிலைபெற்று முன்னேற்றம் அடைய வழிவகுத்தது. அர்ஜென்டினாவில், தற்போதைய வலதுசாரி ஜனாதிபதி 2019 இல் பெரோனிஸ்ட் வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். இதில் குறிப்பிடத்தக்க மீண்டு வரும் போட்டி  பொலிவியாவில் நடைபெற்றது. 2020 அக்டோபரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சோஷலிசத்திற்கான இயக்கத்தின் (ஆஹளு) வேட்பாளர் மிகப்பெரும் வெற்றி பெற்றார். புதிய அரசாங்கம் முந்தைய கலகக்கவிழ்ப்பு ஆட்சியின் பிற்போக்குத் தனமான கொள்கைகளை திரும்பப்பெற்றுள்ளது. அப்போதிருந்து, பெரு மற்றும் ஹோண்டுராஸில் இடது மற்றும் மத்திய – இடது வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் (இந்த இரண்டு நாடுகளும் சர்வாதிகார ஆட்சிகள் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்புகளின் வரலாற்றைக் கொண்டவையாகும்).

1.38      2021 டிசம்பரில் சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி கூட்டணியின் வேட்பாளர் கேப்ரியல் போரிக் பெற வெற்றி மிக முக்கியமானதொரு மைல்கல் ஆகும். அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கான வெற்றிகரமான இயக்கம் மற்றும் இடது மற்றும் முற்போக்குசக்திகள் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் நிர்ணயசபை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணியில் இந்த வெற்றி வருகிறது. இந்த முற்போக்கான முடிவுகளுக்கு ஒரே விதிவிலக்காக ஈக்வடாரில் வலதுசாரி வேட்பாளர் அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.

1.39     பிரேசிலில், போல்சனாரோவின் பேரழிவு மிக்க ஆட்சி வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அதிபர் லூலா விடுவிக்கப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போல்சனரோலூலாவிடம் இருந்து பெரும் சவாலை எதிர்கொள்வார். லூலாவின் வெற்றி அமெரிக்க ஆதரவு வலதுசாரி சக்திகளுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நீண்டகாலமாக அமெரிக்க ஆதரவு வலதுசாரி சக்திகளின் கோட்டையாக இருந்து வரும் கொலம்பியா, இயக்கங்கள் நடத்தி வரும் இடதுசாரிகள் தலைமையிலான பெரிய  தொழிலாளி வர்க்க நடவடிக்கைகள் மூலம் 2022 அதிபர் தேர்தலில் மிகப்பெரிய சவாலாகத் திகழும்.

1.40      பொருளாதார தடைகள், வெளிநாட்டில் உள்ள அதன் சொத்துக்களை பறிமுதல் செய்தல், ஆயுதமேந்திய குழுக்களை ஊக்குவித்தல், சமூக மற்றும் பொருளாதார அமைதியின்மையை உருவாக்கும் முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் மதுரோ அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு உட்படுத்த அமெரிக்கா மற்றும் வலதுசாரி சக்திகளால் தொடங்கப்பட்ட வீரியம் மிக்கப் போரை வெனிசுவேலா துணிச்சலுடன் எதிர்த்து வருகிறது. உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறை இருந்த போதிலும், மக்கள் சக்தி ஒற்றுமையாக இருந்து அமைதியின்மையை ஊக்குவிக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்துள்ளது. நவம்பர் 2021 இல் நடைபெற்ற மாநிலங்களுக்கான தேர்தலில், ஆளும் ஐக்கிய சோசலிஸ்ட்கட்சி (ஞளுருஏ) 23 ஆளுநர் பதவிகளில் 19ஐ வென்றுள்ளது.

மேற்காசியா

1.41     மேற்கு ஆசியாவின் முக்கிய நிகழ்வுகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வெறியுடனும், ஈரானை நோக்கியும் உள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்ததாலும், மேற்குக்கரையில் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு ஒப்புதல்அளித்ததாலும், நேதன்யாஹூ`வின் ஆட்சியின் கீழ் கிழக்கு ஜெருசலேம் மற்றும் அல்-அக்ஸாமசூதியில் புதிய ஆத்திரமூட்டல்களில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. காசாபகுதிக்கு எதிராக மற்றொரு ஆக்கிரமிப்பு பதிவாகியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொராக்கோ, பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய நான்கு அரபுநாடுகள் இஸ்ரேலுடன் அரசு முறை உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதன் மூலம் இஸ்ரேலுக்கு மற்றொரு அரசு முறையிலான வெற்றியை அமெரிக்கா எளிதாக்கியுள்ளது.

1.42     அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் ஒருதலைப்பட்சமாக விலகியதையடுத்து, அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது பொருளாதார தடைகளை நீட்டித்தது. பைடென் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. எனினும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பொருளாதார தடைகளை திரும்பப்பெற அமெரிக்கா தயக்கம் காட்டியது. புதிய அதிபராக பதவியேற்றுள்ள இப்ராகிம் ரைசியின் ஆட்சியின்கீழ், ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சீனாவுடன் யுத்த தந்திர ரீதியான மற்றும் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த 25 ஆண்டு கால யுத்த தந்திர ரீதியான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டுள்ளது.

1.43     கடந்த இரண்டு பத்தாண்டுகளில் ஏகாதிபத்திய முன்னெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளின் மோசமான வடிவங்களைக் கண்ட பகுதியாக மேற்கு ஆசியா விளங்குகிறது. முதலில் ஈராக்; தொடர்ந்து லிபியா மற்றும் சிரியா. அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபிறகு, மதவாத மோதல்கள், அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுக்கு (ஐஎஸ்ஐஎஸ்) எதிரான நீண்ட போராட்டத்தின் மத்தியில் நிலைபெற இன்னமும் ஈராக் போராடி வருகிறது. போட்டி ஆயுதப் பிரிவுகளுக்கு மத்தியில் பல வருட உள்நாட்டுப் போருக்குப்பிறகு, அமைதியை நிலைநாட்டுவதற்கும், ஆட்சியைப் பிடிக்கவும் ஓர் ஒருங்கிணைந்த அரசை உருவாக்கும் ஆபத்தான முயற்சியில் லிபியா ஈடுபட்டுள்ளது. சிரியாவில், ஆட்சி மாற்றத்திற்கான முயற்சி மற்றும் ஏழு ஆண்டுகால அழிவுகரமான உள்நாட்டுப் போர் ஆகிவற்றின் தோல்விக்குப்பிறகு, அசாத் அரசாங்கம் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளது. இன்னும் தீவிரவாத கிளர்ச்சியால் ஆதரவுடன் உள்ள துருக்கியின் எல்லையில் உள்ள ஒரே ஒரு மாகாணத்தில் மட்டும் அது சாத்தியப்படவில்லை.

1.44     இந்த மூன்று நாடுகளும், இந்தப் பகுதியில் உள்ள மற்ற நாடுகளும், லெபனான் ஒரு பொருளாதார சரிவை சந்தித்து வரும் நிலையில், லெபனான் மட்டும் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

ஆப்ரிக்கா

1.45     ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இயங்கிவரும் ஆயுதமேந்திய இஸ்லாமிய தீவிரவாத குழுக்களை எதிர்த்துப் போரிடுவது என்ற பெயரிலும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் சீனாவின் பரந்த செல்வாக்கை எதிர்கொள்ளவும், அமெரிக்கா தனது இராணுவத்தடகளத்தை “ஆப்ரிகாம்” அமைப்பின் மூலம் அதிகரித்து வருகிறது. மேற்கில் சஹேலியன் பகுதியிலும் கிழக்கில் ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியிலும் என இங்கு 15 நாடுகளில்உள்ள 29 இடங்களில் ராணுவதளங்களும் சிறப்புப்படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கு ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளிலும் பிரெஞ்சு துருப்புக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

சோஷலிச நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரோதமான நடவடிக்கைகள் 

1.46    தொற்றுநோய் நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் சோசலிச கியூபாவை சீர்குலைக்க முயல்கிறது. அறுபது ஆண்டு கால பொருளாதார தடையை அது மேலும் இறுக்கியுள்ளது. கியூபாவுடன் பொருளாதார உறவுகளைப் பேணுகின்ற உலகின் எந்த நாட்டின் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அச்சுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிசத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்ய கியூபா மக்களில் ஒரு பகுதியினரை அமெரிக்கா தூண்டி வருகிறது. அமெரிக்கா விதித்த தடையால் கியூபா எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை புரட்சிக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள முயன்றது. இருப்பினும், இந்தமுயற்சிகள் தோல்வியடைந்தன. கியூபா மற்றும் கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு ஆகியவை மீண்டும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளாக அமெரிக்காவால் வகைப்படுத்தப் பட்டுள்ளன. அணு ஆயுதமயமாக்கப்பட்ட கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தொடர்ந்து ஆத்திரமூட்டும் ராணுவப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு மீதான பொருளாதார தடைகளை நீக்க அமெரிக்கா மறுத்ததால், அமெரிக்கா- கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

தெற்காசிய நாடுகள்

1.47     தனது 20 ஆண்டு காலப்போரை முடிவுக்குக்கொண்டு வந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் இழிவானமுறையில் திரும்பப் பெறப்பட்டது உலகளாவிய தாக்கங்களைக் கொண்ட இந்தப் பகுதியின் மிக முக்கியமான நிகழ்வாகும். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பின்னடைவும் ஆகும். அமெரிக்க-நேட்டோ துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதால், அஷ்ரஃப்கனி அரசாங்கம் சரிந்து, ஆகஸ்ட் 2021 இல் தலிபான்களால் அரசு கையகப்படுத்தப்பட்டது. தலிபான் அரசாங்கத்தின் உருவாக்கம், அதன் முந்தைய ஆட்சியின் அனுபவத்தை கணக்கில் கொள்ளும்போது, தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் தலிபான்களுடன் வெவ்வேறு அளவிலான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. தலிபான்களின் நிலையான ஆதரவாளராக இருந்த பாகிஸ்தான் இப்போது தலிபான் ஆட்சியின் சர்வதேச உறவுகளை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்தியா, இப்போது மனிதாபிமான உதவிகளை வழங்குவதன் மூலம் அந்த நாட்டுடன் மீண்டும் இணைப்புகளை உருவாக்க வழிகளைத் தேடி வருகிறது.

1.48    ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 8 சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளில் 5 நாடுகள் சீனாவின் தெற்காசிய மன்றத்தில் இணைந்தபோது தெற்காசியாவின் வளர்ச்சிப் போக்குகளில் இந்தியாவின் தனிமை நிலை மீண்டும் வெளிப்பட்டது. 2014ஆம்ஆண்டு முதல் சார்க் அமைப்பின் உச்சி மாநாடு எதுவும் நடைபெறவில்லை. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சார்க் மாநாட்டில் பங்கேற்க இந்தியா மறுத்து விட்டது. சார்க்கிற்கு புத்துயிர் அளிப்பதில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்றும், வங்காள விரிகுடா கடற்கரையை பகிர்ந்து கொள்ளும் ஏழுநாடுகளை உள்ளடக்கிய பல்வேறுதுறைகள், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (க்ஷஐஆளுகூநுஊ) வங்காள விரிகுடா முன்முயற்சியிலேயே அது அதிக ஆர்வம் காட்டுவதாகவும் ஒரு தோற்றம் நிலவுகிறது.

அண்டை நாடுகள்

1.49    22வது காங்கிரஸூக்குப் பிந்தைய காலகட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், தெற்காசிய நாடுகளில் எதேச்சதிகாரத்தின் எழுச்சி, வகுப்புவாதம் மற்றும் அடிப்படைவாதத்தின் மேலும் அதிகமான வளர்ச்சியும் ஆகும். இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள அநேக நாடுகளில், மத, இன சிறுபான்மையினர் பெரும்பான்மை சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

1.50     பங்களாதேஷ்: சமீபஆண்டுகளில், பங்களாதேஷின் பொருளாதார செயல்திறன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் மற்ற தெற்காசிய நாடுகளை விட அதிகமாக உள்ளது. அதன் மனித வளர்ச்சிக் குறியீடுகள் கணிசமாக மேம்பட்டு, இந்தியாவை விட முன்னணியில் நிற்கிறது. சமீபத்தில் துர்கா பூiஜை கொண்டாட்டத்தின் போது இந்து சிறுபான்மையினர்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், மத அடிப்படைவாத சக்திகள் அங்கு எப்படி தொடர்ந்து பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றன என்பதை எடுத்துக் காட்டுகிறது.

1.51    பாகிஸ்தான்: இம்ரான்கான் அரசு மோசமான பொருளாதார சூழ்நிலையால் மக்களின் அதிருப்தியை எதிர்கொண்டு வருகிறது. தொற்றுநோய் இந்த நெருக்கடியை மேலும் ஆழமாக்கியுள்ளது. உயர்ந்த உணவுவிலைகள் (2021 முதல் ஒன்பது மாதங்களில் சராசரியாக 18 சதவீதம் அதிகரிப்பு) மற்றும் வேலையின்மை ஆகியவை மக்களின் அதிருப்திக்கு ஆதாரமாக உள்ளன. பிரதமருக்கும் ராணுவத் தளபதிக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. எல்லைப் பகுதியில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் பாகிஸ்தான் தலிபான்கள் நடத்திய தீவிரவாத தாக்குதல்களாலும் அந்நாடு பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. தீவிரவாத இஸ்லாமியவாத தெஹ்ரீக்-இ-லப்பைக், கடுமையான எதிர்ப்புகளை திணித்து, தனது கோரிக்கைகளை ஏற்குமாறு அரசாங்கத்தை அதனால் கட்டாயப்படுத்தி உள்ளது. தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் இந்தியாவுக்கு எதிராக உள்ளன. பாகிஸ்தானே அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் தீய சுழற்சியால் பாதிக்கப்பட்டாலும், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் தீவிரவாத அமைப்புகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்து அடைக்கலம் அளித்து வருகின்றனர். இராணுவத்தின் மேலாதிகாரப் பங்கு ஜனநாயக அமைப்பை மட்டுப்படுத்தவும், எதேச்சதிகாரத்தை வளர்க்கவும் ஆன முறையில் தொடர்கின்றது.

1.52    இலங்கை: நவம்பர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திரக் கூட்டணியின் அமோக வெற்றி, ராஜபக்சே குடும்பத்தின் பிடியை அரசாங்கப் பதவிகளில் உள்ள நான்கு சகோதரர்களின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அதிபர் ராஜபக்சேவின் கீழ், அரசாங்கத்தில் இராணுவ வீரர்களைக் கொண்ட ஒரு எதேச்சதிகாரஆட்சி நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு விரோதமான வகையில் சிங்கள- பௌத்த தேசியவாதத்தின் மீது இந்த ஆட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. ராஜபக்சே ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் விவசாய உற்பத்தி வீழ்ச்சியோடு கூடவே பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப்பற்றாக்குறையும் பணவீக்கமும் மக்களின் வாழ்வாதாரத்தை மிக மோசமாகப் பாதித்துள்ளது.

1.53    உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை முன்னெடுக்க அரசாங்கம் மறுத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த அறிகுறிகளையும் அது வெளிப்படுத்தவில்லை. இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 13ஏ எழுத்துப்பூர்வமாகவும் உறுதியுடனும் நடைமுறைப்படுத்தப்படுவதை இந்திய அரசாங்கம் வற்புறுத்தி தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

1.54    நேபாளம்: இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்–அதாவது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்மையம்) – ஒன்றிணைந்த கட்சியே, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (சூஊஞ). 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அது அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. எனினும், கட்சிக்குள் ஏற்பட்ட கோஷ்டி பூசல்களால் விரைவிலேயே அரசு நெருக்கடிக்கு உள்ளானது. பிரதமர் கேபி ஓலி தலைமையிலான பிரிவு சிறுபான்மை ஆனது. மேலும் என்சிபி எம்.பி.க்களில் ஒருபகுதியினர் ஆதரவை வாபஸ் பெற்ற போது, பாராளுமன்றத்தைக் கலைத்தது அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் விளைவாக பிரதமர் கேபி ஓலி ராஜினாமா செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நேபாளி காங்கிரஸ் கட்சித்தலைவர் ஷேர்பகதூர் டியூபா தலைமையில் மாற்று அரசாங்கம் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) யிலிருந்து பிரிந்த ஒரு பகுதியினரின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.

1.55    என்சிபியில் ஏற்பட்ட பிளவும், ஓலி அரசாங்கத்தின் வீழ்ச்சியும் நேபாளத்தில் இடதுசாரி இயக்கத்திற்கு ஒரு பின்னடைவே ஆகும். இது வலதுசாரி சக்திகள் தலையீடு செய்வதற்கான வழியைத் திறந்துள்ளதோடு, நேபாளத்தில் ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மதத்தையும் அரசியலையும் கலக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

1.56    மியான்மர்: பிப்ரவரி 2021 இல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வீழ்த்திய கொடூரமான இராணுவ வசதியானது, நாடுமுழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பெருந்திரளான எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. இராணுவ ஆட்சி மிருகத்தனமான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, அமைதியான வழியில் போராடிய நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கொன்றது. மேலும் நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆங்சான் சூகி எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்யும் வகையில், ஒரு வெளிப்படையான சூழ்ச்சியாக, ஒரு போலி விசாரணையின் மூலம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1.57    தனது சக்தி வாய்ந்த வலையமைப்பை இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கட்டமைத்துள்ளனர். மேலும் தங்களின் சொந்த நலன்களைப் பாதுகாக்க, வணிக நலன்களுக்கு ஆதரவும், உதவியும் அளித்து வருகின்றனர். இந்தக் குழு அரசின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுவர விரும்புகிறது. மத மற்றும் இனக்குழுக்களின் பெரும்பான்மையான பௌத்த மக்களின் நலன்களை ஊக்குவிக்கின்றன. ரோ`ஹிங்கியாக்களின் மீதான படுகொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டு மிகுந்த துயரமான நிலைகளில் அவர்கள் இந்தியா உட்பட அண்டைநாடுகளுக்கு குடியேறுவதற்கு அது வழிவகுத்தது.

1.58    சில இளம் எதிர்ப்பாளர்கள் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டு, நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள இனக்குழுகிளர்ச்சியாளர்களுடன் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று வருகின்றனர். இதுவரை ஏசியன் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் இராணுவ ஆட்சிக்குழுவிடம் இருந்து எந்த ஒரு சாதகமான பதிலையும் பெற இயலவில்லை. ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், ராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் போராடும் மியான்மர் மக்களுக்கு நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவது அவசியம்.

பருவநிலை மாற்றத்தின் அபாயங்கள்

1.59     22வது காங்கிரசுக்குப் பிந்தைய காலகட்டத்தை புவிவெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் விரைவான அதிகரிப்பு என்பதாக வகைப்படுத்தலாம். பருவநிலை மாற்றம் என்பது ஒரு வர்க்கப் பிரச்சினையே ஆகும். ஏனெனில் இயற்கை வளங்களை கட்டுப்பாடில்லாமல் முதலாளித்துவம் கொள்ளையடிப்பதே தற்போதைய பேரழிவு நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழுவின் (ஐபிசிசி) ஆகஸ்ட் 2021 இல் தனது (ஆறாவது) மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது பருவநிலை நெருக்கடிக்கு வழிவகுக்கும், வளிமண்டல பசுமை இல்ல வாயு (ஜிஹெச்ஜி) வின் அதிகரித்த செறிவுகள் ‘நிச்சயமான முறையில் மனித நடவடிக்கைகளால் ஏற்படுகிறது’ என்று முதன் முறையாகக் கூறியுள்ளது. தொழில்துறை சகாப்தத்தைவிட உலக சராசரி வெப்பநிலை ஏற்கனவே 1.1 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. எனவே, கிளாஸ்கோவில் நடைபெற்ற ஊடீஞ26 இல் நிர்ணயிக்கப்பட்ட 1.5ஊ என்ற உலகளாவிய இலக்கை அடைய மிகக் குறைந்த அளவு மட்டுமே மீதம் உள்ளது. இதனால், அச்சமூட்டும் வகையில் உலகம் அதிக வெப்பநிலை உயர்வை நோக்கி செல்கிறது.

1.60    புவி வெப்பமடைதலின் தற்போதைய நிலைகளில் கூட, கடுமையான பருவநிலை தாக்கங்கள் இந்த ஆண்டு உலகம் முழுவதும் காணப்படுகின்றன. குறிப்பாக பூமிக்கோளத்தின் வடபகுதியில், 1.5 செல்சியஸ் அல்லது 2 செல்சியஸ் வெப்பநிலை உயருமானால் நம் முன்னால் காத்திருக்கும் பயங்கரங்களை வெளிப்படுத்துவதாகவும் இது அமைகிறது. 2021 கோடைக் காலத்தில் வெளிப்பட்ட மிக மோசமான பருவநிலை நிகழ்வுகள் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பருவநிலை தாக்கம் என்பது மையப் பகுதியில் உள்ள வளரும் நாடுகளை மட்டுமே பாதிக்கும் என அவர்கள் வழக்கமாக கருதி வந்துள்ளனர். இந்தியாவும் கூட இந்த ஆண்டில் மிக அதிகமான மழைப் பொழிவு, அதன் விளைவாக, நிலச் சரிவு, மண் சரிவு, வெள்ளம், நகர்ப்புறங்களை வெள்ளம் சூழ்தல் ஆகிய நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

1.61    எனினும், பருவநிலை நெருக்கடியின் ஈர்ப்பு விசையின் இந்த கூர்மையான நினைவூட்டல்கள் கிளாஸ் கோவில் நடைபெற்ற ஊடீஞ 26 இல் எந்தவித கணிசமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 2030இல் 50 சதவீதம் குறைய வேண்டிய உலகளாவிய உமிழ்வுகள், உண்மையில் 16 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையை எதிர்கொள்வதற்குப் பதிலாக, அமெரிக்கா தனது இலக்குகளை மாற்றிக் கொண்டு, 2050க்குள் ‘நிகரபூஜ்ஜிய’ உமிழ்வை, அதாவது காடுகள் மற்றும் பெருங்கடல்கள் போன்ற மூழ்கிகளால் உறிஞ்சப்படுவதற்கு சமமாக இருக்கும் வகையில், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் உள்ள அனைத்து நாடுகளும் அதற்கு உறுதியளிக்க வேண்டும் என ஆக்ரோஷமாக அழுத்தம் கொடுத்தது. பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இந்த  நிச்சயமற்ற நீண்டகால இலக்கில் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்துகிறது. முக்கியமாக 2030 இலக்குகளில் இருந்து திசை திருப்ப அது பயன்படுகிறது. மேலும் பொதுவான, ஆனால் இது பல்வேறு வகைப்பட்ட பொறுப்பின் (ஊடீஆஆடீசூ க்ஷருகூ னுஐகுகுநுசுநுசூகூஐஹகூநு சுநுளுடீசூளுஐக்ஷஐடுஐகூலு) அடிப்படையிலான சமபங்கு கொள்கையை மீண்டும் ஒருமுறை வலுவிழக்கச் செய்தது.

1.62    ஊடீஞ26 உச்சி மாநாட்டின் அதிருப்தி தரத்தக்க விளைவுகளை அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் வேறுவழிகளிலும் கூட உறுதிப்படுத்தின. 12 ஆண்டுகளுக்கு முன்னால் கோபன் ஹேகனின் நடைபெற்ற மாநாட்டில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக் கூடிய நாடுகளுக்கு உதவி செய்ய வளர்ச்சியடைந்த நாடுகள் ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்களை வழங்கும் என்று உறுதியளித்து பீற்றிக் கொண்ட விஷயம் மிகச் சர்வ சாதாரணமாக மேலும் மூன்று ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடப்பட்டது. பருவநிலை மாற்றத்திற்கான நிதியுதவி செய்யும் பணியை தனியார் துறையை நோக்கி நகர்த்த அமெரிக்காவும் இதர வளர்ச்சியடைந்த நாடுகளும் முயற்சிக்கின்றன. நிலக்கரியை மெதுவாக பயன்பாட்டிலிருந்து அகற்ற வேண்டும்  என்று இந்த உச்சிமாநாட்டில் பெரிதாகக் குரலெழுப்பினார்கள். ஆனால், அதே நேரத்தில் ‘செயல்திறனற்ற மானியத்தை’ கைவிடுவது என்ற மேலோட்டமான கருத்தைத் தவிர பெட்ரோலியம் உபயோகத்i iவிடுவது குறித்து அவை அமைதியாக இருந்தன. கரியமில வாயு உமிழ்வை குறைக்கும் சுமையை மேலும் அதிகமான அளவில் வளரும் நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நெருக்கடியைத் தரும் அதே நேரத்தில் கரியமிலவாயு இல்லாத ஒரு பொருளாதாரத்திற்கு மாறிச் செல்வதற்கு தங்களுக்குத் தேவையான கால அவகாசத்தை எடுத்துக் கொள்ள அமெரிக்காவின் தலைமையிலான முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் செய்யும் முயற்சிகளே இவை என்பதும் வெளிப்படையாகவே தெரிந்தது. 

1.63     உலகளாவிய வெப்பமயமாதலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தி சக்திகளின் நெருக்கடி, உலகளாவிய தெற்கில் உள்ள பல நூற்றுக்கணக்கான கோடி மக்களின் நல்வாழ்வுக்கு ஆபத்தாக இருக்கக்கூடாது எனில், இந்த நெருக்கடி சமபங்கு அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும். ஊடீஞ26 மாநாடு உலகளாவிய சமபங்குக்கான இந்த போராட்டத்தின் தீவிரத்தை குறிக்கிறது. இது நீண்ட காலத்திற்கு நீட்டித்து இழுத்துச் செல்லப்படும்.

சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு

1.64     வலதுசாரி மாற்றம், பிற்போக்கு சித்தாந்தங்கள் மற்றும் இன-தேசியவாதங்களின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட், இடது மற்றும் முற்போக்கு சக்திகளின் பெருகிவரும் ஒத்துழைப்பினை கோருகின்றன. கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் வழக்கமான கூட்டங்கள் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளவும், முக்கிய சமூக-பொருளாதார சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய பொதுவான புரிதலை உருவாக்கவும் வாய்ப்பளித்தன. எனினும், குறிப்பாக ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சூழ்நிலை, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள்மீது மேலும் தாக்குதல்களை அதிகரிக்க கோவிட் தொற்றுநோய் பயன்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றை நோக்கும்போது இந்த ஒத்துழைப்பு மிக்க, கூட்டுமுயற்சிகள் மேலும் முடுக்கிவிடப் பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒற்றுமையை வலுப்படுத்துக

1.65     அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பாஜக அரசு மோசமான முறையில் சரணடைந்துள்ளதை அனைத்து வகையிலும் வெளிப்படுத்தி மக்களிடையே உயிர்த்துடிப்பானதொரு பிரச்சாரத்தை மேற்கொள்வதோடு, பாஜக அரசுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கட்சி மக்களை அணிதிரட்டும். 

1.66     உலகளாவிய அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், தெற்கு ஆசிய பகுதியில் அதன் யுத்த தந்திர ரீதியான நலன்களை தீவிரமாக முன்னெடுக்க அது செய்யும் தலையீடுகளை எதிர்த்தும் ஆன போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி வலுப்படுத்தும். 

1.67        இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீனிய நிலங்களை சட்டவிரோத கைக்கொள்ளுதல்  ஆகியவற்றுக்கு எதிரான பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு சிபிஐ(எம்) தனது முழுமையான ஒற்றுமையையும் ஆதரவையும் மீண்டும் வலியுறுத்துகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபை பல தீர்மானங்கள் மூலம் அறிவித்த, கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்ட, பாலஸ்தீனியர்களின் தாயகம் மீதான உரிமை செயல்படுத்தப்பட வேண்டும்.

1.68     தற்போதைய பாஜக அரசு முன்னெடுத்துச் செல்லும் அமெரிக்க-இஸ்ரேல்-இந்தியா கூட்டணி வளர்ச்சி பெற்று வருவதை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

1.69     சீனா, வியட்நாம், கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு, கியூபா மற்றும் லாவோஸ் ஆகிய அனைத்து சோசலிச நாடுகளுடனான தனது ஒறுமைப்பாட்டு உணர்வை மார்க்சிஸ்ட் கட்சி வெளிப்படுத்திக் கொள்கிறது. அந்தந்த நாடுகளில் சோசலிசத்தை வலுப்படுத்தும் அவர்களின் முயற்சிகளையும் அது முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களுக்கு எதிரான ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை முறியடிப்பதில் அவர்களுடன் தனது ஆதரவு உணர்வையும் முன்நிறுத்துகிறது.

1.70     லத்தீன் அமெரிக்காவில், குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி வரும் வெனிசுவேலாவில், நிகழ்ந்து வரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுடன் தனது ஒருமைப்பாட்டு உணர்வை மார்க்சிஸ்ட் கட்சி வெளிப்படுத்திக் கொள்கிறது. 

1.71     அரசு ஆதரவு பெற்றதாக இருப்பினும் சரி, தனிப்பட்ட குழுக்களின் ஆதரவைப் பெற்றதாக இருந்தாலும் சரி, பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வகைகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து உறுதியாக எதிர்க்கும்.

1.72      புதிய பாசிச சக்திகள், அடிப்படைவாதம், மதவெறி, இனவெறி, பழமைவாதம் மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக போராடும் அனைத்து சக்திகளுடனும் மார்க்சிஸ்ட் கட்சி தனது ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்திக் கொள்கிறது.

1.73    உலகெங்கிலும் உள்ள இடதுசாரி புரட்சிகர இயக்கங்களுடனான தனது உறவுகளை மார்க்சிஸ்ட் கட்சி வலுப்படுத்திக் கொள்ளும்.

1.74    உலகளாவிய அளவில், ஏகாதிபத்தியத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிராகவும், புதிய தாராளமயத்திற்கு எதிராகவும், உலகச் சுற்றுச்சூழலின் ஆபத்தான சீரழிவுக்கு எதிராகவும், உலகளாவிய பருவநிலை தொடர்பான நீதிக்காக நடைபெறும் அனைத்து வகையான போராட்டங்களோடும் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும்.

1.75     உலகெங்கிலும் அனைத்து வகையிலுமான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதற்கும், பல்வேறு மக்கள் போராட்டங்களை ஒன்றிணைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் தனது பங்களிப்பைச் செலுத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி முயற்சி செய்யும்.

தேசிய நிலைமைகள்

2.1     அப்போது நிலவிய தேசிய அளவிலான அரசியல் சூழ்நிலை குறித்து 22வது காங்கிரஸின் அரசியல் தீர்மானம் கீழ்க்கண்டவாறு மதிப்பீடு செய்திருந்தது:

    “நான்காண்டு கால மோடி அரசு ஒரு வலதுசாரி- எதேச்சாதிகார- வகுப்புவாத ஆட்சிக்கு வழிவகுத்துள்ளது. உழைக்கும் மக்களின் மீது முழுமையானதொரு தாக்குதலுக்கு வழிவகுக்கும் நவதாராளவாத கொள்கைகளை மிகத் தீவிரமாகப் பின்பற்றுவது; அரசின் மதசார்பற்ற, ஜனநாயகக் கட்டமைப்பினை அச்சுறுத்துகின்ற, அதேநேரத்தில் சிறுபான்மையினர், தலித்துகள்  மீதான தாக்குதல்களை நிகழ்த்துகின்ற ஆர்.எஸ்.எஸ். இன்  இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அமலாக்க திட்டமிட்ட முயற்சிகளை செய்வது; கீழ்ப்படிதலுள்ள ஒரு கூட்டாளியாகச் செயல்பட்டு அமெரிக்கா உடனான கேந்திரக் கூட்டணியை வலுப்படுத்துவது; நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை முடக்குவதன் மூலமும், அரசியல் சாசன அமைப்புகளை, கைப்பாவையாக பயன்படுத்துவது ஜனநாயக உரிமைகளைப் பலவீனப்படுத்துவதன் மூலமும் எதேச்சாதிகார கட்டமைப்பினை உருவாக்குவது ஆகிய தன்மைகளை கொண்டதாக இந்த ஆட்சி விளங்குகிறது.”  (பாரா 2.1)

2.2     அப்போதிலிருந்தே மேற்கூறிய வலதுசாரி தாக்குதல் தீவிரமாகி வந்திருக்கிறது. எனினும் அதிகமான நாடாளுமன்ற இடங்கள், வாக்கு விகிதத்துடன் மீண்டும் மோடி ஆட்சிக்குத் திரும்பி வந்ததும், பாசிஸ ஆர்.எஸ்.எஸ்-ன் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியது. இவ்வாறு நடந்தேறி வரும் நிகழ்ச்சிகள் குறிப்பாக 2019க்கு பிந்தைய போக்குகள் நமது கட்சித் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வகையிலேயே அமைந்து வருகிறது.

    “பாரதிய ஜனதா கட்சி என்பது பிரிவினைவாத, வகுப்புவாத மேடையை கொண்ட ஒரு பிற்போக்கு கட்சியாகும். அதன் பிற்போக்கான உள்ளடக்கம் என்பது மற்ற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு, சகிப்புத்தன்மையின்மை, அதிதீவிர தேசியவாத வெறித்தனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆனதாகும்.பாஜக என்பது சாதாரணமானதொரு முதலாளித்துவ கட்சி அல்ல. பாசிஸ தன்மை கொண்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் அதை வழிநடத்துவதோடு, மேலாதிக்கமும் செய்கிறது.பாஜக ஆட்சியில் இருக்கும்போது, அரசு அதிகாரம் மற்றும் அரசு இயந்திரம் ஆகியவற்றின் கருவிகளை ஆர்.எஸ்.எஸ்-ஆல் எளிதாக கையாள முடிகிறது. இந்துத்துவ சித்தாந்தம் என்பது மீட்சிவாதத்தை முன்னெடுப்பதாக இருப்பதோடு, ஓர் இந்து ராஷ்ட்ராவை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை மறுதலிப்பதாகவும் இருக்கிறது.” (7.14) 

    “’மதச்சார்பற்ற அடித்தளங்களுக்கான அச்சுறுத்தல் என்பது, வகுப்புவாத மற்றும் பாசிசத் தன்மை கொண்ட ஆர்எஸ்எஸ் தலைமையிலான கூட்டணியின் எழுச்சி மற்றும் மத்திய அரசில் அது அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டதன் மூலம் கடுமையான அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது. அரசு அமைப்புகள், நிர்வாகம், கல்வி முறைமை, ஊடகங்கள் ஆகியவற்றை வகுப்புவாத மயமாக்க திட்டமிட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. பெரும்பான்மை வகுப்புவாதத்தின் வளர்ச்சி என்பது சிறுபான்மை வகுப்புவாத சக்திகளை வலுப்படுத்தி தேசிய ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்பதாக அமையும். பாஜக மற்றும் அதன் வகுப்புவாத தளத்திற்கு பெரும் முதலாளித்துவப் பிரிவுகளின் ஆதரவு, நாட்டில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டதாகவும் அமைகிறது.” (5.7)

    “நாட்டின்பொருளாதாரம், அரசியல் மற்றும் நிர்வாக வாழ்க்கையில் மதத்தின் அனைத்து வகையான ஊடுருவலுக்கு எதிராகவும் கட்சி போராட வேண்டும். கலாச்சாரம், கல்வி மற்றும் சமூகத்தில் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்த வேண்டும். மத வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பாசிசப் போக்குகள் வலுப்பெறுவதற்கான அபாயத்தை எதிர்த்து அனைத்து மட்டங்களிலும் உறுதியாகப் போராட வேண்டும்.” (5.8)

2.3    வகுப்புவாத தேசியவாத வெறித்தனத்தைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட ஒரு கதையாடலை உருவாக்குவதில் பாஜக வெற்றி பெற்றது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலையும், அதைத் தொடர்ந்து நடந்த பாலகோட் வான்வழித் தாக்குதலையும் பயன்படுத்தி, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் இருந்தும், அப்போது வளர்ந்து வந்த மக்கள் போராட்டங்களிலிருந்தும் தேர்தல் குறித்த கதையாடலை  மாற்றி எழுதுவதிலும் அது வெற்றி பெற்றது.

2.4     சமூக-இனப் பிளவுகளுக்கு இடையே மேலழுத்துகிற ஒரு ‘இந்து அடையாளத்தை’  குறிப்பிடத்தக்க அளவில் உருவாக்குவதிலும், அடர்ந்த அளவிலுமான நுண்ணிய சாதி சாதிகளின் அடிப்படையிலான அணிதிரட்டல்களையும் இணைத்து கணிசமான அளவில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. பெரும் பணபலமும், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் கட்டுப்பாடும் முடிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தல் பத்திரங்கள் உட்பட பல வழிகளில் குவிக்கப்பட்ட பாஜகவின் பணபலம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு இன்றியமையாத ஒன்றாகத் திகழும் சமநிலையை பறித்து விடுகிறது.

2.5    2019 தேர்தல் முடிவுகள் இந்தியாவில் வலதுசாரி அரசியல் மாற்றம் மேலும் வலுப்பெற்றுள்ளதையும் பாசிச போக்குகள் அதிகரித்து வருவதையும் எடுத்துக்கூறுவதாக அமைந்தன. 

2019க்குப் பிந்தைய பாஜக அரசு

2.6     இரண்டாவது முறையாக பதவியேற்ற உடனேயே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசு கலைத்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகளை ரத்து செய்ததோடு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குப் பதிலாக இரண்டு துணைநிலை மாநிலங்களை உருவாக்கியது. குடியரசுத் தலைவர் ஆட்சியின்கீழ் இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றபோது, அந்த மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இது நாடாளுமன்றத்தில் பாஜக நிகழ்த்திய சூழ்ச்சிகளுக்கு உதவி செய்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இல்லாத நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதிலாக மாநில ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது. 

2.7    இதைத் தொடர்ந்து அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) இயற்றியது. மேலும் அதன் தொடர்ச்சியாக தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) இருக்கும் என்றும் அறிவித்தது. இது குடியுரிமையை மதத்துடன் எவ்வகையிலும் இணைக்காத அரசியல் அமைப்புச் சட்டத்தினை அப்பட்டமாக மீறுவதே ஆகும். மற்ற அனைவருக்கும் விரைவாக குடியுரிமை வழங்குவதை உறுதி செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களை அதிலிருந்து விலக்கி வைக்கிறது. இந்த அப்பட்டமான, அரசியலமைப்புச் சாசனத்திற்கு எதிரான சட்டத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்குகள் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

2.8     இந்திய குடியரசின் தன்மையை மாற்றுவதற்கு திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்கு அடிப்படைத் தூண்கள் – மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூகநீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகியவை தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன.

பலவீனமாக்கப்படும் பொருளாதார இறையாண்மை 

2.9    2019 இல் அரசாங்கம் அமைந்தபிறகு நவ-தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்கள் தீவிர வேகம் பெற்றன. இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை அழிப்பது என்பது வழக்கமான தனியார்மயமாக்கல் மற்றும் கார்ப்பரேட்களுக்கான வரிச்சலுகைகள் ஆகியவற்றை யெல்லாம் தாண்டி பல பரிமாணங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சுயச்சார்பிற்கு அடித்தளமாக விளங்கும் பொதுத்துறை, குறிப்பாக ராணுவ தளவாட உற்பத்தித் துறைகள் ஆகிய அனைத்தும் பலவீனமாக்கப்படுகின்றன.இதன் விளைவாக அபாயகரமான திசையை நோக்கி, சுயசார்பற்ற நிலைக்கு இந்திய பொருளாதாரம் தள்ளப்பட்டு வருகிறது.

2.10    நமது நாட்டின் சொத்துக்கள் மற்றும் பொருளாதாரத்தின் இத்தகைய அழிவும் கொள்ளையடிப்பும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அதேநேரத்தில் பொருளாதாரத்தை நிரந்தரமான மந்தநிலைக்கும் நெருக்கடிக்கும் தள்ளுகிறது.

2.11    பொருளாதார மந்தநிலை: கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாகவே மந்தமாகி கொண்டுவந்த இந்திய பொருளாதாரம் இப்போது பொருளாதார சரிவில் சிக்கிக் கொண்டுள்ளது. 2020-21 நிதியாண்டின் முதல்பாதியில் பொருளாதாரம் 16 சதவீதம் சுருங்கியிருந்தது. இந்த நிதியாண்டின் (2021-22) முதல் பாதியில் வளர்ச்சி சாதகமான வகையில் 14 சதவீதமாக இருந்தது. எனினும் பெருந்தொற்றுக்கு முன்பிருந்த நிலைக்கு அது இன்னும் மீளவில்லை என்பதையே இது குறிக்கிறது. பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-20 முதல்பாதியில் தொகை மதிப்பில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) என்பது ரூ.71,28,238 கோடி ஆக இருந்தது.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2021-22 முதல்பாதியில் இது ரூ. 68,11,471 கோடியாக, அதாவது 4.4 சதவீதம் குறைவாக இருந்தது. 

2.12     இந்திய பொருளாதாரத்தில் ஒன்பது காலாண்டுகளாக வளர்ச்சிவிகிதம் குறைந்துகொண்டே வந்தது. 2017-18 நிதியாண்டின் கடைசி காலாண்டில்  8.2 சதவீதமாக இருந்த வளர்ச்சி 2019-20 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 3.1 சதவீதமாகக் குறைந்திருந்தது. 

2.13     பெருந்தொற்றுக்கு முன்பான வளர்ச்சி சரிவு என்பது நடுத்தர மற்றும் குறுகியகால காரணிகளால் உருவாகியிருந்தது. நடுத்தர கால காரணிகளில் இரண்டு காரணிகள் பளிச்சென்று தெரிகின்றன. இதில் முதலாவது, வளர்ச்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வண்ணம் அரசின் செலவுகளை அதிகரிக்க அரசு விரும்பவில்லை. தனியார் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட அரசின் வரி சீர்திருத்தத்தை உள்ளடக்கிய நவீன தாராளமய நிதிக் கொள்கையானது (குளைஉயட யீடிடiஉல) தேக்கநிலைக்கு அல்லது வரிவருவாயின் சரிவிற்கும்கூட இட்டுச் சென்றது. இருந்தும்கூட, நிதிமூலதனத்தைத் திருப்திப்படுத்துவதற்காக நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் வைக்கப்பட்டது. பலவீனமான, கிட்டத்தட்ட நிதித் தூண்டுதலே இல்லாத நிலைக்கு வழி வகுத்தது.

2.14     இதன்விளைவாக ஏற்பட்ட செலவுக் குறைப்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கீழே சரிவதைத் தூண்டிவிட்டது. 2020-21 முதல்பாதியில் தனியார் இறுதிநுகர்வுச் செலவு என்பது 19 சதவீதம் குறைந்தது. இது 2021-22இல் வெறும் 14 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. 2020-21இல் 28 சதவீதம் சரிந்திருந்த ஒட்டுமொத்த மூலதன உருவாக்கம் அந்த இழப்பை மட்டுமே ஈடுகட்ட முடிந்துள்ளது. இவையனைத்திற்கும் அடிநாதமாக விளங்கும் உண்மை என்னவெனில், 2020-21 முதல் அரையாண்டில் அரசு செலவினம் 6 சதவீதம் குறைந்ததே ஆகும். 2021-22 முதல் அரையாண்டில் இது வெறும் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. 

2.15     2020-21 நிதியாண்டில் பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, சுகாதார வசதிகளுக்கான செலவு அதிகரிக்கப்பட வேண்டும். தொற்று மற்றும் பொதுமுடக்கம் ஆகியவற்றால் நிலைகுலைந்து போனவர்களுக்கு நேரடி பணப்பரிமாற்றம், பொருளாதாரம் மீட்சியடைவதை துரிதப்படுத்தும் வகையில் செயலூக்கம் மிக்க நிதிக் கொள்கை ஆகியவை தேவைப்பட்டு வந்த நேரத்தில் 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் தனது செலவு மறுப்பு கொள்கையை (களைஉயட உடிளேநசஎயவளைஅ) அரசு தொடர்ந்து வந்ததை எடுத்துக் காட்டியது. சாதாரணமான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 14.4 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுவந்த அந்த ஆண்டில் அரசின் ஒட்டுமொத்த செலவு வெறும் 9.5 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. 

2.16    இத்தகைய நடவடிக்கைகளின் சுமை அதிகமாக விவசாயம் மற்றும் ஊரகத்துறைகளுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அடிப்படையான சமூகசேவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான செலவுகள் ஆகியவற்றின் மீது விழுந்தது. வேலைவாய்ப்புத் திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகளுக்கான ஏற்பாடு, உணவுப் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள், கல்வி மற்றும் சுகாதார துறைகள் ஆகிய அனைத்தும் அவற்றுக்கு உறுதியளிக்கப்பட்ட ஒதுக்கீட்டைவிட மிகவும் குறைவான தொகையையே பெற்றன. பெருமளவிலான தனியார்மயம் மற்றும் அரசுப்பங்குகளை விற்பது ஆகிய அரசின் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இதுதான் நிலைமை. இத்தகைய நடவடிக்கைகளால் ஏழைமக்களின் துயரமும் புறக்கணிப்பும் மேலும் மோசமானது. 

2.17    விவசாய நெருக்கடி: இதில் மிகவும் பாதிக்கப்பட்ட துறையாக விவசாயம் இருந்தது. ‘குறைவானஉற்பத்தி’ அல்ல இதற்குக் காரணம். மாறாக, கிராக்கி கட்டுப்படுத்தப்பட்ட நிலை, உற்பத்திச்செலவை ஈடு செய்யாத குறைந்தபட்ச ஆதரவுவிலை, அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையிலும்கூட போதுமான அளவிற்குக் கொள்முதல் செய்யப்படாத நிலை ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவாக விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு மிகக்குறைந்த விலை கிடைத்ததென்பது காரணமாகும். பொருளாதார சீர்திருத்தங்களின் ஒருபகுதியாக உயர்த்தப்பட்ட பயன்பாட்டு கட்டணங்கள், பல்வேறு இடுபொருட்களுக்கான மானியங்களின் குறைப்பு ஆகியவை இத்துறையை தாக்குப்பிடிக்கமுடியாத ஒன்றாக ஆக்கி, கிராமப்புற கடன்சுமை அதிகரிக்கவும், விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கவும் செய்ததோடு, விவசாயிகளின் பரவலான கண்டனப் போராட்டங்கள் நடைபெறவும் வழிவகுத்தன. 

2.18     மக்களின் மீது மேலும் மேலும் அதிகரித்த சுமைகள்: இதனால் பாதிக்கப்பட்டது ஏழைகளுக்கு உதவி செய்வதை நோக்கமாகக் கொண்ட செலவுகளாகும். கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் செலவு திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி 2020-21இல் ரூ.1,10,000 கோடிக்கும் அதிகமாகும். இதற்கான  2019-20 பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 61,500 கோடியாகவும், ஆன செலவு ரூ. 71,687 கோடியாகவும் இருந்தது. சொந்த கிராமங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டு வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நோக்கித் திரும்பினர். இதன் விளைவாக, கோரிக்கை சார்ந்த செயல்திட்டம் என்ற வகையில் இத்திட்டத்திற்கான நிதிஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியதாயிற்று. பெருந்தொற்றின் மோசமான பாதிப்புகள் தொடர்ந்து உணரப்பட்டு வந்தபோதிலும், இத்திட்டத்திற்கென 2021-22 நிதியாண்டில் ஒதுக்கீடு வெறும் ரூ.73,000 கோடியாக மட்டுமே இருந்தது. மதிப்பிட்டதை விட அதிகமான வேலைக்கான தேவை இருக்குமெனில், மேலும் நிதி ஒதுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. 2021 டிசம்பர் மாத தொடக்கத்திலேயே இதற்கென ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டுவிட்டது. இன்னும் சொல்வதெனில், 27க்கும் மேற்பட்ட மாநிலங்கள், துணைநிலை மாநிலங்கள் இத்திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் 100 சதவீதத்திற்கும் மேலாகவே பயன்படுத்தியுள்ளன. இருந்தபோதிலும், 2021 டிசம்பரில் கூடுதல்நிதிக்காக மேற்கொள்ளப்பட்ட துணைமானியக் கோரிக்கை இத்திட்டத்திற்கு ரூ. 25,000 கோடியை மட்டுமே கோரியிருந்தது. உண்மையில் இத்திட்டத்திற்குத் தேவைப்பட்ட நிதி என்பது குறைந்த பட்சம் அதைப்போல் இரண்டு மடங்காகும். 

2.19     அச்சுறுத்தி வரும் வேலையின்மை அதிகரிப்பு மற்றும் வறுமை, மிகக் கூர்மையாக விரிவடைந்து கொண்டே போகும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் கூட வளர்ச்சி விகித சரிவிற்கெதிரான அரசின் நடவடிக்கைகள் வருமானம், செல்வம் ஆகியவற்றில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் மோசமாக்கவே உதவின. அரசுக்கு மிகவும் நெருக்கமான மிகப்பெரும் கூட்டுக்களவாணி கார்ப்பரேட் குழுமங்கள் வங்கிகளிலிருந்து பெற்றுத் திருப்பிச் செலுத்தாத பெருமளவிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அந்தத் தொகைகள் வரிசெலுத்துவோரின் பணத்தைக் கொண்டு வங்கிகளுக்கு மீண்டும் மூலதனமாக வழங்கப்பட்டது. இவ்வாறு கடனை திருப்பிச் செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கு பணம் வாரி வழங்கப்படுவது இன்னமும் தொடர்கிறது. மோடிஅரசின் கடந்த ஏழுஆண்டுக்கால ஆட்சியில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து பெற்ற ரூ. 10. 72 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் வராக் கடன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. திவாலான மற்றும் நொடித்துப்போன நிறுவனங்களுக்கான விதிமுறைகளை செயல்படுத்தி வேண்டுமென்றே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் செயல்கள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றன. 

2.20    இதற்கும் மேலாக, 13 வர்த்தக நிறுவனங்கள் வங்கிகளிலிருந்து வாங்கியிருந்த ரூ. 4.5 லட்சம் கோடி அளவிலான வாராக்கடன்கள் மிக அதிகமாக சுமார் 64 சதவீதம் வரை ‘தள்ளுபடி’அளித்து தீர்வு காணப்பட்டன. அதாவது ரூ. 4.5 லட்சம் கோடி கடனுக்குப் பதிலாக வங்கிகளுக்கு ரூ. 1.61 லட்சம் கோடி மட்டுமே கிடைக்கும். இதன்மூலம் வங்கிகள் ரூ. 2.85 லட்சம் கோடி நட்டத்தை எதிர்கொள்ள வேண்டி வந்தது. வங்கியில் வைப்புநிதியாக செலுத்தப்பட்டுள்ள மக்களின் சேமிப்புகள் அரசுக்கு நெருக்கமான கூட்டுக்களவாணி வணிக நிறுவனங்களுக்கு பரிசாக அளிக்கப்பட இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன.

2.21  இதற்கும் மேலாக, இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளும் வாரி வழங்கப்படுகிறது. 2018-19ஆம் ஆண்டில் ரூ. 11.36 லட்சம் கோடியாக இருந்த நிகர நேரடி வரிவசூல், 2019-20 காலத்தில் ரூ. 10.49 லட்சம்கோடியாக, அதாவது சுமார் 8 சதவீதம் குறைவாக, சரிந்துள்ளது. கிராக்கி சரிவால் நிலவுகின்ற மந்த நிலைக்கு மத்தியில் இத்தகைய சரிவு ஏற்பட்டுள்ளதற்கான காரணம் 2019 செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட வரிச்சலுகைகளே ஆகும். 

2.22    ஊக்கத்தொகை அல்லது வரிவிலக்குகளைப் பெறாத உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக பெருமளவில் குறைத்தது இந்த ‘ஊக்கத்திட்டம்’. 2019 அக்டோபர் 1 அல்லது அதற்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களைப் பொறுத்தவரை அவை ஊக்கத்தொகைகள் அல்லது வரிவிலக்குகளை பெறாத பட்சத்தில், அவை செலுத்தும் கார்ப்பரேட் வரி 15 சதவீதம் என ஆக்கப்பட்டது. ஊக்கத்தொகைகள் மற்றும் வரிவிலக்குகளைப் பெற்றுவரும் குறைந்தபட்ச மாற்றுவரி (ஆininஅரஅ ஹடவநசயேவந கூயஒ) பொருந்தக்கூடிய நிறுவனங்கள் செலுத்தும் வரி 18.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. இப்பெரும் சலுகைகளின் விளைவாக நேர்முக வரி வருவாயின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. 

2.23     வகுப்புவாத கார்ப்பரேட் உறவு : மோடி ஆட்சி செலுத்திவரும் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அம்சம் என்பது குறிப்பிட்ட சில பெருமுதலாளி குழுமங்களுக்கும் அரசுக்கும் இடையேயான மிக வெளிப்படையான அதீத நெருக்கம் ஆகும். 

2.24    இதன்விளைவு என்னவெனில், சமூகத்தின் மேல்தட்டில் இருக்கும் ஒரு சிலரிடம் மட்டுமே வருவாய் சென்று சேருவதே ஆகும். ‘த எக்கனாமிஸ்ட்’ வார இதழின் கூற்றுப்படி 2016க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு 350 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலப்பகுதியில் கவுதம் அதானியின் நிகர சொத்துமதிப்பு 750 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020-21ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் நிகர சொத்துமதிப்பு ரூ.7.18 லட்சம் கோடி; கவுதம்அதானியின் நிகர சொத்துமதிப்பு ரூ. 5.06 லட்சம் கோடி. மேலும் சில பெரும் பணக்காரர்கள் மற்றும் குடும்பங்களின் சொத்துக்களும் மிக வேகமாக அதிகரித்துள்ளன. ‘ஆக்ஸ்ஃபாம் இந்தியா’ அறிக்கையின்படி இந்தியாவில் மேல்தட்டில் உள்ள பத்துநபர்கள் மட்டுமே (வாளை கபைரசந hயள வடி நெ உhநஉமநன – ளை வை 10 ரூ டிச 10 யீநசளடிளே?) நாட்டின் சொத்தில் 57 சதவீதத்தை வைத்துள்ளனர். கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதம் பேரிடம் வெறும் 13 சதவீதம் மட்டுமே உள்ளது. 

2.25    கொள்ளையடிக்கப்படும் நாட்டின் சொத்துக்கள்: ஒன்றிய அரசு மேற்கொள்ளும் குறைந்தபட்ச செலவுகளும் கூட அரசின் சொத்துக்களை விற்பதன் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. அரசின் புதிய முதலீடு என்பது இரண்டு வழிகளில் பெருமளவு செய்யப்படுகிறது: பொதுத்துறையிலுள்ள அரசின் பங்குகளை விற்பனை செய்வது; பொதுச்சொத்துக்களை பணமாக்குவது அல்லது விற்பது. அரசின் வருவாயை பெருக்குவதற்கு பொதுச்சொத்துக்களை விற்பதையே பெரிதும் நம்பியிருப்பது என்பது அரசுக்கு நெருங்கிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெருமதிப்புடைய பொதுச்சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்பதற்கான ஒருவழியாக மாறியுள்ளது. 2021-22 நிதியாண்டில் அரசுப்பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 1,75,000 கோடியை திரட்டுவது என்ற பட்ஜெட் அறிவிப்பின் மூலம் ஒரு சில மிகச்சிறந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும்  பொதுத்துறை நிதிநிறுவனங்கள் விற்பனை செய்யப்பட தயாராக உள்ளன. இதில் மூன்று அம்சங்கள் உள்ளன: அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பது; கேந்திரமான விற்பனை; மற்றும் பொதுத்துறையில் உள்ள நிதித்துறையினை தனியார் மயமாக்குவது. பொதுத்துறை வங்கிகள், பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் (ஜிஐசி) ஆகியவை தனியார் மயமாக்கப்படவுள்ள அதே நேரத்தில் எல்.ஐ.சி-யில் உள்ள பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இவற்றோடு கூடவே சொத்துக்களிலிருந்து “பணமாக்கல்” என்ற முயற்சியும் சேர்ந்துள்ளது. தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் ரூ.6 லட்சம் கோடி மதிப்புள்ள நிலம், ரயில்வே இருப்புப்பாதைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் வழிகள் மற்றும் இதர பொதுத்துறை சொத்துக்கள் ஆகியவற்றை விற்க திட்டமிடப்பட்டுள்ளதே தவிர,  மூலதனச் செலவுகளுக்காக வரிவிதிப்பின் மூலம் நிதியாதாரங்களை திரட்ட முயற்சி செய்யப்படவில்லை. 

2.26         எனவே, இந்தப் பொருளாதார மந்தநிலை என்பது மோடிஅரசு மிகத்தீவிரமாகப் பின்பற்றிவரும் நவதாராளமயக் கொள்கையின் விளைவே ஆகும். பெருந்தொற்று, பொதுமுடக்கம் ஆகியவற்றின் தாக்கங்கள் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன. 

கொடூரமாகக் கையாண்ட கொரோனா பெருந்தொற்று

2.27    கொரோனா பெருந்தொற்றை மோடி அரசாங்கம் மிக மோசமாகக் கையாண்டது. அதன் தவறான, அறிவியலற்ற அணுகுமுறையும் மக்களிடையே துன்பங்கள் மற்றும் உயிரிழப்புகள் மோசமாக அதிகரிக்க வழிவகுத்தன. மார்ச் 2020 இல் அவசர அவசரமான, முன்கூட்டித் திட்டமிடப்படாத மொத்த நாட்டு முடக்கம் பொருளாதார வாழ்க்கையை சீர்குலைத்தது. மேலும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து தங்கள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தடுப்பூசி கொள்முதல் மற்றும் பெரிய அளவிலான தடுப்பூசி உற்பத்திக்குத் தயாராகவும் அரசு தவறியது. இது தடுப்பூசி பற்றாக்குறைக்கு வழிவகுத்தது; மேலும் தடுப்பூசிகளை தயாரிக்க பொதுத்துறை மருந்து நிறுவனங்களைப் பயன்படுத்தவும் மறுத்தது. இது ஜனவரி 2021 இல் கொரோனா வைரஸூக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டோம் என பொய்யாக அறிவித்தது. மேலும் மார்ச் 2021 இல் தொடங்கிய இரண்டாவது அலைக்கு நாட்டை பாதுகாப்பற்றதாக ஆக்கியது. இதன் விளைவாக ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை பற்றாக்குறையினால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அவற்றில் பல பதிவு செய்யப்படவில்லை. கங்கையில் மிதக்கும் சடலங்களின் கோரமான காட்சிகள், மோடி அரசாங்கம் தொற்றுநோயை மொத்தத்தில் தவறாகக் கையாண்டதன் சாட்சியாக அமைந்தன.

2.28        மோடி அரசாங்கம் மக்களை ஆதரிக்க பண மானியங்களை வழங்குவதற்குப் பிடிவாதமாக மறுத்தது. மேலும் அது அறிவித்த நிதி ஊக்குவிப்பு என்பது ஜி-20 நாடுகளிலேயே மிகவும் குறைவானதாகவும், அற்ப அரசாங்க செலவின அதிகரிப்பைக் கொண்டதாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, இந்தப் பொது சுகாதார அவசர நிலை காலத்தில் பாஜக அரசாங்கம் தனது மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற அணுகுமுறையை மக்களிடையே வெளிப்படுத்தியது.

மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்நிலைகளின் மீதான தாக்குதல்கள்

2.29         பெருந்தொற்று பரவுதற்கு நீண்ட காலத்திற்கு முன்பாகவே மக்களின் வாழ்நிலைகளின் மீதான தாக்குதல்கள் தொடங்கியிருந்தன. இந்தத் தாக்குதல்களை மேலும் தீவிரமாக்க இந்தப் பெருந்தொற்று நிலைமை பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. அப்போதிலிருந்து இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

2.30         அதிகரித்து வரும் வறுமை :  மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்தியா தனது ஏழை மக்களைப் பொருட்படுத்தியதே இல்லை. இந்தியாவிலுள்ள ஏழைகளின் எண்ணிக்கை, அதாவது வாங்கும் சக்திக்கான ஒப்பீட்டின்படி (நாளொன்றுக்கு 2 டாலர், சுமார் 150 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான வருவாய் உள்ளவர்கள்) பெருந்தொற்றின் விளைவாக ஏற்பட்ட மந்தநிலையினால் ஒரே ஆண்டில் 6 கோடியிலிருந்து 13.4 கோடியாக, கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என உலக வங்கியின் தரவுகளைப் பயன்படுத்தி “ப்யூ” (ஊஞநுறு) ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது 45 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பெருமளவிலான வறுமை நிறைந்த நாடு’ என்று குறிப்பிடத்தக்க ஒரு நிலைக்கு இந்தியா மீண்டும் திரும்பிச் சென்றுள்ளது என்பதே இதன் பொருளாகும்.

2.31    2021ஆம் ஆண்டு இறுதிவாக்கில் மேலும் கூடுதலாக 15கோடி முதல் 19.9 கோடி பேர் வரை வறுமையில் வீழ்ந்திருப்பார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. பெருந்தொற்றுக் காலத்தின்போது உலகளாவிய அளவில் அதிகரித்த வறுமையில் கிட்டத்தட்ட 60 சதவீதம் இந்தியாவில்தான் நிகழ்ந்துள்ளது. நிதி ஆயோக்கின் வறுமை குறித்த பல்வகைப்பட்ட குறியீட்டு அறிக்கையில் பீகார் மாநில மக்கள் தொகையில் 51.91 சதவீதம் பேர் ஏழைகள் என வகைப்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் (42.16 சதவீதம்), உத்தரப் பிரதேசம் (37.79 சதவீதம்), மத்தியப் பிரதேசம் (36.65 சதவீதம்) மற்றும் மேகாலயா-அசாம் ஆகிய இரு மாநிலங்களும் (32.67 சதவீதம்) ஆகியவை வருகின்றன. 

2.32         அதிகரித்து வரும் வேலையின்மை :  2021 நவம்பர் ஒரே மாதத்தில் மட்டுமே மாத வருமானம் பெற்று வந்தவர்களில் 68 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். நகர்ப்புற இந்தியாவில் 9 கோடிப் பேர் வேலையற்றவர்களாக உள்ளனர். நகர்ப்புற இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 23 சதவீதம் பேர் வேலையற்றவர்களாக உள்ளனர். 

2.33     2013ஆம் ஆண்டில் வேலையில் உள்ள மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 44 கோடியாக இருந்தது. 2016ஆம் ஆண்டில் இது 41 கோடியாகக் குறைந்தது. இது 2017ஆம் ஆண்டில் 40 கோடியாகவும், 2021இல் 38 கோடியாகவும் மேலும் சுருங்கியுள்ளது. எனினும் இதே காலப் பகுதியில் மக்கள் தொகையில் வேலைசெய்யும் வயதுடையவர்களின் எண்ணிக்கை 79 கோடியிலிருந்து 106 கோடியாக உயர்ந்துள்ளது. வேலையைக் கண்டறிய முடியாத நிலையில் கோடிக்கணக்கான மக்கள் வேலை தேடுவதை நிறுத்திவிட்டு, உயிர்பிழைத்திருப்பதற்காக கிராமப்புற இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளனர். பொது முடக்கத்தாலும், ஆலை/தொழில் மூடல்களாலும் திரும்பியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தொற்றுக்கு முன்பு 43 சதவீதமாக இருந்த உழைப்பு சக்தி பங்கேற்பு விகிதம் 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. உழைப்புப் படையில் உள்ள பெண்களின் விகிதம் 2013இல் 36 சதவீதமாக இருந்தது. இது 2018இல் 23 சதவீதமாகக் குறைந்துள்ளது என ஐ.நா. வளர்ச்சி மற்றும் திட்ட அமைப்பின் அறிக்கை (ருசூனுஞ) ஒன்று தெரிவிக்கிறது. 2019இல் இது 18 சதவீதமாக மேலும் குறைந்து 2021 பிப்ரவரியில் 9.24 சதவீதம் மட்டுமேயாக சரிந்துள்ளது.

2.34  அதிகரித்து வரும் பட்டினி: 2021ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பட்டினி குறியீட்டில்  மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு அதன் தரவரிசை 94ஆக இருந்தது. “மிக மோசமான அளவில் பட்டினியை கொண்ட நாடாக” இந்தியா இப்போது வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் அடங்கியுள்ள நாடுகளிலேயே மிக அதிகமான அளவில் (உயரத்திற்கேற்ற எடை இல்லாத) சவலைக் குழந்தைகள் உள்ள நாடாகவும் இந்தத் தரவு எடுத்துக் காட்டுகிறது. நமது குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடும் குழந்தைப் பருவத்திலேயே இறப்பும் அச்சுறுத்தும் வகையில் வளர்ந்து வருகிறது என்பதை நமது குடும்ப சுகாதார ஆய்வு-5 எடுத்துக் காட்டுகிறது. எனினும் மதிய உணவுத் திட்டத்திற்கான பெயரளவிலான ஒதுக்கீடும் கூட 2014க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் 32.3 சதவீதம் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. 2018-19 நிதியாண்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் 44 சதவீதம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. பொது விநியோகத் திட்டத்தில் பயன்பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களில் 40 கோடி பேர் முற்றிலுமாக அத்திட்டத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டுள்ளனர். பொதுவிநியோகத் திட்டம் வேண்டுமென்றே அழிக்கப்பட்டு வருகிறது. 

2.35 முதுகெலும்பை முறிக்கும் விலைவாசி உயர்வு: கொரோனா பெருந்தொற்றுக்காலம் முழுவதிலுமே மக்களின் துயரம் பல மடங்காக அதிகரித்துக் கொண்டேயிருந்த நேரத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கிட்டத்தட்ட தினமும் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருந்தது.  இதுவரை கண்டிராத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ரூ. 100 அளவை எட்டும் வரையில் பெட்ரோலிய பொருட்களின் மீது அரசாங்கம் தொடர்ந்து ஆயத்தீர்வை, மேல்வரி ஆகியவற்றை உயர்த்திக் கொண்டேயிருந்தது. இதன் மூலம் 2018 முதல் 2021 வரையிலான கடந்த மூன்றாண்டுகளில் மட்டுமே ரூ. 8.02 லட்சம் கோடியை ஒன்றிய அரசு ஈட்டியிருக்கிறது என்று ஒன்றிய நிதியமைச்சர் நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார். இறுதியில் பொது மக்களின் அழுத்தத்தின் காரணமாக, 2021 நவம்பரில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் பெயரளவிற்குக் குறைக்கப்பட்டன. இதுவொன்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாது. பெட்ரோலிய பொருட்கள் மீதான சிறப்பு மேல்வரி மற்றும் மேல்வரி ஆகியவற்றை மத்திய அரசு முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதோடு, பெட்ரோலிய பொருட்கள் மீதான ஆயத் தீர்வையையும் திரும்பப் பெற வேண்டும். 

2.36  அதே நேரத்தில், சமையல் எரிவாயு உருளைகளின் விலை மிகப் பெருமளவிற்கு ஒரு உருளைக்கு ரூ.900லிருந்து ரூ.1,000 வரையிலாக உயர்ந்தது. 2021 ஜனவரி முதல் தேதியிலிருந்து மானிய உதவி பெற்ற சமையல் எரிவாயு உருளைகளின் விலை ரூ 205 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சமையல் எரிவாயு உருளைகளுக்கான மானியத்தையும் அரசு நிறுத்தி விட்டது. குழாய்வழி எரிவாயு, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (ஊ.சூ.ழு) ஆகியவற்றின் விலையும் கூட அதிகரிக்கப்பட்டுள்ளது. 

2.37  போக்குவரத்து மற்றும் இதர இடுபொருட்களுக்கான செலவு ஆகியவை உயர்ந்ததன் விளைவாக இது ஒரு பணவீக்கச் சுழற்சியை தூண்டிவிட்டது. 2021 நவம்பரில் கடந்த 30 ஆண்டுகளிலே மிக அதிகமான உயரத்தை மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் தொட்டது. 12 ஆண்டுக்கால சாதனையை எட்டிப் பிடிக்கும் வகையில் உணவு, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு 14.2 சதவீதமாக இருந்தது. 

மதச்சார்பின்மை மீதான தாக்குதல்

2.38     நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதசார்பற்ற குறிக்கோள்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. அயோத்தியில் ராமர் கோவில், காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் கங்கை நதி படித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறப்புப் பாதை கட்டுமானம் தொடர்பான தொடக்க விழாக்கள் அரசு சார்பிலான நிகழ்வுகளாக உலகமுழுவதிலும் உள்ள இந்திய வம்சாவளியினரும் கண்டு களிக்கும் வகையில் தேசிய ஒளிபரப்பாக காண்பிக்கப்பட்டன. எந்தவொரு மதரீதியான செயல்பாட்டிலிருந்தும் அரசு விலகி இருக்க வேண்டும் என்ற குறிக்கோள் முற்றிலுமாக காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மோடி அரசு ஒரு இந்துத்துவ அரசை நோக்கி இந்தியாவை நகர்த்தி வருகிறது என்ற அதிகரித்து வரும் யதார்த்தத்தின் அறிகுறியாகவும் இவை அமைகின்றன. 

2.39     முஸ்லீம் சிறுபான்மை இனத்தவரை இலக்காகக் கொண்டு வெறுப்பு மற்றும் வன்முறை நிரம்பிய விஷமத்தனமான பிரச்சாரங்கள் பாஜக தலைமையிலான மாநில அரசுகளின் ஆதரவின் கீழ் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. வகுப்புவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ஆயுதம் தாங்கிய கும்பல்களுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. 2020 பிப்ரவரியில் டெல்லியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வகுப்புவாத வன்முறை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலே ஆகும். இந்த வன்முறையை நிகழ்த்தியவர்களுக்கு எதிராகவோ அல்லது வெறியூட்டும் உரைகளை நிகழ்த்திய ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராகவோ எந்தவித சட்டபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, அவர்களில் பலரும் குற்றவாளிகளாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஹரித்துவாரில் நடந்த தர்ம சன்சாத் என்றழைக்கப்பட்ட சாமியார்களின் கூட்டம் முஸ்லீம்கள் மீது மிகப்பெருமளவிலான இனஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று அதிர்ச்சியூட்டத்தக்க வகையில் அறைகூவல் விடுத்தது. 

2.40    பாஜக தலைமையிலான மாநில அரசுகள் வகுப்புவாத ஒருமுனைப்படுத்தலை மேலும் கூர்மைப்படுத்தும் நோக்கத்தோடு சட்டங்களை இயற்றி வருகின்றன. கால்நடை வர்த்தகம் மற்றும் மாமிச விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் முஸ்லீம்களை இலக்குவைத்து பசு மற்றும் இதர கால்நடைகளை கொல்வதற்கு முழுமையான தடை விதித்து தொடர்ச்சியாக பல சட்டங்களையும் பாஜக தலைமையிலான மாநிலங்கள் நிறைவேற்றியுள்ளன. இதைத் தொடர்ந்து மதமாற்றம் மற்றும் லவ் ஜிஹாத் என்று அழைக்கப்படும் காதல் திருமணங்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சமீபத்தில் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன. 

2.41    இந்தச் சட்டங்கள் அனைத்துமே வழக்கமாக சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அப்பாவி மக்களை இலக்காக வைக்கவும், நேரடியாக அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கவோ அல்லது சட்டரீதியாக அவர்களை கைது செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. அற்ப காரணங்களின் பேரில் தேசவிரோத குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. வெறுப்பு மற்றும் வன்முறைக்கான பிரச்சாரம் என்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளதோடு, அதற்கு சட்டபூர்வமான அனுமதியும் பெறப்படுகிறது.  

அதிகரித்து வரும் எதேச்சாதிகாரம்

2.42     ஜனநாயக உரிமைகளும் மனித உரிமைகளும்: முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாமலும் கூட நூற்றுக் கணக்கானோரை சிறையில் அடைத்து வைக்க உபா (ருஹஞஹ) சட்டம், தேசத்துரோக சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் போன்றவை கண்மூடித்தனமாக பயன்படுத்தப் படுகின்றன. குறிப்பாக குறிவைக்கப்படும் சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமின்றி, (அரசுடன் ஒத்துப் போகாத அல்லது அதற்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற) பத்திரிக்கையாளர்கள் மற்றும் மற்றவர்களுக்கு எதிராகவும் இந்தக் கொடூரமான சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கருத்து வேறுபாடு என்பதும் கூட தேசவிரோத செயலாகக் கருதப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான செயல்பாட்டாளர்கள், குறிப்பாக இளைஞர்கள், டெல்லி வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு தங்கள் கருத்தொற்றுமையை வெளிப்படுத்தியவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் மீதும் கடுமையான சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட பீமா-கோரேகான் வழக்கில் 16 அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். அருட்தந்தை ஸ்டான் சுவாமி தடுப்புக் காவலிலேயே இறந்து போனார். மீதமுள்ளவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். 2015 மற்றும் 2019 க்கு இடையில், உபா வழக்குகள் 72 சதவீதம் உயர்ந்தன. எனினும் அதன் மீதான தண்டனை விகிதம் வெறும் 2 சதவீதமாகவே இருந்தது.

2.43  ஒட்டுமொத்தத்தில் எதேச்சாதிகாரம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசியல் சாசனத்தின் உறுதிமொழிகள் வலுவிழக்க செய்யப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. 

கண்காணிக்கும் அரசின் கட்டமைப்பு

2.44     குடிமக்களின் தனியுரிமையில் தொடர்ந்து ஊடுருவும் வகையிலான ஒரு கண்காணிப்பு அரசு கட்டமைப்பினை மோடி அரசு உருவாக்கியுள்ளது. 

2.45 இந்தியாவில் தற்போதுள்ள டிஜிட்டல் முறையிலான கண்காணிப்பு கட்டமைப்பின் மூலம் சட்டம்-ஒழுங்கை அமல்படுத்தும் அமைப்புகள் நமது டிஜிட்டல் தரவுகளை அணுக முடியும். இக்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு கண்காணிப்பிற்கான மத்திய முறைமை, வலைத்தள போக்குவரத்து ஆய்வு (சூநுகூசுஹ), இணைய தளங்கள் மீதான தேசிய கண்காணிப்பு கட்டம் (சூஹகூழுசுஐனு)  மறுறமு டி.என்.ஏ, முக அமைப்பு அறிதல், கைவிரல், அடையாள தரவுகளைக் கொண்ட ஒருங்கிணைந்த தண்டனையியல் நீதி முறைமை (ஐஊதுளு) ஆகியன அடங்கும்.

2.46    வருமானவரி படிவம் தாக்கல் செய்தல், ஆதார் போன்ற டிஜிட்டல் அடையாளங்களுடன் இணைக்கப்பட்ட ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் வழங்குதல் போன்ற சேவைகளுக்காக பல்வேறு செயலிகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களின் தரவுகளை அரசாங்கம் சேகரித்து வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகள் சட்டபூர்வமானவையா? தேவைப்படும் அளவிற்கு மட்டுமானவையா? தவறாகப் பயன்படுத்தப்படமாட்டாதா? என்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றியே செய்யப்படுகின்றன. அதற்கு மாறாக, இவ்வாறு அரசினால் சேகரிக்கப்படும் தரவுகளை தனியார்கள் அணுகவும், தங்களது வர்த்தக நோக்கங்களுக்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் அரசு திட்டமிடுகிறது. இத்தகைய டிஜிட்டல் மேடைகள் மற்றும் செயலிகள் மூலம் திரட்டப்படும் தரவுகளோடு தற்போதுள்ள டிஜிட்டல் வகைப்பட்ட கண்காணிப்பு கட்டமைப்போடு இணைப்பது என்பது தனிநபரின் தனியுரிமைக்கும் குடிமை உரிமைகளுக்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாகவே இருக்கும். தனிநபரின் தனியுரிமையை அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தபோதிலும், கூட்டு நாடாளுமன்றக் குழுவினால் ஆய்வு செய்யப்பட்ட 2019ஆம் ஆண்டின் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவின் வரைவுத் திட்டம் சட்டவிரோதமான கண்காணிப்பு மற்றும் தரவுகளை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றிலிருந்து குடிமக்களை பாதுகாப்பதாக அமையவில்லை. அரசின் அதீதமான நடவடிக்கைகளிலிருந்து குடிமக்களை பாதுகாக்க சட்டபூர்வமான ஒரு கட்டமைப்பு குறித்து வலியுறுத்தியிருந்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையினை பொருட்படுத்தாமல், இந்த மசோதா அரசு அமைப்புகளுக்கு இந்தச் சட்டத்தின் விதிமுறைகளிலிருந்து முற்றிலுமாக விதிவிலக்கு அளிப்பதோடு, அவற்றுக்கு விரிவான அதிகாரங்களையும் வழங்குகிறது. 

2.47     ஒட்டுகேட்கும் மென்பொருளான பெகாசஸை பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளதன் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தனியுரிமை ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் இப்போது வெளிச்சமாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோரின் கைபேசிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இந்த ஒட்டுகேட்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெகாசஸ் மென்பொருளை வழங்கி வரும் இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ அரசாங்க அமைப்புகளுக்கு மட்டுமே அதை வழங்கி வருவதாக மீண்டும் மீண்டும் தெரிவித்தபோதிலும், பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியதை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ள அரசு மறுத்தே வந்துள்ளது. இந்தியாவில் இந்த பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு குழுவை நியமித்துள்ளது. 

2.48    தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவின் வரைவுத் திட்டம் அரசு அமைப்புகளுக்கு வழங்கியுள்ள விதிவிலக்குகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும் வகையிலான ஒரு கண்காணிப்பு ஆட்சியை நிறுவவே அரசுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும். வரவிருக்கும் நாட்களில் முழுமையானதொரு தனிநபர் தரவு பாதுகாப்பு தனிநபர் உரிமை ஆகியவற்றுக்கான சட்டத்தை உறுதிப்படுத்தவும், சட்டவிரோதமான அரசு கண்காணிப்பிற்கு முடிவு கட்டவுமான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். 

வலுவிழக்கச் செய்யப்படும் கூட்டாட்சி கோட்பாடு

2.49    கல்வி, அரசியல், நிதி, சமூகம், கலாச்சாரம் என அனைத்து தளங்களிலும் கூட்டாட்சி கோட்பாடுகள் மீது முழுமையான தாக்குதல்கள் இடைவிடாது மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதை இந்த ஆண்டுகளில் நம்மால் காண முடிந்தது. 

2.50    ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களின் பங்கு என்பது அனைத்து வகையான அரசியல் அமைப்புச்சட்டரீதியான உரிமைகளை மீறுவதாகவே உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவின் அரசியல் நிகழ்ச்சிநிரலின் நீட்சியாகவே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.  

2.51    அரசியல் அமைப்புச் சட்டம் வகைப்படுத்தியுள்ள மாநில பட்டியல், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான பொதுப்பட்டியல் ஆகியவற்றில் உள்ள விஷயங்கள் மீது சட்டங்கள் இயற்றுவதன் மூலம் ஒன்றிய அரசு தொடர்ந்து மாநில உரிமைகளின் மீது ஆக்ரமிப்பு செய்கிறது. கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. எனினும் மாநில அரசுகளுடன் எந்தவித ஆலோசனையையும் மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசு ஒருதலைப்பட்சமாக தேசிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. மாநிலங்களுடன் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளாமலேயே பிற்போக்குத்தனமான மூன்று விவசாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமப்புற வளர்ச்சியின் கீழ் வரும் ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களும் கூட இவ்வாறே ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டன. கூட்டுறவுத் துறை என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டதாக இருந்தபோதிலும் ஒன்றிய அரசால் கூட்டுறவு அமைச்சகம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பது மாநில உரிமைகள் மீதான அப்பட்டமான அத்துமீறலே ஆகும். 

2.52    கலாச்சாரத் துறையில், மாநில அரசுகளின் சுயாட்சி தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தேசிய மொழிகளுக்கும் சம அந்தஸ்தை மறுக்கும் அதே வேளையில், மத்திய அரசு உள்நோக்கத்தோடு இந்தியை ஊக்குவித்து வருகிறது.

2.53    நிதிசார்ந்த கூட்டாட்சி கோட்பாடு : ஜி.எஸ்.டி அமலாக்கத்தைத் தொடர்ந்து பாஜக ஆட்சியின் கீழ் மாநிலங்களுக்கான நிதிசார்ந்த செயல்தளம் மிகமோசமாக நசுக்கப்பட்டுள்ளது. வரிவிதிக்கும் உரிமையை மாநிலங்கள் இழந்துள்ளது மட்டுமின்றி, ஜிஎஸ்டி யின் செயல்பாடு உயிரோட்டமாக இல்லாத நிலையில் மிகப்பெரும் வருவாய் இழப்பையும் அவை சந்தித்து வருகின்றன. மாநில தேர்தல்களின் கடைசி சுற்றின்போது வருவாயை குறைக்காத வகையில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் கடுமையாகக் குறைக்கப்பட்டன. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தாமதமாக வழங்கப்படுவதோடு, பெரும்பாலும் நிலுவையிலேயே உள்ளது. இந்த இழப்பீடு ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் 2022இல் ஐந்தாண்டு நிறைவடைகிறது. இந்தக் காலப்பகுதியை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. மிகவும் தீவிரமான வருவாய் சீர்குலைவை பல மாநிலங்களும் எதிர்நோக்கி வருகின்றன. 

2.54    இதற்கும் மேலாக, ஒன்றிய அரசால் வசூலிக்கப்படும் மறைமுக வரிகளின் நியாயமான பங்கும் கூட மாநிலங்களுக்கு மறுக்கப்படுகிறது. ஏனெனில், சிறப்பு மேல்வரிகள், மேல்வரி ஆகியவற்றையே ஒன்றிய அரசு பெரிதும் நம்பியுள்ளது. மொத்த வரி வருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளபோதிலும் இருந்தபோதிலும்,  இவ்வாறு பெறப்படும் வருவாய், மொத்த பகிரத்தக்க வரியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது. வரி வருவாயில் ஒரு பங்கை மாநிலங்களுக்கு மறுக்கும் இத்தகைய செயல்முறை ஏற்கத்தக்கதல்ல. 

2.55     திட்டக் குழுவை கலைத்ததைத் தொடர்ந்து பெரும் செலவு பிடிக்கும் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது ஒன்றிய நிதி அமைச்சகத்தின் விருப்பத்தின் அடிப்படையில் ஆனதாக முற்றிலும் ஆகியுள்ளது. முறையான திட்டமிடல், சமத்துவம் இல்லாமை தொடர்பான மோசமான பிரச்சனைகளையும் இது எழுப்புகிறது. கூட்டாட்சி கட்டமைப்பின் அடிப்படையிலான கலந்தாலோசனை ஏதுமின்றி மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் உள்ள விஷயங்கள் குறித்து சுதந்திர வர்த்தக பகுதி போன்ற சர்வதேச ஒப்பந்தங்களிலும் ஒன்றிய அரசு கையெழுத்திடுகிறது. 

2.56    கூட்டாட்சியின் மீதான இத்தகைய தாக்குதல்களை எதிர்க்கவும், மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளோடு பாஜக அல்லாத மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமான கூட்டாட்சியை பாதுகாப்பது என்பது எதேச்சாதிகார மையப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். 

மோசமாகி வரும் பெண்களின் நிலை

2.57    பொருளாதார துயரத்தின் வலியை பெண்கள் எதிர்கொள்கின்றனர். பெண்களில் பெரும்பாலோர் வேலைசெய்துவரும் அணிதிரட்டப்படாத துறையில் வருமானத்திற்கான வாய்ப்புகளை பெருமளவிலான பெண்கள் இழந்துள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புறுதித் திட்டத்திற்கான நிதி வெட்டப்படுவது, குறிப்பாக, இதையே பிழைக்கும் வழியாகக் கொண்டிருக்கும் கிராமப்புறப் பெண்களை பெரிதும் பாதித்துள்ளது. பாலின இடைவெளி குறித்த அட்டவணையில் உலகத்தில் மிக மோசமான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. வேலைவாய்ப்பிற்கான வழிகள் இல்லாத நிலை, அவர்களுக்கு கூலி மற்றும் ஊதியங்களுடன் கூடிய வேலைவாய்ப்பு அவசியம் தேவைப்படுகின்ற ஒரு தருணத்தில், உழைப்புப் படையிலிருந்தே பெண்களை வெளியேற்றுகிறது. இதற்கு மாறாக, வீட்டுவேலை மற்றும் குடும்ப நிறுவனங்களில் வேலை போன்ற ஊதியமற்ற வேலையின் சுமை மிகப் பெருமளவிற்கு அதிகரித்துள்ளது. ஆணாதிக்க சமூக விதிமுறைகளின் காரணமாக வீட்டு நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பினை சுமக்க வேண்டியிருக்கும் பெண்கள் அதிகரித்து வரும் விலைவாசி, தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றின் மீது அதிகரித்து வரும் நுகர்வோர் கட்டணங்கள் ஆகியவற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவதோடு, குடும்பத்தின் பிழைப்பினை உறுதிப்படுத்த தங்களது சொந்தத் தேவைகளையும் வெட்டிக் குறைக்கின்றனர். அதிலும் குறிப்பாக, தனியாக வாழும் பெண்கள் மற்றும் பெண்களே குடும்பத் தலைவர்களாக உள்ள குடும்பங்கள் ஆகிய இப்பிரிவினருக்கு ஒன்றிய அரசின் கொள்கைகளிலிருந்து குறிப்பான உதவி எதுவும் கிடைக்காத நிலையில் இவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. கடனை வாங்கியாவது வீட்டுச் செயல்பாடுகளை தொடர வேண்டும் என்ற நிலையிலுள்ள பெண்கள் தங்களிடம் உள்ள மிகக் குறைவான பொருட்களையும் அடகு வைக்கவும், வாட்டி வதைக்கும் கந்து வட்டிக்காரர்களிடமும், குறு நிதி நிறுவனங்களிடமும் அதிகமான வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிலைக்கும் ஆளாகின்றனர். 

2.58    இக்காலத்தில் பல நேரங்களில் மிகவும் மிருகத்தனமான, அதீதமான கொடுமைகள்  (பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமைகள்) மிகப்பெருமளவிற்கு அதிகரித்துள்ளன. பெருந்தொற்றுக் காலத்திலும் கூட பெண்களுக்கு எதிரான குடும்ப ரீதியான வன்முறையும் அதிகரித்துள்ளது. பல தருணங்களில் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டுவது, அவமானப்படுத்துவது ஆகியவற்றோடு, பாஜக தலைவர்களின் மிகுந்த ஆட்சேபணைக்குரிய அறிக்கைகள் இத்தகைய குற்றங்களை நியாயப் படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவர்களை மிகுந்த அதிர்ச்சிக்கும் ஆளாக்குகின்றன. பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்கள் மிக மோசமான விசாரணை செயல்முறைகள் மற்றும் மிகக் குறைந்த தண்டனை விகிதம் கொண்டவையாக இருப்பதில் இழிபெயர் மிக்கவையாக உள்ளன. மிகுந்த அதிர்ச்சி தரத்தக்க வகையில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கான நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது; அல்லது குறிப்பிட்ட கால அளவிற்குள் அதைப் பயன்படுத்தாது வீணடிக்கப்படுகிறது. 

2.59    பத்தாம்பசலித் தனமான மனுவாத தத்துவங்களை முன்வைக்கின்ற ஆணாதிக்க,  வகுப்புவாத, சாதியவாத செயல்முறைகளை, பெண்களை குடும்ப வேலைகளோடு மட்டுமே அடைத்து வைக்கிற நடைமுறைகளை பாஜக-ஆர்.எஸ்.எஸ் மற்றும் அவற்றோடு இணைந்த அமைப்புகள் தீவிரமாக முன்னெடுக்கின்றன. தங்களது சொந்த உடல் மீதான பெண்களின் உரிமைகளை மறுக்கின்ற கட்டாய மக்கள்தொகை கொள்கைகளை திணிக்க முற்படுகின்ற, பெண்களை பாதுகாக்கின்ற பிரிவு 498ஏ போன்ற மதசார்பற்ற சட்டங்களை வலுவிழக்கச் செய்கின்ற, கவுரவ கொலைகள் என்ற பெயரில் நியாயப்படுத்தும் கலாச்சாரங்களுக்கு ஆதரவளிப்பது ஆகிய கொள்கைகளில் இவை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக இக்காலப்பகுதியில் சிறுபான்iயின மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பெண்களின் சமத்துவத்திற்கான போராட்டம் என்பது பாலின சமத்துவம் தொடர்பான பாஜக ஆர்எஸ்எஸ்-ன் கொள்கை மற்றும் செயல்முறைகளுக்கு எதிரான போராட்டத்தோடு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.  

சமூக நீதியின் மீதான தாக்குதல்கள்

2.60     அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள சமத்துவத்தை நோக்கி நகர்ந்து சென்று, சமூக நீதி என்ற இலக்கை அடைவதற்குப் பதிலாக, சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் மேலும் அதிகமான அநீதிகளுக்கும் பாகுபாடு மிக்க நடைமுறைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். 

2.61    தலித்துகள்: பாஜக தலைமையிலான பல்வேறு அரசுகளும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, மனுவாதி நிகழ்ச்சிநிரலை தீவிரமாகப் பின்பற்றி வருவதன் விளைவாக கடந்த கட்சிக் காங்கிரசுக்குப் பிறகு பட்டியலினத்தவரின் நிலைமை மிக மோசமாகியுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் அவர்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது. பட்டியல் சாதி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு தனது நிதியிலிருந்து மாநிலங்களுக்கு பங்களிப்பது என்ற பொறுப்பிலிருந்து ஒன்றிய அரசு தன்னை விடுவித்துக் கொண்டு விட்டது. பொதுத்துறை தனியார் மயமாக்கல், அரசுத் துறைகளில் புதிதாக வேலைநியமனத்திற்கு தடை ஆகியவை வேலைக்கான வாய்ப்புகளை தடுத்து நிறுத்தியுள்ளன. தனியார் துறையில் இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை கொண்டு வர எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. 

2.62    குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. பட்டியலின பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் கள நிலைமையை எடுத்துக் காட்டுகின்றன. இதற்கு உதாரணமாக,  மிகக் கொடூரமான ஹாத்ராஸ் சம்பவத்தைச் சொல்லலாம். இந்தச் சம்பவத்தை மறைக்கவும், இதில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை நசுக்கவும் தன்னால் ஆன அனைத்தையும் பாஜக அரசு செய்தது. ஒவ்வோர் ஆண்டும் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தபோதிலும், குற்றம் இழைத்தவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விகிதம் உயரவே இல்லை. பட்டியல் சாதி / பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யவும் உரிய திருத்தங்களுடன்  மீண்டும் சட்டமியற்றவும் இந்த அரசை பல்வேறு தலித் அமைப்புகளின்போராட்டங்களும், எதிர்ப்புகளின் மூலமாக கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்ய வேண்டி வந்தது.

2.63    பழங்குடிகள்: இந்து என்ற ஒரே அடையாளத்தின்கீழ் பழங்குடிகளை ஒன்றிணைக்க ஆர் எஸ் எஸ் தனது முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளில் கிறித்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பாஜக அரசுகள் வன உரிமைகள் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்வதோடு, பழங்குடிகளின் நியாயமான உரிமைகளையும் மறுதலிக்கின்றன. வன உரிமைகள் சட்டத்தின்கீழ் பழங்குடிகள் எழுப்பும் கோரிக்கைகள் நியாயமற்ற வகையில் மறுக்கப்படுகின்றன. கிராம சபைகளில் தங்களது கருத்துக்களை வெளியிடுவதற்கான பழங்குடிகளின் உரிமைகளை நீக்குவதன் மூலம் கார்ப்பரேட் சுரண்டலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. வனப் பகுதிகள் வணிக மயமாக்கல், தனியார் மயமாக்கலுக்கு ஆட்படுவதோடு, அதற்கும் மேலாக  ராணுவ மயமாக்கலுக்கும் ஆளாகின்றன. ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வன நிலங்கள் திட்டங்கள் என்ற பெயரில் மடைமாற்றப்படுகின்றன. காடுகளில் கிடைக்கும் கனிம வளங்களை சுரண்ட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தக் கொள்கைகளின் விளைவாக, பழங்குடிகளின் இடப்பெயர்வு அதிவேகமாக அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கான அரசின் எந்த திட்டங்களின் பயனும் பழங்குடி விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை, மேலும் வனப்பகுதியின் சிறு வன விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்குவதற்கான நிதியும் கூட வெட்கப்படத்தக்க  வகையில் போதுமானதாக இல்லை.

2.64    பெருந்தொற்றுக் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் கவலைகளை தீர்ப்பதில் பாஜக அரசின் தோல்வியானது புலம்பெயர் தொழிலாளர்களின் கணிசமான பகுதியினராக இருக்கும் பழங்குடிகளின் மீது பேரழிவுமிக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வியை கற்பதற்கான வசதிகள் ஏதுமில்லை. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசைத் தவிர, வேறு எந்தவொரு அரசும் பழங்குடி மாணவர்களின் கல்விக்கான சட்டபூர்வமான உரிமையைப் பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை முறையாக வழங்குவதை உறுதிப்படுத்தவும் ஒன்றிய அரசு தவறியுள்ளது. நவதாராள வாதக் கொள்கைகளின் விளைவாக படித்த பழங்குடி இளைஞர்களுக்கு வேலைக்கான வாய்ப்புகள் மறுக்கபப்டுகின்றன. பாகுபாடான செயல்முறைகளின் விளைவாக அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு காலியிடங்கள் நிரப்பப்படுவதில்லை; பதவி உயர்வுகளும் மறுக்கப்படுகின்றன. 

2.65      இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்: தனது அரசியல் லாபங்களுக்காக பாஜக அரசு 2021 பொதுக் கணக்கெடுப்போடு கூடவே ஒரு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறித்த தரவுகள் ஏதும் இல்லாத நிலையில் இப்பிரிவைச் சேர்ந்த பல்வேறு பிரிவினரின் சரியான எண்ணிக்கையை உறுதி செய்வது அவசியமாகும். எந்த இனத்தவரை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்று வகைப்படுத்தலாம் என்பதை தீர்மானிக்கும் உரிமையை குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் ஒரு சட்டத்தையும் ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது.  இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான தாக்குதலே ஆகும். இடஒதுக்கீட்டிற்காக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அடையாளம் காண்பதற்கான மாநிலங்களின் உரிமைகளை இது பறிக்கிறது. மக்களின் கடுமையான அழுத்தம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலையீடு ஆகியவற்றின் விளைவாக தனது முடிவை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டது. 

2.66     மாற்றுத் திறனாளிகள்: கொரோனா பெருந்தொற்று மாற்றுத் திறனாளிகளின் வாழ்வின் மீது பேரழிவுமிக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. உணவு, தொடர்ந்து உயிர்வாழ்வதற்கான மருத்துவ வசதி, வேலை இழப்பு போன்ற பெரும் சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மாற்றுத் திறனுடைய கணிசமான குழந்தைகள் தரமான கல்வியை பெற இயலாத நிலை உருவானது. மாற்றுத் திறனுடைய பெண்கள், சிறுமிகள் தங்கள் மீதான வன்முறை மற்றும் சீண்டல்களை அதிகமான அளவில் எதிர்கொள்ள நேர்ந்தது. ஒரே ஒருமுறைக்கு மட்டுமே என ரூ. 1000 என்ற ஒன்றிய அரசு அறிவித்த மிகக் குறைந்த கருணைத்தொகையும் கூட மாற்றுத் திறனுடைய மக்கள் தொகையில் வெறும் 3.8 சதவீதம் பேரை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தது. 

2.67    2016ஆம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தில் அடங்கியுள்ள தண்டனை விதிமுறைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான முன்வரைவு கடுமையான எதிர்ப்பினை சந்தித்தது. இதன் விளைவாக அரசு அவசர அவசரமாக பின்வாங்கவேண்டி வந்தது. எனினும், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்யும் பல்வேறு நிறுவனங்களையும் இணைக்க/ ஒன்றிணைப்பதற்கான முயற்சி மறுவாழ்வு சேவைகளை மிக மோசமாக பாதிக்கும். இப்பிரிவினருக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவது மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தில் அடங்கியுள்ள உரிமைகளை செயல்படுத்துவதை தடுப்பதாக அமைகிறது.  2017ஆம் ஆண்டின் மன நலம் பேணுதல் சட்டத்தைப் பொறுத்தவரையில் பட்ஜெட் மூலமான நிதி ஆதரவு இல்லாததே அதன் செயல்பாட்டிற்குத் தடையாக அமைகிறது. 

2.68  பாலியல் ரீதியிலான சிறுபான்மையினர்: இப்பிரிவினரின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில் 2020ஆம் ஆண்டின் மாறிய பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் திருத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டிற்குள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற முன்வரைவு தவறான ஒன்றாகும். அவர்களுக்கு குறுக்கு வெட்டு முறையிலான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 2020ஆம் ஆண்டின் வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் 2021ஆம் ஆண்டின் இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம் ஆகியவை தன்பால் உறவு பெண்கள், ஓரினச் சேர்க்கை ஆண்கள், இருபால் உறவு, மாற்றுப் பாலினத்தவர்களுக்கு (டுழுக்ஷகூணுஐ) பாகுபாடான ஒன்றாக அமைகின்றன. ஏனெனில் அவர்கள் பெற்றோராவதற்கான உரிமையை இச்சட்டங்கள் மறுதலிக்கின்றன. தன்பாலின உறவுகள் உச்சநீதிமன்றத்தால் குற்றமற்றவையாக அறிவிக்கப்பட்ட போதிலும் பாலியல் ரீதியான சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

பலவீனப்படுத்தப்படும் அரசியலமைப்புச்சட்ட ரீதியான அமைப்புகள்

2.69    நாடாளுமன்றம் என்பது அதிகமான அளவில் பாஜக தனது ‘பெரும்பான்மையின் கொடுங்கோன்மை’யை செயல்படுத்தும் ஒரு மேடையாக தரம் குறைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற செயல்முறைகள், நாடாளுமன்றக் குழுக்களின் ஆய்வு போன்ற நடைமுறைகள் அனைத்தையும் புறந்தள்ளிய வகையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. நாடாளுமன்றச் செயல்பாட்டின்போது இடையூறு ஏற்படும் தருணத்தில் எவ்வித கலந்துரையாடலோ அல்லது விவாதமோ இன்றி பெரும்பாலான சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அற்ப காரணங்களின் அடிப்படையில் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் 12 பேர் சபையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை மாநிலங்களவையில் பாஜகவிற்கு வசதியான பெரும்பான்மையை உறுதி செய்தது. தண்டனை நடவடிக்கைகளின் மூலம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாயை அடைக்க முயற்சி செய்யப்படுகிறது. பொதுமுக்கியத்துவம் வாய்ந்த அல்லது மக்களின் கவலைகளை வெளிப்படுத்தும்படியான எந்தப் பிரச்சனைகள் மீதும் நாடாளுமன்றத்தில் உரையாடவோ அல்லது விவாதிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. 

2.70  நாடாளுமன்றத்திற்கான தனது பொறுப்புணர்விலிருந்து மோடி அரசு தப்பிக்கப் பார்க்கிறது. நாடாளுமன்றம் என்பது மக்களின் இறையாண்மையை அமல்படுத்தக் கூடிய அரசியல் அமைப்புச் சட்டரீதியான ஏற்பாட்டின் முக்கிய கண்ணியாக விளங்குகிறது. இதன்படி (அரசு) நிர்வாகம் நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புள்ளதாகவும்,  நாடாளுமன்றம் / சட்டமன்றங்கள் (அதாவது அதன் உறுப்பினர்கள்) மக்களுக்குப் பொறுப்புள்ளவர்களாகவும் இருக்கின்றனர். நாடாளுமன்றம் தனது கடமைகளை முறையாக நிறைவேற்றாதபோது இந்தக் கண்ணி சீர்குலைந்து மக்களின் இறையாண்மை என்ற மையத் தன்மையை வலுவிழக்கச் செய்கிறது. 

2.71      நீதித்துறை: பல நேரங்களில் நீதிமன்றங்களின் உத்தரவுகள் நீதியை வழங்குவதற்குப் பதிலாக பெருமளவிற்கு அரசுக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளன. அயோத்தியா சச்சரவின் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதிலும் அது நீதியை வழங்கவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகளை நீக்குவது மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற மாநிலத்தையே கலைப்பது; குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது; தேர்தல் பத்திரங்கள் மற்றும் இன்னபிற விஷயங்களின் அரசியல் அமைப்புச் சட்டரீதியான செல்லுபடித் தன்மை குறித்து கேள்வி எழுப்பிய முறையீடுகள் உள்ளிட்டு முக்கியமான பல பிரச்சனைகள் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 

2.72    தேர்தல் ஆணையம்: தேர்தலில் போட்டியிடுவோருக்கு சமமான போட்டிக் களத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் ‘சுதந்திரமான- நேர்மையான தேர்தல்களை’ நடத்துவதற்கென அரசியல் அமைப்புச் சட்டரீதியாக உருவாக்கப்பட்டதே தேர்தல் ஆணையம் ஆகும். எனினும் அது ஆளும் கட்சிக்கு நியாயமற்ற வகையில் அதிகமான முன்னுரிமை அளித்து வருகிறது என்ற தோற்றத்தையே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. தேர்தலுக்கான நிதியுதவியில் வெளிப்படைத் தன்மையை தேர்தல் பத்திரங்கள் நீர்த்துப் போகச் செய்கின்றன என்ற வகையில் தொடக்கத்தில் தீவிரமாக மறுப்புகளை அது வெளியிட்ட போதிலும், பின்னர் தேர்தல் ஆணையம் தனது நிலைபாட்டை நீர்த்துப் போகச் செய்துள்ளது. பிரம்மாண்டமான வகையில் தனது பணபலத்தை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் பத்திரங்களில் கிட்டத்தட்ட 80 சதவீத தொகையை பாஜக கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நமது ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் ஆகியவற்றுக்கு மிக முக்கியமாக விளங்கும் சம அளவிலான போட்டிக்களம் என்பது சிதைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்ற அதன் சமீபத்திய நடவடிக்கை ரகசிய வாக்குக்கான வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கும் விளைவுகளை கொண்டிருக்கிறது. 

2.73      சுயேச்சையான புலன் விசாரணை அமைப்புகள்: மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ஈ டி) ஆகிய இரண்டு அமைப்புகளுமே எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து ஆளும் கட்சியின் அரசியல் கரங்களாகச் செயல்பட்டு வருகின்றன. 

2.74        உதாரணமாக, அமலாக்கத் துறையின் (தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் என்று அதிகாரபூர்வமாகக் குறிப்பிடப்படும்) சோதனைகள் 2013ஆம் ஆண்டில் 62ஆக இருந்தது 2019ஆம் ஆண்டில் 670 ஆக பத்து மடங்கு அதிகரித்துள்ளது. 2011 மார்ச்சுக்கும் 2020 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அமலாக்கத் துறையில் 1,569 வழக்குகள் தொடர்பான புலன் விசாரணைக்கென 17,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இதில் வெறும் ஒன்பது வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. அதுவும் கூட பெரும்பாலும் அதிக கவனம் பெறாத வழக்குகளில் மட்டுமே நடந்தது. அரசுக்கு எதிராக கருத்து வேறுபாடு கொண்டவர்களை அல்லது அரசை எதிர்ப்பவர்களை மட்டுமே துன்புறுத்தி, பயமுறுத்துவதற்கான ஒரு கருவியாகவே அது இருக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிய வருகிறது. 

2.75        எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு எதிரான சிபிஐயின் பங்கு எந்த அளவிற்குச் சென்றுள்ளது என்றால் ஆந்திர பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, கேரளா, சட்டிஸ்கர், மிசோரம் ஆகிய ஒன்பது மாநிலங்களும்  மாநில அரசுகளின் ஒப்புதலை பெறாமலே தங்களது மாநிலங்களில் சிபிஐ விசாரிப்பதற்கென முன்பு வழங்கியிருந்த பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டன.

2.76      ஊடகம்: இந்த ஆண்டுகளில் பாஜகவும் அதன் அரசும் மக்களுக்குச் சென்றடையும் செய்திகள் மற்றும் தகவல்களை கட்டுப்படுத்தி தங்களுக்கு வேண்டிய வகையில் திருத்துவதற்காக ஊடகங்களின் மீதான தங்களது கட்டுப்பாட்டை மேலும் இறுக்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பெரும் கார்ப்பரேட் குழுக்களுக்குச் சொந்தமானவை. போற்றுதலுக்குரிய ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்துப் பார்க்கும்போது, பொதுவாக மக்களின் கருத்தோட்டத்தில் “ஜால்ரா ஊடகங்கள்” என்றே பொதுவாகக் குறிப்பிடப்படும் நிலையே தற்போது ஊடகங்களில் நிலவுகிறது. 

2.77     பாஜக மற்றும் அதன் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை விளம்பரப்படுத்துவதை உறுதி செய்யவும், மக்களின் துயரங்கள் குறித்த யதார்த்தங்களை மறைக்கவும், பிரதமர் மோடி குறித்த மாபெரும் பிம்பத்தை கட்டமைக்கவும் அச்சுறுத்தல் உள்ளிட்டு பல்வேறு வழிமுறைகள் இதற்கென கையாளப்படுகின்றன. 

2.78  மக்கள், அவர்களது வாழ்வாதாரங்கள், அவர்களது அவலங்கள் குறித்த உண்மையான பிரச்சனைகளை பிரதிபலிக்கிற அனைத்து கருத்து வேறுபாடுகள், மாற்றுக் கருத்துக்கள் ஆகியவை தேச விரோதமாகக் கருதப்படுவதோடு, உபா / தேசத் துரோகம் குறித்த கொடூரமான சட்டங்களின் கீழ் பத்திரிக்கையாளர்கள் வேறு எந்தக் காரணங்களும் இன்றி கைது செய்யப்படுகின்றனர். 

2.79  சட்டபூர்வமாக்கப்படும் அரசியல்ரீதியான ஊழல்: அரசியல் கட்சிகளுக்கு திரைமறைவான, வெளிப்படைத்தன்மையற்ற வகையில் பெருமளவிற்கு நிதியளிக்க தேர்தல் பத்திர திட்டம் வழிவகுத்துள்ளது. இந்தப் பத்திரங்களில் கிட்டத்தட்ட 80 சதவீத தொகையை பாஜக பெற்று பணமாக்கியுள்ளது. 2018-19 நிதியாண்டில் இவ்வாறு பாஜக பெற்ற தொகை ரூ. 1,450 கோடி. 2019-20 நிதியாண்டில் அதற்கு ரூ. 2,555 கோடி கிடைத்தது. அதாவது இத்தொகை விற்பனை செய்யப்பட்ட மொத்த தேர்தல் பத்திரங்களில் 76 சதவீதமாகும். விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மொத்த மதிப்பு ரூ. 7,380.64 கோடி ஆகும். 

2.80    பெருந்தொற்று வந்தவுடனேயே, பிஎம் கேர்ஸ் என்றழைக்கப்படும் புதிய நிதி ஒன்று நிறுவப்பட்டது. இதன் அறங்காவலர்களாக பிரதமரும் இதர மூத்த அமைச்சர்களும் இருந்தபோதிலும், இதற்கென அரசு இயந்திரம் முழுவதையும் பயன்படுத்திக் கொண்ட போதிலும், இது ஒரு தனிப்பட்ட அறக்கட்டளை என அறிவிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை இந்த நிதிக்கு வழங்க வேண்டுமென அதிகாரபூர்வமான உத்தரவுகள் இடப்பட்டன. இந்த நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு எந்தவொரு வரியிலிருந்தும் விலக்கு அளிப்பது எனவும் அரசு முடிவு செய்தது. தங்களது சட்டபூர்வமான கார்ப்பரேட் சமூகப் பொறுப்புக்கான நிதியிலிருந்து இந்த நிதிக்கு நன்கொடை அளிக்கவும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களும் கூட இந்த நிதிக்கு கணிசமாக நன்கொடை அளிக்க வேண்டுமென உத்தரவு இடப்பட்டது. இத்தகைய உத்தரவுகளை அரசு வெளியிட்ட போதிலும்கூட இந்த நிதி இப்போதும் தனிப்பட்ட அறக்கட்டளையாகவே நீடிக்கிறது. எந்தவித தணிக்கைக்கும் உட்படாத, பொறுப்பு நிர்ணயிக்கப்படாத, வெளிப்படைத் தன்மை இல்லாத ஒன்றாகவே இது இருக்கிறது. எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது, எவ்வளவு பணம் எங்கே செல்கிறது என்பதெல்லாம் ரகசியமாகவே இருக்கிறது. 

2.81      தாங்கள் பெறும் அரசியல் ரீதியான நிதிக்குப் பிரதிபலனாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவதென்பதே மோடி அரசின் கீழ் நிலவும் கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தின் சிறப்பு அம்சமாகும். இந்த அரசு தனது ஏழாண்டு கால ஆட்சியின்போது தனக்கு நெருக்கமான கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கியிருந்த கடன்களில் ரூ. 10.72 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. இதன் விளைவாக பாஜகவின் கைகளில் உள்ள பணபலமானது சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதிப்படுத்துகின்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சமமான போட்டிக் களத்தை முற்றிலுமாக சீர்குலைத்து வருகிறது. 

ஜம்முகாஷ்மீர் 

2.82    2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடி அரசு எடுத்த முதல் நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகளை ரத்து செய்வது; ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைக் கலைத்து, அதனிடத்தில் இரண்டு துணைநிலை மாநிலங்களை உருவாக்கியது என்பதாகும். இதன் மூலம் இந்தியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலத்தைக் குறிவைப்பது என்ற ஆர் எஸ் எஸ் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலையும், இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினால் அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்ற ஆர் எஸ் எஸ்ஸின் நீண்டகாலக் கோரிக்கையையும் மோடி அரசு அமலாக்கியது. 2019இல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. எனினும் அதற்கு முன்பு கலைக்கப்பட்ட சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதன் மூலம் மாநிலத்தின் எல்லைகளில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வந்தாலும் அதை சட்டமன்றத்தின் ஒப்புதலுடனேயே செயல்படுத்த வேண்டும் என்ற அரசியல் அமைப்புச் சட்ட விதிகளை குறுக்கு வழியில் கடக்கிற வகையில், சட்டமன்றம் செயலில் இல்லாத நிலையில், ஆளுநரின் ஒப்புதலின் மூலம் அதை நிறைவேற்றியது. முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கானோரை உவாபா, தேசிய பாதுகாப்பு சட்டம், மாநில பாதுகாப்பு சட்டம் போன்ற கொடுங்கோன்மை சட்டங்களின் கீழ் சிறையிலடைத்துவிட்டு, மிகப்பிரம்மாண்டமான பாதுகாப்பு முடக்கத்தின் கீழ் மாநிலத்தை கொண்டு வந்ததன் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தகவல் தொடர்பு, இணைய வசதி ஆகியவை மாநிலத்தில் முற்றிலுமாக முடக்கப்பட்டன.  

2.83     பாதுகாப்பு ரீதியில் பிறப்பிக்கப்பட்ட கடுமையான பொதுமுடக்கமானது பொது போக்குவரத்து உள்ளிட்டு அனைத்து அன்றாட நடவடிக்கைகளும் செயலிழந்து நிற்பதை உறுதிப்படுத்தியது. மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக சீரழிந்தது. நீண்ட நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகள் மாநில மக்களை மேலும் அந்நியப்படுத்தவே செய்தது. தீவிரவாதத்தின் விளைவாக அப்பாவி மக்கள் சமீபத்தில் தொடர்ந்து கொல்லப்படுவது, அதீதமான, மிருகத்தனமான பலம், தன்னிச்சையாக கைது செய்வது ஆகியவை மக்கள் மேலும் அந்நியப்படும் சூழலை உருவாக்கியுள்ளது. 

2.84  மிகுந்த துரதிர்ஷ்டவசமான வகையில், 370 மற்றும் 35ஏ பிரிவுகளை நீக்கியது; ‘ஜம்மு-காஷ்மீர் சீரமைப்பு சட்டம்’ ஒன்றின் மூலமாக அந்த மாநிலத்தைக் கலைத்தது ஆகியவற்றின் அரசியல் அமைப்புச் சட்டரீதியாக செல்லுபடித்தன்மை குறித்து உச்சநீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட கேள்விகள் 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்றுவரை கேட்கப்படாமலேயே இருந்து வருகின்றன. இதற்கிடையே மாநிலத்தில் நிரந்தரமாக குடியிருக்காதவர்களும் நிலம் வாங்குவதை அனுமதிக்கும் ஜம்மு-காஷ்மீர் மேம்பாட்டு சட்டத்தின் மீதான திருத்தம்; குடியிருப்போர் குறித்த சட்டங்கள் மீதான திருத்தம், மாநில அளவில் செயல்பட்டு வரும் சட்டரீதியான குழுக்களை கலைப்பது ஆகிய மீட்டெடுக்க முடியாத முடிவுகள் பலவற்றையும் ஒன்றிய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. 

2.85  ஜம்மு-காஷ்மீருக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழு ஒன்றையும் ஒன்றிய அரசு நியமித்தது. அதன் பரிந்துரைகள் வெளிப்படையாகவே நியாயப்படுத்த முடியாதவை என்பதோடு தர்க்க நியதிகளுக்கும் புறம்பானவை ஆகும். இந்தக் குழு ஜம்மு பகுதியில் 6 தொகுதிகளை அதிகரித்துள்ள அதே நேரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கூடுதலாக வழங்கியுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காஷ்மீர் பகுதியின் மக்கள் தொகை 68.8 லட்சம் எனில், ஜம்மு பகுதியின் மக்கள் தொகை 53.5 ஆகும். இதன் அடிப்படையில் நியாயமான எல்லை நிர்ணயம் எனில் மொத்தமுள்ள 90 உறுப்பினர் கொண்ட சட்டமன்றத்தில் காஷ்மீர் பகுதிக்கு 51 தொகுதிகளும், ஜம்மு பகுதிக்கு 39 தொகுதிகளும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு மாறாக முறையே 47, 43 என வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்வரைவு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின்  மக்கள்தொகையின் தன்மை மற்றும் அமைப்பினை மாற்றுவதையே நோக்கமாகக் கொண்ட, முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்ட ஒன்று என்பது மிகத் தெளிவாகும். 

2.86  முன்பிருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலமும் அதன் சிறப்பு அந்தஸ்தும் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும். அரசியல்ரீதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். ஊடகங்கள் மற்றும் இதர வகையிலான தகவல் தொடர்பு ஆகியவற்றின் மீதான தடைகள், இணைய வழி தொடர்புகளின் முடக்கம் ஆகியவை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். காரணமேயற்ற கைதுகள், குறிப்பாக இளைஞர்களை கைது செய்வது நிறுத்தப்பட வேண்டும். 

வடகிழக்கு

2.87 வடகிழக்குப் பகுதியில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்ள பாஜகவும் ஆர் எஸ் எஸ்ஸூம் அசாம் அரசின் மீதான தங்கள் பிடிப்பை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்திக் கொண்டன. இப்பகுதியில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும், மிசோரம் மாநிலத்தைத் தவிர, உள்ள அரசுகள் அனைத்தையும் பாஜக அல்லது அதைக் கூட்டணியில் கொண்ட கட்சிகளே  ஆட்சி செய்து வருகின்றது. அசாமில், பாஜக அரசின் கீழ், பெருமளவில் முஸ்லீம் சிறுபான்மையினரை குறிவைப்பதன் மூலம் வகுப்புவாத வெறியூட்டப்பட்ட சூழலை உருவாக்க திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நோக்கத்திற்கு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. அவர்கள் பயிரிட்டு வந்த நிலங்களிலிருந்து வங்காளி மொழி பேசும் முஸ்லீம் விவசாயிகள் வெளியேற்றப்படுவது நடந்தேறியது. மாநிலங்களுக்கு இடையில் நிலவும் எல்லை சச்சரவுகளையும் தனது பிடியை வலுப்படுத்திக் கொள்ள பாஜக பயன்படுத்தி வருகிறது. 

2.88    இந்தப் பகுதியில் உள்ள பல மாநிலங்களிலும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் (ஹகுளுஞஹ) நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட கட்டமைப்பு ஒப்பந்தம் அமலாக்கப்படாத நாகாலாந்து மாநிலத்தில், ராணுவப் படைகள் 14 அப்பாவி மக்களை சுட்டுப் படுகொலை செய்தது. இந்த கொடுங்கோன்மை சட்டம் வழங்கியுள்ள தண்டனையற்ற நிலையை இது எடுத்துக் காட்டுகிறது. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். 

தேசிய கல்விக் கொள்கை

2.89     தேசியக் கல்விக் கொள்கை 2020 ஆனது அரசியல் அமைப்புச் சட்டரீதியாக வரையறுக்கப்பட்ட மாநில அரசுகளுடனான விவாதங்கள், கலந்துரையாடல்கள், ஆகிய தேவையான செயல்முறைகள் ஏதுமின்றி ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டது. இதற்கான நகல் ஆவணத்தை பெருமளவிற்கு ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர்கள் மற்றும் அதன் அமைப்புகளை உள்ளடக்கி அரசு அமைத்திருந்த ஒரு குழு இறுதிப்படுத்தியிருந்தது. விரிவான ஆலோசனை மற்றும் விவாதம் ஆகியவற்றுக்கு இந்த நகல் ஆவணம் உட்படுத்தப்படாமல் தன்னிச்சையாக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டது. 

2.90  நாட்டின் இளைஞர்களிடையே இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமான உணர்வை ஏற்படுத்தி கல்விப் புலத்தில் முன்னெடுத்துச் செல்வதே இந்தப் புதிய கொள்கையில் ஊடாடும் இழையாக அமைகிறது. இந்த நோக்கத்தை அடைவதற்கென பாடத்திட்டம், பாடங்கள், கற்பிக்கும் முறைகள் ஆகிய அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இதன் ஊடாகவே நாட்டின் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் எவ்வித தயக்கமுமின்றி தாக்குதலுக்கு ஆளாயின. 

2.91    இந்தக் கொள்கையின் உந்துதல் என்பது கல்வியை வணிகமயமாக்குவது; மையப்படுத்துவது; வகுப்புவாத மயமாக்குவது என்பதாகவே இருந்தது. இந்த நோக்கங்களை அடைவதற்காக அனைவருக்கும் கல்வி; ஜனநாயகபூர்வமான, அறிவியல்பூர்வமான கல்வி என்ற குறிக்கோள்களின் ஆணிவேர்களை அது தாக்குகிறது. பெரும்பாலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களால் வழங்கப்படும் இணையவழி கல்வியை நோக்கிய நகர்வு, மாணவர்களின் பெரும்பகுதியினர் கல்வி முறைமையை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்தது. இந்தியாவில் நிலவி வரும் விரிவான டிஜிட்டல் இடைவெளி என்பது இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. ஆறுவயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தொடக்கநிலை மழலைப் பருவ பராமரிப்பு மற்றும் பள்ளிக்கல்வி குறித்த அறிவியல்பூர்வமான கருத்தாக்கத்தை இந்தப் புதிய கல்விக் கொள்கை கைவிடுகிறது. தனியார் பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் காளான்களாக வளர்ந்து, கல்வியை ஒரு வணிகப் பொருளாக மாற்றும் அதே நேரத்தில் பெரும்பாலான மக்கள் அதை அணுகமுடியாத நிலையும் ஏற்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வானது, அதன் தற்போதைய வடிவத்தில், அநீதியானது மட்டுமின்றி, மாநிலங்கள், கிராமப்புற மாணவர்கள், பிராந்திய மொழியியல் குழுக்கள் மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அமைகிறது.

2.92  மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பங்கினை வலுவிழக்கச் செய்து, ஒன்றிய அரசு இந்த நிறுவனங்களை நேரடியாகக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தும். மாநில அளவிலான நிறுவனங்கள், பள்ளிகளின் செயல்பாடு, ஒழுங்கமைப்பு ஆகியவற்றைத் தீர்மானிக்கக் கூடிய உரிமையை அரசியல் அமைப்புச் சட்டரீதியாகக் கொண்டுள்ள மாநில அரசுகளின் உரிமைகள் இதன் மூலம் மீறப்படுகின்றன. 

2.93  இந்தக் கொள்கையின் முன்வைக்கப்படும் கல்வியின் உள்ளடக்கமானது பகுத்தறிவு, காரணம் தேடல் ஆகியவற்றின் அடிப்படையிலான அறிவுக்கான உந்துதலை வலுவிழக்கச் செய்கிறது. தெளிவின்மை, ஆதாரமற்ற நம்பிக்கை, பகுத்தறிவின்மை மற்றும் நியாயமற்ற தன்மை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து அறிவியல்பூர்வமான உணர்வு புறந்தள்ளப்படுகிறது. நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வகுத்துள்ள கொள்கைகள் மற்றும் விழுமியங்கள் மீது இளைஞர்களின் விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, வகுப்புவாத இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதிலும், இந்தியாவின் செறிவான வரலாற்றினை கற்றுத் தருவதற்குப் பதிலாக இந்துப் புராணங்களையும், ஒத்திசைவான பன்மைத்துவ இந்திய சித்தாந்தங்களின் பல்வேறு நீரோட்டங்களுக்குப் பதிலாக இந்து இறையியலையும் முன்வைப்பதிலேயே அது கவனம் செலுத்துகிறது.

2.94  இதன் விளைவாக, எப்போதுமே பலவீனமாக இருந்து வரும் இந்திய கல்வியின் அளவு, தரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலை இப்போது முற்றிலுமாக அழிக்கப்படுகிறது.

2.95  நமது கல்விக் கொள்கையில் இத்தகைய பாரதூரமான மாற்றங்களை கொண்டுவருவதை எதிர்க்கும் வகையில் கல்வியோடு தொடர்புடைய அனைவரையும், அறிவுஜீவிகளையும் ஒன்றிணைத்து விரிவானதொரு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும். 

2.96 உண்மை மற்றும் பகுத்தறிவின் மீதான தாக்குதல்கள்:  அறிவியல்பூர்வமற்றதாகவும், வரலாற்றுக்கு முரணானதாகவும் இருக்கும் நிலையில் இந்துத்துவ சித்தாந்தமானது பகுத்தறிவு மற்றும் உண்மை ஆகியவற்றின் மீது தாக்குதல் தொடுக்கிறது. ஆய்வற்ற அணுகுமுறை, மூடநம்பிக்கை மற்றும் பிற்போக்கு சிந்தனை ஆகியவை இந்துப் புராணங்களை ஒன்றிணைக்க எளிதாகிறது. இதன் மூலம் பின்னர் அவற்றை உண்மையான வரலாறாகத் தோற்றமளிக்கச் செய்கிறது. மக்களிடையே ஆதாரமே அற்ற நம்பிக்கையை வளர்த்தெடுப்பதென்பது அவர்களை அறிவியலுக்குப் புறம்பான, பகுத்தறிவிற்கு ஒவ்வாத விஷயங்களை எளிதாக ஏற்கச் செய்கிறது. இதன் மூலம்  அறிவியல்பூர்வமான உணர்வு மற்றும் பகுத்தறிவுத் தன்மை ஆகியவற்றின் மீது தாக்குதல் தொடுக்கிறது.  

2.97      புதிய கல்விக் கொள்கையில் இத்தகைய சிந்தனைப் போக்கை வளர்த்தெடுப்பதோடு கூடவே, இந்தியாவில் உள்ள அனைத்து கலாச்சார, ஆய்வு நிலையங்களும் ஆர் எஸ் எஸ் நபர்களால் கட்டுப்படுத்தப்பட்டு, இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல இந்திய வரலாற்றை திருத்தி எழுத அதிகமான அளவில் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. இந்துத்துவ சித்தாந்தத்தையும் சிந்தனைப் போக்கையும் பரப்புவதற்கு கலாச்சாரத்தை ஒருமயப்படுத்துவது மிகவும் அவசியமாகும். உண்மைக்குப் பதிலாக உண்மையற்ற நிலையையும், பகுத்தறிவிற்குப் பதிலாக பகுத்தறிவற்ற நிலையையும் நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள், அறிவியல்பூர்வமான கண்ணோட்டம், விவாதம் ஆகியவற்றை மக்களிடமிருந்து பறிப்பதற்கான விஷமத்தனமான செயல்களே ஆகும். 

சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்

2.98      உலகளாவிய பருவநிலை மாற்றங்களின் விளைவாக நாடு மிக மோசமான பருவநிலை தாக்கங்களை சந்தித்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் அதிக அளவிலான மழைப்பொழிவு வெள்ளப் பெருக்கிற்கு வழிவகுத்துள்ளதோடு, பயிர்கள், கட்டமைப்பு ஆகியவற்றுக்கும் மிகப்பெரும் சேதத்தையும் விளைவித்துள்ளது. நகர்ப்புறங்கள் வெள்ளக்காடாக மாறுவதென்பது வழக்கமானதொரு சம்பவமாக மாறிவிட்டது. கடலோர அரிப்பு மற்றும் கடல்மட்ட உயர்வு ஆகியவை கடற்கரையோரப் பகுதிகளையும், மீனவர்கள், விவசாயிகள் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களையும் மிக மோசமாக பாதித்துள்ளன. மோசமாக திட்டமிடப்பட்டு அமல்படுத்தப்பட்ட கட்டமைப்புத் திட்டங்களின் விளைவாக மிகவும்  மென்மையான இமாலய மலைத்தொடர் பகுதிக்கு ஏற்பட்டுள்ள சேதாரமானது இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. 

2.99     பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பல்வேறு மோசமான பாதிப்புகளை சமாளிக்க அரசு எதையுமே செய்யவில்லை. அதற்கு மாறாக, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை அரசு நீர்த்துப் போகச் செய்து அவற்றைத் தலைகீழாக மாற்றியுள்ளன. சுற்றுச் சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டை நீர்த்துப்போகச் செய்வது; இந்திய வனச் சட்டத்திற்கு திருத்தம் செய்வதற்கான முன்வரைவு; இதற்கு முன்பாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் ஆகிய அனைத்துமே இந்திய வனங்களை வணிகமயமாக்குவது; தனியார் மயமாக்குவது; சுரங்கப் பணிகள் மற்றும் கட்டமைப்புப் பணிகள் ஆகியவற்றை ஆய்வே இல்லாமல் அனுமதிப்பது ஆகியவற்றுக்கு வழிவகுப்பது ஆகும். இத்தகைய போக்கு சுற்றுச் சூழலுக்கும் பழங்குடியினர், இதர வனவாசிகள் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவே இருக்கப்போகிறது. இத்தகைய பிற்போக்குத் தனமான அணுகுமுறையே சமீபத்தில் நடைபெற்ற  ஊடீஞ26 உச்சிமாநாட்டில் 2030க்குள் காடுகளின் அழிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது என்ற திட்டத்தை ஏற்க முன்வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளோடு இணைய விடாமல் இந்தியாவை தடுத்து நிறுத்தியது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை உடனடியாக சமாளிக்கவும் அதற்குரிய வரைபடங்களை வடிவமைக்கவும், திட்டங்களை தீட்டவும், அவற்றுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் ஆகியவற்றை  இறுதிப்படுத்தவும்  மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், நிபுணர்கள் மற்றும் இந்தப் பிரச்சனையில் நேரடி தொடர்பு உடையவர்கள் ஆகிய பிரிவினரின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நாடு தழுவிய குழு ஒன்றை அமைக்க வேண்டியது அவசியமாகும். 

அயலுறவுக் கொள்கை

2.100     அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ்ப்படிதலுள்ள கூட்டாளி: கடந்த காலத்தில் அதன் செயல்திறன் உறுதிசெய்யப்பட்ட இந்தியாவின் சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையை மோடி அரசு முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டது. அனைத்து உலகளாவிய விஷயங்களிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ்ப்படிதலுள்ள கூட்டாளியாகவும் பினாமியாகவும் இந்தியா இப்போது தரமிறங்கியுள்ளது. 

2.101     மோடி பிரதமரானபிறகு அதைத் தொடர்ந்து நடைபெற்ற அணிசேரா நாடுகள் இயக்கத்தின் உச்சிமாநாட்டுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. இஸ்ரேல் உடனான கேந்திர உறவுகளை இந்தியா வலுப்படுத்தியுள்ளதோடு, பாலஸ்தீன பிரச்சனை மற்றும் அதன் போராட்டங்களுக்கான நமது பாரம்பரியமான, வரலாற்று ரீதியான ஆதரவையும் கருத்தொற்றுமையையும் நீர்த்துப் போகச் செய்துள்ளது. முதன் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் பாலஸ்தீனத்திற்கு செல்லாமல் இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அமெரிக்கா-இஸ்ரேல்- இந்தியா கூட்டணி இப்போது வலுப்படுத்தப்பட்டுள்ளது. 

2.102      22வது கட்சிக் காங்கிரசுக்குப் பிந்தைய காலப்பகுதியில் இந்தியா அமெரிக்காவுடனான கேந்திர, ராணுவ ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைக் கொண்ட நாற்கர கூட்டணி 2018இல் செயலாளர்கள் மட்டத்திலான கூட்டங்களோடு தொடங்கியது. 2019இல் இது வெளியுறவு அமைச்சர்கள் நிலைக்கு மேம்படுத்தப்பட்டது. பின்னர் இந்திய-பசிஃபிக் பகுதியில் சீனாவை தனிமைப்படுத்தும் நோக்கில் இந்த நாற்கர கூட்டணியை தீவிரமான கேந்திர மற்றும் ராணுவக் கூட்டணியாக மாற்றுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளிலும் இந்தியா பங்கு கொண்டது. 

2.103      இந்தியா மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையே வழக்கமான சந்திப்புகளை உள்ளடக்கிய 2 + 2 வடிவம் 2018 இல் தொடங்கியது. 2019 இல்  நடைபெற்ற 2 +2 கூட்டத்தில் அதிநவீன அமெரிக்க இராணுவ தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு மாற்றுவதற்கான தொழில்துறை பாதுகாப்பு இணைப்பு (ஐளுஹ) ஒப்பந்தம்  வந்தது. யுத்த தந்திர ரீதியான ராணுவ ஒத்துழைப்பின் மூன்று அடிப்படையான ஒப்பந்தங்களில் முதல் இரண்டு ஒப்பந்தங்கள் – 2016ஆம் ஆண்டில் லெமோவா (டுநுஆடீஹ) மற்றும் 2018இல் காம்காசா (ஊடீஆஊஹளுஹ) ஆகியன மோடி அரசின் முதல் முறை ஆட்சியின்போது கையெழுத்தாயின. இதில் மூன்றாவதும் இறுதியானதுமான அடிப்படை பரிமாற்ற ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் (க்ஷநுஊஹ) 2020 அக்டோபர் 27 அன்று கையெழுத்தானது. இதன் மூலம் நீண்ட கால ராணுவ மற்றும் கேந்திர ரீதியான ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. 

2.104     இந்த க்ஷநுஊஹ ஒப்பந்தமானது நம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய பல அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே புவிசார் அரசியல் நுண்ணறிவினை பகிர்ந்துகொள்ள வகை செய்கிறது. மேலும் இது  ஹவாயில் உள்ள அமெரிக்க ஆசிய பசிபிக் கட்டளைத் தலைமையகத்துடன் டெல்லியில் உள்ள இந்திய கடற்படைத் தலைமையகத்தின் நிரந்தர இணைப்பையும் நிறுவுகிறது.

2.105     விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டு அமெரிக்க ராணுவ தளவாடங்களை வாங்கவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. ராணுவ தளவாடங்களைப் பொறுத்தவரையில் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் முற்றிலும் நம்பியிருக்கும் ஒரு நாடாக இந்தியா மாறி வருகிறது. 

2.106    இந்திய-சீன உறவுகள்: இந்திய-சீன ராணுவ நிலைநிறுத்தம் இருதரப்பிலும் நேரடியாக மோதலுக்கும், உயிரிழப்பிற்கும் இட்டுச் சென்றது. இந்த மோதலில் 2020 ஜூன் 15 அன்று இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்திய-சீன எல்லைப் பகுதியில் மெய் கட்டுப்பாட்டுப் பகுதியில் (டுடீஊ) 45 ஆண்டுகளுக்குப் பிறகு உயிரிழப்புடன் கூடிய வன்முறை மிக்க மோதலாக இது இருந்தது.   இந்தச் சம்பவம் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைத்துள்ளது. 

2.107     இந்திய அரசு மேற்கொண்ட அணுகுமுறை மற்றும் நிலைபாட்டிற்கு கட்சி தனது ஆதரவை தெரிவித்தது. இதுகுறித்து இந்தியா வெளியிட்ட அறிக்கை ஒட்டுமொத்த சூழ்நிலையும் மிகுந்த பொறுப்புடன் கையாளப்படும் என்றும் அந்த இடத்தை விட்டு விலகுவது குறித்த புரிதலை இரு தரப்பினரும் உண்மையோடு நிறைவேற்றுவார்கள் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்தது. நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் இருதரப்பு எடுக்காது என்றும், இருதரப்பு ஒப்பந்தங்கள், அரச நெறிமுறைகளுக்கு இணங்க அமைதியையும் சமாதானத்தையும் உறுதிப்படுத்தும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது. 

2.108    மெய் கட்டுப்பாடுப் பகுதியில் (டுடீஊ) எல்லை வரையறுப்பு குறித்த தெளிவின்மையே இத்தகைய சச்சரவுகளுக்கும் மோதல்களுக்கு இட்டுச் செல்கிறது. எல்லைப்பகுதியில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட இந்தியாவும் சீனாவும் மெய் கட்டுப்பாட்டு பகுதியின் (டுடீஊ) எல்லை வரையறுப்பு குறித்து உடன்பாட்டிற்கு வர வேண்டியது அவசியம். 

2.109    வெறித்தனமான வலதுசாரி சக்திகளால் ‘சீன ஆதரவாளர்கள்’ என்று நமது கட்சிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எதிராக கட்டவிழ்த்து விடப்படும் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நமது கட்சி உணர்வுபூர்வமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம். சமூக ஊடகங்களில் இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட இத்தகைய பிரச்சாரங்கள் அனைத்துமே திருத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அப்பட்டமான பொய்களை பயன்படுத்தி பரப்பப்பட்ட போலிச் செய்திகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

அதிகரித்து வரும் போராட்டங்கள்

2.110      நமது 22வது கட்சிக் காங்கிரசுக்குப் பிந்தைய காலப்பகுதியின் குறிப்பிடத்தக்க அம்சம் என்பது மிகப் பிரம்மாண்டமான வகையில் அணிதிரட்டப்பட்ட மற்றும் தன்னிச்சையான மக்கள் போராட்டங்கள் ஆகும். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், விவசாயிகள் போராட்டம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஆகிய இந்தப் போராட்டங்களுக்கு கட்சி தீவிரமாக ஆதரவு அளித்ததோடு, தனது ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தியிருந்தது. இந்தப் போராட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் பெண்களின் பங்கேற்பு இருந்தது. இதில்  குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஷா`ஹீன் பாக்  ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.

2.111 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம்:  குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடனேயே, குடியுரிமை குறித்த அரசியல் சாசன ரீதியான வரையறையை அப்பட்டமாக மீறும் இந்த முயற்சியை கண்டித்து தன்னிச்சையான போராட்டங்கள் எழுந்தன. இந்தச் சட்டம் முஸ்லீம் சிறுபான்மையினரையே குறிவைக்கிறது என்பதோடு மத நல்லிணக்கம், மதச் சார்பின்மை ஆகிய குறிக்கோள்களின் அடித்தளங்களை உடைத்து நொறுக்குவதாக அமைகிறது என்றும் மிகச் சரியாகவே புரிந்து கொள்ளப்பட்டது. இந்துத்துவ படைகளின் தாக்குதலையும் எதிர்கொண்டு இளைஞர்கள் இந்தப் போராட்டங்களில் முன்னணி பங்கு வகித்தனர்.  கல்வி வளாகங்கள் பலவற்றிலும் இந்துத்துவ வகுப்புவாத கும்பல்கள் வன்முறை நிரம்பிய நேரடித் தாக்குதல்களை நடத்தியபோது காவல்துறை வெளிப்படையாகவே இந்துத்துவ வகுப்புவாத கும்பல்களின் பக்கம் நின்றனர். இந்தப் போராட்டம் மிக விரைவாகவே நாடு முழுவதிலும் பரவியது. மக்கள் இயக்கங்கள், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள், அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், அரசு முறை சாரா அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். நீடித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்  குறிப்பிடத்தக்கதாக அமைந்தது பகல்-இரவு வேறுபாடின்றி தொடர்ந்து  பலநாள் நடைபெற்ற ஷா`ஹீன் பாக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகும். நாடு முழுவதிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் இதேபோன்ற அமைதியான தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன. 

2.112  பெருந்தொற்றுப் பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து 2020 மார்ச்சில் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய பொதுமுடக்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இயக்கத்தை தொடர இயலாமல் நிறுத்தியது. எனினும் மோடி அரசின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக முதலாவது தீவிரமான மக்கள் இயக்கமாக இது அமைந்திருந்தது. 

2.113  வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம்: சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையில் விவசாயிகள் நடத்திய ஓராண்டு நீடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம், அதிகபட்ச லாபத்தைப் பெறுவதற்காக, விவசாயத் துறையை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவர, ஆளும் வர்க்கங்களால் வடிவமைக்கப்பட்ட பிற்போக்குத்தனமான விவசாய சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்ய மோடி அரசுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தி வெற்றி பெற்றது.  

2.114      2020ஆம் ஆண்டு நவம்பர் 26 முதல் பல்லாயிரக்கணக்கான, ஆண்களும் பெண்களும் என, விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஐந்து வெவ்வேறு பகுதிகளில் தங்கள் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர். எல்லைப் பகுதியை அடைவதற்கு முன்பாக அவர்கள் காவல்துறையின் ஒடுக்குமுறையை வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னேறினர். முற்றிலும் புதிய வகைப்பட்ட இந்தப் போராட்டம் முக்கியமாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகளை கவர்ந்திழுத்து வந்தது. உத்தரகண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றிலிருந்தும் விவசாயிகள் அணிதிரண்டு வந்திருந்தனர். மற்ற மாநிலங்களில் பெருந்திரளான கண்டன ஆர்ப்பாட்டங்களும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் இயக்கங்களும் நடைபெற்றன. இந்தப் போராட்டம் ஓராண்டிற்கும் மேலாக நீடித்தது. இந்தப் போராட்டத்தின்போது கடுமையான குளிர், நோய்கள் மற்றும் விபத்துகளால் 715 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்தக் காலப்பகுதியில் 2020 டிசம்பர் 8, 2021 மார்ச் 26 மற்றும் 2021 செப்டம்பர் 27 ஆகிய நாட்களில் நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. தொழிலாளர்-விவசாயிகளின் கூட்டு நடவடிக்கைகள் வளர்ச்சி பெறுவதையும் இந்தப் போராட்டம் கண்டது. மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்து 2020 நவம்பர் 26 அன்று நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தின் போதுதான் ‘டெல்லியை நோக்கிச் செல்வோம்!’ என்ற தங்களது முதல் அறைகூவலை விவசாயிகள் அமைப்புகள் விடுத்தன. 

2.115     நீடித்து நடைபெற்ற இந்தப் போராட்டம் தந்த அழுத்தத்தினால் சட்டமன்ற தேர்தலுக்கு சற்று முன்பாக இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும், அனைத்து பயிர்களையும், அனைத்து விவசாயிகளையும் உள்ளடக்கிய வகையில் சட்டபூர்வமான ஓர் உரிமையாக குறைந்தபட்ச ஆதரவு விலை (ஆளுஞ) என்ற முக்கியமான பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இது பற்றிய விவரங்களை இறுதிப்படுத்த ஒரு குழு உருவாக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்ட போதிலும், அந்தக் குழு இன்னமும் உருவாக்கப்படவில்லை. 

2.116      அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், சிறந்ததொரு வாழ்க்கைக்காகவும் தங்களது போராட்டங்களை முன்னெடுக்கின்ற அனைத்து பிரிவு மக்களுக்கும் ஊக்கம் தருவதாகவும் இந்த வெற்றிகரமான, வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் அமைந்திருந்தது. 

2.117     தொழிலாளர் போராட்டங்கள்: மோடி தலைமையிலான பாஜக அரசு, தற்போதுள்ள அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் ரத்து செய்துவிட்டு, தொழிலாளர் விதிமுறைகளைக் கொண்ட நான்கு சட்டங்களையும், பொதுக்காப்பீட்டை தனியார் மயமாக்க உதவும் சட்டத்தையும், பாதுகாப்பு தொடர்பான உற்பத்தியில் ஈடுபடும் அனைத்துத்தொழில்களையும் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் வேலைநிறுத்தங்களை தடை செய்யும் சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதோடு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின்கீழ் உள்ள நாட்டின் கட்டமைப்பு சொத்துக்களையும் கனிம வளங்களையும் கிட்டத்தட்ட இலவசமாக தனியாரின் கைகளில் ஒப்படைக்கும் வகையில் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட தேசிய சொத்து பணமாக்கல் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

2.118      நாடு தழுவிய அளவிலும் துறை அளவிலும் ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் தொழிலாளி வர்க்கம் இந்தக் கொள்கைகளை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. 22வது கட்சிக் காங்கிரசுக்குப் பின் வந்த காலப்பகுதியில், பெருந்தொற்றுக் காலம் மற்றும் அதையொட்டி 2020 மார்ச் மாதம் முதல் நடைமுறையில் இருந்து வந்த பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து போராட்ட முனைப்புடனேயே செயல்பட்டு வந்துள்ளது. 

2.119 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து சுயேச்சையான துறைவாரி கூட்டமைப்புகளை உள்ளடக்கிய கூட்டு தொழிற்சங்க மேடையின் பதாகையின் கீழ் 2019 ஜனவரி 8-9, 2020 ஜனவரி 8 மற்றும் 2020 நவம்பர் 26 என மூன்று முறை நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. நான்காவது பொது வேலைநிறுத்தம் 2022 மார்ச் 28-29 தேதிகளில் நடைபெறவுள்ளது. 

2.120      இத்தகைய பொதுவேலைநிறுத்தங்களோடு கூடவே நிலக்கரி, எஃகு, வங்கி மற்றும் காப்பீட்டு ஊழியர்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள், தொலைதொடர்பு, மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள், திட்ட தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தனியார் துறையில் அணிதிரட்டப்பட்ட துறைகளில் உள்ள தொழிலாளர்கள் கொரோனா பெருந்தொற்றுக் காலம் உள்ளிட்டு, இக்காலப்பகுதியில் வேலைநிறுத்தங்களிலும் , போராட்டங்களிலும் ஈடுபட்டனர். விசாகப்பட்டினம் எஃகு தொழிற்சாலை தொழிலாளர்கள் தனியார் மயமாக்கலுக்கு எதிராக மிக நீண்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இடதுசாரிகள் அல்லாத, தனியார் மயமாக்கலுக்கு முற்றிலும் ஆதரவாகவே இருந்து வந்த, பெரும்பாலான ஆளும்வர்க்கக் கட்சிகளையும் வெளிப்படையாக தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும், தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் வற்புறுத்தும் வகையில் பரந்து விரிந்த மக்கள் ஆதரவை அணிதிரட்டவும் அவர்களால் முடிந்துள்ளது. 

2.121      தொழிலாளர்-விவசாயிகளின் கூட்டுப் போராட்டங்கள்:  தொழிலாளர்- விவசாயிகளின் இயக்கங்கள் ஒன்றாகத் திரண்டு கூட்டு நடவடிக்கைகளை அதிகமான அளவில் மேற்கொள்வதையும் இக்காலப்பகுதியில் காண முடிந்தது. 2018 செப்டம்பர் 5 அன்று சுமார் 2 லட்சம் தொழிலாளர்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் டெல்லியில் அணிதிரண்டு மிகப் பிரம்மாண்டமான தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமைப் பேரணியை நடத்தினர். இதற்கு முன்பாக 2018 ஆகஸ்ட் 9 அன்று நாடு தழுவிய அளவில் வலுவாக நடைபெற்ற சிறைநிரப்பும் போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். 

2.122    தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையானது விவசாய சட்டங்களை அகற்ற வேண்டும்; குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும்; மின்சார திருத்த மசோதா திரும்பப் பெற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை எழுப்பியதெனில், சம்யுக்த கிசான் மோர்ச்சா தொழிலாளர் விதிமுறைகளை அகற்ற வேண்டும்; தனியார் மயமாக்கலை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை எழுப்பியது. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஒற்றுமை வலுப்படும் சூழலை இது உருவாக்கியது. 

2.123      வர்க்கரீதியான தாக்கங்கள்: இந்தப் போராட்டத்தின்போது சர்வதேச நிதி மூலதனத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் பெருமுதலாளி வர்க்கத்திற்கும் பணக்கார விவசாயிகளின் சில பகுதியினர் உள்ளிட்ட அனைத்து விவசாயி வர்க்கத்திற்கும் இடையே புதிய வர்க்க மோதல்கள் எழுந்தன. 

2.124      இரண்டாவதாக, ஒருபுறத்தில் பெரு முதலாளிகளுக்கும் மறுபுறத்தில் சிறு,குறு,நடுத்தர தொழில்களை நடத்திவரும் பெருமுதலாளிகள் அல்லாத பிரிவினருக்கும் இடையே, அதாவது ஆளும் வர்க்கக் கூட்டாளிகளுக்கு இடையே மோதல்கள் எழுந்தன.

2.125  மூன்றாவதாக, நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்பினை சீரழித்து விட்டு, அதன் இடத்தில் ஒற்றை அரசு கட்டமைப்பினை நிறுவி, நாட்டில் அரசியல்ரீதியாக தனது முழுமையான அரசியல் மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற பாஜகவின் முயற்சியானது ஒன்றிய அரசுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  மாநில அரசுகளுக்கும் இடையே மோதல்களை உருவாக்கி வருகின்றன. மாநில அரசுகளுக்குத் தலைமை தாங்கி வருகின்ற, நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கான ஆதரவு நிலைபாட்டில் ஊசலாடுகிற பெருமளவிற்கு நடுநிலை வகிக்கின்ற ஒரு சில மாநிலக் கட்சிகள் பாஜகவின் இந்த மேலாதிக்க முயற்சிகளின் விளைவாக, இந்த விவசாயிகளின் போராட்டத்தின்போது, எதிர்த்தரப்பிற்கு வரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயின. 

2.126      ஆளும் வர்க்கக் கூட்டாளிகளிடையே எழுந்துள்ள இத்தகைய மோதல்கள் உருவாக்கியுள்ள வாய்ப்புகளை சுரண்டப்படும் வர்க்கங்கள், குறிப்பாக தொழிலாளி வர்க்கம், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோர் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு எதிரான வர்க்கப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

2.127      தொழிலாளி வர்க்கத்தின் தொழிற்சங்க இயக்கம், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் ஒருங்கிணைப்போடு வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இதுபோன்ற வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதுபோன்ற வளர்ச்சிப் போக்குகள் முன்னதாகவே தொடங்கியிருந்தன என்பதோடு, இந்தப் பிரிவினரிடையே கூட்டு இயக்கங்களின் மூலம் 2018ஆம் ஆண்டிலிருந்தே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது. போராட்டங்களில் வளர்ந்து வரும் இந்த ஒற்றுமையை வரவிருக்கும் காலங்களில் மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். 

தொகுப்புரை

2.128      தொகுத்துக் கூறுவதெனில், கடந்த கட்சிக் காங்கிரசுக்குப் பின் வந்த காலமானது பாஜக தனது நிலையை வலுப்படுத்திக் கொள்வதைக் கண்டது. ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் கரமாகச் செயல்பட்டு வரும் பாஜக இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தத் தீவிரமாக முயன்று வருகிறது. நவதாராளவாத சீர்திருத்தங்களை அது தீவிரமாகப் பின்பற்றி வருவதோடு, எதேச்சாதிகாரத்தையும் வலுப்படுத்தி வருகிறது. அரசியல் அமைப்புச் சாசனத்தையும், அதனால் நிறுவப்பட்ட அமைப்புகளின் சுயேச்சையான தன்மையையும் பலவீனப்படுத்த திட்டமிட்ட முயற்சிகளையும் அது மேற்கொண்டு வருகிறது. 

2.129      அதேநேரத்தில், பெருந்தொற்றை தவறாகக் கையாண்டதற்கும், பொருளாதாரக் கொள்கைகளினால் திணிக்கப்பட்டுள்ள துயரங்களுக்கும் எதிராக வெகுமக்களின் அதிருப்தி அதிகரித்துக் கொண்டே வருகிறது. விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க, வெற்றிகரமான போராட்டம், தனியார் மயமாக்கலுக்கு எதிராகவும், தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கியதை எதிர்த்தும் மத்திய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் போராட்டங்களில் மேலெழுந்துவரும் ஒற்றுமை ஆகியவை ஒட்டுமொத்த தாக்குதலை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இவை அனைத்துமே வர்க்கப் போராட்டங்களை மேலும் கூர்மைப்படுத்த வழிவகுக்க வேண்டும். 

2.130      இக்காலத்தில், ஒன்றிய பாஜக அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ்ப்படிதலுள்ள ஒரு கூட்டாளியாக இந்தியாவின் நிலையை மேலும் மாற்றியுள்ளது. மேலும் பல்வேறு ராணுவ, கேந்திர ரீதியான ஒப்பந்தங்களிலும் குழுக்களிலும் அது இணைந்துள்ளது. இந்திய மக்களிடையே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வினை கட்சி தட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். 

அரசியல் கட்சிகளின் நிலைபாடு

2.131    பாஜக: இந்திய ஆளும் வர்க்கங்களின் பிரதானமான அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ்-ன் மிக வேகமாக விரிவடைந்து வரும் வலைப்பின்னலை பயன்படுத்திக் கொண்டு அது தனது செல்வாக்கை நாடு முழுவதிலும் பரப்பியுள்ளது. நாட்டில் மேலாதிக்கமானதொரு அரசியல் கட்சியாகவும் அது உருவெடுத்துள்ளது. 

2.132    2019ஆம் ஆண்டில் தனது அரசாட்சியை அமைத்த பிறகு, கார்ப்பரேட்-வகுப்புவாத கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் நவதாராளவாத சீர்திருத்தங்களை மிகத் தீவிரமாகப் பின்பற்றுவதில் பாஜக இறங்கியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான யுத்த தந்திர மற்றும் ராணுவ ரீதியான உறவுகளை வலுப்படுத்தி கீழ்நிலை கூட்டாளி என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. வகுப்புவாத பிளவினை மிக வேகமாக மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் எதேச்சாதிகாரத்தின் மூலம் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது.

2.133    மூன்று விதமான வழிமுறைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி மாறச் செய்வதன் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் தனது அரசினை உருவாக்க பாஜக முற்றிலும் ஜனநாயக விரோத, நேர்மையற்ற வழிமுறைகளை மேற்கொள்கிறது. இந்த மூன்று விதமான வழிமுறைகளாவன: முதலாவது பணத்தைக் காட்டியும், அதனோடு கூடவே பெரிய பதவிகளில் நியமனம் செய்வோம் என்ற ஆசை வார்த்தைகளை கூறியும் அவர்களை கவர்ந்திழுப்பது; இரண்டாவது, சிபிஐ/ அமலாக்கப் பிரிவு மற்றும் இதர மத்திய அமைப்புகளின் மூலம் அச்சுறுத்தல்கள் மற்றும் பயமுறுத்தல்களை மேற்கொள்வது; இறுதியாக, வழக்குகளை அவர்களின்மீது திணிப்பது; எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது.

2.134    பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களில் தனது நோக்கங்களை அடைவதில் பாஜக பின்னடைவை சந்தித்தது. ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்ட்ராவில் அதனால் அரசமைக்க முடியவில்லை. கேரளாவிலும்  அதற்கு முன்னர் இருந்த ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் கூட அதனால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க அது முயற்சித்தபோதிலும் மக்களால் அது புறக்கணிக்கப்பட்டது. எனினும் அதன் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்குவிகிதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தனது கூட்டணி கூட்டாளியின் கீழ் இருந்த மாநில அரசை தக்கவைத்துக் கொள்ள அது முயற்சித்த போதிலும் அஇஅதிமுக தோற்கடிக்கப்பட்டது. அசாமில் 0.86 சதவீத அளவில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதனால் தனது அரசை தக்கவைத்துக் கொள்ள முடிந்துள்ளது.

2.135    அது இப்போது 12 மாநிலங்களில் ஆட்சி செய்து வருவதோடு, மேலும் 6 மாநிலங்களில் ஆளும் கூட்டணியில் பங்கு வகிக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.

2.136    காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சியானது இந்திய ஆளும் வர்க்கங்களின் – அதாவது பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் ஆகியோரின் – நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாகும். அது தலைமை தாங்கி நடத்தி வரும் அரசுகளில் நவதாராளவாதக் கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

2.137    அதன் அரசியல் செல்வாக்கும், ஸ்தாபன பலமும் சரிந்து கொண்டே வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களிலும் கட்சித் தலைவர்கள் பலரும் பாஜகவிற்கு கட்சி மாறியுள்ளதன் விளைவாக, அது தற்போது தொடர்ச்சியான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. மதச்சார்பின்மையை அது பறைசாற்றும் அதே வேளையில் இந்துத்துவ சக்திகளுக்கு தத்துவார்த்த ரீதியான சவாலை திறம்பட கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் சமரசப் போக்கை அது மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் வலுக்குறைந்துள்ள நிலையில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அணிதிரட்ட முடியாத நிலையில் உள்ளது. 

2.138    பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், அதன் அடிப்படையான இணைப்பு என்பது ஆர் எஸ் எஸ்ஸூடன் இருப்பதை கணக்கில் எடுக்கும்போது, அதுவே பிரதான அச்சுறுத்தலாக விளங்குகிறது என 22வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தீர்மானம் (பாரா 2.89) குறிப்பிட்டிருந்தது. எனவே பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டையுமே சமமான அபாயம் என்பதாகக் கருத முடியாது. எனினும், காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் ரீதியான கூட்டணியை வைத்துக் கொள்ள முடியாது.

2.139    மாநில கட்சிகள்: தொடக்கத்தில் தங்கள் மாநிலத்தில் உள்ள முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களை முன்னெடுக்கும் அமைப்புகளாக தங்களை நிலைநிறுத்திக் கொண்ட மாநிலக் கட்சிகள்  அதன் பிறகு பெருமளவிற்கு நவதாராளவாத பாதையை ஏற்றுக் கொண்டன. தங்கள் மாநிலத்தில் தங்களது சொந்த நலனை பாதுகாத்துக் கொள்வதையே முக்கியமாகக் கொண்ட போதிலும், அடிக்கடி தங்கள் அரசியல் நிலைபாட்டை மாற்றிக் கொண்டு, அரசியல் சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்தின. எனினும், கூட்டாட்சியின் மீதான தாக்குதல் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மாநில அரசுகளுக்குத் தலைமை தாங்கிவரும் பல மாநில கட்சிகளுக்கும் பாஜக உடனான மோதல்கள் கூர்மையடைந்து வருவதையும் காண முடிகிறது.

2.140    தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி பாஜக – அஇஅதிமுக கூட்டணியை தோற்கடித்து ஆட்சியை அமைத்துள்ளது. பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் முக்கிய மாநில கட்சிகளாக விளங்குவதோடு, தங்கள் மாநிலங்களில் பாஜகவிற்கு எதிரான முக்கிய பங்கினையும் ஆற்றி வருகின்றன. தேசிய காங்கிரஸ் கட்சி மகாராஷ்ட்ராவில் அரசு அமைக்க காங்கிரஸ் மற்றும் சிவசேனாவுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு அந்த மாநிலத்தில் பாஜக அரசு அமைப்பதை தடுத்தது. தேசிய காங்கிரஸ் கட்சி கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிராக மதசார்பற்ற, ஜனநாயக ரீதியான நிலைபாட்டினை மேற்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைப் போல ஒரு சில மாநிலங்களில் சிறிய மாநில கட்சிகள் சமூக ஒடுக்குமுறை தொடர்பான பிரச்சனைகளை கையிலெடுத்து செயல்பட்டு வருகின்றன.

2.141     அதேநேரத்தில், பாஜகவின் அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள், மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றால் ஒரு சில மாநில கட்சிகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் போன்ற கட்சிகள் பெருமளவிற்கு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில் இதர பிரச்னைகளில்  நடுநிலைமையை பின்பற்றி வருகின்றன. தெலுங்கானாவின் டி ஆர் எஸ் கட்சி தற்போது ஒரு சில பாஜக எதிர்ப்பு நிலைபாடுகளை எடுத்து வருகிறது. பாஜகவின் பாரம்பரியமான கூட்டாளிகளான சிவ சேனா மற்றும் அகாலி தளம் போன்றவை தங்களது மாநிலங்களில் நிலவும் மோதல்களின் விளைவாக பாஜகவிடமிருந்து விலகி வந்துவிட்டன. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அஇஅதிமுக ஆகிய இரு கட்சிகளும் இப்போதும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்பு அங்கம் வகித்த திர்ணாமூல் காங்கிரஸ் இன்று பாஜகவிற்கு எதிராக நிற்கிறது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான, இடதுசாரிகளுக்கு எதிரான நிலைபாட்டை அது தொடர்வதோடு, அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான சக்திகளின் தலைவராக இருக்கவும்  ஆசைப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான தெலுகு தேசம் பெரும்பாலும் பாஜக பக்கமே சாய்ந்து நிற்கிறது.

2.142    ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக மதச்சார்பின்மையைப் பாதுகாக்கவும் நடைபெறும் பொதுவான போராட்டங்களில் அவர்கள் சேர விரும்பும்போது மாநில கட்சிகளுடன் நாம் ஒத்துழைப்பை விரும்புகிறோம். எனினும் அவர்கள் குறித்த நடைமுறைத் தந்திர அணுகுமுறையை வகுக்கும்போது மாநிலத்தில் அவர்களின் அரசியல் நிலைபாட்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.143    மாநிலக் கட்சிகள் அரசுகளுக்குத் தலைமை தாங்கும் மாநிலங்களில், நாம் எதிர்த்துப் போராடும் கொள்கைகளின் மீது, அத்தகைய கொள்கைகளுக்கு எதிராக சுயேச்சையாகவும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்துமாக நாம் மக்களை அணிதிரட்ட வேண்டும். எனினும் இந்த அரசுகளை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுடன் நாம் சமமாகக் கருதுவதில்லை.

2.144    ஜமாத்-இ-இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற முஸ்லீம் தீவிரவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புகளும் அவற்றின் அரசியல் முன்னணிகளும் இந்துத்துவா சக்திகளின் கொடூரமான இலக்குகளின் பின்னணியில் சிறுபான்மை சமூகத்தினரிடையே உள்ள அந்நியப்படுத்தப்பட்ட உணர்வையும் பாதுகாப்பற்ற உணர்வையும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. எனினும், அவர்களின் செயல்பாடுகள் இந்துத்துவா வகுப்புவாத சக்திகளுக்குத்தான் உதவுவதாக அமைகின்றன. ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதியாக பாதுகாத்து நிற்பதோடு அவர்களை மதச்சார்பற்ற மேடையை நோக்கி அணிதிரட்டுவது மிகவும் முக்கியமானதாகும்.

2.145    இடதுசாரி கட்சிகள்: நாடுதழுவிய அளவில் ஐந்து இடதுசாரி கட்சிகளும் இணைந்து பல்வேறு பிரச்சனைகளில் நடவடிக்கை மற்றும் போராட்டங்களுக்கு கூட்டாக அழைப்பு விடுத்து வந்துள்ளன. பெருந்தொற்று காரணமாக பயனுள்ள செயல் திட்டங்கள் மற்றும் பெரிய அணிதிரட்டல்கள் சாத்தியமில்லாமல் போனது. இடதுசாரிகளின் கூட்டு முயற்சிகள், இடதுசாரி மாற்று பற்றிய நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்த தேவையாகும். இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்த இந்த முயற்சிகள் தொடர வேண்டும். இதற்கு தேவையான முன்முயற்சியை கட்சி எடுக்க வேண்டும்.

2.146    பீகாரில் தேர்தல் ரீதியாக இடதுசாரிகளால் ஓரளவிற்கு முன்னேற முடியும். எனினும் பல்வேறு வகையான அரசியல் நிலைபாடுகள் நிலவுகின்றன. ஆர்எஸ்பி மற்றும் அகில இந்திய ஃபார்வார்ட் ப்ளாக் கட்சிகள் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் உள்ள அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் இடது முன்னணியில் அங்கம் வகிக்கின்றன. சிபிஐ(எம்.எல்) மேற்கு வங்கத்தில் வேறுபட்ட தேர்தல் உத்தியை மேற்கொண்டது. எனினும் இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்த பொதுவானதொரு புரிதலுக்கு வர முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். 

2.147    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: நாட்டில் மேலாதிக்கமான அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்து, ஆர்எஸ்எஸ் வலைப்பின்னலானது மிக வேகமாக விரிவடைந்து கொண்டு வரும் இக்காலப் பகுதியில் நமது கட்சியின் சுயேச்சையான வலிமை, அரசியல் ரீதியாக தலையீடு செய்யும் நமது திறன் ஆகியவை மேலும் சரிந்துள்ளது.

2.148     இந்தக் காலப்பகுதியில், கூட்டுப் போராட்டங்களை ஆதரிப்பதில் கட்சி தீவிரப் பங்காற்றியுள்ளது – முதலில், ஊஹஹ/சூஞசு/சூசுஊ க்கு எதிராகவும், பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க, வெற்றிகரமான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், புதிய தாராளமயக் கொள்கைகளின் தாக்கத்திற்கு எதிராகவும்  வெறுப்பு மற்றும் வன்முறையின் பரவலுடன் வகுப்புவாத பிளவைக்  கூர்மை படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கவும், தொழிற்சங்கங்கள் மற்றும் இதர வெகுஜன அமைப்புகளின் அறைகூவலுக்கு இணங்க நடைபெற்ற பல்வேறு வேலைநிறுத்தங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றிலும் கட்சி  தீவிர பங்காற்றியுள்ளது. கொரோனா பெருந்தொற்றின்போது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்சி தீவிரமாகச் செயல்பட்டது. 

2.149    கம்யூனிச எதிர்ப்பு தத்துவார்த்த நிலைப்பாட்டின் அடிப்படையில்  ஆர்எஸ்எஸ்-பாஜக, இடதுசாரிகளை, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, குறி வைத்து வருகிறது. நமது வலுவான பகுதிகளாக இருக்கும் மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் முன்னணி ஊழியர்கள் மற்றும் கட்சி அலுவலகங்களின் மீது அவர்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தினர்.

2.150    கேரளா: கேரளாவில் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் தாக்குதல்களும் நமது முன்னணி ஊழியர்களைப் படுகொலை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடது ஜனநாயக முன்னணி அரசினை நிலைகுலையச் செய்வதற்கான அதன் முயற்சிகளில்,  மத்திய அமைப்புகளை மிக மோசமான வகையில் பயன்படுத்திக் கொள்வதிலும் பாஜக ஈடுபட்டது. இத்தகைய முயற்சிகளை காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரித்ததோடு நமது முன்னணி ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் ஆகியவற்றையும் செயல்படுத்தியது.

2.151    சிபிஐ(எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 2021ல் மீண்டும் கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு தேர்தலிலும் கேரள வாக்காளர்கள் எப்போதும் அரசாங்கத்தை மாற்றி வந்துள்ள நிலையில் இது முன்னோடியில்லாத ஒரு வெற்றியாகும். இத்தேர்தலுக்கு முந்தைய இடது ஜனநாயக முன்னணி அரசின் செயல்பாடும், இந்த வெற்றியும் நமது கட்சிக்கு பலத்தையும் மதிப்பையும் அளித்துள்ளன.

2.152  இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் முன்மாதிரியான பணி, மக்களின் வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் தரமான மாற்றங்களை ஏற்படுத்தியது. இடது ஜனநாயக முன்னணி அரசு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் சரியான முறையில்  செயல்படுத்தியது. ஒரு கூட்டாட்சி அமைப்பின் வரம்புகளுக்குள் ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும் என்பதை  மக்களை மையமாகக் கொண்ட மாற்றுக் கொள்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. மத  நல்லிணக்கத்தின் அடிப்படையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. முக்கியமாக, ஆர்எஸ்எஸ் – பாஜக ஆபத்துக்கு எதிரான போராட்டம்  மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் பாஜகவுடனான சந்தர்ப்பவாத ஒத்துழைப்பை அம்பலப்படுத்தும் ஆகியவற்றை உள்ளடக்கிய தெளிவான அரசியல் நிலைபாடு 2021 சட்டமன்றத் தேர்தலில் முன்னோடியில்லாத இந்த வெற்றிக்குப் பங்காற்றியது.

2.153     கேரளாவில் தொடர்ச்சியான தேசிய பேரிடர்களின் போது மக்களுக்கு உதவி செய்ததில் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணியின் பங்கு மிகவும் பாராட்டுதலுக்கு ஆளானது. கொரோனா பெருந்தொற்று வெடித்தெழுந்தபோது அதன் பொது சுகாதார அமைப்பின் உதவியுடன், மிகவும் திறமையாகக் கையாளப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்தும் கேரளாவின் முயற்சிகள் பாராட்டைப் பெற்றன. பொது சுகாதார அமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஈடுபாட்டின் மூலம் சோதனை, தடமறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் அடுத்தடுத்த கோவிட் அலைகள் திறம்பட சமாளிக்கப்பட்டுள்ளன.

2.154    மேற்கு வங்கம்:  மேற்கு வங்கத்தில், பாசிச தன்மை கொண்ட தாக்குதல்கள் மூலம் நமது கட்சி கடுமையான அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்பும் எழுந்தது. 2011 முதல் 2021 வரை 229 தோழர்களை நாம் இழந்துள்ளோம். இந்த காலகட்டத்தில், 1,02,000 க்கும் மேற்பட்ட நமது கட்சி உறுப்பினர்கள், அனுதாபிகள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். நகர்ப்புறங்களில் அவர்களைக் கவனிப்பதற்கான ஏற்பாடுகளை கட்சி செய்ய வேண்டியிருந்தது. நமது கட்சி உறுப்பினர்கள் மற்றும் அனுதாபிகளில் 1,30,000 க்கும் மேற்பட்டவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் விளைவாக துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த அடக்குமுறையை துணிச்சலாக எதிர்கொண்டு, கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தி வருவதோடு, மத்திய மற்றும் மாநில அளவிலான அறைகூவலின் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் ஏராளமான மக்களைத் திரட்டி வருகிறது.

2.155    மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தீவிர சுயவிமர்சன சுயபரிசோதனை செய்து அவற்றிலிருந்து பாடங்களை கற்றது. இவை கட்சி முழுமையிலும்  தன்வயப் படுத்தப்பட்டு, உண்மையாக செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது.

2.156    திரிபுரா: மாநில அரசின் பாதுகாப்பை வைத்துக் கொண்டு பாஜகவினால் கட்டழித்து விடப்படும் பாசிச தன்மை வாய்ந்த தாக்குதல்களை நமது கட்சி சந்திக்க வேண்டியிருந்தது. இதுவரை 22 கட்சி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பாக மக்களின் பிரச்சனைகளின் மீது நமது வெகுஜன அமைப்புகளின், நமது கட்சியின் போராட்டங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களின் விளைவாக மாநிலம் முழுவதிலும் உள்ள நமது 47 அலுவலகங்களின் மீது பரவலான தாக்குதல்களையும் தீவைப்புகளையும் பாஜக கட்டவிழ்த்து விட்டது. கட்சி உறுப்பினர்கள், அனுதாபிகளின் நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள், புத்தகங்கள், அறைகலன்கள் ஆகியவை அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் பல தோழர்களும் காயமுற்றனர். ஒரு சிலர் மருத்துவமனையில் சேர வேண்டியிருந்தது.

2.157    மாநில பாஜக அரசாங்கத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்து தேர்தல்களும் ஒரு கேலிக்கூத்தாக மாற்றப்பட்டு, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவோ அல்லது வாக்களிக்கவோ முடியாமல் தடுக்கப்பட்டனர். தேர்தல்கள் என்பவை பெருமளவிலான வன்முறை, பயங்கரவாதம் மற்றும் கிட்டத்தட்ட முழு மோசடியை குறிப்பதாகவே மாறியுள்ளன.

2.158    முன்னதாக, பழங்குடியின தன்னாட்சி மன்றத் தேர்தல்களிலும், பின்னர் நடைபெற்ற 334 உள்ளாட்சி வார்டுகளுக்கான தேர்தல்களிலும், நமது தோழர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்ததோடு, அவ்வாறு மனுதாக்கல் செய்தவர்களை வாபஸ் பெற வேண்டும் என  மிரட்டல் விடுத்து பெரிய அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பாஜக 112 வார்டுகளை போட்டியின்றி வென்றது. மீதமுள்ள 222 வார்டுகளில், ஐந்தைத் தவிர, பெரிய அளவிலான மோசடி மூலம் அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. இத்தகைய சூழ்நிலையிலும் இடது முன்னணி கிட்டத்தட்ட 20 சதவீத வாக்குகளைப் பெற்றது.

இடது ஜனநாயக முன்னணி

2.159    இடது ஜனநாயக முன்னணியை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு கட்சி முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தை 21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தீர்மானம் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:

    “இத்திசைவழியில் எடுத்து வைக்கவேண்டிய அடிவைப்பு என்பது பொதுவானதொரு கோரிக்கை சாசனத்துடன் பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகளை உள்ளடக்கிய பொதுவான மேடை ஒன்றை உருவாக்குவதே ஆகும். தொழிலாளர்கள்- விவசாயிகளின் கூட்டுப் போராட்டங்களுக்கு சிறப்பான அழுத்தம் தரப்பட வேண்டும்.” (21வது காங்கிரசின் அரசியல் தீர்மானம் பாரா 2.87)

    “தற்போது, இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணிக்குள் இழுக்கப்படக்கூடிய சக்திகளின் மையக்கருவாக இருப்பது இடதுசாரி கட்சிகளும் அவற்றின் வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள், இடது குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள்; மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளுக்குள் பல்வேறு கட்சிகளிலும் ஜனநாயகப் பிரிவுகளிலும் சிதறி கிடக்கும் சோசலிஸ்டுகள்; ஆதிவாசிகள், தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஜனநாயக அமைப்புகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளை எடுத்துச் செல்லும் சமூக இயக்கங்கள். முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிரான மற்றும் முற்றிலும்  மாறுபட்ட ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த சக்திகள் அனைத்தையும் ஒரு கூட்டு மேடைக்குக் கவர்ந்திழுப்பதன் மூலம் மட்டுமே இடது  ஜனநாயக முன்னணியை நோக்கிய இயக்கம் ஒரு உறுதியான வடிவத்தை எடுக்க முடியும்”.(22வது காங்கிரஸின் அரசியல் தீர்மானம் பாரா 2.110)

2.160    இந்தப் புரிதலை முன்னெடுத்துச் சென்று, இடதுசாரி வெகுஜன அமைப்புகளின் கூட்டுத் தளத்தை – ஜன் ஏக்தா ஜன் அதிகார் அந்தோலன் (துநுதுஹஹ) – உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், பல்வேறு காரணங்களால் திட்டமிடப்பட்ட முறையில் இது செயல்பட முடியவில்லை. சிறப்பான முறையில் செயல்படும் கூட்டு மேடைகளை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

2.161    வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டுப் போராட்டங்கள் உருவாக்கப் பட்டன.  தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் வலுவான ஒற்றுமையுடன் நடந்த  கூட்டுப் போராட்டங்கள் சிறப்பான முன்னுதாரணமாகும். விவசாய அமைப்புகளின் பரந்த ஒற்றுமை என்பது ஆழமடைந்து வரும் விவசாய துயரத்திலிருந்து வெளிப்படும் பொதுவான கோரிக்கைகளின் அடிப்படையில் உருவானது ஆகும்.அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (ஹஐமுளுஊஊ) நாடுதழுவிய ஒரு பிரச்சாரத்தை தொடங்கியதோடு, 500 விவசாய அமைப்புகளைக் கொண்டு ஒரு தேசிய மாநாட்டையும் நடத்தியது. இந்த மாநாட்டில்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தி முடித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா உருவானது.

2.162    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விவசாயிகள் போராட்டத்துடன் பல்வேறு வெகுஜன அமைப்புகள், சமூக இயக்கங்கள் மற்றும் அறிவுஜீவிகள் வெளிப்படுத்திய ஒற்றுமை உணர்வு உறுதி படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் இடதுசாரி  ஜனநாயக முன்னணியின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய சக்திகளை அடையாளம் காண்பது கணிசமான அளவில் செய்யப்படவில்லை. இது தொடரப்பட வேண்டும் என்பதோடு உடனடியாகச் செய்யப்படவும் வேண்டும். இந்த அடிப்படையில், முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவக் கொள்கைகளுக்கு ஒரே உண்மையான மாற்றாக இடது  ஜனநாயக வேலைத்திட்டமே உள்ளது என்பதை முன்னிறுத்தும் வகையில் போராட்டங்களில் ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும்.

இடது ஜனநாயகத் திட்டம்

2.163    முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு மாற்று குறித்த சித்திரம் இடது ஜனநாயக திட்டத்தில் கீழ்கண்டவற்றின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்:

அ)    பொருளாதார இறையாண்மையைப் பாதுகாப்பது: தனியார் மயமாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளை மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருதல்; குடிநீர், மின்சாரம், பொதுப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய அடிப்படை சேவைகளை மக்களுக்கு உறுதிப்படுத்துதல்; தேசிய பணமாக்கல் திட்டம் மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்மயமாக்கும் திட்டம் ஆகியவற்றை ரத்து செய்வது; கூட்டுக் களவாணி முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டுவது; சிறு,குறு,நடுத்தர தொழில்களை வளர்த்தெடுப்பது; முறைசாரா துறைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது; பெரும் பணக்காரர்களின் மீது வரி விதிப்பது; சமநிலையான வளர்ச்சியை மீட்டெடுப்பது; பெரிதும் தேவைப்படுகின்ற உள்கட்டமைப்பினை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உள்நாட்டு கிராக்கிக்கு ஊக்கமளிக்கவும் பொது முதலீட்டை அதிகரிப்பது; நிலச்சீர்திருத்தத்தை அமலாக்குவது; கூட்டுறவு  விவசாயம், உற்பத்தி, சந்தைப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் விவசாயத்தை மேம்படுத்துவது;  இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது.

ஆ)    இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையும் இந்திய குடியரசின் மதசார்பற்ற, ஜனநாயகபூர்வமான குணாம்சத்தையும் பாதுகாப்பது; அரசியல் அமைப்புச் சட்ட  அடிப்படைத் தூண்களை வலுப்படுத்தும் வகையில் மாற்றுக் கொள்கைகளை முன்வைப்பது; அரசிடமிருந்தும் அரசியலிலிருந்தும் மதத்தை தனிமைப்படுத்துவது என்ற மதச்சார்பின்மையின் அடிப்படையை  அரசியல் அமைப்புச் சட்ட கோட்பாடு என தெளிவாக எடுத்துரைப்பது, வகுப்புவாத ஒருமுகப்படுத்தலின் அடிப்படையிலான வெறுப்புப் பிரச்சாரங்கள், வன்முறைகள் ஆகியவை தடை செய்யப்பட வேண்டும், மதவழி  சிறுபான்மையினரின் வாழ்க்கை, சுதந்திரங்கள் மற்றும் உரிமைகள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு; தீவிர வகுப்புவாத வெறிபிடித்த நபர்களை அரசு அமைப்புகளிலிருந்து நீக்கி அமைப்பை தூய்மைப்படுத்தல்; சட்டவிரோதமான தனியார் படைகள், கண்காணிப்பு குழுக்கள் போன்ற அமைப்புகளை தடை செய்தல்; கும்பலாகத் தாக்கிக் கொலை செய்வதற்கு எதிராக சட்டம் இயற்றுதல்; குடியுரிமை திருத்தச் சட்டம்/ தேசிய மக்கள் பதிவேடு/தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ரத்து செய்தல்.

இ)    அரசியல் அமைப்புச் சட்டத்தால் உறுதியளிக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பளிப்பது. தற்போதைய வடிவத்தில் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வரும் உவாபா (ருஹஞஹ) சட்டத்தை நீக்குவது; தேச துரோக சட்டம், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் (ஹகுளுஞஹ), தேசிய பாதுகாப்பு சட்டம் (சூளுஹ) ஆகியவற்றை நீக்குவது; தூக்குதண்டனையை ரத்து செய்வது; தேர்தல் பத்திரத் திட்டத்தை தடை செய்வது; பகுதியளவு பட்டியல் முறையுடன் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையினை அறிமுகப்படுத்துவது உள்ளிட்டு தேர்தல் சீர்திருத்தங்களை அமலாக்குவது; கட்டாய சமூக தணிக்கை மற்றும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவது; தகவல் பெறும் உரிமை சட்டத்தினை கண்டிப்பான முறையில் அமல்படுத்துவது.

ஈ)    கூட்டாட்சி: மாநிலங்களுக்கு மேலும் அதிக அதிகாரங்களுடன் மத்திய-மாநில உறவுகளை சீரமைத்தல்; மத்திய அரசின், மேல்வரிகள், தீர்வைகள் ஆகியவற்றை (மாநிலங்களுடன்) பகிர்ந்து கொள்வதன் மூலம் நிதிசார்ந்த கூட்டாட்சியை வலுப்படுத்தல்; மத்திய அரசின் வரியல்லாத வருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தக்க நிதியாக மாற்றியமைத்தல்; மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், திட்டக் குழு, தேசிய வளர்ச்சிக் கவுன்சில் ஆகியவற்றை உயிர்ப்பிப்பது; ஆளுநர் பதவியின் தேவையை மறு ஆய்வு செய்வது; பொருத்தமான பாதுகாப்பு அம்சங்களுடன் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவை மாற்றியமைப்பது; அதன் சுயாட்சி உரிமையோடு ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தினை மீண்டும் அளிப்பது; அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகளை மீண்டும் உயிர்ப்பிப்பது.

உ)    தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகள்: தனித்திறன் அற்ற தொழிலாளர்களுக்கான சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ. 21,000க்கு குறையாமல் இருப்பதையும் அது நுகர்வோர் விலை குறியீட்டெண்ணுடன் இணைக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவது;  தொழிலாளர் சம்பந்தப்பட்ட 4 சட்ட தொகுப்புகளை  ரத்து செய்வது; ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்க அங்கீகாரத்தை உறுதிப்படுத்தல்; சமூக பாதுகாப்பிற்கான உறுதி; நிர்வாகத்தில் தொழிலாளர்களின் பங்கேற்பு; ஊ2+50 சதவீத விதிமுறையின் அடிப்படையில் அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து பயிர்களுக்கும்  குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமானதாகச் செய்வது; விவசாயிகளுக்கு ஒன்றிய அரசின் மூலம் கடன் தள்ளுபடி; விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவை குறித்து மத்திய சட்டத்தை நிறைவேற்றுவது.

ஊ)    சமூக நீதி: சாதி அமைப்பு முறை மற்றும் அனைத்து வகையான சாதிய ஒடுக்குமுறைகளையும் ஒழித்தல்; பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகள்; பட்டியலின, பழங்குடியினருக்கான சிறப்புக் கூறு துணை  திட்டத்திற்கான மத்திய சட்டத்தை இயற்றுதல் மற்றும் அதன் அமலாக்கத்தைக் கண்காணிக்க அதிகாரம் பெற்ற குழு அமைத்தல்; வன நிலங்கள், வாழ்வாதாரம் மற்றும் கலாச்சாரத்திற்கான பழங்குடிகளின் உரிமைகளுக்கான அரசியலமைப்பு சட்டரீதியான மற்றும் சட்ட விதிகளின் பாதுகாப்பு; தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றுதல்; சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பினை மேற்கொள்ளுதல்; இட ஒதுக்கீடுகளுக்கு உட்பட்ட அனைத்து பணியிடங்களிலும் உள்ள காலி இடங்கள் அனைத்தையும் நிரப்புதல்; மனிதர்களே நேரடியாக மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான தடையை கண்டிப்பான வகையில் அமலாக்குதல்; தீண்டாமை குற்றங்களுக்கு  கடுமையான தண்டனை வழங்குவது; வன உரிமை சட்டத்தை கண்டிப்பாக அமலாக்குவது; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கணக்கெடுக்கும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது.

    பெண்கள்: பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்குவது; பெண்களுக்கு சமமான உரிமைகள் மற்றும் சமமான ஊதியத்தை உறுதிப்படுத்துவது; பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக கொடூரமாக அதிகரித்து வரும் வன்முறைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது; இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை தடுக்கவும்,  தண்டிக்கவுமான கறாரான நடவடிக்கைகளை எடுப்பது; ‘சாதி ஆணவக் கொலைகளை’ தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது.

    குழந்தைகள்: அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை பரவலாக்குவது; கல்வி பெறும் உரிமையை கண்டிப்பாக அமலாக்குவது; அனைத்து வகையான குழந்தைத் தொழிலாளர் முறைகளையும் தடை செய்வது; குழந்தை கடத்தலுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிப்பது.

    திருநர் மற்றும் மாற்றுப் பாலியல் தேர்வாளர்: மாற்றுப் பாலியல் தேர்வாளர் பகுதியினை சார்ந்த  குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் முன்னெடுத்துச் செல்வது; இவர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில் சட்டபூர்வமான நடவடிக்கைகள் உள்ளிட்ட கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது.

    மாற்றுத் திறனாளிகள்: மாற்றுத் திறனுடையோரின் உரிமைகள் மற்றும் மன நல பாதுகாப்பு சட்டத்தினை கண்டிப்பாக அமலாக்கும் வகையில் போதிய பட்ஜெட் நிதி ஒதுக்கீடை செய்வது; மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கொள்கை மற்றும் இதர சட்டங்களை  மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த ஐநா சிறப்பு உடன்படிக்கைக்கு  உகந்த வகையில்  திருத்தி அமைப்பது; இப்பிரிவினருக்கு உரிய, எனினும் நிரப்பப்படாமல் உள்ள காலி இடங்களை முழுமையாக நிரப்புவது; இப்பிரிவினருக்கு போக்குவரத்து தகவல் தொழில்நுட்ப சேவைகள் எளிதாக பெறும் வகையில் கட்டமைப்பினை உருவாக்குவது.

எ) மக்கள் நலன்

அ)    அனைவரையும் உள்ளடக்கிய பொது விநியோகத் திட்டம்; அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் வழங்குவது; அனைவருக்குமான உதவி தொகை, ஓய்கூதியம் வழங்குவது; பாதுகாப்பான குடிநீர், சுற்றுப்புற சுகாதார வசதி மற்றும் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளுக்கான வீட்டு வசதி.

ஆ)    வேலைவாய்ப்பு: மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலைகளை விரிவுபடுத்துவது மற்றும் ஊதியங்களை அதிகரிப்பது; நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான சட்டத்தை நிறைவேற்றுவது; வேலையில்லா காலத்திற்கான நிவாரணத் தொகை வழங்குவது.

இ)    புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக அகற்றுவது; அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளை வலுப்படுத்தும் வகையிலும் அறிவியல் பூர்வமான உணர்வை வளர்க்கவும் பாடத் திட்டம் மற்றும் பாடங்களை மாற்றி அமைப்பது; தனியார் கல்வி நிறுவனங்களை ஒழுங்கமைப்பது; ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6 சதவீத தொகையை கல்விக்காக ஒதுக்கீடு செய்யும் வகையில் மத்திய நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பது; கல்வியில் நிலவும் டிஜிட்டல் இடைவெளியை அகற்றுவது.

ஈ)    அனைவருக்குமான பொது சுகாதார வசதித் திட்டத்தை அரசு நிதியுதவியுடன் மேற்கொள்வது; சுகாதாரத்திற்கான ஒன்றிய அரசின் செலவை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் குறைந்தபட்சம் 5 சதவீதமாக அதிகரிப்பது; அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைப்பது; தனியார் மருத்துவ ஏற்பாடுகளை ஒழுங்கமைப்பது.

உ)    சுற்றுச் சூழல்: ஒழுங்குமுறையின் மூலம் நச்சு வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைத்து பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்குவது; மறுசுழற்சி எரிசக்தியை ஊக்கப்படுத்துவது; அனைவருக்கும் எரிசக்தி சமத்துவத்தை உறுதி செய்வது; காடுகள் மற்றும் நீர்ப்பிடிப்பு நிலங்களை பாதுகாப்பது; சுற்றுப்புற மாசினை சோதித்து, அதை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது.

ஊ)    கலாச்சாரம் மற்றும் ஊடகம்: மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகபூர்வமான   கலாச்சாரத்தை வளர்ப்பது; வகுப்புவாத மற்றும் பழமைவாத தாக்கங்களை கட்டுப்படுத்த மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துதல்; நாட்டுப்புற கலைகள் உள்ளிட்ட கலாச்சார வடிவங்கள் மற்றும் மரபுகளின் பன்முகத்தன்மையை வளர்த்தெடுப்பது; அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள  அனைத்து மொழிகளும் சமமாக ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். கலாச்சார     ஆளுமைகள் மற்றும் அவர்களது ஆக்கங்கள் மீதான வகுப்புவாத சக்திகளின் தாக்குதல்களை உறுதியாகக் கையாளுதல்; கட்டற்ற மென்பொருளை ஊக்குவித்தல்; 

    பத்திரிக்கை சுதந்திரத்தைப் பாதுகாத்தல்; பொது ஒலிபரப்பு சேவைகளை வலுப்படுத்தல்;       பல்வகை ஊடக  உரிமையையும் ஏகபோகத்தையும் தடுப்பது; ஊடகங்களுக்கென              சுயேச்சையான ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவது; ஊடக ஊழியர்களின்           பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்.

எ)    வெளியுறவுக் கொள்கை: இந்தியாவின் சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையை கண்டிப்பான முறையில் உறுதிப்படுத்துதல்; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ்நிலை கூட்டாளி என்ற இந்தியாவின் தற்போதைய அந்தஸ்தை மாற்றியமைத்தல்; யுத்த தந்திரரீதியான, பாதுகாப்பு தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்தல்; அமெரிக்க யுத்த தந்திர நலன்களையும் விருப்பங்களையும் முன்னெடுக்கும்படியான பிரதேச ரீதியான, சர்வதேச ரீதியான கூட்டணிகள் அனைத்திலிருந்தும் விடுபடுவது.

கட்சியை வலுப்படுத்துவது

2.164    மேற்கு வங்கத்தில் நமது வெகுஜன செல்வாக்கு மிக மோசமான வகையில் அரித்துப் போயுள்ளது. திரிபுராவிலும் கூட இத்தகைய அரிப்பு நடைபெற்று வருகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரையில் பெற்றதிலேயே மிகக் குறைவான வாக்குகளை நாம் பெற்றிருக்கிறோம். 16வது கட்சி காங்கிரசில் இருந்தே கட்சியின் சுயேச்சையான வலிமையையும் செல்வாக்கையும் வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து நம் சுட்டிக் காட்டி வந்திருக்கிறோம்.

2.165    கட்சியின் 17வது காங்கிரஸின் அரசியல் தீர்மானம் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:

    “நமது எதிர்காலத்திற்கான திசைவழியை தீர்மானிக்கும்போது கட்சியின் சுயேச்சையான பங்கினையும் செல்வாக்கையும் எவ்வாறு வலுப்படுத்துவது என்பதுதான் நமது முக்கிய கவனமாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மிக நீண்ட காலமாகவே நாம் பெரிதளவிற்கு முன்னேறவில்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.” (2.80)

2.166    22வது கட்சிக் காங்கிரசுக்குப் பிறகு நடந்த தேர்தல் முடிவுகள் குறித்த பரிசீலனை, மற்ற விஷயங்களோடு கூடவே, நமது சுயேச்சையான பலம் மற்றும் அரசியல் தலையீட்டுத் திறன்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த அடிப்படைப் பிரச்சினையை எடுத்துக்காட்டியது. இது முக்கியமான ஒரு விஷயமாகும். இது தொடர்பாக கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக பல முடிவுகளை கட்சி எடுத்துள்ளது. இவை அனைத்தும் கட்சியால் உள்வாங்கப்பட்டு, சரியான முறையில் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.

2.167    இந்தச் சரிவை தடுத்து நிறுத்தி நிலைமையை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகும். இதைச் செய்யாமல் நமது புரட்சிகர கடமைகளில் வெற்றியடைய நம்மால் முன்னேற இயலாது. கீழ்க்கண்ட விஷயங்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியமாகும்:

அ)    அரசியல் ரீதியான, தத்துவார்த்த ரீதியான, ஸ்தாபன ரீதியான வேலைகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். மக்களுடன் உயிரோட்டமான  தொடர்புகளை உருவாக்கவும், நீடித்த வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களை உருவாக்கவும், அவற்றை ஒருங்கிணைத்து  நமது அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தவும்,  அனைத்து முனை ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் எழுத்தறிவு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்தல்; நூலகங்களை அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆ)    மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் அவர்களது பிரச்சனைகள் தொடர்பாக உள்ளூர் பகுதிகளில் போராட்டங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய போராட்டங்கள் வெறும் அடையாளபூர்வமாக இருக்கக்கூடாது. உறுதியான பயன்களை பெறும் வரை இவற்றை நீடித்து நடத்த வேண்டும்.

இ)    தீவிரமான வெகுஜன நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பதில் கொரோனா பெருந்தொற்றும் அதனோடு தொடர்ந்த பொதுமுடக்கம் மற்றும் ஒழுங்கு முறைகள் ஆகியவை இயற்கையாக தடைகளை ஏற்படுத்தின. முறையான திட்டமிடலின் மூலமும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான வாழ்நிலை பிரச்சனைகளின் மீது போராட்டங்களை நடத்துவதன் மூலம் இந்த தொய்வை வென்றெடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஈ)    சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் இந்துத்துவா சக்திகளின் சவாலை கட்சி தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். பிளவுபடுத்தும் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலையும், மதச்சார்பற்ற விழுமியங்களின் அழிவையும் எதிர்க்க வேண்டும்; சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பிற்காகவும் நாம் போராட வேண்டும்; அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற உணர்வை வலுப்படுத்தும் இந்திய தேசியவாதத்தை கையிலெடுத்து இந்துத்துவா தேசியவாதத்தினை நாம் எதிர்த்து நிற்க வேண்டும்.

உ)    சமூக ரீதியான ஒதுக்கல், சாதிய ஒடுக்குமுறை, பாலின அடிப்படையிலான ஒதுக்கல் ஆகிய பிரச்சனைகளின் மீது கட்சி போராட்டங்களை நடத்த வேண்டும். சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் பொருளாதார சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும். வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்க முனையும் அடையாள அரசியலுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

ஊ)    ஸ்தாபனம் குறித்த கல்கத்தா பிளீனத்தின் முடிவுகள் சரியான முனைப்போடு உடனடியாக அமலாக்கப்பட வேண்டும். கட்சி அமைப்புகள் ப்ளீன வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

இந்துத்துவாவை எதிர்த்துப் போராடுவதற்கான வழி

2.168    கட்சியை வலுப்படுத்துவது என்பதே இந்துத்துவ சக்திகளை தனிமைப்படுத்துவதற்கான அடிப்படை முன்நிபந்தனையாக உள்ளது. இந்துத்துவாவையும் அதன் பல்வேறு வகையான வகுப்புவாத அமைப்புகளையும் எதிர்த்துப் போராடுவதென்பதை  அரசியல், தத்துவம், கலாச்சாரம் மற்றும் சமூகத் தளங்களில் நீடித்த வகையில் மேற்கொள்ள வேண்டும். இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2.169    கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் கீழ்க்கண்ட வகையில் இந்த நீடித்த போராட்டத்தை நடத்த வேண்டும்:

அ)    கட்சியினால் இதற்கென உருவாக்கப்பட்ட குழுக்களால் தத்துவார்த்த ரீதியான, அரசியல் ரீதியான பிரசுரங்களை தொடர்ச்சியாக தயாரிப்பது. இந்துத்துவா மற்றும் வகுப்புவாத சக்திகளின் பிற்போக்குத்தனமான உள்ளடகத்தை அம்பலப்படுத்தும் வகையில் பெருந்திரளான மக்களை சென்றடையும் வகையில் எளிய நடையில் இவை உருவாக்கப்பட வேண்டும்.

ஆ)    வெறுப்பு மற்றும் பயங்கரவாதம் மற்றும் குறிப்பாக மத சிறுபான்மையினர் மீது பாசிச தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் இந்துத்துவா குழுக்களின் தாக்குதலை தீவிரமாக எதிர்கொள்வது. உள்ளூர் அளவிலும் மற்றும் நாடு தழுவிய அளவிலும் பொது இடங்களை வகுப்புவாதமயமாக்கும் முயற்சிகளை எதிர்க்க மிகுந்த விழிப்புணர்வை பராமரிக்க வேண்டும்.

இ)    அதிகரித்துக் கொண்டே வரும் பழமைவாதம், மூட நம்பிக்கை, பகுத்தறிவற்ற தன்மை, கண்மூடித்தனமான நம்பிக்கை ஆகியவற்றை எதிர்த்துப்போராடும் வகையில் மதசார்பற்ற, அறிவியல்பூர்வமான, பகுத்தறிவின் அடிப்படையிலான சிந்தனைப் போக்கினை வளர்த்தெடுக்க சமூக, கலாச்சார நடவடிக்கைகள், வெகுஜன அறிவியல் இயக்கங்கள் ஆகியவற்றுக்கான அமைப்புகளை வளர்த்தெடுப்பது. இந்துத்துவா கும்பல்களால் பரப்பப்பட்டு வரும் பகுத்தறிவற்ற தன்மை மற்றும் தர்க்க மறுப்பு  சிந்தனை ஆகியவற்றை எதிர்த்துப் போராட இது அவசியமாகும்.

ஈ)    சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான பிரச்சினைகளை முன்னிறுத்துதல். இந்துத்துவா பெண்களுக்கு சம உரிமைகளை மறுக்கிறது; மேலும் பாலின ரீதியான அடிமைத்தனத்தை நியாயப்படுத்துவதன் மூலம் கொடூரமான தாக்குதல்களை நடத்துவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குகிறது.

உ)    தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் மத்தியில் கேடுகெட்ட இந்துத்துவா சாதிய மற்றும் பழமைவாத விழுமியங்களை பரப்புவதை எதிர்த்து போராடுதல். இந்திய சமூகத்தின் பன்மை கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஊ)    சமூக சேவை நடவடிக்கைகளை ஊக்குவித்தல். கோவிட் தொற்று காலத்தில் செய்யப்பட்ட  பணிகள் சுகாதார மையங்கள் மூலம் தொடர வேண்டும். நூலகங்கள் மற்றும் வாசிப்பு அறைகள், கல்வி பயிற்சி மையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்றவற்றை அமைப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எ)    கல்வித் துறையில் ஆர்எஸ்எஸ்-ஸூம் இதர இந்துத்துவ சக்திகளும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. கல்வியில் மதச்சார்பற்ற, ஜனநாயகபூர்வமான, ஒன்றிணைப்பு நிரம்பிய உள்ளடக்கத்தை உருவாக்கி பரப்பும் வகையில் கல்வித் தளத்தில் தலையீடுகளை மேற்கொள்ள நாம் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

2.170    இத்தகைய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாது போனால், சமூக, இன ரீதியானவேறுபாடுகளை எல்லாம் பெருமளவிற்குக் கடந்த  பாரதூரமான ‘இந்து அடையாளத்தை’ மேலும் வலுப்படுத்துவதில் ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் வகுப்புவாத அமைப்புகள் வெற்றி பெற்றுவிடும். இதில் மிகவும் முக்கியமானது பகுத்தறிவற்ற தன்மையை பகுத்தறிவைக் கொண்டும், உண்மையற்ற தன்மையை உண்மையைக் கொண்டும் போராட வேண்டியதாகும்.

அரசியல் நிலைபாடு

2.171     1) கிட்டத்தட்ட எட்டாண்டு கால பாஜக அரசில் வகுப்புவாத கார்ப்பரேட் கூட்டணி எதேச்சாதிகார தாக்குதல்களை தொடுப்பது மேலும் வலுப்பட்டு வருவதைக் கண்டது. 2019ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு பாசிச ஆர்எஸ்எஸ்-ஸின் இந்து ராஷ்ட்ர நிகழ்ச்சி நிரலை மிகத் தீவிரமாக அது முன்னெடுத்து வருகிறது. இதனோடு கூடவே நவதாராளவாத கொள்கைகள் மற்றும் அதிகரித்து வரும் எதேச்சாதிகார நிர்வாகம் ஆகியவற்றையும் அது பின்பற்றி வருகிறது. ஆர்எஸ்எஸ் முன்னெடுத்து வரும் இந்து ராஷ்ட்ரா நிகழ்ச்சி நிரலானது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பினை அரித்துப் போகச் செய்வதோடு, இந்திய குடியரசின் மதசார்பற்ற, ஜனநாயகபூர்வமான குணாம்சத்தையும் சீர்குலைக்கிறது. 

2)    இவ்வகையில் நமது முக்கிய கடமை என்பது பாஜகவை தனிமைப்படுத்தி, தோற்கடிப்பதே ஆகும். இதற்கு வர்க்க மற்றும் வெகுஜன போராட்டங்களை வலுவாகவும் தீவிரமாகவும் நடத்தும் வகையில் மக்களை அணிதிரட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளின் சுயேச்சையான வலிமையின் வளர்ச்சி தேவைப்படுகிறது.

3)    இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் மற்றும் வகுப்புவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க கட்சியையும் இடதுசாரி சக்திகளையும் வலுப்படுத்துவது அவசியமாகும். இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் பரந்த அளவில் அணிதிரட்டுவதற்கும் கட்சி பாடுபட வேண்டும்.

4)    நவதாராளவாதக் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றுவது; நமது நாட்டின் சொத்துக்களை ஒட்டுமொத்தமாக கொள்ளையடிப்பது; பொதுத்துறையையும், பொது பயன்பாட்டிற்கு உரியனவற்றையும், கனிம வள ஆதாரங்களையும் பெருமளவிற்கு தனியார் மயமாக்குவது ஆகியவற்றுக்கு எதிராக மக்களின் விரிவான பகுதியினரை அணிதிரட்டுவதில் கட்சி முன்னணியில் இருக்க வேண்டியது அவசியமாகும். சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தைப் போன்று, வர்க்க, வெகுஜன போராட்டங்களை, விரிவான அளவில் மக்களை அணிதிரட்டி மேலும் தீவிரப்படுத்துவதன் மூலமும் கார்ப்பரேட்-வகுப்புவாத கூட்டணி ஆட்சிக்கு எதிராக மதசார்பற்ற எதிர்க்கட்சி சக்திகளை அணிதிரட்டுவதன் மூலமுமே இதை நிறைவேற்ற முடியும்.

5)    இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் வெற்றிக்கு இந்துத்துவ வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் நவதாராளவாத கொள்கைகளுக்கு எதிராகவும் ஒரே நேரத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவைப்படுகின்றன.

6)    ஒப்புக்கொள்ளப்பட்ட விவகாரங்களில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் நாடாளுமன்றத்திற்குள் கட்சி ஒத்துழைக்கும். பாராளுமன்றத்திற்கு வெளியே வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் பரந்த அளவில் அணிதிரட்டவும் கட்சி பாடுபடும். கட்சியும் இடதுசாரிகளும் இதர ஜனநாயக சக்திகளுடன் சுயேச்சையாகவும், ஒன்றுபட்டும்,  பிரச்சினையின் அடிப்படையிலும், நவ தாராளமயத்தின் தாக்குதல்கள், ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகாரத் தாக்குதல்கள், ஜனநாயக உரிமைகள், கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்ப்பை அடக்குதல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும்.

7)    வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளுக்கான கூட்டுத் மேடைகளை கட்சி ஆதரிக்கும். தொழிலாளி-விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் கட்சி ஆதரிக்கும்.

8)    இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தவுமான முயற்சிகளோடு கூடவே கட்சியின் சுயேச்சையான வலிமையை வளர்த்தெடுக்கவும் முன்னுரிமை வழங்கப்படும். இடதுசாரிகளின் ஒன்றுபட்ட பிரச்சாரங்கள், இயக்கங்கள் ஆகியவை முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்கு மாற்றான கொள்கைகளை முன்னிறுத்துவதாக இருக்க வேண்டும்.

9)    வெகுஜன அமைப்புகள், சமூக இயக்கங்கள் உள்ளிட்டு அனைத்து இடதுசாரி, ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட நீடித்த வகையில் கட்சி செயல்பட வேண்டும். ஒரு மாற்று கொள்கையாக இடது ஜனநாயக திட்டத்தை முன்னிறுத்தும் வகையிலான கூட்டுப் போராட்டங்களையும் இயக்கங்களையும் இடது ஜனநாயக மேடை நடத்த வேண்டும்.

10)    தேர்தல்கள் நடைபெறும் போது, மேற்குறித்த அரசியல் நிலைபாட்டின் அடிப்படையில் பாஜகவிற்கு எதிரான வாக்குகளை அதிகபட்சமாக ஒன்றுதிரட்டும் வகையிலான பொருத்தமான தேர்தல் உத்திகள் மேற்கொள்ளப்படும்.

இன்றைய நிலைமைகளில் நமது கடமைகள்

2.172    அ) தொடர்ச்சியான வர்க்க, வெகுஜன போராட்டங்களின் மூலம் தனது சுயேச்சையான பங்கினை வலுப்படுத்தவும்,  செல்வாக்கை விரிவுபடுத்தவும்,  அரசியல் ரீதியான தலையிடும் திறன்களை விரிவுபடுத்தவும் கட்சி முன்னுரிமை அளிக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகளின் மீது தொடர்ச்சியான கவனத்துடன் உள்ளூர் அளவிலான போராட்டங்களை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ஆ)    வாழ்வாதாரப் பிரச்சனைகளின் மீதான போராட்டங்களில்  நவதாராளமயக் கொள்கைகளால் தீவிரமான பொருளாதார சுரண்டலுக்கு ஆளாகியுள்ள அனைத்துப் பிரிவு மக்களையும் ஒன்றுதிரட்ட வேண்டும். இவ்வாறு உருவாகின்ற அனைத்து தன்னெழுச்சியான போராட்டங்களிலும் அவற்றை வலுப்படுத்தவும், தீவிரமாகத் தலையீடு செய்யவும் கட்சி அவற்றில் இணைய வேண்டும்.

இ)    இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கட்சி முன்னிலையில் இருக்க வேண்டியது அவசியம். பல்வேறு மட்டங்களிலும் இந்தப் போராட்டமானது நீடித்த வகையில் நடத்தப்பட வேண்டும். இந்துத்துவா சக்திகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட குடிமக்கள், அமைப்புகள், சமூக இயக்கங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் பரந்து விரிந்த ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.

ஈ)          எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் கட்சி முன்கையெடுக்க வேண்டியது அவசியமாகும். மேலும் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள், குடியுரிமைகள், படைப்பு  சுதந்திரம், தன்னாட்சி மிக்க கல்விப் புலம் ஆகியவற்றுக்கு ஆதரவாகவும், அரசியல் அமைப்புச் சட்ட அமைப்பின் ஜனநாயகபூர்வமான, மதசார்பற்ற உள்ளடக்கத்தை சீர்குலைக்கின்ற இந்துத்துவா வகுப்புவாதத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கூட்டுப் போராட்டங்களை உருவாக்க கட்சி முன்கையெடுத்து அனைத்து ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்பினையும் கோர வேண்டும்.

உ)    சமூக நீதிக்கான போராட்டங்களை முன்னெடுக்கவும், பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடிகள் ஆகியோரின் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான பிரச்சனைகளை கையிலெடுக்கவும் கட்சி தனது முயற்சிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

ஊ)    இந்துத்துவ வகுப்புவாதத்தின் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்கு எதிராக சிறுபான்மையினரைப் பாதுகாப்பது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

எ)    பழமைவாதம், மூட நம்பிக்கை, பகுத்தறிவற்ற தன்மை, கண்மூடித்தனமான நம்பிக்கை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு எதிராக தத்துவார்த்த, சமூக ரீதியான போராட்டங்களை கட்சி வலுப்படுத்த வேண்டும். அறிவியல்பூர்வமான கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கான பிரச்சாரங்களில் கட்சி முன்னணியில் இருக்க வேண்டும். பகுத்தறிவு, உண்மை நிலை ஆகியவற்றுக்கு ஆதரவான பொது உரையாடல்களை வலுப்படுத்தி, பகுத்தறிவற்ற தன்மை, உண்மையற்ற நிலை ஆகியவற்றுக்கு எதிராக அவற்றை முன்னெடுக்க வேண்டும். அறிவியல்பூர்வமான உணர்வுக்கு ஆதரவாகவும், மீட்சிவாதத்திற்கு எதிராகவும் விரிந்து பரந்த அணிதிரட்டலை உருவாக்க வேண்டும்.

ஏ)    நமது தேசிய, பொருளாதார இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இந்திய மக்களிடையே ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை கட்சி தட்டியெழுப்ப வேண்டும். முதலாளித்துவத்திற்கு உண்மையான மாற்று சோஷலிசமே என்பதை வலியுறுத்தும் வகையில் பிரச்சாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

ஐ)    மோடி அரசு அமெரிக்க ஏகாபத்தியத்திடம் சரணாகதி அடைந்துள்ளதற்கு எதிரான வெகுஜன கருத்தை கட்சி அணிதிரட்ட வேண்டும். இந்தியாவின் சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையை மீண்டும் நிலைநாட்டுவதற்கான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒ)    கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணியை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கட்சி மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று  கட்சிக்கு எதிராக, குறிப்பாக மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் நடைபெற்று வரும் பாசிஸத்தன்மை வாய்ந்த  தாக்குதல்களுக்கு எதிராகவும் கட்சி முன்கையெடுக்க வேண்டும்.

முடிவுரை

2.173    இந்தக் கடமைகளை நிறைவேற்ற வேண்டுமெனில், நாடு முழுவதிலும் வலுவானதொரு கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுப்பது அவசியமாகும். ஸ்தாபனம் குறித்து கல்கத்தா ப்ளீனம் மேற்கொண்ட முடிவுகளை உண்மையாக அமலாக்குவதன் மூலம் மட்டுமே மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படையில் அமைந்த வெகுஜன அடித்தளத்துடன் கூடிய வலுவானதொரு கட்சியை நம்மால் கட்டியெழுப்ப முடியும். குறிப்பாக இது கீழ்க்கண்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்:

1)    மக்களுடன்  வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வெகுஜன நிலைபாட்டுடன் கூடிய புரட்சிகரமாக கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

2)    மக்களிடையே கட்சியின் நற்பெயர் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை விரிவுபடுத்தி, இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட வேண்டும்.

3)    கல்கத்தா ப்ளீனம் கூறியபடி தரமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஸ்தாபனத்தை வலுப்படுத்த வேண்டும்.

4)    கட்சிக்குள் இளைஞர்களையும் பெண்களையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

5)    அனைத்து அந்நிய வர்க்க தத்துவங்களுக்கும் எதிராக தத்துவார்த்த போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.

வலுவானதொரு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கும் வலுப்படுத்துவதற்குமான நமது உறுதிப்பாட்டை இரட்டிப்பாக்குவோமாக!

வெகுஜன நிலையுடன் கூடிய 

புரட்சிகரமானதொரு கட்சியை நோக்கி முன்னேறுவோமாக!

இந்தியா முழுவதிலும் வெகுஜன அடித்தளத்தைக் கொண்ட வலுவானதொரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதை நோக்கி முன்னேறுவோமாக!

* * * *

Procedure for Sending Amendments to the

Draft Political Resolution

Following is the procedure to send amendments to the Draft Political Resolution

1.     All amendments should mention the para number/line number.

2.    The name and unit of the concerned comrade/unit proposing the amendment should also be mentioned.

3.    All amendments should reach latest by March 10, 2022.

4.     Amendments being sent by post/courier should be sent to the following address:

Communist Party of India (Marxist)

Central Committee, A.K. Gopalan Bhavan

27–29 Bhai Vir Singh Marg, New Delhi – 110 001

5. The envelope should be marked ‘Amendments to the Draft Political Resolution’.

6. Those sending amendments by email are requested to send it either as text or Word files only. Those sending in languages other than English should send PDF files.

7. “Amendments to the Draft Political Resolution” may be mentioned in the subject of the email and sent to pol-23@cpim.org

8. It would help if amendments are sent in the following format:

Sr. No.Para No.Line No.AmendmentProposed by