இந்தியாவில் மதச்சார்பின்மை: வரலாறு, விலகல்,சவால் !

சமூகத்தை ஜனநாயகப்படுத்தாமல், அரசியலில் மட்டும் மக்களாட்சியை நிறுவிட உங்களால் முடியாது. இல்லை நண்பர்களே, அரசியலில் மக்களாட்சியும், சமூகப் பார்வையில் பழமைவாதத்தையும் கொண்டுள்ள விநோதமான கதம்பமாக நாம் ஆகிவிட வேண்டாம்… பிறப்பினால் கிடைக்கும் சாதகங்களும், சாதி அல்லது நம்பிக்கைகளும் அகற்றப்பட வேண்டும்… பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும்… இந்தியாவின் பல்வேறு சமுதாயங்களிடையே பிரத்யேக நிலைமைகள் நிலவிடும் சூழல்தான் இப்போது நிலவுகிறது. நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டுமானால் மதச்சார்பின்மையும், அறிவியல் பயிற்சிகளும் அவசியப்படுகின்றன…  மதவெறியை குணப்படுத்துவதில் மதச் சார்பின்மையும், அறிவியல் சிந்தனைகளையும் ஒத்ததாக வேறு எதுவும் இல்லை.

Keep reading


நகர்ப்புற உள்ளாட்சிகளில் நம்முடைய பணி …

சொத்துவரி உயர்த்தப்படும்போது மட்டும் வாருங்கள் போராடலாம் என்று கூறி பெரும் பகுதி மக்களை திரட்டிட முடியாது. இது ஒரு தொடர் நிகழ்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மக்களுடன் உரையாடுவதற்கான வேலைகளை திட்டமிட்டு மேற்கொள்ளவேண்டும். அவர்களுக்கு புரியும்படி பேசிடவேண்டும்.

புரட்சிக்கு ஒரு நாள் முன்பாக லெனின் எழுதிய கடிதம்!

கீழ் காணும் கடிதம் லெனின் அவர்கள் அக்ட்டோர் புரட்சிக்கு ஒரு நாள் முன்பு மத்திய குழு உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் ஆகும். இதில் அவர் வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களை புரட்சியாளர்கள் உணராமல், மக்களின் புரட்சிகர உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போவது எவ்வாறு மாபெரும் குற்றமாக விளையும் என்பதை விளக்குகிறார்.

கொரோனா முன்களத்தில், கியூபாவின் தனிச் சிறப்பு!

கியூபா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் சபரினா 1, சபரினா 2 மற்றும் அப்தலா ஆகியவை ஊசி மூலம் செலுத்தக் கூடிய புரத சத்து அடிப்படையிலான தடுப்பூசிகள். மாம்பிசா என்ற தடுப்பூசி உலகிலேயே மூக்கில் ஸ்பேரே அடித்துக் கொள்ளக் கூடிய ஒரே தடுப்பு மருந்து. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை இதர மூன்றாம் உலக நாடுகளுக்கு கொடுக்க மறுத்து வருகின்றன. அதே சமயம் அவற்றின் உற்பத்தியில் பெரும்பகுதியை ஜி-7 நாடுகளே தங்கள் கிட்டங்கிகளில் பதுக்கிக் கொள்கின்றன.

பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தின் நூறாண்டுகள்

தொடக்ககால கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட பணிகளில் பெரும்பாலானவை சமூக சீர்திருத்தங்களுக்காகவும் தலித்துகளின் விடுதலைக்காகவுமான சாதிய எதிர்ப்புப் போராட்டங்களாகவே இருந்தன. மிக அதிகமான வகையில் ஒடுக்கப்பட்டுவந்த சாதிகளைச் சேர்ந்த பெண்களிடையே இது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், மேல்மட்ட சாதிகளிடையே பெண்களின் அவமானகரமான அந்தஸ்து குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. கேரளாவில் நம்பூதிரிகளிடையே இ எம் எஸ் தலைமையிலான இயக்கம் அவர்களிடையே பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

புனையப்படும் பொய் ‘வரலாறு’!

அறிவியல்பூர்வமான, மதச்சார்பற்ற கல்விக்கு, வகுப்புவாதக் கண்ணோட்டத்துடனான எதிர்ப்பும், தாக்குதலும் துவக்கத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து வந்து கொண்டிருந்தது.  ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங் எனப்படுகிற ஆர்எஸ்எஸ் அமைப்பு, ஒரு தனியார் இராணுவம் போலச் செயல்படுவதையும், ஹிட்லர் காலத்திய ஜெர்மனியின் நாஜிக்கள் போன்று அவர்களது பயிற்சிகள் அமைந்திருப்பதையும் குறித்து ஜவஹர்லால் நேரு ஆரம்ப நாட்களிலேயே எச்சரிக்கை விடுத்தார்.

தனியார் சொத்துடைமை முடிவாக மறைந்துபோவதால் ஏற்படும் பின்விளைவுகள் எவை?

மக்கள், உற்பத்தியின் தனியொரு பிரிவுக்கென ஒதுக்கப்பட்டு, அதிலேயே பிணைக்கப்பட்டு, அதனால் சுரண்டப்பட்டு, இன்று இருப்பதைப் போல இனிமேலும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் மற்ற எல்லோரின் செலவில் தங்கள் ஆற்றல்களுள் ஒன்றை மட்டுமே வளர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

சோசலிசம் இன்று !

முதலாளித்துவச் சுரண்டல் உச்சம் தொட்டிருக்கும் இன்றைய ஏகாதிபத்திய கட்டத்தில் இருந்து, ஒரு மனிதர் இன்னொருவரை சுரண்டாத, ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டாத சோசலிச அமைப்பை நோக்கி பயணிப்பதற்கான போராட்டமே, சோசலிசத்திற்கான போராட்டம் ஆகும். இந்த போராட்டம் கடுமையானது. மிக அவசியமானது.

‘திராவிட மாடல்’ நூல் விமர்சனம்: சர்ச்சைகளும், விடுபடலும் …

உயர்கல்வி நிலையங்கள் பலவும் தனியாரிடமே உள்ளன. உயர்கல்வியைத் தனியார்வசம் விட்டுவிட்டு, அரசு தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துகிறது (கல்விக்கான அரசின் செலவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்). கல்வியின் தரம் குறைவாக இருப்பதால் அது பட்டியலின மக்களின் மீது பாரபட்சமான வகையில் தாக்கம் செலுத்துகிறது. அது குறித்து இந்த அத்தியாயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்…

கீழவெண்மணித் தீயும் கூலிப் போராட்டமும்

ஜாதிய சமூகக் கொடுமைகளை எதிர்த்து, மிதிபட்டு, அடித்தட்டில் கிடந்த மக்களை விடுவித்து, மனிதனாக்கி, பண்ணையாளும் ஊராட்சித் தலைவனாக வர முடியும் என்று உயர்த்தி, ஒரு சமூகம் மதிக்க வேண்டிய, மதிக்கக்கூடிய, மனிதனாக உயர்த்தியிருக்கிறது செங்கொடி. இயக்கம் இருக்கும் எந்த கிராமத்திலும் ஜாதியின் பெயரால் ஏழைகள் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

சமய வகுப்புகளும் இந்துத்துவ அணிதிரட்டலும்: கன்னியாகுமரி ஒரு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் மதரீதியாகப் பிளவுபட்டிருந்த 1980களில் இந்து தேசியவாத அமைப்புகள் இந்து ஒற்றுமை என்ற உணர்வினையூட்டி இந்து வாக்கு வங்கியை உருவாக்கின. விவேகானந்தா ஆசிரமம் சமய வகுப்புகளில் காட்டிய செயல்திறன் மிக்க ஈடுபாடு இதற்கு  உதவியது. சமய வகுப்புகள் வெற்றி பெற முதன்மைக் காரணம், மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான கிறிஸ்தவ மக்கள் தொகையே ஆகும்.

சோவியத் புரட்சியும் தமிழகமும்

நவம்பர் புரட்சியும், சோவியத் இலக்கியங்களும், சோவியத் மக்களும் அரசும் சாதித்த சாதனைகள் தமிழக இலக்கியப் பரப்பில் பெரும் செல்வாக்கு செலுத்தின. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதுகிறார்: ‘இரஷ்ய ஆட்சி பொதுமக்கள் ஆட்சி. பொதுவுடமை ஆட்சி. அதனைச் சர்வாதிகாரம் என்பது தவறு. இரஷ்யர்கள் கூட்டாக உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள். தம்மைத் தாமே ஆண்டு கொள்கிறார்கள். அதற்கேற்ற சமூக அமைப்பை அமைத்து அதன் வழியிலே செல்கின்றார்கள். அங்கே இரப்பாரும் இல்லை. புரப்பாரும் இல்லை. ஆண்டியும் இல்லை.

19 ஆம் நூற்றாண்டு தென் தமிழக சமூக இயக்கம்

நாடார் மக்களின் சமூக இயக்கத்தை விவரிக்கும் போது தென் திருவிதாங்கூர் பகுதியில் (தற்போது கன்யாகுமரி மாவட்டம்) நடந்த முக்கியமான சாதி எதிர்ப்பு எழுச்சியை நாம் தவிர்க்க முடியாது. அங்கு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்கள் நடத்தப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது.

the point however is to change it … – Karl Marx

Karl Marx, the Manifesto of the Communist Party
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728