ஏகாதிபத்தியமும் இயற்கை வளங்களும்: ரஷ்யாவை ‘அடக்க முயலும்’ அமெரிக்க ஆட்டம் ! பேரா. பிரபாத் பட்நாயக் உலக நாடுகள் அடைந்துள்ள ‘வளர்ச்சி’ நிலைக்கும், இயற்கை வளங்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டிற்கும் இடையில் மிகப்பெரும் அசமத்துவம் நிலவுகிறது. உதாரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளின் குழுவான ஜி-7 நாடுகளை எடுத்துக்கொள்வோம். இந்த நாடுகளில், உலகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் மட்டுமே வாழ்கிறார்கள். ஆனால்,…
கட்சியின் தினசரி செயல்பாட்டில் கிளைகளின் செயல்பாடு மிக முக்கியமானது. கிளைதான் அந்தந்த பகுதி மக்களுடன் நேரடி தொடர்ப்பில் இருக்கிறது. கிளைகளில்தான் உறுப்பினர்களின் தரமும் மதிப்பீடு செய்யப்பட்டு, உறுப்பினர் புதுப்பித்தல் நடைபெற வேண்டும். எனவே தொடர்ச்சியாக செயல்படாத கட்சிக் கிளைகளை மீண்டும் செயல்படுத்தி அவர்களை அரசியல் மற்றும் ஸ்தாபன வேலைகளில் கட்சி ஈடுபடுத்த வேண்டும் என்று கொல்கத்தா ப்ளீனம் கூறுகிறது.
கார்ல் மார்க்சுக்கு நல்ல ஆறுதலளித்து வந்த கார்ல்ஸ்பாத் வெந்நீர் ஊற்றுச் சிகிச்சையை ஜெர்மானிய சோசலிசத் தொழிலாளர் இயக்கத்துக்கு எதிராக பிஸ்மார்க் கொண்டு வந்த சட்டங்கள் தடுத்தன. 1878இலிருந்தே அவரது உடல் துன்பம் அதிகமாகி அவரது பணியையும் பெருமளவிற்குப் பாதித்தது. ஆனால் நோய்க்கும், வலிக்கும் விட்டுக் கொடுக்கும் மனிதரல்ல அவர். அந்த வகையில் அவர் இறுதி வரை தன் உடலோடு போராடிக் கொண்டேயிருந்தார்.
ஆதிகால மனிதனை உழைப்புதான் இன்றைய முன்னேறிய நிலைக்கு எடுத்துவந்துள்ளது. முன்னர் உழைப்பே அவர்களது பலமாகவும் அடுத்தடுத்த வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் அமைந்தது. வர்க்கங்களும் அதன் விளைவான சுரண்டலும் உருவான பிறகு, உழைப்பு என்பதன் பொருளும் மாற்றத்திற்கு ஆளாகியுள்ளது. சுரண்டலின் அளவு மேலும் மேலும் உச்சத்தைத் தொட்டுள்ள முதலாளித்துவ சமூகம், உழைப்பை விற்கும் நிலைக்கு மனிதர்களை தள்ளுகிறது. உழைப்பை அவரிடமிருந்து பிரித்து அவருக்குச் சொந்தமானதாக இல்லாமல் செய்கிறது. “அது உழைப்பை துன்பமளிப்பதாக, பலத்தைப் பலவீனமானதாக, வளமையை மலடாக” மாற்றுகிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் சிக்கல், வட இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து தென்னகம் நோக்கி இடம்பெயரும் தொழிலாளர்களைப் பற்றியது மட்டுமே. ஆனால் இது அவர்களுடைய சிக்கல் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டங்களின் இடையிலும் இடம் பெயர்தல் நடக்கின்றன. வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து உழைக்கும் தொழிலாளர்களும் மூலதனத்தால் சுரண்டப்படுகிறார்கள்.
என்.குணசேகரன் மார்க்சிய தத்துவம் நடைமுறைக்கு வழிகாட்டி; புரட்சிகரமான முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தத்துவமாக மார்க்சியம் விளங்குகிறது. மார்க்சியத்தால் ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்பதற்கு சான்றாக லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது. அத்துடன் மார்க்சியமே மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மாபெரும் தத்துவம் என்பதை உறுதியாக நிரூபிக்கும் வரலாறாகவும் லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது. அவர் வாழ்ந்த காலம், முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சி அடைந்த காலம். அந்த காலச் சூழலில் புதிய நிலைமைகளை சரியாக மதிப்பீடு செய்து ரஷ்யாவில் புரட்சியை…