மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


Editorial

 • முதல் விடுதலைப் போரின் முன்னோடி வேலூர்ப் புரட்சி

  18ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றுப் பின்னணி தென் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவன வணிகர்களாக வந்த ஆங்கிலேயர்கள், தங்களது மேலாண்மைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய தென் தமிழகப் பாளையக்காரர்கள் பூலித்தேவன் (நெற்கட்டும்செவல்: 1755-67), வேலுநாச்சியார் (சிவகங்கை: 1780-96), வீரபாண்டிய கட்டபொம்மன் (பாஞ்சாலங்குறிச்சி: 1790-99) மருது சகோதரர்கள் (சிவகங்கை: 1801) ஆகியோரை, தங்களது பிரித்தாளும் சூழ்ச்சியாலும் பீரங்கி பலத்தாலும் வென்றனர். இதே காலகட்டத்தில், ஹைதர் அலிக்குப் பிறகு ஆங்கிலேயரை எதிர்த்த… Continue reading

 • கட்சி ஸ்தாபனத்தின் உடனடி கடமைகள்

  கட்சியின் தினசரி செயல்பாட்டில் கிளைகளின் செயல்பாடு மிக முக்கியமானது. கிளைதான் அந்தந்த பகுதி மக்களுடன் நேரடி தொடர்ப்பில் இருக்கிறது. கிளைகளில்தான் உறுப்பினர்களின் தரமும் மதிப்பீடு செய்யப்பட்டு, உறுப்பினர் புதுப்பித்தல் நடைபெற வேண்டும். எனவே தொடர்ச்சியாக செயல்படாத கட்சிக் கிளைகளை மீண்டும் செயல்படுத்தி அவர்களை அரசியல் மற்றும் ஸ்தாபன வேலைகளில் கட்சி ஈடுபடுத்த வேண்டும் என்று கொல்கத்தா ப்ளீனம் கூறுகிறது. Continue reading

 • கார்ல் மார்க்சின் இறுதி ஆண்டுகள்

  கார்ல் மார்க்சுக்கு நல்ல ஆறுதலளித்து வந்த கார்ல்ஸ்பாத் வெந்நீர் ஊற்றுச் சிகிச்சையை ஜெர்மானிய சோசலிசத் தொழிலாளர் இயக்கத்துக்கு எதிராக பிஸ்மார்க் கொண்டு வந்த சட்டங்கள் தடுத்தன. 1878இலிருந்தே அவரது உடல் துன்பம் அதிகமாகி அவரது பணியையும் பெருமளவிற்குப் பாதித்தது. ஆனால் நோய்க்கும், வலிக்கும் விட்டுக் கொடுக்கும் மனிதரல்ல அவர். அந்த வகையில் அவர் இறுதி வரை தன் உடலோடு போராடிக் கொண்டேயிருந்தார். Continue reading

 • அதானி ஊழல், குற்றவாளிக் கூண்டில் கார்ப்பரேட்-இந்துத்துவா அரசு!

  பொதுத்துறையை நாசமாக்கி அடிமாட்டு விலைக்கு விற்க வெறிபிடித்து அலையும் ஒன்றிய அரசு அதற்குப் பதில் ஸ்டேட் வங்கி, ஆயுள் காப்பீட்டுக்கழகம் போன்ற நிதி நிறுவனங்கள் வருடம் தோறும் ஈட்டும் உபரிகளை ஏன் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் மக்கள் நல முதலீடுகளுக்கும் பயன்படுத்த மறுக்கிறது? Continue reading

 • ’நான் என்றும் மக்கள் ஊழியனே’ – ஏ.கே.கோபாலன்

  பொதுமக்கள் பார்வையில் இருந்து விலக்கி எங்களை சிறையில் அடைப்பது ஏகாதிபத்தியத்தின் தேவையாக இருந்தது; கைது செய்வதைத் தவிர்ப்பதும், வேலை செய்வதும் எங்களுடைய தேவையாக இருந்தது. எனவே, தலைமறைவாக வேலை செய்வதே, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக நான் கண்டேன். Continue reading

 • மதங்களும், அரசியலும் – ம.சிங்காரவேலர்

  இவ்வளவு பேரும் கற்பனையை வளர்த்தும், ஆதரித்தும், கோடான கோடி மாந்தர்கள் மூடபழக்கத்தில் ஜீவனத்தை நடத்தி வருகின்றார்கள் என்றால் மதங்கள் மிகவும் தலைமுறையாக ஆழ்ந்து கிடந்துவர தங்கள் பொருளாதார நன்மையாக இருந்து வருகின்றதென்று சமுதாயிகள் அதாவது சமதர்மவாதிகள் சொல்வது எவ்வளவு பொருத்தமுள்ளது என்பதை நினைக்க வேண்டி இருக்கின்றதென்பதைப் பாருங்கள்? இவ்வளவு ஆதிக்கத்தையும், செல்வாக்கையும், ஜீவஉபாயத்தையும், மதங்கள் கோடான கோடி மக்களுக்கும் அளிப்பதென்றால் மதங்களை ஒழிப்பது லேசான காரியமாகுமா? Continue reading

 • ’புதிய’ இந்தியாவின்அரசியல்சாசனம்

  அரசு நிர்வாகத்தை மதத் தலைவர்கள் நடத்துவதுதான் இந்துத்துவ ராஷ்டிரம் என இதனை எளிமையாகப் புரிந்து கொண்டு விடக்கூடாது; உள்ளடக்கம் அதை விட ஆழமானது, ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் அசமத்துவ அடிப்படையில், இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் அடிப்படையில், நிர்மாணிக்கப்படும் என்று சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சி நிரலுக்கு, இன்றைய அரசியல் சாசனம் பெரிதும் எதிராக இருப்பதால், அதனை சீர்குலைத்து, பிற்போக்கான மாற்று கதையாடலை முன்னிறுத்தும் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. Continue reading

 • சர்வதேசியஒருமைப்பாடுதான் நம்மை மேம்படுத்தும் – அலெய்தா குவாரா

  சர்வதேசியஒருமைப்பாடுதான் நம்மை மேம்படுத்தும் – அலெய்தா குவாரா

  உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த மனிதரென்றாலும், அவருடன் ஒருமைப்பாடு பாராட்டுவதென்பது, கியூப மக்களுக்கு புரட்சி கற்றுத் தந்த அழகான விஷயங்களில் ஒன்று. உதாரணமாகச் சொன்னால், பல்கலைக்கழகத்தில் என்னுடன் படித்த முன்னாள் மாணவர் ஒருவர், எபோலாவை ஒழிக்க வேறொரு நாட்டிற்குச் சென்று பாடுபடுவதைப் பார்ப்பது எவ்வளவு பூரிப்பாக இருக்குமென்பதை விவரிப்பது கடினம். Continue reading

 • இந்தியாவில் மதச்சார்பின்மை: வரலாறு, விலகல்,சவால் !

  இந்தியாவில் மதச்சார்பின்மை: வரலாறு, விலகல்,சவால் !

  சமூகத்தை ஜனநாயகப்படுத்தாமல், அரசியலில் மட்டும் மக்களாட்சியை நிறுவிட உங்களால் முடியாது. இல்லை நண்பர்களே, அரசியலில் மக்களாட்சியும், சமூகப் பார்வையில் பழமைவாதத்தையும் கொண்டுள்ள விநோதமான கதம்பமாக நாம் ஆகிவிட வேண்டாம்… பிறப்பினால் கிடைக்கும் சாதகங்களும், சாதி அல்லது நம்பிக்கைகளும் அகற்றப்பட வேண்டும்… பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும்… இந்தியாவின் பல்வேறு சமுதாயங்களிடையே பிரத்யேக நிலைமைகள் நிலவிடும் சூழல்தான் இப்போது நிலவுகிறது. நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டுமானால் மதச்சார்பின்மையும், அறிவியல் பயிற்சிகளும் அவசியப்படுகின்றன…  மதவெறியை குணப்படுத்துவதில் மதச் சார்பின்மையும், அறிவியல் சிந்தனைகளையும்… Continue reading

 • நகர்ப்புற உள்ளாட்சிகளில் நம்முடைய பணி …

  சொத்துவரி உயர்த்தப்படும்போது மட்டும் வாருங்கள் போராடலாம் என்று கூறி பெரும் பகுதி மக்களை திரட்டிட முடியாது. இது ஒரு தொடர் நிகழ்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மக்களுடன் உரையாடுவதற்கான வேலைகளை திட்டமிட்டு மேற்கொள்ளவேண்டும். அவர்களுக்கு புரியும்படி பேசிடவேண்டும். Continue reading