நூறாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க கண்டத்தின் வரலாறு என்பது மிகவும் வெட்ட வெளிச்சமானது. பேராசை பிடித்த நபர்கள், ராணுவ வெறியர்கள், ராணுவ தளபதிகளின் அதீதமான பேராசைகளுக்கு அமெரிக்க கண்டம் பலியானது. கியூபாவில் இப்போது நடைபெற்று முடிந்துள்ள ஒரு புரட்சியைப் போன்ற ஒன்று அமெரிக்க கண்டத்திற்கும் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் எவ்வளவு அதிகமாகத் தேவைப்பட்டது!
