சோசலிசம்
-
புரட்சிக்கு ஒரு நாள் முன்பாக லெனின் எழுதிய கடிதம்!
கீழ் காணும் கடிதம் லெனின் அவர்கள் அக்ட்டோர் புரட்சிக்கு ஒரு நாள் முன்பு மத்திய குழு உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் ஆகும். இதில் அவர் வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களை புரட்சியாளர்கள் உணராமல், மக்களின் புரட்சிகர உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போவது எவ்வாறு மாபெரும் குற்றமாக விளையும் என்பதை விளக்குகிறார். Continue reading
-
கொரோனா முன்களத்தில், கியூபாவின் தனிச் சிறப்பு!
கியூபா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் சபரினா 1, சபரினா 2 மற்றும் அப்தலா ஆகியவை ஊசி மூலம் செலுத்தக் கூடிய புரத சத்து அடிப்படையிலான தடுப்பூசிகள். மாம்பிசா என்ற தடுப்பூசி உலகிலேயே மூக்கில் ஸ்பேரே அடித்துக் கொள்ளக் கூடிய ஒரே தடுப்பு மருந்து. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை இதர மூன்றாம் உலக நாடுகளுக்கு கொடுக்க மறுத்து வருகின்றன. அதே சமயம் அவற்றின் உற்பத்தியில் பெரும்பகுதியை ஜி-7… Continue reading
-
சோவியத் ஒன்றியத்தின் சோசலிச பொருளாதார சாதனைகள்
உண்மையில் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு வழிவகுத்தவை எவையெனில், சோவியத்தின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு திட்டமிட்டவகையில் தொடர்ந்த மேற்குலகின் முயற்சிகள்; ரீகன் நிர்வாகத்தின் கூர்மைப்படுத்தப்பட்ட பனிப்போர்; இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவர ஒரு வழி கண்டுபிடிக்கத் தெரியாத சோவியத் தலைமையின் இயலாமை ஆகியவையே ஆகும். Continue reading
-
சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !
சோசலிச சமூக அமைப்பு முதலாளித்துவத்தை விடவும் மேம்பட்ட ஒன்று என்பதை அமெரிக்கா நன்கு அறியும். எனவே, கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் தகர்ந்ததைப் போலவே, சீனாவின் வலிமையையும் என்ன விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்க மேலாதிக்கத்தை மையப்படுத்திய உலகமாகவே (ஒரு துருவ உலகமாகவே) நிலைமை தொடர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதனால் அவர்களுக்கு அதீத லாபங்கள் கிடைக்கின்றன. Continue reading
-
சோசலிச பதாகையை உயர்த்திப் பிடிக்கும் சீன கம்யூனிஸ்டுகள் !
பொது உடைமை என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர பலதரப்பட்ட முறைகள் அதனுடன் சேர்ந்து வளரும் முறை, உழைப்புக்கேற்ற விநியோகம் என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர விநியோக முறைகள் அதனுடன் சேர்ந்து நிலைக்கும் முறை, மற்றும் சோசலிச சந்தை பொருளாதார முறை, ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை சோசலிச பொருளாதார முறை, இவையே சீன தன்மைகளைக் கொண்ட சோசலிசத்தின் முக்கிய தூண்கள் Continue reading
-
மக்கள் ஆளும்போது…
நூறாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க கண்டத்தின் வரலாறு என்பது மிகவும் வெட்ட வெளிச்சமானது. பேராசை பிடித்த நபர்கள், ராணுவ வெறியர்கள், ராணுவ தளபதிகளின் அதீதமான பேராசைகளுக்கு அமெரிக்க கண்டம் பலியானது. கியூபாவில் இப்போது நடைபெற்று முடிந்துள்ள ஒரு புரட்சியைப் போன்ற ஒன்று அமெரிக்க கண்டத்திற்கும் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் எவ்வளவு அதிகமாகத் தேவைப்பட்டது! Continue reading
-
உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக்கான போராடமே முதன்மையானது
பிருந்தா காரத் (நம் தமிழ் ”மார்க்சிஸட்” இதழுக்காக தோழர் பிருந்தா காரத் அளித்த பிரத்யேக பேட்டி) மத்திய ஆட்சியில் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் தொடர்வதோடு, சமூகத்தை மத ரீதியாக பிரித்து, தங்கள் அமைப்பை விரிவுபடுத்தியும் வருகிறது. இந்நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எவ்வாறு பார்க்கிறது? எவ்வாறு இவர்களை எதிர்கொண்டு, அவர்களின் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவது? மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் தனது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அனைத்து வகையிலும் உந்தித் தள்ளுகிறது. 2019 ஆம் ஆண்டு… Continue reading
-
கியூபா: புரட்சியைப் பாதுகாக்கும் புதிய தலைமுறை
மிகுவேல் டியாஸ் கேனல் இவ்வாறு பேசினார், “கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை இரண்டே வரிகளில் சுருங்கக் கூறுவதானால், ‘மக்களும் ஒற்றுமையும்’ எனலாம். அதனால்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கட்சியாக இருந்ததே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது… பெரும் அநீதியும், ஏற்றத்தாழ்வும் நிலவிய நாட்டின் நிலைமையை மாற்றியமைக்க விரும்பிய மனித நேயசக்திகளின் அனைவரின் ஒற்றுமையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ஒரு கட்சியின் உறுதிப்பாடு என்பது நாட்டின் சக்தியை வளர்ச்சியை நோக்கி திரட்டி செலுத்தும் தன்மையே ஆகும். Continue reading
-
சோசலிச போராட்டமும், கிராம்ஷியின் சிந்தனையும்
என். குணசேகரன் அந்தோனியோ கிராம்ஷி மார்க்சியத்தில் முக்கிய பங்களிப்பு செய்த மார்க்சிய சிந்தனையாளர். மறைந்த மார்க்சிய வரலாற்று மேதை எரிக் ஹாப்ஸ்பாம் கிராம்ஷியை “1917-க்குப் பிறகு மேற்குலகின் தனித்தன்மை கொண்ட மார்க்சிய சிந்தனையாளராகத் திகழ்ந்தவர்”எனக் குறிப்பிடுகிறார். கிராம்ஷியின் பங்களிப்பை புரிந்து கொள்ள அவரது சிந்தனை உருப்பெற்ற சூழலை அறிவது அவசியம். 1917-ல் ரஷியப் புரட்சிக்குப் பிறகு, மற்ற நாடுகளை விட, கிராம்ஷி வாழ்ந்த இத்தாலியில் புரட்சி வருவதற்கான சூழல் இருந்தது. மக்களின் அகநிலை, புறச்சூழல் சமூகப் புரட்சிக்கு… Continue reading
-
சோஷலிச கியூபாவும் கொரோனா பெருந்தொற்றும்
ஆரோக்கியம் தொடர்பான மனிதவளம் திட்டமிட்ட அடிப்படையில் தொலைநோக்குடன் போதுமான அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா நாட்டில் மேலோங்கியுள்ள சமூக விழுமியங்கள் ஆரோக்கியத்தை மனித உரிமை எனக் கருதுகின்றன. (கியூபாவின் சோசலிச அரசியல் சாசனம் இதை உறுதிபடக் கூறுகிறது.) கியூபாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் லாப நோக்கத்தால் உந்தப்பட்டு செயல்படுவதில்லை. மாறாக, மக்கள் நலம் பேண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். Continue reading