2022-23 ஒன்றிய ‘பட்ஜெட்’ : ஒரு மதிப்பீடு !

வரிப்பகிர்வு மூலமும், வேறு வகைகளிலும் மாநிலங்களுடன் ஒன்றிய அரசு வளங்களை பகிர்கிறது.பொதுவாக, ஒன்றிய அரசுகள் இப்பகிர்வுகள் வாயிலாக தங்களது அதிகாரத்தை செலுத்த முனைகின்றன. பாஜக ஆட்சியில் இந்த முனைவு பெரிதும் அதிகரித்துள்ளது. அனைத்து அதிகாரங்களையும் மாநிலங்களிடமிருந்து பறித்து, மையப்படுத்துவது என்பது பாஜக அரசின் அணுகுமுறையாக இருந்துவருகிறது.

இந்தியாவில் அதிகாரப் பரவலாக்கமும், கூட்டாட்சி அமைப்பும்

ஒன்றிய அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களும், மாநில அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களும் அதனுடன் மூன்றாவதாக பொது (concurrent) பட்டியலும் இருக்கிறது. பொதுப்பட்டியலில் ஒன்றிய அரசும் சட்டங்களை கொண்டு வரலாம். மாநில அரசுகளும் சட்டங்களை கொண்டு வரலாம். ஆனால் ஒன்றிய அரசின் அதிகாரமே இறுதியில் செல்லுபடியாகும்.

விவசாயிகள் எழுச்சியின் வர்க்க அரசியல்

விவசாயிகள் முன்பு போல் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்ல, சமூகத்தின் மிகவும் ‘முன்னேறிய’ பிரிவான ஏகபோக முதலாளிகளையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்

ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது.

அலங்கார ஊர்திகளை ஒன்றிய அரசு ஒதுக்கியது ஏன்?

சாதி, மத வேற்றுமை இல்லாமல் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று அறைகூவல் விடுத்த நாராயணகுரு, 'மனிதர்களுக்கு ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்' என்ற புதிய கொள்கையை நிறுவினார். அப்படியே அவர் சங்கராச்சாரி நடைமுறைப்படுத்திய சாதி வேற்றுமையை எதிர்த்தும் வந்தார். சாதி, மதம் தொடர்பான ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகள், உலகமெங்கும் எழுந்துவந்த மனித நேயம், ஜனநாயகம், சமத்துவம் போன்ற புதிய முழக்கங்களுக்கும், அளவுகோல்களுக்கும் ஏற்றதாக இருந்தது. சங்கராச்சாரியாரின் நால்வருண போதனைகள், ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகளுக்கு ஒருபோதும் ஈடாகாது.

மார்க்சிய தத்துவ போராட்டத்தை முன்னெடுக்கும் வழிமுறைகள் !

மக்களிடத்தில் அரசியல் தத்துவார்த்த இயக்கம் நடத்துவது மிகவும் முக்கியமானதாகும். கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த புரிதலை உயர்த்துவது அணிகளுக்கு ஊக்கம் கொடுத்து கட்சிக்கு வலிவும் பொலிவும் கொடுக்கும்.

காந்தியும் மதமும்

காந்தியின் சமூக, பொருளாதார கருத்துக்கள் அனைத்தும் மதக் கண்ணோட்டம் சார்ந்த நெறிமுறைகள் அடிப்படையில் அமைந்துள்ளன. ஒழுக்கம், நேர்மை, உண்மைத்தன்மை போன்ற நெறிகளை அவர் இந்து மத நோக்கில்தான் வலியுறுத்தினார். இந்து மதம் மீது அவர் கொண்டிருந்த பற்றுடன் இணைந்ததாக அவரது சமூக, அரசியல் கருத்துக்கள் அனைத்தும் அமைந்துள்ளன. மதங்களுக்கிடையே சமத்துவமும் பன்முகத் தன்மையும் நிலவுகிறது என அவர் கருதியதால், அதற்கேற்ப இந்து மதம் பற்றிய விளக்கங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

நூல் விமர்சனம்: திராவிட மாடல் (2021)

நூறு ஆண்டு கால திராவிட அரசியலையும், சமகால தாக்கத்தையும் ஒரு இயக்கத்தின் கீழ் இந்த புத்தகம் அளிக்கின்றது. இதன் மூலம் தமிழகம் கடந்த பத்து ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றம் அனைத்திற்கும் மொத்த திராவிட இயக்க வரலாற்றையும் காரணி ஆக்குகின்றது. ஆனால், சமூக மாற்றத்தை கொள்கையாக கொண்ட திராவிட இயக்கம், பரந்துபட்ட நில சீர்திருத்தத்திற்கு பல முறை வாக்குறுதி அளித்த போதும் அதை நிறைவேற்றாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஆணும், பெண்ணும்!

கேரள மாநிலத்தில் வரதட்சணை, குடும்ப வன்முறைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பெண்ணிய நவ கேரளம் இயக்கத்தை ஒட்டி, மார்க்சிய வார இதழான 'சிந்தா'வில் கேரள மாநில முதல்வரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் எழுதிய கட்டுரை...

இன்றைய அரசியலும் மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும் மாற்றும்

டி.கே. ரங்கராஜன் (மத்தியக் குழு உறுப்பினர்) இந்திய அரசியலில் ஒரு வலதுசாரி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் உண்மையான பொருள் என்ன? இதனை எவ்வாறு புரிந்து கொள்வது? இத்தகைய ஆபத்தான அரசியல் வளர்ச்சி போக்கை தடுப்பதற்கு ஒரு வர்க்க கட்சி என்ற முறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடுகள் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையின் மையமான அம்சமாகும். இந்துத்துவா எனும் சித்தாந்தத்தை முன்வைத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் பாஜக மறுபுறத்தில் மக்களின் பொருளாதார வாழ்விலும் பெரும் நெருக்கடியை உருவாக்கும் கொள்கைகளையும் …

Continue reading இன்றைய அரசியலும் மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும் மாற்றும்