மார்க்சிய நோக்கில்இயற்கை அறிவியலும் சமூக அறிவியலும்:ஒரு பொருத்தப்பாடு

சூழல் மற்றும் அதன் தேவைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் ஆற்றலையே தகுதியுடையது என்றார் டார்வின். அதாவது டைனோசர்கள் வலிமையுடையவைதான். ஆனால் அவை இயற்கைத் தேர்வில் மறைந்து போயின. அதேசமயம் சிறிய கரப்பான் பூச்சிக்கள் வெகுகாலமாக உயிர் வாழ்கின்றன. இங்கு தகுதியுடையது கரப்பான் பூச்சிதானே அன்றி டைனோசர்கள் அல்ல.

COP26 மாநாட்டின் உண்மைப் பின்னணி !

குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் கூடிய வளர்ச்சி என்ற திட்டத்தை முன்னெடுத்து, புவி வெப்பமாதலின் அச்சுறுத்தலுக்கு எதிராக தனது உரிய பங்கை ஆற்றிக்கொண்டே இந்தியா, உலக கார்பன் பட்ஜெட்டில் தனது நியாயமான பங்கினை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான உத்திகளை வகுக்க வேண்டும். சுய சார்பான உற்பத்தி துறை வளர்ச்சி என்ற இலக்கில் சமரசத்திற்கு இடம் இல்லை.

அறிவுசார் சொத்து, அறிவில் ஏகபோக உரிமை மற்றும் வாடகை பொருளாதாரம் !

பல்வேறு வளஆதாரங்களையும், சமூகங்களையும்ஒருங்கிணைத்து கொண்டுவரும் சாத்தியம் இப்போது போல வேறெப்போதும் ஏற்பட்டதில்லை. புதிய அறிவை உருவாக்க இவையெல்லாம் வழிவகுக்கின்றன. உழைப்பு மேலும் மேலும் சமூக மயமாகியுள்ளது, அனைத்து உழைப்பாக மாறியுள்ளது. அதனை பயன்படுத்தி மக்களின் பொது நன்மைக்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சிக்கு இடையூறாக அறிவுசார் சொத்துடைமையின் தனியார் கையகப்படுத்துதல் நோக்கம் செயல்படுகிறது.

கொரோனா தொற்றும், பொது சுகாதாரக் கட்டமைப்பும்

இதுவரை தடுப்பூசியோ, சிகிச்சைக்கான மருந்தோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், “மந்தை நோய்எதிர்ப்புசக்தி” அல்லது ”திரள் நோய்எதிர்ப்புசக்தியை” (HERD IMMUNITY) குறித்து கருத்தாக்கம் பொதுவெளியில் பேசப்படுகிறது. ”திறன் எதிர்ப்புசக்தியை தடுப்பூசிகளைக் கொண்டு உருவாக்குவதுதான் மருத்துவ ரீதியாகப் பாதுகாப்பானது.

கருந்துளை; அறிதல், அறிவியல், இயக்கவியல் பொருள் முதல்வாதம்!

இரா.சிந்தன் மனிதகுலம், தனது முதல் கருந்துளை படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. அறிவி யல் ஆராய்ச்சியில் இது ஒரு புதிய உயரம். கருந் துளை என்றால், அண்டத்தில் காணப்படுவதி லேயே புரிந்துகொள்ள சிக்கலான பொருளாகும். ஏற்கனவே நாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற் கொண்டிருக்கிறோம், இப்போது நாம் அதனைப் படம்பிடிக்கும்முயற்சியில் முன்னேறியுள்ளோம். அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அனுமானித்த ஒன்றை, கண்ணுற்றுக் காண்பது மிக முக்கியமானது.  இப்போது  நமக்கு கிடைத்திருப்பது, எம் 87 என அழைக்கப்படுகின்ற கேலக்சி எனப்படும் ஒரு அண்டத்தின் …

Continue reading கருந்துளை; அறிதல், அறிவியல், இயக்கவியல் பொருள் முதல்வாதம்!

நெய்தல் நிலையும் கார்பரேட் வலையும் …

வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், அது செயல்படுத்தும் விதம், மீனவர் கள், விவசாயிகள், விவசாயக் கூலிகள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள். சூழலியல் ரீதியாக வளர்ச்சி திட்டத்தின் நிலை என்ன என்ற அடிப்படை யிலேதான் இனி வளர்ச்சி திட்டங்கள் அணுகப்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு மக்களுக்காகச் செயல்படும் அரசியல் இயக்கங்களின் செயல் திட்டம் மாற்றம் காண வேண்டும்.

கடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்

‘கடவுள்’ எனும் கருதுகோள் இல்லாமலேயே இந்தப் பேரண்டத்தின் உருவாக்கம், வளர்ச்சி, இருப்பு, ஏன் நாளைய நிலைமாற்றம், மரணம் ஆகிய அனைத்தையும் விளக்க இயலும் என்பதை அவர் தெளிவாக்கியுள்ளார். அவரது நிரூபணம் இந்தப் பேரண்டத்தில் கடவுளுக்கு இருந்த கடைசி இடத்தையும், வேலையையும் இல்லாது செய்துவிட்டது.

சுற்று சூழலும் பொருளாதார வளர்ச்சியும்: மார்க்சிய அணுகுமுறை

பொது வெளியில் அறிவியல் விரோத சூழல் அடிப்படை வாதிகளையும் ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சி மற்றும் சூழல் தொடர்பான மக்கள் விரோத கொள்கைகளையும் அம்பலப்படுத்த இத்தகைய விவாதம் உதவும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

பேரழிவின் மீது முதலாளித்துவம் நடத்தும் பேரம்

பாரிஸ் உடன் படிக்கையில் அமெரிக்கா ஒப்புக்கொண்டபடி அதன் உமிழ்வானது 2005ம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 2025ம்ஆண்டுக்குள் 25-28% குறைப்பது என்பது போன்ற மற்றொரு ஒப்பந்தத்தை சீனாவுடனும் செய்திருக்கிறது. எனவே சீனா உடன்பாட்டை அமல்படுத்த நெருக்கடி கொடுக் கும்.