பேரிடர் தொடரோட்டம் …

இந்த இக்கட்டான சூழலில் நடந்துமுடிந்த COP-21 வெற்று வார்த்தைகளோடுதான் முடிவுற்றுள்ளது என்றே அரசு சாரா சூழலியல் நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 32 பக்கங்களும் 140 சரத்துகளும் (Clauses) 29 அம்சங்களும் (Articles) கொண்ட ஒப்பந்தத்தில் யாரையும் கட்டுப் படுத்தும் எந்த சொற்றொடரும் இல்லை. நாடுகளை அவர்களால் இயன்ற உமிழ்வுக் குறைப்பைக் கூறுமாரு கேட்டுக் கொண்டதைத் தவிர வேறு எந்த முடிவும் எட்டப்பட்டத்ற்கான அறிகுறியும் இல்லை.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு!

சுற்றுச் சூழல் பற்றிய ஞானம் இன்றையத் தேவையாகும். ஆண், பெண் சமத்துவத்திற்கு இந்த ஞானம் மிக அவசியமான ஒன்று. ஆணும், பெண்ணும் இணைந்து இந்த ஞானத்தோடு செயல்படும் பொழுதுதான் இயற்கை நமக்கு உதவுகிறது.