புரட்சிக்கு ஒரு நாள் முன்பாக லெனின் எழுதிய கடிதம்!

வி.இ.லெனின்

தமிழில்: அபிநவ் சூர்யா

[ரஷ்யாவில் நடைபெற்ற பிப்ரவரி புரட்சிக்குப் பின் எட்டு மாதங்களில் லெனினின் எழுத்துகள் அனைத்துமே புரட்சியின் பாதையில் போல்ஷ்விக் புரட்சியாளர்களிடையே நிலவிய சித்தாந்த குழப்பங்களை, தயக்கங்களை நீக்கும் வகையில் இருந்தன.

கீழ் காணும் கடிதம் லெனின் அவர்கள் அக்டோபர் புரட்சிக்கு ஒரு நாள் முன்பு மத்திய குழு உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் ஆகும். இதில் அவர், வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களை புரட்சியாளர்கள் உணராமல், மக்களின் புரட்சிகர உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போவது எவ்வாறு மாபெரும் குற்றமாக விளையும் என்பதை விளக்குகிறார்.

ரஷ்ய புரட்சி அரங்கேறிய தேதி, தற்போது புழக்கத்தில் உள்ள ஜார்ஜியன் நாள்காட்டி முறைப்படி நவம்பர் 7 ஆகும். ஆனால் 1917 ஆம் ஆண்டில்,  ரஷ்யாவில் ஜூலியன் நாள்காட்டி முறை பழக்கத்தில் இருந்து. அது ஜார்ஜியன் நாள்காட்டி முறையை விட 13 நாட்கள் பின் தங்கியது. அதன்படி புரட்சி அரங்கேறிய தேதி அக்டோபர் 25. அதனால் இந்த கடிதத்தில் தேதிகள்  “அக்டோபர்” மாதத்தில் என குறிப்பிடப்பட்டுள்ளன. – ஆசிரியர் குழு]

தோழர்களே,

நான் 24ஆம் தேதி மாலையில் இவ்வரிகளை எழுதுகிறேன். மிக மிக முக்கியமான நிலமையை எட்டியுள்ளோம். இப்போது எழுச்சியை தாமதிப்பது என்பது மிகவும் ஆபத்தாக விளையும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அனைத்துமே ஒரு நூல் இழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தோழர்கள் உணர என் மொத்த சக்திகளையும் கொண்டு வற்புறுத்துகிறேன்; எந்த சம்மேளனங்களோ, மாநாடுகளோ (சோவியத் மாநாடு உட்பட) தீர்க்க முடியாத பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இவை மக்களால், ஜன சக்தியால், ஆயுதம் தாங்கிய மக்களின் போராட்டத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.

“கோர்னிலோவ்”களின்[1] முதலாளித்துவ சர்வாதிகார தாக்குதல்களும், வெர்கோவ்ஸ்க்கி[2] நீக்கப்பட்டுள்ளதும், நாம் தாமதிக்க முடியாது என்பதை காட்டுகிறது. எந்த நிலையிலும், இன்று மாலையே, இன்று இரவே, நாம் முதலில் இராணுவ அதிகாரிகளின் ஆயுதங்களை பறிமுதல் செய்து (அவர்கள் தடுத்தால், அவர்களை வீழ்த்தி), இந்த அரசாங்கத்தை கைது செய்து, முன்னேற வேண்டும்.

நாம் காத்திருக்க கூடாது! நாம் அனைத்தையும் இழக்கக் கூடும்!

உடனடியாக அதிகாரத்தை கைப்பற்றுவதன் பலனானது மக்களுக்கானதாய் (மாநாடு அல்ல. மக்களுக்கு. குறிப்பாக முதலில் இராணுவ வீரர்களுக்கும்[3] மற்றும் உழவர்களுக்கும்), இந்த கோர்னிலோவிய அரசாங்கத்திடம் இருந்து அவர்களை காப்பதாய் இருக்கும். இந்த அரசாங்கம்தான் வெர்கோவ்ஸ்க்கியை வெளியேற்றி, இரண்டாம் கோர்னிலோவ் சதியை[4] வடிவமைத்தது.

யார் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்?

இந்த கேள்வி இப்போது முக்கியம் இல்லை. வேண்டுமென்றால், புரட்சிகர இராணுவக் குழு எடுக்கட்டும். இல்லையென்றால், மக்களின் நலனை பாராட்டும் உண்மையான பிரதிநிதிகளுக்கு, (உடனடியாக அமைதிக்கான முன்மொழிவு மேற்கொண்டு) இராணுவ வீரர்களின் நலனை காப்பவர்களுக்கு, (உடனடியாக நிலக்கிழார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தனிச்சொத்தை ஒழிக்கும்) உழவர்களின் நலனை காப்பவர்களுக்கு, பட்டினியில் வாடுபவர்களின் நலனை காப்பவர்களுக்கு மட்டுமே அதிகாரத்தை விட்டுத் தருவோம் எனக் கூறும் “ஏதோ ஒரு நிறுவனம்” அதிகாரத்தை கையிலெடுக்கட்டும்.

அனைத்து இராணுவ அமைப்புகளும், அனைத்து சேனைகளும், எல்லா படைகளும் உடனடியாக திரட்டப்பட்டு, அவர்களின் பிரதிநிதிகளை புரட்சிகர இராணுவ குழுக்களுக்கும், போல்ஷ்விக்களின் மத்தியக் குழுக்கும் அனுப்பி, எந்த நிலையிலும் 25ஆம் தேதி வரை கெரென்ஸ்க்கி[5] மற்றும் அவர் கூட்டாளிகள் கையில் அதிகாரத்தை விட்டு வைக்கக் கூடாது என்ற பிரத்தியேக கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த விஷயம் இன்று மாலையே, இன்று இரவே, உடனடியாக முடிவு செய்யப்பட வேண்டும்.

இன்று வெற்றி பெறும் சாத்தியம் இருக்கையில் (இன்று வெற்றி நிச்சயம்), நாளை பெருமளவில் இழக்க, உண்மையில் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கையில், மேலும் தாமதித்தால், வரலாறு புரட்சியாளர்களை மன்னிக்காது.

இன்று நாம் அதிகாரத்தை கைப்பற்றுவது சோவியத்களுக்கு[6] எதிராக அல்ல, அவர்களின் சார்பாக.

எழுச்சியின் பிரதான பணியே அதிகாரத்தை கைப்பற்றுவதுதான்; கைப்பற்றிய பின், எழுச்சியின் அரசியல் கடமை குறித்த தெளிவு கிடைக்கும்.

அக்டோபர் 25ஆம் தேதியின் ஊசலாடும் வாக்களிப்பிற்காக காத்திருப்பது என்பது வெறும் ஒரு சடங்காகவோ, அல்லது அபாயகரமாகவோ கூட முடியக் கூடும். இந்த மாதிரியான கேள்விகளுக்கு முடிவை வாக்களிப்பு மூலம் அல்லாமல், வன்முறை மூலம் தீர்மானிக்க, கடமையும் உரிமையும் மக்களுக்கு உண்டு. புரட்சியின் மிக முக்கியமான தருணங்களில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளுக்காக, மிகச் சிறந்த பிரதிநிதிகளுக்காகவும் காத்திருக்காமல், பிரதிநிதிகளுக்கு வழிகாட்டுதல் கொடுக்கும் கடமையும், உரிமையும் கூட மக்களுக்கு உண்டு.

அனைத்து புரட்சிகளின் வரலாறும் இதை நிறுவி உள்ளது; புரட்சியை காப்பாற்றுவதும், அமைதிக்கான வாய்ப்பை உருவாக்குவதும், பெட்ரோகார்ட் நகரத்தை காப்பாற்றுவதும், பஞ்சத்திலிருந்து காப்பாற்றுவதும், உழவர்கள் நில உரிமை பெறுவதும் தங்களை சார்ந்தே உள்ளது என புரட்சியாளர்கள் அறிந்திருந்தும், இந்த வாய்ப்பை தவற விட்டால், அது அளவற்ற பெரும் குற்றமாக விளையும்.

இந்த அரசாங்கம் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. எந்த நிலையிலும், அதற்கு இறுதி அடி கொடுக்கப்பட்டே ஆக வேண்டும்.

செயல்பாடுகளை மேலும் தாமதிப்பது அபாயகரமாக ஆகிவிடும்.

*

குறிப்புகள்:

[1] இராணுவ தளபதி கோர்னிலோவ் தலைமையிலான பிற்போக்கு அமைப்பு

[2] கோர்னிலோவை எதிர்த்த அமைச்சர்

[3] முதலாம் உலகப் போரில் அவதிப்பட்டு வந்த ரஷ்ய இராணுவம் மற்றும் சாதாரண சிப்பாய்கள்

[4] ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் இராணுவ ஆட்சியை நிறுவும் முயற்சி

[5] பிப்ரவரி புரட்சிக்குப் பிந்தைய  முதலாளித்துவ அரசின் தலைவர்

[6] தொழிலாளர் கமிட்டிகள்

கீழவெண்மணித் தீயும் கூலிப் போராட்டமும்

கோ. வீரய்யன்

1968 டிசம்பர் 25ம் தேதி இரவு மிராசுதார்களால் கீழவெண்மணி விவசாயத் தொழிலாளர்களின் தெரு நெருப்பு வைத்து கொளுத்தப்பட்டது. ஆண்கள் துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கப்பட்டார்கள். இதைக் கண்டு அஞ்சிய பெண்களும் பிள்ளைகளும் சில வயது முதிர்ந்த ஆண்களும் ஓடி ஒளிந்த சிறுகுடிசை எரித்து சாம்பலாக்கப்பட்டது. அதில் 44 உயிர்கள் எரிந்து சாம்பலாயின. இந்த தீயின் வெளிச்சத்தில்தான் தமிழக அரசுக்கு கண் திறந்தது. திரு. கணபதியாப்பிள்ளை ஒரு நபர் கமிஷன் அறிவிக்கப்பட்டது. கமிஷன் விசாரணை செய்து அறிக்கை கொடுக்கும்வரை இந்த ஆண்டு சம்பா அறுவடைக்கு கூலி உடன்பாடு இல்லை என்றால், இந்த அடக்குமுறை கொலை வெறித்தாக்குதல் – குடும்பத்தோடு எரிப்பது, இதையெல்லாம் கண்டு அஞ்சி அடங்கிவிட மாட்டோம், வயல்கரையில் கூலி உயர்வுப் போராட்டம் நடந்தே தீரும் என்று விவசாயத் தொழிலாளர்களின் இயக்கம் அறிவித்தது.

தஞ்சை ஒப்பந்தம்: 1969 ஜனவரி 16ஆம் தேதி தஞ்சையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒரு முத்தரப்பு மாநாடு கூடி, கமிஷன் இருப்பதால் இந்தச் சம்பா அறுவடைக்கு மட்டும் அறுவடை கூலி கலத்திற்கு,

4 லிட்டர் இருக்கும் இடத்தில் நாலரை லிட்டர்
நாலரை லிட்டர் இருக்கும் இடத்தில் 5 லிட்டர்
5 லிட்டர் இருக்கும் இடத்தில் ஐந்தரை லிட்டர்
ஐந்தரை லிட்டர் இருக்கும் இடத்தில் 5 ¾ லிட்டர்
5 ¾ லிட்டர் இருக்கும் இடத்தில் ஆறு லிட்டர்
6 லிட்டர் இருக்கும் இடத்தில் 6 லிட்டர் மட்டுமே.

உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுக்கப்படவேண்டும் என்றும், இது இந்த ஒரு ஆண்டு அறுவடைக்கு மட்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இருதரப்பு விசாரணைகளையும் முடித்து கணபதியாப் பிள்ளை கமிஷன் கொடுத்த அறிக்கை, உள்ளூர் ஆட்களுக்கு வேலையும் ஒரே வித கூலியும் என்ற கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை மறுக்க இயலாது என்று கூறியது. வெளியாள் இறக்குமதிதான் பிரச்சனைகளுக்குக் காரணம் என்றும் கூறியது. ஒரு கடைநிலை ஊழியன் பெறும் ஊதியம்கூட ஒரு விவசாயத் தொழிலாளிக்கு வழங்கப்படாவிட்டால் அவன் எப்படி வாழ முடியும் என்ற கேள்வியையும் எழுப்பி, கீழ்க்கண்டவாறு கூலி வழங்க கமிஷன் சிபாரிசு செய்தது.

சாகுபடி காலத்தில் ஆண்களுக்கு தினக்கூலி 6 லிட்டர் நெல் ரூ 1.50 அல்லது 3. 00 ரூபாய். பெண்களுக்கு 5 லிட்டர் நெல் 50 காசுகள், அல்லது 1. 75 ரூபாய் என்றும், அறுவடையில் ஒன்பதில் ஒரு பங்கு (54 லிட்டரில் 6 லிட்டர்) என்றும், இந்தக்கூலி விகிதம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படவேண்டும் என்றும் அறிக்கை அறிவித்தது. அதை அரசு ஏற்று இதுவும் கீழ்த்தஞ்சைக்கு மட்டும்தான் அமுலாகும் என்று அறிவித்தது.

1969-இல் அறிவிக்கப்பட்ட சட்டம் 3. 8. 72 உடன் முடிவதால் அரசு மறுபரிசீலனை செய்து, மூன்று ஆண்டுகளில் ஏறியிருக்கும் விலைவாசி உயர்விற்கு ஏற்ப கூலி உயர்வு வழங்கப்படவேண்டும் என்று கோரப்பட்டது. அதற்கான இயக்கங்கள் நடத்தப்பட்டன. இருந்தும் அரசு 1.8 72 -இல் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு அதே கூலி நீடிக்கும் என்று அறிவித்தது. இதை ஏற்க மறுத்து, போராட்டம் நீடித்தது. 3.8.72-இல் 2 இலட்சம் தொழிலாளர்கள் பொதுவேலை நிறுத்தம் செய்தார்கள். தொடர்ந்து 10 நாட்கள் போராட்டம் நீடித்தது. 1000க்கும் அதிகமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு 13. 8. 72-இல் விவசாய அமைச்சர் திரு. மன்னை நாராயணசாமி அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஏ. நம்பியார் தலைமையில் தஞ்சையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி, நெல்லும் பணமும் என்ற சட்டத்தில் உள்ள கூலி அப்படியே இருக்கும். பணமாக கொடுப்பவர்கள் ஆண்களுக்கு 70 காசுகளும், பெண்களுக்கு 20 காசுகளும் உயர்த்தித் தரவேண்டும் என்று ஒப்பந்தமானது.

இதுவரை இல்லாத அளவு மேலத்தஞ்சைக்கும் ஆண்களுக்கு ரூ 3.50, பெண்களுக்கு ரூ 2.25 என்று மாவட்ட ஆட்சித்தலைவரால் அவார்டாக அறிவிக்கப்பட்டது. இதுவும் ஒரு ஆண்டுக்கும் மட்டும் என்றும், அதற்குள் ஒரு கமிஷன் நியமிக்க அரசுக்குச் சிபாரிசு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கீழத்தஞ்சையை நீக்கிவிட்டு தமிழகம் முழுவதற்கும் ஒரு கூலி கமிஷன் போடப்பட்டது அதில் விவசாயத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் எவரும் இல்லை. எனவே அந்தக் கமிஷனை புறக்கணிப்பதென விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்தது. அந்தக் கமிஷன் சிபாரிசு செய்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் (கீழத்தஞ்சை தவிர) ஆண்களுக்கு தினச்கூலி ரூ 3.00: பெண்களுக்கு 0.75 சிறுவர்களுக்கு ரூ 1.25 என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் அமுல் நடத்தப்படவில்லை.

மீண்டும் தஞ்சை ஒப்பந்தம்: 1973இல் தஞ்சைமாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஏ. நம்பியார் தலைமையில் முத்தரப்பு மாநாடு கூடியது. அதில் கீழத்தஞ்சையில் மட்டும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தலா 15 காசுகள் மட்டுமே கூலி உயர்வு தர இயலும் என்று மிராசுதார்கள் கூறிவிட்டார்கள். இதை அனைத்து சங்கங்களும் ஏற்றுகொண்டுவிட்டன. நமது சங்கம் மட்டும் ஏற்கவில்லை.

1974- இல் ஒரு கூலி ஒப்பந்தக் கூட்டம் தஞ்சையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ராமதாஸ் தலைமையில் கூடியது. அதில், தினக்கூலி ஆண்களுக்கு 6 லிட்டர் நெல்லுடன் ரூ 2.75; அல்லது பணமாகக் கொடுத்தால் ரூ 6.0, பெண்களுக்கு 5 லிட்டர் நெல்லுடன் ரூ. 1.50 அல்லது பணமாக கொடுத்தால் ரூ. 4.00; அறுவடை கூலி ஒன்பதில் ஒன்று என்று முன்பு உள்ளது போலவே இருக்கும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தக் கூலியையே பிறகு நியமிக்கப்பட்ட திரு வி. கார்த்திகேயன் அவர்களின் கமிஷனும் சிபாரிசு செய்தது. அதே போல் தமிழகம் முழுவதற்குமாக நியமிக்கப்பட்ட திரு. சீனிவாசன் கமிஷன் தினக்கூலி ஆண்களுக்கு ரூ 5/- என்றும், பெண்களுக்கு ரூ 2.75 என்றும் சிபாரிசு செய்தது. இந்த இரு சிபாரிசுகளும் 1975இல் சட்டமாயின.

1967ஆம் ஆண்டு மன்னை ஒப்பந்தம் கீழ்த்தஞ்சைக்கு மட்டும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, அடுத்து ஒவ்வொரு முறையும் முத்தரப்பு மாநாடு கூடும்போதும் மாவட்டம் முழுவதற்கும் ஒரு ஒப்பந்தம் வேண்டும் என்று விவசாயத் தொழிலாளர் இயக்கத்தால் வற்புறுத்தப்பட்டது. கூலி கோரி பாபனாசம், குடந்தை, தஞ்சை வட்டங்களில் இயக்கங்களும் நடத்தப்பட்டன.

1972-ஆம் ஆண்டு கண்டமங்கலம் கூலி உயர்வு இயக்கம் பலமானதாக மாறியது. அதனால் விவசாயத் தொழிலாளர்கள், மிராசுதார்கள் தஞ்சை தாசில்தார் தலைமையில் கூடி ஒரு கூலி உடன்பாடு ஏற்பட்டது. அதுதான் பிறகு 1.8.72இல் கூடிய முத்தரப்பு மாநாட்டில் மேலத்தஞ்சை முழுவதற்குமான கூலி அவார்டாக, ஆட்சித்தலைவரால் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிராமம் கிராமமாக கூலி உயர்வுக்கான இயக்கங்கள் துவங்கின. அங்கு கூலி உயர்வுடன் மட்டுமல்லாமல், அரசின் தரிசு நிலங்கள் பெறும் இயக்கமாகவும், மிராசுதார்களிடம் கூலியும், அரசிடம் நிலமும் கோரும் இயக்கமாக பரவியது. இதன் வளர்ச்சியில் வழக்கம்போல் அடக்குமுறை உபயோகப்படுத்தப்பட்டது. இதில் ஒரத்தூர் நிலத்திற்கு நடைபெற்ற இயக்கம் குறிப்பிடத்தக்கது. அவசரகால நிலையில் அதை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளர்களிடமிருந்து பறித்துவிட சகல முயற்சிகளும் செய்யப்பட்டது. என்றாலும், அந்த நிலம் விவசாயத் தொழிலாளர்களால் பாதுகாக்கப்பட்டது.

திருவையாறு வட்டம் காருகுடி கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சுடுகாட்டிற்கு இடம் கேட்டு நடத்திய இயக்கமும், சுடுகாட்டிற்கு இடம் கிடைக்காத நிலையில், காவிரி ஆற்றிலேயே எங்கள் குடும்பங்களில் யாரும் இறந்தால் அந்த பிணத்தை வைத்து எரிப்போம் என்று கூறியது மட்டுமல்ல; அவசர காலத்தில் 1976இல் ஒரு பிணம் காவிரி ஆற்றில் வைத்து எரிக்கப்பட்டது. இதன் பிறகுதான் அங்கு சுடுகாட்டிற்கு இடம் கொடுக்கப்பட்டது.

இந்த இயக்க வளர செங்கொடி இயக்கம்தான் காரணம் என்றும், அதற்கு அதன் தலைவர் தியாகி என். வெங்கடாசலம்தான் காரணம் என்றும் எதிரிகள் குறிவைத்தார்கள்; கூடினார்கள்; திட்டமிட்டார்கள்; மொட்டைக் கடிதம் எழுதினார்கள். அதன் பிறகு, 1977 செப்டம்பர் 21ஆம் தேதி இரவு 8 மணி வாக்கில் சோழகம்பட்டி ரயில்வே நிலையத்திலிருந்து இறங்கி தனியே செல்லும்போது தோழர் என் வெங்கடாசலத்தை கடத்திக்கொண்டு போய் கொலை செய்து, எரித்துச் சாம்பலாக்கிவிட்டார்கள். அதிலும் அவரை கொலை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. திறமைமிக்க தமிழக காவல்துறைக்கு தியாகி என். வெங்கடாசலத்தை கடத்திச்சென்று கொலை செய்தவர்கள் யார் என்று இன்னும் கூறும் திறமை ஏற்படவில்லை என்று வைத்திருக்கிறார்கள்.

ஜாதிய சமூகக் கொடுமைகளை எதிர்த்து, மிதிபட்டு, அடித்தட்டில் கிடந்த மக்களை விடுவித்து, மனிதனாக்கி, பண்ணையாளும் ஊராட்சித் தலைவனாக வர முடியும் என்று உயர்த்தி, ஒரு சமூகம் மதிக்க வேண்டிய, மதிக்கக்கூடிய, மனிதனாக உயர்த்தியிருக்கிறது செங்கொடி. இயக்கம் இருக்கும் எந்த கிராமத்திலும் ஜாதியின் பெயரால் ஏழைகள் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

கூலிக்கு நடத்தும் இயக்கத்துடன் உபரி நிலம், தரிசு நிலம், பினாமி நிலம் ஆகிய அனைத்திலும் கூலிக்காரர்களை நிலசொந்தக்காரர்களாக்கவும் போராடி வருகிறது. பலரை நிலச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கியிருக்கிறது.

1974ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டம் 1977இல் முடிந்து விட்டது. மேலும் ஒரு ஆண்டும் சென்றுவிட்டது. இந்தச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று இயக்கம் கோரியது. 1978 தஞ்சையில் கூடிய முத்தரப்பு மாநாடு எந்த முடிவும் மேற்கொள்ளாமல் கலைந்தது.

பிறகு கமிஷன்கள் அமைக்கக் கோரி இயக்கத்தை நடத்தியது. அதன்படி கீழத்தஞ்சைக்கு மட்டும் திரு. எஸ். ராமச்சந்திரன் கமிஷனும், கீழத்தஞ்சை நீங்கலாக தமிழகம் முழுவதற்கும் திரு. கே திரவியம் கமிஷனும் அமைக்கப்பட்டது. அவர்கள் சிபாரிசு செய்தபடி,
கீழத்தஞ்சையில் ஆண்களுக்கு தினக்கூலி 7 லிட்டர் நெல்லுடன் ரூ 2.80 அல்லது ரூ 7.20, பெண்களுக்கு தினக்கூலி 6 லிட்டர் நெல்லுடன்
1.80 அல்லது ரூ 5.60 என்று நியாயக் கூலிச்சட்டமும், கீழத்தஞ்சை தவிர்த்த தமிழகம் முழுவதற்கும் ஆண்களுக்கு ரூ 7.00 பெண்களுக்கு ரூ 5. 00 என்றும், அறுவடை கூலி எட்டில் ஒரு பங்கு என்று குறைந்த பட்சக் கூலிச்சட்டமும் திருத்தப்பட்டது. 1980-இல் நியாயக் கூலிச்சட்டம் திருத்தப்பட்டு, பணக் கூலியில் தலா 60 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கிறது.

1980இல் நியாய கூலிச்சட்டப்படி கீழத்தஞ்சையில் ஆண்களுக்கு தினக்கூலி 7 லிட்டர் நெல்லுடன் 2.80 அல்லது 7.80. பெண்களுக்கு 6 லிட்டர் நெல்லுடன் ரூ 1.80 அல்லது ரூ 6.20. அறுவடை கூலி ஒன்பதில் ஒன்று.

குறைந்தபட்சக் கூலிச் சட்டப்படி, கீழத்தஞ்சை தவிர, தமிழகம் முழுவதும் ஆண்களுக்கு தினக்கூலி ரூ. 7, பெண்களுக்கு தினக்கூலி ரூ 5, சிறுவர்களுக்கு ரூ 4. அறுவடையில் எட்டில் ஒரு பங்கு. வேலை நேரம் 7 மணி என்ற இரண்டு கூலிச்சட்டங்கள் இன்று தமிழகத்தில் அமுலில் உள்ளது. 1943இல் துவங்கி 1980 வரை விவசாயத் தொழிலாளர்களுக்காகப் போராடிய, போராடி வருகிற இயக்கம் என்று முத்திரை பதித்திருக்கிறது விவசாயத்தொழிலாளர் சங்கம்.

நன்றி:  விவசாய சங்கத்தின் வீர வரலாறு – கோ. வீரய்யன் (1981, கார்க்கி நூலகம் வெளியீடு)

பாசிசத்தின் மீதான சோவியத் வெற்றியின் விளைவு

என்.சங்கரய்யா

(பாசிச ஹிட்லரை, சோவியத் செஞ்சேனை வீழ்த்தியதை போற்றும் வகையில் 30.04.1985 அன்று வெளியான “தீக்கதிர்” சிறப்பிதழில் தோழர் என்.சங்கரய்யா எழுதிய கட்டுரை)

1942 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ம் தேதி வேலூர் மத்திய சிறை; அரசியல் பாதுகாப்பு கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதி; சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் நாஜிப் படைகள் திடீரென்று தாக்குதலைத் தொடுத்துவிட்டன என்று வானொலி அறிவித்தது. பாதுகாப்புக் கைதிகள் வாழ்ந்த பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் திரு பட்டாபி சீத்தாராமையா, காமராஜ், சாம்பமூர்த்தி போன்றவர்களும் தோழர் ஏ.கே. கோபாலன், டாக்டர் கே.பி.கிருஷ்ணா மற்றும் பல கம்யூனிஸ்ட் தோழர்களும் சேர்ந்து இருந்தனர். அந்தத் தோழர்களில் நானும் ஒருவன்.

அச்செய்தியைக் கேட்டவுடனேயே, ஹிட்லரின் படைகள் இன்னும் ஆறு வார காலத்தில் ரஷ்யாவின் கிழக்கு எல்லையான விளாடிவாஸ்டாக் நகரத்தை கைப்பற்றிவிடும் என்று பட்டாபி சீத்தராமையா படபடவென்று பொரிந்து தள்ளினர். டாக்டர் பட்டாபி சீத்தாராமையா தான் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய ஆசிரியராவார். அவர், வரலாற்றை அறிந்து கொள்ள முடிந்த மேதாவித்தனம் அவ்வளவுதான்!

பொன்மொழிகள் பொய்மொழியானது

கம்யூனிஸ்டுகளான நாங்கள் கூடினோம். அதில் மார்க்சிஸ்ட் தத்துவ ஆசிரியர் கே.பி.கிருஷ்ணா பேசினார். டாக்டர் பட்டாபி போன்ற  ‘பெரியவர்கள்’ என்ன சொன்னபோதிலும், சோவியத் செஞ்சேனை தனது ராட்சசக் கால்களைக் கொண்டு நாஜிப் படைகளை மிதித்து அழித்துவிடும்: இது உறுதி என்று தோழர் கே.பி கிருஷ்ணா முழங்கினார். பலத்த கைதட்டல் எங்களிடமிருந்து கிளம்பியது.  ‘பூர்ஷ்வா வரலாற்று ஆசிரியர்’  பட்டாபியின்  ‘பொன்மொழிகள்’ பொய்மொழிகளாகின.

மெய்யான விஞ்ஞானமாம் மார்க்சிசம் – லெனினிசத்தின் வெளிச்சத்தில் தோழர் கே.பி.கிருஷ்ணா வெளியிட்ட சொற்களை வரவாறு உண்மை என நிரூபித்துக் காட்டியது.

சோவியத்- ஜெர்மன் யுத்தத்தைப் போல் பிரம்மாண்டமானதொரு யுத்தத்தை உலகம் இதுவரை கண்டதில்லை. சோவியத் கம்யூனிசம் அழிந்துவிடும் என்றும் அதேசமயத்தில் தங்களுடைய போட்டியாளனாகவும் எதிரியாகவுமிருந்த ஹிட்லர் ஜெர்மனியும் சோவியத் யூனியன் பிடியில் சிக்கி அடிபட்டுப்போவான் என்றும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் எகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டு செயலாற்றின.

பாசிசம் அனைத்து மக்களையும் அழிக்கும் என்று சோவியத் யூனியன் மேற்கத்திய நாடுகளை எச்சரித்தது. ஹிட்லருக்கு எதிராக பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியை அமைக்க முன்வருமாறு சோவியத் யூனியன் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளையும் அழைத்தது.

ஆனால், மேலை நாடுகள் அதை ஏற்க மறுத்துவிட்டன. செக்கோஸ்லாவாகியா, போலந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளை ஹிட்லர் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தினான். இந்த நாடுகளை ஹிட்லருக்கு பலியாக கொடுத்தன மேலை நாடுகள். இந்த நாடுகளை பிடித்தபின் ஹிட்லர் அடுத்தாற்போல் சோவியத் யூனியன் மீது பாய்வான் என்று அவை எதிர்பார்த்தன. மேலை நாடுகளின் நயவஞ்சகத் திட்டத்தை முறியடிக்கும் வகையிலும், தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான அவகாசத்தை தேடிக் கொள்வதற்காகவும், சோவியத் ராஜதந்திரம் முயற்சித்தது. சூழ்ச்சியை சூழ்ச்சியால் முறியடிக்க பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆக்ரமித்துக் கொள்வதில்லை என்றதொரு ஒப்பந்தத்தை சோவியத் யூனியன் ஹிட்லர்ஜெர்மனியுடன்செய்துகொள்ள வேண்டியதாயிற்று.

 இது, பாசிஸ்ட் ஜெர்மனிக்கு துணை போவதாகும் என்று மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கதறின. பாஸிசத்தை முறியடிக்க முன்னணி அமைக்க வாருங்கள் என்று சோவியத் யூனியன் பன்முறை வற்புறுத்தி அழைத்தபோது மறுத்து விட்ட மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கையே, இந்த உடன்பாட்டை செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தை சோவியத் யூனியனுக்குத் ஏற்படுத்தியது என்பதை உலக பாட்டாளி மக்கள் தெளிவாக உணர்ந்தனர்.

சோவியத் நாட்டைத் தாக்குவதற்கு ஏகாதிபத்திய நாடுகளினால் வளர்க்கப்பட்ட ஹிட்லர், தன்னை வளர்த்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீதும் யுத்தப் பிரகடனம் செய்தான். வளர்த்த கடா அவர்கள் மார்பிலேயே பாய்ந்தது. இதனால் இரண்டாவது உலகப் போர் 1938இல் ஆரம்பித்து விட்டது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறமும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய பாசிஸ்டு நாடுகள் மறுபுறமும் போரில் குதித்தன.

உலக முதலாளித்துவ அமைப்பு, ஏகாதிபத்திய பகுதியாகவும், பாசிஸ பகுதியாகவும் போரில் இறங்கின. தனக்குச் சாதகமான தருணம் பார்த்து ஹிட்லர் சோவியத் பூமியைத் தாக்குவான் என்று சோவியத் தலைமைக்கு நிச்சயமாக தெரியும். எனவே கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோவியத் யூனியன் தன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது.

சோவியத் மீது பாய்ந்தான்

எதிர்பார்த்தபடியே ஹிட்லர், சோவியத் யூனியன் மீது திடீரென்று மாபெரும் தாக்குதலைத் தொடுத்தான். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, தோழர் ஸ்டாலின் தலைமையில், இந்த ஜீவ மரணைப் போராட்டத்தை உறுதியாகச் சந்தித்தது. முதல் கட்டத்தில், பின்வாங்கிக் கொண்டே எதிரியை மேலும் மேலும் உள்ளே இழுத்து, அவனுக்கு பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. ஹிட்லரால்  ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், சோவியத் தேச பக்தர்கள் சக்திவாய்ந்த கொரில்லாப் போராட்டங்களை நடத்தி, எதிரியை நிலைகொள்ள விடாமல் தவிக்க வைத்தனர். சோவியத் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் உலக மக்களின் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றது. 

ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் நமக்கு ஏற்படும் அபாயமாகும் என்று பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் அறிவித்தார். ஜெர்மனியை எதிர்ப்பதற்கு முன்வர மறுத்த மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இப்பொழுது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே  சோவியத் யூனியனுடன் சேர்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சோவியத் யூனியன் முன்பிருந்தே விரும்பிய பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணி இப்பொழுதுதான் உருவானது. கோரமான போர்களில் சோவியத் படைகள் பாசிஸ்ட் ஜெர்மனியை பலவீனப்படுத்தின. லெனின்கிராட், ஸ்டாலின்கிராட், மாஸ்கோ மற்றும் இதர போர் முனைகளில் லட்சக்கணக்கான சோவியத் வீரர்கள் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்து எதிரியை தடுத்து நிறுத்தினர். லட்சக்கணக்கில் எதிரிப்படைகளை அழித்தனர்.

சோவியத்தின் சாதனை

சோவியத்தின் பிரம்மாண்டமான யுத்த நடவடிக்கைகள் உலகத்தை வியக்கச் செய்தன. விடுதலைபெற்றுவிட்ட உழைப்பாளி மக்களின் பொதுவுடைமை சமுதாயமும், அரசும் மட்டுமே இத்தகைய சாதனைகளை புரியமுடிந்தது என்பதை மனித வர்க்கம் கண்டது. சோவியத் யூனியன் மீது ஜெர்மனியின் வெறித் தாக்குதலின் வேகத்தை மட்டுப்படுத்த, ஜொமனியின் மேற்குப் பகுதியில், சோவியத்தின் நேச நாடுகளாகிய அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் தங்களின் துருப்புகளை இறக்கி, எதிரிக்கு எதிராக இரண்டாவதுபோர்முனையைத் துவக்க வேண்டுமென்று சோவியத்யூனியனும் முற்போக்கு சக்திகளும் கோரின.

ஆனால் இரண்டாவது போர் முன்னயைத் துவக்குவதற்கு அமெரிக்கா, பிரிட் டன் அக்கறை காட்டவிலை. காரணம் என்னவென்றல், அவர்களின் பழைய நோக்கம்தான். அதாவது ஜெர்மனி, சோவித் யூனியனை அடித்து நொறுக்கி  பலவீனப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சோவியத் யூனியன், ஜெர்மனியை சக்தி இழக்கும்படி செய்துவிட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும்பொழுது, அமெரிக்காவும் பிரிட்டனும் தமது படைகளை இறக்கி ஐரோப்பா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதுதான் அந்த நோக்கம். ஆனால், உள்ளதற்கே  ஆபத்து வந்துவிட்டது.

இரண்டு பக்க தாக்குதலுக்கு ஆளான ஹிட்லரின் ஜெர்மனி வீழ்ந்தது. இதுவே ஏகாதிபத்திய நேச நாடுகளின் நேச பார்வையாக நேச பாதையாக இருந்தது. நாளை சோவியத் தலைமை இவர்களின் இந்த சூழ்ச்சியையும் முறியடித்தது. பலமான எதிர் தாக்குதல்களை தொடுத்து ஜெர்மன் படைகளை சோவியத் பூமியிலிருந்து விரட்டியது ஜெர்மனியின் மூல பலத்தை அழித்தது. 

அதைத் தொடர்ந்து சோவியத் பூமி முழுவதையும் விடுவித்துவிட்டு ஜெர்மனியால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த போலந்து, ருமேனியா, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லோவியா, பல்கேரியா, ஹங்கேரி, அல்பேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை செஞ்சேனை ஹிட்லரின் கொடுமையில் இருந்து விடுவித்தது.

வென்றது கம்யூனிசம்

இந்த நாடுகளின் மக்கள் சோவியத் யூனியனுக்கு நன்றி செலுத்தினார்கள். இந்த நாடுகளில் எல்லாம் தொழிலாளர்களும் ஜனநாயகவாதிகளும் கம்யூனிச கட்சியின் தலைமையின் கீழ் விடுதலை அரசுகளை ஏற்படுத்தி, நாளடைவில் அவற்றை கம்யூனிஸ்ட் அரசுகளாக அமைத்தார்கள். சோவியத் செஞ்சேனை ஜெர்மனியை நோக்கி முன்னேறியது. இதைக்கண்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் பயந்து அலறின. சோவியத் யூனியனை பலவீனப்படுத்தவே இரண்டாம் போர்முனையை அவர்கள் துவக்காமல் இருந்தனர். சோவியத் செஞ்சேனையோ ஜெர்மனியின் தலைநகரான பெர்லினை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. சோவியத் படைகளால் விடுதலை செய்யப்பட்ட ஜெர்மன் பிரதேசம்தான் இன்று ஜெர்மன் ஜனநாயக குடியரசாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் இயங்குகிறது. எந்த ஜெர்மன் பூமி கம்யூனிஸ்ட் எதிர்ப்புக்கு பாசிசத்தை உருவாக்கியதோ அதே ஜெர்மன் பூமியின் ஒரு பகுதியில் இன்று கம்யூனிசம் வெற்றிவாகை சூடிவிட்டது. ஜெர்மனியை தோற்கடித்த பின் சோவியத் யூனியன் பாசிஸ்ட் ஜப்பானுக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்தது. ஆசியாவின் தூரக் கிழக்கு பகுதிகளான சீனாவிலும் கொரியாவிலும் இருந்த ஜப்பானின் படைகள் அனைத்தும் களமிறங்கின.

இதன்மூலம் மகத்தான சீன தேசமும் கொரிய நாடும் தங்களது தேச விடுதலையை பெறுவதற்கு சோவியத் யூனியன் உதவி செய்தது. இதன் விளைவாகவே பின்னர் சீன மக்களின் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வெற்றி பெற்றது. 1949 அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று சீன மக்கள் குடியரசை அமைத்தது. வடகொரியாவும் விடுதலை அடைந்தது.

சோசலிச அமைப்பு 

எனவே, இந்த யுத்தத்தில் சோவியத் யூனியனின் வெற்றியின் காரணமாக ஒரு நாட்டில் இருந்த சோசியலிசம் பல நாடுகளுக்கும் பரவியது. ஒரே ஒரு சோசலிச நாடாக இருந்த சோவியத் யூனியனுக்கு பதிலாக, பல்வேறு சோசலிச நாடுகள் அடங்கிய ஒரு உலக சோசலிச அமைப்பு வரலாற்று ரீதியில் உருவெடுத்தது.

1917 இல் சோசலிச புரட்சி ரஷ்யாவில் வெற்றி பெற்ற பொழுது, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் முதல் கட்டம் துவங்கியது. பல நாடுகளை கொண்ட சோசலிச அமைப்பு உருவானதை தொடர்ந்து, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது. சோவியத் வெற்றியினால் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தங்களை அடக்கி ஆண்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக தேச விடுதலை புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சோவியத் யூனியனின் உதவியினாலும் இதர சோசலிச நாடுகளின் ஆதரவாலும், 100 கோடி ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கள் ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து அரசியல் விடுதலை பெற்று, இன்று தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூறு கோடி மக்களின் விடுதலையை தொடர்ந்து, உலக ஏகாதிபத்திய அமைப்பு மேலும் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக உலக முதலாளித்துவ அமைப்பில் பொருளாதார நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஆரம்பமாகிவிட்டது. மேலும், சோவியத் யூனியனின் பாசிஸ்ட் எதிர்ப்பு வெற்றியின் காரணமாக, முதலாளித்துவ உலகம் முழுவதிலும் தொழிலாளி வர்க்க இயக்கங்களும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஆழமாக வேரூன்றி வளர்ந்து வருகின்றன.

செங்கொடி இல்லாத நாடு இன்று உலகத்தில் இல்லை. இந்த வளர்ச்சி மனித வர்க்கத்தை எல்லா பாதைகளும் கம்யூனிசத்திற்கே இட்டு செல்கின்றன என்ற நிலையை உலகத்தில் ஏற்படுத்தி விட்டது. பாசிஸ்ட் எதிர்ப்பு யுத்தத்தில் சோவியத் யூனியன் பெற்ற மகத்தான வெற்றியின் காரணமாக ஏற்பட்ட இந்த விளைவுகள் இன்றைய சகாப்தத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்து வருகின்றன.

போர் முனையில் கலைஞர்கள்

நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் மக்களின் மாபெரும் தேசபக்தி யுத்த வரலாற்றில் கலைஞர்களுக்கும், கலாச்சார துறை ஊழியர்களுக்கும் முக்கியமான இடம் உண்டு. பாடகர்களும், இசைவாணர்களும், கவிஞர்களும், புகழ்பெற்ற நாடக, சினிமா நடிகை, நடிகர்களும் போர்முனைகளுக்கு சென்று போர் வீரர்களுக்கும், காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த போர் வீரர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ச்சியூட்டி வந்தனர்.

மார்ஷல் ஆந்திரி ஏரெமென்கோ பின்னர் எழுதிய நினைவு குறிப்புகளில், இதுபற்றிக் குறிப்பிட்டிருப்பதாவது; “யுத்தத்தின் போது பத்து முனைகளில் நான் கமாண்டராக இருந்தேன். அவை ஒவ்வொன்றிலும் கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதைக் கண்டேன். போர் வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களுடைய மன உறுதியை உயர்த்துவதில் கலைஞர்கள் பெரும் தொண்டு ஆற்றினர்” என்று ஏரெமென்கோ குறிப்பிட்டு இருக்கிறார். போர்முனையில் இவ்விதம் தொண்டாற்றிய கலைஞர்களில் புகழ்பெற்ற “ராஸ்கோ ஆர்ட் தியேட்டர்” நாடக நடிகர்களும் இருந்தனர். மாபெரும் தேசபக்த யுத்தத்தின் போது சோவியத் போர்முனைகளில் 1500க்கும் அதிகமான நாடகம், இசை முதலிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புஷ்கின், டால்ஸ்டாய், செக்காவ், ஆஸ்த்ரோவஸ்கி, மாயாகோவ்ஸ்கி, த்வார் தோவ்ஸ்கி, ஸ்பார் தோவாஸ்கி முதலியவர்களின் படைப்புகள் இந்த கலை நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. முன்னணி போர் வீரர்கள் எங்கும் கலைஞர்களை உற்சாகத்துடன் வரவேற்றதாக ஆர்ட் தியேட்டரின் பிரபல நடிகையான அல்வா தரசோவா தம் நினைவு குறிப்புகளில் எழுதி உள்ளார். போர்முனைகளுக்கு சென்ற இந்த தியேட்டரின் மற்றொரு கலைஞரான அனஸ் தாஸ்யாஜ் யோர்கியோகி மேவ்ஸ்காயா, யுத்தத்தில் தாம் ஆற்றிய தொண்டு பற்றி எழுதுகையில், துப்பாக்கி சுடக் கற்றுக்கொண்டு, போர்முனைக்கு சென்று நாஜிகளை எதிர்த்து போராடத் தாம் விரும்பியதாகவும், ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், கலை நிகழ்ச்சிகள் மூலம் போர் முனையில் வீரர்களுக்கு உற்சாகமூட்டவாவது முடிந்தது பற்றி மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

மனித குலத்தின் பாதுகாவலன்

சோவியத் யூனியனின் வெற்றிதான் இன்று சோசலிச முகாமும், உலக தொழிலாளி வர்க்க இயக்கமும், தேச விடுதலைப் புரட்சியும் இன்றைய உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக ஆகிக்கொண்டு வருகின்றன என்ற பேருண்மைக்கு அடித்தளமாகும். பாசிஸ்ட் அபாயத்திலிருந்து மனித குலத்தை பாதுகாத்த பெருமை சோவியத் யூனியனையே சாரும். சோசலிச உலக அமைப்பின் வெற்றிகளை கண்டு மூர்க்கத்தனமான கோபத்துடன் சோவியத் யூனியனையும் இதர சோசலிச நாடுகளையும் அழிப்பதற்கும், உலக மக்கள் மீது மீண்டும் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அணு ஆயுத யுத்தத்திற்கு தீவிரமாக தயாரிப்பு செய்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதி திட்டங்களை முறியடிப்பதிலும், உலக சமாதானத்தை பாதுகாப்பதிலும் சோவியத் யூனியனும் இதர சோசலிச நாடுகளும் இன்று முன்னணியில் இருக்கின்றன. சோவியத் யூனியனுடன் ஒன்றுபட்டு நின்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதிகளை முறியடிப்பதும், உலக சமாதானத்தை பாதுகாப்பதும் இந்திய மக்கள் அனைவரின் பிரதான கடமையாகும்.

(ச. லெனின் தொகுத்துள்ள “என். சங்கரய்யா – தேர்ந்தெடுக்கப்பட்ட உரை, பேட்டி, கட்டுரை, ஆவணம்” எனும் புத்தகத்தில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.)

கலாச்சார அரங்கில் கம்யூனிஸ்டுகளின் கடமைகள் !

(2017 அக்டோபர் 14-16 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த ஆவணம் இன்றைய தருணத்தில் மிகுந்த கவனம் பெறத்தக்க ஒன்றாக அமைகிறது.  எனவே அதன் முக்கியத்துவம் கருதி இதனை தொடராக வெளியிட முடிவு செய்துள்ளோம். – ஆசிரியர் குழு)

மனித இனம் தனது சமூக வாழ்வின் அனைத்து வெளிப்பாடுகளையும் உள்ளடக்கி வெளிப்படுத்துகின்ற ஒரு களமாக கலாச்சாரம் விளங்குகிறது. இசை, நடனம், ஓவியம், சிற்பம், இலக்கியம் போன்ற பல்வேறு வடிவங்களின் வழியாக கலாபூர்வமாக வெளிப்படுத்தும் ஒன்றாக மட்டுமே அது இருப்பதில்லை. இத்தகைய கலாபூர்வமான வெளிப்பாடுகளோடு கூடவே நடத்தை, கருத்து வெளியீடு, அங்க அசைவுகள் போன்ற முழுமையான வாழ்க்கையை வெளிப்படுத்துவதாகவும் கலாச்சாரம் விளங்குகிறது. எனவே, கலாச்சார அரங்கில் நமது தலையீடுகள்  மனித விடுதலைக்கான போரில் வெற்றி பெறுவதையும், மனிதர்களால் மனிதர்கள் சுரண்டப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டு எல்லா நேரங்களிலும் கருத்துப் போராட்டத்தில் நாம் இணைவதையே குறிப்பிடுகிறது.

  1. சர்வதேச அளவிலும் சரி, உள்நாட்டு அளவிலும் சரி, தற்போதைய வர்க்க சக்திகளின் பலாபலன் வலதுசாரி அரசியலுக்குச் சாதகமானதாகவே நகர்ந்துள்ளது. தங்களது விடுதலைக்காகப் போராடுகின்ற மக்கள், இடதுசாரி அரசியல் மற்றும் அனைத்து வடிவங்களிலும் முற்போக்கான, ஜனநாயகரீதியான, மதசார்பற்ற சக்திகள் ஆகியோருக்கு எதிராக மிகக் கடுமையான தத்துவார்த்த தாக்குதலையும் அது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

1.3 சர்வதேச அளவில், உலக முதலாளித்துவத்தின் தற்போதைய தொடரும் நெருக்கடி, புதிய   தாராளவாதத்தின் செல்லுபடியாகும் வெற்றியை முற்றிலும் மறுதலிக்கிறது. இது தீவிரமான முதலாளித்துவ சுரண்டலுக்கான வேறொரு பெயரைத் தவிர வேறில்லை. எனினும், உலகளாவிய முதலாளித்துவம், தனது அதிகபட்ச இலாபத்தைப் பாதுகாப்பதற்காகவே, இந்தப் பாதையைத் தொடர்கிறது. இரக்கமற்ற வகையிலும், கண்மூடித்தனமாகவும் மனித மற்றும் இயற்கை வளங்களை சுரண்டுவதன் மூலம் கொடூரமான ‘புராதன (மூலதன) சேகரிப்பு’ என்ற செயல்முறையை அது தீவிரப்படுத்துகிறது. இது புதிய தாராளவாதத்திற்கு எதிராக வளர்ந்து வருகின்ற, முதலாளித்துவ அமைப்பிற்கே சவால் விடுமளவிற்கு திறமை வாய்ந்த, மக்களின் அதிருப்தியை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருத்தியல்-கலாச்சார கட்டமைப்பை நிறுவுவதன் அடிப்படையில்  ஒரு வலதுசாரி அரசியலை நோக்கி மாறுவதை அவசியமாக்குகிறது. இவ்வாறான கட்டமைப்பிற்கு இனம், மதம், சாதி, நிறம் அல்லது மக்களைப் பிளவுபடுத்தும் வேறு எந்தவொரு அம்சத்தின் அடிப்படையிலும் வெறுப்பினை பரப்ப வேண்டியுள்ளது. இதன் விளைவாக ஏற்படும் சகிப்பின்மை, வெறுப்பு, இனவெறி போன்றவை கலாச்சாரத்தில் பிரதிபலிக்கின்றன. இது வலதுசாரி அரசியலின் ‘கலாச்சாரத்தை’ தோற்கடிக்க நாம் அணி சேர வேண்டிய கலாச்சார முன்னணியின் கருத்துப் போர் ஆகும்.

  1. தற்போதைய ஆர் எஸ் எஸ்/பாஜக தலைமையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய அரசு இந்திய அரசியலில் தெள்ளத்தெளிவானதொரு வலதுசாரி மாற்றத்தை நிறுவனமயமாக்கி வருகிறது. இவ்வகையில் புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளும் ஊக்கம்பெற்றதொரு வகுப்புவாத ஒரு துருவ முனைப்பும் ஒன்றிணைந்து முழுமையானதொரு தாக்குதலை மேற்கொள்கின்றன.  கருத்தியல்ரீதியாக, இந்தியாவின் செறிவுமிக்க, ஒத்திசைவுமிக்க நாகரீக வரலாற்றின் இடத்தில் இந்துப் புராணங்கள், இந்து தத்துவத்துடன் கூடிய இந்திய தத்துவார்த்த பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதே இதன் நோக்கமாகும். நாட்டின் விடுதலைக்காக நாட்டு மக்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக உருவான நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள நவீன இந்தியாவின் அடித்தளங்களை இது முற்றிலும் மறுதலிப்பதாக உள்ளது. புரட்சிகரமானதொரு மாற்றம் என்ற தங்களது இலக்கை வென்றடைவதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் வர்க்கப் போராட்டங்களின் அடித்தளமாக விளங்கும் நவீன இந்திய குடியரசினை இத்தகைய செயல்பாடுகள் நிலைகுலையச் செய்ய முயற்சிக்கின்றன.

இவ்வகையில் கலாச்சார அரங்கில் நடத்தப்படும் போராட்டங்கள் நமது காலத்தின் ஸ்தூலமான நிலைமைகளில் இந்தியாவில் நடத்தப்படும் வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் உள்ளடங்கியதொரு பகுதியாகவே அமைகின்றன. நமது இந்த ஆய்வின் இறுதியில் நமக்குத் தேவைப்படுவதெல்லாம் சமூக மாற்றத்திற்கான புரட்சிகர ஆயுதத்தை மேலும் கூர்மைப்படுத்துவதும், வலுப்படுத்துவதுமே ஆகும். ”கொள்கையின் கடமையும், அறிவியலின் நோக்கமும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் உண்மையான போராட்டத்திற்குச் செய்யப்படும் ஓர் உதவி என்று இங்கு வரையறுக்கப்படுவது உண்மையல்லவா?” என்று லெனின் கேட்டார். (லெனின் தொகுப்பு நூல்கள், தொகுதி 1, பக். 327-8) ‘கொள்கை’, ‘அறிவியல்’ ஆகிய இரண்டுமே கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வதன் ஒரு பகுதியாகவே அமைகின்றன.

1.5  மார்க்ஸ்-எங்கெல்ஸ் கூறினர்: “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே ஆட்சி செய்யும் கருத்துக்களாக இருக்கின்றன. அதாவது சமூகத்தின் பொருளாயத சக்தியை ஆளுகின்ற வர்க்கமே அதே நேரத்தில் அறிவுபூர்வமாக ஆளும் சக்தியாகவும் விளங்குகிறது. பொருள் உற்பத்திக்கான கருவிகளை தன் வசம் வைத்திருக்கும் வர்க்கமே மனதின் மூலமாக உற்பத்தி செய்வதையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் மனதின் மூலமாக உற்பத்தி செய்வதற்கான வழிவகை இல்லாதவர்களின் கருத்துக்களையும் அது தனது ஆளுகைக்குள் எடுத்துக் கொள்கிறது. ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றவற்றோடு கூடவே உணர்வையும், அதன் வழியாக சிந்தனையையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே ஒரு வர்க்கமாக அவர்கள் ஆட்சி செய்வதோடு, வரலாற்று ரீதியான ஒரு காலகட்டத்தின் பரப்பையும் வீச்சையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். இதை அவர்கள் முழுமையான வகையில் செய்கின்றனர் என்பதும் கூட தெள்ளத் தெளிவானது. எனவே மற்ற விஷயங்களோடு கூடவே அவர்கள் சிந்தனையாளர்களாக, கருத்துக்களின் உற்பத்தியாளர்களாக ஆட்சி செய்வதோடு, தங்களது காலத்திற்கான கருத்துக்களை உற்பத்தி செய்து பரப்புவதையும் ஒழுங்குபடுத்துகின்றனர். இவ்வகையில் அவர்களது கருத்துக்களே அந்த காலகட்டத்தினுடைய ஆளும் கருத்துக்களாக இருக்கின்றன. (ஜெர்மானிய தத்துவம், மாஸ்கோ, 1976, பக். 67. இங்கு வலியுறுத்தப்படும் கருத்து தனித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது)

1.6  ஆளும் வர்க்கங்களினது கருத்துக்களின் இந்த மேலாதிக்கமானது அரசினால் மட்டுமே அமலாக்கப்படுவதில்லை என்பதையும் அண்டோனியோ கிராம்சி விளக்குகிறார். இந்த வகையில் அரசு என்பது கோட்டைக்கு முன்னால் உள்ள ஓர் ’அகழி’ மட்டுமே. அதற்குப் பின்னால் ‘வலுவான கோட்டையும் கொத்தளங்களும்’ உள்ளன. அதாவது ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்திற்கு உதவுகின்ற கலாச்சார நிறுவனங்களின் வலைப்பின்னலும் மதிப்பீடுகளுமே இந்தக் கோட்டையும் கொத்தளங்களும் ஆகும்.

1.7  சமூக உறவுகளின் மிகச் சிக்கலான வலைப்பின்னல், அதனைத் தொடர்ந்த சமூக கட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் இந்த மேலாதிக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களின் மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் மதிப்பீடுகளையும் கருத்தாக்கங்களையும் வடிவமைப்பதில் குடும்பம், இனக்குழு, சாதி, மதம், அவற்றின் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை தொடர்ந்து பங்களித்து வருகின்றன. இத்தகையதொரு செயல்முறையில் அவர்கள் ‘(அனைவருக்கும்) பொதுவான ஒரு கலாச்சாரம்’ என்ற மாயையை உருவாக்குகின்றனர். இந்தப் ‘பொதுக் கலாச்சாரம்’ என்பது ’இயல்பான அறிவு’ என்ற பெயரில் வர்க்க மேலாதிக்கம் பெற்ற மதிப்பீடுகளை குறிப்பிட்ட வகையில் பரவச் செய்வது என்பதைத் தவிர வேறில்லை.

1.8 கலாச்சார அரங்கில் நமது தலையீடு என்பது புரட்சிகர வர்க்கங்களால் தானாகவே ஊக்குவிக்க முடியாத, அந்தக் காலப்பகுதியின் கலாச்சாரம், மொழி, உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றின் மூலம் புரட்சிகர இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதாகவே இருக்க வேண்டும். உற்பத்தி உறவுகள் மட்டுமின்றி, அரசு (அரசியல் சமூகம்), மக்கள் சமூகம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ‘புதியதொரு கலாச்சாரத்தை’ உருவாக்குவது புரட்சிகரமான மாற்றத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அவசியமாகும். சமூகத்தின் மீதான மேலாதிக்கத்திற்கு எதிரான இத்தகைய உணர்வை உருவாக்குவதும் அவசியமாகும். கலாச்சார அரங்கில் உள்ள நமது செயல்பாட்டாளர்கள் நடைமுறை வாழ்க்கையில் தீவிரமாகப் பங்கேற்கும் அதே நேரத்தில் தற்போது நிலவும் சமூக உறவுகளை பலவீனப்படுத்த இத்தகைய மாற்று மேலாதிக்கத்தை உருவாக்க வேண்டும். இவையே கருத்துக்களை உருவாக்குவதற்கான அத்தியாவசிய அம்சங்களாக அமைகின்றன. மார்க்ஸ் ஒரு முறை கூறியது போல “ மக்களின் மனதைக் கவ்விப் பிடித்தவுடனேயே அவை ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகின்றன.”  (கார்ல் மார்க்ஸ்- ப்ரெடரிக் எங்கெல்ஸ், தொகுப்பு நூல்கள், தொகுதி 3, பக். 182)

1.9 ஆளும் வர்க்கங்களின் ஒட்டுமொத்த மேலாதிக்கத்தையும் குறிக்கும் அறிகுறி என்ற வகையில் கலாச்சாரமானது இயல்பாகவே அறிவுஜீவிகளின் வளர்ச்சிக்கான களமாக அமைகிறது. இவ்வகையில் அவர்கள் உருவாக்கும் இந்த மேலாதிக்கத்திற்கான மாற்று என்பது மனித இருப்பு, மனித சாரம் ஆகியவற்றை முழுமையாக உள்வாங்கிய ஒன்றாகவும் அமைகிறது.

உணர்ச்சிமிக்க ஒப்புதல், உணர்வுகள், நடத்தை, இன்பம், எழில்மிகு உருவாக்கங்களின் பல்வேறு தோற்றங்கள் ஆகியவற்றின் மூலம் இயற்கையோடும், சக மனிதர்களோடுமான ஊடாடலின் விளைவாக ஏற்படும் மனிதர்களின் மனநிறைவு பல்வேறு வகையில் வெளிப்படுகின்றது. ‘மாற்று கலாச்சாரத்தின்’ உள்ளார்ந்த அம்சங்களை முன்வைப்பதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தால் உருவாக்கப்பட்ட  அறிவார்ந்த ‘நோக்கங்களை’ மறுப்பதை உள்ளடக்கியதாகவும் இந்த மனநிறைவின் பல்வேறு வகைகள் அமைகின்றன. இதன் மூலம் மேலாதிக்கத்திற்கான மாற்று கட்டமைப்புகளை கலாச்சார செயல்பாட்டாளர்கள் உருவாக்குகின்றனர்.

இத்தகைய ஒப்புதல்களின் முழுமையான தன்மை, அதாவது மனிதர்களின் மன நிறைவு குறித்த பல்வேறு வகைகளின் முழுமையான தன்மை, படைப்புச் செயலின் அனைத்து வடிவங்களிலும் வெளிப்படுகிறது. அதன் மூலமாக, புரட்சிகர இயக்கத்தின் ‘மாற்று கலாச்சாரம்’ என்று நாம் அழைக்கக் கூடிய ஒன்றை வடிவமைக்கிறது.

1.10  இத்தகைய கலாச்சாரமானது எப்போதும் இருப்பின் பொருளாயத நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். உற்பத்தி, நுகர்வு ஆகியவை பற்றி எழுதுகையில் மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ”உற்பத்தியானது தேவைக்கு உகந்த வகையில் ஒரு பொருளை வழங்குவது மட்டுமின்றி, பொருளுக்கான தேவையையும் வழங்குகிறது. நுகர்வானது அதன் இயற்கையான செப்பமிடாத நிலை மற்றும் உடனடித் தன்மை ஆகிய தொடக்க நிலையில் இருந்து வெளிப்படும்போது – அது இந்த நிலையிலேயே நீடிக்குமானால், உற்பத்தியே அசைவற்றுப் போகுமானால் இத்தகைய நிலை ஏற்படும் – அந்தப் பொருளினால் உந்தப்பட்டதாக மாறிவிடுகிறது. நுகர்வானது ஒரு பொருளுக்கான தேவையை உணர்வதென்ற வகையில் அதன் உள்ளுணர்வால் உருவாக்கப்படுவதாகும். மற்றெந்தப் பொருளைப் போலவே கலையின் நோக்கமும் கலையை உணர்கின்ற, அதன் அழகை அனுபவிக்கின்ற மக்களை உருவாக்குவதாகும்.  இவ்வாறு உற்பத்தி என்பது மக்களுக்கான ஒரு பொருளை உருவாக்குவது மட்டுமல்ல; ஒரு பொருளுக்கான மக்களை உருவாக்கவும் செய்கிறது. இவ்வகையில் உற்பத்தியானது (1) அதற்கான பொருளை உருவாக்குவதன் மூலமும் (2) நுகர்வுத் தன்மையை தீர்மானிப்பதன் மூலமும் (3) நுகர்வோர் அதன் தேவையை உணர்ந்த வகையில் தொடக்கத்தில் நோக்கங்களாக முன்வைக்கப்பட்டு பின்பு பொருட்களாக உருவாக்குவதன் மூலமும் நுகர்வை உருவாக்குகிறது. இவ்வாறு அது நுகர்விற்கான பொருளையும், நுகர்வுத்தன்மையையும், நுகர்விற்கான நோக்கத்தையும் உருவாக்குகிறது.” (க்ரண்ட்ரைஸ், பக். 92) பொருள் உற்பத்தியைப் போன்றே அறிவுசார் உற்பத்திக்கும் இது பொருந்துவதாகும்.

1.11 ஆளும் வர்க்கக் கலாச்சார மேலாதிக்கத் தளத்தில் உருவாக்கப்படும் மிகப்பெரும் விஷயங்களிடையே, வெளிப்படையாக தோற்றமளிக்காவிடினும், இந்திய அரசியலில் இந்த வலதுசாரி மாற்றத்திற்கான, ‘இந்துத்துவா’ கலாச்சார அம்சங்களைக் கொண்ட பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்றைய இந்தியப் பின்னணியில் இது நம் கவனத்திற்கு உரியதாகும்.

1.12  நவீனமும் நவீனத் தன்மையும்: சமத்துவ உணர்வு, மற்றவர்கள் மீதான கரிசனம் ஆகியவை நவீன சமூகத்தில் கலாச்சாரத்தினை வரையறுக்கும் ஒரு பண்பாகக் கருதப்படுகிறது. எனினும் ஒரு நவீன சமூகத்தில் உண்மையில் அனைவரும் சமமானவர்களாக இருப்பதில்லை. இருந்தபோதிலும், மக்களிடையே பல்வேறு வகையான வேற்றுமைகள் நிலவிய போதிலும், சமத்துவத்திற்கான ஓர் அடிக்கோடு இருக்க வேண்டும் என்று நவீன சமூகம் கோருகிறது. இதன் மூலம் மக்கள் கண்ணியத்தோடு வாழ முடியும் என்பதோடு, தங்களது இருப்பு நிலைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உண்மையாகவே பயன்படுத்திக் கொள்ள முடியும். சமத்துவத்தின் இந்த அடித்தளத்தின்மீதுதான் இதர வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் சேர்த்துக் கொள்ளப்பட முடியும். எனினும் இத்தகைய அடிப்படையான சமத்துவத்திற்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. ஏனெனில், நவீன சமூகங்களில் இதன் அடிப்படையிலேயே குடியுரிமை என்பது கோரப்படுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பில் அரசர்களும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்த மக்களும் இருந்தார்களே தவிர, குடிமக்கள் இருக்கவில்லை.

‘மேற்கத்திய மயமாக்கல்’ என்பதற்குப் பதிலாக, ‘மேற்கத்திய நச்சுமயமாக்கல்’ என்றதொரு சொற்றொடரை ஈரானைச் சேர்ந்த ஓர் அறிவுஜீவி உருவாக்கினார். புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஆடம்பர ஆடை, மிக முன்னேறிய கருவிகள் ஆகியவற்றை பணக்காரர்கள் மற்றவர்களுக்கு முன்பாக காட்டிக் கொண்டிருப்பதைக் குறிக்கும் வகையிலேயே அவர் அதைக் குறிப்பிட்டார். இந்தியாவைப் பொறுத்த வரையில் இதை நவீனம், நவீனத்தன்மை என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட பொருட்கள், கருவிகள் ஆகியவற்றை நுகர்வோருக்காக காட்சிப்படுத்துவதில் அதீத ஆர்வம் காட்டுவது நவீனத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஜி-20 நாடுகள் கூட்டத்தின் உயர்ந்த மேடைகளில் அமர்ந்து உலக வல்லரசு நாடுகளின் தலைவர்களின் தோள்களை உரசுவதே ‘பொருளாதாரத்தில் உயர்ந்து வரும் நாடு’ என்ற இந்தியாவின் முத்திரையாக இது மாறியுள்ளது. இந்திய மண்ணில் எப்போதுமே காலடி எடுத்து வைத்திராத வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்ளிட்டு, நமது சமூகத்தின் மிக ‘நவீனமான’ பிரிவினர் எவ்வாறு தங்களது உட்பிரிவு சாதியிலேயே மணப்பெண்/ மணமகன் வேண்டும் என்று கோரி வருகிறார்கள் என்பதையும் திருமணம் தொடர்பான விளம்பரங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இது நவீன நச்சுத் தன்மையின் கலாச்சாரமே தவிர நவீனம் அல்ல. வலதுசாரி அரசியலை நோக்கிய இந்த மாற்றத்தை இது மிக அழகாக மறைக்கிறது.

நவீனத்தை நோக்கிய இந்தியாவின் பயணமானது சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறை, ஆணாதிக்க சமூக அமைப்பு, வன்முறை கொண்டு சாதியை நிலைநிறுத்தும் காப் பஞ்சாயத்துகள், மதரீதியான சிறுபான்மையினரை சமமற்ற வகையில் நடத்துவது போன்ற கடந்தகால சமூக நிறுவனங்களின் கொடுமைகள் தொடர்ந்து நீடித்து நிற்கும் தன்மையாலேயே அவை தடுத்து நிறுத்தப்படுவதில்லை. நவீன தாராளவாத  நுகர்வுக் கலாச்சாரம், பெண்களை மனிதர்களாக மதிக்காமல் அவர்களை காட்சிப் பொருளாக, அடக்கி ஆளப்பட வேண்டியவர்களாக, சுரண்டப்பட வேண்டியவர்களாக நடத்துவது ஆகியவற்றின் மூலம் இவை நிலைநிறுத்தப்படுவதோடு, மூடி மறைக்கவும் படுகிறது. நமது தேர்தல் அமைப்பில் உள்ளார்ந்த வகையில் பொதிந்து கிடக்கும் பரவலான சந்தர்ப்பவாதத்தின் மூலமாகவும் இது மேலும் வலுப்படுத்தப்படுகிறது. தேர்தல் வெற்றிகளுக்காக நமது சமூக அமைப்பில் நிலவும் இத்தகைய அநீதியான, சமத்துவமற்ற அம்சங்கள் அனைத்தும் புத்துயிர் ஊட்டப்படுகின்றன. இவ்வாறு நவீனமான, நாகரீகமான ஆடைகளை அணிந்தபடி, மிக நவீனமான கருவிகளை கையில் ஏந்தியபடி நம்மிடையே உலாவரும் நபர்கள் நவீன ஜனநாயகத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றது என தூக்கியெறிய வேண்டிய இந்த நடைமுறைகள் அனைத்திலும் ஈடுபட்டு வருவது எவ்வகையிலும் முரண்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ளபடி சாதி, மதம் அல்லது பாலினம் என்ற எவ்வித வேறுபாடுமின்றி, அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமை என்பதாகவே நவீனத்துவம் வரையறுக்கப்படுகிறது. இவ்வகையில் புரட்சிகர இயக்கத்தின் மேலாதிக்கத்திற்கான மாற்றை நிலைநிறுத்துவதற்குத் தவிர்க்கவியலாத ஒரு கலாச்சார கூறாகவும் அது அமைகிறது.

1.13 கலாச்சார தொழில்: இந்த நவீன தாராளவாத சீர்திருத்தங்கள் செல்வம் மற்றும் சொத்துக்களின் மிகப்பெரும் செறிவோடு கூடவே ஒரு கலாச்சார தொழிலின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. உலகளவில், தகவல், தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு ஆகிய பெருநிறுவனங்களின் இணைப்பானது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பெரும்பகுதியை கட்டுப்படுத்தி, உலகளாவிய தனித்ததொரு கலாச்சார சந்தையாக உலகத்தை மாற்றுவதற்கும் முயற்சிக்கிறது.

இத்தகையதொரு செயல்முறையை விரும்புகின்ற கலாச்சார மேலாதிக்கமானது மக்களின் ரசனையை ஒரே மாதிரியானதாக உருவாக்க வேண்டியதன் தேவையையும் வெளிப்படுத்துகிறது. இந்த ரசனையானது எந்த அளவிற்கு ஒரே மாதிரியானதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு பெருமளவிலான மக்களுக்கான கலாச்சார பொருட்களை இயந்திரகதியாக மறு உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதும் எளிதாகிறது. மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் கல்வியறிவின்மை பரவலாக இருந்தபோதிலும் வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சித்திரங்கள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான ஒன்றாக இருக்கின்றன. (ஆப்ரிக்காவின் சஹாரா உட்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன) வர்க்க மேலாதிக்கம் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, நவீன தாராளவாதத்தின் கலாச்சாரமானது அன்றாட வாழ்க்கையின் உண்மையான நிலைமைகளில் இருந்து மக்களை பிரித்து வைக்க முயல்கிறது. கலாச்சாரமானது இங்கு அழகியலைக் கோருவதாக இல்லாமல், வறுமை, துயரம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதாக, மடைமாற்றுவதாகவே செயல்படுகிறது.

இதன் விளைவாக, தங்களது இந்த துன்பகரமான வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை மக்கள் மேற்கொள்வதற்கான உந்துதலை சீர்குலைக்கவே அது முயற்சிக்கிறது. மைக்கேல் பாரெண்டி கூறுகிறார்: “ நமது கலாச்சாரத்தின் பெரும்பகுதியானது ‘மக்கள் கலாச்சாரம்’, ‘பிரபலமான கலாச்சாரம்’ என்று மிகப் பொருத்தமாகவே இப்போது பெயரிடப்பட்டுள்ளது. மிகப்பெரும் நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவற்றால் நடத்தப்படுகின்ற ‘ஊடக கலாச்சார’த்தின் முக்கிய நோக்கம் என்பது செல்வத்தைப் பெருக்குவது, தங்களது உரிமையாளர்களை பாதுகாக்கும் வகையில் உலகத்தை நிலைநிறுத்துவது என்பதே ஆகும். இவர்களின் நோக்கம், பயன் மதிப்பு என்பதற்கு பதிலாக பரிமாற்ற மதிப்பாகவும், சமூக ரீதியான படைப்பூக்கம் என்பதற்கு பதிலாக சமூகக் கட்டுப்பாடு என்பதாகவே இருக்கிறது. வாழ்க்கையின் பெரும் யதார்த்தங்கள் குறித்து சிந்திப்பதில் இருந்து நம்மை திசைதிருப்பும் வகையிலேயே பெரும்பாலான வெகுஜன கலாச்சாரம் என்பது ஒழுங்கபடுத்தப்பட்டுள்ளது. உடனடி தேவையான, ஊட்டமளிக்கக் கூடிய விஷயங்களை ஒதுக்கித் தள்ளுவதாகவே பொழுதுபோக்கு கலாச்சாரத்தின் வீக்கமும் குப்பைகளும் உள்ளன. மக்களின் அடிமட்ட ரசனையை தொடர்ந்து தூண்டி விடுவதன் மூலம், பரபரப்பு மிக்க வெகுஜன கலாச்சாரமானது பொதுமக்களின் ரசனையை மேலும் கீழிறக்கி விடுகிறது.  இதன் விளைவாக, மக்களின் ரசனையானது கலாச்சார ரீதியான குப்பைகள், பெரும் பரபரப்பு, அதிர்ச்சியூட்டும்படியான, மிக கவர்ச்சிகரமான, மிகுந்த வன்முறை நிரம்பிய, உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய, பெரும்பாலும் மேம்போக்கான விஷயங்களையே முன்வைக்க விரும்புவதாகவும் மாறியுள்ளது.

”இத்தகைய விஷயங்கள்தான் பெரும்பாலான நேரங்களில் அதன் உண்மையான தத்துவார்த்த உள்ளடக்கமாக இருக்கின்றன. அதன் நோக்கம் அரசியல்நோக்கம் அற்றதாக இருந்தபோதிலும் கூட, பொழுதுபோக்கு கலாச்சாரமானது ( உண்மையில் அது பொழுதுபோக்குத் தொழிலே ஆகும்) அதன் தாக்கத்தில் அரசியல்தன்மை கொண்டதாகவும், கீழ்த்தரமான பாலியல் மதிப்பீடுகள், இனவெறி, நுகர்வுக் கலாச்சாரம், எதேச்சாதிகார உணர்வு கொண்ட, ராணுவ வெறிபிடித்த, ஏகாதிபத்தியத் தன்மை கொண்ட சித்திரங்களையும் மதிப்பீடுகளையுமே பிரச்சாரம் செய்கிறது.” ( மன்த்லி ரிவ்யூ, பிப்ரவரி 1999)

1.14  இவ்வகையில் நவீன தாராளவாதமும் வகுப்புவாதமும் உள்நாட்டளவில் பொது ரசனையை ஒரே மாதிரியாக மாற்ற முயல்கின்றன. கலாச்சார மேலாதிக்கத்தை வலுப்படுத்தவும், அதீதமான லாபத்தை ஈட்டவும் நவீன தாராளவாதம் செயல்படுகிறது. இதனோடு கூடவே, ஆர் எஸ் எஸ் ஸின் இலக்கான ‘இந்து ராஷ்ட்ரா’ என்ற மிக மோசமான, சகிப்புத்தன்மையற்றதொரு பாசிஸ அரசை நிறுவுவதற்கான பாதையை வகுப்புவாதம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ’ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம்’ என்ற அதன் கோஷமானது இந்தியாவின் வளமான, செறிவான பன்முகக் கலாச்சாரத்தின் அடிப்படைகளையே  மறுதலித்து, இத்தகைய ஒருமுகப்படுத்தலின் மூலமே உண்மையான அந்தஸ்தையும் பொருளையும் அடைய முடியும். மேலும் புதிய தாராளவாதம், வகுப்புவாதம் ஆகிய இரண்டுமே அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், அதிலும் முக்கியமாக, தற்போது நிலவுகின்ற சுரண்டல்மிக்க அமைப்பிற்கு எதிரான அவர்களது போராட்டத்தை பலவீனப்படுத்தவுமே முயல்கின்றன.

1.15 இவ்வகையில் தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் ‘மாற்று மேலாதிக்கத்தை’ நிறுவுவதற்கான போராட்டங்களுக்கு மக்கள் பிரச்சனைகளுக்கான கலாச்சார நிகழ்ச்சிநிரலை மீண்டும் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது. இவற்றை நமது பார்வையிலிருந்து மறைத்து, அழிப்பதே புதிய தாராளவாதம் மற்றும் வகுப்புவாத கலாச்சாரத்தின் அடிப்படை இயல்பாக உள்ளது. இதுவே கலாச்சார அரங்கில் நமது கடமைகளின் அடிப்படையான நோக்கமாக அமையும்.

4.1. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் கலாச்சாரக் குழுக்கள், அரங்கங்கள், மேடைகள், சங்கங்கள் ஆகியவை தங்களது செயல்பாடுகளில் மிக விரிவான அளவில் கலைஞர்களையும், கலாச்சார செயல்பாட்டாளர்களையும், அறிவுஜீவிகளையும் ஈடுபடுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளில் படைப்பூக்கமும், தனிச்சிறப்பான தன்மையும் ஈர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான நமது அணுகுமுறை என்பது விரிவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட,  ஜனநாயக ரீதியான, முற்போக்கான, மதசார்பற்ற மதிப்பீடுகளின் மீது பற்றுறுதி கொண்டுள்ள கலைஞர்கள் அல்லது அறிவுஜீவிகளுக்கு கலாச்சார செயல்பாடுகளில் பங்கேற்க நமது மேடையில் விரிவான அளவில் இடம் தர வேண்டியதும் அவசியமாகும். நம்மோடு இணைந்து செயல்படும் கலாச்சார அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் கட்சி சார்பற்ற கலைஞர்களை உணர்வுபூர்வமாக ஊக்கப்படுத்த வேண்டும்.

4.2.  வெகுஜன, வர்க்க அமைப்புகள் ஜனநாயகபூர்வமாகவும், சுயேச்சையாகவும் செயல்படுவதன் முக்கியத்துவத்தை சால்கியா, கொல்கத்தா பிளீனங்கள் வலியுறுத்தி வந்துள்ளன. கலாச்சார அமைப்புகளின் விஷயத்தில் இந்த அம்சம் மேலும் முக்கியமான ஒன்றாக இருப்பதோடு, அவற்றுக்கு கணிசமான அளவிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும். இந்தக் கலாச்சார அமைப்புகளை கட்சியோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உறுப்புகளாகப் பார்க்கலாகாது. கட்சி முழுமையும், அதைப் போன்றே  அதன் வர்க்க, வெகுஜன அமைப்புகளும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் கலாச்சார ரீதியான தலையீட்டினை அங்கீகரிப்பதன் மூலமே, இந்த விஷயத்தில் சரியானதொரு அணுகுமுறையை உருவாக்க முடியும். கலாச்சார அமைப்புகளுக்கு உள்ளேயும் கூட சுதந்திரமான, விமர்சனபூர்வமான சிந்தனைக்கு ஊக்கம் தருவதை உறுதிப்படுத்த வேண்டும். இதை உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே கலாச்சாரத் தளத்தில் இளமையான, புதுமையான தலைமையை நம்மால் வளர்த்தெடுக்க முடியும். அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் சிறுபான்மையினர் உள்ளிட்டு, தலித்கள், பழங்குடிகள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, நலிந்த குழுக்களையும் இனங்களையும் சேர்ந்த கலைஞர்கள், பெண்கள் ஆகியோர் தீவிரமாகச் செயல்படுவதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தலைமைப் பொறுப்புகளும் வழங்கப்பட வேண்டும்.

4.3. கலாச்சாரம் என்பது கலாச்சார அமைப்புகள் மட்டுமே செயல்படுகின்ற ஒரு களம் அல்ல. கட்சி உறுப்பினர்கள் வேலை செய்யும் வெகுஜன, வர்க்க அரங்கங்களும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் விரிவான கலாச்சார சமூகத்தை ஈடுபடுத்துவது முக்கியம். எனினும், அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதிலும், நமது  பிரச்சாரங்களில் அவர்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கும்போது அவர்கள் எந்த நடவடிக்கைகளில் சிறந்தவர்கள் என்பதை அளவிடுவதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், இந்த ஈடுபாடு தேர்தல் அரசியலுக்கு மட்டுமே ஆனதாகவும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. சாத்தியமான இடங்களில், வகுப்புவாத அல்லது சமூக விரோதக் குழுக்களால் ஆதிக்கம் செலுத்தப்படாத, தற்போது செயல்பட்டு வரும் கலாச்சார அமைப்புகளில் நமது தோழர்கள் நுழைந்து பணியாற்ற வேண்டும். இது அவர்களுக்கு ஒரு முற்போக்கான, மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான திசைவழியை  காட்ட முயற்சிப்பதாக அமையும்.

4.4. ஒரு கலைஞரின் அகநிலைப்பட்ட, தனிப்பட்ட பார்வைகள் குறித்த நமது எதிர்வினையை அந்தக் கலைஞரது படைப்பு குறித்த புறநிலை மதிப்பீட்டில் இருந்து நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். நமது செயல்பாட்டாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலமும், சமூகத்தில் நடக்கும் பல்வேறு வகையான கலாச்சார முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும் மட்டுமே, நமது இலக்கை நோக்கி நகர்வதற்கு எது உதவக்கூடும் என்பதை வரையறுக்கவும், மதிப்பீடு செய்யவும் முடியும். கருத்து சுதந்திரம், முற்போக்கான முயற்சிகளை அனுமதிக்கும் ஆக்கபூர்வமான மற்றும் தகவல் தொடர்பு தளங்களை நாம் இப்போது எங்கே காண முடியும்? இலாப நோக்கத்தினால் அல்லது சமூக/மத பழமைவாதத்தினால் இவை எங்கே முழுமையாக உள்வாங்கப்பட்டு சிதைக்கப்பட்டன? நமது போராட்டங்களை வலுப்படுத்தும் ஆதாரங்களுக்கான இந்தத் தேடலில் கடுமையான முன்முடிபுகளால் நாம் கட்டுண்டு விடமுடியாது. எனினும் நாம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்தச் சோதனை அமைய வேண்டும்.

4.5. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான கலாச்சார அமைப்புகள் பல  உள்ளன. ஒரு மாநிலத்திற்கு உள்ளேயும் கூட, நம்மிடம் பல முற்போக்கான, மதச்சார்பற்ற கலாச்சார அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோர் பல்வேறு கலை வடிவங்களில் செயல்பட்டு வருகின்றனர். அதில் நமது கட்சி உறுப்பினர்களும் கூட தீவிரமாகச் செயல்பட்டு வரலாம். நம்மால் முடிந்தவரை இவற்றோடு மிகப்பெரிய ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உருவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்த நோக்கத்திற்காக, கலாச்சார மாநாடுகள் அல்லது கூட்டங்கள், திருவிழாக்கள், பட்டறைகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் நாம் ஆராய வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான சமூக ஊடகக் குழுக்கள் இருப்பதற்கான சாத்தியத்தையும் நாம் ஆராய வேண்டும். உடனடி பிரச்சினைகளுக்கும், குறிப்பாக தணிக்கை மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களின் போது விரைவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும்.

5.0 மேலே விவரிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த அணுகுமுறையோடு கூடவே, கலாச்சார அரங்கில் நம் முன்னே உள்ள முக்கிய பணிகளாவன:

5.1. தொடர்ச்சியான சுய ஆய்வு மற்றும் சுயவிமர்சனம் மூலம் நமது நடத்தை, தினசரி நடைமுறைகளில் ஒரு தரத்தை முன்னிறுத்துவது என்பது, கிராமப்புற, நகர்ப்புற இந்தியாவின் உழைக்கும் மக்களை உள்ளடக்கிய நமது அடிப்படை வர்க்கத்தினருடன் தகவல் தொடர்பு கொள்ளவும் அவர்களின் நம்பிக்கையை வெல்லவும் உதவும்.

5.2 வெறுமனே அது ஒரு ‘கலை’ என்பதாக அல்லாமல், மாறாக மக்களின் ‘வாழ்ந்த வாழ்க்கை’ என்ற வகையில் கலாச்சாரத் துறையினை அதன் முழுமைத் தன்மையோடு காண வேண்டும். நமது பேச்சு முறை, நம் உணவின் சுவைகள், நம் ஆடைகளின் நிறங்கள் மற்றும் அவை வெட்டப்படும் முறை மற்றும் வேறு பல விஷயங்களும் மக்களின் சாதாரண, அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி வடிவமைந்ததாக இந்தக் கலாச்சார காரணிகள் அமைகின்றன. இந்த காரணத்தினாலேதான், கலாச்சார ரீதியான தலையீடுகளில் இருந்து நம் கவனத்தை மாற்ற வேண்டும். அதாவது, ஒரு கருத்தினை வெளிப்படுத்தவும், கலாச்சாரத்தில் தலையீடுகளை மேற்கொள்ளவும், இசைக்கருவியைப் பயன்படுத்தும் ஒரு கலைஞர் கலையை ‘பயன்’படுத்துகிறார். அதாவது, அன்றாட வாழ்வில், நடைமுறையில் முற்போக்கான, மதச்சார்பற்ற, ஜனநாயக கருத்துக்களை  வடிவமைக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையிலும் சமூகத்திலும் அமைப்புகளிலும் குடும்பத்திலும் அவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பதன் மூலமாகவும் இவை வெளிப்படுகின்றன.

5.3. மதச்சார்பற்ற ஜனநாயக கலாச்சார மரபுகளுக்கான சமூக களத்தை நாம் மீட்டெடுக்க வேண்டுமெனில், நம் நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும்  மேலாதிக்கங்களை எதிர்த்த முற்போக்கு சிந்தனை போக்குகள், காலனியத்திற்கு எதிரான சிந்தனை மரபுகள், இவற்றோடு கூடவே மக்களுக்கு உயிரோட்டமான வகையில் செய்திகளை எடுத்துச் செல்லும் செவ்வியல், நவீன, நாட்டுப்புற கலை வடிவங்களை உருவாக்குவோரைப் பற்றியும், மார்க்சிய சிந்தனையின் வரலாறு மற்றும் சோஷலிசத்தை நோக்கி முன்னேறும் புரட்சிகர இயக்கங்கள் ஆகியவை பற்றியும் அறிந்தவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். கூடவே, இந்த அறிவை பயன்படுத்திய வகையில் கலாச்சாரத்தில் ஓர் இறை தத்துவம், எதேச்சாதிகாரப் போக்கு, குழுவாதப் போக்கு ஆகியவற்றையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

5.4. கலாச்சார தேசியம் என்ற பெயரிலோ அல்லது ‘மத ரீதியான உணர்வு’ என்ற பெயரிலோ அல்லது ‘சாதிய உயர்தன்மை’ என்ற பெயரிலோ வகுப்புவாத சக்திகள் முன்வைக்கின்ற  சகிப்புத்தன்மையற்ற அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். மக்களின் கலாச்சார நடைமுறைகளில் மொழிரீதியான, இனரீதியான, பிராந்திய அடிப்படையிலான  பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய மாறுபட்ட சிந்தனையை கடைப்பிடிப்பவர்களிடையே நல்ல தொடர்புகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய பன்முகத் தன்மை கொண்ட பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் சிந்தனையாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் மீதான தாக்குதல்கள் எழும்போது அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.

5.5. பழமைவாதம், மதவெறி, மூடநம்பிக்கை, பகுத்தறிவின்மை ஆகியவற்றை எதிர்ப்பது; பொதுக் கல்வி முறை, அறிவியல், அறிவு சார்ந்த, கலாச்சார நிறுவனங்களின் சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பது; உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மீதான தாக்குதல்களை எதிர்ப்பது; நமது வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பகுத்தறிவு, ஒத்திசைவு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியின் மதச்சார்பற்ற மரபுகளை பாதுகாப்பது.

5.6. உணர்வுபூர்வமான உதவி,   ஆழமான மக்களின் ஆழமான நம்பிக்கைக்கான தேவையை, பல்வேறு மதங்களைச் சேர்ந்த  ‘மத’ நிறுவனங்களும் ஆன்மீகத் தலைவர்களும்  தங்களது பெரும் வணிக நலன்களுக்காக, பகுத்தறிவின்மை, மூடநம்பிக்கை பிரச்சாரம் போன்றவற்றைப் பயன்படுத்துவதோடு, அவர்களைப் பின்பற்றுபவர்களிடையே பிரிவினைவாத உணர்வு,  வகுப்புவாதம் ஆகியவற்றையும் விதைக்கின்றனர். இந்நிலையில் மக்களின் துன்பங்களுக்குக் காரணமாக உள்ள பரந்துபட்ட சுரண்டலுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவது.

5.7. பல வழிபாட்டுத் தலங்களிலும் வகுப்புவாத, தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு நடைபெறும் திருவிழா செயல்பாடுகள் மீது மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கமுடைய வகுப்புவாத பிளவுப் பிரச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு இடத்திலும் நிலவும் ஸ்தூலமான சூழ்நிலையைப் பொறுத்து, நமது செயல்பாட்டாளர்களின் தலையீட்டின் மூலம் சாத்தியமான அளவில் இதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5.8. பொருளாதார ரீதியிலான சுரண்டல் மட்டுமின்றி, சாதி, பாலினம் போன்றவற்றின் அடிப்படையிலான சமூகச் சுரண்டலுக்கும் இடமில்லாத, மனித சமுதாயத்தின் சமத்துவமான எதிர்காலத்தை எதிர்நோக்கிய, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை ஆதரித்து நிற்பது.

5.9. உழைக்கும் மக்களின் பாரம்பரிய கலை வடிவங்களை ஆதரித்து நிற்பது; (பொம்மலாட்டக்காரர்கள், சுருள் சீலைகளில் கதைகளை ஓவியமாக வழங்கும் ஓவிய கலைஞர்கள், கிராமப்புற,  நகர்ப்புற தெரு கலைஞர்கள், கிராமப்புற உடற்பயிற்சி வல்லுநர்கள் போன்ற) இந்த கலை வடிவங்களின் கண்ணியம் மற்றும் அவற்றின் மதிப்பை மக்கள் சமூகம் அங்கீகரிப்பதற்காக உழைப்பது; இவற்றில் பல கலை வடிவங்களும், மக்களின் சொந்த படைப்பாற்றலை உள்ளடக்கியதாக இருப்பதோடு, அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்குகின்றன. இந்தக் கலைகள் இப்போது பெரிய மத நிறுவனங்கள்/பெரிய வணிக நிறுவனங்களால் முழுமையாக உள்வாங்கப்பட்டு வருகின்றன; அல்லது அழிக்கப்படுகின்றன. இதனால் அவர்களின் உண்மையான பயிற்சியாளர்கள், புரவலர்கள், பயனாளிகள், நுகர்வோர் ஆகிய உழைக்கும் மக்கள் கலாச்சார இடைவெளியை எதிர்கொள்கின்றனர்; இந்த கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலுடன் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

5.10. (பொருளாதார, அரசியல், சாதி அடிப்படையிலான, பாலின அடிப்படையிலான, சிறுபான்மையினருக்கு எதிரானவை போன்ற) குறிப்பான அடக்குமுறை அல்லது அநீதியான  நிகழ்வுகளுக்கு எதிராக (அறிவுஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், சமூக ஊடக பயனர்கள் போன்ற) கலாச்சார சக்திகளை அணிதிரட்டுவது. இதன் மூலம் அவர்கள் மக்களையும் சமுதாயத்தையும் பாதுகாப்பதில் தங்கள் சிறப்புத் திறன்களை புதுமையான, ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தலாம்.

5.11. கட்டற்ற நுகர்ச்சி, தனிப்பட்ட மகிழ்ச்சியை மட்டுமே விரும்புவதைத் தூண்டி கலாச்சார மதிப்புகளை பண்டமாக்குவதை எதிர்ப்பது; பண்டமாக்கல் என்பது இன்று அனைத்து கலாச்சார தயாரிப்புகளும் சந்தையின் மூலம் மத்தியஸ்தம் செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், பெருநிறுவன மூலதனமானது அதன் பார்வையில் எந்த சந்தை மதிப்பையும்,  அந்தப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களின், அதாவது, கலைஞர்கள், ஆசிரியர்கள், நிகழ்த்துக் கலைஞர்கள் ஆகியோரின், படைப்பாற்றலின் மீதும், அது போன்ற அனைத்து பொருட்களின் மீதும், தனது முழுமையான உரிமையை நிலைநாட்ட முயல்கிறது. பெருநிறுவனத்தால் நடத்தப்படும் உலகளாவிய கலாச்சார சந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அடிமைத்தனத்துடன் அடிபணியச் செய்கிறது. இது கலைஞர்கள் மற்றும் கலாச்சாரத்தின் உண்மையான களஞ்சியங்களான மக்களின் முக்கிய மன திறன்களை அழிக்கிறது; அனைத்து வகையிலும் இதை எதிர்க்க வேண்டும்.

5.12. தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய அச்சு மற்றும் ஒலி-ஒளி ஊடக உலகத்திற்குள்ளான இடத்தை மக்களுக்காக மீட்டெடுக்கப் போராடுவது; மின்னணு ஊடகத்தின் மீது பெருநிறுவன மூலதனத்தின் பிடிப்பு வலுவாக இருக்கும் நிலையில், இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பயன்கள் மக்களுக்கு மறுதலிக்கப்படுகின்றன. இதன் விளைவாக அற்பமான, பொருளற்ற செய்திகள், உண்மை நிகழ்வுகள் என்ற பெயரால் நடைபெறும் கேவலமான, மேம்போக்கான நிகழ்ச்சிகள், பிற்போக்குத்தனமான, ஆணாதிக்க, பெண் வெறுப்பு மிக்க காட்சித் தொடர்கள் மற்றும் இதுபோன்ற மின்னணு பொருட்கள் கட்டற்ற விளம்பரங்களால் பின்னிப் பிணைந்து மக்களின் மீது மேலாதிக்கம் செலுத்த வழியேற்படுகிறது. இணையவழி வெளியீடுகள், சமூக ஊடகங்கள், ஆவணப்படங்கள், மக்கள் வானொலி போன்ற, மக்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் சில இடங்களை மீட்டெடுப்பது இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய சில வழிகள் ஆகும்; இந்தத் துறைகளில் திறமையுள்ளவர்கள் இந்த வழியில் திட்டமிட வேண்டும் என்பதோடு அவர்கள் முறையாக ஊக்குவிக்கப்படவும் வேண்டும்.

5.13. குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களைப் பாதுகாக்க முன் நிற்க வேண்டும்.  இதன் மூலம் தனித்திறன்மிக்க படைப்பு திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அவர்கள் பெற முடியும். இக்காலத்தின் இரக்கமற்ற போட்டி, நுகர்வோர் மதிப்புகள் அல்லது வெறுப்புக் கலாச்சாரம் மற்றும் பரஸ்பர அழிவு உணர்வு ஆகியவற்றால் அவர்களின் விருப்பங்கள் விழுங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் கல்வி உரிமைகள் மற்றும் மிகவும் மேம்பட்ட அறிவுக்கான உரிமைகள் வலியுறுத்தப்பட வேண்டும்; கல்வி நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நமது சிறப்பான அறிவுத் திறன்,  ஆக்கப்பூர்வமான மரபுகள் ஆகியவற்றுடன் அவர்கள் தொடர்பு கொள்ள பல வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5.14. பல்வேறு  வகையான தீவிரவாத, மதவெறி,  பயங்கரவாத அமைப்புகளும் சித்தாந்தங்களும் வளர்ந்து வருகின்ற, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அதிக அளவிலான சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல இது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சாத்தியமான இடங்களில், சிறப்பு அதிகாரங்களும் அரசால் கைக்கொள்ளப்படுகின்றன. பல நேரங்களில், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு பொது மக்கள் தூண்டப்படுகிறார்கள்; அல்லது வற்புறுத்தப்படுகிறார்கள். எங்கெல்லாம் எதேச்சாதிகார அரசால்  மீறப்படுகிறதோ அங்கெல்லாம் மக்கள் உரிமைகள், ஜனநாயக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க நாம் முன்நிற்கிறோம்; பொதுமக்களுக்கு எதிராக இராணுவம், துணை இராணுவப் படைகளைப் பயன்படுத்துவதை நாம் எதிர்க்கிறோம்; மாறுபட்ட கருத்துக்களை ஒடுக்குவதற்கு  தடையற்ற அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் அரசுக்கு வழங்கும் கொடுங்கோன்மை சட்டங்களையும் நாம் எதிர்க்கிறோம்.

5.15. மேற்கண்ட கடமைகளை நிறைவேற்ற, ஒவ்வொரு மட்டத்திலும் கலாச்சார முன்னணியில் உள்ள பணிகளில் கட்சி மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்; குறிப்பிட்ட கால வரம்பிற்குள் இலக்குகள் எட்டப்படுவதற்கு உகந்த வகையில் ஒவ்வொரு மட்டத்திலும் தகுதியான ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

5.16. பாடல் குழுக்கள், வீதி நாடகக் குழுக்கள் போன்ற கலாச்சாரப் பிரிவுகளை உருவாக்க வெகுஜன அமைப்புகள், ஆசிரியர்கள், சேவை நிறுவனங்கள், திட்டத் தொழிலாளர்கள் போன்ற இதர வகைப்பட்ட ஊழியர்களின் அமைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவை முறையாக வழிநடத்தப்பட வேண்டும். கலாச்சார அரங்கின் பணியை கைவிட்டு விடக்கூடாது என்பதோடு, அந்தப் பணி கலாச்சார அரங்கிலுள்ள ஆர்வலர்களுக்கு மட்டுமேயான ஒரு பணி என்பதாகப் பிரித்துப் பார்க்கவும் கூடாது.

5.17. கலாச்சார, கல்வி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக, மதச்சார்பற்ற, முற்போக்கு எண்ணங்களை வளர்த்தெடுக்க அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு ‘பாலவேதி’ அல்லது ‘பாலர் சங்கம்’ போன்ற அமைப்புகளை உருவாக்க உதவ வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படும் இடங்களில், அவற்றை மேலும் விரிவுபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் உதவ வேண்டும்.

5.18. இத்தகைய கலாச்சார அரங்க நடவடிக்கைகள் எதுவும் இல்லாத மாநிலங்களில், இந்தப் போதாமையை சரிசெய்யும் வகையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

5.19. (அ) பல்வேறு மட்டங்களிலும் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தவும், (ஆ) எதிர்கால திட்டங்கள், படைப்பூக்க ரீதியான தலையீடுகள் ஆகியவற்றுக்கு பொதுவான வழிகாட்டுதலை வழங்கவும், படைப்புத் திறன் மிக்க கலை-கலாச்சார செயல்பாட்டாளர்கள் பங்கேற்கும் வகையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கலாச்சார மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.

5.20. இந்த அரங்கின் முன்னேயுள்ள கடமைகள் குறித்த இந்த ஆவணத்தில் கூறப்பட்டவை அனைத்தும் குறிப்பிட்ட கால வரம்பில் பல்வேறு மட்டங்களிலும் எந்த அளவிற்கு அமலாக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்யும் வகையில் தொடர்ந்து முறையாகப் பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழில்: வீ. பா. கணேசன்

வரலாறு என்னை விடுதலை செய்யும் – பிடல் காஷ்ட்ரோ

(கியூபாவில் ஆயுதம் தாங்கிய புரட்சிக்கான முன்னெடுப்பாக 1953 ஆம் ஆண்டு ஜுலை 26 ஆம் தேதி கியூபாவின் சாண்டியாகோ டி எனும் இடத்தில் அமைந்திருந்த மான்கடா ராணுவப் படைத்தளத்தின்மீது ஃபிடல் காஸ்ட்ரோவும் அவரது தோழர்களும் தாக்குதல் நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்ட தோழர் ஃபிடல், நீதிமன்றத்தில் ஆற்றிய உரையின் மிகச் சிறிய பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.)

என்னைக் கனவு காண்பவன் என்று கூறுபவர்களுக்காக மார்த்தியின் பின்வரும் வார்த்தைகளைக் கூறுகிறேன்: “உண்மையான மனிதன் வசதியிருக்கும் பாதையை நாடமாட்டான். மாறாக, கடமையிருக்கும் பாதையைத்தான் தேடுவான். அவன்தான் செயல்திறனுள்ள மனிதன், அவனது இன்றைய கனவுகள்தான் நாளைய நீதிகளாக மாறும். ஏனெனில் அவன் வரலாற்றில் முக்கிய நடப்புகளை அறியப் பின்னோக்கிப் பார்க்கிறான். காலத்தின் கொப்பரையில் மக்கள் ரத்தம் தோய்ந்தபடி பொங்கி வருவதை அவன் காண்கிறான். எனவே, எதிர்காலம் என்பதை கடமையின் பக்கத்தில்தான் இருக்கிறது என்பதை சிறிது கூடத் தயக்கமின்றி அறிகிறான்”

கீழ்தரமான எண்ணங்களை கொண்ட மனிதர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கிறார்கள். துன்புறுத்தி இன்பங்காண்போரும், கொடியவர்களும், தங்கள் முன்னோரின் இழிச்செயல்களையெல்லாம் தாங்கி, மனிதப் போர்வையில் வளையவரும் இவர்கள், உண்மையில் கொடூரர்கள்தான்.

அதிகாலை நேரத்தில் எங்களது தோழர்கள் பலரும் ராணுவ முகாமிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஊர்திகளில் அழைத்துச்செல்லப்பட்டனர். ஏற்கெனவே சித்திரவதைகளால் உருக்குலைக்கப்பட்ட அவர்கள், பின்னர், கைகள் கட்டப்பட்டும், வாயில் துணியடைக்கப்பட்டும் விடுவிக்கப்பட்டு ஒதுக்குப்புறமான பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் ராணுவத்திற்கு எதிராக நடந்த போரில் இறந்ததாக அவர்கள் பதிவு செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைச் செயல் பல நாட்கள் தொடர்ந்தது. கைதிகளில் சிலர் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர். கொலை செய்யப்பட்டவர்களில் பலரும் தங்களது கல்லறைகளை தாங்களே தோண்டிக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். பலரும் பின்னால் கைகள் கட்டப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டார்கள். என்றாவது ஒருநாள் புதைக்கப்பட்ட இடங்களிலிருந்து இவர்கள் தோண்டியெடுக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் மக்களால் தோள்களில் சுமந்து செல்லப்பட்டு, மார்த்தியின் கல்லறைக்கருகே புதைக்கப்படுவார்கள்.

வழக்கமாக வழக்கறிஞர்கள் முடிப்பதைப்போன்று குற்றம் சாட்டப்பட்டுள்ள என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நான் முடிக்கப்போவதில்லை. என்னுடைய தோழர்கள் பைன் தீவின் கொடுஞ்சிறைக்குள்ளே எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் எனக்கு விடுதலை வேண்டுமென்று என்னால் கேட்கமுடியாது. அவர்களுடைய விதியை நானும் பகிர்ந்துகொள்ள, என்னையும் அவர்கள் இருக்குமிடத்திற்கே அனுப்பிவையுங்கள். ஒரு நாட்டின் தலைவன் குற்றவாளியாகவோ அல்லது திருடனாகவோ இருக்கும் பட்சத்தில், அந்த நாட்டின் நேர்மையான மனிதர்கள் ஒன்று உயிரை விடவேண்டும் அல்லது சிறையில் வாடவேண்டும் என்ற நியதி புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

நீதிபதிகளின் கோழைத்தனத்தாலோ அல்லது நீதிமன்றங்களின் மீது ஆட்சியாளர்களுக்கு உள்ள பிடிப்பினாலோ இன்னமும் சட்டத்தின் முழுவலிமையும் குற்றவாளிகளின் மீது பாயாமலிருக்குமானால், அந்த நிலையிலும் நீதிபதிகள் தங்களது பதவிகளைத் துறக்காமல் இருப்பார்களேயானால், மதிப்பிற்குரிய நீதிபதிகளே, உங்களைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன். இதற்கு முன் எப்போதும் இருந்திராத அவமானம் நீதித்துறையின்மீது விழப்போவது குறித்து நான் வருத்தப்படுகிறேன்.

இதுவரை யாரும் அனுபவித்திராத வகையில் எனது சிறைவாசம் மிகக் கடுமையாக இருக்கும் என்பதையும், கோழைத்தனமான அடக்கு முறைகளும் மிருகத்தனமான கொடுமைகளும் அதில் நிறைந்திருக்கும் என்பதையும் நான் நன்றாக அறிவேன். இருந்தாலும், எனது உயிரினுமினிய எழுபது தோழர்களை பலி வாங்கிய அந்தக் கொடுங்கோலனின் கோபத்தைக் கண்டு நான் எப்படி அஞ்சவில்லையோ, அதைப்போன்றே இந்தச் சிறைவாசத்தை கண்டும் நான் அஞ்சப் போவதில்லை. என்னைத் தண்டியுங்கள். அது எனக்குப் பொருட்டல்ல.

வரலாறு என்னை விடுதலை செய்யும்.

தமிழில். வீ.பா.கணேசன்   

கார்ல்மார்க்ஸ் 17 வயதில் எழுதிய அரிய கட்டுரை (தமிழில்)

வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுப்பது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள்

  • கார்ல் மார்க்ஸ்

தமிழில்: மா.சிவக்குமார்

“எதிர்கால தொழிலை தேர்ந்தெடுப்பது பற்றி” காரல் மார்க்ஸ் தனது பள்ளி இறுதி வகுப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மதத்துடனும் கடவுளுடனும் இன்னும் முழுமையாக கணக்கு தீர்த்து விட்டு இயக்கவியல் பொருள்முதல்வாதியாக வளர்வதற்கு முன்பு, கடவுளின் பெயரையும் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது இந்தக் கட்டுரை. இக்கட்டுரை 17 வயதிலேயே மார்க்சிடம் இருந்த சமூக வாழ்வு பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.

தொழிலை தேர்ந்தெடுக்கப் போகும் அல்லது தேர்ந்தெடுத்த தொழிலை செய்து கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் படித்து ஆழமாக அசை போட வேண்டிய கட்டுரை.

ஒரு விலங்கு இயங்க வேண்டிய செயல்பாட்டு வட்டத்தை இயற்கையே தீர்மானித்திருக்கிறது. அந்த வட்டத்தைத் தாண்டிச் செல்ல முயற்சி செய்யாமல், வேறு விதமான எந்த செயல்பாடுகள் குறித்த உணர்வும் கூட இல்லாமல் அது அந்த வட்டத்துக்குள்ளேயே அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

மனிதருக்கும் ஒரு பொதுவான குறிக்கோளை, மனிதகுலத்தையும், தன்னையும் மேம்படுத்திக் கொள்வது என்ற பொதுவான குறிக்கோளை, இறைவன் கொடுத்திருக்கிறான். ஆனால், இந்த குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளும் பொறுப்பை மனிதரிடமே அவன் விட்டிருக்கிறான். தன்னையும், சமூகத்தையும் உயர்த்திக் கொள்ளும் வகையில் பணியாற்றுவதற்கு சமூகத்தில் தனக்கு மிகப் பொருத்தமான ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவரவரிடமே விட்டிருக்கிறான்.

இந்தத் தேர்வு செய்யும் உரிமை மற்ற உயிரினங்களுக்கு இல்லாமல் தனிச்சிறப்பாக மனிதருக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய சலுகையாகும். ஆனால், அதே நேரத்தில் அது ஒரு மனிதரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாசப்படுத்தி விடக் கூடிய, அனைத்து எதிர்கால திட்டங்களையும் முடக்கி விடக் கூடிய, அவரை மகிழ்ச்சியற்றவராக ஆக்கி விடக் கூடிய ஒரு முக்கியமான தேர்வு ஆகும். எனவே, இந்தத் தேர்வு பற்றிய கவனமான பரிசீலனை, தனது பணி வாழ்வை தொடங்கவிருக்கும், தனது வாழ்வின் முக்கியமான விவகாரங்களை நிகழ்ச்சிப் போக்கில் விட்டு விட விரும்பாத ஒரு இளைஞரின் முதல் கடமையாகும்.

ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் இருந்து தன் வாழ்வுக்கான இலக்கைக் கண்டு கொள்ள முடிகிறது. அவரளவில் அது மகத்தான ஒன்றாக தோன்றுகிறது. அவரது ஆழமான நம்பிக்கைகள், அவரது மனதின் மிக ஆழமான குரல் அதை உறுதி செய்தால் உண்மையில் அது மகத்தானதே. ஏனென்றால், நிலையற்ற வாழ்வுடைய மனிதருக்கு எந்த ஒரு வழிகாட்டலும் இல்லாமல் இறைவன் கைவிட்டு விடவில்லை; அவனது குரல் மென்மையாக ஆனால் உறுதியாக நம்மிடம் பேசுகிறது.

ஆனால் இந்தக் குரல் பிற எண்ணங்களுக்கு மத்தியில் எளிதில் மூழ்கடிக்கப்பட்டு விடலாம்; உள்மனத் தூண்டுதல் என்று நாம் எடுத்துக் கொண்டது உண்மையில் கண நேர விளைவாக இருந்து இன்னொரு கண நேரத்தில் அழிக்கப்பட்டு விடலாம். நமது கற்பனை தீப்பிடித்து, நமது உணர்ச்சிகள் எழுச்சி பெற்று, தேவதைகள் நமது கண்கள் முன் மிதந்து போகையில், நமது கணநேர உள்ளுணர்வு சொல்வதற்குள் நாம் தலைகால் தெரியாமல் குதித்து விடலாம். அதை இறைவனே நமக்கு சுட்டிக் காட்டியதாக நாம் கற்பனை செய்து கொண்டிருப்போம். ஆனால், நாம் ஆரத் தழுவிக் கொண்டது விரைவில் நம்மை ஒதுக்கித் தள்ளிவிடுகிறது; நமது ஒட்டுமொத்த வாழ்வும் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொள்கிறது.

எனவே, நமது தொழிலை தேர்ந்தெடுப்பதில் நாம் உண்மையிலேயே உள்ளுணர்வால் தூண்டப்பட்டிருக்கிறோமா, உள்மனக் குரல் ஒன்று அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறதா அல்லது இந்தத் தூண்டுதல் ஒரு மாயையா, இறைவனின் அழைப்பு என்று நாம் எடுத்துக் கொண்டது உண்மையில் ஒரு சுயஏமாற்றுதானா என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இந்த உள்ளுணர்வின் தோற்றுவாயை கண்டறிவதைத் தவிர வேறு எந்த வழியில் அதைச் செய்ய முடியும்?

மகத்தானது மின்னுகிறது, அதன் பிரகாசம் நமது லட்சியத்தை தூண்டுகிறது, அந்த லட்சியமே இந்த உள்ளுணர்வை, அல்லது நாம் உள்ளுணர்வு என்று கருதிக் கொண்டதை உருவாக்கியிருக்கலாம். ஆனால், லட்சியம் என்ற பேயால் தூண்டப்பட்ட ஒரு மனிதரை தர்க்க நியாயம் தடுத்து நிறுத்தி விட முடியாது. கணநேர உள்ளுணர்வு சொல்வதில் அவர் தலைகால் தெரியாமல் குதித்து விடுகிறார். அதன் பிறகு வாழ்வில் அவரது நிலை அவர் தேர்ந்தெடுப்பதாக இருப்பதில்லை, சந்தர்ப்ப சூழலாலும், தோற்ற மயக்கத்தாலும் அது தீர்மானிக்கப்படுகிறது.

தலைசிறந்த வாய்ப்புகளை அள்ளித் தரும் பதவியை எடுத்துக் கொள்ளும்படி நாம் தூண்டப்படக் கூடாது. ஏனென்றால், அதை நாம் பின்பற்றவிருக்கும் வரப்போகும் நீண்ட நெடிய ஆண்டுகளில் சலிப்பூட்டாமல், நமது ஆர்வத்தை குறைத்து விடாமல், உற்சாகத்தை குளிர்ந்து போகச் செய்து விடாமல் வைத்திருக்கும் ஒன்றாக அது இருக்காது. மாறாக, அத்தகைய ஒன்றை தேர்ந்தெடுத்தால், விரைவில் நமது விருப்பங்கள் பொய்த்துப் போய் விட, அது குறித்து இறைவனிடம் கசப்பாக முறையிடுவதும் மனித குலத்தையே கரித்துக் கொட்டுவதும் என நாம் ஆகி விடுவோம்.

லட்சியம் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொழில் மீதான திடீர் ஆர்வத்தை தூண்டி விடுவதில்லை. ஒருவேளை நாமே அதை கற்பனையில் கவர்ச்சிகரமாக அலங்கரித்திருக்கலாம். வாழ்க்கை நமக்கு தரப் போவதில் அதுதான் தலைசிறந்தது என்று தோன்றும் அளவுக்கு அதை அலங்கரித்திருக்கலாம். நாம் அதைப் பற்றி கவனமாக ஆய்வு செய்திருக்கவில்லை, அது நம் மீது சுமத்தவிருக்கும் ஒட்டுமொத்த சுமையையும், மிகப்பெரிய பொறுப்பையும் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை; அதை ஒரு தொலைவில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறோம், தொலை பார்வை நம்மை ஏமாற்றி விடக் கூடியது.

நமது சொந்த தர்க்கம் இங்கு ஆலோசகராக இருக்க முடியாது. அது நீண்ட வாழ்க்கை அனுபவத்தாலோ, ஆழமான அவதானங்களாலோ உறுதி செய்யப்பட்டதில்லை, அது உணர்ச்சியால் ஏமாற்றப்பட்டு விடக் கூடியது, பகல் கனவால் குருடாக்கப்பட்டு விடக் கூடியது. இந்நிலையில் நாம் யாரிடம் ஆலோசனை கேட்க போக வேண்டும்? நமது தர்க்கம் நம்மை கைவிடும் போது யார் நமக்கு வழிகாட்ட வேண்டும்? ஏற்கனவே வாழ்க்கையின் பாதையில் பயணித்து, விதியின் கடுமையை அனுபவித்து விட்ட நமது பெற்றோர்தான் சரியான வழிகாட்டி என்று நமது மனம் நமக்கு சொல்கிறது.

அதன் பிறகும் நமது உற்சாகம் நீடித்தால், ஒரு குறிப்பிட்ட தொழிலை நாம் தொடர்ந்து நேசித்தால், மிக அமைதியான மனநிலையில் அதை பரிசீலித்த பிறகும் அதன் சுமைகளை உணர்ந்து கொண்டு, அதன் சிரமங்களை தெரிந்து கொண்டு விட்ட பிறகும் அதுதான் நமது வாழ்க்கை பணி என்று நாம் கருதினால், அப்போது நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது நமது உற்சாகம் நம்மை ஏமாற்றியிருக்காது, அல்லது மிதமிஞ்சிய அவசரம் நம்மை இழுத்துச் சென்று விட்டிருக்காது.

ஆனால், நமது வாழ்க்கைப் பணியாக விதிக்கப்பட்டதாக நாம் நம்பும் பதவியை எல்லா நேரங்களிலும் நம்மால் அடைந்து விட முடிவதில்லை. அத்தகைய தீர்மானத்தை எடுக்கும் நிலைக்கு நாம் வருவதற்கு முன்பே சமூகத்துடனான நமது உறவுகள் குறிப்பிட்ட அளவுக்கு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

நமது உடல்நிலையே பல நேரங்களில் அச்சுறுத்தக்கூடிய தடையாக இருக்கிறது, அது விதிக்கும் வரம்புகளை யாரும் எளிதில் புறக்கணித்து விட முடியாது. உடல்ரீதியான வரம்புகளை தாண்டி நாம் நம்மை உயர்த்திக் கொள்ளலாம் என்பது உண்மைதான், ஆனால், அதில் தோல்வியடைந்தால் நமது வீழ்ச்சி அந்த அளவுக்கு வேகமாக இருக்கும், ஏனென்றால் நொறுங்கிக் கொண்டிருக்கும் இடிபாடுகளின் மீது கட்டுமானம் செய்ய துணிந்தால் நமது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மனதுக்கும் உடலுக்கும் இடையேயான வருந்தும் போராட்டமாக மாறி விடுகிறது. தனக்குள் போரிட்டுக் கொண்டிருக்கும் காரணிகளை சமன் செய்ய இயலாத ஒருவரால் வாழ்க்கையின் கொந்தளிப்பான மன அழுத்தங்களை எப்படி எதிர்கொள்ள முடியும், அவற்றுக்கு மத்தியில் அவரால் எப்படி அமைதியாக செயல்பட முடியும்? அமைதியில் இருந்தே மகத்தான, மிகச்சிறந்த செயல்பாடுகள் எழுகின்றன. பழுத்த பழங்கள் வெற்றிகரமாக விளையும் மண் அது மட்டுமே.

நமது தொழிலுக்கு பொருத்தமில்லாத உடல்கட்டுமானத்தை வைத்துக் கொண்டு நாம் நீண்ட காலம் பணியாற்ற முடியாது, அதுவும் மகிழ்ச்சியாக ஒருபோதும் செயல்பட முடியாது. இருப்பினும் நமது உடல்நலனை கடமைக்கு தியாகம் செய்யலாம் என்ற சிந்தனை தொடர்ச்சியாக எழுகிறது. பலவீனமாக இருந்தாலும் தீவிரமாக செயல்படலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், தேவையான திறமை நம்மிடம் இல்லாத தொழிலை தேர்ந்தெடுத்திருந்தால் சிறப்பை ஈட்டும் வகையில் அதை நம்மால் ஒரு போதும் நிறைவேற்ற முடியாது, விரைவில் நமது திறமையின்மையை நாமே உணர்ந்து கொண்டு அவமானமடைவோம். நமது வாழ்க்கை எதற்கும் பயனற்றது என்றும் சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலை செய்ய இயலாதவர்களில் ஒருவர் என்றும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கும். அதன் மிக இயல்பான பின்விளைவு சுயமரியாதையின்மை ஆகும். அதை விட அதிக வலியளிப்பதும், புற உலகு நமக்கு அளிக்கும் எதனாலும் ஈடு கட்ட முடியாததும் வேறு எதுவும் உள்ளதா? சுய மரியாதையின்மை ஒருவரின் மனதை தொடர்ந்து அரித்துக் கொண்டிருக்கும், ஒருவரது இதயத்திலிருந்து உயிர் அளிக்கும் இரத்தத்தை உறிஞ்சி வெறுப்பும், நம்பிக்கையின்மையும் என்ற விஷத்தை அதில் கலந்து விடும். நாம் தீவிரமாக பரிசீலித்த ஒரு தொழில் தொடர்பான நமது திறமைகள் பற்றிய மயக்கம் நம் மீதே பழி தீர்த்துக் கொள்கிறது. வெளி உலகின் கண்டிப்பை அது எதிர்கொள்ளாவிட்டாலும் அத்தகைய கண்டிப்பு தருவதை விட மிகத் தாங்க முடியாத வலியை நமது மனதில் உருவாக்குகிறது.

இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகும், நமது வாழ்க்கை நிலைமைகள் நாம் விரும்பும் எந்தத் தொழிலையும் தேர்ந்தெடுக்க அனுமதிக்குமானால், நமக்கு மிக அதிக மதிப்பை தரக்கூடிய, உண்மை என்று நாம் முழுமையாக ஏற்றுக் கொண்ட சிந்தனைகளின் அடிப்படையில் மனிதகுலத்துக்கு பணியாற்றுவதற்கு ஆக விரிந்த சாத்தியத்தை தரக்கூடிய, அதை மேற்கொள்கின்ற மனிதரை அப்பழுக்கின்மைக்கு இட்டுச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற தகுதி படைத்த தொழிலை நாம் மேற் கொள்ள வேண்டும்.

மதிப்பு என்பது எல்லாவற்றையும் விட ஒரு மனிதரை உயர்த்திச் செல்வது, அவரது நடத்தைகளுக்கும், முயற்சிகளுக்கும் ஒரு உயர் கௌரவத்தை அளிப்பது, அவரை கண்டனத்துக்கு அப்பாற்பட்டவராக்கி, மக்கள் திரளால் போற்றப்படுபவராகவும் மக்கள் திரளிலிருந்து மேம்பட்டு நிற்பவராகவும் மாற்றுவது. ஆனால், நம்மை அடிபணிந்து கருவிகளாக செயல்பட வைக்கும் தொழில் நமது மதிப்பை உறுதி செய்வதாக இருக்க முடியாது. மாறாக, நமது சொந்த வட்டத்தில் தன்னிச்சையாக செயல்படுவதான தொழில்தான் நமது மதிப்பை உறுதி செய்ய முடியும். வெளித் தோற்றத்தில் மட்டுமே இருந்தாலும் கண்டனத்துக்குரிய செயல்பாடுகளை கோராத தொழிலால்தான் மதிப்பை உறுதி செய்ய முடியும். தலைசிறந்த மனிதர்களும் கௌரவமான பெருமையுடன் பின்பற்றக் கூடிய தொழிலாக அது இருக்க வேண்டும். மதிப்பை மிக அதிக அளவில் உறுதி செய்யும் தொழில் எப்போதுமே மிக உயர்ந்ததாக இருப்பதில்லை, ஆனால் அதுதான் எப்போதுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது.

மதிப்பை உறுதி செய்யாத தொழில் நம்மை தரம் தாழ்த்தி விடுவதைப் போல, நாம் பிற்பாடு தவறானவை என்று தெரிந்து கொள்ளும் கருத்துக்களின் அடிப்படையிலான தொழிலின் சுமைகளின் கீழ் நாம் நசுங்கிப் போவோம். அந்நிலையில் நமக்கு சுய-ஏமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் மிஞ்சியிருக்காது. சுய ஏமாற்றின் மூலம் பெறப்படும் அத்தகைய மனநிறைவு எவ்வளவு பரிதாபகரமானது.

வாழ்க்கையோடு பெரிய அளவு தொடர்பு இல்லாத சூக்கும உண்மைகளை கையாளுகின்ற தொழில்கள், கொள்கைகள் இன்னும் உறுதிப்படாத, நம்பிக்கைகள் இன்னும் வலுவடையாத இளைஞருக்கு மிக அபாயகரமானது. அதே நேரம் இந்தத் தொழில்கள் நமது மனதில் ஆழமாக வேர் கொண்டு விட்டால், நமது வாழ்க்கையையும், நமது முயற்சிகள் அனைத்தையும் இந்தத் தொழில்களை ஆளும் கருத்துகளுக்காக தியாகம் செய்யத் தக்கதாக அவை இருந்தால் அவை மிக உயர்ந்தவையாக தோன்றலாம். அவற்றின் மீது வலுவான பிடிப்பு கொண்ட மனிதருக்கு அவை மகிழ்ச்சியை கொண்டு வரலாம், ஆனால், ஆழ்ந்து சிந்திக்காமல், கண நேரத் தூண்டுதலின் பேரில் அவசரமாக அவற்றை மேற்கொள்பவரை அவை அழித்து விடும்.

இன்னொரு பக்கம், நமது தொழிலின் அடிப்படையாக இருக்கும் கருத்துக்கள் மீது நாம் கொண்டிருக்கும் உயர் மதிப்பீடு சமூகத்தில் நமக்கு ஒரு உயர்நிலையை அளிக்கிறது, நமது சொந்த மதிப்பை உயர்த்துகிறது, நமது செயல்பாடுகளை கேள்விக்கு அப்பாற்பட்டதாக்குகிறது.

தான் பெரிதாக மதிக்கும் ஒரு தொழிலை தேர்ந்தெடுக்கும் ஒருவர் அதற்கு தகுதியற்றவராக இருப்பது என்பதை நினைத்தாலே நடுங்குவார். சமூகத்தில் அவரது நிலை கௌரவமானதாக இருந்தால்தான் அவர் கௌரவமாக நடந்து கொள்ள முடியும்.

ஆனால், தொழிலை தேர்ந்தெடுப்பதில் நமக்கு முதன்மையாக வழிகாட்ட வேண்டியது மனித குலத்தின் நல வாழ்வும், நமது சொந்த முழுமையும்தான். இந்த இரண்டு நலன்களும் ஒன்றோடு ஒன்று முரண்படலாம், ஒன்று மற்றொன்றை இல்லாமல் செய்து விடலாம் என்று நினைக்க வேண்டியதில்லை. தனது சக மனிதர்களின் முழுமைக்காக பணியாற்றும் போதுதான் தனது முழுமையை உறுதி செய்ய முடியும் என்ற வகையில்தான் மனிதரின் இயல்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஒருவர் தனக்கு மட்டுமே பணியாற்றினால் அவர் மிகச்சிறந்த அறிவாளியாக மாறலாம், மகத்தான ஞானியாகலாம், தலை சிறந்த கவிஞர் ஆகலாம், ஆனால் அவர் ஒரு போதும் முழுமையான, உண்மையில் மகத்தான மனிதர் ஆக முடியாது. பொது நலனுக்காக பணியாற்றி தம்மை கௌரவப்படுத்திக் கொண்டவர்களை வரலாறு மகத்தானவர்கள் என்று அழைக்கிறது; மிக அதிகமான நபர்களை மகிழ்வித்த மனிதர்தான் மகிழ்ச்சியானவர் என்று அனுபவத்தில் தெரிகிறது. மதமே மனித குலத்துக்காக தன்னை தியாகம் செய்து கொண்ட மனிதப் பிறவியைத்தான் நமது ஆதர்சமாக கற்பிக்கிறது. இத்தகைய மதிப்பீடுகளை பொய் என்று யார் சொல்ல முடியும்?

மனிதகுலத்துக்காக பணியாற்றுவது அனைத்தையும் விட முக்கியமானதாக இருக்கும் தொழிலை நாம் தேர்ந்தெடுத்திருந்தால் எந்தச் சுமைகளும் நம்மை அழுத்தி விட முடியாது, ஏனென்றால் அவை அனைவரது நலனுக்குமான தியாகங்கள். அப்போது நாம் அற்பமான, வரம்புக்குட்பட்ட, சுயநலமான மகிழ்ச்சியை அனுபவிக்க மாட்டோம், மாறாக நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கானவர்களுக்கு சொந்தமாக இருக்கும். நமது செயல்பாடுகள் அமைதியாக ஆனால், நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும். நமது இறப்புக்குப் பிந்தைய சாம்பலின் மீது நம்மை நேசிக்கும் உயர்ந்த மனிதர்களின் சூடான கண்ணீர் உகுக்கப்படும்.

  • கார்ல் மார்க்ஸ்

மூலம்: MECW Volume 1 Written: between August 10 and 16, 1835

மாவோ எழுதிய நமது பயில் முறை சீர்திருத்தம் கட்டுரையில் இருந்து …

தமிழில்: இரா.சிந்தன்

நடப்பு நிலைமைகளை பயில்வதைப் புறந்தள்ளுதல், வரலாறு பயில்வதைப் புறந் தள்ளுதல், மார்க்சிய – லெனினியத்தைப் பயன்படுத்துதலை புறந்தள்ளுதல் ஆகியவை அனைத்தும் மோசமான வேலைப் பாணியை விளைவிக்கின்றன. அதன் பரவல், நம்மில் பல தோழர்களுக்கு தீங்கிழைத்துள்ளது.

உண்மையில் நமது அணிகளில் உள்ள பல தோழர்கள் இந்த வேலைப்பாணியால் தவறிழைக்கிறார்கள் நாட்டுக்கு உள்ளும் வெளியிலும், நாடு, மாகாணம், கவுண்டி அல்லது மாவட்டங்களிலும் குறிப்பான நிலைமைகளை முறையாகவும், முழுமையாகவும் ஆய்ந்து பயின்று செயல்பட விரும்புவதில்லை, மாறாக தங்கள் குறைபாடான அறிவைக் கொண்டும், ”எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது எனவே அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கருதியும் உத்தரவுகளை மேற்கொள்கின்றனர். நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைவாதப் பாணி நிலவுகிறது அல்லவா?

சிலர் தம் சொந்த வரலாற்றைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பதற்கும், குறைந்த அளவே தெரிந்திருப்பதற்கும் வெட்கப்படுவதற்கு பதிலாக, இறுமாப்புடன் இருக்கிறார்கள்…

***

… நாம் மார்க்சியத்தைப் பயின்று கொண்டிருக்கிற போதிலும் நம்மில் பலர் அதைப் பயிலும் வழியானது மார்க்சியத்திற்கு நேர் எதிராக இருக்கிறது. அதாவது, மார்க்சும், எங்கல்சும், லெனினும், ஸ்டாலினும் அக்கறையுடன் நமக்கு வலியுறுத்திய ”நடைமுறையையும் தத்துவத்தையும் இணைத்தல்” என்ற அடிப்படைக் கொள்கை நெறியையே மீறுகின்றனர். அப்படி மீறுவது மட்டுமல்லாமல், தமக்கேற்ற வகையில் எதிர்நிலையான ஒரு சொந்த நெறியை வளர்த்தெடுத்து, தத்துவத்தையும், நடைமுறையையும் பிரிக்கின்றனர்…

***

… இந்தக் கருத்தினை மேலும் விளக்குவதற்கான, நேரெதிரான இரண்டு உளப்பாங்குகளை வேறுபடுத்திக் காட்டுகிறேன்.

முதலில், அகநிலை உளப்பாங்கு.

இந்த உளப்பாங்கோடிருக்கும் ஒரு நபர் சூழல் குறித்த ஆழமான, முறையான பயிலுதல் எதுவும் செய்யாமல் தன் தனிப்பட்ட அகவய உற்சாகத்தின் அடிப்படையில் பணிபுரிகிறார், இன்றுள்ள சீன நிலைமைகளைப் பற்றி மங்கலான புரிதலே கொண்டிருக்கிறார். தனது மனநிலையின் வழியே சீன வரலாற்றை வெட்டிக் குறுக்குகிறார், நேற்றும், நேற்று முன் தினமும் சீனா கடந்துவந்திருக்கும் நிலைமைகளைப் பற்றி தெளிவில்லாத நிலையில் உள்ள அவருக்கு பண்டைய கிரேக்கம் பற்றி மட்டுமே தெரிகிறது. இந்த மனநிலையில் இருக்கும் ஒருவர் மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை அருவமாக, குறிக்கோள் ஏதுமின்றிப் பயில்கிறார்.

அவர் சீனப் புரட்சியின் தத்துவார்த்தப் பிரச்சனைகளுக்கும், உத்தி ரீதியிலான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கான வழிமுறையையும், கண்ணோட்டத்தையும், நிலைப்பாடுகளையும் அறிந்துகொள்வதற்காக அல்லாமல், தத்துவத்தை வெறும் தத்துவமாக வாசிக்கவே மார்க்ஸ், எங்கல்ஸ் லெனின் மற்றும் ஸ்டாலினை அணுகுகிறார். இலக்கை நோக்கி அம்பெய்தாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக எய்துகிறார். மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் நாம் புறவய எதார்த்தங்களில் இருந்து நம் செயல்பாடுகளைத் தொடங்கவேண்டும் என்கின்றனர். அதிலிருந்து நாம் விதிகளை உய்த்துணர்ந்தால் அவை நம் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும் என்று கற்பித்துள்ளனர்.

அதற்கு நாம், மார்க்ஸ் கூறியிருப்பதைப் போல, விரிவான தரவுகளைப் பெற்று அவற்றை விளக்கமாகவும், அறிவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியும் செயல்பட வேண்டும். நம்மில் பலர் இப்படி செயல்படாமல், எதிர்திசையில் செயல்படுகின்றனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள் ஆனால் அவர்களிடத்தில் இன்றைக் குறித்தோ, நேற்றைய சீனா குறித்தோ கற்க விருப்பமிருப்பதில்லை, எதார்த்தத்திலிருந்து விலகிய வெற்றுக் “கோட்பாடுகளை” பயில்வதற்கே பழக்கப்பட்டுள்ளனர். மேலும் பிறர் நடைமுறைப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

ஆனால், அவர்கள் கூட புறவய நிலைமைகளைப் பயில்வதற்கு தங்களது கவனத்தினைச் செலுத்தாமல், பெரிதும் தங்கள் சொந்த ஆர்வத்தினைச் சாந்து தங்கள் தனிநபர் உணர்வுகளை கொள்கைகளிடத்தில் முன்வைக்கின்றனர். இவ்விரு வகையிலான நபர்கள் அகநிலையைச் சார்ந்துள்ளதோடு புறவய எதார்த்தங்களையும் புறக்கணிக்கின்றனர். அவர்கள் உரைவீச்சுக்களில் பெரியளவில் வாய்ச்சவடால் அடிப்பார்கள், கட்டுரைகளில்  A, B, C, D, 1, 2, 3, 4 என நீண்ட வரிசையில் மனம் போன போக்கில் எழுதுவார்கள். அவர்கள் நடந்தவைகளிலிருந்து பேருண்மையை தேடும் நோக்கமில்லாமல் இருக்கின்றனர்; மாறாகப் பகட்டாரவாரத்தின் வாயிலாக பிறர் கவனம் ஈர்க்கும் விருப்பத்தை மட்டுமே கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் உள்ளீடு ஏதுமின்றி வெளிப்புறத்தே ஒளிர்கின்றனர், உடையும் தன்மையோடு உறுதியற்றுள்ளனர். அவர்களே எப்போதும் சரியானவர்கள், சொர்கத்தின் கீழே அவர்கள் மட்டுமே முதன்மை அதிகாரம் கொண்டவர்கள். இந்த “ஏகாதிபத்திய தூதுவர்கள்” எல்லாவிடத்தும் ஓடிக் கொண்டுள்ளனர். நம் அணிகளில் உள்ள சில தோழர்களிடம் இந்த வேலைப்பாணி காணப்படுகிறது. ஒருவரை இந்தப் பாணி ஆட்கொள்ளும்போது அவர் பாதிக்கப்படுகிறார், மற்றவர்களுக்கு கற்றுத் தரும்போது அவர்களும் கெடுகின்றனர், புரட்சியை வழிநடத்தை இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதானது புரட்சியையே பாதிக்கிறது.

தொகுத்துச் சொன்னால், இந்த அகநிலைப்பட்ட வழிமுறையானது மார்க்சிய – லெனினியத்திற்கும் அறிவியலுக்கும் முரண்பட்டதாகவும் (உழைக்கும் வர்க்கம், மக்கள் மற்றும் தேசத்திற்கே) ஒரு வல்லமைமிக்க எதிரியாகவும் உள்ளது; இது ஒரு கட்சியின் உயிரோட்டத்தில் ஏற்பட்ட பிழையின் விளைவாகும். ஒரு வல்லமை மிக்க எதிரி நம் முன் நிற்கிறான், நாம் அவனை வீழ்த்தியாகவேண்டும். அகநிலைவாதம் வீழ்த்தப்பட்டால் மட்டுமே மார்க்சிய-லெனினியம் என்ற பேருண்மை மேலோங்கும்; கட்சியின் உயிரோட்டம் வலுப்படுத்தப்படும், புரட்சி வெற்றிகரமாகும், அறிவியல் மனப்பான்மை இல்லாமல் போவதானது அதாவது தத்துவத்தையும் நடைமுறையையும் இணைக்கும் மார்க்சிய-லெனினிய அணுகுமுறை இல்லாமல் போவதானது, கட்சியின் உயிரோட்டம் இல்லாமல் போவதை அல்லது பற்றாக்குறையைக் காட்டுகிறது.

இப்படிப்பட்ட நபர்களைச் சித்தரிக்கும் ஈரடிப் பாடல் ஒன்றுள்ளது, அது இவ்வாறு பொருள் தரும்,

சுவற்றில் வளரும் நாணலின்  தலை கனத்திருக்கும் தண்டு மெலிந்திருக்கும், வேர்கள் பிடிப்பற்றவை

குன்றிலே விளைந்த மூங்கிலின் முனை கூர்மையாய் இருக்கும், தோல் கணத்திருக்கும், உள்ளீடற்று இருக்கும்

அறிவியல் மனப்பான்மை இன்றி, மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலினின் படைப்புகளில் இருந்து சொற்களையும் வாக்கியங்களையும் மட்டுமே மனனம் செய்து ஓதியபடி, மெய்யான கற்றறிதல் இல்லாமல் புகழை அனுபவிப்போருக்கு இதுவல்லவா பொருத்தமானதொரு விளக்கப்பா? ஒருவர் தன் பிணியிலிருந்து நலம்பெற விரும்பினால், அவரை இந்த ஈரடிப் பாடலை மனப்பாடம் செய்துகொள்ளவோ அல்லது இன்னும் அதிக வீரத்தோடு தன் அறையின் சுவர்களில் இந்த வரிகளை எழுதிவைத்துக் கொள்ளுமாறு அறிவுருத்துவேன். மார்க்சியம்-லெனினியம் ஓர் அறிவியலாகும். மேலும், அறிவியலின் பொருள், நேர்மையான உறுதியான அறிவு ஆகும்; அங்கே தந்திரச் செயல்களுக்கு இடமில்லை. ஆகையால் நாம், நேர்மையாக இருப்போம்.

இரண்டாவதாக, மார்க்சிய லெனினிய அணுகுமுறை உள்ளது.

இந்த அணுகுமுறை கொண்டு, ஒரு நபர் தத்துவத்தையும் மார்க்சிய லெனினிய வழிமுறையையும் படிப்படியாக, ஆழமான ஆய்வுகள் செய்து, சூழலைக் குறித்து நன்கு பயின்று அமலாக்குகிறார். தன் சொந்த ஆர்வத்தால் மட்டும் அவர் செயல்படுவதில்லை, ஸ்டாலின் சொல்வதைப் போல நடைமுறைத் தன்மையை புரட்சிகர வீச்சோடு இணைக்கிறார். இந்த உளப்பாங்குடன் அவர் வரலாற்றை வெட்டிக் குறுக்கமாட்டார்…

***

… இதுபோன்றதொரு உளப் பாங்கை மேற்கொள்வது என்பது மெய்நிகழ்வுகளிலிருந்து (facts) பேருண்மையை தேடுவது ஆகும். “மெய் நிகழ்வுகள்” என்பன புறவயமாக நிலவும் பொருட்களாகும். பேருண்மையின் பொருள் என்பது அவற்றின் உள் உறவுகள் ஆகும். அதாவது, அவற்றை ஆட்சி செய்யும் விதிகள் “தேடுவது” என்றால் பயில்வதாகும். நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும், மாகாணத்திலும், மாவட்டத்திலும் அல்லது கவுண்டியிலும் நிலவும் உண்மையான நிலைமைகளிலிருந்து நம் செயல்பாட்டைத் தொடங்க வேண்டும், நமது செயலுக்காக கற்பனையாக இல்லாமல், உள்ளார்ந்திருக்கும்  வழிகாட்டு நெறிகளையும், விதிகளையும் கண்டறிய வேண்டும், அதாவது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுக் கொண்டு உள்ள தொடர்புகளைக் கண்டறிய வேண்டும்.

மேலும் இதைச் செய்வதற்காக நாம் அகவய கற்பனையையோ, அப்போதைய ஆர்வத்தையோ அல்லது சாரமற்ற புத்தகங்களையோ சார்ந்திருக்கக் கூடாது, புறவயமாக நிலவுகின்ற சூழல்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். உரிய வகையில் தகவல்களைச் சேகரித்து, மார்க்சிய-லெனினிய பொதுக்கொள்கை நெறிகளினை சரியாகப் பின்பற்றி அதிலிருந்து முடிவுகளை வகுக்க வேண்டும். இத்தகைய முடிவுகள் வெறும் அ, ஆ, இ, ஈ வரிசையாலான நிகழ்ச்சிப்போக்குகள் நிறைந்த பட்டியல்களோ, பயனற்ற கூற்றுகள் நிரம்பிய எழுத்துக்களோ அல்ல, அவை அறிவியல் பூர்வமான முடிவுகள் ஆகும். இத்தகைய உளப்பாங்கு என்பது மெய் நிகழ்வுகளிலிருந்து பேருண்மையை தேடுவது, வெற்று பசப் புரையிலிருந்து அணுகூலமானதைப் பெறுவது அல்ல.

இதுதான் மார்க்சிய-லெனிய வழியில் தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பதாகும், உயிரோட்டமான கட்சியின் வெளிப்பாடு இதுவே. எந்தவொரு கட்சி உறுப்பினரும் இந்த அணுகுமுறையை மிக குறைந்த அளவிலேனும் கைக் கொண்டிருக்கவேண்டும்.  இந்த அணுகுமுறையைக் கைக்கொள்ளும் ஒருவருக்கு “தலை கனத்து, தண்டு மெலிந்து, வேர்ப்பிடிப்பில்லாமல்” இருக்காது. “கூரான நாக்கும், தடித்த தோலும், உள்ளீடற்றும்” கொண்டவராக இருக்க மாட்டார்…

ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் லண்டன் காங்கிரஸ்: ஒரு பிரதிநிதியின் குறிப்பு …

ஸ்டாலின் தொகுப்பு நூல்களில் இருந்து…

– தமிழில் வீ.பா. கணேசன்

1907 ஆம் ஆண்டு, ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் லண்டன் காங்கிரஸில் பங்கேற்ற பிரதிநிதி என்ற வகையில், அந்த மாநாட்டு செயல்பாடுகளை ஆய்வு செய்து பகுப்பாய்ந்து ஆழமான ஒரு குறிப்பை தோழர் ஸ்டாலின்  எழுதினார். முழுமை பெறாத இந்தக் குறிப்பு ஸ்டாலின் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. கட்சிப் பிளவுக்கான முயற்சிகளை தொழிலாளி வர்க்க தத்துவக் கண்ணோட்டத்துடன் எதிர்கொண்டு போல்ஷ்விக்குகள் நடத்திய போராட்டத்தை இதில் பதிவு செய்திருக்கிறார் ஸ்டாலின். தாராளவாதத்திற்கு எதிரான தத்துவப் போராட்டத்தை புரிந்துகொள்ள ஏதுவான ஒரு சிறு பகுதியினை இங்கே பிரசுரித்துள்ளோம்.

330 பிரதிநிதிகள் பங்கேற்ற லண்டன் காங்கிரஸில் 302 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். உடல் உழைப்பு தொழிலாளர்கள் 116 பேரும், இதர தொழிலாளர்கள் 24 பேரும், முழு நேர புரட்சியாளர்கள் 56 பேரும் என இம்மாநாட்டு பிரதிநிதிகளின் வர்க்க பின்னணியை ஸ்டாலின் விளக்குகிறார். இம்மாநாடு எப்படி போல்ஷ்விக் முன்வைப்புகள் சரியானவை என்று உரசிப்பார்க்க உதவியாக இருந்தன என புள்ளிவிபரங்களுடன் விளக்குகிறார். போல்ஷ்விக்குகளை ‘அறிவுஜீவிகளின் குழு’ என்று விமர்சித்து வந்த மென்ஷ்விக்குகளின் விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையிலும், போல்ஷ்விக்குகளின் கண்ணோட்டமே சரியானது என அறிவிக்கும் வகையிலும் இம்மாநாட்டு முடிவுகள் அமைந்தன.  ஸ்டாலின் தொகுப்பில் வெளிவரவுள்ள இக்கட்டுரையில்,  புரட்சிக்கான செயல்திட்டம் குறித்த கீழ்க்காணும் பகுதியை மட்டும் மார்க்சிஸ்ட் இதழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம். –                                                                                                                                          –ஆசிரியர் குழு

நமது புரட்சியை அதன் இறுதிவரை எப்படி எடுத்துச் செல்வது? இந்தப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின், விவசாயி வர்க்கத்தின், தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்தின் பங்கு என்ன? போராடும் சக்திகளின் எத்தகைய கூட்டணியைக் கொண்டு இந்தப் புரட்சியை அதன் இறுதிவரை கொண்டு செல்ல முடியும்? யாரோடு சேர்ந்து நாம் நடை போடுவது? யாரை எதிர்த்து நாம் போராடுவது? போன்ற கேள்விகள் எழுகின்றன. இங்குதான் நமது கருத்து வேறுபாடு கள் துவங்குகின்றன.

மென்ஷ்விக்குகளின் கருத்து

நமது புரட்சியானது முதலாளித்துவப் புரட்சி என்பதால் முதலாளித்துவ வர்க்கம்தான் புரட்சி யின் தலைவராக இருக்க முடியும். பிரான்சில் நடந்த மகத்தான புரட்சிக்கு முதலாளித்துவ வர்க்கம்தான் தலைமை தாங்கியது. இதர ஐரோப்பிய நாடுகளில் நடந்த புரட்சியின் தலை மையிலும் அதுவே இருந்தது. எனவே நமது   ரஷ்ய புரட்சியின் தலைவராகவும் அந்த வர்க்கம் தான் இருக்க வேண்டும். இந்தப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம்தான் முக்கிய போராளியாக இருக்கிறது. எனினும் அது முதலாளித்துவ வர்க்கத்திற்குப் பின்னால்தான் நடைபோட்டபடி முதலாளித்துவ வர்க்கத்தை உந்தித் தள்ள வேண் டும். விவசாய வர்க்கமும் கூட புரட்சிகரமான தொரு வர்க்கம்தான். எனினும் அதற்குள்ளே அதிகமான அளவில் பிற்போக்குத் தனங்கள் நீடித்து நிலைத்துள்ள நிலையில் தாராளவாத ஜனநாயக முதலாளித்துவத்தோடு கூட்டாக செயல்படுவதை விட மிகக் குறைவான வாய்ப்பு களே அமைகின்றன. விவசாய வர்க்கத்தை விட முதலாளித்துவ வர்க்கமே பாட்டாளி வர்க்கத் திற்கு நம்பிக்கையான கூட்டாளி ஆகும். தலைமைப் பொறுப்பில் தாராளவாத ஜனநாயக முதலாளித்து வத்தைச் சுற்றியே அனைத்துப் போராடும் சக்தி களும் அணிதிரள வேண்டும். எனவே முதலாளித் துவ கட்சிகளை நோக்கிய நமது அணுகுமுறை என்பது அரசிற்கும் தாராளவாத முதலாளித்து வத்திற்கும் எதிராக விவசாய வர்க்கத்துடன் சேர்ந்து நிற்பது; அதன் தலைமைப் பொறுப்பில் பாட்டாளி வர்க்கம் இருப்பது என்ற புரட்சிகர கொள்கையால் தீர்மானிக்கப்பட முடியாது. மாறாக அது சந்தர்ப்பவாதக் கொள்கையாகத் தான்  இருக்க முடியும்; அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்துடனும் இணைந்து நிற்பது. அதன் தலைமைப் பொறுப்பில் தாராள வாத முதலாளித்துவம் இருப்பது; இப்படித்தான் தாராளவாதிகளுடன் சமரசம் செய்து கொள் வது என்ற நடைமுறைத் தந்திரம் மேற்கொள்ளப் படுகிறது.

மென்ஷ்விக்குகளின் கருத்து இவ்வாறாகத் தான் இருந்தது.

போல்ஷ்விக்குகளின் கருத்து:  நமது புரட்சி யானது ஒரு முதலாளித்துவப் புரட்சி என்பது உண்மைதான். ஆனால் நமது தாராளவாத முதலாளித்துவ வர்க்கம்தான் அதன் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அதற்குப் பொருளல்ல. 18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சியின் தலைமைப் பொறுப்பில் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் இருந்தது. ஆனால் ஏன்? ஏனென்றால் பிரெஞ்சு பாட்டாளிவர்க்கம் அப் போது பலவீனமாக இருந்தது. அது சுயேச்சை யாக வெளிவரவில்லை.. அது தனது சொந்த வர்க்கத்திற்கான கோரிக்கைகளை முன்வைக்க வில்லை. அதற்கு வர்க்க உணர்வோ அல்லது அதற்கென்று ஓர் அமைப்போ கொண்டதாக இருக்கவில்லை. பின்னர் அது முதலாளித்துவ வர்க்கத்தின் வாலைப் பிடித்துக் கொண்டு சென்றது. முதலாளித்துவ வர்க்கமும் தனது வர்க்க நோக்கங்களுக்காக அதை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது. நீங்களே பார்க்கலாம். அப்போது பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக ஜாராட்சியைப் போன்ற வடிவில் கூட்டாளி எதுவும் முதலாளித்துவ வர்க்கத்திற்குத் தேவைப் படவில்லை. ஏனென்றால் பாட்டாளி வர்க்கமே அதன் கூட்டாளியாக இருந்தது என்பதோடு மட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் சேவ கனாகவும் அது இருந்தது. எனவேதான் அப்போது முதலாளித்துவ வர்க்கம் புரட்சிகரமானதாக இருந்தது என்பது மட்டுமின்றி புரட்சிக்காக முன்வரிசையில் அது நடைபோட்டது. இங்கே ரஷ்யாவில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைத்தான் காண முடியும். ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தை எந்த வகையிலும் பலவீனமான ஒன்று எனக் கூறிவிட முடியாது. ஏற்கனவே பல வருடங்களாக அது தனியாகவே, சுதந்திரமாகவே செயல்பட்டு வருகிறது. தனது வர்க்கத்தின் சொந்தக் கோரிக் கைகளை அது முன்வைக்கிறது. தனது சொந்த நலன்களை உணர்வதற்கு ஏற்ற வகையில் வர்க்க உணர்வு பெற்றதாகவும் இருக்கிறது. அது தனக்குச் சொந்தமான கட்சியிலேயே ஐக்கியமாகி இருக்கிறது. அதன் கட்சியானது ரஷ்யாவிலேயே வலிமையான கட்சியாகும். அது தனக்கேயுரிய திட்டத்தையும் நடைமுறைத் தந்திரம், அமைப்பு போன்ற குறிக்கோள்களையும் கொண்டதாகவும் விளங்குகிறது. இந்தக் கட்சியின் தலைமையில் முதலாளி வர்க்கத்திற்கு எதிராக பல மகத்தான வெற்றிகளையும் அது ஏற்கனவே பெற்றுள்ளது… இத்தகைய ஒரு பின்னணியில் தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்தின் வால் என்ற பங்கோடு இந்த முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் பரிதாபகரமான ஒரு கருவி என்ற பங்கோடு பாட்டாளி வர்க்கம் திருப்தி அடைந்துவிட முடியுமா? இந்த முதலாளித்துவ வர்க்கத்தின் பின்னே நடைபோடவும், அந்த வர்க்கத்தை தனது தலைவராகவும் அது ஏற்றுக் கொள்ள முடியுமா? புரட்சிக்குத் தலைமை தாங்கிச் செல்லும் வர்க்கம் என்பதைத் தவிர வேறு ஏதாவதாகவும் அதனால் இருக்க முடியுமா?

நமது தாராளவாத முதலாளித்துவ முகாமில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.  பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான உணர் வைக் கண்டு நமது முதலாளித்துவ வர்க்கம் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது. புரட்சிக்குத் தலைமை தாங்கி முன்னால் நடைபோட்டுச் செல்வதற்குப் பதிலாக எதிர்ப்புரட்சியை அது ஆரத் தழுவ ஓடுகிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக அதனோடு கூட்டணி வைத்துக் கொள் கிறது. அதன் கட்சியான, கேடட் கட்சி, உலக முழுவதும் காணும் வகையில் ஸ்டோலிபின் உடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்கிறது. ஜாராட்சிக்குப் பயனளிக்கும் வகையில் மக்களின் புரட்சிக்கு எதிராக பட்ஜெட், ராணுவம் ஆகிய தீர்மானங்களுக்கு ஆதரவாக அது வாக்களிக் கிறது. ரஷ்யாவின் தாராளவாத முதலாளித்துவ வர்க்கம் என்பது ஓர் எதிர்ப்புரட்சி சக்திதான் என்பது இன்னமும் தெளிவாகவில்லையா? அதற்கு எதிராக இடைவிடாத போராட்டத்தை நடத்த வேண்டும் என்று புலப்படவில்லையா? பாட்டாளி வர்க்கம் சுதந்திரமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது முதலாளித் துவ வர்க்கம் தன் புரட்சித் தன்மையை இழந்து விடுகிறது என்று தோழர் காட்ஸ்கி கூறியது சரிதானே?

எனவே ரஷ்யாவின் தாராளவாத முதலாளித் துவ வர்க்கமானது புரட்சிக்கு எதிரான ஒரு சக்தியே ஆகும். புரட்சியின் உந்துசக்தியாக அதனால் இருக்க முடியாது; புரட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தகுதியும் அதற்கு இல்லை; அது புரட்சியின் தீவிரமான எதிரி என்ற வகையில் அதை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டியதே அவசியமாகிறது.

நமது புரட்சியின் ஒரே ஒரு தலைவராக, ஜாராட்சியின் அதிகார வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடுக்க, ரஷ்யாவின் புரட்சிகர சக்திகள் அனைத்திற்கும் தலைமை தாங்கும் விருப்பமுள்ள, அவ்வாறு தலைமை தாங்கும் திறன் கொண்டதாக இருப்பது பாட்டாளி வர்க்கம் மட்டுமே. நாட்டின் புரட்சிகர சக்திகளை தன்னைச் சுற்றி அணிதிரளச் செய்யும் திறன் கொண்ட, நமது புரட்சியை அதன் இறுதி வரை கொண்டு செல்வதற்கான தகுதி உடைய ஒரே வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் மட்டுமே இருக் கிறது. இந்தப் பாட்டாளி வர்க்கம் புரட்சியின் தலைமைப் பொறுப்பை வகிப்பதற்கான தயாரிப்பு கள் அனைத்தையும் செய்வதுதான் சமூக ஜன நாயகத்தின் முன்னுள்ள கடமை ஆகும்.

இதுதான் போல்ஷ்விக்குகளின் கண்ணோட்டத் தில் மையக் கருத்தாகும்.

அப்படியென்றால், புரட்சியை அதன் இறுதி வரை கொண்டு செல்வது என்ற கடமையை நிறைவேற்ற பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பகமான கூட்டாளியாக யார் இருப்பார்கள்? என்ற கேள்விக்கு போல்ஷ்விக்குகள் இவ்வாறுதான் பதில் அளித்தார்கள். பாட்டாளி வர்க்கத்தின் ஒரே ஒரு கூட்டாளியாக, எந்தவகையிலும் நம்ப கமான, வலிமை வாய்ந்த கூட்டாளியாக விளங்கு வது புரட்சிகர விவசாய வர்க்கம் மட்டுமே தவிர, நயவஞ்சக தாராளவாத முதலாளித்துவ வர்க்கம் அல்ல. நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தூக்கிப் பிடிக்கும் அனைத்துப் பழமை வாதத்திற்கும் எதிராக, பாட்டாளி வர்க்கத்தோடு இணைந்து நின்று, தோளோடு தோளாகப் போராடுகின்ற ஒரே வர்க்கமாக இருப்பது புரட்சிகர விவசாய வர்க்கம்தான்.

இதன்படி, முதலாளித்துவ கட்சிகள் மீதான நமது அணுகுமுறையானது இந்தக் கருது கோளின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். ஜாராட்சிக்கும் தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எதிராக, புரட்சி கர விவசாய வர்க்கத்தோடு இணைந்து நின்று, அதன் தலைமைப் பொறுப்பில் பாட்டாளி வர்க்கம் நிற்பதாக அது அமைய வேண்டும். எனவே கேடட்டுகளின் மேலாதிக்கத்தை (தலைமையை) எதிர்த்துப் போராடுவதன் அவசியமும், கேடட்டு களுடன் எவ்வித சமரசத்தையும் அனுமதிக்கலா காது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

போல்ஷ்விக்குகளின் கருத்து இவ்வாறாகத் தான் இருந்தது.

இந்த இருவிதமான நிலைபாட்டின் கட்டமைப்புக் குள் இருந்தபடிதான் லெனின், – மார்ட்டினோவ் ஆகியோரின் உரைகளும், மற்ற அனைத்து பேச்சாளர்களின் உரைகளும் அமைந்திருந்தன.

ரஷ்யப் புரட்சியின் மேலாதிக்கத்தை பாட்டாளி வர்க்கம் கைக்கொள்வதை மறுதலித்தும், கேடட்டு களுடன் ஓர் அணியாகச் செயல்படுவது என்ற கருத்தை ஆதரித்தும் மிகத் தீர்மானகரமான முறையில் மென்ஷ்விக்குகளின் கருத்தோட்டத் தின் ஆழ்ந்த தன்மையை தோழர் மார்ட்டினோவ் தனது உரையின் மூலம் அதன் ஆழத்திற்கு எடுத்துச் சென்றார்.

இதர பேச்சாளர்களில் பெரும்பாலானவர்கள் போல்ஷ்விக் நிலைபாட்டின் உயிரோட்டத் தோடு தங்களை பிணைத்துக் கொண்ட வகையில் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.

இவற்றில் மிகுந்த கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது தோழர் ரோசா லக்சம்பர்க்கின் உரை யாகும். ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளின் சார்பில் காங்கிரஸிற்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர், நமது கட்சிக்குள் நிலவும் கருத்து வேறு பாடுகள் குறித்த ஜெர்மன் தோழர்களின் கருத்து களை விளக்கிப் பேசினார். (இரு வேறு தருணங் களில் அவர் ஆற்றிய உரைகள் இங்கு ஒன்றாக இணைக்கப்படுகிறது)

புரட்சியின் தலைவர் என்ற வகையில் பாட்டாளி வர்க்கத்தின் பங்கு, எதிர்ப்புரட்சி சக்தி என்ற வகையில் தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்தின் பங்கு ஆகியவை போன்ற கேள்வி களில் போல்ஷ்விக்குகளுடனான தனது முழுமை யான உடன்பாட்டை வெளிப்படுத்திய தோழர் ரோசா லக்சம்பர்க், மென்ஷ்விக் தலைவர்களான ப்ளெக்கனோவ், ஆக்சல்ராட் போன்றோரை சந்தர்ப்பவாதிகள் என்று விமர்சித்ததோடு, அவர்களது நிலைபாட்டை பிரான்ஸ் நாட்டின் ஜாரேசிஸ்டுகளின் நிலைபாட்டிற்கு இணை யானது என்றும் குறிப்பிட்டார். மேலும், “போல்ஷ் விக்குகளும்கூட ஒரு சில குறைபாடுகளை, தொட்டால் சிணுங்கித் தனத்தை கொண்டவர் களாக இருக்கிறார்கள் என்பதோடு, ரொம்பவு மே கறாராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் கருதுகிறேன். என்றாலும் நான் அதை முழுமையாக உணர்ந்து அவர்களை மன்னித்து விடுகிறேன். ஏனென்றால் மென்ஷ்விக்குகளின் சந்தர்ப்பவாதம் போன்ற கழுவின மீனில் நழுவின மீனாக, அடர்த்தியற்ற நிலையைப் பார்க்கும் போது, ஒருவரால் கறாராக நடந்து கொள்ளா மல் இருக்க முடியாது. இதே மாதிரியான அதீத மான கறார்த் தன்மையை பிரான்சில் இருந்த கூடிஸ்டுகளிடையேயும் காண முடிந்தது.                                    * கூடிஸ்டுகள் – சூலே கூட்-இன் ஆதர வாளர்கள். பிரெஞ்சு சோஷலிஸ்டுகள் மத்தியில் நிலவிய இடதுசாரி மார்க்சியப் போக்கைப் பின்பற்றியவர்கள். கூடிஸ்டுகள் 1901ஆம் ஆண்டில் பிரெஞ்சு சோஷலிஸ்டு கட்சியைத் தோற்று வித்தனர். பிரெஞ்சு தொழிலாளர் இயக்கத்தில் நிலவிய சந்தர்ப்பவாதிகளை அவர்கள் எதிர்த்துப் போராடியதோடு, முதலாளித்துவ வாதிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் கொள்கையையும் முதலாளித்துவ அரசுகளில் சோஷலிஸ்டுகள் பங்கேற்பதையும் அவர்கள் எதிர்த்தனர். ஏகாதி பத்திய உலகப் போர் வெடித்தெழுந்தபோது, தாய் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற தேசியவாத நிலைபாட்டை கூட் எடுத்தது மட்டு மின்றி, முதலாளித்துவ அரசிலும் பங்கேற்றார். புரட்சிகர மார்க்சியத்திற்கு உண்மையாக இருந்த கூடிஸ்டுகளில் ஒரு பிரிவினர் பின்னர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

அந்தப் பிரிவின் தலைவரான கூட் தனது புகழ்பெற்ற தேர்தல் சுவரொட்டியில் இவ்வாறு அறிவித்திருந்தார்: “ ஒரே ஒரு முதலாளி கூட எனக்கு வாக்களிக்கத் துணிய வேண்டாம். ஏனென்றால், நாடாளுமன்றத்தில் அனைத்து முதலாளிகளுக்கும் எதிராக பாட்டாளிகளின் நலன்களை மட்டுமே நான் பாதுகாப்பேன்.”  அவர்கள் இத்தகையவர்களாக இருந்தபோதி லும், ஜெர்மன் சமூக-ஜனநாயக வாதிகளாகிய நாங்கள் மார்க்சிய துரோகிகளுக்கு எதிரான, ஜாரேசிஸ்டுகளுக்கு எதிரான அவர்களது போராட்டத்தில் கூடிஸ்டுகளின் பக்கத்தில்தான் எப்போதும் இருந்தோம். போல்ஷ்விக்குகளைப் பற்றியும் அப்படித்தான் சொல்ல வேண்டும். மென்ஷ்விக் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிரான அவர்களது போராட்டத்தை ஜெர்மன் சமூக- ஜனநாயகவாதிகளாகிய நாங்கள் ஆதரிக்கவே செய்வோம்… கிட்டத்தட்ட இதுதான் தோழர். ரோசா லக்சம்பர்க் சொன்னது.

ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சியின் மத்தியக் கமிட்டி காங்கிரஸூக்கு அனுப்பியிருந்த, ரோசா லக்சம்பர்க் காங்கிரஸ் பிரதிநிதிகளிடையே படித்த புகழ் பெற்ற கடிதம் இதைவிட மேலும் ஈர்ப்புக்குரியதாக இருந்தது. அவ்வாறு இருந்தது ஏனென்றால், தாராளவாதத்திற்கு எதிராக போராடுமாறு அது ஆலோசனை கூறியதோடு, ரஷ்யப் புரட்சியின் தலைவர் என்ற வகையில் ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் வகிக்கும் சிறப்பான பங்கினை அது அங்கீகரித்ததோடு, அதே அடிப்படையில் போல்ஷ்விசத்தின் அனைத்து முக்கிய கருத்தோட்டங்களையும் அது அங்கீ கரித்ததுமே அதற்குக் காரணமாக இருந்தது.

இவ்வாறுதான் ஐரோப்பாவின் மிக அதிக மான தாக்குதலுக்கு ஆளான, அவ்வகையில் அனுபவம் நிறைந்த பெரும் புரட்சிகர கட்சியாக உருவெடுத்த ஜெர்மன் சமூக-ஜனநாயக கட்சி யானது மிகவும் வெளிப்படையாகவும், தெளிவாக வும், மார்க்சியத்திற்கு துரோகம் செய்பவர்களுக்கு எதிராகவும், மென்ஷ்விக்குகளுக்கு எதிராகவும் அவர்கள் நடத்தி வந்த போராட்டமே அவர் களை உண்மையான மார்க்சிஸ்டுகளாக மாற்றி யுள்ளது என்ற வகையிலேயே போல்ஷ்விக்கு களை ஆதரித்தது.

நமது கவனத்தைப் பெறுகின்ற மற்றொன்று தலைமைக் குழுவில் போலந்து பிரதிநிதிகளின் சார்பாக தோழர் டிஸ்கா ஆற்றிய உரையின் பல பகுதிகள் ஆகும். தோழர் டிஸ்கா தனது உரையில், “இரண்டு குழுவினருமே மார்க்சிய கண்ணோட் டத்தில் உறுதிபட நிற்பதாகவே நமக்கு உறுதி யளித்தார்கள். போல்ஷ்விக்குகளா? மென்ஷ்விக் குகளா? உண்மையிலேயே இந்தக் கண்ணோட்டத் தில் யார் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை அனைவராலும் எளிதாக உணர முடியாது. ‘இடது’ பக்கத்தில் அமர்ந்திருந்த பல மென்ஷ் விக்குகள் குறுக்கிட்டு குரல் கொடுத்தார்கள்: “நாங்கள் மார்க்சிய கண்ணோட்டத்தின் பக்கம் தான் நிற்கிறோம்!”. டிஸ்கா அவர்களுக்கு பதிலளித்தார்: “இல்லை தோழர்களே! நீங்கள் அதன் பக்கத்தில் இல்லை. நீங்கள் அதன்மீது தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதில் நீங்கள் வெளிப்படுத்திய கையறு நிலை அனைத்தும், மாபெரும் மார்க்ஸின் மகத்தான வார்த்தைகளை உருப்போட்டுக் கற்றுக் கொண்டீர்களே தவிர, அவற்றைப் பொருத்திப் பார்ப்பதில் உங்களுக்கு இருந்த இயலாமை ஆகிய அனைத்துமே நீங்கள் மார்க்சிய கண்ணோட்டத்தோடு இருக்கவில்லை; மாறாக, அதை கைவிட்டுவிட்டீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது!”

மிகச் சரியான வார்த்தைகள்!

உண்மை. பின்வரும் விஷயத்தை மட்டுமே எடுத்துக் கொள்வோம். பாட்டாளி வர்க்கத்தை தனிப்பட்டதொரு அரசியல் சக்தியாக மாற்று வது எங்கும் எப்போதும் சமூக ஜனநாயகத்தின் கடமை என்று மென்ஷ்விக்குகள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்கள். அது உண் மையா? நிச்சயமான உண்மை! இவை மார்க்ஸின் மகத்தான வார்த்தைகள்; ஒவ்வொரு மார்க்சிஸ் டும் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய வார்த்தைகள். ஆனால் மென்ஷ்விக்குகள் அவற்றை எப்படி அமல்படுத்துகிறார்கள்? உண்மையில் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தை எப்போதும் சூழ்ந்துள்ள பெருவாரியான முதலாளித்துவ அம்சங்களிலிருந்து விடுவித்து, அதை ஒரு சுயேச்சையான, தன்னிறைவு பெற்ற ஒரு வர்க்கமாக மாற்றுவதற்கு உதவுகிறார்களா?  புரட்சிகர சக்திகளை பாட்டாளி வர்க்கத்தைச் சுற்றி அணிதிரட்டி, புரட்சியின் தலைமை என்ற பாத்திரத்திற்கு பாட்டாளி வர்க்கத்தை தயார் படுத்துகிறார்களா? இவை எதையுமே மென்ஷ் விக்குகள் செய்வதில்லை என்பதைத்தான் நடை முறை உண்மைகள் நமக்கு எடுத்துக்காட்டு கின்றன. அதற்கு மாறாக, தாராளவாத முதலாளித் துவ வர்க்கத்தோடு ஒப்பந்தங்களை போடும்படி தான் பாட்டாளி வர்க்கத்திற்கு மென்ஷ்விக்குகள் அடிக்கடி ஆலோசனை வழங்குகிறார்கள். அதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தை சுயேச்சையான தொரு வர்க்கமாக பிரிப்பதற்கு பதிலாக முதலாளித் துவ வர்க்கத்தோடு இணைக்கவே அவர்கள் உதவுகிறார்கள். புரட்சியின் தலைமைப் பாத் திரத்தை கைவிட்டு விடுமாறு, அந்தப் பாத் திரத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு விட்டுக் கொடுத்துவிடுமாறு, முதலாளித்துவ வர்க்கத்தைப் பின்பற்றுமாறுதான் மென்ஷ்விக்குகள் பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவுறுத்துகிறார்கள். இதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தை சுயேச்சையானதொரு அரசியல் சக்தியாக மாற்றுவது என்பதற்கு மாறாக முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு தொங்கு சதையாக மாற்றுவதற்கே அவர்கள் உதவுகிறார். கள்.… அதாவது சரியான மார்க்சிய கண்ணோட்டத் திலிருந்து அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதற்கு நேர் எதிரான வேலையைத்தான் மென்ஷ் விக்குகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆம். மார்க்சிய கண்ணோட்டத்தின் பக்கத்தில் அல்ல; மென்ஷ்விக்குகள் அதை கைவிட்டு விட்டார்கள் என்று தோழர் டிஸ்கா சொன்னது மிகவும் சரியான ஒன்றுதான்.

விவாதத்தின் முடிவில், மென்ஷ்விக்குகள் சார்பில் ஒன்றும், போல்ஷ்விக்குகள் சார்பில் ஒன்றும் என்ற வகையில் இரண்டு நகல் தீர்மானங் கள் காங்கிரஸின் முன் வைக்கப்பட்டன. இந்த இரண்டில், போல்ஷ்விக்குகள் முன்வைத்த நகல் தீர்மானம் பெருமளவிலான வாக்குகள் வித்தி யாசத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

அதன்பிறகு, இந்த நகல் தீர்மானத்திற்கு திருத்தங்கள் வந்தன. சுமார் 80 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. முக்கியமாக நகரில் இருந்த இரண்டு கருத்துகளின் மீது. ஒன்று புரட்சியின் தலைமைப் பொறுப்பில் பாட்டாளி வர்க்கம் பற்றியது. மற்றொன்று கேடட்டுகள் ஓர் எதிர்ப் புரட்சி சக்திதான் என்பதைப் பற்றியது.  இவை தான் விவாதத்தில் கவனத்தைக் கவரக்கூடிய பகுதியாக இருந்தன. ஏனென்றால் இங்கேதான் பல்வேறு குழுக்களின் உண்மையான நிறம் சிறப் பாக வெளிப்பட்டது. முக்கியமான முதல் திருத்தத்தை தோழர் மார்ட்டோவ் முன்மொழிந் தார். “புரட்சியின் தலைவராக பாட்டாளி வர்க்கம் இருக்கிறது” என்ற தொடருக்குப் பதிலாக “பாட்டாளி வர்க்கம் முன்னணிப்படையாக விளங்குகிறது” என்பதாக திருத்த வேண்டும் என்று அவர் கோரினார்.தனது திருத்தத்திற்கு ஆதரவாக அவர் கூறுகையில், “முன்னணிப் படை என்பது தெள்ளத் தெளிவாக இருக்கும்” என்று கூறினார். அவருக்கு தோழர் அலெக் சென்ஸ்கி பதிலளித்தார். அவர் கூறுகையில் துல்லியமான வார்த்தை என்பது இங்கே விஷய மல்ல; மாறாக இதில் முற்றிலும் ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துகள் பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார்.  ஏனென்றால் ‘முன்னணிப் படை’ என்பதும் ‘தலைவர்’ என்பதும் முற்றிலும் வேறுபட்ட கருத்தாக்கங்கள். முன்னணிப் படை என்பது (முன்னால் உள்ள படைப்பிரிவு) முன் வரிசையில் நின்று போராடுவதைக் குறிப்பதாக, எதிரியின் தாக்குதல் மிக வலிமையாக வந்து விழும் இடத்தில் இருப்பதாக, தன் சொந்த ரத்தத்தை சிந்துவதாக, ஆனால் அதே நேரத்தில் மற்றவர்களால் தலைமை தாங்கப்படுவதாக இருக்கும் நிலையை, இந்த இடத்தில் முதலாளித் துவ ஜனநாயகவாதிகளால் தலைமை தாங்கப்படு வதை, குறிப்பதாக உள்ளது. முன்னணிப்படை யானது எப்போதுமே பொதுவான ஒரு போராட்டத் தினை தலைமை தாங்கி நடத்துவதில்லை. முன்னணிப்படையானது எப்போதுமே தலைமை தாங்கப்படுவதுதான். அதற்கு மாறாக, ஒரு தலை வராக இருப்பது என்பது முன்னணி வரிசையில் நின்று போராடுவது மட்டுமின்றி, பொது வானதொரு போராட்டத்திற்குத் தலைமை தாங்குவதாக, அதன் இலக்கை நோக்கி அதற்கு வழிகாட்டுவதாகவும்  அமைகிறது. போல்ஷ்விக்கு களாகிய நாங்கள் முதலாளித்துவ ஜனநாயக வாதிகளால் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கப்படுவதை விரும்பவில்லை. மக்களின்  போராட்டம்  முழுவதையுமே பாட்டாளி வர்க் கம் தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும், ஜனநாயக குடியரசை நோக்கி அதற்கு வழி காட்டுவதாக இருக்க வேண்டும் என்றுமே நாங்கள் விரும்புகிறோம்.

இதன் விளைவாக, மார்ட்டோவ் கொண்டு வந்த திருத்தம் தோற்கடிக்கப்பட்டது.

இதே போன்ற வகையில் கொண்டு வரப்பட்ட இதர திருத்தங்களும் அவ்வாறே தோற்கடிக்கப் பட்டன.

கேடட்டுகள் பற்றிய கருத்துகளுக்கு எதிராக வேறு பல திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன. கேடட்டுகள் இன்னமும் புரட்சிக்கு எதிரான நிலைபாட்டை மேற்கொள்ளவில்லை என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்று மென்ஷ்விக்குகள் முன்வைத்தார்கள். ஆனால் இந்தக் கருத்துருவை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள மறுத்தது. இந்த வகையில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் அனைத்துமே மறுதலிக்கப்பட்டன. ஒரு சில விஷயங்களிலாவது குறைந்தபட்சம் ஏதாவ தொரு வகையிலாவது ஒப்பந்தங்களை கேடட்டு களுடன் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கருத்தையும் மென்ஷ்விக்குகள் முன்வைத் தார்கள். இந்த முன்வரைவையும் காங்கிரஸ் மறுதலித்ததோடு, இதே போன்ற வகையில் கொண்டு வரப்பட்ட இதர திருத்தங்களும் தோற்கடிக்கப்பட்டன.

இறுதியில் இந்தத் தீர்மானம் ஓட்டுமொத்த மாக வாக்களிப்பிற்கு முன்வைக்கப்பட்டது. போல்ஷ்விக்குகளின் தீர்மானத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. மற்றவர்கள் வாக்களிப்பில் பங்கேற்க வில்லை.

பெரும் வாக்குவித்தியாசத்தில் போல்ஷ்விக்கு கள் முன்வைத்த தீர்மானத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.

அந்த நேரத்திலிருந்தே போல்ஷ்விக்குகளின் கண்ணோட்டம் என்பது கட்சியின் கண்ணோட்ட மாக மாறியது. மேலும் இந்த வாக்குப்பதிவு இரண்டு  முக்கிய மான விளைவுகளை ஏற்படுத்தியது.

முதலாவதாக, காங்கிரஸில் அதுவரை நிலவி வந்த போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள், போலந்து பிரிவினர், லெட்டுகள், பண்டிஸ்டுகள் போன்ற செயற்கையான, மேலோட்டமான பிரிவுகளுக்கு அது முடிவு கட்டியது. மேலும் குறிக்கோள்களின் அடிப்படையிலான புதிய தொரு பிரிவினையை, அதாவது (அனைத்து போலந்து பகுதியினர், பெரும்பான்மையான லெட்டுகள் ஆகியோரை உள்ளடக்கிய) போல்ஷ் விக்குகள், (கிட்டத்தட்ட அனைத்து பண்டிஸ்டு களையும் உள்ளடக்கிய) மென்ஷ்விக்குகள் என்ற பிரிவினையை அது அறிமுகப்படுத்தியது.

இரண்டாவதாக, இந்த வாக்குப்பதிவானது தொழிலாளர் பிரதிநிதிகள் எவ்வாறு இந்தப் பிரிவுகளுக்கிடையே பங்கிடப்பட்டிருந்தார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டு வதாக இருந்தது. போல்ஷ்விக் குழுவில் முன்பு குறிப்பிட்டதைப் போல 38 அல்ல; 77 தொழி லாளர்கள் இருந்தனர். (38 உடன்  27 போலந்து பகுதியினர், 12 லெட்டுகள்) மென்ஷ்விக் குழுவில் முன்பிருந்த 30 தொழிலாளர்களுக்குப் பதிலாக 39 பேர் (30 பேருடன் 9 பண்டிஸ்டுகள்) இருந்தனர். மென்ஷ்விக் குழுவானது அறிவுஜீவிகளின் குழு என்பதாக மாறியது.

பாகு , 1907

பாகின்ஸ்கி ப்ரோலிடெரி எண் 1 & 2 இல்

ஜூன் 20 மற்றும் ஜூலை 10, 1907இல்

முதலில் வெளியிடப்பட்டது.

கோபா இவனோவிச் என்று கையெழுத் திட்டிருந்தார்.

தோழர் ஸ்டாலின் தேர்வு நூல்கள் – முன் வெளியீட்டுத் திட்டம்

கம்யூனிஸ்ட்
இயக்கத்தின் தலைவர் என்ற வகையிலும்,
ரஷ்யாவில் சோஷலிசத்தை மறு கட்டுமானம் செய்த
நிபுணர் என்ற வகையிலும், மார்க்சிய-லெனினிய தத்துவத்தை உலகமெங்கும்
முன்னெடுத்துச் சென்றவர் என்ற வகையிலும்,
தோழர் ஸ்டாலினது பங்கினை காய்தல்
உவத்தல் இன்றி மதிப்பீடு செய்வது
மிக முக்கியமான கடமையாகும்.
இதற்கு அவரது எழுத்துக்கள், உரைகள்
ஆகியவையே உரைகல்லாக அமையும்.
இந்த
நோக்கத்துடன் சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்)
கட்சியின் மத்தியக் குழுவின் தீர்மானத்திற்கு
இணங்க  அதன்
கீழ் செயல்பட்டு வந்த மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின் கழகம் தோழர்
ஸ்டாலினின் எழுத்துகள், உரைகள் ஆகியவற்றைத் திரட்டி
1946 காலப்பகுதியில்  ருஷ்ய
மொழியில் வெளியிட்ட தொகுப்பு நூல்களின்
ஆங்கிலப் பதிப்பு 1952-55 காலப் பகுதியில் வெளியிடப்பட்டது.

15 தொகுதிகள் கொண்ட இந்தத் தொகுப்பு  இப்போது அலைகள் வெளியீட்டகத்தினரால் முதன்முறையாகத் தமிழில் வெளியிடப்படுகிறது.

முன்பதிவு விவரம்

ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் – 15 தொகுதிகள் – பக்கங்கள் (சுமார்) 6700 – அளவு 1 /8 டெம்மி – விலை: ரூ. 6,000/- முன்பதிவுச் சலுகை விலை: ரூ. 3,500/- (அஞ்சலில் பெற, கூடுதலாக ரூ. 500/-) நூல் தேவைப்படுவோர் ரூ. 500/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும். மீதித் தொகையை ஒரே தவணையிலோ அல்லது மூன்று தவணைகளிலோ செலுத்தலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நூல்கள் கிடைக்கும். இத் தொகுப்பு நூல்கள் 2019 நவம்பர் புரட்சி தினத்தன்று வெளியிடப்படும். முன்பதிவு இறுதி நாள்: 31.08.2019. முன்பதிவு தொகையை  ALAIGAL VELIYEETAGAM என்ற பெயரில் கீழ்கண்ட முகவரிக்கு பணம், காசோலை, வரைவோலையாக (Cash/Cheque/Demand Draft) செலுத்தலாம்.

அலைகள் வெளியீட்டகம் 5 / 1 A, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,சென்னை- 600 089. தொடர்புக்கு:  98417 75112

கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை

(குரல்: ராம் பிரகாஷ்)

கோ.வீரய்யன்

தமிழகத்தில் விவசாயத்தில் இருந்த நிலப்பரப்பில் சுமார் 60 லட்சம் ஏக்கர்கள் ஜமீன்தார்களின் கையில் இருந்தது. 1,500 ஜமீன்தார்களிடம் சுமார் 59,87,107 ஏக்கர் நிலம் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி நம் நாட்டில் வேரூன்றுவதற்கு உதவி செய்த இந்த பேர்வழிகளுக்குத்தான் ஜமீன்தார்கள் என்று பெயர் சூட்டப்பட்டது. இவ்விதம் ஏற்படுத்தப்பட்ட ஜமீன்தாரி முறைக்குத்தான் சாசுவத நிலவரித் திட்டம் என்று பெயர். இந்தத்திட்டம் 1739இல் முதன் முதலில் வங்காளத்தில் அமுல்நடத்தப்பட்டு பிறகு சென்னைக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஜமீன்தார் முறை – சாசுவத நிலவரி முறை  பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் 1802இல் அமல் நடத்தப்பட்டது. அப்போது வரி வசூலில் இருபங்கை அரசு கருவூலத்தில் கட்டவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில்உள்ள ஜமீன்தார்கள் தம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் 74 லட்சம் ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அப்படி வசூலிப்பதில் 49 லட்சம் ரூபாய் ஜமீன்தார்கள் அரசு கருவூலத்தில் கட்டிவிட வேண்டும். இப்படி ஜமீன்தார்கள் அரசுக்குக் கட்டும் வரிக்கு ‘பேஷ்குஷ்’ என்று பெயர். 74 லட்சத்தை வசூலித்து 49 லட்சத்தை அரசுக்குக் கட்டிவிட்டு, மீதி 25 லட்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய ஜமீன்தார்கள், 1938ஆம் ஆண்டு விவரப்படி, விவசாயிகளிடம் வசூலித்தது 254 லட்சம் ரூபாயாகும். 25 லட்சம் ரூபாய் எடுத்துக் கொள்ள வேண்டிய ஜமீன்தார்கள் எடுத்துக் கொண்டதோ 205 லட்சம் ரூபாய். எட்டு மடங்கிற்கு மேல் அவர்கள் எடுத்துக் கொண்டு, விவசாயிகளைச் சுரண்டினார்கள். 

இவை போதாதென்று மேலும் கீழ்க்கண்டவாறெல்லாம் வரி வசூலித்தார்கள்.

  • சமுதாய நிலத்தில் வளரும் மரத்திற்கு வரி
  • நத்தம் ஜாரியில் வீடுகட்டிக் கொள்வதற்கு வரி
  • புறம்போக்கு நிலத்தில் உள்ள புல்லுக்கு வரி
  • கரம்பு நில உபயோக வரி
  • ஆடுமாடு மேய வரி
  • காட்டு மரத்தில் தழை வெட்டவும், விறகு வெட்டவும் வரி

இந்த வரி வசூலுக்கு அரசின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது. 

அரசுக்கு குறிப்பிட்ட சேவை செய்வதற்காக சிலருக்கு இனாமாகவோ பரிசாகவோ வழங்கப்பட்ட இனாம் ஒரு வகை. கோவில் மடங்களுக்கு வழங்கப்பட்ட இனாம் ஒரு வகை. இது தவிர தனிநபர்களுக்கு மான்யமாக வழங்கப்பட்ட இனாம். 

இப்படி தமிழகத்தில் 4500 இனாம்தார்கள் இருந்தனர். இதில் கடைசி பகுதி அவரவர்களே அனுபவித்து வந்தது. முதல் பகுதி இனாம் அநேகமாக இவர்களும் ஒரு குட்டி ஜமீன்தார்கள் போல்தான். விவசாய வேலைகளில் ஈடுபடாத இனாம்தார்கள் விவசாயிகளிடமிருந்து வசூலித்து விவசாயிகளை ஒட்டச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள்.

மடாதிபதிகளும், கோவில்களும் தங்கள் இனாம் நிலத்தை, பல கிராமங்களை, ஓராண்டு, ஐந்தாண்டு, பத்தாண்டு என்று குத்தகைக்கு விட்டுவிடுவது வழக்கம். அந்த மொத்த குத்தகைதாரர் பல ஆயிரம் ஏக்கர்களை மொத்த குத்தகைக்கு எடுத்து, ஒரு பகுதியைச் சொந்த பண்ணையாக வைத்துக் கொள்வார். பெரும் பகுதியை விவசாயிகளிடம் கொடுத்து சாகுபடி செய்யச் சொல்வார். இவர் பண்ணை சாகுபடிக்கு பலரை பண்ணை ஆட்களாக அமர்த்திக் கொண்டிருப்பார். அவர்களுக்கு ஐம்பது, நூறு என்று கடன் கொடுத்து வேலை வாங்குவார். அவர்களுக்குப் பெயர் பண்ணையாள் (சுகந்தை) என்பதாகும். அப்படி பணம் வாங்கும் குடும்பம் முழுவதும் அந்த மொத்த குத்தகைதாரரிடம் பண்ணை அடிமையாக உழைக்க வேண்டும். 

தினசரி ஆணுக்கு கூலி மூன்று சின்னபடி நெல், ஒரு அணா காசு. பெண்கள் வயல் வேலை செய்யும்போது மட்டும், தினசரி இரண்டு சின்னபடி நெல் மட்டுமே கொடுப்பர். ஆண்டு முழுவதும் மாட்டுத் தொழுவத்தில் வேலை செய்தால் மாதம் மூன்று மரக்கால் அல்லது நான்கு மரக்கால் நெல் கிடைக்கும். பண்ணையாளின் பிள்ளைகள் மாடுமேய்க்க வேண்டும். மொத்தக் குத்தகைதாரரிடம் நிலம் பெற்று சாகுபடி செய்பவர்களும் மொத்த குத்தகைதாரர் பண்ணை சாகுபடி நிலத்தை நடவு வேலை முடித்து விட்டுத்தான் அவர் தனது சொந்த சாகுபடியைச் செய்ய வேண்டும். அப்படி பண்ணை சாகுபடி வேலை செய்வதில் பெரும்பகுதி இனாம் வேலைதான்.

சாகுபடிதாரர் தான் சாகுபடி செய்யும் நிலத்தை அறுவடை செய்யும்போது, இனாம்தார் – மொத்த குத்தகை சாகுபடிதாரர்களின் ஏஜண்ட், குண்டர்கள் சகிதம் களத்திற்கு வந்துவிடுவார். கண்டுமுதல் ஆகும்  தானியத்தில் நூற்றுக்கு18 முதல் 20 சதவீதம் வரை அவர்களுக்கு வாரம் கொடுக்கப்படும். அதைத்தான் சாகுபடிதாரர் பெற்றுப் போக வேண்டும். 80 சதவீதம் வரை மொத்தக் குத்தகைதாரர் எடுத்துச்சென்று விடுவார்.

ரயத்துவாரி நிலப்பிரப்புக்கள், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்குச் சொந்தக்காரர்கள். பல கிராமங்கள்இவர்களுக்குச் சொந்தம். இவர்களும் கிராமத்திற்கு ஒரு பண்ணை, அதற்கு ஒரு பங்களா – நிர்வகிக்க தலையாரி, ஏஜண்ட், கணக்கர் என்று ஆட்கள், 8, 10 பண்ணையாட்கள் வைத்து பண்ணை வைத்துக் கொள்வார்கள். ஒரு பகுதியை சாகுபடிக்கும் கொடுப்பார்கள். சில கிராமங்களில்இரு பண்ணைகள் இருப்பதும் உண்டு. இவர்களிடம்  பண்ணையாட்களாக இருப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாகவே இருப்பவர்கள்.  

ஒரு பண்ணையில் இருப்பவர்கள், அடுத்த பண்ணைக்கு வேலைக்குப் போய்விடக் கூடாது. இந்தப் பண்ணையார் குடும்பமும் மொத்த குத்தகைதாரர் பண்ணையாட்களை நடத்துவதைவிட கடுமையாக நடத்துவார்கள். 

சாகுபடிதாரர்கள், பண்ணை நடவு, அறுவடையை முடித்து விட்டுத்தான் தங்கள் சாகுபடி நிலத்தில் நடவோஅறுவடையோ செய்ய வேண்டும். அப்போதுதான் பண்ணை ஏஜண்ட், தலையாரிகள், சாகுபடிதாரரின் அறுவடையைக் கண்காணிக்க வர முடியும். முன்னாலே இவர்கள் அறுவடை செய்தால் அடுத்த ஆண்டு அந்த நிலம் சாகுபடிக்கு இவரிடம் இருக்காது. இவரும் அந்த ஊரில் இருக்க முடியாது. 

இப்படி பண்ணையார் ஆட்கள் காவல் காக்க சாகுபடிதாரர் அறுவடை செய்து கண்டுமுதல் ஆகும் நெல் முழுவதும் பண்ணையாரின் பெரும் பட்டறைக்கு போய்விடும். கண்டுமுதல் எவ்வளவு கண்டது என்ற கணக்குகூட இவரிடம்தான் இருக்கும். பிறகுபண்ணையார் பட்டறையில் இருக்கும் அனைத்து சாகுபடிதார்களின் நெல்லும்எடுக்கப்பட்டு பண்ணைக்கு பாதுகாப்பான இடத்தில் கொண்டுபோய் சேர் கட்டியபிறகு,  சாகுபடிதாரர்களின் கணக்கு பார்க்கப்பட்டு 18 வாரம் அல்லது 20 வாரம் கணக்கிட்டு, விவசாய வேலை ஆரம்பம் முதல் விதை, தசுக்கூலி,  இடையில் குடும்பச்செலவுக்கான சாகுபடிதாரர் வாங்கியிருக்கும் கணக்குப் படிக்கப்பட்டு, மீதி இவ்வளவுதான் வாரத்தில் பாக்கி கொடுக்க வேண்டும் என்று சொல்லி, அதுவும் கொடுக்க மாட்டார்கள். வைக்கோல் போரில் நெல் இருக்கிறது, இன்னும் கூடுதலாகவே கூட இருக்கும். எனவே வைக்கோல் போர் அடித்து, வாரத்தில் பாக்கி எடுத்துக்கொண்டு, அதில் மீதமுள்ள நெல்லை பண்ணையில் கொடுத்துவிட வேண்டும் என்றும், மேலும் வைக்கோல் போரில் பாதியை கொண்டுவந்து பண்ணைக் கொல்லையில் போர்போட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்றும், தனது ஏஜண்ட் மூலம் பண்ணையார் சாகுபடிதாரருக்கு அறிவிப்பார். இதுதான் ரயத்துவாரி நிலப்பிரபுக்களிடம் இருந்த கிராம நிலை.

சொந்தநிலம் இல்லாத கூலி உழைப்பு மூலம்தான் உயிர்வாழ முடியும் என்றிருந்த ஏழைகள் ஆண்டாண்டுகாலமாக குடும்பம் முழுவதுமாக உழைத்தார்கள், உழைத்தும் வருகிறார்கள். இவர்கள் பண்ணையாட்களாக, ஆண்களும் பெண்களும் அவர்கள் பிள்ளைகளும் – இவர்களின் முன்னோர்கள் வாங்கிய கடனுக்கு புரோநோட் எழுதிக் கொடுத்துவிட்டு ‘சுகந்தை’ என்ற பெயருடன் வேலை செய்து வந்தார்கள். ஒரு மிராசுதாரிடம் வேலை செய்யும் பண்ணையாள் அந்த மிராசுதாரின் இடத்தில்தான் குடிசை போட்டு குடியிருக்க வேண்டும். வேறொரு இடத்திற்குப் போகக் கூடாது.அப்படிப் போய்விட்டால் அந்த குடியிருக்கும் குடிசை இடித்துத் தரைமட்டமாக்கப்படும்.

உடம்பு சரியில்லை என்று தவறி ஒருநாள் அவன் வேலைக்கு வராமல் இருந்து விட்டால், அவன் உடனே அழைத்து வரப்பட்டு சாட்டையால் அடிக்கப்படுவான். அதோடு அவன் செய்தஇந்த ‘மா பாதக’ செயலுக்காக, உடல்நிலை சரியில்லை என்று வேலைக்கு வராமல்இருந்ததற்காக, மாட்டுச் சாணத்தை தண்ணீரில் கரைத்து அவனுக்கு கொடுக்கப்படும். அதை அவன் குடிக்க வேண்டும். இத்தகைய கொடுந்தண்டனைகளைத் தாங்கிக் கொண்டு, அவன் வேலை செய்ய வேண்டும்.

கோழிகூப்பிடும் நேரத்திற்கு ஆண்டை வீட்டுக்கு வந்து, இரவு கொசுக்கடி ஆரம்பித்தபிறகுதான் அவன் வீடு திரும்ப வேண்டும். இந்த வேலைக்கு அவனுக்கு தினக்கூலி 3 சின்னபடி நெல், ஒருஅணா காசு. மதியம் சோறு போட்டால் அதற்காகக் கூலியில் ஒரு சின்னபடி நெல் பிடிக்கப்படும். அவன் சோறு சாப்பிட்டால், அதை அவன் இலைபோட்டு சாப்பிடக்கூடாது. பித்தளைப் பாத்திரத்தில் சாப்பிடக்கூடாது. பழையகால சிறைக் கைதிகளுக்கு தருவதுபோல், மண்ணாலான மல்லைசட்டியில்தான் சாப்பிடவேண்டும். அதுதான் பண்ணையாள் சாப்பிடும் பாத்திரம். அது இல்லாவிட்டால், இரும்பு மரக்காலில்அவனுக்குச் சோறு போடப்படும். அவன் மனைவியும், பிள்ளைகளும் மிராசுதார் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். மாடு மேய்க்கவேண்டும். 

பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாது, படிக்க வைக்கக் கூடாது.

பண்ணையாள் வீட்டில் எரிக்கும் அடுப்புச்சாம்பலும் உரமாக சேர்த்து வைக்கப்பட்டு மிராசுதார் நிலத்திற்கு எந்த விலையும் இல்லாமல் கொடுக்க வேண்டும். பண்ணையாளின்வீட்டுக்கூரையை மூடிவைக்க கொல்லையில்பரங்கி, பூசணி செடிபோட்டு கூரை மேல் விட்டு ஆறு மாதம் அந்த நிழலில் அவன் வாழ்வான். அதுதான் அவனுக்குச் சொந்தம். அதில் காய்க்கும் காய்கள் முழுவதையும் மிராசுதார் வீட்டுக்குக் கொடுத்துவிட வேண்டும். வயலில் மேயும் நண்டும் நத்தையும்தான் அவன் காய்கறிகள். தனது பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ திருமணம் செய்ய வேண்டும் என்றால், மிராசுதார் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. இந்த ஆண்டு திருமணம் வேண்டாம் என்று மிராசுதார் கூறிவிட்டால்அதைத் தாண்டி திருமணம் செய்யமுடியாது, செய்யக் கூடாது.

பண்ணை அடிமைகளாக இருந்தவர்களில் பெரும் பகுதியினர் ஜாதியில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்ததால், ஜாதியக் கொடுமை கொடூரமாக இருந்தது. மேல்ஜாதிக்காரர்கள் தெருவில் மிராசுதார்கள் வீட்டிற்கேயானாலும் வண்டி ஓட்டிச்சென்றால், தெருவில் வரும்போது, கீழே இறங்கி வண்டிக்கு முன்னால்  நடந்தேதான் வண்டியை இழுத்துச் செல்ல வேண்டும். அக்ரகாரத்தின் பக்கம் அடிகூட வைக்கமுடியாது. இடுப்பில் வேட்டி கட்டக் கூடாது. கோவணத்துடன்தான் இருக்கவேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை தீபாவளியன்று ஆண்டை எடுத்துக் கொடுக்கும் ஒரு வேட்டியுடன்தான் அடுத்த ஆண்டு வரை இருக்க வேண்டும். அதையும் தலையில்தான் கட்டிக் கொள்ள வேண்டும். மேலே சட்டை போட்டுக் கொள்ளக்கூடாது. அதேபோல் பண்ணையான் மனைவியும் இரவிக்கை போடக் கூடாது. சேலையை முழங்கால்அளவிற்குத்தான் கட்ட வேண்டும். முழங்காலுக்கும் கீழே வரும்படி சேலை கட்டக்கூடாது. அந்தப் பெண் நல்ல உடற்கட்டுடன் இருந்துவிட்டால் போதும். 

மிராசுதார்களின் இச்சைக்கும் இணங்கியாக வேண்டும். தனது கணவனை கட்டி வைத்து அடித்தாலும் மனைவியோ, பிள்ளைகளோ எதிரில் நின்றாலும், ‘அடிக்கிறார்களே’ என்று வாய்விட்டு அழக்கூடாது. வாயிருந்தும் ஊமைகளாய் இருக்க வேண்டும். அதேபோல் பண்ணையாள் மனைவியையோ, பிள்ளைகளையோ அடித்தாலும் அவன் கண் இருந்தும் குருடனாகவே இருக்கவேண்டும். ஆண்டையோ அவர் உத்தரவின் பேரில் அவர் ஏஜண்டோ அடிக்கும்போதுகூட வலி தாங்காது ஐயோ என்ற கத்தக் கூடாது. ஐயா என்றுதான் கத்த வேண்டும். இவைகள் கதைகளல்ல. அன்று சமூக நியதியாக இருந்தவை இவைதான்.

இந்தக் கொடுமைகள் தாளாது தங்களின் குடும்பங்களையும் விட்டுவிட்டு பர்மாவிற்கும், மலேயாவிற்கும், இலங்கைக்கும் ஓடிய பண்ணை அடிமைகளும் குத்தகை அடிமைகளும் ஏராளம். இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் கொசுக்களின் கொடுமையும், மலேயாவின் ரப்பர் தோட்டத்தில் அட்டைகளின் கடியும், தமிழகத்து நிலப்பிரபுக்களின் கொடுமையைவிட எவ்வளவோ மேல் என்று ஓடியவர்கள் ஏராளம்உண்டு.

இப்படித்தான் ஜமீன்தார்கள் – இனாம்தார்கள்-மொத்த குத்தகைதாரர்கள் – நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன், பாதுகாப்புடன் கோலோச்சிய உறவுமுறைகளை பிரிட்டிஷ் அரசு சென்னை மாகாணத்தில், தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருந்தது. இது 200 ஆண்டுகால வெள்ளையர்களின் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சமூக அஸ்திவாரமாகும்.

உலகின் மிகப் பெரும் வல்லரசுகள், தங்களிடையே உள்ள வியாபாரப் போட்டியால் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தைப் போக்கிக்கொள்ளவும், சுருங்கிவரும் தங்களின் சந்தைகளை விஸ்தரித்துக் கொள்ளவுமான போட்டியின் காரணமாக 1939-இல் இரண்டாவது உலக யுத்தம் துவங்கியது. யுத்தத்தை துவக்கிய ஜெர்மன்தேசத்து சர்வாதிகாரி ஹிட்லர், உலகில் உழைப்பாளி மக்களுக்கு வழிகாட்டியாக இருந்த சோசலிச நாடான சோவியத் யூனியனை அடிபணியவைக்கவும், உலகை தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரவும் உலகம் முழுவதிலும் ஒரு பாசிச ஆட்சியைக் கொண்டு வரவும், இத்தாலியையும் ஜப்பானையும் தனக்குத் துணையாகக் கொண்டு உலகப் போரை உச்சகட்டத்தில் நடத்திக் கொண்டிருந்தான். உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளி மக்கள் பாசிசத்தையும், ஹிட்லரையும் தோற்கடிக்க அணிதிரண்டு நின்றார்கள்.

அந்த உலக யுத்தத்தில், நமது நாட்டை ஆண்டபிரிட்டிஷார் ஒரு பங்காளியாக இருந்தார்கள். நாட்டின் சகல உற்பத்தி ஏற்பாடுகளும் யுத்த தேவைக்கு திருப்பிவிடப்பட்டன. பெட்ரோலும், டீசலும், துணியும், உணவும் யுத்த முகாமுக்கு என்று திருப்பி விடப்பட்ட நேரம். கட்டத்துணியும், சாப்பிட உணவும், விளக்கு எரிக்க எண்ணெயும் இன்றி கிராமத்து மக்கள் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாகி நின்றார்கள். ராணுவத்திற்கு ஆள் என்றும், யுத்தத்திற்கு வரி என்றும், ஆளும்அரசு கிராம மக்களை கிட்டி போட்டு நெரித்துக் கொண்டிருந்தது. ஜமீன்தார்களும், இனாம்தார்களும், மிராசுதார்களும் கிராமத்து மக்களை யுத்தநேரத்தில் நெருக்கி அவர்களின் தானியம் முழுவதையும் அள்ளிச் சென்று யுத்தகால விலை உயர்வால் பெரும் கொள்ளை அடித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்திய சுதந்திர இயக்கத்திலும், முற்போக்கு இயக்கங்களிலும் முன்னணியில் நின்ற வங்க மாநிலத்தில் விவசாயிகள் இயக்கம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியத்தில் மூன்றில் இரண்டு பங்கு வேண்டும் (தேபாகா) என்று போராடி, வெற்றி கண்ட வங்கத்து கிராம மக்களை உணவுப் பஞ்சம் கவ்வியதால் உண்ண உணவு இன்றி பல லட்சம் மக்கள் செத்து மடிந்தார்கள்.

தமிழ்நாட்டிலும் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடியது. சிவகாசிக்கு அருகில் உரத்திற்காக வயலில் போட்ட கடலைப் பிண்ணாக்கை பசி தாங்காது எடுத்து தின்ற மக்கள் பலர் காலரா நோய்க்கு பலியாகி மாண்டனர்.

இந்த சமுதாய அரசியல் சூழ்நிலையில்தான், இப்படி பெரும் வேலைகள் நிறைந்திருந்த சூழ்நிலையில்தான், கிராமத்து மக்களை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்ட, தமிழக விவசாயிகள் இயக்கம் முன்னுக்கு வர முற்பட்டது.

(தோழர் கோ.வீரய்யன் எழுதிய “விவசாயிகள் இயக்கத்தின் வீர வரலாறு” நூலில் உள்ள சிறு பகுதி)

இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் எழுதிய கடிதம் …

பகத் சிங்

தமிழில்: ராமன் முள்ளிப்பள்ளம்

(தூக்கிலிடப்படுவதற்கு 50 நாட்களுக்கு முன் பகத்சிங் சிங் எழுதிய இந்த ஆவணத்தை இந்திய அரசாங்கம், 1936இல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் (Martys’ Memorial and Freedom Struggle Research Centre at Lucknow) அதன் நகல் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. கீழே அதன் சுருக்கம் பிரசுரிக்கப்படுகிறது. – ஆசிரியர் குழு)

02.02.1931

அன்பார்ந்த தோழர்களே,
நமது இயக்கம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.  ஒரு வருட கால தீவிர போராட்டத்தின் பின் சட்டத் திருத்தங்கள் குறித்து சில அறுதியான முன் மொழிகள் வட்ட மேஜை மா நாட்டால் தயாரிக்கப்பட்டுள்ளது; இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் வரவேற்கப்பட்டுள்ளனர் * தற்போதைய சூழலில் தங்கள் இயக்கங்களைத் துறந்துவிட இதை அவர்கள் விரும்புகின்றனர், அவர்கள் இதை ஏற்கின்றனரா அல்லது எதிர்க்கின்றனரா என்பது நமக்கு தேவையற்ற ஒன்று. தற்போதைய இயக்கம் ஒரு வகையிலான சமரசத்தில்தான் முடியும். சமரசம் விரைவாகவோ, தாமதமாகவோ அமலாகும். சமரசம் என்பது பொதுவாக நாம் நினைக்கும் வகையில் வெட்கப்படத்தக்கதோ, கண்டிக்கத்தக்கதோ அல்ல. அரசியல் தந்திரங்களில் இது தவிர்க்கப்பட முடியாத ஒன்று.

கொடுங்கோலன்களை எதிர்க்கும் எந்த ஒரு தேசமும் துவக்கத்தில் தோல்வியை தழுவும்; தனது போராட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் சமரசங்கள் மூலமாக அரைச் சீர்திருத்தங்களை வென்றெடுக்கும. இறுதிக்கட்டத்தில் தேசத்தின் அனைத்து சக்திகளையும். சாதனங்களையும் முழுமையாக திரட்டிய பின்னரே அது கடைசித் தாக்குதலைத் தொடுத்து ஆட்சியாளர்களின் அரசாங்கத்தை தவிடு பொடியாக்க இயலும். அப்போதும் கூட சில தோல்விகள் சமரசத்தை நாடும்படி செய்யும்.
ரஷ்யாவில் நடந்தவற்றை பாருங்கள். 1905 ல் ரஷ்யாவில் ஒரு புரட்சிகர இயக்கம் வெடித்தது. எல்லா தலைவர்களும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர், லெனின் தான் மறைந்திருந்த வெளி நாட்டிலிருந்து திரும்பியிருந்தார். அவரே போராட்டத்தை வழி நடத்திக்கொண்டிருந்தார்.

***
அங்கே டூமா ( பாராளுமன்றம்) அறிமுகப்படுத்தப்பட்டது. அதே லெனின் டூமாவில் பங்கு வகிப்பதை ஆதரித்தார். இது 1907 நடந்தது. 1906 ல் உரிமைகள் கத்திரிக்கப்பட்ட டூமாவில் பங்கு கொள்வதை எதிர்த்தார். பிற்போக்கு தலை தூக்கியது ; லெனின் சோசலிச கருத்துகளை விவாதிக்க டூமாவின் அரங்கத்தை விரும்பினார்.
1917 புரட்சிக்குப் பின் போல்ஷ்விக்குகள் ப்ரெஸ்ட் லிடொவ்ஸ்க் உடன் பாட்டை கையெழுத்திட உந்தப்பட்டபோது லெனினை தவிர்த்து அனைவரும் அதை எதிர்த்தனர். ஆனால் லெனின் கூறினார், ‘’ அமைதி, மீண்டும் அமைதி எத்தகைய இழப்பு ஏற்படினும் ; ஜெர்மன் போர் பிரபுக்களுக்கு ரஷ்யாவின் பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தாலும் கூட அமைதி’’ போல்ஷ்விக் எதிர்ப்பாளர்கள் லெனினது இந்த உடன்பாட்டை கண்டித்தபோது லெனின் கூறினார் போல்ஷ்விக்குகள் ஜெர்மானிய தாக்குதலை எதிர் கொள்ளமுடியாது போல்ஷ்விக் அரசாங்கத்தை முழுமையாக அழித்து கொள்வதை காட்டிலும் இந்த உடன்பாடே மேலானது என்றார்.

நான் சுட்டிக்காட்ட விரும்பியது என்னவென்றால் சமரசம் என்பது போராட்டம் வளர்ச்சியடைகையில் அவ்வப்போது பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு ஆயுதம். ஆனால் நம் முன் எப்போதும் இருக்க வேண்டியது இயக்கம். எந்த குறிக்கோளை சாதிக்கவேண்டி நாம் போராடுகின்றோமோ அது பற்றிய தெளிவு நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். இது நாம் இயக்கத்தின் தோல்விகளையும் வெற்றிகளையும் ஆய்வு செய்ய உதவுகிறது; நாம் எதிர்கால திட்டங்களை எளிதாக வகுக்க உதவுகிறது. திலக் அவர்களின் கொள்கை இலட்சியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது அதாவது அவர் தந்திரம் மிகச் சிறந்தது. உங்கள் எதிரியிடமிருந்து 16 ரூபாய் பெறுவதற்கு நீங்கள் போராடுகின்றீர்கள், உங்களுக்கு கிடைத்தது  ஒரு ரூபாய் மட்டுமே, அதை பெற்றுக்கொள்ளுங்கள், பாக்கிப் பணத்திற்காக போராடுங்கள். நாம் மிதவாதிகளிடம் காண்பது அவர்கள் கருத்து. அவர்கள் ஒரு ரூபாய் பெறுவதற்காக போராட்டத்தை துவக்குகின்றனர் ஆனால் அதையும் அவர்களால் சாதித்து பெற  முடியவில்லை. புரட்சியாளர்கள்  தாங்கள் முழுப் புரட்சிக்காக போராடுகின்றனர் என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
அவர்கள் கைகளில் அதிகாரம் அதன் மீது முழு கட்டுப்பாடு.. சமரசத்தின் பால் ஐயம் எழுவதற்கு காரணம் பிற்போக்குவாதிகள் சமரசத்திற்கு பிறகு புரட்சிகர சக்திகளை களைத்து விடுகின்றனர். ஆனால் திறமை மிக்க வீரம் மிக்க புரட்சியாளர்கள் இயக்கத்தை இத்தகைய இடர்களிலிருந்து காக்க முடியும். இத்தகைய தருணங்களில் நாம் மிகுந்த எச்சரிகையுடன் இருக்க வேண்டும், உண்மையான பிரச்னைகளின் குழப்பங்களை தவிர்க்க வேண்டும், குறிப்பாக குறிக்கோளைப் பற்றிய குழப்பம்.. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர்கள் உண்மையான போராட்டத்திற்கு துரோகம் இழைத்து ஏகாதிபத்திய மோசடிப் பேர்வழிகளாக தரம் தாழ்ந்து போயினர். என் கருத்து முலாம் பூசப்பட்ட ஏகாதிபத்திய தொழிலாளர் தலைவர்களை காட்டிலும் கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள் எவ்வளவோ மேல். அணுகுமுறைத் தந்திரம் பற்றி நாம் லெனின் அவர்களது வாழ்வுக் காலக் கருத்துகளை படிக்க வேண்டும். சமரசம் பற்றிய அவரது ஆணித்தரமான கருத்தை அவரது ‘’ இடதுசாரி கம்யூனிஸம்’’ என்ற கட்டுரையில் பார்க்கலாம்.

தற்போதைய இயக்கம் அதாவது போராட்டம் நிச்சயமாக ஏதேனும் வகையான சமரசத்தில் அல்லது தோல்வியில் முடியும் என்பதையே நான் கூறினேன்.
இதை நான் ஏன் கூறினேன் என்றால் என் கருத்துப்படி உண்மையான புரட்சியாளர்கள் இந்த முகாமினுள் வரவேற்கப்படவில்லை. இந்தப் போராட்டமானது நடுத்தர வர்க்கத்தினர், கடைக்காரர்கள் மற்றும் சில முதலாளிகளை சார்ந்து இருக்கிறது. இந்த இரு வர்க்கத்தினரும் குறிப்பாக கடைசியாக கூறப்பட்ட வர்க்கத்தினர் தங்கள் உடமைகளையும், சொத்துகளையும் இழக்கும் வகையான எந்த போராட்டத்தையும் ஏற்க எப்போது முன் வரமாட்டார்கள். உண்மையான புரட்சிகர சேனை கிராமங்களிலும், தொழிற்சாலைகளிலும் உள்ளது; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். ஆனால் நமது முதலாளித்துவ தலைவர்கள் இவர்களை கையாளும் துணிவை பெற்றவர்கள் அல்ல. தூங்கும் சிங்கத்தை அதன் உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டால் அது பிறகு நம் தலைவர்கள் அவர்களது குறிக்கோளை அடைந்த பின் அடக்கமுடியாததாக ஆகிவிடும். 1920 ல் அகமதாபாத் தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தனது முதல் அனுபவத்திற்கு பிறகு மகாத்மா காந்தி இவ்வாறு அறிவித்தார் ‘’ நாம் தொழிலாளர்களை பயன்படுத்த முடியாது, ஆலைத் தொழிலாளர்களை அரசியலுக்கு பயன்படுத்துவது ஆபத்தானது’’ ( தி டைம்ஸ் மே 1921) அப்போதிலிருந்து அவர்களை அவர் எப்போதும் அணுகத் துணியவில்லை. விவசாயிகளைப் பார்ப்போம். பிரம்மாண்டமான விவசாயி வர்க்கம் அந்நிய ஆதிக்கத்தை மட்டுமல்லாது நிலப்பிரபுத்துவ கட்டுகளையும் தகர்க்க எழுச்சி கொண்டதை கண்டு இவர்கள் அஞ்சியது 1922 பர்தோலி தீர்மானங்களில் அது தெளிவாகத் தெரியும்.

நமது தலைவர்கள் விவசாயிகளுக்கு அடிபணிவதைக்காட்டிலும் ஆங்கிலேயருக்கு சரண் அடைவதை காண முடியும். பண்டிதர் ஜவஹர்லாலை விட்டுவிடுங்கள். தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஸ்தாபனப்படுத்த முயற்சித்த ஏதேனும் ஒரு தலைவரை நீங்கள் சுட்டிக்காட்ட முடியுமா ? இல்லை அத்தகைய அபாயத்தை அவர்கள் எப்போதும் ஏற்கமாட்டார்கள். இங்கேதான் அவர்கள் பலவீனம். ஆகவேதான் நான் கூறுகிறேன் அவர்கள் முழுப்புரட்சியை திட்டமிடவில்லை. பொருளாதார நிர்வாக வற்புறுத்தல்கள் மூலம் மேலும் சில சீர் திருத்தங்களை, சலுகைகளை இந்திய முதலாளிகளுக்கு பெற்றுத்தருவதே அவர்களின் நம்பிக்கை.
புரட்சி ஓங்குக என முழக்கமிடும் இளம் ஊழியர்கள் முறையாக அமைப்புகளில் திரட்டப்பட்டவர்கள் அல்ல, தாங்களாக இயக்கத்தை முன்னெடுத்து செல்லும் வலுப் பெற்றவர்கள் அல்ல. உண்மை என்னவெனில் பண்டித மோதிலால் நேருவை தவிர்த்து தங்கள் தோள்களில் பொறுப்பை ஏற்கும் துணிவு நமது பெரும் தலைவர்களில் யாருக்கும் இல்லை.. ஆகவேதான் அவ்வப்போது எந்த நிபந்தனையும் இன்றி மகாத்மாவிடம் சரணடைகிறார்கள். வேற்று கருத்து இருந்தும் கூட அவரை எப்போதும் எதிர்ப்பதில்லை, ஏனெனில் மகாத்மாவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் நான் புரட்சி வேண்டும் இளம் ஊழியர்களை எச்சரிக்கிறேன், மோசமான காலம் வரவிருக்கிறது. நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் இல்லையெனில் குழம்பிப்போவீர்கள் அல்லது மனம் ஒடிந்து போவீர்கள். மாபெரும் காந்தி அவர்களின் இரு போராட்டங்களின் அனுபவத்திற்கு பிறகு தற்போதைய சூழ் நிலை குறித்தும் எதிர்கால திட்டம் குறித்தும் ஒரு தெளிவான கருத்து வகுப்பதில் மேலான நிலையில் உள்ளோம்.
மிக மிக எளிதான முறையில் கருத்தை முன் வைக்க என்னை அனுமதியுங்கள். ’புரட்சி ஓங்குக’ (இன்குலாப் ஜிந்தாபாத்) என நீங்கள் முழக்கம் எழுப்புகின்றீர்கள். நீங்கள் உண்மையிலேயே புரட்சியை நாடுகின்றீர்கள் என நினைத்துக்கொள்கிறேன். சட்டசபை குண்டு வழக்கில் எங்கள் அறிக்கையில் குறிப்பிட்டபடி புரட்சி என்ற பதத்தின் எங்கள் விளக்கம் தற்போதைய சமூக அமைப்பை முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு அதன் இடத்தில் ஒரு சோசலிச அமைப்பை நிர்மாணிப்பதே. இதற்காக நமது உடனடி குறிக்கோள் அதிகாரத்தை அடைவதே.
உண்மை என்னவெனில் அரசும் அரசாங்க இயந்திரமும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் உள்ள ஒரு உபகரணமே அதன் வர்க்க நலனை பாதுகாக்கவும் மேம்படுத்தவும். நாம் அந்த அதிகாரத்தை பறித்து நமது இலட்சியத்திற்காக பயன்படுத்த வேண்டும் அதாவது மார்க்சிய அடிப்படையில் சமூகப் புனர் கட்டுமானம். இதற்காக அரசாங்க இயந்திரத்தை அடக்குவதற்கு நாம் போரிட்டுக்கொண்டிருக்கிறோம். வழி நெடுக நமது சமூக திட்டத்திற்கான சாதக சூழ் நிலையை உருவாக்கும் பொருட்டு மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டும். இந்த போராட்டங்களில் அவர்களுக்கு பெரிதும் பயிற்சியும் கல்வியும் புகட்ட முடியும்.
இந்த தெளிவிற்கு முன் அதாவது நமது உடனடி மற்றும் இறுதி குறிக்கோள் தெளிவான பின் தற்போதைய சூழ் நிலை பற்றிய ஆய்வை தொடங்குவோம். சூழ் நிலையை ஆய்வு செய்கையில் நாம் எப்போதும் மிகுந்த வெளிப்படையுடனும் கடமையுடனும் செயல்பட வேண்டும்.
***
எந்த ஒரு புரட்சிகர கட்சிக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட திட்டம் அவசியமாகிறது. புரட்சி என்றால் செயல்பாடு என்பது உங்களுக்கு தெரியும். அதன் பொருள் விழிப்புணர்வுடன், ஸ்தாபன ரீதியாக, ஒழுங்குமுறையுடன் கொண்டுவரப்படும் மாற்றம்; திடீரென, ஏற்படும் ஸ்தாபனமற்ற உணர்ச்சிவசப்பட்ட கலக நொறுங்குதல் அல்ல புரட்சி. ஒரு திட்டத்தை வகுக்க பின் வருபவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
1.இலட்சியம்.
2.எங்கிருந்து தொடங்குவது; தற்போதைய சூழ் நிலை என்ன
3.செயல்முறை அதாவது செயல்முறைகள், செயல் வடிவம்.
இம்மூன்று குறித்து தெளிவான கருத்து இல்லாமல் திட்டம் குறித்து விவாதிக்க முடியாது.
தற்போதைய சூழ் நிலை குறித்து ஓரளவு விவாதித்துள்ளோம். இலட்சியம் குறித்தும் ஓரளவு பேசியுள்ளோம். நாம் விரும்புவது தவிர்க்கப்படமுடியாத அரசியல் புரட்சிக்கு முன்னோடியான சோசலிச புரட்சி. இதுவே நாம் வேண்டுவது. அரசியல் புரட்சி என்றால் அரசு அல்லது அதிகாரம் பிரிட்டிஷார் கைகளிலிருந்து இந்தியர்கள் கைகளுக்கு வருவதல்ல மாறாக யார் நம்முடன் இறுதி இலட்சியம் ஈடேறும் வரை உள்ளனரோ அந்த இந்தியர்களின் கைகளுக்கு குறிப்பாக புரட்சிகர கட்சிக்கு ஏகோபித்த மக்கள் ஆதரவுடன் அதிகாரம் வருவதுதான் புரட்சி. அதன் பிறகு தீவிர முயற்சியுடன் ஒட்டு மொத்த சமுதாயத்தை சோசலிச அடிப்படையில் புணர் நிர்மாணம் செய்யத் தொடங்க வேண்டும்.
இத்தகைய புரட்சி உங்களது இல்லையெனில் தயவு கூர்ந்து புரட்சி ஓங்குக என முழங்குவதை நிறுத்துங்கள். புரட்சி என்ற சொல் மிக உன்னதமானது அதை மட்டமானதாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்துவது நம்மால் ஆகாது. ஆனால் நீங்கள் தேசிய புரட்சி என்ற எண்ணம் கொண்டிருந்தால் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் வகையில் இந்திய குடியரசை நிர்மாணிப்பது உங்கள் இலட்சியம் என்றால் இத்தகைய புரட்சியை கொண்டு வர எந்த சக்திகளை நீங்கள் சார்ந்து இருப்பீர்கள் என்பதை தயவு செய்து தெரியப்படுத்துங்கள். தேசியப் புரட்சியோ அல்லது சோசலிசப் புரட்சியோ எந்த ஒரு புரட்சியை கொண்டு வரவும் நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய சக்திகள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். இந்த இரண்டு சக்திகளையும் அமைப்பு ரீதியாக திரட்ட காங்கிரஸிற்கு துணிவு கிடையாது. இதை நீங்கள் அவர்கள் இயக்கத்தில் பார்த்திருப்பீர்கள். இந்த சக்திகள் இல்லாமல் அவர்கள் நாதியற்றவர்கள் என்பதை மற்றவர்களை காட்டிலும் அவர்கள் நன்றாக அறிவார்கள். முழு சுதந்திரம் என்ற தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றியபோது அவர்கள் பொருள்படுத்தியது புரட்சி ஆனால் அவர்கள் வேண்டியது புரட்சி அல்ல. இதை அவர்கள் இளைஞர்களின் உந்துதலால் செய்தனர், மேலும் இதை அச்சுறுத்தலாக்கி அவர்களின் ஆசையான டொமினியன் அந்தஸ்தை பெற சாதிக்க விரும்பினர். இதை நீங்கள் சுலபமாக மதிப்பிடலாம் அவர்களுடைய கடைசி 3 மாநாட்டுத் தீர்மானங்களை ஆய்வு செய்தால் அதாவது மெட்ராஸ்;  கல்கத்தா; லாகூர் மாநாடுகள். கல்கத்தா மாநாட்டில் 12 மாதங்களுக்குள் டொமினியன் அந்தஸ்த்திற்காக தீர்மானம் நிறைவேற்றினர் அது தவறினால் முழு சுதந்திரம் வேண்டும் தீர்மானத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்றனர்; ஆனால் டிசம்பர் 31 , 1929 நடு நிசி வரை பரிசுக்காக விசுவாசமாக காத்திருந்தனர். பின்னர் சுதந்திரத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான தர்ம சங்கடத்தில் இருப்பதை உணர்ந்தனர்; ஆனால் அது அவர்கள் நோக்கம் அல்ல. இருந்தும் கூட (சமரசத்திற்கான) கதவு திறந்தே உள்ளது என்பதை மகாத்மா ரகசியமாக வைத்துக்கொள்ளவில்லை. இதுதான் உண்மையான விசுவாசம். துவக்கத்திலேயே அவர்கள் அறிவார்கள் அவர்கள் இயக்கம் சமரசத்தில் மட்டுமே முடியும் என்பதை. இந்த அரை வேக்காட்டுத் தனத்தைத்தான் நாம் வெறுக்கிறோம், போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஏற்படும் சமரசத்தை அல்ல. எப்படியானாலும் நாம் விவாதித்துக் கொண்டிருந்தது புரட்சிக்காக எந்த சக்திகளை சார்ந்திருக்க முடியும் என்பதை குறித்து. ஆனால் நீங்கள் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் சந்தித்து அவர்களது ஆதரவை திரட்டப் போகிறோம் என்று கூறினால் நான் உங்களுக்கு கூறுவேன் நீங்கள் உணர்ச்சி பொங்கும் சொற்களுடன் அவர்களை முட்டாளாக்க முடியாது. எந்த புரட்சிக்கு அவர்கள் சேவையை வேண்டுகின்றீர்களோ அந்த புரட்சியால் அவர்களுக்கு என்ன நன்மை என  அவர்கள் வெளிப்படையாக கேட்பார்கள்; பிரபு ரீடிங் இந்திய அரசாங்கத்தின் தலைமையில் இருப்பதற்கும், அல்லது புருஷோத்தம் தாஸ் தாகுர் தாஸ் இந்திய அரசாங்கத்தின் தலைமையில் இருப்பதற்கும் என்ன வித்தியாசம் அவர்களை பொறுத்தமட்டில்? பிரபு இர்வின் இடத்திற்கு சர் தேஜ் பஹதூர் சப்ரு வந்தால் அது விவசாயிக்கு என்ன மாற்றத்தை கொண்டு வருகிறது. அவர்களுடைய தேச உணர்ச்சிக்கு அழைப்பு விடுவது அர்த்தமற்றது. அவர்களை உங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்த கூடாது. புரட்சி அவர்களுடையது அவர்களின் நன்மைக்காக என்பதை நாணயமாக தீவிரமாக அவர்களுக்கு பொருள்படுத்த வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி; பாட்டாளி வர்க்கத்திற்காக புரட்சி.
உங்களுடைய குறிக்கோளை பற்றிய தெள்ளத்தெளிவான கருத்தை வகுத்தெடுத்த பின் உங்கள் சக்திகளை சரியான தீவிரத்துடன் அத்தகைய ஒரு புரட்சிக்காக அமைப்பு ரீதியாக திரட்ட முடியும். இப்போது நீங்கள் இரண்டு வெவ்வேறான கட்டங்களை கடந்தாக வேண்டும். முதலாவது தயாரிப்பு அடுத்தது செயல்பாடு.

தற்போதைய இயக்கம் முடிந்த பிறகு சில நேர்மையான புரட்சிகர ஊழியர்கள் மத்தியில் வெறுப்பும், தோல்வி மனப்பான்மையும் ஏற்படுவதை காண்பீர்கள். ஆனால் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. உணர்ச்சிவசப் படுவதை த    ள்ளி வையுங்கள். யதார்த்தத்தை சந்திக்க தயாராகுங்கள். புரட்சி என்பது கடினமான கடமை. புரட்சி எந்த ஒரு மனிதனின் சக்திக்கும் அப்பாற்பட்டது. அதை ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டு வந்துவிட முடியாது. அது ஒரு குறிப்பிட்ட சமூக பொருளாதார சூழ் நிலையில் ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழ் நிலை தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதுதான் ஒரு ஸ்தாபனப்படுத்தப்பட்ட கட்சியின் வேலை. புரட்சிக்காக மக்களை தயார்படுத்துவதும், சக்திகளை ஸ்தாபனப் படுத்துவதும் ஒரு பெரும் கடினமான செயல். அதற்காக புரட்சிகர ஊழியர்கள் பெரும் தியாகங்கள்  மேற்கொள்ள வேண்டும். நான் இதை தெளிவுபடுத்தி கொள்கிறேன், நீங்கள் ஒரு வியாபாரி, அல்லது வசதியில் ஊன்றிப்போனவர்; குடும்பஸ்தர், நீங்கள் நெருப்புடன் விளையாடாதீர்கள். தலைவர் என்ற தகுதியில் உங்களால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. மாலை நேரங்களில் வசனங்களை பேசக்கூடிய எண்ணற்ற தலைவர்களை நாம் ஏற்கனவே பெற்றுள்ளோம்.அவர்களால் பயனில்லை. லெனினுக்கு பிடித்தமான சொல்லை பயன்படுத்தி கூற வேண்டுமானால் நமக்கு தொழில் முறை புரட்சியாளர்கள் வேண்டும். புரட்சியை தவிர்த்து வேறு ஆசைகளோ அல்லது வாழ்க்கை தேவைகளோ இல்லாத முழு நேர ஊழியர்கள். இத்தகைய ஊழியர்கள் எந்த அளவு அதிகமாக ஒரு கட்சியில் ஸ்தாபனபடுத்தப்பட்டுள்ளனரோ அந்த அளவு அவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகம்.
திட்டமிட்டபடி தொடங்க உங்களுக்கு மிகவும் தேவைப்படுவது மேலே கூறப்பட்டது போன்ற ஊழியர்கள்; தெளிவான கருத்தும், கூர்மதியும்; முன் முயற்சியும் உடனடி தீர்வுகளும்  கொண்டவர்கள். கட்சியில் தீவிர கட்டுப்பாடு இருக்க வேண்டும், அது ஒரு தலை மறைவு கட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை மாறாக வெளிப்படையானதாக இருக்க வேண்டும். தன்னார்வத்துடன் சிறைக்கு செல்லும் கொள்கை முற்றிலும் கைவிடப்பட வேண்டும். அத்தகைய கொள்கை பல ஊழியர்களை தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளும். அவர்கள் தீவிர ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்.  இத்தகைய ஊழியர்களே அருமையான தலைவர்களை உண்மையான வாய்ப்பிற்காக உருவாக்குவார்கள்.
இளைஞர்கள் இயக்கம் மூலம் சேர்க்கப்படமுடிந்த ஊழியர்களே கட்சிக்கு தேவை. எனவே இளைஞர் இயக்கமே திட்டத்தின் துவக்கமாக இருக்கிறது. இளைஞர் இயக்கம் விவாத வட்டங்களை; வகுப்பு சொற்பொழிவுகளை; துண்டுப்பிரசுரங்களை; புத்தகங்களை; மாத ஏடுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அரசியல் ஊழியர்களை சேர்க்கவும் பயிற்சி கொடுக்கவும் இதுவே சிறந்த முறை.
எந்த இளைஞர்களின் கருத்துகள் முதிர்ச்சியடைந்துள்ளதோ; யார் தங்கள் வாழ்வை புரட்சிக்காக அர்ப்பணிக்க தயாராக உள்ளனரோ அவர்களை இளைஞர் அணியிலிருந்து கட்சிக்கு மாற்ற வேண்டும். கட்சி ஊழியர்கள் இளைஞர் இயக்கத்தை வழி நடத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கட்சியின் முதன்மையான செயல் மக்களிடையே பிரச்சாரம் செய்வதே. இது மிகவும் அத்தியாவசியமானது. கத்தார் கட்சியின் (1914−15) தோல்விக்கு அடிப்படை காரணங்கள் அவர்களின் அறியாமை, மக்களிடம் பாராமுகம்., மக்களின் எதிர்ப்பு. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தீவீர ஆதரவைப் பெற்று அவர்களை ஸ்தாபனப்படுத்துவதும் மிக அவசியமாகிறது.. கட்சியின் பெயர் கம்யூனிஸ்ட் என்றே இருக்க வேண்டும். உறுதியான கட்டுப்பாட்டுடைய ஊழியர்களை கொண்ட இக்கட்சி எல்லா மக்கள் இயக்கங்களையும் நடத்த வேண்டும். இக்கட்சி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் அமைப்புகளை ஸ்தாபனபடுத்த வேண்டும், தொழிற்சங்கங்கள் கட்ட வேண்டும்; ஏன் முடிந்தால் காங்கிரஸின் தலைமையை பிடிக்க வேண்டும்; மற்ற ஏராளமான அரசியல் அமைப்புகளை வென்றெடுக்க வேண்டும். அரசியல் விழிப்புணர்வை தேச விழிப்புணர்வாக மட்டுமல்லாது வர்க்க விழிப்புணர்வாக உருவாக்க வேண்டி பெரிய அளவிலான நூல் பதிப்புகளின் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.சோசலிச கொள்கையை பற்றிய விளக்கம் மக்களை அடைய வேண்டும்; அது பரவலாக செல்ல வேண்டும். எழுதப்படுவது எளிமையாகவும் புரியும்படியாகவும் இருக்க வேண்டும்.
***
வெளிப்பார்வைக்கு நான் ஒரு பயங்கரவாதி போல் நடந்து கொண்டுள்ளேன். ஆனால் நான் பயங்கரவாதி அல்ல. நான் ஒரு புரட்சியாளன், ஒரு நீண்ட கால போராட்டத்தை குறித்து விவாதிக்கும் திடமான கருத்துகள் கொண்ட புரட்சியாளன். என் தோளோடு தோள் நின்ற ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற  நண்பர்கள் சிலர் குற்றம் சாட்டலாம் நான் சிறைப்பொந்தில் தள்ளப்பட்டதால் இப்படி பேசுகிறேன் என. அது உண்மை அல்ல. நான் சிறைக்கு வெளியிலிருந்த போது கொண்டிருந்த அதே கருத்துகளை, அதே மன உறுதியை, அதே உத்வேகத்தை , அதே துடிப்பை; சொல்லப்போனால் இன்னும் அதிகமாக தீர்மானமாகப் பெற்றுள்ளேன். ஆகவே என் கருத்துகளை படிப்போரை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறேன். வரிகளுக்கு இடையே படிக்க முயற்சிக்காதீர்கள். எனக்கு உள்ள அனைத்து வலுவுடன் கூறுகிறேன் நான் பயங்கரவாதி அல்ல அப்படி எப்போதும் இருக்கவில்லை. ஒருவேளை துவக்கத்தில் அப்படி இருந்திருக்கலாம். இத்தகைய செயல்களின் மூலம் நாம் எதையும் சாதித்துவிட முடியாது என்பதில் நான் தெளிவுடன் உள்ளேன். ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பின் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினைகளை மதிப்பிடலாம். நமது எல்லோரின் செயல்பாடுகளும் ஒரு குறிக்கோளை நோக்கியிருந்தது; நம்மை மாபெரும் இயக்கத்தின் இராணுவக் கிளையுடன் அடையாளம் கண்டு கொள்வது.. என்னை யாரேனும் தவறாக புரிந்து கொண்டிருந்தால் அவர்கள் தங்களை திருத்திக் கொள்ளட்டும். குண்டுகளும், துப்பாக்கிகளும் பயனற்றவை என நான் கூறவில்லை மாறாக அவை பயனுள்ளவை. ஆனால் கூற விரும்பியது குண்டுகள் மட்டும் எறிவது பயனற்றது, சில சமயங்களில் ஆபத்தானது கூட..  கட்சியின் ராணுவக்கிளை தன் கட்டுப்பாட்டில் போர் தளவாடங்களை சில நெருக்கடி காலத்திற்காக எப்போதும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அது கட்சியின் அரசியல் செயல்களை ஆதரிக்க வேண்டும். அது தன்னிச்சையாக சுதந்திரமாக செயல் படக்கூடாது அது முடியாது.
மேலே கூறப்பட்ட முறைகளில் கட்சி செயல்பட துவங்க வேண்டும். அவ்வப்போது நடத்தப்படும் கூட்டங்கள்  மாநாடுகள் மூலமாக கட்சி ஊழியர்களுக்கு எல்லாப் பிரச்னை குறித்தும் அறிவும் தெளிவும் புகட்ட வேண்டும்.
இத்தகைய முறைகளில் நீங்கள் துவங்க வேண்டுமானால் நீங்கள் மிகுந்த கண்ணியமுடன் இருக்க வேண்டும். காந்திஜியின் சொர்க்க வாக்குறுதியான ஒரு வருடத்திற்குள் அடையவுள்ள இலட்சிய சுயராஜ்யத்திலிருந்து பத்து வருடங்களில் நம் புரட்சி என்பது போன்ற இளம் பருவ கனவுகளை தூர எறியுங்கள். அதற்கு பொங்கும் உணர்ச்சியும் தேவையில்லை, சாவும் தேவையில்லை, தொடர்ந்து போராடும், அல்லலுறும், தியாக வாழ்க்கை முறை தேவை. முதலில் உங்கள் தனிமனித அபிமானத்தை நசுக்குங்கள். தனிமனித சொகுசு பற்றிய கனாக்களை உதறி வீசுங்கள். பிறகு செயல்பட துவங்குங்கள். அங்குலம் அங்குலமாக முன்னேற வேண்டும். அதற்கு தேவை வீரம், தளராத தன்மை, மிக உறுதியான தீர்மானம். எத்தகைய இன்னலும் இடர்ப்பாடும் உங்களை சோர்ந்து போக வைக்காது. எந்த ஒரு தோல்வியும், துரோகமும் உங்கள் மனத்தை முறிக்காது. உங்கள் மீது திணிக்கப்பட்ட எந்த ஒரு ஆபத்தும் உங்களுள் உள்ள புரட்சியாளனை ஒழித்துவிட  முடியாது. இன்னல்கள் தியாகங்கள் நிறைந்த சோதனைகள் வழியில் நீங்கள் வெற்றியடைவீர்கள். இத்தகைய தனித்தனி வெற்றிகளே புரட்சியின் செல்வங்கள்.
புரட்சி ஓங்குக
பகத்சிங்