பெண்ணியமும் வர்க்க உணர்வும்

வர்க்க ஒடுக்குமுறையிலிருந்தும், ஆணாதிக்க ஒருக்குமுறையிலிருந்தும் விடுதலைக்கான போராட்டங்களில் பங்கேற்றபடியே, சொந்த விடுதலைக்காகவும் போராடிய பெண்களுடன், கம்யூனிச இயக்கம் அடைந்த வளர்ச்சிக்கு இருந்த இணைப்பினைக் குறித்து இக்கட்டுரை விவாதிக்கிறது.

கொரோனா காலத்தில் பெண்கள் மீதான வன்முறை

பெண்களை சகமனுஷியாகப் பார்க்காமல் அவர்களை “உற்பத்திக் கருவியாகவும்“ அதன் உடைமையாளனாகவும் ஆணாதிக்க சமூகம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. எனவேதான் கம்யூனிச சமூகத்தில் எல்லா உடைமைகளும் பொதுவுடைமையாகும் என்பதை அறிந்த அவர்கள் பெண்களும் பொதுவாக்கப்படுவார்கள் என்று கூறினர். இத்தகைய பாசாங்கான வழிமுறைகளில் பொதுவில் ஒரு அறச்சீற்றத்தை கையாண்டனர்.

சோஷலிசமும் பெண் விடுதலையும்

அரசியலில் பெண்கள் பங்கு என்று பார்க்கும்போது 28.4% என தெரிகிறது. எனவே, அதில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதை அந்த அரசு உணர்ந்திருக்கிறது. பாலின சமத்துவக் கருத்துக்கள் வேரூன்றி வருகின்றன. புரட்சிக்கு பின்னர் மக்கள் சீனத்தில் பெண்கள் பிரமிக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இந்தியப் பெண்கள் இயக்கத்தில் சோசலிச சிந்தனையும் செயல்பாடும்

பெண்களின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, சோசலிச சிந்தனையும் நடைமுறையும் இந்த ஆண்டுகளில் மிகவும் விரிவான முன்னோக்குப் பார்வையாகவும் திட்டமாகவும் உருவெடுத்துள்ளது. இந்தக் கட்டுரையில் அதன் சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆணாதிக்க பிற்போக்கு சித்தாந்தங்களும், தொடரும் ஏற்றத்தாழ்வுகளும்

சுபாஷினி அலி சித்தாந்தங்கள் - நாம் சிந்திக்கும், விளங்கிக் கொள்ளும் வழிகள் -  எங்கிருந்தோ திடீரென முளைப்பதில்லை. அவை நம் சூழ்நிலைகளின், வரலாற்று-சமூக உண்மை நிலைகளில் இருந்துதான் விளைகின்றன. நாம் முக்கியமாக புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், ஒன்று, அவை சுரண்டல் நிறைந்த சமூக-பொருளாதார அமைப்பை வலுப்படுத்தவும் நிலையானதாக ஆக்கவும் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, பரப்பப்படுகின்றன; அல்லது அவை சுரண்டல் நிறைந்த சமூக-பொருளாதார அமைப்பை தூக்கி எறிவதற்காக உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, பரப்பப்படுகின்றன. இந்த கட்டுரை எண்ணிலடங்கா வேறுபாடுகளைக் கொண்ட பிற்போக்கான …

Continue reading ஆணாதிக்க பிற்போக்கு சித்தாந்தங்களும், தொடரும் ஏற்றத்தாழ்வுகளும்

பெண் விடுதலையும் லெனினும் – கிளாரா ஜெட்கினின் அனுபவம்

கம்யூனிச சிந்தனைகள் அல்லாத பழைய உளவியல்கள் அனைத்தையும் கடந்து முன்னேறும் வேலையை தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை ஒருங்கிணைத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் கீழ் செய்து முடிக்கும். இங்கு எந்த பழைமைவாதத்தையும் அது விட்டு வைக்காது. எங்கும் சமத்துவத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் உண்மையான ஆவல் மேலெழும் தன்மை காணப்படுகிறது.

முத்தலாக் – விவாதங்களும், விளக்கங்களும் !

குடும்பம் என்ற நிறுவனத்தின் புனிதத்தன்மை கெட்டு விடும்; குடும்ப அமைதி சீர்குலையும் என்பது அதற்கு சொல்லப்பட்ட ஒரு காரணம். பெண்ணடிமைத்தனம் என்பதே அந்த புனிதத்தின் மையம். அதுதான் அமைதியின் அஸ்திவாரம். மனுவின் வழி வந்தவர்கள் மனுவாதம் தான் பேசுவார்கள்.