புத்தகங்கள்
செவ்வியல் மார்க்சிய இலக்கிய நூல்கள் மற்றும், நூல் விமர்சனங்களின் தொகுப்பு.
-
திராவிட இயக்கம்: மாற்றைத் தேடும் மறு வாசிப்பு !
திராவிட இயக்கப் பற்றாளர்கள் எந்த நெருக்கடி வந்தாலும் அவற்றை முறியடித்து முன்னேறுவோம் என முழங்கிடலாம். ஆனால், ஒரு வரலாற்றுப் போக்கினை நாம் மறந்துவிடக்கூடாது. எந்தக் கருத்தியலும், அது சார்ந்த இயக்கங்களும் வரலாற்றில் ஒரே வடிவத்தில் மாறுதலுக்கு உட்படாமல் நீடித்ததில்லை. Continue reading
-
சாவர்க்கர்: முகத்திரைக்குபின்னால் !
சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம் சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின் கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டிருந்த சமயத்தில்… Continue reading
-
இந்துத்துவா: உருவாக்கம், திட்டம், பரவல் …
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமீபகால செயல்பாடுகள் வரையிலும் பின்தொடர்ந்து அதன் உள்அம்சங்களை இந்தநூல் விவரிக்கிறது. இந்த விமர்சன கட்டுரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் உருப்பெற்றதிலிருந்து, அதன் மோசடியான உத்திகளின் வழியாக அதிகாரத்தை சுவைக்க வழிவகுத்த ‘ராமஜென்மபூமி’ இயக்கம் வரையிலான காலகட்டம் பற்றியது. Continue reading
-
இங்கிருந்து எங்கே…?
ஜெயகாந்தனது எழுத்தில் இன்றும் நுணுக்க விவரங்களைக் கூறும் ‘யதார்த்த’ப் பண்பு, அதாவது இயற்கையாகப் பாத்திரங்களைத் தீட்டும் ஆற்றல் குறைவின்றியே இருக்கிறது. மனிதாபிமான உணர்வும் இல்லையென்று அடித்துக் கூற இயலாது. ஆயினும் சமுதாய மாற்றத்துக்கு ஆதரவு தருபவராக அவர் இன்று இல்லை. எனவே பிழை எங்கு உள்ளது என்று கவனமாய்த் தேட வேண்டும். Continue reading
-
அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ நிலவுகிறது?
அமெரிக்காவும், சுயநலம் மிக்க அதன் கூட்டாளிகளும் முதலில் ஒரு நாட்டின் மீது பொருளாதார தாக்குதலை முன்னெடுக்கிறார்கள். பிறகு அந்த நாட்டு மக்களிடையே கலகங்கள் தூண்டப்படுகின்றன. ஆட்சி மாற்றங்கள் இவ்வாறு திணிக்கப்படுகின்றன. Continue reading
-
சாதிக்கு எதிரான களப் போராட்டங்களில் விளைந்த நூல் !
கே.பாலகிருஷ்ணன் “சாதி – வர்க்கம் – விடுதலை” என்ற இந்த நூல் இந்திய சமூகத்தில் ஊடுபாவாக நீடித்து நிலைத்திருக்கும் சாதியம் பற்றிய ஓர் ஆய்வுநூலாக வெளியிடப்படுகிறது. பல சிறந்த படைப்புகளை வெளியிட்டு பதிப்புலகில் முத்திரைப் பதித்துவரும் பாரதி புத்தகாலயத்தின் ஆய்வுப் படைப்புகளில் இது மேலும் ஒரு புது வரவாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் கடந்த 25 ஆண்டு காலமாக எழுதிவந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. 32 பகுதிகள், 300 பக்கங்கள்… Continue reading
-
கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 1 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)
கம்யூனிசத் திசைவழியில் ஓவனின் முன்னேற்றம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தது. வெறுமனே ஒரு கொடையாளியாக மட்டும் ஓவன் இருந்தவரை, அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து ஆங்கீகரித்தனர். ஆனால், அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கைகளை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது. Continue reading
-
கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 2 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)
இயற்கைதான் இயக்கவியலுக்கான நிரூபணம். நவீன விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, நாளுக்குநாள் மென்மேலும் அதிகரித்துவரும் மிக வளமான விவரப் பொருள்களைக் கொண்டு அது இந்த நிரூபணத்தை நிலைநாட்டியுள்ளது… Continue reading
-
கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 3 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)
தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு, அதன் நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும் முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோசலிசத்தின் பணியாகும். Continue reading
-
#RedBooksDay2022 : செயலுக்கான நோக்கத்தை தெளிவுபடுத்திய விஞ்ஞான சோசலிசம்
தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும், முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோசலிசத்தின் பணியாகும் Continue reading