காலனிய இந்தியப் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்

இந்திய தேசிய இயக்கத்தின் முன்னோடிகளான தாதாபாய் நெளரோஜி, கோகலே, திலகர், ஜி. சுப்ரமணிய ஐயர் போன்றோரின் அரசியல் நேர்மை, அறிவுத் திறமை மற்றும் இந்து, சுதேசமித்திரன், அம்ரித் பசார் பத்ரிகா, பெங்காலி, இந்து பேட்ரியாட் போன்ற பத்திரிகைகளின் தேசபக்தியையும் அறிய பெரிதும் உதவுகிறது.

உனக்கு மலைகளும் தலைவணங்கும் நதிகளும் வழிவிடும்

மக்கள் சீனத்தில் சோஷலிச புரட்சி கால கட்டம் எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றியும், சோஷலிசத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது பற்றிய மாவோவின் கருத்துக்கள் தொகுதி ஐந்தில் முன் வைக்கப்படு கின்றன. முதல் ப்ளீனக் கூட்டத்தில் மாவோ ஆற்றிய உரையுடன் இத்தொகுதி துவங்குகிறது. முதல் இரண்டு கட்டுரைகள் வாழ்த்துச் செய்திகளாக உள்ளன. தொகுதி ஐந்தில் முக்கியமான கட்டுரையாக வருவது 1950ல் விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பான கட்டுரைகள் நிறைய உள்ளன. விவசாய அமைப்புகளைக் கட்டுதல், வர்க்க உணர்வை ஊட்டுதல் போன்றவற்றிற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.

காவல் கோட்டம் விருதுக்கான படைப்பே!!

இலக்கியத்திற்கான விருதுகள் பல வழங்கப்பட்டாலும், இந்திய அரசின் சாகித்திய அகாடமி அளிக்கும் விருது மிக உயரியதாகக் கருதப்படுகிறது. 1955 ல் இருந்து 56 ஆண்டுகளாக தமிழ் இலக்கியப் படைபாளிகள் இவ்விருதினைப் பெற்று வருகின்றனர். 1957, 59, 60, 64 76 ஆகிய ஐந்தாண்டுகளை விடுத்து, எஞ்சிய 51 ஆண்டு களில் தமிழின் சிறந்த படைப்பாளர்கள் கௌர விக்கப்பட்டுள்ளனர். கல்கி கிருஷ்ணமூர்த்தி தன் அலை ஓசைக்காகவும், ராஜாஜி தன் சக்கரவர்த்தி திருமகனுக்காகவும், அகிலன் வேங்கையின் மைந்தனுக்காகவும், பிசிராந்தையார் நாடகம் …

Continue reading காவல் கோட்டம் விருதுக்கான படைப்பே!!

நூல் அறிமுகம்: தோல்

ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளி வர்க்கம் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாகி இருந்தது, அதிலிருந்து எங்ஙனம் படிப்படியாக மீண்டது என்பதையெல்லாம் தமிழக படைப்பாளிகள் வெளிப்படுத்துவது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு பேருதவியாக அமையும். சோவியத் எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியின் வழி நின்று எழுதத் தொடங்கிய தோழர். செல்வராஜ் தனது பணியை திறம்பட நிறைவேற்றியுள்ளார். எழுத்தாளர் என்ற முறையில் அவருக்கும், வெளியிட்ட என்.சி.பி.ஹெச் நிறுவனத்தாருக்கும் நமது வாழ்த்துக்கள்.

கார்ல் மார்க்சின் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’

1849 இல் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் இன்றும் பொருந்துமென்றால் அவை காலத்தை வென்றவையல்லவா? ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ என்ற நூலின் இன்னொரு சிறப்பு மாமேதை மார்க்ஸ் தத்துவராக மட்டுமல்ல, சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தினசரிப் பத்திரிக்கையில் இந்நூலை எழுதினார் என்பதும் தான்!

ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம்!

தமிழ்ச் சூழலில் பெண்ணியம் வலுப்பெற்றிருக்கின்ற காலம் இது. படைப்பு ரீதியாகவும், அமைப்புகள் வாயிலாகவும் பெண்ணிய வாதிகள் தொடர்ந்து இயங்கி வந்தது பெண்ணியக் கோட்பாடுகளை வலுவாக நிறுவிக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. பெண் விடுதலை குறித்து உரத்த குரல் எழுப்பத் தேவையுள்ள மாநிலமாகவே தமிழகம் இருந்து வந்திருக்கிறது. எல்லோரும் பெண்ணியம் குறித்து கதைக்க வந்தது துரதிர்ஷ்டவசமானதும் அன்று. கற்பனைப் புராண காலத்தும் அதன் தேவை இருந்திருக்கிறது. சங்க காலத்திலும், பெண்ணியக் குரல்கள் ஒலித்துள்ளன. உலகம் இத்தனை நவீன மயமாக்கப்பட்ட பின்பும், இதன் தேவை தொடர்வதன் பின்னணி குறித்து சிந்திக்கையில் ஆணாதிக்கப் போக்கு எங்கும் வியாபித் திருந்ததன்றி வேறென்ன என்னும் விடை கிடைக்கிறது.

பாட்டாளி வர்க்கத்திற்கு புதிய குரல் கொடுக்கும் – ஒரு புதினம் – சுரங்கம்

கு.சி.பா என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் கு.சின்னப்ப பாரதியின் பேனாவிலிருந்து ஒரு கதை பிறக்கிறது என்றால் அது நிச்சயம் பாட்டாளி வர்க்கத்தின் குரலோடுதான் பிறக்கும். அவரது தாகம் முதல் அண்மையில் வெளிவந்த சுரங்கம் வரை பாட்டாளி வர்க்கத்தின் போர்க்குண முத்திரை பதிந்திருப்பதை படிப்போர் உணர்வர்.

வெல்வதற்கோர் பொன்னுலகம்!

சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப் பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் - இவையாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவோடும், ஒளிச்சுடரோடும் எடுத் துரைக்கிறது. மாமேதை லெனின் அவர்கள் மார்க்சும், ஏங்கல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றி தெரிவித்துள்ள கருத்தாகும்.

நவீன அமெரிக்க பொருளாதார ஏமாற்றுகளும் ஒரு பேராசிரியரும்!

அமெரிக்க நாட்டுப் பொருளாதாரப் பேராசிரியர் ஜான் கென்னத் கால்பிரெயித் சில மாதங்களுக்கு முன் காலமானார். அவருக்கு வயது 98. இந்தியா உட்பட உலக நாடுகளின் பத்திரிக்கைகள் அவருக்கு புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தின. பொருளாதாரத்துறையில் அவரது பங்களிப்பை நினைவு கூர்ந்தன. 1961 முதல் 63 வரை அவர் அமெரிக்க தூதுவராக இந்தியாவில் பணிபுரிந்ததை இந்தியப் பத்திரிக்கைகள் நினைவு கூர்ந்தன.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு – ஆரம்ப கால ஆண்டுகள் (1920 – 1933)

1924ம் ஆண்டு லெனின் மறைவுக்குப்பிறகு, ராய் தனது அதிதீவிரவாதக் கருத்துக்களை அகிலத்தின் 5வது மாநாட்டில் முன்வைத்தார். தேசிய விடுதலை இயக்கத்தில் தேசிய முதலாளிகளின் பங்கினை நிராகரிக்கும் போக்கும், சுரண்டப்பட்ட வர்க்கங்களின் புரட்சிகரமான உணர்வு பற்றிய அவரின் அதீத மதிப்பீடும் அதில் தெரிந்தது. ஆனால், அகிலம் அதை நிராகரித்தது. காலனி நாடுகளில் கூட்டு செயல்பாட்டின் தேவையினை உறுதி செய்தது. பின்பு சோவியத் கம்யுனிஸ்ட் கட்சியின் 14வது மாநாட்டில் தோழர். ஸ்டாலின் காலனி நாடுகளின் கம்யூனிஸ்டுகள் முதலாளி வர்க்கத்தில் உள்ள புரட்சிகரமான பிரிவினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியதும் கவனத்துக்குரியது.