புத்தகங்கள்
செவ்வியல் மார்க்சிய இலக்கிய நூல்கள் மற்றும், நூல் விமர்சனங்களின் தொகுப்பு.
-
வரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம் !
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு என்பது வீரத்தாலும், தியாகத்தாலும் எழுதப்பட்ட ஒன்று. ஒன்றிய பாஜக அரசு மதவெறி நோக்கில் இந்திய அரசியல் வரலாற்றை திருத்தி எழுத முயலும் சூழலில் உண்மையான இந்திய வரலாற்றை மக்கள் முன் வைப்பது அவசியம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது. விடுதலை போராட்டக் காலத்தில் துவங்கி நவீன இந்தியாவை உருவாக்குவது வரை கம்யூனிஸ்டுகளின் பங்கு பாத்திரம் அளவற்றது. அந்த வகையில் இந்திய வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதி… Continue reading
-
பால்மிரோ டோக்ளியாட்டியின் பாசிசம் குறித்த விரிவுரைகள்; தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான வழிகாட்டி
பாசிசமானது எப்பொழுதும் பொய்யான மற்றும் வாய்ச்சவடால் வடிவங்களிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதை அது மூடி மறைக்கவே முயற்சிக்கிறது. Continue reading
-
ஜே.டி. பெர்னலின் வரலாற்றில் அறிவியல் ஒரு பின்னணி
ஆங்கிலப் புத்தகத்தைப் படிப்பதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு பேராசிரியர் முருகன் அவர்களின் இந்தப் புத்தகம் அரிய வாய்ப்பாகும். புத்தகத்தின் முக்கிய அம்சங்களை எளியமுறையில், புரிந்துகொள்ளக்கூடிய வகையில், உள்ளூர் உதாரணங்களோடு விளக்கி இருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பாகும். ஒரு நாடகத்தின் கட்டியங்காரனாக மட்டுமல்ல; புத்தகத்தின் தாக்கங்களையும் முருகன் அவர்கள் மிகச்சிறப்பான முறையில், வாசிப்பதற்கு எவ்வித தடையுமின்றி கொடுத்திருப்பது மேலும் சிறப்பாகும். Continue reading
-
நவீன குடும்ப உறவு முறையும் முதலாளித்துவத்திற்கான கூலி உழைப்பும்
எவ்வாறு குடும்பம் உள்ளிட்ட சமூக நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை எங்கெல்ஸ் இந்த நூலில் விளக்குகிறார். மேலும் தனிச்சொத்தின் உருவாக்கம், வளர்ச்சி, கெட்டிப்படுதல், எவ்வாறு ஒருதார மணம் மற்றும் குடும்பம் உள்ளிட்டவற்றில் ஒரு வரைமுறையை ஏற்படுத்தியது என்பதையும் இந்த நூல் விளக்குகிறது. Continue reading
-
தமிழ் ஒலி பதிவாக ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முதல் அத்தியாயம் (Audio Book)
பிப். 21, சிவப்பு புத்தக தினத்திற்கான சிறப்பு ஆடியோ பதிவு. அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசிப்போம், பரவலாக்கிடுவோம். Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காட்டும் பாதை
“மனித வாழ்க்கையின் உண்மைகளைச் சார்ந்த, சீரான பொருள்முதல் வாதம்; வளர்ச்சி பற்றிய விரிவான கோட்பாடாகிய இயக்கவியல்; கம்யூனிச சமூகத்தைப் படைக்கும் வல்லமை கொண்ட பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வரலாற்று பாத்திரம், வர்க்கப் போராட்ட கருத்தியல்; இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைகளுக்கேயுரிய தெளிவோடு எடுத்துரைக்கிறது.” Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவம் குறித்த ஆய்வுக் கருவூலம்
1991இல் சோவியத் ஒன்றியம் சிதைக்கப்பட்டு, முதலாளித்துவம் அங்கும் கிழக்கு ஐரோப்பாவிலும் மீண்டும் ஆட்சியை பிடித்தபோதிலும் 2008இல் துவங்கி முடிவின்றி தொடரும் உலக முதலாளித்துவ பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியும் மானுடத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் பருவநிலை மாற்றமும் உற்பத்தி சக்திகளின் தொடர்வளர்ச்சிக்கும் மானுடத்தின் எதிர்காலத்திற்கும் எதிரியாக முதலாளித்துவம் நிற்கிறது என்பதை நாளும் பளிச்சென்று உணர்த்துகிறது. Continue reading
-
கம்யூனிஸ்ட் அறிக்கையும், இந்திய புரட்சியின் திட்டமும்
கட்சித் திட்டத்தின் அடிப்படைகளை உணர்ந்துகொள்ள கம்யூனிஸ்ட் அறிக்கை உதவிடும். இரண்டு ஆவணங்களையும் ஆழமாக உள்வாங்கிட வேண்டும். வாசிப்பது கடினமாக இருக்கிறது என்கிற காரணத்தை முன்வைத்து , ஒருவர் , அவற்றை வாசிக்காமல் இருப்பது, அவரது கம்யூனிச லட்சியப் பிடிப்பினை தளரச் செய்திடும். இவ்வாறு, இலட்சிய பிடிப்பில் தளர்ச்சியுடன் செயல்படும் தெளிவற்ற உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் வளர்ச்சி காணாது. Continue reading
-
கம்யூனிஸ்ட் அறிக்கையின் முன்னுரைகள் குறித்து…
கம்யூனிஸ்ட் அறிக்கையின் முன்னுரைகளும் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு மிக முக்கியமான பாடங்களைத் தருகின்றன. அறிக்கையின் ஒரு பகுதியாகவே அவற்றையும் படிக்க வேண்டும். பொதுவான ஒரு வாசகர் இதுபற்றிச் சொல்லும்போது, கம்யூனிஸ்ட் அறிக்கையை ‘ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிய அனுபவம் வழங்குகிறது’ என்பார். உண்மைதான் அறிக்கையின் இலக்கியத் தரமும் பொருள் பொதிந்த முன்னுரைகளும் அத்தகைய உணர்வை ஏற்படுத்துகின்றன. Continue reading
-
நவீன தொழிலாளர்களும், கம்யூனிஸ்ட் அறிக்கையும்
மார்க்ஸ் “பொருளாதார போராட்டங்களை” புரட்சிகர அரசியல் உணர்வு மட்டத்துடனோ அல்லது சோசலிசத்துடனோ தொடர்புடையது அல்ல என்று ஒரு போதும் சொல்லவில்லை. மார்க்சைப் பொறுத்த வரையில், “பொருளாதாரப் போராட்டங்கள்”தான் ஒரு பிரத்தியேகமான, பரந்துபட்ட அரசியல் உணர்வினை உருவாக்குவதற்கு மையமான முக்கிய அம்சமாகும். Continue reading