மோடி அரசின் மோசடி பட்ஜெட் 2019

வெங்கடேஷ் ஆத்ரேயா பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்னும் இரண்டே மாதங்களில் காலாவதியாக உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடந்து புதிய அரசாங்கம் அமையும் வரையிலான, வரும் 2019-20 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்கள் வரை, அரசு நடத்துவதற்கான வரவு செலவு திட்டம் முன்வைக்க  மட்டுமே இந்த அரசுக்கு அதிகாரம் உண்டு. இதனை ஏற்று,  நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே சமர்ப்பிக்க உள்ளோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அதை மீறி 2019-20 நிதி …

Continue reading மோடி அரசின் மோசடி பட்ஜெட் 2019

நவீன தாராளமயத்தின் நெருக்கடி: அரசியல் சமூக விளைவுகள்

எங்கெல்லாம் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கு எதிராக உறுதியான நிலை எடுக்க முடிந்ததோ, உழைப்பாளி மக்களின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளவில்லையோ அங்கெல்லாம் அவர்கள் மக்களின் அதிருப்தியை திரட்ட முடிந்துள்ளது. முன்னேறவும் முடிந்துள்ளது.

இந்தியா சந்திக்கும் வேளாண் மற்றும் வேலை நெருக்கடி

பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் சொத்து ஏற்றத்தாழ்வுகளை கணிசமாக அதிகரிக்க செய்துள்ளன. 2௦14இல் மோடி அரசு ஆட்சியில் அமர்ந்தபொழுது நாட்டில் மொத்த குடும்ப சொத்தில் மேல்மட்ட 1% குடும்பங்களிடம் 49% சொத்து இருந்தது. 2௦17 இல் இது 58% ஆக அதிகரித்தது. இப்பொழுது 6௦% ஐயும் தாண்டிவிட்டது.

விவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …

நிலச்சீர்திருத்தம் என்பதற்கான அர்த்தமே இப்போது தலைகீழாக மாறி யுள்ளது. நிலத்தில் உழைப்பவர்களுக்கு நிலம் என்பதாக அது இல்லை; மாறாக, பெருநிறு வனங்களுக்கே நிலம் என்பதாக அது மாறி யுள்ளது.

பாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது

அரசின் பட்ஜெட் ஒதுக்கீடுகள் மிக குறைவாகவே அதிகரித்துள்ளன என்பதை நாம் பார்த்தோம். இதற்கான மூல காரணம் என்ன? ஒதுக்கீடுகளை அதிகரிக்க, அரசு நிதி வளங்களை திரட்ட வேண்டும். அரசுக்கு அதற்கான வழிகள் எவை? வரிகள், அரசு நிறுவனங்கள் ஈட்டும் லாபம், அரசு அளிக்கும் சேவைகளுக்கு அரசால் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆகியவையே அரசின் வருவாய்க்கான வழிகள்.

தீவிரமாகும் கிராமப்புற முரண்பாடுகள்

கிராமப்புற பெரும்பணக்கார கூட்டுச்சக்திகளின் சுரண்டலை எதிர்த்த போராட்ட முயற்சிகளை ஆங்காங்கே எடுத்த போதிலும், இதுகுறித்து நாம் விவாதித்த பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான கிராமப்புற நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், ஏழை சிறு , குறு விவசாயிகள், விவசாயம் சாரா கைத்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட இதர தொழிலாளர்கள் , அனைத்துவகை வெகுஜன கிராமப்புற ஏழைகள் சேர்ந்த பரந்துபட்ட ஒற்றுமையை கட்டி, ஒன்று திரட்டி இன்னும் அதிகப்படியான போராட்ட புரட்சிப்போரினை முன்னெடுத்து நாம் விவாதித்த தீவிரமாகி வரும் கிராமப்புற முரண்பாடுகளை களைந்திட களம் காண்பதே அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கும், இறுதியாக எதிர்கொள்ள இருக்கும் ”மக்கள் ஜனநாயக புரட்சிக்கு” முன் இன்றைக்கு நம் முன்னேயுள்ள மிகவும் அடிப்படையான சவால் இதுவென்றால் மிகையாகாது.

வங்கிகளுக்கான மறு முதலீட்டின் பின்னுள்ள அரசியல்

ஜி-20 நாடுகள் எடுத்த முடிவின் அடிப்படையில் நிதித் தீர்வு வைப்பு காப்பீட்டு மசோதா (எப்ஆர்டிஐ) என்ற ஒரு மசோதாவை 2017 ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஒரு வங்கி செயல்பட முடியாமல் போனால் பொதுமக்களின் வைப்புத் தொகையை ஈடாக வைத்தோ, பங்குகளாக மாற்றவோ இம்மசோதா வகை செய்கிறது. 1969 முதல் திவாலான பல தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்து பெயில்-அவுட் செய்து காப்பாற்றிய மத்திய அரசாங்கம் தற்போது வாடிக்கையாளர் வைப்புத் தொகையை பெரு நிறுவனங்களின் வாராக் கடனுக்கு ஈடாக்கும் பெயில்-இன் முறையை இம்மசோதா மூலமாக அறிமுகப்படுத்துகிறது.