புரட்சிப் பயணத்தில் கருத்து மோதல்கள் …

 என்.குணசேகரன் பிப்ரவரியிலிருந்து அக்டோபர் புரட்சி வரை நிகழ்ந்த சம்பவங்கள், எந்த அளவில் முக்கியமானதோ, அதே அளவில் அப்போது வெடித்தெழுந்த கருத்து மோதல்களும் முக்கியமானவை. இந்தக் கருத்து மோதல்களின் ஊடாக, சரியான முடிவுகளும், சரியான பார்வைகளும் உருப்பெற்றன. லெனின் தலைமையில் நடந்த இந்த கருத்துப்போர் பாட்டாளி வர்க்கத்தை புரட்சிக்கு தயார் செய்தது. புரட்சியின் ஒவ்வொரு அசைவிலும் நடைபெற்ற இந்தக் கருத்துப்போர், பல புதிய கருத்தாங்கங்கள் உருவாக வழிவகுத்தது. இந்தக் கருத்தாக்கங்கள், ரஷ்ய நிலைமைகளை சார்ந்து உருவானவைதான். ஆனால் ரஷ்யப் …

Continue reading புரட்சிப் பயணத்தில் கருத்து மோதல்கள் …

சமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது?…

“....பொருளியல்ரீதியான சமுக உறவுகளை ஆராய்வது என்று துவங்குகிறபோதே உடனடியாக “சமுக அமைப்பாக்கம்” பற்றிய புரிதல் ஏற்படுகிறது.....

விவசாயிகளும் புரட்சியும் …

வேலை நிறுத்தம்,சட்டவிரோதக் கூட்டங்கள்,தலைமறைவு வாழ்க்கையின் போதே நடத்தப்பட்ட மார்க்சிய பயிற்சி வட்டங்கள்,தெருமுனை ஆர்ப்பாட்டங்கள், காவல்துறையோடும், இராணுவத் துருப்புகளோடும் நடைபெற்ற கடும் மோதல்கள் போன்ற நடவடிக்கைகள்தான் புரட்சியை கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களாக மாறின.

ரஷ்யாவின் தனித்தன்மை …

1917 பிப்ரவரியில் நடந்த புரட்சி உண்மையில் முதலாளித்துவப் புரட்சி. அது நடந்த பிறகு, எட்டு மாதங்கள் கழித்து, அக்டோபரில் சோசலிப் புரட்சி நடந்தது. இந்த இரண்டு புரட்சிகளுக்கும் முன்னோடியாக ஒரு நிகழ்வு அமைந்தது. அது 19௦5-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய எழுச்சி. அது தோல்வியில் முடிந்தது.

நவம்பர் புரட்சியின் விழுமியங்களும் நமது கடமைகளும்!

சோவியத்தின் சாதனைகளைக் கூறி சோவியத் நாட்டிற்கு சென்றுவந்தவர்களின் வாக்கு மூலத் தைக்காட்டி பேசுவதைக் காட்டிலும் நவம்பர் புரட்சி விதைத்த விழுமியங்களை நினைவில் இருத்தி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. அந்த விழுமியங்கள் இன்று உலகெங்கிலும் அளவு கோலாக ஒவ்வொரு நாட்டிலும் வெவ் வேறு பெயர்களில் இருப்பதை நாம்அறிவோம். மானுட வளர்ச்சி குறியீட்டென் (Human Developement Index) அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் வலிமையை அளக்கும் நடை முறைக்கு வந்ததே நவம்பர் புரட்சியின் கதிர்வீச்சு செய்த மாயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நவம்பர் புரட்சி கற்றுத் தந்தவை!

உலகப் புரட்சிகர இயக்கத்தின் வர லாற்றில் கடந்த நூற்றாண்டுகளில், உலகைக் குலுக்கிய 'இரண்டு' பத்து நாட்கள் உள்ளன: அவை ஜான் ரீட் எழுதிய புத்தகத்தின் தலைப்பு சுட்டுவதைப் போல அக்டோபர் புரட்சியின் 10 நாட்களும், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி யின் 20 வது மாநாடு நடந்த நாட்களும் (1956, பிப்ர வரி 14-25). அதிரடியாகவும், திரும்பப் பெற முடி யாத வகையிலும் இந்த இரண்டு நிகழ்வுகளும் முன், பின் என்று குறிப்பிடும் வகையில் (புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றை) மாற்றிவிட்டன. வர லாற்றின் எந்த முக்கிய நிகழ்வும் இதற்கு ஈடாக எந்த நிகழ்ச்சியையும் என்னால் சிந்திக்க முடிய வில்லை. சுருக்கமாகச் சொன்னால், அக்டோபர் புரட்சி, உலக கம்யூனிச இயக்கத்தை உருவாக்கியது, 20 ஆவது மாநாடு அதனை தகர்த்தது".

கல்வியும் – பண்பாடும் லெனினது சிந்தனைகள்

- பெனடிக்ற் பாலன் “ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முதுமாளிப் பட்டமளிப்பு ஆய்விற்க்காக லெனினது கல்வி சிந்தனைகளை தேர்ந்தெடுத்து, அந்த ஆய்வு ஒரு நூலாக வெளிவந்துள்ளது. “லெனினது கல்விச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்கம் அதனை வெளியிட முடிவெடுத்துள்ளது. அவர்களின் அனுமதியோடு, கல்வியும் பண்பாடும் பற்றி லெனினது கருத்துக்களை அலசும் பகுதியை இங்கே வெளியிடுகிறோம். “சோவியத் கல்வி முறை” என்பது உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக இருந்தது. இன்றும் இருக்கிறது என்பதை மறுப்பவர்கள் …

Continue reading கல்வியும் – பண்பாடும் லெனினது சிந்தனைகள்

நவம்பர் புரட்சிக்குப் பின்….

விரக்தியின் தத்துவம் உலகம் உருக்குலைந்து போய்க் கொண்டிருப்பதாகவும் பண்பாடு அழிந்து கொண்டிருப்பதாகவும் அவலக் குரல் எழுப்புகின்றது. ஆனால் அதே வேளையில் மார்க்சிஸ்டுகள் புதிய உலகு தோன்றும் பிரசவ வலியின் ஒலியினை கேட்கிறார்கள் அந்த பிறப்பின் வலியினை குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள். ஜார்ஜ் லூகாஸ் நவம்பர் புரட்சியின் நினைவுகள், உலகை விளக்கிச் சொல்வதோடு நில்லாமல் மாற்ற முனையும் சக்திகளுக்கு என்றும் உத்வேகம் கொடுக்கும். அண்மை காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகள் அதற்கு தடையாக இருந்தன என்பதும் உண்மை. சோவியத் …

Continue reading நவம்பர் புரட்சிக்குப் பின்….