மார்க்சை பயில்வது என்பது என்ன?

ஜி ஜின்பிங்

தமிழில்: முனைவர் சந்திரகுரு

(மார்க்ஸ் பிறந்த நாள் இருநூற்றாண்டு விழாவை ஒட்டி மக்கள் சீனத்தின் குடியரசுத்தலைவர் ஜி ஜின்பிங் ஆற்றிய உரையின் பகுதிகள்)

உயர்ந்த இலட்சியங்களைப் பேணுவதாகவும், மனிதகுலத்தின் விடுதலைக்கான போராட்டத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதுமாக அமைந்தது மார்க்சினுடைய வாழ்க்கை. “தொழிலைத் தேர்ந்தெடுப்பது குறித்து இளைஞர் ஒருவரின் சிந்தனைகள்” என்ற தலைப்பில் உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்விற்கான கட்டுரை ஒன்றை 1835ஆம் ஆண்டில் 17 வயதான மார்க்ஸ் எழுதியிருந்தார். அதில் “நாம் அனைவரும் மனிதகுலத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்கின்ற வகையில் பொருத்தமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம் என்றால், எந்தவொரு சுமையும் நம்மைப் பணியவைக்க முடியாது. ஏனெனில் அவையனைத்தும் அனைவருக்கும் நன்மையளிக்கின்ற வகையில் நாம் செய்கின்ற தியாகங்களாக இருக்கின்றன. எனவே நமக்கு கிடைக்கின்ற அந்த மகிழ்ச்சியானது மிகக் குறுகிய, வரையறைக்குட்பட்ட, சுயநலம் சார்ந்த மகிழ்ச்சியாக இல்லாமல், கோடிக்கணக்கானவர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும். நமது செயல்கள் எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியானவையாக, ஆனாலும் நிரந்தரமாக நீடித்திருப்பவையாக, நமது சாம்பல் மீது மேன்மக்கள் கண்ணீரைச் சிந்துகின்ற வகையில் இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் கரடுமுரடான வாழ்க்கைப் பயணத்தில், வறுமையையும், நோய்களையும் மார்க்ஸ் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும், அவர் இறுதிவரை உறுதியாகப் போராடி, தான் கொண்டிருந்த லட்சியங்களில் இருந்து சிறிதும் விலகாமல், மனிதகுலத்தின் விடுதலைக்கான உயர்ந்த லட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, பெருமை மிகுந்த வாழ்வை வாழ்ந்து காட்டினார்.

மகத்தான தத்துவம் உதயம்:

மார்க்சுடைய பெயரால் அழைக்கப்படும் தத்துவமான மார்க்சியம், அவர் நமக்கு விட்டுச் சென்ற மிக மதிப்பு வாய்ந்த, செல்வாக்குமிக்க மரபியமாகும். சூரியனைப் போல் தகதகக்கும் இக்கோட்பாடு மனித சமூகத்திற்கு அதன் வரலாற்றின் போக்கை எடுத்துக் காட்டி, அதன் விடுதலைக்கான பாதையை மினுமினுக்கச் செய்கிறது.

விமர்சனம் என்ற ஆயுதத்தை, எவ்விதத்திலும், ஆயுதத்தைக் கொண்ட விமர்சனத்தினால் மாற்றீடு செய்ய முடியாது. பெளதீக சக்தியை எதிர்கொண்டு வீழ்த்துவது பெளதீக சக்தியால்தான் சாத்தியம்; ஆனால், ஒரு தத்துவக் கருத்தும் கூட வெகுமக்களை இறுகப் பற்றியவுடன் பொருளாயத வலிமையாக மாறிவிடும்.” என்று ஒருமுறை மார்க்ஸ் குறிப்பிட்ட கருத்து பிரபலமானது. தத்துவம், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் என்று தலையாய மூன்று பகுதிகளை மார்க்சியம் கொண்டுள்ளது. அவற்றைத் தனித்தனியே பார்த்தால், ஜெர்மானிய தத்துவம், பிரிட்டிஷ் அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு கற்பனாவாத சோசலிசம் ஆகியவற்றிலிருந்து அவை தோன்றியுள்ளன. இருந்த போதிலும் மார்க்சியத்திற்குள் இவற்றை இறுதியாக மாற்றியமைத்ததற்கான அடிப்படைக் காரணங்களாக மார்க்ஸ் கொண்டிருந்த ஆழமான அவதானிப்புகள், அவர் வாழ்ந்த காலத்திலும், மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கான வடிவம் குறித்த அவரது ஆழ்ந்த அறிவிலும் வேர்கொண்டிருந்தன. “உலகத்தையே மாற்றும் வகையில் கண்டறியப்பட்ட கருத்துக்களையோ, உருவாக்கப்பட்ட கொள்கைகளையோ அடிப்படையாகக் கொண்டடு அமைதவை அல்ல கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ளும் கோட்பாட்டு முடிவுகள். பொதுவான வார்த்தைகளில் சொன்னால், அவை நம் கண்களுக்கு முன் நடந்துகொண்டிருக்கும் வரலாற்று இயக்கத்திலிருந்து, வர்க்கப் போராட்டத்திலிருந்து எழுகின்ற வர்க்க உறவு நிலைமைகளில் இருந்தே அந்த முடிவுகளை வந்தடைகிறார்கள்.

மனித குல வரலாற்றின் நெடிய போக்கை கணக்கில் கொண்டால் மட்டுமே, நம்மால் வரலாற்று இயக்கப் போக்குகளின் சாரத்தையும், சமகால வளர்ச்சிகளின் திசைப்போக்குகளையும் குறித்த பார்வையை வந்தடைய முடியும். மார்க்சின் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் பற்றிக் கூறும் போது, “மனித சமுதாயம் உருவாக்கிய எதனையும் மறுதலிக்காமல், அவையனைத்தையும் நன்கு ஆய்ந்தறிந்து அவர் விமர்சனப்பூர்வமாக மாற்றியமைத்தார். அவற்றை மறுபரிசீலனை செய்தார், விமர்சனத்திற்கு உள்ளாக்கினார், மனித சிந்தனையை உருவாக்கிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மீது அதனை உறுதி செய்தார்., முதலாளித்துவ வரையறைகளால் சூழப்பட்ட அல்லது முதலாளித்துவ முடிவுகளால் பிணைக்கப்பட்டுள்ள மக்களால் வந்தடைய முடியாத தீர்மானங்களை அவர் வரையறுத்தார்” என்று குறிப்பிடுகிறார் லெனின். மார்க்சின் சிந்தனைகள் உருவான காலத்திலிருந்தே, கால நிலைமைகளை மாற்றியமைக்கவும் தொடங்கின; அவரின் கருத்துக்களும், கோட்பாடுகளும்

அறிவியல் ரீதியிலான தத்துவம்:

மார்க்சியம் என்பது ஒரு அறிவியல் கோட்பாடாக இருக்கின்றது. அது மனித சமுதாயத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. தன்னுடைய விஞ்ஞான சோஷலிசம் குறித்த கருத்துக்களை மார்க்ஸ்  உருவாக்கிய காலத்திற்கு வெகு முன்பிருந்தே இருந்து வந்த கற்பனாவாத சோசலிஸ்டுகள் சமுதாயத்தைப் பீடித்திருக்கும் துன்பங்களைக் கண்டு துயரம் அடைபவர்களாக, மிகச்சிறந்த சமுதாயம் குறித்த நல்ல பல கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தாலும், சமுதாயத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்புகளை புரிந்து கொண்டவர்களாக அவர்கள் இல்லாததால், தங்களுடைய கொள்கைகளை அடைவதற்கான சிறந்த வழி எதுவும் அவர்களுக்கு கிட்டவில்லை. இதன் விளைவாக, சமுதாய வளர்ச்சியின் மீது உண்மையான தாக்கத்தை அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களால் ஏற்படுத்த இயலவில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க பொருள்முதல்வாதம்,  உபரி மதிப்பு குறித்த கோட்பாடு போன்ற மார்க்சிடமிருந்து உருவான கருத்துக்கள் மனித சமுதாயத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பொதுவான கட்டமைப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. முதலாளித்துவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற குறிப்பிட்ட விதிகளை அவை வெளிப்படுத்தின. தேவை என்ற உலகில் இருந்து சுதந்திரம் என்ற உலகை நோக்கி மனிதகுலம் நகர்வதற்கு இத்தகைய கண்டுபிடிப்புகள் வழிவகுத்தன. மேலும் மனிதகுலம் தனக்கான  சுதந்திரம் மற்றும் விடுதலையை உணர்ந்து கொள்வதற்கான பாதையில் ஒளிபாய்ச்சுபவையாகயும் அவை இருந்தன. .

மார்க்சியம் என்பது மக்கள் சார்ந்த கோட்பாடாக இருக்கிறது. தங்களுடைய சுயமரியாதையை மக்கள் அடையும் வகையில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட சிந்தனையாக அது இருந்தது. மிகப் பரந்ததாக, ஆழ்ந்ததாக மார்க்சியம் இருந்த போதிலும், மனிதகுல விடுதலைக்கான குறிக்கோள் என்று அதனை ஒரே வாக்கியத்தில் மிகச் சுருக்கமாக நம்மால் கூற முடியும். சமுதாயத்தில் மேலாதிக்கம் கொண்ட கோட்பாடுகளாக, மார்க்சின் காலத்திற்கு முன்னால் இருந்த கோட்பாடுகள் அனைத்தும் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கின்ற வகையிலேயே இருந்தன. ஆனால் மார்க்சியம்தான் மக்களுடைய பார்வையில் மனிதகுலத்திற்கான சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான வழியைத் தேடுகின்ற முதல் கோட்பாடாக இருந்தது. எந்த அடக்குமுறையோ அல்லது சுரண்டலோ இல்லாத, மக்கள் அனைவரும் சமமாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்ற சிறந்த சமுதாயத்தை இறுதியில் உருவாக்குவதற்கான வழியைத் தெளிவுபடுத்திக் காட்டுவதற்கான அறிவியல் கோட்பாடுகளை மார்க்சியம் பயன்படுத்துகிறது, மக்கள் மத்தியில் நன்கு வேரூன்றியுள்ளதால், மார்க்சியத்தின் செல்வாக்கானது காலம் மற்றும் எல்லைகளைத் தாண்டியதாக இருக்கிறது. வரலாற்றை முன்னெடுத்துச் செல்லுகின்ற பாதையே மனிதகுலத்திற்கான சரியான பாதை என்பதை மார்க்சியம் தெளிவுபடுத்துகிறது.

நடைமுறைக்கு வழிகாட்டி:

மார்க்சியம் என்பது ஒரு நடைமுறைக் கோட்பாடாக இருக்கிறது. தங்கள் செயல்களின் வழியாக உலகை மாற்றுவதை நோக்கி மக்களை அது வழிநடத்துகிறது. “சமூக வாழ்க்கை அனைத்தும் அவசியமான வகையில் நடைமுறைக்கானதாக உள்ளது”, மேலும்

“தத்துவஞானிகள் இந்த உலகை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் அதனை மாற்ற வேண்டியதுதான் முக்கியம்”

என்கிறார். இருத்தலையும், நடைமுறையையும் உள்ளடக்கியிருப்பதே மார்க்சியத்தின் பண்பாகும், அதன் நடைமுறைத்தன்மையே மார்க்சிய கோட்பாட்டை மற்ற கோட்பாடுகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. படிப்போடு தன்னை ஒடுக்கிக் கொள்ளும் புலமை என்றில்லாமல், மார்க்சியமானது வரலாற்றில் மக்களுடைய பங்கில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. மனிதகுலத்தின் விடுதலையை முன்னெடுப்பதற்கான நடைமுறையில்தான் மார்க்சியம் உருவானது, தெளிவானது, மேம்பாடடைந்தது. அது இந்த உலகத்தைப் புரிந்து கொள்ளவும், மாற்றியமைக்கவும் மக்களுக்கு உள்ளூக்கம் தருகின்ற ஆற்றல் மிகுந்ததாக இருக்கிறது.

மார்க்சியம் எல்லையற்று, தொடர்ந்து வளர்கின்ற தத்துவமாக இருக்கின்றது. எப்போதும் காலத்தை முந்தி நிற்கிறது. மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல என்றும், அது நடைமுறை மாற்றங்களின் ஊடாக வளர்க்கப்படுகிற, செயல்முறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்றும் திரும்பத் திரும்ப மக்களிடம் மார்க்ஸ் அறிவுறுத்தி வந்தார். மார்க்சிய தத்துவ வளர்ச்சியின் வரலாறானது காலம், நடைமுறை மற்றும் அறிதல் ஆகியவற்றின் மாற்றங்களுக்கிணங்க, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தவர்களால் தொடர்ந்து முன்னேற்றப்பட்ட ஒன்றேயாகும். இந்த வரலாறு, மனிதகுlலத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் சாதனைகள் அனைத்தையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டு தொடர்ந்து தன்னைத் தெளிவுபடுத்திக் கொள்கிற வரலாறாகும். எனவேதான், மார்க்சியம்  தன்னுடைய கவர்ச்சிகரமான இளமைத்தன்மையை தக்கவைத்துக் கொண்டு சமகால வளர்ச்சிப் போக்குகளில் புதிய பிரச்சனைகளை ஆராய்வதுடன், மனிதகுலத்தை எதிர்கொள்கின்ற புதிய சவால்களுக்கு பதிலளிப்பதாகவும் இருக்கிறது.

தத்துவார்த்தக்கருவி:

“அறிவியலின் உச்சாணிக் கொம்பில் ஏற விரும்புகின்ற ஒரு நாடு, தத்துவார்த்த சிந்தனைகள் எதுவுமின்றி அதனை அடைய முடியாது” என்று ஏங்கெல்ஸ் ஒரு முறை கூறினார். சீனர்களாகிய நாம் தேச மறுசீரமைப்பை அடைய வேண்டுமென்றால், அதேபோன்று தத்துவார்த்த சிந்தனைகள் எதுவுமின்றி அடைய முடியாது. மார்க்சியம் என்பது நமது கட்சிக்கும், தேசத்துக்கும் வழிகாட்டுகின்ற கோட்பாடாக இருக்கிறது. இந்த உலகைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கும், அதன் அடிப்படை வடிவங்களைப் புரிந்து கொள்வதற்கும், அதன் உண்மையை அறிந்து கொள்வதற்கும், மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் நாம் பயன்படுத்துகின்ற வெல்ல முடியாத, மிகச் சிறந்த கோட்பாட்டுக் கருவியாக மார்க்சியம் இருக்கிறது. 

மார்க்சியக் கருத்துக்களும், கோட்பாடுகளும் மிகப் பரந்து, ஆழமானவையாக இருக்கின்றன, திரும்பத் திரும்ப படித்தாலும் கூட அவை எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலேயே இருக்கின்றன. இந்தப் புதிய யுகத்தில், மார்க்சைப் படிக்க வேண்டிய தேவை சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு இன்னும் இருக்கிறது. மார்க்சியத்தைப் பயில்வதோடு, அதை நடைமுறையிலும் நாம் கடைப்பிடிக்க  வேண்டியிருக்கிறது. அதன் மூலம், இந்தப் புதிய யுகத்தில் இன்னும் உறுதியான நம்பிக்கையுடனும், ஞானத்துடனும் சீன சோசலிசத்தை நாம் நிலைநிறுத்தி மேம்படுத்த முடியும்.  

மனித சமூக மேம்பாடு:

மார்க்சைப் பயில்வதற்கு, மனித சமுதாயத்தின் வளர்ச்சிக் கட்டங்கள் குறித்த மார்க்சின் சிந்தனையை கற்று, கடைப்பிடிப்பது அவசியம்.  மனித சமுதாயம் இறுதியில் கம்யூனிசத்தை நோக்கியே நகரும் என்பதை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் மார்க்ஸ் வெளிப்படுத்தினார். எதிர்காலச் சமுதாயத்தில் “ஒவ்வொருத்தருக்குமான முன்னேற்றமே அனைவருக்குமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்கிற வகையில் நாம் இணைந்திருக்க வேண்டும்” என்பதை உறுதியாக நம்பிய மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோர், “பாட்டாளி வர்க்கத்திற்கு இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர வேறெதுவும் இல்லை. அவர்கள் வெற்றி காண வேண்டிய உலகம் இருக்கிறது.” என்று கூறினர். தங்கள் மீதும், சமுதாயத்தின் மீதும், மனித வளர்ச்சியின் மீதும் ஆளுமை கொண்டவர்களாக மக்கள் மாறிய பிறகு வரலாற்றின் அலை முன்னோக்கி மட்டுமே நகரும் என்றும், நடப்பில் உள்ள நிலைமைகளின் தொடர்ச்சியான மாற்றங்களின் மூலம் உணரக்கூடியதாக கம்யூனிச லட்சியம்   இருக்கும் என்றும் மார்க்ஸ் உறுதியுடன் நம்பினார். கம்யூனிஸ்டுகளின் தடுமாற்றமில்லாத லட்சியங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கான தத்துவார்த்த அடித்தளத்தை மார்க்சியம் நிலைநிறுத்துகிறது. உலகளாவிய கண்ணோட்டங்கள், இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் ஆய்வு நெறிமுறைகள் குறித்த திறம் நம்மிடம் அவசியம் இருக்க வேண்டும். கம்யூனிசத்தை உணர்ந்து கொள்வது என்பது ஒவ்வொரு அடியாக இலக்கை நோக்கி நாம் எடுத்து வைக்கின்ற வரலாற்றுச் செயல்முறை என்பதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இணைந்து முன்னெடுக்கும் லட்சியமான சீன சோஷலிசம் மற்றும் தற்போது நாம் ஈடுபட்டிருக்கும் முயற்சிகள் ஆகியவற்றை கம்யூனிசத்தின் உன்னத லட்சியத்துடன் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. சீன சோசலிசத்தின் பாதை, கோட்பாடு, அமைப்பு, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது முழு நம்பிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். சீனக் கம்யூனிஸ்டுகளின் கருத்தியல்கள், நம்பிக்கைகளுடன் நம்மைப் பிணைத்துக் கொள்ள வேண்டும். மார்க்சைப் போல நாம் இருக்க வேண்டும். நமது வாழ்நாள் முழுவதும் கம்யூனிசத்திற்காகப் போராட வேண்டும்.

மக்களுடைய நிலைப்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் வகையில் மார்க்சின் சிந்தனையை கற்று, கடைப்பிடிப்பது, மார்க்சைப் பயில அவசியமாகும். மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவது மார்க்சியத்தின் தனித்துவமான தன்மையாக இருக்கிறது. மார்க்சின் கூற்றுப்படி, வெகுமக்களின்  செயல்பாடுகளே வரலாற்றுச் செயல்பாடுகளாகும். தங்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு மக்களைத் தயார்ப்படுத்துவதையே, மார்க்சின் வாழ்க்கையைப் பின்தொடர்கிற ஒருவர் அறிகிறார். நமது அடிப்படையான நிலைப்பாடு என்பது மக்களுக்கானது என்பதையும், மக்களுடைய நல்வாழ்வுக்காகப் போராடுவதே நமது அடிப்படையான பணி என்பதையும் நாம் எப்போதும் உறுதிசெய்துகொண்டே இருக்க வேண்டும். மக்கள் அனைவருக்காகவும் முழுமனதுடன் பணி புரிவது என்ற நமது அடிப்படைக் கொள்கைக்கு உறுதுணையாக இருந்து வெகுஜன வழியை நாம் முன்னெடுக்க வேண்டும். மக்களுடைய பிரதான நிலைப்பாடுகளையும், அவர்களின் படைப்பாற்றலையும் நாம் மதிக்க வேண்டும். அவர்களோடு எப்போதும் நெருக்கமான உறவை நாம் வைத்திருக்க வேண்டும். துளைக்க இயலாத பெருஞ்சுவருக்குள் நமது பலத்தை வழிநடத்த வேண்டும். வரலாற்றை முன்னகர்த்தும் வகையில் மக்களை ஒன்றிணைத்து, அவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்த வேண்டும். இது வரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்களுக்கு இசைவான தேர்வாக அவசியம் இருக்கவேண்டும் என்பதுடன், நமது சொந்த முயற்சியில், நம்முடைய நோக்கங்களுக்கு உண்மையாக இருக்கின்ற வகையில், கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பாகவும் இருக்கிறது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி:

மார்க்சைப் பயில்வதற்கு, உற்பத்தி சக்திகள் மற்றும் உறவுகள் குறித்த மார்க்சின் சிந்தனையை கற்று, கடைப்பிடிப்பது அவசியமாகின்றன. உற்பத்தியின் பொருளுயாத சக்திகளே எல்லா சமூக நிலைமைகளுக்குமான பொருளியல் முன்நிபந்தனைகளை உருவாக்குகின்றது, மேலும் குறிப்பிட்ட கட்டத்தில் அடைந்துள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ப நிலவும் உற்பத்தி உறவுகளின் ஒட்டுமொத்தமே ஒரு சமூகத்தின் பொருளாதார அடித்தளமாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளே ஒரு சமுதாயத்தை முன்னேற்றும் ஆற்றல் வாய்ந்த, புரட்சிகரமான காரணிகளாக இருக்கின்றன. “மனிதர்களுக்கு பெருமளவில் கிடைக்கும் இந்த உற்பத்தி சக்திகள் சமுதாயத்தின் இயல்பை நிர்ணயிக்கின்ற ஆற்றலைக் கொண்டுள்ளன”. உற்பத்தி சக்திகளுக்கும், அவற்றின் உறவுகளுக்கும் இடையிலான மற்றும் பொருளாதார அடித்தளத்திற்கும், பெரிய கட்டுமானங்களுக்கும் இடையிலான பரஸ்பரத் தொடர்புகளும், கட்டுப்பாடுகளுமே சமுதாய வளர்ச்சியை முழுமையாக நிர்வகிக்கின்றன. தேசிய உற்பத்தி சக்திகளைக் கட்டவிழ்த்து விடுவதும் வளர்த்தெடுப்பதும் சோசலிசத்தின் அடிப்படைக் கடமைகளாகும். இதுகுறித்து தொடர்ந்து ஆராய்வதும், கடினமாக உழைப்பதும் சீனக் கம்யூனிஸ்டுகள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து, குறிப்பாக சீர்திருத்தங்கள் மற்றும் சந்தையைத் திறந்து வைத்ததில் இருந்து, தேசிய உற்பத்தி சக்திகளை கட்டவிழ்த்து, வளர்ச்சி காண்பதில் உறுதியான வழிகளில் மக்களை வழிநடத்தியதன் மூலம், மேற்குலக நாடுகள் பல நூற்றாண்டுகள் எடுத்துக் கொண்டதற்கு மாறாக 70 ஆண்டுகளுக்குள்ளாகவே நமது கட்சி சாதித்திருக்கிறது. இதன் மூலம் ஏற்பட்ட நமது நாட்டின் அதிவேக உயர்வு நம்மை உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றியிருக்கிறது.

மக்கள் ஜனநாயகம்:

மார்க்சைப் பயில்வதற்கு, மக்கள் ஜனநாயகம் குறித்த மார்க்சின் சிந்தனையை கற்பதும், கடைப்பிடிப்பதும் அவசியம். “பாட்டாளி வர்க்க இயக்கம் என்பது தன்னறிவு கொண்ட, மிகப்பெரும்பான்மையினரின் நலனைப் பாதுகாக்கும், மிகப்பெரும்பான்மையினரின் விடுதலைக்கான இயக்கமாகும்”, “பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வரும் போது, பழைய அரசு இயந்திரத்தைக் கொண்டே நிர்வகிக்க முடியாது” என்றும், “முந்தைய அரச அதிகாரம் தகர்க்கப்பட வேண்டும்… அதற்குப் பதிலாக புதிய, உண்மையான ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்” என்றும் மார்க்சும், எங்கல்சும் குறிப்பிட்டுள்ளனர். அரச அமைப்புகள் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதிலிருந்து மாறி அவர்களுக்கு சேவை செய்பவையாக, மக்களின் மேலாண்மையை ஏற்றுக் கொள்பவையாக இருக்க வேண்டும். அரசியல் வளர்ச்சியில் சோசலிசப்பாதையை சீன குணாதிசயங்களுடன் நாம் தொடர்ந்து தக்க வைத்திருக்க வேண்டும். கட்சித் தலைமையோடு சுமூகமாக ஒருங்கிணைந்திருப்பதை உறுதி செய்து, மக்களைக் கொண்டு நாட்டை வழிநடத்துவது மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு உறுதியளித்து சீனாவின் சோசலிச ஜனநாயக முன்னேற்றத்திற்கான வழியினை வகுக்க வேண்டும். மக்களைக் கொண்டு நாட்டை வழிநடத்துவதற்கான நிறுவன அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். சீனாவின் ஆட்சி முறை, திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். மக்களின் உற்சாகம், முன்முயற்சி, படைப்பாற்றல் ஆகியவற்றிற்கான முழு சுதந்திரத்தை வழங்கி மக்கள் ஜனநாயகத்தை முழுமையாக உறுதியாகத் திறம்படச் செயல்படுத்த வேண்டும்.

கலாச்சார மேம்பாடு:

மார்க்சைப் பயில்வதற்கு, கலாச்சார மேம்பாடு குறித்த மார்க்சிய சிந்தனைகளைக் கற்றலும், பின்பற்றுதலும் அவசியமாகும். வேறுபட்ட பொருளாதார சூழல் மற்றும் சமுதாய நிலைமைகளின் காரணமாக மக்களிடயே வேறுபட்ட கருத்துக்களும், கலாச்சாரங்களும் உருவாகும் என மார்க்ஸ் நம்பினார். இவ்வாறு கருத்துக்களையும், கலாச்சாரங்களையும் பொருளாதார அடித்தளமே தீர்மானிக்கிறதென்றாலும் அவையும் எதிர்வினை செய்கின்றன.  வளர்ச்சியடைந்த கருத்துகளும், கலாச்சாரமும் வெகுமக்களால் ஏற்கப்பட்டவுடன், தவிர்க்க முடியாத பெளதீக சக்தியாக மாற்றம் பெறுகின்றன. நேர்மாறான விதத்தில்,  காலம் கடந்த அல்லது தவறான கருத்துக்களை கைவிடாமல் தொடர்ந்தால் அவை சமூக முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாகின்றன. தத்துவ விழிப்புணர்வும், பண்பாட்டு உறுதியும் தேச முன்னேற்றத்திற்கான சக்திகளாகும்; மேம்பட்ட மதிப்பீடுகளும், சிந்தனைச் சுதந்திரமும் ஒரு சமூகத்தின் மூலாதாரங்களாகும். ஒரு தேசத்தின் மையச் சிந்தனையை வடிவமைப்பதாகவும், மாற்றியமைப்பதாகவும் இருக்கிறது. சீன நிலைமைகளோடு ஒன்றிச் செயல்படும் அதே சமயம் நாம் நவீனமயம், உலக நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தையும் தழுவுகிற தேவை நம் தேசத்தின் முன் உள்ளது. மார்க்சியமே நம்மை வழிநடத்துகின்ற சிந்தனை என்ற நிலைப்பாட்டை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மேம்பட்ட சோசலிசக் கலாச்சாரத்தை வளர்த்து, சோசலிசக் கலாச்சார, ஒழுக்க நெறிகளை கடைப்பிடிப்பதை வலுப்படுத்த வேண்டும். சமுதாய வளர்ச்சியின் அனைத்துப் பகுதிகளும் முக்கியமான சோசலிச விழுமியங்களால்  ஊக்குவிக்கப்பட்டுள்ளனவா என்பதையும், நம்முடைய சிறந்த பாரம்பரியக் கலாச்சாரத்தின் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் மற்றும் புதுமையான வளர்ச்சிக்கு அவை ஊக்கமளிக்கின்றனவா என்பதையும் நாம் கண்டறிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய அரசியல் விழிப்புணர்வு மற்றும் தார்மீக மதிப்பீடுகளை நமது மக்கள் உயர்த்திக் கொள்ள உதவுவதோடு, நேர்த்தியான கலாச்சாரத்தை அவர்கள் பாராட்டுவதற்கும் நாம் உதவ வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், நம்மால் சீனக் கலாச்சாரத்திற்கு புத்துணர்வை அளிக்க முடியும்.

சமூக வளர்ச்சிக்கு மார்க்சியம்:

மார்க்சைப் பயில்வதற்கு, சமூக வளர்ச்சி குறித்த மார்க்சிய சிந்தனைகளைக் கற்றலும், நடைமுறைப்படுத்தலும் அவசியம். எதிர்காலச் சமூகத்தில் “உற்பத்தி என்பது, அனைவருக்கும் செல்வத்தை வழங்கிடும் நோக்கில் கணக்கிடப்பட்ட ஒன்றாக இருக்கும்” என்றும் “அனைவருக்குமானவற்றை அனுபவித்திட அனைவரும் பங்கேற்பது” அதன் வெளிப்பாடாக இருக்கும் என்றும் மார்க்சும் ஏங்கல்ஸும் கூறினர். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கோதா வேலைத் திட்டம் குறித்த திறனாய்வு, மூலதனம் மற்றும் பிற மார்க்சின் படைப்புகளின் மீது ஏங்கெல்ஸ் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டார். “ஆரோக்கியமான, பயனுள்ள வேலை, போதுமான செல்வம், ஓய்வு, உண்மையான, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை அனைவருக்கும் தருவதாக சோசலிசத்தின் கீழ் உள்ள சமூகம் இருக்க வேண்டும்”. நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் விரும்புகிறார்கள், அவர்கள் அதனை அடைவதற்கு உதவுவதை நம் இலக்காகக் கொள்ள வேண்டும். மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான தத்துவத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும், மக்கள் முன் இருக்கின்ற மிக முக்கியமான உடனடிப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கான பாதுகாப்பான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தி தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். அனைவருக்குமான சமூகம், சமூக நீதியுடைய சமூகம் என்பனவற்றை முன்நிறுத்தி, உயர்தரத்திலான குழந்தைப் பராமரிப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சேவைகள், முதியோர் பராமரிப்பு, வீட்டு வசதி, சமூக உதவி ஆகியவற்றைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்த வேண்டும். சீர்திருத்தங்களாலும், சமூக மேம்பாட்டினாலும் கிடைக்கும் பலன்கள் அனைத்து மக்களையும் நியாயமான வழியில் சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், முழுமையான மனித வளர்ச்சியை ஊக்குவித்து, அனைவராலும் வளமையைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

மனிதர்களும் இயற்கையும்:

மார்க்சைப் பயில்வதற்கு, இயற்கைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மார்க்சிய சிந்தனைகளை கற்பதும், பின்பற்றுதலும் தேவைப்படுகின்றன. “இயற்கையின் மூலமே மனிதன் உயிர் வாழ்கிறான்” என்பதை மார்க்ஸ்  உணர்ந்திருந்தார். மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான வளமான மண், ஆறுகள், ஏரிகள், மீன் வளம் மிகுந்த கடல்கள் என்று அனைத்தையும் கொண்டிருக்கும் இயற்கை, உற்பத்திக்குத் தேவையான ஆதாரங்களையும் மனிதனுக்கு வழங்குகிறது. மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான சூழலைக் கொண்டதாக இயற்கை உலகம் இருக்கிறது. மனிதர்களாகிய நாம் இயற்கையோடு இயைந்து உற்பத்தி செய்ய, வாழ, வளர்ச்சி அடைய முடிந்தால், இயற்கை என்பது நமக்குத் தேவையான அனைத்தையும் கொடையாக வழங்கும். இருப்பினும், மனிதன் தன்னுடைய அறிவினாலும், கண்டறியும் மேதைமையாலும் இயற்கையின் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் போது, இயற்கை அவனைத் தாக்குகிறது”. இயற்கையே அனைத்து உயிர்களுக்கும் தாய்.  மனிதகுலமும், இயற்கையும் இணைந்து ஒரு உயிரியல் சமூகமாக இருக்கின்றன. மனித இனம் இயற்கையைப் போற்றி, அதன் வழிகளைப் பிந்தொடர்ந்து, அதனைப் பாதுகாக்க வேண்டும். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை நாம் உறுதி செய்ய வேண்டும், தெளிவான நீர்நிலைகளும், பசுமையான மலைகளும் விலைமதிப்பற்ற சொத்துக்கள் என்பதை உறுதியாக உணர்ந்து, உளப்பூர்வமாக இந்தப் புரிதல் மீது நாம் செயல்பட வேண்டும். சுற்றுச்சூழல் பண்பாட்டைக் கட்டமைத்து, அழகானதொரு சீனாவை உருவாக்குவதற்காக சமுதாயத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தெளிவான நீர்நிலைகள், பசுமையான மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் இயற்கை, வாழ்க்கை, இருத்தல் ஆகியவற்றின் அழகை ரசிப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதிகமான உற்பத்தி, உயர்வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஆகியவற்றைக் கொண்ட நீடித்த வளர்ச்சி மாதிரி ஒன்றை நாம் மேற்கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சி:

மார்க்சிய அரசியல் கட்சியை வளர்ப்பதற்கான மார்க்சிய சிந்தனைகளைக் கற்றலும், கடைப்பிடித்தலும் மார்க்சைப் பயில்வதற்கு அவசியமாகும். “முதலாளி வர்க்கத்திற்கு எதிரான போராட்ட உழைக்கும் வர்க்கத்தின் போராட்டமானது பல்வேறு வளர்ச்சிக்கட்டங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது, எல்லாச் சூழலிலும், எல்லாவிடத்திலும் அந்த இயக்கத்தின் நலனை ஒட்டுமொத்தமாக பிரதிபலிக்கின்றனர்” என்பதை மார்க்ஸ் விளக்கியுள்ளார், “பாட்டாளி வர்க்கத்தின் ஒட்டுமொத்த நலன் அல்லாமல் தனிப்பட்ட விருப்பங்கள் ஏதுமில்லை”, இது தவிர “மிகப்பெரும்பான்மையானவர்களின் நலனுக்காக”, ஒரு கம்யூனிச சமுதாயத்தை உருவாக்குவதற்காக போராடவும் அவசியம் உள்ளது. “கட்சியின் இயக்கத்தின் அளவுமட்டத்தைக் கொண்டு ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னுதாரணங்களை” ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயம் உருவாக்க வேண்டும். எப்போதும் மக்களுடன் இணைந்து நின்று அவர்களின் நலன்களுக்காக போராடுவதாக இருப்பதே, மார்க்சிய அரசியல் கட்சிக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடாக இருக்கிறது. நமது போராட்டங்கள், திட்டங்கள், நோக்கங்கள், கனவுகளை ஒருங்கிணைத்து, அரசியல் நேர்மையை நிலைநிறுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, பெருமளவில் சிந்தித்து, தலைமையைப் பின்பற்றி அதனோடு நம்மை நேர்நிறுத்திக் கொள்ள வேண்டும். கட்சியின் மீது முழுமையான, கண்டிப்பான ஆளுமையை முன்னெடுத்துச் செல்ல நாம் தொடர்ந்து போராட வேண்டும். அரசியல் ரீதியாக கட்சியைப் பலப்படுத்தவும், ஒட்டுமொத்த கட்சித் தலைமையை பலப்படுத்தவும், மத்திய குழு மற்றும் அதன் மையப்படுத்தப்பட்ட, ஐக்கியப்பட்ட தலைமையின் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். உண்மையை முன்னிறுத்தி, தவறுகளைச் சரிசெய்து கொள்கிற கம்யூனிஸ்ட்களின் அரசியல் தன்மையை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற்றதாக, தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வதற்கான தைரியம் மிக்கதாக, அனைத்து சவால்களையும் எதிர் கொள்ளும் திறன் கொண்டதாக, அனைத்து காலகட்டத்திலும் முன்னணியில் இருக்கின்ற துடிப்பான மார்க்சிய ஆளும் கட்சியாக கட்சியைக் கட்டியமைக்க வேண்டும்.

புதியன படைப்பாக்கம்:

அறிவியல் கோட்பாடுகளை அணுகுவதற்கு அறிவியல் அணுகுமுறை தேவைப்படுகிறது. “மார்க்சின் ஒட்டுமொத்த சிந்தனைகளும் ஒரு வழிகாட்டுத் தொகுப்பாக, வழிமுறையாக அமைந்திருக்கவில்லை. முன்பே தயாரிக்கப்பட்ட சூத்திரங்களை அதிலிருந்து பெற முடியாது, கூடுதலாக ஆய்ந்து அறிவதற்கோ, ஆய்வுக்கான வழிமுறையைப் பெறுவதற்கோ உதவுகிறவை அல்ல” என்று தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை ஏங்கெல்ஸ் ஒருமுறை வெளியிட்டார், அவர் மேலும் குறிப்பிடுகையில், கோட்பாடுகள் எனப்படுபவை “வரலாற்று விளைபொருள்களாக இருப்பதால், அவை வெவ்வேறு காலங்களில் வேறுபட்ட வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. எனவே அவற்றின் உள்ளடக்கங்களும் மிகவும் மாறுபட்டவையாகவே இருக்கின்றன.” என்றார். விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நம்மால் நிராகரிக்க முடியாது. ஒருவேளை அவ்வாறு நிராகரித்து ஒதுக்கிவிட்டால், சோசலிசம் என்பதே காணாமல் போய் விடும். அதே நேரத்தில், விஞ்ஞான சோஷலிசம் என்பது மாறாத கொள்கை அல்ல. வெறுமனே நமது வரலாற்றையும் கலாச்சாரத்தையும் தொடருகின்ற வகையில் பிரதியெடுக்கின்ற வகையிலோ அல்லது வெறுமனே இயந்திரத்தனமாக மரபுவழியிலான  மார்க்சிய ஆசிரியர்களின் கருத்துக்களைப் பயன்படுத்துகின்ற வடிவத்திலோ, அல்லது பிற நாடுகளில் சோசலிசம் நடைமுறைப்படுத்தப்படுவதை மறுபதிப்பு செய்வதாகவோ அல்லது வெளிநாட்டில் இருந்து வருகின்ற நவீனமயமாக்கலின் போலியாகவோ சீனாவில் நடைபெற்றிருக்கும் மிகப் பெரிய சமூக உருமாற்றம் என்பது இருக்கவில்லை. சோசலிசம் என்பதற்கு மரபுசார்ந்த, மாறுபடாத வடிவம் என்பது பொருளல்ல. நாட்டின் குறிப்பிட்ட சூழல், வரலாறு, கலாச்சார மரபுகள், சமகாலத் தேவைகள் ஆகியவற்றோடு, விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை நெருக்கமாக இணைப்பதன் மூலமாகவும் சோசலிச நடைமுறைகளை பரிசீலித்து, ஆய்வு செய்து தொடர்ந்து முன்னெடுப்பதாலும் மட்டுமே, அதன் செயல்திட்டம் சாத்தியமாகும்.

இந்தக் கோட்பாட்டின் வலிமை என்பது அதனைத் தொடர்ச்சியாக புத்தாக்கம் செய்வதிலேயே இருக்கிறது. மார்க்சியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது சீன கம்யூனிஸ்டுகளின் புனிதமான கடமையாக இருக்கிறது. சமகால சீனாவிலிருந்து பெறப்பட்ட ஏராளமான, எழுச்சி தருகின்ற அனுபவங்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவும், மனிதகுலத்தின் அனைத்து நாகரிகங்கள் குறித்த பரந்த உலகளாவிய பார்வையைப் பயன்படுத்தியும் இந்த உலகைப் பற்றிய ரகசியங்களை அறிந்து கொள்ளவும், அதன் தலைமையை நாம் ஏற்கவும் மார்க்சியத்தைக் கடைப்பிடிப்பதற்கான உறுதியுடன் தொடர்ந்து நாம் இருக்க வேண்டும். நம்மை நாமே விஞ்சுகிற வகையில் தொடர்ச்சியாக நம்மை புதுப்பித்துக் கொண்டு, நமது முன்னேற்றத்திற்காக மற்றவர்களின் பலங்களிலிருந்து பரவலாக கற்றுக் கொள்கின்ற வேளையில் நமது அடித்தளங்களைத் தொடர்ந்து பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இறுதியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுமை, சோசலிச வளர்ச்சி, மனித சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி, இந்த 21ஆம் நூற்றாண்டில், இன்றைய சீனாவில் மார்க்சியத்தின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கு  உள்ளீடாய் இருக்கின்ற விதிகளைப் பற்றி நமது புரிதலை விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.

தோழர்களே,

மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய சிந்தனையாளருக்கு மரியாதை செலுத்துவதற்கும், மார்க்சியத்தின் அறிவியல்பூர்வ உண்மை மீது நமக்கிருக்கும் உறுதியான நம்பிக்கையைத் தெரிவிப்பதற்கும் மார்க்சை நாம் இன்று நினைவு கூர்கிறோம்.

“இதுவரை நடந்திராத மிகப்பெரிய பிரம்மாண்டமான புரட்சி, பிரம்மாண்ட புரட்சிக்கான வாய்ப்பு, நமது பொருள்வாதக் கருத்தை விரிவாக்கி தொடர்வதற்கும், தற்போதைய காலகட்டத்தில் அதனைப் பயன்படுத்துவதற்குமான வாய்ப்பை, நமக்கு அளித்திருக்கிறது.” என்று ஏங்கெல்ஸ் ஒருமுறை கூறினார். நமக்கு முன்பாக இருக்கின்ற பாதையில் மார்க்சியத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மனித சமுதாயத்திற்காக மார்க்சும் ஏங்கல்ஸும் எதிர்பார்த்தவற்றை சீனா முழுமைக்கும் என்றும் நிரந்தரமாக இருப்பதாக விரிவுபடுத்தி அனைவரும் வியக்கத்தக்க எதிர்காலத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

(பெய்ஜிங், மே 4, 2018)

மார்க்சின் இறுதி ஆண்டுகள்

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் வெளியானது)

தமிழில்: ரமேஷ்           

மார்க்சுக்கு நல்லஆறுதலளித்து வந்த கார்ல்ஸ்பாத் வெந்நீர் ஊற்றுச் சிகிச்சையை ஜெர்மானிய சோசலிசத் தொழிலாளர் இயக்கத்துக்கு எதிராக பிஸ்மார்க் கொண்டு வந்த சட்டங்கள் தடுத்தன. 1878இலிருந்தே அவரது உடல் துன்பம் அதிகமாகி அவரது பணியையும் பெருமளவிற்குப் பாதித்தது. ஆனால் நோய்க்கும், வலிக்கும் விட்டுக் கொடுக்கும் மனிதரல்ல அவர். அந்த வகையில் அவர் இறுதி வரை தன் உடலோடு போராடிக் கொண்டேயிருந்தார்.

உடல்நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்ட உடனேயே அவர் மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தார். தனது வலிமை அனைத்தையும் திரட்டிக் கொண்டு, மூலதனத்தின் இரண்டாவது தொகுதியை பதிப்புக்கு அனுப்ப தயாரிப்புகளைத் தொடர்ந்தார். எனினும் தாங்க முடியாத தலைவலி, சித்ரவதை செய்த இருமல், நரம்பு அழற்சி, உடல் பலவீனம் ஆகியவற்றின் தொடர்த்தாக்குதல்கள் அவரது முயற்சிகளை மீண்டும் மீண்டும் தகர்த்து வந்தன. இவை சத்தமில்லாத, எனினும் வீரமிக்க போராட்டம் நிறைந்த ஆண்டுகளாகவே இருந்தன. பின்னர் ஒருமுறை எங்கெல்ஸ் குறிப்பிட்டது போல, அந்தக் காலத்தில் மார்க்சின் தயாரிப்புக் குறிப்புகள், சோர்வடையச் செய்த உடல் துயரத்துக்கெதிரான அவரது கடும்போராட்டத்திற்கான சான்றுகளாகவே இருந்தன. தனது இரும்பு உறுதியைத் தாண்டி, மார்க்ஸால் மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது புத்தகங்களை பதிப்பிப்பதற்கான தயாரிப்புகளைச் செய்ய முடியவில்லை.

ஜென்னியின் கடைசி வருடம்

தனது மனைவி எதிர்நோக்கிய நோயினால் ஏற்பட்ட துன்பம் அவருடைய துன்பத்தைவிட மார்க்சை மிகவும் சித்ரவதை செய்தது. நீண்ட காலமாகவே இறுதிப்படுத்த முடியாதிருந்த நோய், பின்னர் குணப்படுத்த இயலாத குடல் புற்றாக இருக்கலாம் என்று கண்டறியப்படது. ஜென்னி தனது கடுமையான வலியை ஆச்சரியமூட்டும் பொறுமையுடன் எதிர்கொண்டார், எனினும் அவர் தனது உற்சாகத்தை மட்டும் விடவேயில்லை. வலியால் அவதியுற்றாலும் கூட, துணிச்சலை விடாத அவர் அச்சமயத்தில் ஒரு மருத்துவருக்கு எழுதியிருந்தார்: “நான் கையில் கிடைக்கும் ஒவ்வொரு சுள்ளியையும் பற்றிக் கொள்கிறேன். என் அருமை மருத்துவரே, நான் இன்னும் அதிக காலம் வாழ விரும்புகிறேன். இது குறிப்பிடத்தக்க ஒன்றுதான்: ஒருவரின் கதை முடிவுக்கு வரும் நேரம் நெருங்கி வர, வர, அவர் ‘கண்ணீரின் பூவுலக மதிப்புக்காக’ மேலும், மேலும் ஏங்குகிறார்.”

ஜென்னி மார்க்ஸ் தனது வாழ்க்கையின் இறுதிஆண்டுகளில் பல்வேறுநாடுகளில் செயல்பட்டு வந்த தொழிலாளர் இயக்கங்களின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் ஆர்வத்துடன் கவனித்து வந்தார். 1880இன் இறுதியில் தமது வீட்டுக்கு வந்த ஆகஸ்ட் பேபலை வரவேற்பதில் அவரும், மார்க்சும் மிகவும் மகிழ்ச்சியுற்றனனர். லண்டனில் இருந்த இரண்டு “வயதான மனிதர்களிடம்” ஜெர்மன் கட்சியின் உள்நிலைமை, பொதுமக்களின் எண்ணப்போக்குகள் ஆகியவை குறித்து தகவல் தெரிவிக்கவே பேபல் அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.. மார்க்ஸ் தம்பதிகளிடம் அவர் கட்சியின் உத்திகள் பற்றி விவாதித்ததுடன், சோஷியல்டெமாக்ரட் இதழுக்கு எழுதுவதற்கான ஒப்பந்தம் ஒன்றையும் அவர் அப்போது போட்டார். மார்க்ஸ், அவரது மனைவி ஜென்னி, எங்கெல்ஸ் ஆகிய மூவரும் நீண்டகாலமாகக் கடிதங்கள் மூலமாகவே தாங்கள் அறிந்திருந்த மக்களுடன் மிகநெருக்கமாக இருந்த ஜெர்மனி தொழிலாளர் வர்க்கத்தின் இந்த ஊக்கம் நிரம்பிய, அறிவார்ந்த தலைவர் மீது மிகுந்த தாக்கம் கொண்டனர்.. மார்க்ஸ் உடனடியாக அவரை மிகவும் சகோதர பாசத்துடன் “து”(அதிகாரபூர்வமற்றமுறையில் அழைப்பது. ஒருமை என்றும் கொள்ளலாம்) என்று விளித்தார். மார்க்சின் வீட்டுக்குத் தான் சென்றது குறித்து முப்பதாண்டுகளுக்குப் பிறகு பேசும்போது கூட பேபல் அதனை மிகுந்த நெகிழ்ச்சியுடன் இதைக் குறிப்பிட்டார்:

“நாங்கள் லண்டனில் கழித்த அந்த ஒரே ஞாயிற்றுக்கிழமையன்று, எல்லோரும் மார்க்சின் மேசைக்கு அழைக்கப்பட்டோம். நான் ஏற்கனவே திருமதி ஜென்னி மார்க்சுடன் அறிமுகமாகி விட்டேன். அவர் எனது பெருமதிப்பை உடனடி யாகப் பெற்றுவிட்ட, தனித்துவம் மிக்க ஒரு பெண்மணி. தனது விருந்தினர்களை எப்படி உற்சாகமாகவும், அன்புடனும் உபசரிப்பது என்பதை அவர் நன்கு அறிந்தவர். அந்த ஞாயிறன்று, தனது குழந்தைகளுடன் அங்கு வந்திருந்த, ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாங்கெட்-ஐ மணம் புரிந்து கொண்டிருந்த ஜென்னியின் மூத்த மகளையும் சந்தித்தேன். அந்தக் காலத்தில் மனித குலத்தின் எதிரி என எங்கும் கண்டனம் செய்யப்பட்டு வந்த மார்க்ஸ் தனது பேரக் குழந்தைகளுடன் அவ்வளவு மென்மையாகவும், அன்புடனும் விளையாடிக்கொண்டிருந்தார், அந்தக் குழந்தைகள் தமது தாத்தாவை எவ்வளவு நேசித்தனர் என்பதைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். மூத்த மகள் ஜென்னியைத் தவிர அவரது இரண்டு இளைய பெண்களான டுஸ்ஸி என்று அழைக்கப்பட்ட எலியனார் (இவர் பின்னாளில் ஏவ்லிங்கின் மனைவி ஆனார்), பால் லஃபார்கின் மனைவியான லாரா ஆகியோரும் அங்கு இருந்தனர். கருத்த விழிகளைக் கொண்டிருந்த டுஸ்ஸி தனது தந்தையைப் போலவும், கருவிழிகளுடனும், சற்றே பொன்னிறக் கூந்தலுடன் இருந்த லாரா தனது தாயைப் போல வும் விளங்கினர். இருவருமே அழகாகவும், உற்சாகம் நிரம்பியவர்களாகவும் இருந்தனர்.”

அடுத்த நாள் பேபல் விடைபெற வந்தபோது, மார்க்சின் மனைவி மீண்டும் வலியில் துடித்தபடி படுக்கையில் இருந்தார். அவை மிகவும் கொடுமையான மாதங்களாகவே அவருக்கு இருந்தன. மார்க்ஸ் தனது மனைவியை விட்டு விலகாமல் அருகிலேயே இருந்தார். அவருக்கு மகிழ்ச்சியூட்டும் நோக்கத்துடன், மூத்தபெண்ணையும், அவரது குழந்தைகளையும் பார்ப்பதற்காக 1881 ஜூலை, ஆகஸ்டில் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்ல ஒரு பயணத்தையும் ஏற்பாடு செய்தார். மீண்டும் அவர்கள் லண்டனுக்குத் திரும்பியபோது ஜென்னி மிகவும் களைத்துப் போயிருந்தார்.

மார்க்சுக்கு நிகழ்ந்த மிகக் கசப்பான அடி

மனைவியின் உடல்நிலை குறித்த பதற்றத்தாலும், தூக்கமின்மையாலும் முற்றிலும் சோர்ந்து போன மார்க்ஸ் 1881 இலையுதிர் காலத்தில் கடும் நிமோனியாவால் தாக்கப்பட்டார். எலியனோர், லெச்சென் டெமுக் ஆகியோரின் தன்னலமற்ற பணிவிடையின் காரணமாகவே அவர் மீண்டார். ஜென்னியும், மார்க்சும் சேர்ந்து வாழ்ந்த கடைசி நாட்களைப் பற்றி எழுதிய எலியனோர், “என் அன்னையின் அறைக்குச் செல்லப் போதிய பலத்தை அவர் பெற்ற காலை நேரத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது” என்று குறிப்பிடுகிறார். “அந்த நேரத்தில் அவர்கள் மீண்டும் இளைஞர்களாக ஆனார்கள். புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கப் போகும் தம்பதியாக, அவள் அன்பான ஓர் இளம் பெண்ணாகவும், அவர் காதல்வயப்பட்ட ஓர் இளைஞனாகவும் அப்போது தோன்றினர். நோயால் தகர்ந்துபோன ஒரு முதியவராகவோ, மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு முதிய பெண்மணியாகவும், நிரந்தரமாக ஒருவருக்கொருவர் விடைபெறப் போகின்றவர்களாக அவர்கள் இருவரும் அப்போது இல்லை.”

ஜென்னி அனுபவிப்பதற்கு இன்னும் சில மகிழ்ச்சியான தருணங்கள் மீதமிருந்தன. மூலதனத்தின் மூன்றாவது பதிப்பு தேவைப்படுவதாக ஜெர்மனியிலிருந்து ஒரு செய்தி வந்தது. இங்கிலாந்திலிருந்து முதன்முறையாக மார்க்சை குறிப்பிடத்தக்க ஒரு விஞ்ஞானி எனவும், சோசலிச சிந்தனையாளர் என்றும் பாராட்டி ஒரு முன்னணிப் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அக்டோபர் இறுதியில் வென்றெடுத்த ஒரு தேர்தல் வெற்றியின் மூலமாக, நெருக்கடிநிலைச் சட்டங்களைத் தாண்டி தான் போராடுவதையும், மார்க்சின் படிப்பினைகளால் அதிகமான அளவில் தாக்கம் பெற்று வருவதையும் ஜெர்மானியத் தொழிலாளர் இயக்கம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

எங்கெல்சின் பாராட்டு

1881 டிசம்பர் 2 அன்று ஜென்னி காலமானார். மார்க்ஸ் தாங்க வேண்டியிருந்த மிகவும் கசப்பான தாக்குதல் அது. தனது அன்பிற்குரிய மனைவியின் இளைப்பாறும் இடத்துக்குக்கூட அவரால் உடனே செல்ல முடியவில்லை. அவரது பலவீனமான உடல்நிலை காரணமாக, ஹைகேட் கல்லறைக்குச் செல்லும் ஜென்னியின் இறுதி யாத்திரையில் பங்கேற்க மருத்துவர்கள் மார்க்ஸை அனுமதிக்கவில்லை. கல்லறையில் ஜென்னியின் இறுதி நிகழ்ச்சியில் அஞ்சலை உரை நிகழ்த்திய எங்கெல்ஸ், கணவர் மீதும், குடும்பத்தினர், தோழர்கள் மீதும் ஜென்னி வைத்திருந்த பாசம் குறித்தும், சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தின் மீதான அவரது விசுவாசம் குறித்தும் சுட்டிக் காட்டினார். பின்வரும் வார்த்தைகளுடன் அவர் தன் உரையை நிறைவு செய்தார்:

“இவ்வளவு கூர்மையான, விமர்சனப் புரிதலுள்ள ஒரு பெண்மணி, இவ்வளவு பாசமும் ஊக்கமும் உடையவர், இவ்வளவு பெரும் அர்ப்பணிப்புத்திறன் கொண்ட ஒருவர் – புரட்சிகர இயக்கத்துக்குச் செய்த பங்களிப்புகள் குறித்து ஒருபோதும் வெளிப்பார்வைக்குத் தென்பட்டதில்லை; எந்தப் பத்திரிகையும் அதை வெளியிட்டதுமில்லை. அவருடன் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அவர் செய்தது தெரியும்.

அவரது தனிப்பட்ட குணநலன்கள் குறித்து நான் பேசவேண்டியதில்லை. அவரது நண்பர்களுக்கு அவற்றைக் குறித்து தெரியும், அவர்கள் அதை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில் ஒரு பெண் தனது சொந்த மகிழ்ச்சியைக் கண்டிருப்பார் என்றால், அது இந்தப் பெண்தான்.”

தனது மனைவியின் மரணத்திலிருந்து கார்ல் மார்க்சால் விடுபடவே முடியவில்லை. “மூர்-உம் (மார்க்ஸின் நண்பர்கள் அவரை மூர் என்றே அழைப்பார்கள்) இறந்துவிட்டார்” என்று ஜென்னி இறந்த அந்த நாளில் எங்கெல்ஸ் உண்மையாகவே குறிப்பிட்டார். எனினும் வாழவேண்டும் என்ற உறுதி அவருக்குள் மீண்டும் எழுந்தது. அவரை செயலின்மைக்குத் தள்ளிய அந்தத் துன்பமிக்க நோயை வெல்ல அவர் உறுதியோடு இருந்தார். “நான் மீண்டு எழுவதற்கு சிறிது காலத்தை இழக்க வேண்டியுள்ளது என்பது துரதிர்ஷ்டம்தான்” என்று அமெரிக்காவிலிருந்த நண்பர் சோர்கேவுக்கு அவர் கடிதம் எழுதினார்.

அல்ஜீரியப் பயணம்

மருத்துவர்களின் ஆலோசனைப்படி நல்ல பருவநிலை நிலவிய இடங்களில் அடுத்த சில மாதங்களைக் கழித்து தன்னை மீட்டுக்கொள்ள அவர் முயன்றார். வைட் தீவின் வெண்ட்னோருக்கு அவர் முதலில் சென்றார். 1882 வசந்த காலத்தில் அவர் அல்ஜியர்சுக்குச் சென்றார். ஆனால் ஜென்னி இல்லாத மனவலி அவரை எங்கும் பின்தொடர்ந்தது. அத்தருணத்தில் அவர் எங்கெல்சுக்கு நெகிழ்ச்சியுடன் எழுதினார்,

“நடைமுறையில் சோக உணர்வுக்கு எதிராக மிகச்சில மனிதர்களே இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனினும், எனது சிந்தனைகளின் பெரும்பகுதி என் மனைவியின் நினைவுகளாலேயே நிரம்பியுள்ளது என்பதை நான் ஏற்கவில்லையெனில் அது பொய்யாகவே இருக்கும். அவள் எனது வாழ்வின் மிகச்சிறந்த ஒரு பகுதி.”

எனினும், மிகவும் நோயுற்றிருந்த போதும் இந்த வாரங்களில் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் எதையாவது புதிதாகக் கற்றுக்கொள் வதற்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். அல்ஜியர்சில் தனது மருமகனின் நண்பரான லாங்கெட்டை அவர் சந்தித்தார். லாங்கெட் அரபு மக்கள் அவதிப்பட்ட காலனிய ஒடுக்குமுறையின் நாகரீகமான, கொடூரமான வடிவங்களைப் பற்றிய பல முக்கியமான விவரங்களை மார்க்சுக்கு எடுத்துரைத்தார். அதேபோன்ற கவனத்துடன் அவர் ஐரோப்பியத் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொண்டு, கடிதங்கள் வாயிலாக எங்கெல்சுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வந்தார்.

அல்ஜீரியப் பயணம் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தெற்கு பிரான்சில் தங்கியதும் எந்தவித முன்னேற்றத்தையும் தரவில்லை. பின்னர் தனது மூத்த மகள் ஜென்னியை பாரிசின் அருகில் பார்க்கச் சென்றதும், பின் கோடையில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றதும்தான் அவருக்கு சற்று மெலிதான ஆறுதலை வழங்கியது. இதற்கிடையில் பேபலின் மரணம் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. அவர் எங்கெல்சுக்கு எழுதினார்:

“இது நமது கட்சிக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜெர்மானிய (ஐரோப்பிய என்றும் குறிப்பிடலாம்) தொழிலாளி வர்க்கத் தில் தனித்துவமிக்க தலைவர் அவர்.”

அதிர்ஷ்டவசமாக, விரைவில் அந்தச் செய்தி பொய் என்று தெரிய வந்தது.

மூத்த மகளின் மரணம்

அக்டோபரில் மார்க்ஸ் சற்று வலுவான உடல்நிலையுடன் இங்கிலாந்து திரும்பினார். அவர் மூலதனம் நூலின் இதர தொகுதிகளுக்கான தனது பணியை மீண்டும் துவக்கவும், (ஜெர்மன்) கட்சிப் பத்திரிகையான “தெ சோசியல் டெமாக்ரட்”டுக்குக் கட்டுரைகள் எழுதவும் ஏற்கனவே சிந்தித்துக் கொண்டிருந்தார். எனினும் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தற்காலிகமானதாகவே இருந்தது. நவம்பர் மாதத்தில் லண்டனின் பனியிலிருந்து தப்பிக்க அவர் வெண்ட்னாருக்குச் சென்றார். ஆனால் அங்கும்கூட பனிக்காலத்தின் குளிரும், ஈரமும், அவரது உடல் நிலைக்கும் மேலும் துன்பத்தை ஏற்படுத்தின. அது இன்னும் மோசமாகும் வகையில், அவரது மூத்த மகள் ஜென்னியின் மரணச் செய்தி வந்து சேர்ந்தது; இந்தச் சோகச் செய்தியை அவரிடம் கொண்டு வந்த எலியனார் எழுதினார்:

“வாழ்வில் எனக்கு பல சோகமான தருணங்கள் இருந்துள்ளன, ஆனால் அவை எதுவும் இவ்வளவு சோகமயமானதாக இருந்ததில்லை.” தன் தந்தைக்கு ஜென்னியின் மரணம் எத்தகைய துயரத்தை ஏற்படுத்தும் என்பதும் அவருக்குத் தெரியும். “என் தந்தைக்கு நான் மரண தண்டனையை விதித்து விட்டதாகவே எனக்குத் தோன்றியது. மிக நீண்ட, அச்சத்திற்குரிய இந்தப் பயணத்தில் இந்தச் செய்தியை நான் தந்தையிடம் எப்படிச் சொல்வது என்றுதான் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தத் துயரச் செய்தியை அவரிடம் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை; என் முகமே என்னைக் காட்டிக் கொடுத்து விட்டது. மூர் உடனடியாகக் கூறினார்: “எனதருமை ஜென்னிசென் இறந்து விட்டாள்!”. அதன் பிறகு உடனடியாக பாரிசுக்குச் சென்று ஜென்னியின் குழந்தைகளுக்கு உதவுமாறு எனக்கு அவர் உத்தரவிட்டார்.”

தூக்கத்தில் மரணம்

மறுநாள் மார்க்ஸ் லண்டன் திரும்பினார். தொண்டைக்குழாயில் ஏற்பட்டிருந்த அழற்சியுடன் சேர்ந்து இன்னொன்றும் அவரை மீண்டும் படுக்கையில் தள்ளியது. பல வாரங்களுக்கு அவரால் நீராகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள முடிந்தது. பிப்ரவரியில் அவருக்கு நுரையீரலில் கட்டி உருவானது.

மார்ச்சில் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை அதிகரித்தது. லென் சென்னின் கனிவான கவனிப்பில் அவரது முக்கிய நோய்கள் கிட்டத்தட்ட சரியாகின. ஆனால் மார்க்சின் தோற்றம் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. இந்தக் காலத்தில் தினமும் வீட்டுக்குச் சென்று அவரை பார்க்கும் எங்கெல்ஸ் மார்ச் 14 அன்று மதியநேரம் அங்கு வந்து சேர்ந்தார். லென் சென் அவரைப் பார்த்து மார்க்ஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகக் கூறினார். “நாங்கள் அறைக்குச் சென்றபோது, அவர் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார், ஆனால் ஒரு போதும் இனி எழமாட்டார் என்றும் தெரிந்தது. அவரது நாடித் துடிப்பும், மூச்சும் நின்று போயிருந்தன. அந்த இரண்டே நிமிடத்தில் அமைதியாக, வலியின்றி அவர் உயிரை நீத்திருந்தார்” என்று அவர் மார்க்சின் நண்பர் சோர்கேவுக்கு பின்னர் எழுதினார்.

எங்கெல்ஸ் மேலும் எழுதினார்: “மனித இனத்தில் ஒரு தலை குறைந்து விட்டது, இந்தத் தலை நம் காலத்தில் மிகவும் பெரிய தலை. தொழிலாளர்களின் இயக்கம் தொடர்கிறது. ஆனால் பிரெஞ்சுக்காரர்களும், ரஷ்யர்களும், அமெரிக்கர்களும், ஜெர்மானியர்களும் தீர்மானகரமான தருணங்களில் ஆலோசனை வேண்டித் திரும்பிய, மறுக்கமுடியாத, தெளிவான ஆலோசனையைக் கொடுத்து வந்த அந்த மையப்புள்ளி இப்போது மறைந்து விட்டது. முழுநிறைவான அறிவுபெற்ற ஒரு மேதையால்தான் அத்தகைய அறிவுரைகளைக் கொடுக்க முடியும்.”

எங்கெல்சுடன் சேர்ந்து உலகின் அனைத்து நாட்டுத் தொழிலாளர்களும் அஞ்சலி செலுத்தினர். 1883 மார்ச் 17 அன்று கார்ல் மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் தன் மனைவியின் உடலுக்கருகே அடக்கம் செய்யப்பட்டார்.

உலகத் தொழிலாளர் இயக்கம் தனது மாபெரும் தலைவருக்கு விடைகொடுத்தது. வில்லியம் லீப்னெஹ்ட் ஜெர்மனி தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் மார்க்சின் கல்லறையில் உறுதியேற்றார். “இத்தருணத்தில் நாம் சோகத்தில் ஆழ்வதற்குப் பதிலாக, மறைந்த தலைவரின் உணர்வின்படி செயல்படுவோம். அவர் நமக்குக் கற்பித்ததையும், ஆசைப்பட்டதையும் கூடிய விரைவில் நிதர்சனமாக்க, அனைத்து வலுவுடனும் நாம் போராடுவோம். இந்த வழியில் அவரது நினைவைப் போற்றுவோம்! மிகுந்த அன்பிற்குரிய நண்பரே! நீங்கள் எங்களுக்குக் காட்டிய பாதையில் இறுதிவரையில் நடைபோடுவோம். உங்கள் கல்லறையில் அதை உறுதிமொழியாக அளிக்கிறோம்!”

தோற்கடிக்கப்பட்ட புரட்சியின் படிப்பினைகள்

தமிழில்: பாலச்சந்திரன்

26 ஆகஸ்ட் 1849 ல், மார்க்ஸ் ஆங்கிலேய மண்ணில் காலடி வைத்தபொழுது லண்டன் மாநகரம், இருபது லட்சத்திற்கும் மேலான மக்கள்தொகை கொண்டதாகவும்,உலகிலேயே மிகப் பெரிய நகரமாகவும், உலகின் ‘தொழிற்பட்டறை’யாகவும், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாட்டின் தலைநகரமாகவும் விளங்கியது. 1848 ம் ஆண்டின் வசந்த காலத்தில், அடிப்படை ஜனநாயக உரிமைகளின் விரிவாக்கத்திற்காக, சார்டிஸ்ட் இயக்கம் மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்த பொழுது, ஐரோப்பிய புரட்சி, இங்கிலாந்தின் கதவுகளையும் தட்டிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த இயக்கம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்ததன் விளைவாக அதன் புரட்சிகர சக்தி நீண்ட காலத்திற்கு முற்றிலுமாக அணைந்து போனது.

பிரஷ்ய நாட்டின் அப்பட்டமான அடக்குமுறை ஆட்சியைப் போல அல்லாமல், இங்கிலாந்து முதலாளித்துவ உரிமை மற்றும் சுதந்திரத்துடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயக முறைமையைக் கொண்டிருந்தது. புரட்சிகர இயக்கத்தின் மீது பிரஷ்ய அரசு அடிக்கடி நேரடியான ஒடுக்குமுறையை கையாண்டு கொண்டிருந்தது. ஆனால் இங்கிலாந்திலோ பொருளாதார அடக்குமுறை நிலவியது.ஆளும் வர்க்கத்திற்கு வேண்டப்படாதவர்கள் வாழ்வாதாரத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர். சக்தி வாய்ந்ததும்,நுட்பமானதுமான இந்த ஒடுக்குமுறை இயந்திரத்தின் இயக்கத்தை கவனித்த மார்க்ஸ், பிரஷ்ய அரசின் பழங்கால முடியாட்சி அமைப்பினதை விட இந்த ஒடுக்குமுறை எவ்வளவு நுட்பமானது என்பதைக் கண்டறிந்தார்.

அதிகப்படியான பணிகள்

ஐரோப்பிய புரட்சியின் தோல்விக்கு பின்னர் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போல  இங்கிலாந்தும், அதிலும் குறிப்பாக லண்டன், புலம் பெயர்வோர்களின் புகலிட மையமானது. அதேசமயம் அல்லது சற்று பின்னர், மார்க்சைப் போலவே, கம்யூனிஸ்ட் லீகின் முக்கிய முன்ணணி உறுப்பினர்களும் வந்து சேர்ந்தனர்., புலம் பெயர்ந்த ஜெர்மன் லீகின் உறுப்பினர்களும் கூடும் இடமாக லீகின் லண்டன் கிளை விளங்கியது. சட்டபூர்வமாக இயங்கிய கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் எஜுகேஷனல் அசோசியேஷனும் புதிய நடவடிக்கையுடன் கூட எழுந்தது.

மார்க்சை பல பணிகளின் சுமை அழுத்தியது.மற்றவர்களுடன் இணைந்து லீகிற்கு ஒரு புதிய செயலகத்தை ஏற்படுத்தினார்.ஜெர்மனியிலிருந்து வரும் அரசியல் அகதிகளுக்கு ஆதரவளிப்பதே அதன் உடனடி பணியாக இருந்தது. வொர்க்கர்ஸ் எஜுகேஷனல் அசோசியேஷன் கூட்டத்தில் இந்த பணியில் உதவிட ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையை முன்மொழிந்தார். கூட்டம், அதனை ஏற்று கமிட்டிக்கு தலைவராக மார்க்சை தேர்வு செய்தது. கமிட்டியில் பலரும் கடும் நெருக்கடியில் இருந்தபோதும், அவர்கள் அனைவரும் பொறுப்பு நிதியிலிருந்து அவர்களுக்காக எதுவும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர். மார்க்சை பொறுத்தவரை அது கம்யூனிச அறநெறியின் சுய வெளிப்பாட்டின் கூற்றாகும். அக்காலங்களில் அவரே கொடுமையான வறுமையில் உழன்று கொண்டிருந்தார்.

அதே சமயத்தில், மார்க்ஸ், தொழிலாளர்-அகதிகளைக் காத்துக் கொண்டும், தலைமறைவாயிருக்கும் உழைக்கும் வர்க்க புரட்சியாளர்களை மீண்டும் ஒன்றிணைக்கவும், கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அது போலவே, கம்யூனிஸ்ட் லீகின் மத்திய செயலகம், கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் எஜுகேஷனல் அசோசியேஷன் ஆகியவற்றை பலப்படுத்துதல், ஜெர்மனியிலேயே இருந்த லீகின் உறுப்பினர்களுடன் தொடர்பை மீண்டும் உருவாக்குவது என அனைத்து பணிகளிலும் அவர் தன்னை கடுமையாக ஈடுபடுத்தி கொண்டிருந்தார். புலம் பெயர்ந்தோர் மத்தியில் இருந்த குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், அனைத்து ஜெர்மன் அகதிகளையும் தங்கள் தலைமையின் கீழ் கொண்டு வரவும், அவர்களின் சுயேச்சையான வர்க்க அமைப்பை அவர்கள் கை விடச்செய்யவும் முயன்று வந்ததால், மார்க்சின் இத்தகைய கடும் முயற்சி முக்கியமானதானது.

லீகின் மறுசீரமைப்பு:

இவ்வாறான முயற்சிகளைத் தடுக்க, மார்க்ஸ், கம்யூனிஸ்ட் லீகினை விரைவாக மறு சீரமைப்பு செய்யவும், தொழிலாளர்-அகதிகள் எதிர் கொள்ளும் வர்க்க கடமைகளை விளக்கவும் தமது முயற்சிகளை இரட்டிப்பாக்கினார்.ஜெர்மன் புரட்சி மீண்டும் வெகு விரைவில் வெடிக்கும் என அவரும், அந்த சமயத்தில் மற்றெல்லா லீகின் உறுப்பினர்களைப் போலவே எதிர்பார்த்தார்.. அவ்வாறான சமயத்தில் தொழீலாளி வர்க்கத்திற்கு என தனித்து இயங்கும் ஒரு கட்சி வேண்டும்.அதுதான் பெரும்பாலான தொழிலாளர்கள் வெறுமனே குட்டி முதலாளிகளின் பின்னே செல்வதை தடுக்கும்.

1850 ம் ஆண்டு துவக்கத்தில், கோட்பாட்டு கேள்விகளை விவாதிக்க லீகின் முன்ணணி உறுப்பினர்களை அவருடைய வீட்டிற்கு அழைக்கத் துவங்கினார். கிட்டத்தட்ட அதே சமயத்தில் பொருளாதாரம் மற்றும் கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றி அப்பொழுது ஜெர்மன் தொழிலாளர் அகதிகள் அதிகமாக இருந்த கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் எஜுகேஷனல் அசோசியேஷனில் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றினார். பாடன் நகரில் கையில் ஆயுதமேந்தி எதிர் புரட்சியாளர்களை எதிர் கொண்ட இளம் மாணவ அகதியும், அதனால் சுவிட்சர்லாந்து வழியே லண்டன் ஒடி வந்தவரும், விரைவிலேயே மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சிற்கு உண்மையான மாணவர், நண்பர் தோளோடு தோள் நிற்கும் தோழருமான வில்ஹெம் லீப்னஹெட் மார்க்ஸ் செயல்படும் முறையை கீழ்காணும் வரிகளில் வர்ணிக்கிறார்.

ஒரு கருத்தை அவர் முடிந்தவரை சுருக்கமாக அறிமுகப்படுத்துவார். அதனை பின்னர் விரிவாக விளக்குவார். தொழிலாளர்கள் புரிந்து கொள்ள முடியாத சொற்றொடர்களைத் தவிர்க்க மிகுந்த அக்கறையை எப்பொழுதும் மேற்கொள்வார். பின்னர் கேள்விகள் கேட்க சொல்வார். ஒன்றும் கேள்விகள் வரவில்லை எனினும், கவனித்தவர்களை சோதிப்பார். எந்த தவறான புரிதலோ அல்லது குறைபாடோ இன்றி அத்தகைய ஆசிரியத்திறத்துடன் மிக நேர்த்தியாக அதனை செய்வார்.”

புதிய பத்திரிக்கை

லண்டனில் புலம் பெயர்ந்த வாழ்வை துவங்கிய முதல் சில மாதங்களில் புதிய பத்திரிக்கை ஒன்றை தோற்றுவிக்க மார்க்ஸ் சிறப்பு கவனம் செலுத்தினார். அப் புரட்சியிலிருந்து எதிர்கால போராட்டங்களுக்கு எத்தகைய படிப்பினை, உத்தி மற்றும் தந்திரங்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு கிடைத்தது என்பதை அப்பத்திரிக்கையில் விளக்குவதுதான் அவரது நோக்கமாகும். உலகெங்கும் பரவியுள்ள தொழிலாளி வர்க்க புரட்சியாளர்களின் அரசியல் செயல்பாட்டிற்கு அத்தகைய பத்திரிக்கை அவசியமானதாகும். அதன் வெளியீட்டிற்கான பணத்தேவை, அதனைக் கொண்டு வர மிக கடினமாக இருந்தது.

தற்போது புகழ் பெற்ற பெயரான ‘நியு ரெனிஷ் செய்தித்தாள்’ என்ற பெயரில் தினசரியாக இல்லாமல்,குறிப்பிட்ட கால வெளியீடாக அரசியல் பொருளாதார ஆய்வுடன் கொண்டு வர திட்டமிடப்பட்டது. கம்யூனிஸ்ட் லீகின் பத்திரிக்கையாக, புத்தகக் கடை வாயிலாக மட்டுமில்லாமல் லீக் உறுப்பினர்கள் வாயிலாகவும் வினியோகிக்கப்பட இருந்தது. இவ்வாறாக அது லீகின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு கொண்டுவரப்பட்டது.

முடிவற்ற தயாரிப்புகளுக்கு பின்னர் ‘நியு ரெனிஷ் செய்தித்தாள்’: அரசியல்-பொருளாதார பரிசீலனை’ மார்ச் மாத துவக்கத்தில் 1850ல் 2500 பிரதிகளுடன் உதயமானது. இரண்டாவது இதழும் அதே மாதம் தொடர்ந்தது. நான்கு இதழ்கள் அந்த வருடத்திலேயே வெளியாயின.

மிக முக்கியமான முழுமையான கட்டுரைகள் மார்க்ஸ் ஏங்கல்ஸ் இடமிருந்து வந்தன. “பிரான்சின் 1848-50 வர்க்க போராட்டம்” என்ற அவரது கட்டுரையை அதில் வெளியிட்டார். ஏங்கல்ஸ் “ரெய்க்( ஜெர்மன் மொழியில் “அரசு/,நாடு”)  அரசியல் சாசனத்திற்கான ஜெர்மன் இயக்கம்” மற்றும் “ஜெர்மனியில் விவசாயிகள் போர்” என்ற கட்டுரைகளை அதில் எழுதினார். புரட்சியின் வீழ்ச்சியினால் பத்திரிக்கை கடும் நெருக்கடியை சந்தித்தது. எடுத்துக்காட்டாக,புரட்சிகர வெளியீடுகளுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என புத்தக விற்பனையாளர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

மிக மோசமான பின்னடைவுகளும், குருதி தோய்ந்த தோல்விகளும் கூட மக்கள் அதிலிருந்து படிப்பினையை கற்றுக் கொண்டால் ஒரு சாதகமான பக்கத்தைக் கொண்டதாக இருக்கும் என்ற பார்வையைக் கொண்டிருந்தார் மார்க்ஸ். புரட்சியின் படிப்பினைகளை ஆராய்ந்து அதனை பொதுமைப்படுத்துவதும், இரண்டு புரட்சிகர ஆண்டுகளின் அனுபவங்களை உழைக்கும் ஜனத்திரள்புரிந்து கொள்ள உதவுவதும் கம்யூனிஸ்ட் லீகின் உடனடி வேலை என எண்ணினார். இந்த பணியில் ஏங்கல்ஸுடன் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். மார்ச் மாத இறுதியில் முடிவுகளை எடுத்து லீகின் மத்திய செயற்குழுவின் முன் கொணர்ந்தனர். “மார்ச் 1850 லீக்கிற்கு மத்திய குழுவின் முடிவுகள்” என்ற அந்த ஆவணத்தை மத்திய குழு அங்கீகரித்தது. அதனை ஜெர்மனி எடுத்து சென்று அங்கு ரகசியமாக செயல்படும் கம்யூனிஸ்ட்களுக்கு கொடுக்க வேண்டும் என அக் குழுவின் பொறுப்பு மிக்க உறுப்பினரான ஹென்றி பாயர் அவர்களை நியமித்தது.

நியாயமான பெருமிதத்துடன் மார்க்ஸும், ஏங்கல்ஸும் தங்களின் பேச்சின் துவக்கத்தில் புரட்சியின் வருடங்களில், லீக் இரு வழிகளில் தன்னை நிரூபித்துக் கொண்டது.என கூறினார்கள்: “……..முதலாவதாக பத்திரிக்கைகளில், தடைஅரண்களில் போர்க்களங்களில் என அதன் உறுப்பினர்கள் எல்லா இடத்திலும் உத்வேகத்தோடு இயக்கங்களில் பங்கேற்றார்கள். ஒரே உறுதி மிக்க புரட்சிகர வர்க்கமான தொழிலாளி வர்க்கத்தின் முன் வரிசையில் அவர்கள் நின்றார்கள். இயக்கத்தின் உருவாக்கத்தில் லீக் மேலும் தன்னைத்தானே நிரூபித்துக் கொண்டது………மிகச் சரியான ஒன்று மட்டுமே ஆனதாக மாறியது.

குறிக்கோள் நிறைவேறவில்லை.

ஆனால் புரட்சி அதன் குறிக்கோளை நிறைவேற்றவில்லை. ஜெர்மனி ஒன்றிணைக்கப்படவுமில்லை. ஜனநாயக நாடாகவும் மாறவில்லை. இத் தோல்விக்கான பொறுப்பு பெரு முதலாளிகளையே சாரும் என மார்க்ஸும், ஏங்கல்ஸும் பிரகடனப் படுத்தினார்கள்.நிலப்பிரபுத்துவ ஆட்சியை தூக்கி எறிய வெகு மக்களை அழைத்து செல்வதற்கு மாறாக, முதலாளிகள் எதிர் புரட்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டனர். அதாவது அவர்களின் அப்போதைய இயல்பான நேச சக்திகளான தொழிலாளர்கள் விவசாயிகளுக்கெதிரான கூட்டில் சேர்ந்தனர். இதன் விளைவு, இறுதியில் அவர்கள் கையில் இருந்த அரசின் சுக்கானை அவர்கள் இழந்தார்கள்.

எதிர் வரும் புரட்சியில், இந்த பாத்திரம் குட்டி முதலாளிகளால் வகிக்கப்படும் என மார்க்ஸும், ஏங்க்ல்ஸும் எழுதினார்கள். எப்படி குட்டி முதலாளிகள் புரட்சியின் போதும்,குடி பெயர்ச்சியின் போதும், தொழிலாளி வர்க்கத்தை அதிகாரபூர்வ முதலாளித்துவ ஜனநாயகத்தின் தொங்குசதையாக மாற்றிட முயற்சித்தார்கள் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.,- குட்டி முதலாளிகளும், தொழிலாளர்களும் அரசியல் ரீதியாக இணைவதை மார்க்சும் அவரது தோழர்களும் கடுமையாக எதிர்த்தனர். லீக், அதன் சக்தி அனைத்தையும் திரட்டி,  ரகசியமாக, சுயேட்சைத்தன்மையுடன் இயங்கும் பொது அமைப்பாக தொழிலாளர் கட்சியினை அமைக்க வேலை செய்ய வேண்டும் என அவர்கள் அறிவித்தனர். அத்தகைய கட்சி அதிகாரபூர்வமான ஜனநாயகவாதிகளுடன் இணந்து செயல்பட வேண்டும் என்பதும், ஒவ்வொரு அப்பகுதி லீக்கும் தொழிலாளர் அமைப்புகளின் மையமாகவும்,இதயமாகவும் இருக்க வேண்டும் எனவும், அத்தகைய நிலையில், முதலாளித்துவ தாக்கம் தவிர்த்த, தொழிலாளர்களின் நிலைப்பாடும், நலன் களும் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்தார்கள்.”

இத்தகைய தெளிவான நோக்கோடு, தொழிலாளர் நலனை ஆளும் வர்க்க நலன்களுக்கு அடி பணியச் செய்யும் அனைத்து சந்தர்ப்பவாத முயற்சிகளுக்கெதிராக ஐயத்திற்கிடமற்ற ஒரு போர் துவங்கப்பட்டது.

கட்சியின் யுத்தம்

ஜெர்மனியில் லீக் அமைப்பு மீண்டும் தன்னை பலப்படுத்திக் கொண்டதை மத்திய செயலகத்திற்கு வரும் கடிதங்களிலிருந்தும், ஜெர்மனியிலிருந்து திரும்பியிருந்த ஹென்றி பாயரிடமிருந்தும், மார்க்ஸ் அறிந்து கொண்டார். பல பெரிய நகரங்களில் பகுதி அமைப்புக்கள் திரும்பவும் அமைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே இருந்து வரும் தொழிலாளர் அமைப்புகளிடம், உடற்பயிற்சியாளர்களிடம், விவசாயிகளிடம்,மற்றும் பகல் நேர உழைப்பாளர்களிடம், தனிக்குழுக்களும், தனிநபர்களும் தங்களின் தாக்கத்தை நிறுவுவதில் வெற்றி அடைந்தது விசேட முக்கியத்துவமாகும்.

இந்த வளர்ச்சிப் போக்குகளின் அடிப்படையில், ஏங்கல்ஸுடன் சேர்ந்து லீகிற்கான மற்றொரு உரையை மத்திய செயலகம் முன் ஜூன் மாதம் வைக்கப்பட்டது. அந்த உரை தொழிலாளர் விவசாயிகளின் சட்ட பூர்வ அமைப்புக்களின் மீது மிகவும் நெருக்கமான கவனத்தை செலுத்துமாறு ஜெர்மன் கம்யூனிஸ்ட்களுக்கு அறைகூவல் விடுத்தது. மார்க்ஸ் தாமும் தம் உடனுழைப்பவர்களும் இந்த உத்தியை அமலாக்குவதிலுள்ள தர்க்க ரீதீயான தொடர்ச்சியை1848-49 புரட்சியின் சமயத்தில் கண்டார். அது தேசீய புரட்சிகர தொழிலாளர் கட்சிக்கான போரில் மேலும் ஒரு வளர்ச்சி என்பதாகும்.

தமது மார்ச் மாத உரையில் தமது முந்தைய உரையை இன்னும் விளக்கமாகவும் ஆழமாகவும் ஆற்றினார். அதாவது எதிர்கால புரட்சியில், தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ-ஜனநாயக புரட்சியை படிப்படியாக தொழிலாள வர்க்க-சோசலிச புரட்சியாக மாற்ற வேண்டும் என்பதே. ஏனெனில் முதலாளித்துவ அமைப்பையும், தொழிலாளர்களின் கூலி அடிமை நிலையையும் தொடாமல் அப்படியே வைத்திருக்க குட்டி முதலாளிகள் அனைத்தையும் செய்வார்கள். “அனைத்து சிறிய பெரிய சொத்துடைய வர்க்கம் ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டப்படுவது வரையும்,தொழிலாளி வர்க்கம் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவது வரையும், புரட்சியை நிரந்தரமாக ஆக்கிடுவதென்பது” தொழிலாளி வர்க்க நலனிற்கே அவசியமானது

எவ்வாறாயினும் அதற்காக தொழிலாளி வர்க்கம் தன்னை தயார் செய்து கொண்டு, அதன் அதிகார அமைப்புக்களை, அதாவது புரட்சிகர தொழிலாளர் அரசுகளை, தேவையெனில் முதலாளித்துவ அரசிற்கு பக்கம் பக்கமாகவே கூட உருவாக்கிட வேண்டும்.. அதுதான் மார்க்ஸும், ஏங்கல்ஸும் தொழிலாளர்களுக்கு விடுத்த வேண்டுகோளாகும். பல பத்தாண்டுகளுக்கு பின்னர்,மாபெரும் அக்டோபர் சோசலிச புரட்சியின் தயாரிப்புகளிலும், அமலாக்கத்திலும், ஜனநாயக புரட்சியை, சோசலிச புரட்சியாக வளர்த்தெடுக்கும் நோக்கு மேலும் 20 ம் நூற்றாணடின் நிலைமைகளுக்கு ஏற்ப லெனினால் மேலும் மேம்படுத்தப்பட்டு ஒரு முக்கிய பங்காற்றப் போகிறது.

( இக்கட்டுரையானது, கார்ல் மார்க்ஸ் 200 என்ற பொது தலைப்பில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் வெளியாகும் தொடர் கட்டுரையின் பகுதி. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிய லெனினிய கல்வி நிறுவனம் தயாரித்த ‘கார்ல் மார்க்ஸ் கதையும் வாழ்க்கையும்: கார்ல் மார்க்ஸ் சரிதை’ என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு, 1983 ஆம் ஆண்டு, மார்க்சிஸ்ட் கட்சியின் அப்போதைய மத்திய குழு உறுப்பினர் ராம் தாஸ் தொகுத்தளித்தது. )

மார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் …

முதலாளித்துவம் குறித்த புரிதலுக்கு அம்முறைமை குறித்த காரல் மார்க்சின் இரண்டு ஆழமான பார்வைகள் உதவுவதாய் உள்ளன. முதலாவது, உபரி மதிப்பின் தோற்றம் குறித்ததாகும். இரண்டாவது அன்னியமாதல்.

சரக்குகளின் உலகத்தில் சரக்குகளின் உடமையாளர்களுக்கு –  அவர்களில் தொழிலாளர்களும் அடக்கம் – இடையில் பரிமாற்றங்கள் தன்விருப்போடும், சமநிலையிலும் எவ்வித வஞ்சமுமின்றி நடந்தேறும் போது எப்படி உபரி மதிப்பு உருவாகிறது?

புதிருக்கான விடை

இப்புதிருக்கான விடை, உழைப்பிற்கும் உழைப்பு சக்திக்கும் இடையேயான வேறுபாடு குறித்த காரல் மார்க்சின் கண்டுபிடிப்பில் அடங்கியுள்ளது. தொழிலாளர்கள் விற்பது உழைப்பை அல்ல, உழைப்பு சக்தியையே. உழைப்பு சக்தி என்பது அவர்களின் உழைப்பைச் செலுத்துவதற்கான திறன் ஆகும். அதுவும் சரக்கு ஆகிறது. மற்ற சரக்குகளைப் போலவே அதன் மதிப்பும், எவ்வளவு நேரடி மற்றும் மறைமுக உழைப்பு நேரம் அதன் உருவாக்கத்திற்கு செலுத்தப்படுகிறதோ, அதற்கு சமமானதாகும். மேற்சொன்ன விசயத்தில் அது எதனைக் குறிக்கிறதென்றால், ஒரு யூனிட் அளவுக்கு உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்யவும், மறு உற்பத்தி செய்யவும், பிழைப்புக் கூடையிலிருந்து ( subsistence basket ) எவையெல்லாம் தேவையோ அவற்றைக் குறிக்கிறது.

உழைப்பு சக்தி, சரக்கு என்ற வகையில், ஓர் சிறப்பு இயல்பைக் கொண்டுள்ளது. அதன் பயன்பாடு, அதாவது அதற்காக மெய்யாகச் செலவிடப்படும் உழைப்பு நேரம், மதிப்பை உருவாக்குகிறது. உழைப்புச் சக்தியைக் கொண்டு உருவாக்க வைக்கப்பட்ட மதிப்பு, அதன் உண்மையான மதிப்பை விடவும் அதிகம் என்ற உண்மையில்தான், உபரிமதிப்பின் தோற்றுவாய் அடங்கியுள்ளது. ஆகவே சமமான பரிமாற்றங்களில் கூட, அதாவது எல்லாச் சரக்குகளும் அதனதன் மதிப்புகளின் அடிப்படையில் பரிமாறிக் கொள்ளப்படும் போதும், உபரி மதிப்பு உருவாகிறது.

ஆழமான இப்பார்வை நிறைய விளைவுகளைக் கொண்டதாக உள்ளது. முதலாவதாக, முதலாளித்துவத்திற்கு இது ரத்தினச் சுருக்கமான இறுக்கமான இலக்கணத்தை வழங்குகிறது. அதாவது பொதுவான சரக்கு உற்பத்தியைக் கொண்டதாக, அதில் உழைப்புச் சக்தியும் சரக்காக விளங்குகிற முறைமையாக அது வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன் பொருள், உருப்பொருள்களின் (Entitids) அம்சங்களுக்கும், அதன் தொடர்பான அம்சங்களுக்கும் (Relational Aspects) இடையேயான இருமை (Duality), எந்த ஒரு எளிமையான சரக்கு உற்பத்தி பொருளாதாரத்தின் குணாம்சமாக முன்னைவிட ஊடுருவி வெளிப்படுவதாகும். உதாரணமாக, பயன்மதிப்பு – பரிமாற்ற மதிப்பு, உழைப்பின் நிகழ்முறை – மதிப்பு உருவாக்க நிகழ்முறை, உற்பத்தி பொருள் – சரக்கு, கண்களுக்கு புலப்படும் உழைப்பு – புலப்படா உருவமற்ற உழைப்பு போன்றவற்றிற்கு இடையே ஆனவை.  மேலும் பிழைப்பிற்கான ஆதாரம் – மாறுகிற மூலதனம், உபரி சரக்கு – உபரி மதிப்பு போன்றவை என இருமை வெளிப்படும் அம்சங்கள் நீள்கின்றன.

இரண்டாவதாக, உபரி மதிப்பு இம்முறைமையில் பரிமாற்றங்களின் ஊடாக உருவாவதில்லை. மாறாக உற்பத்தியின் ஊடாகவே உருவாகிறது. முதலாளித்துவ நிறுவனங்கள், சரக்கு உற்பத்தியாளர்கள் என்றவகையில் ஒருவரோடு ஒருவர் போட்டி போடும் போது, அதிக செலவினம் உடைய உற்பத்தியாளர்கள் காலப்போக்கில் வெளியேற்றப்படுவார்கள். எனவே புதிய வழிமுறைகள், புதிய உற்பத்தி பொருட்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் வாயிலாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான நிர்ப்பந்தங்கள் ஏற்படுவது இயல்பு. அதாவது தொடர்ச்சியாக உற்பத்தி நிகழ்முறைகளில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவருவதாகும். இத்தகைய இடையறாத உந்துதல்தான் முதலாளித்துவத்தை முந்தைய எல்லா உற்பத்தி முறைமைகளிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுவதாகும். மேலும் இது, உற்பத்திக்கான நிகழ்முறையில் இருந்தே உபரி மதிப்பு உருவாகிறது என்கிற உண்மையோடு இணைந்தது ஆகும்.

மூலதனக் குவிப்பு நிகழ்வது ஏன்?

மூன்றாவதாக, புதிய உற்பத்தி வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது மூலதன அலகின் அளவைப் பொருத்ததாகவே இருப்பதால் பெரிய மூலதனங்களுக்கு கரையேறுகிற வாய்ப்பு அதிகம். சிறிய மூலதனங்கள் விரட்டப்படும். ஆகவே மூலதனத்தின் ஒவ்வொரு அலகும் மூலதனக் குவிப்பின் வாயிலாக தத்தம் அளவை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

மூலதனக் குவிப்பு ஏன் நிகழ்கிறது? என்பதை சுருக்கமாகச் சொல்வதானால், இம்முறைமையில் உள்ள போட்டி என்கிற மெய்யான சூழல் காரணமாக, மூலதன அலகுகள் ஒவ்வொன்றின் மீதும் ஏற்படுகிற நிர்பந்தமே ஆகும். என்றாலும் கூட, இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான “டார்வீனியப் போராட்டத்தில்” (தகுதியுள்ளது பிழைக்கும்) மூலதனத்தின் அலகுகள் விடாப்பிடியாக முயன்றாலும் அவற்றில் சில தோல்வி அடைவது தவிர்க்க இயலாததாகிறது. காரணம், மூலதனம் மையமாதல் என்கிற நிகழ்முறை அரங்கேறுவதுதான். அதாவது பெரும் பெரும் மூலதன தொகுதிகள் கால ஓட்டத்தில் உருவாகின்றன. (இது இறுதியில் ஏகபோக முதலாளித்துவ உருவாக்கத்திற்கு இட்டுச்செல்கிறது. வெளிப்படையாக, மறைமுகமாக முதலாளிகளுக்கிடையில் விலை நிர்ணய உடன்பாடுகள் ஏற்படுகின்றன. போட்டியை ஒழிப்பதற்கு மாறாக இத்தகைய புதிய வடிவங்கள் தற்போது உருவாகின்றன).

நான்காவதாக, முதலாளிகளின் உபரி மதிப்பு அதிகரிப்பு தொடர்வதற்கு உழைப்புச்சக்தியின் மதிப்பு எப்பொழுதுமே அது உருவாக்கக்கூடிய மதிப்பை காட்டிலும் குறைவாகவே இருக்க வேண்டும். இதன் பொருள் இம்முறைமை எப்போதுமே உழைப்புச்சக்தியின் போதாமைக்கு ஆளாகக்கூடாது. இது முதலாளிகள் பணிக்கமர்த்துகிற செயல்படு உழைப்பாளர் படைக்கு (Acting Army of Labour) அப்பாற்பட்டு காத்திருக்கும் உழைப்பாளர் படையையும் (Reserve Army of Labour) வைத்திருக்க வேண்டிய தேவையை உருவாக்குகிறது. இக் காத்திருப்புபடை எவ்வாறு உருவாக்கப்படுகிறது? மூலதனக் குவிப்பின் வாயிலாகவும், சிறு உற்பத்தியை தகர்ப்பதன் வாயிலாகவும் உழைப்பாளர் படைக்கு மக்களைத் தள்ளிக்கொண்டே இருப்பதன் மூலமே இது உறுதி செய்யப்படுகிறது. காத்திருப்போர் படையின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவிற்கு, செயல்படு உழைப்பாளர் படைக்கு இணைந்து வளரும்போது மூலதனக்குவிப்பு நடந்தேறுகிறது. அதனால் செல்வ வளர்ச்சி ஒருமுனையில் நிகழ்வதும், மறுமுனையில் வறுமை வளர்வதுமான ஒன்றுக்கொன்று தொடர்புடைய போக்கு ஏற்படுகிறது.

ஆங்கில செவ்வியல் பொருளாதார நிபுணர்கள், கூலியின் அளவு பிழைப்புக்கேற்ற மட்டத்தில் கட்டுப்படுத்தபட்டதற்கு காரணம், அதற்கு அதிகமாக கொடுத்தால் மக்கள் பெருக்கத்தை அதிகமாக்குகிற உந்துதல் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் என்ற வாதத்தை முன்வைத்தார்கள். இந்த முரணான கருத்தை மார்க்ஸ் மறுதலித்தார். அவர் இக்கருத்தோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மால்த்தூசியன் கோட்பாட்டை “மனிதகுலத்தின் மீதான அவதூறு” என்று குறிப்பிட்டார். அதற்குமாறாக, பிழைப்புக்கேற்ற மட்டத்திலேயே கூலியை தேக்கிவைப்பதற்கு நாம் குறிப்பிட்ட சமூகக் காரணிகளை அவர் முன்வைத்தார்.

நேர் எதிர் முரண்…

ஐந்தாவதாக, முதலாளித்துவ முறைமையின் துவக்கமே, உற்பத்தியாளர்களை உற்பத்திக் கருவிகளிலிருந்து பிரித்து வைப்பதும், உற்பத்திக் கருவிகளை சிலர் கைகளில் குவிப்பதுமான நிகழ்முறையை சார்ந்திருந்தது. ஆகவே இரண்டு வகையிலான சரக்கு உடமையாளர்கள் – அதாவது உற்பத்திக் கருவிகளையும், பிழைப்பதற்கான வளமையையும் தங்கள் வசம் கொண்டோர் மற்றும் உழைப்புச்சக்தியை தவிர வேறு எதையும் விற்பதற்கு வாய்ப்பற்றோர்  – ‘நேருக்குநேர்’ தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால், அடிப்படையிலான நேர் எதிர் முரண், இம்முறைமையின் செயல்பாட்டில் உருவாகி வந்துள்ளது.

ஆறாவதாக, உற்பத்தி நிகழ்முறைகளில் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட புரட்சிகர மாற்றங்கள், தொழிலாளர் உற்பத்தித் திறனை காலவோட்டத்தில் வளர்த்துவந்துள்ளது. ஆனால் காத்திருக்கும் உழைப்பாளர் படை, எப்போதுமே கூலியை “மற்ற அம்சங்கள் சமநிலையில் இருப்பதாகக் கொண்டாலும்” (Centeris Paribus) வரலாறு நிர்ணயித்துள்ள பிழைப்பதற்கான அளவுகளிலேயே வைத்திருப்பதற்கு வழிவகுக்கிறது.

இவ்வரலாறு நிர்ணயித்த அளவுகள், காலப்போக்கில் சிறிது வேண்டுமானால் உயரக்கூடும் என்பதே அதிகபட்ச வாய்ப்பு. கூலி, முழுமையாக நுகரப்படத்தக்க அளவிலேயே இருப்பதால், அதுவும் உபரி மதிப்பில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குட்பட்ட விகிதத்திலேயே அமைவதால், அது பொருளாதாரத்தில் நுகர்வுக்கான கிராக்கியை உற்பத்தி மதிப்போடு ஒப்பிடுகையில் குறைவாகவே வைத்துள்ளது. உபரி மதிப்பின் நுகரப்படாத பகுதி முழுவதுமே நிலை மற்றும் மாறுகிற மூலதனங்களின் அதிகரிப்புகளாக மூலதனக்குவிப்பிற்கு பயன்பட்டால் மேற்கூறிய கிராக்கி குறைவு பிரச்சனை எழாது என்பது ‘ஜீன் பேப்டிஸ்ட் சே’ விதி (Say’s law) முன்னிறுத்திய வாதமாகும். ஆனால் மூலதனக்குவிப்பு, பணமூலதன அதிகரிப்பு என்ற வடிவத்தை எடுக்கக்கூடும் என்பதால், உற்பத்தி மதிப்பில் உபரி மதிப்பின் பங்கு அதிகரிப்பதோடு, அதீத உற்பத்தி சார்ந்த நெருக்கடிகளுக்கு உந்துதல் அளிக்கும்.

மார்க்ஸ், இம்முறைமைக்குள் எழுகிற பல்வேறு வகையிலான நெருக்கடிகள் குறித்த கவனத்தை ஈர்த்துள்ளார். மூலதனத்தின் இயற்கையான உள்ளடக்கத்தில் ஏற்படும் வளர்ச்சி உள்ளிட்டவை, அதாவது நிலை மற்றும் மாறுகிற மூலதனத்திற்கு இடையிலான விகிதம் சம்மந்தமானதும் அதில் அடங்கும். ஆனால் அதீத உற்பத்தி சார்ந்த நெருக்கடிகளுக்கு மார்க்ஸ் அளித்த முக்கியத்துவத்தால் – அதாவது முதலாளித்துவத்தின் பணப்பயன்பாட்டு தன்மையும், அது செல்வத்தை சேர்ப்பதற்கான வடிவமாக ஆக்கப்பட்டதுமான காரணிகளால் – சே விதியை ஏற்றுக்கொண்ட ஆங்கில செவ்வியல் பொருளாதார அறிஞர்களை விஞ்சியதாக அவரது கண்ணோட்டம் அமைந்தது. 75 ஆண்டுகளுக்கு பின்பாக 1930களில் பெரு வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காக கொண்டுவரப்பட்ட “கீன்சிய” புரட்சிக்கு முன் அறிவிப்பாகவும்  அது அமைந்தது.

வரம்பைக் கடக்க முடியுமா?

முதலாளித்துவ முறைமையின் கீழான சுரண்டலின் தன்மை குறித்த அடிப்படையான பார்வை இது. அதன் சுரண்டல் தன்மையும், அதன் சுய இயக்கத்தின் வாயிலாக முரண்பாடுகளை உருவாக்குவதும், இம்முறைமை குறித்த அடிப்படை குணாம்சம் பற்றிய வரையறுப்போடு இணைக்கப்பட்டன. அதுவே “தன்னியல்பு முறைமை” (spontaneous system) என்ற பெயரைப் பெற்றது. அம்முறைமை பல தனித்தனி அமைப்புகளின் நடவடிக்கைகளின் வாயிலாக செயல்படலாம். ஆனால் அந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை இம்முறைமையே நிர்ப்பந்தித்து தீர்மானிக்கிறது.

ஆகவே இம்முறைமை அவசியமாகவே “தான் – இயங்கியாக” (Self Driven) உள்ளது. இதன் “தான் இயங்கும் தன்மை” தனியர்களின் நடவடிக்கைகள் ஊடாகவே அமைகிறது என்றாலும் அவர்களின் நடவடிக்கைகள் இம்முறைமையின் தர்க்க வரம்புகளுக்கு உட்பட்டே அமையும் என்பது உண்மை. தனியர் எவரேனும் முதலாளித்துவ முறைமையின் வரம்பிற்குட்பட்டு  நடந்து கொள்ளாவிட்டால் அவர் முறைமையில் அவருக்கான இடத்தை இழக்கவேண்டி வந்து ஓரம் கட்டப்படுவார். உதாரணமாக, ஒரு முதலாளி மூலதனக் குவிப்பை நாடாத பட்சத்தில் அவருக்கு இந்நிலையே ஏற்படும். மொத்தத்தில் தனியர்களின் நடவடிக்கைகள், முதலாளித்துவ முறைமையின் குணாம்சங்களை வெளிப்படுத்தக்கூடிய கீழ்க்காணும் உள்ளார்ந்த போக்குகளுக்கு வழிவகுக்கும். அதாவது மூலதனம் மையமாதலை நோக்கிய போக்கு, படர்ந்த சரக்குமயமாதலை நோக்கிய போக்கு, காத்திருக்கும் உழைப்பாளர் படையை விரிவாக்குகிற மறு உற்பத்தியை நோக்கிய போக்கு, சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து பறிப்பதை நோக்கிய போக்கு, செல்வ உற்பத்தி ஒரு முனையிலும் வறுமை மறு முனையிலுமான போக்கு… என மேலும்… மேலும்…

மார்க்சின் ஆழமிக்க இரண்டாவது பார்வையும் நிறைய ஆழமான விளைவுகளை கொண்டதாக உள்ளது. முதலாளித்துவம் தனிநபர் சுதந்திரத்தை உறுதி செய்வதாக பிரகடனப்படுத்திக் கொண்டாலும், அதற்கு மாறாக அனைவரின் அன்னியமாதலை உள்ளடக்கியதாகவே அது உள்ளது. இதில் ஒவ்வொரு பொருளாதார முகவரும் அவரவர் விருப்பத்திற்கு மாறாக செயல்படுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். முதலாளியே முதலாளித்துவத்தின் கீழ் அன்னியமானவராய் உள்ளார். அவருடைய விருப்பத்தின்படி செயல்படுகிற உரிமை அவருக்கே கிடையாது. எல்லா முதலாளிகளும் “டார்வீனியப் போட்டியில்” ஈடுபடுவதால் குறிப்பிட்ட வகைகளிலேயே செயல்படுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதனால் மார்க்ஸ் முதலாளியை “மூலதனத்தின் உருவகம்” (Capital Personified) என்கிறார். மூலதனத்தின் உள்ளார்ந்த போக்குகளின் வழி பயணிப்பதற்கான வாகனமே முதலாளியின் தனிமனித செயல்பாடு ஆகும் என்பதே அவர் குறிப்பாக உணர்த்துவதாகும்.

தன்னியல்பு இயக்கம்…

இரண்டாவதாக இம்முறைமையின் “தன்னியல்பான இயக்கம்” என்பதன் பொருள் என்ன? இதன் பொருளாதார செயல்பாட்டிலொ, அதன் விளைபயனிலொ அரசியல் தலையீட்டின் வாயிலாக மாற்றங்களை கொண்டு வருகிற நெகி;ழ்வு அதற்கு கிடையாது என்பதே. உண்மையில் முதலாளித்துவ அரசின் வழக்கமான அரசியல் தலையீடு அம்முறைமையின் தன்னியல்பான இயக்கத்தை உறுதிசெய்வதற்காகவே அமைகிறது. அதன் உள்ளார்ந்த போக்குகளை விரைவாக்குகிற உந்துதலே அதற்குள் அடங்கியுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தன்னியல்பு இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிற வாய்ப்பு ஏற்பட்டாலும் அது இம்முறைமையை செயலிழக்க செய்கிறது. மேலும் முறைமையை மாற்றுவதற்கான அடுத்தகட்ட தலையீடுகளை கோருவது அல்லது அரசின் முதல் தலையீட்டை திரும்பப் பெற்று தன்னியல்பு தன்மைக்கு மீட்பது ஆகிய முடிவுகளுக்கு செல்கிறது.

சோசலிசத்திற்கான நியாயம், குறிப்பாக முதலாளிததுவ முறைமையின் “தன்னியல்பு” காரணமாகசூவு எழுகிறது. முதலாளித்துவ முறைமை சீர்திருத்தங்களை வெற்றிகரமாக, நிலைக்கத்தக்கதாக உள்வாங்கக்கூடிய அளவிற்கு வளைந்து கொடுக்குமா? மேலும் மனிதம் நிறைந்ததாக, மேலும் தொழிலாளர்களிடம் நட்பு பாராட்டுவதாக, மேலும் சமூகப் பொறுப்புடையதாக, மேலும் சமநிலை நோக்குடையதாக, மேலும் “நலம் பேணத்தக்கதாக” (றுநடகயசளைவ) அது தன்னைத் திருத்திக் கொள்வதாக இருந்தால் சோசலிச ஒழுங்கு நோக்கிய மாற்றத்திற்கான வாதங்களுக்கு எந்தவொரு நியாயமும் இருக்காது. ஆனால் இம்முறைமையின் “தன்னியல்பு” இதை வளைந்து கொடுக்க விடாது. எந்தவொரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்திற்கும் வாய்ப்புகளைத் தராது. “சேமநல முதலாளித்துவம்” என்பது நிலைக்கத்தக்க கருதுகோளாக அமையாத வகையில் முரண்களை அது உருவாக்கும். ஆகவேதான் இம்முறைமையை விஞ்சிய ஒன்றை நாட வேண்டியுள்ளது.

சோசலிசம் வேறுபடுவது எதில்?

அதே நேரத்தில் சோசலிசம் என்பது முற்றிலும் மாறான “தன்னியல்பு” அற்ற ஒழுங்கு உடையதாகும் முதலாளித்துவத்திற்கும், சோசலிசத்திற்குமான வேறுபாடு பிந்தையதில் உற்பத்திக் கருவிகளின் உடமை சமூகத்தின் சார்பாக அரசின் வசம் இருக்கும் என்பது மட்டுமே அல்ல. அரசு நிறுவனங்களே சந்தையில் ஒன்றுக்கெதிராய் ஒன்று என முதலாளித்துவ நிறுவனங்கள் போன்று போட்டி போட்டால் அது முதலாளித்துவ அராஜகத்தையே மறு உற்பத்தி செய்யும். அதில் நெருக்கடிகள், வேலையின்மை மற்றும் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த போக்குகளும் வெளிப்படும்.

இவ்விரண்டிற்குமான வேறுபாடு சோசலிசத்தின் கீழ் வருமானங்கள் நன்கு பகிரப்படும் என்பதோடும் சுருங்கிவிடாது ஏனெனில் காத்திருக்கும் உழைப்பாளர் படையை நாம் அனுமதிப்போமேயானால் இவ்வருமான பகிர்வு காலப்போக்கில் பின்னுக்குப்போய்விடும். ஆகவே இவ்விரு முறைமைகளுக்கான வேறுபாடு எதில் அடங்கியிருக்கிறது எனில், சோசலிசம் தனது உள்ளார்ந்த பொருளியல் இயல்புகளால் உந்தப்படுவதில்லை என்பதிலும், உழைப்பாளி மக்கள் தங்களின் பொருளாதாரத் “தலையெழுத்தை” மாற்றுகிற கடப்பாட்டை கூட்டு அரசியல் தலையீட்டின் வாயிலாக ஈடேற்ற முடியும் என்பதிலும் ஆகும்.

ஆனால் எல்லா தனியர்களும் தனது தர்க்க நெறிகளுக்குட்பட்டே செயல்பட வேண்டும்; என்று முதலாளித்துவத்தால் நிர்ப்பந்தம் செய்யப்படுகிற போது சோசலிசம் எப்படி மலரமுடியும்? மார்க்சின் பதில் இதுதான். முதலாளித்துவம் போட்டியை, பிரிவினையை, அன்னியமாதலை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வேளையில், அது அவர்களின் “கூடுகைகள்” (Combination) வாயிலாக கரங்களைக் கோர்க்கவும் வழிவகுக்கிறது. இது முதலாளித்துவம் தனது உள்ளார்ந்த தர்க்கத்தை செயலாக்கும் போது ஏற்படுகிற முறிவு ஆகும். இந்த முறிவு இம் முறைமைக்கு “வெளியே” இருந்து மொழியப்படுகிற கோட்பாட்டு ரீதியான புரிதலால் வலுப்படுத்தப்படுகிறது. அதாவது, “புறம்சார்ந்த அறிவு” கண்ணோட்டம் சோசலிசத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.

மார்க்சியத்திற்கும், தாராளவாதத்திற்குமான (Liberalism) அடிப்படை வேறுபாடு என்னவெனில் பிந்தையது தனிநபர் சுதந்திரம் மீதே தனது அழுத்தத்தை கொடுக்கிறது. அத்தனிநபர் சுதந்திரம் அரசாலோ, சில தனிநபர்களாலோ, சில குழுக்களாலோ கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும், முதலாளித்துவ முறைமை அதைக் கட்டுப்படுத்துவதில்லை என்றும் அது கருதுகிறது. காரணம் அது எல்லா பொருளாதார உறவுகளும் தன்விருப்பத்தோடே பின்னப்படுகின்றன என்று கருதுவதும், தனியர்கள் பொருளாதார உறவுகளுக்குள் நுழைவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதை ஏற்க மறுப்பதுமே ஆகும்.

விடுதலைக்கான முன்நிபந்தனை…

பொருளாதார முறைமை மீது நிர்ப்பந்தம் என்று காரல்மார்க்ஸ் காண்பிக்கிற வெளிச்சம், தனிப்பட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மீது அது விதிக்கிற வரையறைகளோடு சுருங்கிவிடக்கூடியதல்ல. மாறாக தனியர்கள் சிக்கியுள்ள வலையான முதலாளித்துவ முறைமையின் உள்ளார்ந்த போக்குகளால் அது இயக்கப்படுகிறது என்பதே ஆகும். எனவே தனிநபர் சுதந்திரம் என்பது, முதலாளித்துவத்தின் கீழ் கைவசமாகக்கூடியது அல்ல. அதை கைவசமாக்குவதற்கு முதலாளித்துவ சமூகம் கடக்கப்படவேண்டும். சோசலிச சமூகத்திற்கு மாற வேண்டும்.

அச்சமூகமே இத்தகைய உள்ளார்ந்த போக்குகளிலிருந்து விடுதலை பெற்றதாக இருக்கும். முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த போக்குகள் மேலும் நமக்கு விளக்குவது என்னவெனில், எல்லொருக்குமான விடுதலை-சாதியம், பாலினம், இனம் மற்ற ஒடுக்கு முறைகள் ஆகிய அனைத்திலிருந்தும் விடுதலை- என்பதும் இச்சமூகமாற்றத்தின் வாயிலாகவே பெறப்படும் என்பதும் ஆகும். சோசலிசம் என்பது அனைத்து வகையிலான ஒடுக்கு முறைகளுக்கும் முடிவுக்கட்ட தேவையான நிபந்தனை ஆகும்.

மூலதனம் நூலில் முதலாளித்துவம் குறித்து மார்க்ஸ் செய்துள்ள ஆய்வு முதலாளித்துவ முறைமை குறித்தாகவே உள்ளது. இதைச்சுற்றி இருக்கும், முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறைமைகளுடனான ஊடாட்டம் பற்றியெல்லாம், அவற்றுக்கான முக்கியத்துவம் இருந்தும் அவரால் விவாதிக்கப்படவில்லை. இது வினோதமானதுதான், ஏனெனில் மார்க்ஸ் மூலதனம் நூலை ஆக்கிக்கொண்டிருந்த போதே இந்தியாவின் மீதான பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் தாக்கங்கள் குறித்தும் விரிவான வாசிப்போடு நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் இதழில் தொடர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அவர் ஏகாதிபத்தியத்தை தனது ஆய்வில் இணைக்கவில்லை. காரணம், அவரின் கவனம் முழுக்க மேற்கு ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்க புரட்சி நடத்துவதில் குவிந்திருந்ததும், அத்தகைய புரட்சி விரைவான சாத்தியம் என்றும் கருதியதுமே ஆகும். ஆனால் அவர் வாழ்க்கையின் பிந்தைய ஆண்டுகளில் உலகின் பிற பகுதிகள் நோக்கி தனது கவனத்தைத் திருப்பினார். மேற்கு ஐரோப்பிய புரட்சிக்கான வாய்ப்புகள் குறைந்ததும் அதற்கு காரணம். இறப்பிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நரோத்னிக் பொருளாதார நிபுணரான என்.எப். டேனியல் சன்னுக்கு எழுதிய கடிதத்தில் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு உபரி பெருமளவு மடை மாற்றம் செய்யப்படுவதை பற்றி பேசியுள்ளார்.

துவக்கமே… முடிவல்ல

முதலாளித்துவம் குறித்த மார்க்சின் ஆய்வை துவக்கப்புள்ளியாகவே கருதவேண்டுமேயொழிய அத்தகைய ஆய்வின் இறுதியானதல்ல என்பதே சுருக்கமாகக் கூற வேண்டியதாகும். ஏகாதிபத்தியம் குறித்த ஆய்வினை இணைத்து மார்க்சின் ஆய்வை செழுமை செய்வதும், பிந்தைய நிகழ்ச்சிகளையும் இணைத்து அதை வளர்த்தெடுப்பதுமான இரு கடமைகளும் அவருக்கு பின் வந்த மார்க்சிய ஆசிரியர்களின் தோள்களில் விழுந்துள்ளன. லெனின் இதையே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய நிரப்புதல்களை செய்யும்போது முதலாளித்துவம் குறித்த மார்க்சின் பல அடிப்படைப் பார்வைகள் இன்னும் கூர்மையாக நிரூபிக்கப்படும். உதாரணமாக, முதலாளித்துவம் தன்னைச் சுற்றியுள்ள சிறு உற்பத்தி பொருளாதாரத்தை தொடர்ந்து ஆக்ரமித்து அதனை சீரழித்து அதனை சார்ந்த உற்பத்தியாளர்களை முதலாளித்துவத்தின் செயல்படு உழைப்பாளர் படையில் உள்வாங்காமல் தூக்கியெறிகிறது.

இது முதலாளித்துவ முறைமை ஒரு முனையில் செல்வத்தையும், மறுமுனையில் வறுமையையும் உருவாக்குகிறது என்கிற மார்க்சின் பார்வைக்கு மேலும் வலுகூட்டுகிறது. உண்மையில் மார்க்சின் முன் கணிப்பை மறுத்து, இத்தகைய பாகுபாடு முதலாளித்துவம் முதலில் வெற்றிபெற்ற நாடுகளில் ஏற்படவில்லை என்று பேசுபவர்கள் முதலாளித்துவத்திற்கும் அதனைச் சுற்றியுள்ள உலகத்திற்குமான இயங்கியல் உறவை காண மறுக்கிறார்கள் என்பதே உண்மை. மார்க்சின் பார்வைகள் அவரின் மூல எழுத்துக்களையும் “கடந்து ஆய்வுக்குள்ளாகும்போதுதான்” உண்மையில் மேலும் வலுப்படுகின்றன.

மார்க்சின் புரட்சிகரத் திட்டத்திற்கும் பொருந்துகிற உண்மை இது. முதலாளித்துவத்தின் முழுமையை, ஏகாதிபத்தியத்தையும் உள்ளடக்கி நாம் காணும்போதுதான் புரட்சிக்கான வாய்ப்புகளும், சாத்தியங்களும் மிகவும் அதிகமாகின்றன; வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர் வர்க்க புரட்சியைப்பற்றி மட்டும் நாம் பேசாமல் முதலாளித்துவ வளர்ச்சி குன்றிய நாடுகளிலும் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் அடிப்படையில் ஜனநாயக புரட்சியை, சோசலிசம் நோக்கிய கட்டமாக வகுத்தெடுக்க முடிந்துள்ளது. தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமை என்ற கருதுகோளை லெனின் முன்வைத்ததற்கான பின்புலமாக, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியை, தாமதமாக தான் அடியெடுத்து வைத்த நாடுகளில் முதலாளித்துவத்தால் நிறைவேற்ற முடியாத இயலாமையே இருக்கிறது.

மேலும் சிறு உற்பத்தியாளர் பொருளாதாரத்தை ஆக்கிரமித்து அவர்களைக் கையறு நிலைக்குத் தள்ளி தற்கொலைகளுக்குக் கூட வழிவகுக்கிற சூழல் இன்றைய “நவீன” உலகமய யுகத்திலும் நிலவுகிறது என்பதும், புரட்சியை முன்னெடுத்து செல்வதற்கான நியாயத்திற்கு மேலும் வலுகூட்டுகிறது.

தமிழில் : தோழர் க.சுவாமிநாதன்

கார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் !

வாசிப்பு: லதா

எடிட்: மதன் ராஜ்

  • அன்வர் உசேன்

(1985ம் ஆண்டு அக்டோபர்-டிசம்பர் மார்க்சிஸ்ட் இதழில் தோழர் பி.டி.ஆர் எழுதிய கடுரையைத் தழுவி எழுதப்பட்டது)

கார்ல் மார்க்ஸ் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கிய பொழுது தொழிற்சங்கங்கள் அப்பொழுதுதான் உருவாக ஆரம்பித்திருந்தன. தொழிற்சங்கங்கள் முதலாளிகளுக்கு வெறுப் பூட்டின. எனவே பல நாடுகளில் அவை தடை செய்யப்பட்டன.

அக்காலத்தில் சோசலிசம் குறித்து சிந்தித்தவர் கள் கற்பனைவாத சோசலிசம் மற்றும் குட்டி முதலாளித்துவ சோசலிசவாதிகள் ஆவர். அவர் களுக்கு தொழிற்சங்கம் எனும் வர்க்க அமைப்பின் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் தொழிற்சங்கம் எனும் அமைப்பிற்கு எதிரானவர் களாக இருந்தனர். தொழிற்சங்கங்கள் பயனற்றவை எனவும் ஆபத்தானவை எனவும் சமூக வளர்ச் சிக்கு தடையாக இருப்பவை எனவும் கூறினர். அவற்றை தடை செய்ய வேண்டும் எனவும் கோரினர்.

வேறு சிலர் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தங்களும் சமூகமாற்றத்திற்கான கருவி என எண்ணினர். அவர்களும் கூட (ஊதியம் போன்ற) பொருளாதார கோரிக்கைகள் எனும் போராட்டங் களுக்கு அப்பால் சிந்திக்கவில்லை. அரசியல் போராட்டம் என்பதை ஒரு கொள்கையாகவே தவிர்த்தனர். அப்பொழுது நிலவிய முதலாளித்துவ சமூக அமைப்புடன் சமரசம்செய்து கொண்டனர். தொழிற்சங்க போராட்டத்திற்கும் (சுரண்டலிலிருந்து) தொழிலாளி வர்க்கத்தின் முழு விடுதலை மற்றும் சமூகத்தின் விடுதலைக்கும் உள்ள முக்கியமான தொடர்பை இவர்கள் உணர வில்லை. தொழிலாளி வர்க்கம் அரசு  அதிகாரத்தை கைப்பற்றுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் சிந்திக்கவில்லை.

ஏன்? ஏனெனில் நவீன வர்க்க போராட்டத்தின் உள்ளடக்கத்தை அவர்கள் உணரவில்லை. சோசலிச புரட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி தொழிலாளி வர்க்கத்திற்குதான் உண்டு என்பதை அவர்கள் உள்வாங்கவில்லை.

மார்க்ஸை பொறுத்தவரை முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்க்கும் வர்க்கங்களில் தொழிலாளி வர்க்கம்தான் புரட்சிகரமான வர்க்கம் ஆகும். கம்யூனிஸ்டு அறிக்கையில் அவர் கூறினார்:

“இன்றைய கால கட்டத்தில் முதலாளித்து வத்தை எதிர்த்து நிற்கும் வர்க்கங்களில் தொழிலாளி வர்க்கம் மட்டுமே உண்மையான புரட்சி வர்க்கம் ஆகும். மற்ற வர்க்கங்கள் நவீன தொழில்மயத்தின் விளைவாக தேய்ந்து பின்னர் இறுதியாக  மறைந்து விடுகின்றன. ஆனால் தொழிலாளி வர்க்கம் இந்த தொழில்மயத்தின் பிரிக்க முடியாத விசேடமான பின்விளைவு ஆகும்.”

எனவேதான் மார்க்சுக்கு தொழிலாளி வர்க்த் தின் ஒவ்வொரு நடவடிக்கையும் மிகமுக்கிய மானதாக இருந்தது. சமூக முன்னேற்றத்தை நோக் கிய பயணத்தில் பெறும் வர்க்க உணர்வை உரு வாக்கும் ஒவ்வொரு செயல்பாடும் மிக முக்கிய மானது. தொழிற்சங்க அமைப்புகள் உருவாவதும் அவற்றின் செயல்பாடுகளும் ஒன்றுபட்ட வர்க்க உணர்வை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கை உருவாக்குகின்றன என மார்க்ஸ் மதிப்பிட்டார். தொழிலாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த அமைப்பு தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சி ஆகும். வர்க்கத்தின் கட்சியை அமைப்பதும் அதனை விரிவுபடுத்துவதும் தொழிலாளர்களின் அன்றாட போராட்டங்களுக்கு தொடர்பில்லாமல் வெற்றி டத்தில் செயல்படுத்த இயலாது. எனவேதான் மார்க்ஸால் உருவாக்கப்பட்ட முதல் அகிலம் என அழைக்கப்படும் “சர்வதேச தொழிலாளர் சங்கம்” அமைப்பின் சட்டவிதிகள் தனிப்பட்ட தொழிலாளர்களை மட்டுமல்ல; தொழிற்சங்கங் களையும் ஏனைய வடிவங்களில் செயல்பட்ட தொழிலாளர் அமைப்புகளையும் உறுப்பினர்களாக இணைத்து கொள்ளும் வகையில் உருவாக்கப் பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க முதல் அகிலத்தை செயல்படுத்திய பொழுதும் அதனை கலைத்த பிறகும் கூட மார்க்ஸ் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான செயல்பாடுகளில் தொழிற்சங் கங்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை தொடர்ந்து அளித்தார். தொழிற்சங்கங்களுடன் உள்ள தொடர்பை துண்டித்து கொண்ட தலைமையை அம்பலப் படுத்தினார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பை ஆரம்பித் தன் நோக்கம் மார்க்ஸை பொறுத்தவரை அன்றாட போராட்டங்களில் தொழிற்சங்கங்களை ஒன்றிணைப் பதும், தொழிற்சங்கங்களிடையே சர்வதேச அளவில் ஒத்துழைப்பை உருவாக்குவதும் மட்டுமல்ல; தொழிலாளி வர்க்கத்தின் நேரடி வர்க்க செயல் பாடுகளில் ஈடுபடும் அமைப்புகள் தொழிற்சங்கங் கள்தான்! அந்த வகையில் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. எனினும் சர்வதேச தொழிலாளர் அமைப்பை ஆரம்பித்தன் மிக முக்கியமான நோக்கம் சமூக மாற்றத்திற்கான போராட்டத் தில் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தை அரசியல் ரீதியாக ஒற்றுமைபடுத்துவதுதான்! அதாவது தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் அமைப்பை உருவாக்குவதுதான் முக்கியமான நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றிட தொழிற் சங்க இயக்கத்தை கூர்ந்து  கவனிப்பது மார்க்சுக்கு அவசியமாக இருந்தது. தொழிலாளி வர்க்க இயக்கத்தில் நிலவிய பல்வேறு வகைப்பட்ட சிந்தனையோட்டங்களை ஒன்றிணைக்க வேண்டிய தும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிற் சங்க இயக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியதன் அவசியமும் இருந்தது. இதற்காக முதல் அகிலத்தில் ஒரு நீண்ட போராட்டத்தை மார்க்ஸ் நடத்தினார்.
தொழிலாளர் இயக்கத்தில் நிலவிய பல்வேறு சிந்தனையோட்டங்களை ஒன்றிணைக்க வேண்டிய ஒரு வகையான ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. சர்வதேச தொழி லாளர் அமைப்பின் செயல்கள் பற்றி ஏங்கெல்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் போராடிக் கொண்டிருக்கும் அனைத்து தொழிலாளர் இயக்கங் களையும் ஒரு மகத்தான வலுவான அமைப்பாக  இணைக்க வேண்டும். இந்த அமைப்பில் சோசலிச நோக்கங்களை புறக்கணிக்கின்ற அல்லது அதற்கு முக்கியத்துவத்தை அளிக்காத தொழிலாளர் அமைப்புகளான இங்கிலாந்து தொழிற்சங்கங் களையும் பிbhஞ்சு மற்றும் ஸ்பானிய புருதானிய வாதிகளையும் ஜெர்மானிய லெசாலியவதிகளை யும் கூட இந்த அமைப்பிற்குள் இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அமைப்புவிதிகள் இந்த அமைப்பு களுக்கு கதவுகளை மூடுவதாக இருக்க கூடாது.”
தொழிலாளர் இயக்க தலைவரான போல்ட்டே அவர்களுக்கு

மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“சோசலிசம் குறித்து அரை குறையாக புரிதலின் அடிப்படையில் செயல்படும் இயக்கங்களுக்கு பதிலாக ஒரு உண்மையான தொழிலாளர் அமைப்பை உருவாக்குவதுதான் முதல் அகிலம் உருவாக்கப் பட்டதன் அடிப்படை நோக்கம் ஆகும்.”

தொழிற்சங்கங்கள், பரஸ்பர உதவி அமைப்பு கள், கூட்டுறவு அமைப்புகள், ஆகியவைதான் அன்று இருந்த தொழிலாளர் அமைப்புகள். இவற்றுக்கு பதிலாக சோசலிசத்தை நோக்கி நடைமுறையில் செயல்படும் ஒரு உண்மையான தொழிலாளர் வர்க்கத்தின் அமைப்பு (முதல் அகிலம்)

உருவாகிக்கொண்டிருந்தது. எனினும் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சி என்பது நீண்ட தூரத்தில் இருந்தது.
பாட்டாளி வர்க்க உள்ளடக்கமற்ற சோசலிச சிந்தனை போக்குகள்

மார்க்ஸ் குறிப்பிடும் பாட்டாளி வர்க்க உள்ளடக்கமற்ற குட்டி முதலாளித்துவ அல்லது முதலாளித்துவ சோசலிச சிந்தனை போக்குகள் தொழிலாளி வர்க்கத்தின் நடைமுறை பணி களுக்கு தொடர்பில்லாமல் இருந்தன. பிரெஞ்சு சோசலிசம் சோசலிச கோட்பாடுக்கு  ஒரு முக்கிய தோற்றுவாயாக இருந்தது என்பது அனைவரும்  அறிந்த  ஒன்று. பிரெஞ்சு புரட்சி குறித்து மார்க்ஸ் ஆழமாக ஆய்வு செய்தார். பிரெஞ்சு தொழிலாளர் கள் மற்றும் விவசாயிகளின் வர்க்க போராட்டங் கள் அந்த நாட்டின் பல்வேறு சோசலிச கருத் தோட்டங்களில்  எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதையும் ஆய்வு செய்தார்.

மகத்தான பிரெஞ்சு புரட்சியின் சமயத்தில் சோசலிச கருத்தோட்டத்தை பிரதிபலித்த  முக்கிய போராளி பேபுஃப் ஆவார். இவரது ஆதரவாளர் கள் பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகளின் கலகத்தை உருவாக்க முயன்றனர். துன்பங்களின் மூல காரணம் தனியுடமை சொத்துதான் என்பதை அவர்கள் உணர்ந்தனர். எனவே பொருளாதார அசமத்துவத்திற்கு எதிராக போராடினர். இந்த போராட்டத்தை வெற்றி பாதைக்கு இட்டுச் செல்லும் சக்தி  எது என்பதை “சமமானவர்களின் இயக்கம்” உணர்ந்திருக்கவில்லை. எனினும் இவர் களது “சமமானவர்களின் அறிக்கை” எனப்படும் ஆவணமும் இயக்கமும் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் என மார்க்ஸ் கருதினார்.

“சமமானவர்களின் சதிதிட்டத்தை” பிரான் சில் நசுக்கிய பிறகு மக்களிடம் ஒருவித விரக்தி உருவானது. சோசலிச கருத்துகள் மதம் மற்றும் மனிதாபிமான கருத்து வடிவில் தோன்ற ஆரம்பித்தன. செயின்ட் சைமனும் சார்லஸ் ஃபூரியேவும் மனித சமூகத்தை எப்படி மாற்றியமைப்பது எனும் திட்டங்களை முன்வைத்தனர். இவர்கள் முதலாளித் துவ சமூகம் குறித்து ஆழமான  விமர்சனங்களை முன்வைத்தனர்.மக்களின் மகிழ்ச்சியான வாழ்வு குறித்தும் அவர்களது வளமான வாழ்வு குறித்தும் முற்போக்கான ஆனால் கறபனாவாத கருத்து களை முன்வைத்தனர். ஆனால் இது முதலாளித்து வத்திற்கு எதிரான புரட்சி மூலம்தான் சாத்தியம்  என்பதை கூறவில்லை.இந்த புரட்சியை வழிநடத் தும் ஆற்றல் தொழிலாளி வர்க்கத்துக்குதான் உண்டு என்பதையும் கூறவில்லை.

சமாதான வழியில் சமூகத்தை மாற்ற முடியும் என இவர்கள் நம்பினர். இதற்காக முற்போக்கான முதலாளிகள் உட்பட அனைவரின்  மனசாட்சிக் கும் வேண்டுகோளை முன்வைத்தனர். “இவர்கள் அனைத்து அரசியல் போராட்டங்களையும் குறிப் பாக புரட்சிகர செயல்பாடுகளை நிராகரித்தனர். அமைதியான வழியிலும் சிறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதன் மூலமும் இதனை சாதிக்க முடியும் என எண்ணினர். தோல்வி யிலேயே முடிவதற்கு வாய்ப்புள்ள இத்தகைய உதாரணங்களின் மூலம் ஒரு புதிய நற்செய்திகள் அடங்கிய கடவுளின் உலகத்தை உருவாக்க இயலும் என நம்பினர்.” (கம்யூனிஸ்டு அறிக்கை)

இத்தகைய கருத்தோட்டங்களையுடைய குழுக்கள் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான போராட்டங் களிலிருந்து விலகி நின்றன. இவர்களின் பொது வான அம்சம் என்ன? வர்க்க போராட்டத்தையும் சமூக அமைப்பை மாற்றுவதில் தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ள பங்கையும் புரிந்து கொள்ள தவறியது இவர்களின் பொதுவான அம்சாம் ஆகும்.

மார்க்ஸ் மேற்கொண்ட பணி
மார்க்ஸ் முன் இருந்த கடமை இத்தகைய குழுக்களின் குறுகிய சிந்தனைகளை எதிர்த்து போராடுவது மட்டுமல்ல; இக்குழுக்களை பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான போராட்டத்தில் இணைப்பதும் ஆகும். இதற்காக பொறுமையான போராட்டமும் அடிப்படை கோட்பாடு களில் உறுதியான பற்றும் தேவையாக இருந்தது.

தொழிலாளர்கள் எப்படி தம்மை அணி திரட்டி கொள்கிறார்கள் என்பதை மார்க்ஸ் ஆய்வு செய்தார். முதலில் ஒரு ஆலை மட்டத் திலும் படிப்படியாக தேசம் முழுதும்  தொழிற் சங்க இயக்கம் பரிணமிக்கிறது. முதலில் ஊதியத் துக்காக தொடங்கிய போராட்டங்கள் பின்னர் வேலை நீக்கத்திற்கு எதிராகவும் சங்கம் அமைக் கும் உரிமைக்காகவும் போராட்டங்கள் கடுமை யாக நடந்தன. இதனை மார்க்ஸ் ஆழமாக ஆய்வு செய்தார். கம்யூனிஸ்டு அறிக்கை, தத்துவத்தின் வறுமை ஆகிய படைப்புகளில் இவற்றை விவரிக் கிறார். ஏங்கெல்ஸ் அவர்களும் தனது “இங்கிலாந் தில் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்நிலை” எனும் நூலில் ஆய்வு செய்தார். இந்த பரிணமிப்பின் உச்ச கட்டமாக தொழிலாளி வர்க்கம் தனது அரசியல் கட்சியை உருவாக்குகிறது.

வர்க்க போராட்டம் நிராகரித்த புருதானிய சோசலிச கருத்திற்கு எதிராக மார்க்சின் போராட்டம்
தொழிலாளர்களின் இயக்கத்தை அதன் வர்க்கத் தன்மையை பாதுகாத்திட புருதான் மற்றும்  அவரது சீடர்களுக்கு எதிராக மார்க்ஸ் கடுமையாக போராடினார். புருதான் சிறு உற்பத்தியாளர் களின் விருப்பங்களை பிரதிபலித்தார். இது தொழிலாளர்களின் ஒரு பகுதியினரையும் ஆட் கொண்டிருந்தது. பிரான்ஸ்,பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் புருதான் கருத்துக்கு கணிசமாக செல்வாக்கு இருந்தது. எனவே புருதானிய குட்டி முதலாளித்துவ சோசலிச கருத்துக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு சிந்தனை போக்காக இருந்தது. புருதானியத்திற்கு எதிரான போராட்டம் 1848 புரட்சிக்கு முன்பே தொடங் கியது. அதற்கு பின்னரும் பல ஆண்டுகள் இப்போராட்டம் தொடர்ந்தது.

புருதான் வர்க்க போராட்டம் மற்றும் புரட்சி இரண்டையுமே நிராகரித்தார். புருதான் சமூக மாற்றம் குறித்து என்ன கூறுகிறார்? ஒரு மிகவும் பரந்துபட்ட விரிவான உற்பத்தியாளர்கள் மற்றும் உபயோகிப்பாளர் கூட்டுறவு அமைப்பு களின் செயல்பாடுகள் மூலம் முதலாளித்துவ சமூகத்தை மாற்றமுடியும் என புருதான் வாதிட்டார். இதற்காக மக்கள் வங்கி உருவாக்க வேண்டும் எனவும் அவ்வங்கி கூட்டுறவு நிறுவனங் களுக்கு வட்டியில்லா  கடன் அளிக்க வேண்டும்  எனவும் கூறினார். எனவே தொழிற்சங்கங்கள், ஊதிய உயர்வு,வேலை நிறுத்தம் ஆகியவற்றை புருதான் எதிர்த்தார். ஊதிய உயர்வு விலைவாசி உயர்வுக்கு இட்டுச் செல்லும் எனும் உளுத்து போன வாதத்தை அவர் முன்வைத்தார். ஊதிய உயர்வால் சமூகத்திற்கு எந்த பலனும் கிடைக்காது எனவும் கூறினார். மேலும் தொழிற்சங்கங்களை அனுமதிக்கும் சட்டம்  நீதி மற்றும் பொருளாதர கொள்கைகளுக்கு எதிரானவை எனவும் எந்த ஒரு சமூகத்தின் ஆட்சிக்கும் தீங்கு விளைவிப்பது எனவும் பொது அமைதிக்கு கேடு விளைவிப்பவை எனவும் கூறினார்.

ஊதியம் அல்லது கூலி என்ன  என்பதை புருதான் புரிந்துகொள்ளவில்லை. எப்படி தொழிலாளி உபரி உற்பத்தி மூலம் சுரண்டப்படுகிறார் என்பதையும் புருதான் புரிந்துகொள்ளவில்லை. உழைப்பு சக்தியின் மதிப்புடன் உற்பத்தி செய்யப் படும் பொருளின் மதிப்பை இணைத்து குழப்பி கொண்டார். எனவே இந்த புருதானிய சிந்தனை யோட்டத்தை எதிர்த்து மார்க்ஸ் கடுமையாக போராடினார்.
அரசு உதவியுடன் சோசலிசம் எனும் லெஸ்ஸாலே சோசலிச கருத்தோட்டத்திற்கு எதிரான போராட்டம்
மார்க்சும் ஏங்கெல்சும் நடத்திய இன்னொரு போரட்டம் லெஸ்ஸாலே கருத்தோட்டத்திற்கு எதிரானது ஆகும். லெஸ்ஸாலே மார்க்சின் நண் பராக இருந்தார். சோசலிச கருத்தோட்டத்தை கொண்டவராகவும் இருந்தார். பொது தொழி லாளர் சங்கம் எனும் அமைப்பையும் உருவாக் கினார். எனினும் சோசலிச சமூக மாற்றம் அடை வது குறித்த அவரது கருத்து தொழிலாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு முரண்பட்டு இருந்தது.

லெஸ்ஸாலே முன்வைத்த கோட்பாடு என்ன? உற்பத்தியாளர்கள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவற்றிற்கு அரசு உதவி தரப் பட வேண்டும் எனவும் இதன் மூலம் சோசலி சத்தை அறிமுகப்படுத்த முடியும் எனவும் லெஸ்ஸா லேவின் கோட்பாடு முன்வைக்கிறது. வாக்குரிமையை சட்டபூர்வமாகவும் அமைதியான முறையிலும் பெறுவதே தனது அமைப்பின் நோக்கம் என அவர் பிரகடனப்படுத்தினார். (அப்பொழுது ஜெர்மனியில் அனைவருக்கும் வாக்குரிமை இல்லை) தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை வலுவாக பிரதிபலிக்கவும் வர்க்க முரண்பாடுகளை அகற்ற வும் வாக்குரிமை ஒன்றுதான் சிறந்த வழி என லெஸ்ஸாலே வாதிட்டார். புரட்சிக்கான போராட்டங் கள் நிராகரிக்கப்பட்டன. தொழிற்சங்க போராட்டங் களும் பயனற்றவை என வகைப்படுத்தப்பட்டன.

லெஸ்ஸாலே வாக்குரிமைக்கும் உற்பத்தியா ளர் அமைப்புகளுக்கு அரசு உதவிக்கும் மட்டுமே முழுமுக்கியத்துவம் அளித்தார். தொழிலாளர் போராட்டம் குறித்தும் வேலை நிறுத்தங்கள் குறித்தும் அவருக்கு அவநம்பிக்கை இருந்தது. “சங்கம் அமைக்கும் உரிமைகள் தொழிலாளர் களுக்கு எவ்வித பயன்களையும் அளிக்காது. தொழிலாளர்களின் வாழ்வில் எவ்வித முன்னேற்றத் தையும் தொழிற்சங்கங்கள் சாதிக்க முடியாது” என அவர் கூறினார்.
பிரிட்டஷ் தொழிலாளர்களின் வேலை நிறுத் தத்தில் வெளிப்பட்ட மகத்தான வீரத்தை லெஸ்ஸாலே புரிந்து கொள்ளவில்லை.மாறாக அதில் வெளிப் பட்ட சில சோகமான நிகழ்வுகள் குறித்தே அவர் அதிகம் பேசினார்.
லெஸ்ஸலேயை பொருத்தவரை ஊதியத்திற் கான வேலை நிறுத்தம் பைத்தியகரமானது மட்டுமல்ல; பயனற்ற சாகசமும் கூட! ஏனெனில் தொழிலாளி வர்க்கம் ஊதியம் குறித்த நிரந்தர விதியை மாற்ற இயலாது.எனவே ஊதியம் போன்ற பொருளாதார கோரிக்கைகளுக்கான தொழிலாளர் களின் போராட்டத்தை லெஸ்ஸாலே நிராகரித்தார்.

ஊதியம் குறித்து லெஸ்ஸாலே என்ன கூறுகிறார்?

தொழிலாளி என்னதான் போராடினாலும் முதலாளித்துவ சமூகத்தின் கடுமையான விதி காரணமாக தொழிலாளியின் வாழ்வு நிலையில் எந்த முன்னேற்றமும் உருவாகாது. மார்க்ஸ் அவர்கள் லெஸ்ஸாலேயின் இந்த கருத்தாக் கத்தை கடுமையாக சாடினார். ஊதியம் அல்லது கூலி என்பது இரண்டு உட்கூறுகளை கொண்டது என மார்க்ஸ் விளக்கினார். அவை ஒன்று உயிர்வாழ குறைந்தபட்சமானது; மற்றொன்று சமூக தன்மை கொண்ட குறைந்த பட்சமானது.  ஊதியத்தில் சமூக தன்மை கொண்ட குறைந்த பட்ச அளவை நிர்ணயிப்பதில் தொழிலாளர் களின் அமைப்புகளும் அவற்றின் போராட்டங் களும் முக்கிய பங்கை ஆற்றுகின்றன என மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். ஆனால் போராட்டங்களில் நம்பிக்கையற்ற லெஸ்ஸாலே உற்பத்தியாளர்கள் அமைப்புகள்  மற்றும் அதற்கு அரசு உதவி எனும் கோட்பாடுகளைதான் பற்றி நின்றார்.
“உன்னுடைய வர்க்கம் விடுதலை பெற வேண்டு மானால் பல மில்லியன்கள் கணக்கில் பணம் தேவை. இதனை அரசு மட்டுமே சட்டம் மூலம் தர இயலும்.” என லெஸ்ஸாலே வாதிட்டார்.

தொழிலாளர் இயக்கத்தை பிரஷ்ய அரசாங் கத்தின் தொண்டுள்ளத்தை சார்ந்து இருக்குமாறு வேண்டினார். லெஸ்ஸலேயின் இந்த கருத் தோட்டம் பிற்போக்குதனமான பிரஷ்ய அரசன் பிஸ்மார்க்கை ஆதரிக்கும் நிலைக்கு அவரை தள்ளியது. பிஸ்மார்க் அரசாங்கத்தின் பல பிற் போக்கு கருத்துகளையும் செயல்களையும் ஆதரிக் கும் நிலைக்கு லெஸ்ஸாலே தள்ளப்பட்டார்.

ஜனநாயகத்திற்கான போராட்டம், அதிகார வர்க்கம் மற்றும் நிலபிரபுத்துவத்திர்கு எதிராக தொழிற்சங்க இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து லெஸ்ஸாலே கருத்தியல் உணர தவறிவிட்டது என்பதை மார்க்ஸ் விமர்சித்தார்.  அமெரிக்கா வில் வாக்குரிமை இருந்தும் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இதே போல லெஸ்ஸாலே கருத்திய லின் அடிப்படையில் உருவான  கோதா திட்டத் தையும் மார்க்ஸ் கடுமையாக விமர்சித்தார். அரசு உதவியுடன் கூடிய உற்பத்தியாளர்கள் அமைப்பு மூலம் சோசலிச மாற்றத்தை காண முடியும் எனும் முட்டாள்தனமான வாதத்தை மார்க்ஸ் நிராகரித்தார். தொழிலாளி வர்க்கம் புரட்சிகர மானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது ஒன்றுமே இல்லை என மார்க்ஸ் வாதிட்டார்.

சமூக உற்பத்தியை மறுகட்டமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனும் தொழிலாளி வர்க்கத்தின் நியாயமான விருப்பத்திற்கு லெஸ் ஸாலே புரட்சிக்கு முரண்பட்ட ஒரு சீர்திருத்த திருகலை கொடுத்தார். தொழிலாளி வர்க்கத்தை முதலாளித்துவ அரசின் கருணையின் கீழ் தள்ளி னார். தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க போராட்டம் மற்றும் வேலை நிறுத்தங்களை எதிர்க்க முதலாளித் துவ பொருளாதார வல்லுனர்களின் கருத்து களை பயன்படுத்தினார். தொழிலாளி வர்க்கத் திற்கு அரசியல் கட்சி என்ற பெயரில் தொழிற் சங்கங்களை ஒழிக்க முயற்சி செய்தார். அவர் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினார். ஆனால் அக்கட்சி மிகவும் தவறான புரிதலையும் தவறான திசைவழியையும் கொண்டி ருந்தது. தொழிலாளி வர்க்கத்தின் முக்கியமான வர்க்க அமைப்பான தொழிற்சங்கங்கள் குறித்து தவறான கோட்பாடு லெஸ்ஸாலேயின் கட்சிக்கு இருந்தது.
இந்த கருத்தோட்டங்களுக்கு எதிராக மார்க்ஸ் கடுமையாக போராடினார்.

அரசியல் வேண்டாம் எனும் பாக்குனின் சோசலிச கருத்தோட்டத்திற்கு எதிரான போராட்டம்
புருதான் மற்றும் லெஸ்ஸாலே கருத்துகளுக்கு நேர் எதிரான திசையில் இன்னொரு  போக்கு உருவாகிக்கொண்டிருந்தது. தொழிலாளி வர்க்க மும் தொழிற்சங்க இயக்கமும் அனைத்து அரசிய லையும் நிராகரிக்க வேண்டும்; அரசியல் கட்சி அமைப்பதை எதிர்க்க வேண்டும்; தொழிற்சங்க இயக்கத்தை மட்டுமே சார்ந்திருந்து சமூகத்தில் தேவையான மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என இந்த கருத்து போக்கு கோரியது. இதற்கு சொந்தகாரர் பாக்குனின்  எனும் தலைவர் ஆவார்.
பாக்குனின் ஒரு புரட்சிகர போராளி என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் “அராஜக வாதம்” எனும் சித்தாந்தத்தின் பிதாமகர். எனவே மார்க்சியத்தின் வலுவான எதிரி! மார்க்ஸால் வழிநடத்தப்பட்ட முதல் அகிலத்தினுள் தொடர்ந்து குழு உட்பூசலில் ஈடுபட்டார். எனவே  1 8 7 2  ம் ஆண்டு நடந்த ஹேக் மாநாட்டில் முதல் அகிலத் திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

போல்டே எனும் போராளிக்கு மார்க்ஸ் 23.11.1871 அன்று எழுதிய கடிதத்தில் பாக்குனின் பற்றி கீழ்கண்டவாறு தொகுத்து கூறுகிறார்:
“பாக்குனின் கோட்பாடு வலது மற்றும் இடது கருத்துகளை ஒன்றிணைத்த மேம்போக்கான குப்பை போல உள்ளது. வர்க்கங்களின் சமத்து வம்,  வாரிசு சொத்துரிமையை அழிப்பது என்பதை சமூக இயக்கத்தின் தொடக்கமாக கூறுவது (இது செயிண்ட் சைமன் முன்வைத்த முட்டாள்தன மான கருத்து), உறுப்பினர்கள் நாத்திகர்களாக இருக்க வேண்டும் எனும் வறட்டுதனமான கோட் பாடு,அரசியல் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருப்பது” ஆகியவை பாக்குனின் முன்வைத்த முக்கிய கோட்பாடுகள் ஆகும்.

(பாக்குனின் முன்வைக்கும்) வர்க்கங்களின் சமத்துவம் குறித்து மார்க்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“ வர்க்கங்களை சமன்படுத்துவது என்பது ‘மூலதனமும் உழைப்பும் முரண்பட்டவை அல்ல’ என இன்னொரு வகையில் கூறுவது ஆகும். இது முதலாளித்துவ சோசலிஸ்டுகள்  முன்வைக்கும் கருத்து. மாறாக வர்க்க புரட்சி மூலம் வர்க்க பேதமையை ஒழிப்பது என்பதுதான் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் இறுதி இலட்சியம் ஆகும்.” (ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதம்).

பாக்குனின் கோட்பாடு குறித்து ஏங்கெல்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“பாக்குனின் ஒரு வினோதமான கோட்பாடை கொண்டிருக்கிறார். அது புருதானியமும் கம்யூனி சமும் கலந்த கலவையாக இருக்கிறது. பாக்குனின் முன்வைக்கும் முக்கிய கருத்து என்னவெனில் அரசு எனும் அமைப்புதான் உடனடியாக ஒழிக்க வேண்டிய அதிமுக்கிய தீய சக்தி என்பதாகும். ஆனால் அரசு என்பது என்ன? ஆளும் வர்க்கங் களான முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் தமது சொத்துக்களையும் வளங்களையும் பாதுகாத்து கொள்ள உருவாக்கி கொண்ட ஒரு அமைப்பு தான் அரசு அமைப்பு ஆகும். முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள வர்க்க முரண் பாடுதான் அடிப்படை பிரச்சனை. இந்த வர்க்க பேதத்தை ஒழிப்பது என்பதுதான் அடிப்படை முன்னுரிமை. இதற்கு உட்பட்டதுதான் அரசு எனும் அமைப்பை அகற்றுவது என்பது! மிகப் பெரும்பாலான சமூக ஜனநாயக ஊழியர்கள் நமது இந்த கருத்தை ஆதரிக்கின்றனர்.”

“பாக்குனின் கருத்தின்படி அரசுதான் மூலதனத்தை உருவாக்குகிறது. மூலதனம் தனக்கு உகந்த அரசை உருவாக்கவில்லை. அரசின் கருணையில்தான் மூலதனம் இயங்குகிறது.”

“நமது கருத்துக்கும் பாக்குனின் கருத்துக் கும் உள்ள வேறுபாடு மிக முக்கியமானது. சமூக புரட்சி இல்லாமல் அரசு எனும் அமைப்பை ஒழிப்பது என்பது முட்டாள்தனமானது. மூலதனத்தின் அதிகாரத்தை ஒழிப்பது என்ப தையே நாம் சமூக புரட்சி என்று வகைப்படுத்து கிறோம். இதுதான் சமூக உற்பத்தி முறையில் மாற்றத்தை விளைவிக்கிறது.”
ஆனால் பாக்குனின் என்ன சொல்லுகிறார்? அரசுதான் முக்கிய தீய சக்தி. அரசு அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை உயிரோடு இருப்பதை அனுமதிக்க கூடாது. அரசுக்கு எதிராக மட்டுமே தொழிற்சங்கங்கள் போராட வேண்டும். அரசியலில் இருந்து முற்றிலும் ஓதுங்கி யிருக்க வேண்டும். தேர்தலில் பங்கேற்பதோ அல்லது எந்த ஒரு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதோ அகிலத்தின் கொள்கைகளுக்கு துரோகம் இழைப்பது!

தொழிலாளர்கள் எவ்வித அறிவுசார் புரிதலும் இல்லாதவர்கள் என பாக்குனின் கருதினார். “அகிலத்தின் கொள்கைகள்” எனும் பிரசுரத்தில் பாக்குனின் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“தொழிலாளர்களின் விடுதலை என்பது தொழிலாளர்களாலேயே வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதை அகிலத்தின் அறிமுக விதிகள் தெளிவுபடுத்துகின்றன. எனினும் பல நேரங்களில் தொழிலாளர்கள் புரிதல் இல்லாதவர்களாக உள்ளனர். அவர்கள் கோட்பாடுகளையும் அறியாதவர்களாக உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் முன் ஒரே பாதைதான் உள்ளது. நடை முறை விடுதலை எனும் பாதைதான் அது! இந்த நடைமுறை என்பது எதுவாக இருக்க வேண்டும்? தொழிலாளர்களின் ஒற்றுமை அடிப்படையில் அதிகாரிகளுக்கு எதிரான போராட்டம். அதாவது தெ hழிற்சங்கங்கள், போராட்ட எதிர்ப்பு நிதி அமைப்புகளின் சம்மேளனம் போன்றவை ஆகும்.”
“அகிலத்தின் விதிகள் அடிப்படையில் உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான அரசியல் நிராகரிக் கப்பட வேண்டும். அனைத்து தேசங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அகிலம் எப்படி கிளர்ச்சிகளை நடத்துவது என்பதை போதனை அளிக்கும். இந்த கிளர்ச்சிகள் முற்றிலும் பணி நேர குறைப்பு, ஊதிய உயர்வு போன்ற பொருளா தார கோரிக்கைகளுக்காக மட்டுமே இருக்கும். இதற்காக உழைப்பாளிகளை ஓரணியில் சேர்ப்ப தும் போராட்ட நிதியை திரட்டுவதுமாக இருக்கும்.”

பாக்குனின் தொழிற்சங்கங்களை புரிதல் இல்லாத தொழிலாளர்களின் சங்கமிக்கும் அமைப்பாக நோக்கினார். நவீன புரட்சிகர வர்க்கத்தை வார்த் தெடுக்கும் ஒரு அமைப்பாக தொழிற்சங்கத்தை பாக்குனின் புரிந்துகொள்ளவில்லை. இதற்கு மாறாக மார்க்ஸ் புரட்சியின் வர்க்கத்தன்மையை சரியாக உணர்ந்திருந்தார். தொழிலாளி வர்க்கத் தின் அரசை அமைக்க வேண்டிய தேவையை உணர்ந்திருந்தார். எனவே பாக்குனினின் குறுகிய கோட்பாடுகளுக்கு எதிராக சமரசமில்லாத போராட்டத்தை மார்க்ஸ் நடத்தினார்.

பிரிட்டன் தொழிற்சங்க இயக்கமும் சோசலிச கருத்துகளும்
பிரிட்டஷ் சோசலிசத்திற்கு அடித்தளம் இட்டவர் ராபர்ட் ஓவன் ஆவார். ஓவன் குறித்து மார்க்சும் ஏங்கெல்சும் மிகுந்த மரியாதை வைத் திருந்தனர். “ஒரு சீர்திருத்தவாதி; மிகவும் எளிமை யானவர்; 20 வயதில் உற்பத்தி நிறுவனத்தை உருவாக்கியவர்; பிறவி தலைவனாக விளங்கிய வெகு சிலரில் ஒருவர்” என ஏங்கெல்ஸ் இவரை பாராட்டுகிறார். வர்க்க பேதங்களை களைந்திட சில திட்டங்களை உருவாக்கினார் எனவும் ஏங்கெல்ஸ் இவர் பற்றி கூறுகிறார்.

செயிண்ட் சைமன் அல்லது ஃபூரியே போல அல்லாது ஓவன் பாட்டாளி இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். எனினும் அவர் ஒரு கற்பனாவாத சமாதான விரும்பியாக இருந்தார். புரட்சிகர நடவடிக்கையில் பங்கேற்க மறுத்தார். இங்கிலாந்தில் சோசலிஸ்டுகள் தனியா கவும் உண்மையான தொழிலாளர்களை கொண்ட சாசன இயக்கத்தினர் தனியாகவும் செயல்பட்ட னர். அவர்களிடையே இணைப்பு இல்லை. இந்த இணைப்பை உருவாக்குவது அவசியம் என ஏங்கெல்ஸ் கருதினார்.

தொழிற்சங்க இயக்கத்தின் தொட்டிலாக பிரிட்டன் இருந்தது. எனவே மார்க்சும் ஏங்கெல் சும் பிரிட்டன் தொழிற்சங்க இயக்கம் குறித்து கூர்மையான கவனம் செலுத்தினர். தவறுகளை விமர்சித்தனர். தொழிலாளர்களின் வாழ்வு நிலையை செழுமைப்படுத்த நடக்கும் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர். தொழிலாளர்களின் வழ்வு நிலைதான் அனைத்து சமூக  இயக்கங் களுக்கும் தொடக்க புள்ளியாக இருப்பதை உணர்ந்தனர்.

பிரிட்டன் ஓவன் வாதியாக விளங்கிய வெஸ்டன் என்பவருடன் நடந்த விவாதத்தில் பிரிட்டஷ் தொழிற் சங்கத்தின் பலவீனத்தை மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். அன்றாட கோரிக்கைகளுக்கான போராட்டங்களிலும் சிறு கோரிக்கைகளுக் காகவுமே பிரிட்டன் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்துகின்றன என மார்க்ஸ் விமர்சித்தார். அவர்கள் விளைவுகளுக்கு எதிராகவே போராடு கின்றனர். மூல காரணிகளை எதிர்த்து அல்ல என்பதை மார்க்ஸ் எடுத்துரைத்தார். “நியாயமான வேலை நாளுக்காக நியாயமான கூலி” எனும் பழமைவாத முழக்கத்திற்கு பதிலாக “கூலி உழைப்பு ஒழிப்பு” எனும் புரட்சிகரமான முழக்கத்தை முன் வைக்க வேண்டும் என மார்க்ஸ் அறிவுறுத்தினார்.
கூலி உயர்வு விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கிறது எனும் வாதத்தை பிரிட்டனிலும் மார்க்ஸ் சந்திக்க வேண்டியிருந்தது. இப்பிரச் சனையை ஓவன் வாதியான வெஸ்டன் எழுப் பினார். இதற்காக அகிலத்தின் பொதுகுழுவில் ஒரு விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூலி உயர்வு விலைவாசிக்கு இட்டுச்செல்வதாகவும் இது தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையை யும்  ஏற்படுத்தவில்லை எனவும் வெஸ்டன் வாதிட்டார். எனவே தொழிற்சங்கங்கள் தீயவிளைவுகளை ஏற்படுத்த கூடியவை என வாதிடப்பட்டது.

வெஸ்டனுக்கு பதில் அளிக்குமாறு மார்க்ஸ் கேட்டுக்கொள்ளப்பட்டார். முதலாளித்துவம் எழுப்பும் இப்பிரச்சனைக்கு மார்க்ஸ் அறிவியல் பூர்வமாக பதில்  அளித்தார். உபரி மதிப்பு எப்படி உருவாகிறது எனவும் இதன் காரணமாகவே கூலி உயர்வுக்கான தேவை உருவாகிறது எனவும் மார்க்ஸ் விளக்கினார். கூலி விகிதம் உயர்வு காரணமாக விலைவாசி உயர வேண்டிய அவசியம் இல்லை எனவும் மாறாக விலைவாசி விகிதம் குறையும் எனவும் மார்க்ஸ் விளக்கினார். தொழிற் சங்கத்தின் சமூக நன்மைகள் குறித்தும்  மார்க்ஸ் தெளிவுபடுத்தினார்.

நாளடைவில் பிரிட்டன் தொழிற்சங்கம் பின்னடைவை சந்தித்தது. ஒரு கொள்கை அளவில் தொழிற்சங்கங்கள் அரசியல் நடவடிக்கைகளை யும் வர்க்க இயக்கங்களையும் தவிர்த்தன. தொழி லாளர்கள் பிரிட்டனிலிருந்த இரண்டு முதலாளித் துவ அரசியல் கட்சிகளிடையே பிரிந்து கிடந்தனர்.
இந்த சரிவுக்கு என்ன மூலகாரணம் என்பதை ஏங்கெல்ஸ் புரிந்துவைத்திருந்தார். உலக சந்தையில் அன்று பிரிட்டன் முதலாளித்துவம் தனது அதிகாரத்தை நிலைநாட்டியது. இதன் காரணமாக பெரும் பொருளாதார கொள் ளையை பிரிட்டன் நடத்தியது. இந்த கொள் ளையில் ஒரு சிறு பகுதி பிரிட்டன் தொழிலாளி வர்க்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதன் காரணமாக பிரிட்டன் தொழிலாளி வர்க்கம் முதலாளிகளின் வாலாக மாறிய அவலம் ஏற்பட்டது.

ஆண்-பெண் சமத்துவம் கடைப்பிடித்த அமெரிக்க தொழிற்சங்க இயக்கம்
அமெரிக்காவில் தொழிற்சங்க  இயக்க நடவடிக் கைகள் குறித்தும் மார்க்ஸ் கவனம் செலுத்தி வந்தார். மூலதனத்திற்கு எதிரான போராட்டத் திற்காக ஒரு அமைப்பை உருவாக்கு வது எனும் அமெரிக்க தொழிலாளர்களின் மாநாடு முடிவு செய்ததை வரவேற்றார். அகிலத்தின் ஜெனிவா கூட்டத்தில் மார்க்ஸ் முன்வைத்த பல ஆலோ சனைகளை அமெரிக்க தொழிற்சங்க இயக்கம் நடைமுறைப்படுத்த முடிவு செய்ததும் மார்க்சுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
அமெரிக்க தொழிற்சங்க அமைப்பு உழைக்கும் பெண்களின் சமஉரிமை குறித்து கொண்டிருந்த நிலைப்பாட்டை 1866ம் ஆண்டு மார்க்ஸ் மிகுந்த மனநிறைவோடு வரவேற்றார். இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் இப்பிரச் சனையில் குறுகிய சிந்தனையுடன் உள்ள நேரத் தில் அமெரிக்க தொழிற்சங்கத்தின் செயல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என கருதினார். “பெண் களின் போராட்டம் இல்லாமல் மகத்தான சமூக மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதை வரலாற்றின் ஒரு சிறு பகுதியை கற்றவர்கள் கூட அறிந்திருப்பர்” என மார்க்ஸ் கூறுகிறார்.
அதே சமயத்தில் அமெரிக்க தொழிற்சங்க இயக்கம் தவறுகளில் சிக்கியபொழுது மார்க்சும் ஏங்கெல்சும் அந்த தவறுகளை களைய உதவினர். முதல் அகிலம் கலைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க தொழிற்சங்க இயக்கத்தில் செக்டரியன் எனப் படும் வறட்டுத்தனம் தலைதூக்கியது. குறிப்பாக சோசலிச கருத்துகளை ஏற்றுகொள்ளாத தொழிற்சங்க அமைப்புகளை ஒதுக்க தலைப் பட்டனர். இது தவறு என ஏங்கெல்ஸ் சுட்டிக் காட்டினர். முniபாவள டீக டுயbடிரச எனப்படும் அத்தகைய தொழிற்சங்கங்களை ஒதுக்காமல் அந்த அமைப்பு களுக்குள் செயல்பட்டு சரியான பாதைக்கு திருப்பி விட முயல வேண்டும் என ஏங்கெல்சு அறிவுறுத்தினார்.
தொழிலாளர் அமைப்புகளை அவை நம்முடன் கருத்து வேறுபட்டாலும் அவற்றை அரவணைத்து செல்ல வேண்டியதன் அவசியத்தை மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தொடர்ந்து சுட்டிக்காட்டினர்.

ஒவ்வொரு போராளியும் கற்க வேண்டிய மார்க்சின் தொழிற்சங்க இயக்கம் குறித்த அறிவியல் பூர்வமான கோட்பாடுகள்.
சர்வதேச தொழிலாளர் இயக்த்தின் ஜெனிவா மாநாட்டில் தொழிற்சங்க இயக்கம் குறித்து ஒரு முழுமையான அறிவியல்பூர்வமான கோட்பாடு களை மார்க்ஸ் விளக்கினார். ஒவ்வொரு போராளி யும் நிச்சயம் ஆழ்ந்து கற்க வேண்டிய கருத்துகள் இவை! ஜெனிவா மாநாடு இதனை அங்கீகரித்தது. வர்க்க போராட்டத்தில் தொழிற்சங்கங்கங்களின் பங்கு என்ன என்பதை உலக தொழிலாளி வர்க்கம் அறிந்துகொள்ள இவை சிறந்த வழிகாட்டுதல்கள் எனில்  மிகை அல்ல!

ஆரம்ப கட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பு கள்தான் தொழிற்சங்க இயக்கம் என மார்க்ஸ் வரையறுக்கிறார். இதனை புரிந்துகொள்ளாத தனது சமகால தலைவர்களை கடுமையாக விமர் சிக்கிறார். தமது அன்றாட நலன்களை பாதுகாக்க தொழிலாளர்களிடையே அனிச்சையாக உருவா கும் முயற்சிகள்தான் தொழிற்சங்கங்க அமைப்புகள்! எனினும் விரைவில் இந்த அமைப்புகள் ஒரு வர்க்க அமைப்பாக பரிணமிக்கின்றன. நிலப் பிரபுத்துவத்தின் இறுதி காலத்தில் உருவான கில்டுகள் மற்றும் கம்யூன்களுடன் தொழிற்சங்கங் களை மார்க்ஸ் ஒப்பிடுகிறார். கம்யூன்களும் கில்டுகளும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக முதலாளித்துவம் நடத்திய அரசியல் போராட்டத் தில் ஆயுதங்களாக பயன்பட்டன.

எனவே தொழிற்சங்கங்களின் உடனடி பணி என்பது தொழிலாளர்களின் அன்றாட நலன்களை பாதுகாப்பதாகவே இருக்கும். இது தேவையானது மட்டுமல்ல; நியாயமானதும் ஆகும். பின்னர் தேசம் முழுதும் ஒரு தொழிற்சங்க அமைப்பு உருவாகும் அடுத்த நகர்வு நடக்கிறது. தொழிலாளர் கள் தம்மை அறியாமலே தமது வர்க்கத்தின் ஒரு முக்கிய அமைப்பாக தொழிற்சங்கங்க அமைப்பை பரவலாக்குகின்றனர்.
இதனை மார்க்ஸ் கீழ்கண்டவாறு விளக்குகிறார்:
“மூலதனத்திற்கும் தொழிலாளிக்கும் இடையே நடக்கும் போரில் கொரில்லா போருக்கு தொழிற் சங்கங்கள் தேவைப்படுகின்றன. அதே சமயத்தில் இதற்கு (கொரில்லா போருக்கு)  இணையாக கூலி உழைப்பையும் முதலாளித்துவத்தின் ஆட்சியை யும் நிரந்தரமாக அகற்றுவதற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவத்துடன் தொழிற்சங்கங்கள் தேவைப் படுகின்றன.” (தேர்வு நூல்கள் தொகுதி 2)

எனினும் அன்றைய தொழிற்சங்க இயக்கத்தின் அரசியல் உணர்வு  அவ்வளவு ஆழமாக இல்லை என்பதை மார்க்ஸ் அறிந்திருந்தார். இயக்கத்தின் பலவீனங்களை தெளிவுபடுத்துகிறார். தமது உடனடி நலன்களை பாதுகாக்க மூலதனத் துடன் போரிட்டுகொண்டிருக்கும் தொழிற் சங்க இயக்கம் கூலி அடிமை முறையை அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையையே முற்றிலும் ஒழித்திட  தனக்கு வலிமை உள்ளது என்பதை புரிந்துகொள்ளவில்லை. எனவே பொதுவான சமூக மற்றும் அரசியல் இயக்கங்களில் பங்கேற் காமல் தனித்து உள்ளது என குறிப்பிடுகிறார். இதில் சிறிது முன்னேற்றம் உருவாகி வருகிறது என்பதை பதிவு செய்யும் மார்க்ஸ் தொழிற்சங்க இயக்கம் தனது பலவீனங்களை விரைவில் களைய வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்.
தமது உடனடி நலன்களுக்கான போராட்டங் களை கைவிடாமலேயே (சுரண்டல் முறையிலிருந்து) முழு விடுதலை பெற  உணர்வுபூர்வத்துடன் செயல் பட வேண்டும் என கூறுகிறார். அத்திசை வழியில் பயணிக்கும் ஒவ்வொரு சமூக இயக்கத்திற்கும் அரசியல் போராட்டத்திற்கும் வளர்த்தெடுக்க உதவ வேண்டும் என வலியுறுத்துகிறார். உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக அவர் களின் போராளியாக தொழிலாளி வர்க்கம் பரிண மிக்க வேண்டும் என கூறுகிறார். மிகவும் சுரண்டப் படுகின்ற விவசாய தொழிலாளர்கள் போன்ற உழைப்பாளிகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறார்.

“நமது போராட்டங்கள் குறுகிய நோக்கம் கொண்டவை அல்ல; சுயநலம் மிக்கவை அல்ல; மாறாக இலட்சக்கணக்கான உழைப்பாளிகளின் ஒட்டு மொத்த விடுதலையை நோக்கமாக கொண்டது தமது போராட்டங்கள் என்பதை தொழிலாளி வர்க்கம் மக்கள் அனைவருக்கும் புரியவைக்க வேண்டும்” என அழுத்தம் திருத்தமாக மார்க்ஸ் முன்வைக்கிறார்.
மார்க்சின் இந்த வழிகாட்டுதல்தான் புரட்சிகர மான தொழிற்சங்கத்தை வழிநடத்துகிறது. தொழிற்சங்க இயக்கத்திற்குள் சீர்திருத்தவாத மும் திருத்தல்வாதமும் நுழைவதை தடுக்கும் ஆயுதமாக இந்த வழிகாட்டுதல் பயன்படுகிறது. கூலி அடிமை முறையை ஒழிக்க வேண்டும் எனும் கடமையை சீர்திருத்தவாதிகள் மறந்துபோயினர். சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து தொழிற் சங்க இயக்கத்தை துண்டித்தனர். தமது உறுப்பினர் களுக்காக மட்டுமே போராடும் சுயநல அமைப்பாக தொழிற்சங்க இயக்கத்தை மாற்றினர்.

மார்க்சின் காலத்திலிருந்தே தொழிற்சங்கங்களுக் கும் பாட்டாளி வர்க்கத்தின் பொதுவான போராட்டங்களுக்கும் இடையே என்ன தொடர்பு எனும் விவாதம்தான் தொழிற்சங்க இயக்கத்தினுள் தீவிரமாக  நடந்துவந்துள்ளது. பல  ஆன்டுகளாக ஐரோப்பாவில் தொழிற்சங்கத்தின் மேல்தட்டினர் காலனிய ஆட்சியாளர்களால் சலுகைகள் மூலம் விலைக்கு வாங்கப்பட்டனர். காலனிய கொள்ளை யின் ஒரு சிறுபகுதி இதற்கு பயன்படுத்தப்பட்டது. இத்தகைய தொழிற்சங்கவாதிகள் தொழிற்சங்க இயக்கத்தை நாடாளுமன்ற அரசியலுடன் மட்டுமே கட்டிப்போட்டுள்ளனர். முதலாளித்துவ அமைப்புக் குள்ளேயே தொழிற்சங்க இயக்கத்தை சிந்திக்க வைக்கின்றனர். முதலாளித்துவ அமைப்புக்கு அப்பால் எவ்வித சிந்தனையும் செல்லாமல் பார்த்து கொள்கின்றனர்.

தொழிற்சங்க மேல்தட்டினருக்கும் சமூக ஜன நாயக வாதிகளுக்கும் எதிராக மார்க்சுக்கு பிறகு லெனின் இந்த போராட்டத்தை சமரசம் இல்லா மல் நடத்தினார்.
மார்க்சின் அறிவுரையும் வழிகாட்டுதலும் இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கும் பொருந்தும். இந்திய தொழிற்சங்க இயக்கமும் குறுகிய பொருளாதார கோரிக்கைளுக்கான போராட்டத் தில் சிறைபட்டுள்ளது. தான் இயங்கும் ஆலை அல்லது தொழிலுக்கு அப்பால் எதையும் சிந்திக்க மறுக்கிறது. ஜனநாயக பிரச்சனைகளிலும் அரசியல் பிரச்சனைகளிலும் தலையிட மறுக்கிறது. விவசாயி கள் மற்றும் விவசாய தொழிலாளர்களை பாது காப்பதில் இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் பலவீனம் நன்கு அறியப்பட்ட ஒன்று! அனைவருக் கும் தெரிந்த இந்த நோய்க்கு எதிராக முயற்சிகள் உள்ளன. எனினும் இந்த முயற்சிகள் பன்மடங்கு பெருக வேண்டும்.

மார்க்ஸ் அவர்களின் வழிகாட்டுதல்களை தொகுத்து கூறுவதானால்
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் அன்றாட நலன்களுக்காக் போராடுவதை தொடர வேண்டும்.
அதே சமயத்தில் (சுரண்டலிலிருந்து) தொழிலாளி வர்க்கத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்காக  உணர்வு பூர்வமான மையமாக செயல்பட வேண்டும்.

இந்த திசை வழியில் பயணிக்கும் ஒவ்வொரு சமூக இயக்கத்திற்கும் அரசியல் போராட்டத்திற் கும் உதவ வேண்டும்.

தொழிற்சங்கங்கள்  ஒட்டுமொத்த வர்க்கத்திற்கு மான அமைப்புகள். தமது உறுப்பினர்களுக்கு மட்டுமே இயங்குவோம் என்பது தவறு உறுப்பினர் அல்லாதவர்களையும் அரவணைக்க வேண்டும்.

தம்மை அமைப்புரீதியாக திரட்டிக்கொள்ள முடியாத உழைப்பாளிகளை(விவசாய தொழிலா ளர்கள் போன்ற) ஒன்று திரட்டி அவர்களது நலன்களை பாதுகாப்பது தமது கடமை என்பதை உணர்ந்து முன்வர வேண்டும்.
தமது சங்க வலிமையை தம் சுயநலன்களை பாதுகாக்க மட்டுமே பயன்படுத்தவில்லை; மாறாக இலட்சக்கணக்கான அடித்தட்டு மக்களுக்காக குரல் தருகிறோம் என்பதை தமது செயல்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்.
உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டங்கள்
சமூக மாற்றத்திற்கான அடிப்படை போராட்டத்தை வலியுறுத்திய அதே நேரத்தில் மார்க்ஸ் சில உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் குறைத்து மதிப்பிடவில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஜெனிவா மாநாட்டில் கீழ்கண்ட முக்கிய உடனடி கோரிக் கைகளை மார்க்ஸ் வடிவமைத்து முன்வைத் தார்:
எட்டு மணி பணி நேரம். பெண்களுக்கு இரவு நேர பணியை தரக்கூடாது, பெண்கள் உடல் நிலை பாதிக்கும் எந்த பணியும் செய்ய நிர்பந்திக்க கூடாது.

9 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு இரவு நேர பணியில் அமர்த்த கூடாது; 9 முதல் 12 வயதுள்ள குழந்தைகளை இரண்டு மணி நேரத்திற்கு மேல் பணியில் அமர்த்த கூடாது; 13 முதல் 15 வயதுள்ள குழந்தைகளை 4 மணி நேரத்திற்கு மேல் பணியில் அமர்த்த கூடாது. 15 முதல் 17 வயதுள்ள குழந்தை களை 6 மணி நேரத்திற்கு மேல் பணியில் அமர்த்த கூடாது.
அனைத்து தேசங்களிலும் தொழிலாளர்  களின் பணி நிலைமை மற்றும் வாழ் நிலைமை குறித்து ஒரு புள்ளிவிவர ஆய்வு நடத்த வேண்டும் என மார்க்ஸ் கோரினார். இதற்காக கேள்விகள் அடங்கிய பட்டியலை மார்க்ஸ் தயாரித்தார்.

அதில் கீழ்கண்ட விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன:
அப்ரண்டீஸ் உட்பட ஊழியர்களுக்கு ஊதியம்/ஆலைகள் மற்றும் இதர இடங்களில் பணிநேரம்/இரவு நேர பணி குறித்த விவரங்கள்/உணவு நேரம்/காற்று வசதி உட்பட பணியிட வசதிகள்/பணி நிலைகள் உடல்நிலையில் உருவாக் கும் பாதிப்புகள்/உழைப்பாளிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் என பல விவரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியாளர்களை வலியுறுத்தி தொழிற்சங்கங் கள் போராட வேண்டும் என மார்க்ஸ் கோரினார்.

இத்தகைய பகுதி கோரிக்கைகளுக்கு மார்க்ஸ் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். இந்த போராட்டங் கள் மூலம் தொழிலாளர்களுக்கு தமது உரிமைகள் குறித்த உணர்வு அதிகரிக்கும் என மதிப்பிட்டார். இங்கிலாந்தில் உருவான அனைத்து தொழி லாளர் சட்டங்களும் தொழிலாளி வர்க்கத்தின் வலுவான வர்க்க போராட்டம் காரணமா கவே நிகழ்ந்தன என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்தார்.
பிரிட்டன் தொழிலாளி வர்க்கம் பத்து மணி நேர பணிக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் வெற்றி பெற்ற பொழுது மார்க்ஸ் கீழ்கண்டவாறு எழுதினார்:
“பத்து மணி நேர சட்டம் மிகப்பெரிய வெற்றி என்பது மட்டுமல்ல; இது ஒரு கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும். தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரத்தின் முன் நடுத்தர வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரம் தோல்வி அடைந்தது இதுதான் முதல் தடவை ஆகும்.”

பாட்டாளி வர்க்க சர்வதேசியம்
மார்க்ஸ் தலைமை தாங்கிய சர்வதேச தொழிலாளர் சங்கம்  பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு வித்திட்டது. இந்த அகிலம் தொழிலாளர்களுக்கு தமது தேசிய எல்லைகளையும் தாண்டி ஒற்றுமை உணர்வை உருவாக்கியது. மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச ஒற்றுமை தேவை என்பதை போதித்தது. அன்றாட போராட்டங் களில் ஒருவருக்கொருவர் உதவிட வேண்டும் என்பதை கற்றுகொடுத்தது. இந்த அன்றாட பணியின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளில் நடக்கும் வேலைநிறுத்தங்களுக்கு நிதி உதவி திரட்டப்பட்டது. இது சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்தியது. பல தேசங்களில் உள்ள பாட்டாளி வர்க்கத்தை வர்க்க ஒற்றுமையின் அடிப்படையில் பொதுவான பதாகையின் கீழ் திரட்டிட தன்னா லான அனைத்து முயற்சிகளையும் முதல் அகிலம் எடுத்தது.
பிரான்சும் பிரஷ்யாவும் போரிட்ட பொழுது இரு தேசங்களின் தொழிலாளர்களும் குறுகிய தேசியத்தையும் தாண்டி பாட்டாளிவர்க்க சர்வ தேசியத்தை வெளிப்படுத்தினர். அதுவரை நடந் திராத புதுமை இது! பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு இது சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்ந்தது.

சர்வதேச ஒற்றுமைக்காக மார்க்ஸ் விடுத்த அறைகூவல் ஆயிரக்கணக்கான தொழிலாளர் களை உத்வேகப்படுத்தியது. சர்வதேச உணர்வு ஆழமாக ஏற்பட மார்க்சின் முயற்சிகள் முக்கிய காரணமாக இருந்தன. மார்க்சுக்கு பிற்கு சர்வ தேசியத்தை பாதுகாக்க லெனின் கடுமையாக போராடினார். இரண்டாம் அகிலத்தை சேர்ந்த பல தலைவர்கள் சர்வதேசியத்தை கைவிட்டு முதல் உலகப்போரில் தம் தேசங்களின் முதலாளித்துவ அரசுகளை ஆதரித்த பொழுது லெனின் அவர் களை கடுமையாக விமர்சித்தார்.
சர்வதேச பார்வை இல்லாததும் உலக வளர்ச்சி போக்குகள் குறித்து கவலைப்படாமல் இருப்பதும் உலக தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றி பாராமுகமாக இருப்பதும் இந்திய தொழிற்சங் கத்தின் ஒரு முக்கிய பலவீனம் ஆகும். அதே சமயத் தில் தேசிய இன வெறியை கிளப்பும் சக்திகளும் சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமையை எதிர்க் கும் சக்திகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சூழல்கள் ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு பொருந்துவதாக உள்ளன.

சர்வதேச தொழிலாளர் சங்கம் போதித்த பாட்டாளி வர்க்க சர்வதேசியம் இன்றும் முக்கிய தேவையாக உள்ளது எனில் மிகை அல்ல.

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சி
1872ம் ஆண்டு ஹேக் நகரில் நடைபெற்ற அகிலத்தின் மாநாட்டில் தொழிலாளி வர்க்கத் திற்கு அரசியல் கட்சி தேவை எனும் மார்க்சின் ஆலோசனை ஏற்றுகொள்ளப்பட்டது. மார்க்ஸ் ஏற்கெனவே அகிலத்தின் நடவடிக்கைகள் மூல மாக பல்வேறு சிந்தனையோட்டங்கள் கொண்ட தொழிலாளர் இயக்கங்களை புரட்சிகர பதாகை யின் கீழ் அணிதிரட்டியிருந்தார். தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு காலம் கனிந்திருந்தது.

அகிலத்தின் பொதுக்குழுவில் புதிய விதி 7A இணைக்கப்பட்டது. இந்த புதிய விதி என்ன கூறுகிறது?
“ஆளும் வர்க்கங்களின் கூட்டு அதிகாரத் திற்கு எதிராக பாட்டாளி வர்க்கம் ஒரு தனி கட்சியாக தன்னை தகவமைத்து கொள்வதன் மூலமாக மட்டும்தான் ஒரு வர்க்கமாக செயல் பட முடியும். பாட்டாளி வர்க்கத்தின் இந்த கட்சி ஆளும் வர்க்கங்களின் கட்சிகளுக்கு எதிரானதாக இருக்கும்.”

“பாட்டாளி வர்க்கத்தின் கட்சி உருவாக்குவது சமூக புரட்சியின் வெற்றிக்கும் இறுதி லட்சியமான வர்க்கங்களை ஒழிப்பதற்கும் மிக இன்றியமை யாதது ஆகும். ஏற்கெனவே உருவாகியிருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒற்றுமை சுரண்டல்வாதிகளின் அதிகாரத்துக்கு எதிராக போராடுவதற்கு தொழிலாளி வர்க்கத் தின் கரத்தை மேலும் வலுப்படுத்தும்.”

“நிலஉடமையாளர்களும் மூலதன உடமை யாளர்களும் தமது பொருளாதார ஏகபோக உரிமையை பாதுகாக்கவும் அதனை நிரந்தரப் படுத்தவும் உழைப்பை அடிமைப்படுத்தவும் தமது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். (இதற்கு எதிராக) அரசியல் அதிகாரத்தை வெல்வது பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கிய கடமையாக முன்வந்துள்ளது.”
இந்த முக்கியமான நடவடிக்கை மூலம் புரட்சி கரமான தொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை பாதையை மார்க்ஸ் தெளிவாக முன்வைத்தார். தொழிலாளி வர்க்கத்திற்கென ஒரு புரட்சிகரமான தனி அரசியல் கட்சி என்பது ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். இதனை மார்க்ஸ் சாதித்தார்.

எனினும் பிரச்சானைகள் இல்லை என்று பொருள் அல்ல. சிலர் இந்த நிலைபாடை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரச்சனைகள் புதிய வடிவத் தில் எழுந்தன. தொழிற்சங்கங்கள் முற்றிலும் அன்றாட கோரிக்கைகளுக்கு மட்டுமே செயல் படுவது என சில அமைப்புகள் நிலை எடுத்தன. அரசியல் பிரச்சனைகளோ அல்லது சுரண்டலை முற்றிலுமாக ஒழிப்பதோ இவர்களின் செயல் திட்டத்தில் இல்லை.

சமாதான கால கட்டம் நிலவியதும் ஏகாதி பத்தியம் தொழிலாளர்களின் சில கோரிக்கை களை ஏற்றுகொண்டதும் நாடாளுமன்ற சலுகை கள் அளித்ததும் அரங்கேறின. இதன் விளை வாக ஒரு புதிய  தொழிற்சங்க தலைமை பிரிவு உருவானது. இந்த பிரிவு முதலாளித்துவத்தால் விலைக்கு வாங்கப்பட்டிருந்தது. இரண்டாம் அகிலம் தகர்ந்து போனதற்கான காரணத்தை இத்தகைய நிகழ்வுகளில் லெனின் கண்டுபிடித்தார், தொழிலாளி வர்க்கத்தின் கட்சிக்கும் தொழிற் சங்கத்திற்கும் உள்ள உறவாக பிரச்சனை புதிய வடிவம் எடுத்தது. தொழிற்சங்கங்கள் தமது அன்றாட பிரச்சனைகள் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த கூடாது எனவும் வெளியாரின் தலையீடு தொழிற்சங்கங்களில் இருக்க கூடாது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

மார்க்சுக்கு பிறகு லெனின் தொழிலாளி வர்க்கத் தின் கட்சி குறித்த கோட்பாடுகளை செழுமைப் படுத்தினார். கட்சிக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே உள்ள உறவையும் வகைப்படுத்தினார். இந்த உறவு பொருத்தமாக நிலை நாட்டுவதில் நிகழும் பல்வேறு தவறுகளை ஆய்வு செய்த லெனின் அவற்றை களைவதற்கான வழிகாட்டு தல்களையும் உருவாக்கினார். கட்சியின் தலைமை பாத்திரத்தை நிலைநாட்டும் அதே நேரத்தில் தொழிற்சங்கத்தின் சுயேச்சை தன்மையும் பாது காக்கப்ப்ட வேண்டும் என லெனின் வலியுறுத்தினார். தேவை ஏற்பட்டால் கம்யூனிஸ்டுகள்  பிற்போக்குத் தனமான தொழிற்சங்கங்களிலும் பணியாற்ற வேண்டும் என லெனின் வலியுறுத்தினார்.

இந்தியாவிலும் தொழிற்சங்க இயக்கம் ஏனைய பல நாடுகளில் நிகழ்ந்ததை போலவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. இந்தியாவிலும் தொடக்கத்தில் தொழிற்சங்க நடவடிக்கை என்பது தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென் றெடுக்க தன்னெழுச்சியான போராட்டங்களாக இருந்தன. தொழிலாளர்கள் தமக்கு ஒரு நிரந்தர மான தொழிற்சங்க அமைப்பு தேவை என்பதை உணர்ந்திருக்கவில்லை.
தொழிலாளி வர்க்கத்தின் உணர்வை சோசலிஸ்ட் உணர்வு மட்டத்திற்கு உயர்த்துவது அவசியம் என கட்சி கருதுகிறது. தொழிலாளர்களிடையே கிளர்ச்சி நடத்துவதோடு திருப்தி கொள்ள கூடாது. பல்வேறு அரசியல் பிரச்சனைகளில் வலுவான பிரச்சாரமும் செய்ய வேண்டும்.

தொழிற்சங்கங்கள் ஜனநாயக போராட்டங் களில் தலையிடுவதும் விவசாய இயக்கங்களுடன் வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதையும் உத்தர வாதம் செய்ய வேண்டும். பெரும் பலவீனம் உள்ள மற்றொரு பிரச்சனை சர்வதேச கண்ணோட்டம் ஆகும். இந்த பலவீனம் களையப்படுவது மிக முக்கியம் ஆகும்.

கார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் அறிவியலும்

மார்க்சின் வாழ்நாள் நண்பரும் சக போராளியுமான பிரெடரிக் எங்கெல்ஸ் மார்க்சின் இறுதிநிகழ்ச்சியில் இரங்கல் உரையாற்றும்போது அறிவியலில் அவருக்கிருந்த பேரார்வத்தினை அடிப்படையாகக் கொண்டே (சமூகப்) புரட்சி குறித்த அவரது பற்றுறுதியினை விளக்க முற்பட்டது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். அப்போது எங்கெல்ஸ் குறிப்பிட்டார்:
“மார்க்சைப் பொறுத்தவரையில் அறிவியல் என்பது வரலாற்றுரீதியாக உயிரோட்டமுள்ள, ஒரு புரட்சிகர சக்தியாகும். கோட்பாட்டுரீதியான அறிவியலில் வெளிப்பட்ட புதியதொரு கண்டுபிடிப்பை, அதனை எந்த அளவிற்கு நடைமுறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை ஊகிக்கவே முடியாத நிலையிலும் கூட மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் அதை வரவேற்ற அதே நேரத்தில், தொழில்துறையில் பொதுவான வரலாற்றுரீதியான வளர்ச்சியை, உடனடியான புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்பைக் காணும்போது அவர் வேறுவிதமாக மகிழ்ந்தார். உதாரணமாக மின்சக்தித் துறையில் உருவான கண்டுபிடிப்புகளை, அதுவும் அப்போதுதான் வெளிவந்திருந்த மார்செல் டெப்ரசின் கண்டுபிடிப்புகளை, அவர் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்தார்.” எனினும் எங்கெல்சின் இரங்கல் உரையின் இந்தப் பகுதியை மட்டுமே சுட்டிக் காட்டுவது அறிவியல் குறித்த மார்க்சின் பார்வையை குறுக்குவதாகவே இருக்கும்.
உண்மையில் எங்கெல்சின் அந்த சுருக்கமான இரங்கல் உரை சமூகம் குறித்த ஆய்வில் மார்க்சின் பங்களிப்போடுதான் துவங்குகிறது. எனினும் சமூக அறிவியலுக்கு ஒரு பங்களிப்பு என்ற வகையில்தான் மிகுந்த தீர்மானத்தோடு அதை அவர் விளக்குகிறார். மார்க்சின் இறுதிக் கணங்களின் பின்னணியை குறிப்பிட்டுவிட்டு எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்:
“உயிரியல் உலகத்தின் வளர்ச்சி பற்றிய விதியை டார்வின் கண்டுபிடித்தது போலவே அபரிமிதமான தத்துவ வளர்ச்சிக்குள் இதுவரை மறைந்து கிடந்த மானுட சமூக வரலாற்றின் வளர்ச்சி குறித்த விதியை மார்க்ஸ் கண்டறிந்தார். அதாவது அரசியல், அறிவியல், கலை, மதம் போன்ற விசயங்களை அவர்கள் பின்பற்றுவதற்கு முன்பாக மனிதர்கள் உண்ணவும், அருந்தவும், உடுத்தவும், தங்கவும் தேவையானவற்றைப் பெற வேண்டும்.
எனவே அவர்களின் உடனடியான பொருள்தேவைகளுக்கான உற்பத்தி, அதைத் தொடர்ந்து குறிப்பிட்டதொரு பகுதியைச் சேர்ந்த மக்களிடையே, அல்லது குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும்  பொருளாதார வளர்ச்சியே ஒரு அடித்தளத்தை உருவாக்குகிறது. இந்த அடித்தளத்தின் மீதுதான் சம்பந்தப்பட்ட அந்த மக்களுக்கான அரசு நிறுவனங்கள், சட்டம் பற்றிய கருத்துக்கள், கலை, ஏன் மதத்தின்  மீதான கருத்துக்களும் கூட உருவாகின்றன. எனவே இதுவரை செய்யப்பட்டு வந்ததைப் போலில்லாமல், இவற்றின் அடிப்படையில்தான் மனிதர்களின் வளர்ச்சியை விளக்க வேண்டும்.”

இதுமட்டுமல்ல; இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையை நிர்வகிக்கும் செயல்பாடு குறித்த சிறப்பு விதி, இந்த உற்பத்தி முறை உருவாக்கிய முதலாளித்துவ சமூகம் ஆகியவற்றையும் மார்க்ஸ் கண்டுபிடித்தார். இதற்கு முன்னால் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள், சோசலிச விமர்சகர்கள் ஆகிய இரு பிரிவினருமே மேற்கொண்ட ஆய்வுகளில் இருளில் தடுமாறிக் கொண்டிருந்த பின்னணியில் மார்க்ஸ் உபரி மதிப்பைக் கண்டறிந்ததானது திடீரென இந்தப் பிரச்சனையின் மீது ஒளியைப் பாய்ச்சியது.
எனவே மார்க்ஸும் அறிவியலும் என்பதைப் பற்றிப் பேசும்போது, நாம் நான்கு குறிப்பிட்ட வரம்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலாவது, அறிவியல் என்பது ‘வரலாற்றுரீதியாக உயிரோட்டமுள்ள, புரட்சிகரமான சக்தி’ என்ற மார்க்ஸ் கொண்டிருந்த கருத்தோட்டம். இந்த முதல் கருத்தோடு தொடர்புடைய இரண்டாவது, குறிப்பாக உற்பத்தியுடனான உறவில் அறிவியலின் பங்கு. மூன்றாவது, இயற்கை மற்றும் சமூக உலகங்கள் இரண்டையும் உள்ளடக்கிய யதார்த்தத்தின் நுண்புலமுறையே அறிவியல் என்ற மார்க்ஸ்- எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்தோட்டம். நான்காவது, அழகியல், நெறிமுறை உள்ளிட்ட இயற்கை மற்றும் சமூகம் பற்றிப் புரிந்துகொள்வதற்கான அனைத்து முறைகளுக்கும் அறிவியல்தான் அடித்தளமாக விளங்குகிறது என்ற ஆழமான பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்.

குறிப்பாக அறிவியல் என்ற வார்த்தையை பெரும்பாலும் இயற்கை உலகத்தோடு மட்டுமே தொடர்புபடுத்தியே பொதுவாக பயன்படுத்தி வரும் நிலையில், இந்த மூன்றாவது அம்சத்தின் முக்கியத்துவம் என்ன?  இயற்கை உலகத்தோடு தொடர்புடைய அறிவியலின் மீதான மார்க்சின் கருத்துக்களும், சமூக உலகத்தின் அறிவியல் மீதான அவரது கருத்துக்களும் மிக ஆழமான வகையில் ஒன்றுக்கொன்று உறவு கொண்டதாகும். அவரது காலத்தில் நிலவிய கருத்துக்களை ஒப்பிடும்போது அறிவியல் குறித்த மார்க்சின் ஆழமான புரிதல், அறிவியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த அவரது தொலைநோக்கு ஆகியவற்றின் ஆழத்தை, அறிவியல்கள் குறித்த அவரது ஒன்றுபட்ட கருத்தை ஒருவரால் புரிந்து கொள்ள முடியவில்லையெனில், அரசியல் பொருளாதாரம் குறித்த அவரது ஆய்வின் மூலம் மேலும் தெளிவாக வெளிப்பட்ட இந்த அறிவியல் குறித்த தொலைநோக்கை அவ்வளவு எளிதாகப் புரிந்து கொண்டுவிட முடியாது.

பொருள்முதல்வாத, இயக்கவியல்வாத பாரம்பரியம் இரண்டின்மீதும் தத்துவார்த்த சிந்தனையின் உள்நோக்கங்களை அவர் மிக விநோதமான வகையில் ஒன்றிணைத்துக் கொண்டுவந்த ஒரு தொலைநோக்குதான் மூலதனம் பற்றிய அவரது ஆய்வாகும். முதல் இரண்டு அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்த்த பிறகு, பொருளாதாரத்தின் இயக்கவியலுக்கும் அறிவியல் குறித்த மார்க்சின் கண்ணோட்டத்திற்கும் இடையேயான உறவு குறித்த சுருக்கமான குறிப்பின் மூலம் இந்தக் கேள்வியை நாம் மீண்டும் பார்க்கலாம்.

அறிவியல் வரலாற்று ரீதியாக உயிரோட்டமானதொரு சக்தியாக ஏன் விளங்குகிறது? இதற்கான மார்க்சின் பதில் எளிதான ஒன்றல்ல; மாறாக கவனமாகச் செதுக்கப்பட்ட ஒரு விளக்கமாகவே அது அமைகிறது. முதலாவதாக, அதன் அடிப்படையான பொருளில், இயற்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மனித இனத்தின் ஆவலின் உள்ளார்ந்த அம்சமாக அறிவியல் என்பது ஒரு புரட்சிகரமான சக்தியாகத் திகழ்கிறது. இயற்கையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான மனித இனத்தின் திறனை அது அதிகரிக்கிறது. இரண்டாவதாக, அறிவியல் முன்னேற்றம் என்பது உற்பத்தியோடு இயக்கவியல் ரீதியான உறவைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக முதலாளித்துவ காலப்பகுதியில் இது வியக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது குறித்து மார்க்ஸ் குறிப்பிடுகையில், ஒரு புறத்தில் 17ஆம் நூற்றாண்டில் இயந்திரங்கள் ஆங்காங்கே தலைகாட்டியபோது, தொழிலுற்பத்திக் காலத்தில் அவை அடிப்படையான பங்கினை வகித்தன என்றபோதிலும், மிகுந்த முக்கியத்துவமுள்ளவையாக இருந்தன. ஏனெனில், அந்த நாட்களில் இருந்த கணிதவியல் நிபுணர்களுக்கு செயல்முறைக்கான அடித்தளத்தை அது வழங்கியதோடு, நவீன இயந்திரவியலை உருவாக்குவதற்கான ஊக்கியாகவும் இருந்தது. (வேலைப் பிரிவினையை ஒப்பிடுகையில், இதற்குக் கீழான பங்கினை வழங்கியதன் மூலம் (அன்றைய பிரபல முதலாளித்துவ பொருளாதார நிபுணரான) ஆடம் ஸ்மித் மிகச் சரியாகவே செயல்பட்டிருக்கிறார் என்றும் மார்க்ஸ் மேலும் குறிப்பிட்டார்.) எனினும் அதைத் தொடர்ந்து  உருவாகும் சூழ்நிலைகளில், வளர்ச்சியைத் தீர்மானிக்கும் அம்சங்களில் ஒன்றாக, நீடித்த வகையிலான உற்பத்திச் செயல்முறையில் இயந்திரங்களின் நுழைவு, அதைத் தொடர்ந்து தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என அறிவியலானது தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

அறிவியல், குறிப்பாக இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த அறிவியல், தொழிலாளர்களின் கைகளுக்கு மாற்று வழியைத் தருகிறது; இயந்திரங்களுடனான அவர்களது உறவை எளிதாக்குகிறது. மார்க்சின் வார்த்தைகளில் கூறுவதெனில், “ இயந்திர உற்பத்தியின் குறிக்கோள், உற்பத்திச் செயல்முறையை அதனோடு உள்ளடங்கிய கட்டங்களாகப் பிரிப்பது; இதிலிருந்து உருவாகும் பிரச்சனைகளின் தீர்வாக, இயந்திரவியல், வேதியியல், முழு அளவிலான இயற்கை அறிவியல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் அது இப்போது எங்கணும் தீர்மானகரமான பங்கினை வகிக்கிறது.”
இதைத் தொடர்ந்து உற்பத்தியின் தேவைகள் தான் அறிவியலின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. அறிவியல் எனது மனதின் ‘விருப்பமல்லாத’ உழைப்பிலிருந்து வருவதல்ல; மாறாக, தொழில்துறை உற்பத்தியின் விரிவாக்கத்திலிருந்தே அது இயங்குவதற்கான சக்தியைப் பெறுகிறது. ஃபாயர்பாகின் கருத்தோட்டத்தை விமர்சிக்கையில் மார்க்ஸ் குறிப்பிட்டார்: “ இயற்கை அறிவியலின் கருத்தோட்டம் குறித்தே தான் குறிப்பாகப் பேசுவதாகக் கூறிய அவர், இயற்பியல், வேதியியல் ஆய்வாளர்களின் கண்களுக்கு மட்டுமே தெரிகின்ற ரகசியங்களைப் பற்றியும் குறிப்பிட்டார். எனினும் தொழில், வணிகம் என்பவை இல்லாமல் இருந்திருந்தால், இயற்கை விஞ்ஞானம் எங்கே இருந்திருக்கும்? ‘தூய்மையான’ இந்த இயற்கை அறிவியலும் கூட ஒரு நோக்கத்தைக் கொண்டதாகவே  இருக்கிறது. அது, தன் பொருட்களோடு வர்த்தகம், தொழில் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே, மனிதர்களின் உணர்வுபூர்வமான செயல்பாடுகளின் மூலமேம் செயல்படுகிறது.

மற்றொரு இடத்தில்  இதுபற்றி மார்க்ஸ் இன்னும் அழுத்தமாகவே குறிப்பிடுகிறார்: “தன்னால் தீர்க்க முடிந்த பிரச்சனைகளை மட்டுமே மனித இனம் எப்போதும்  கையிலெடுக்கிறது. அந்த விசயத்தை மேலும் நெருக்கமாகப் பார்க்கும்போது, அதன் தீர்வுக்குத் தேவையான பொருளாயத நிலைமைகள் இருந்தால் மட்டுமே, அல்லது குறைந்தபட்சம் அதை (தீர்வை) உருவாக்குவதற்கான செயல்பாடுகள் துவங்கியிருக்கும்போதுதான் அந்தப் பிரச்சனை நம் கண்ணில் தென்படத் துவங்குகிறது.

நிச்சயமாக தொழில்புரட்சிக்கு முன்பாகவே செயல்படத் துவங்கியிருக்கக் கூடியஅறிவியல் ரீதியான புரட்சி உண்மையில் அந்தப் புரட்சியின் மீது உறுதியான கருத்தாக்கம் மற்றும் கோட்பாட்டுரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியதா? அல்லது பெருமளவிற்கு மூலச் சிறப்பான நடைமுறைரீதியான கண்டுபிடிப்புகளும் முன்னேற்றங்களும் நிகழ்வதற்கு முன்பாகவே அறிவியலின் கொள்கை ரீதியான அம்சத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தொழிற்புரட்சி நிகழ்ந்ததா? என்பது அறிவியல் குறித்த வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்து வந்தது. எனினும் இந்த இரண்டிற்கும் இடையிலான உறவு குறித்த வரலாற்று ரீதியான விளக்கத்தினைக் கொண்டு இந்த விசயம் போதுமான அளவிற்கு நிறுவப்படவில்லை என்று நாம் நியாயமாகவே கருதலாம். தொடர்ந்து அறிவியல் ரீதியான புரட்சியின் சமூக அம்சங்கள் குறித்து அறிவியல் வரலாற்றாய்வாளரான மார்கரெட் ஜேக்கப் மற்றும் இதர ஆய்வாளர்களின் நுட்பமான பணிகளின் மூலம் இந்த இடைவெளி நிரப்பப்பட்டது. குறிப்பாக இயந்திரங்களின் செயல்பாடுகள் என்ற புதிய அறிவியல் துறை எவ்வாறு பரவலான மக்களுக்கு (அதாவது படித்த மக்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை) மட்டுமின்றி, குறிப்பாக தொழிற்புரட்சியை உந்தித் தள்ளிய தொழில் முனைவர்கள், பொறியாளர்கள் ஆகிய புதிய வர்க்கத்தினருக்கும், தனித்திறன் பெற்ற தொழில்வல்லுநர்களுக்கும் இந்தக் கருத்துக்களை எப்படிப் பரப்பியது என்பது பற்றிய விரிவான, வியப்பளிக்கும் விவரங்களை அவர்கள் வழங்கியுள்ளனர்.

மூன்றாவதாக, இது ஒற்றைப் பக்கத்தின் கதையுமல்ல. இயற்கையின் புறநிலை விதிகள் கண்டறியப்பட்டு, அவை புரிந்துகொள்ளப்பட வேண்டும். இத்தகைய முன்னேற்றம் என்பதில்லாமல் மனித இனத்திற்கு அவசியம் தேவைப்படுகின்ற கண்டுபிடிப்புகளை வெறும் விருப்பத்தைக் கொண்டு மட்டுமே உருவாக்கிவிட முடியாது. இதற்கு விவசாயம் மிகச் சிறந்த  உதாரணமாகும். “தொழில்துறையை விட விவசாயத்திற்கே அடிப்படையாக அமைந்த அறிவியல் துறைகளான” நிலவியல், வேதியியல், உடற்கூறியல் போன்றவற்றில், குறிப்பாக 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் ஏற்பட்ட அவசியமான வளர்ச்சிப் போக்குகள் இல்லாமல், தொழில்துறையில் அதற்கு முன்பு ஏற்பட்டதைப் போல விவசாயத் துறையில் உற்பத்தித் திறன் இவ்வளவு துரிதமாக அதிகரித்திருக்காது. உபரி மதிப்பு குறித்த கொள்கைகள் என்ற தொகுப்பாக வெளிவந்துள்ள அவரது மூலதன நூலுக்கான குறிப்புகளில் இந்தக் கருத்தோட்டத்தை நம்மால் காண முடியும் என்றபோதிலும் அறிவியலின் வளர்ச்சி என்ற இயங்கியல்  குறுக்கல் வாதமான, குரூரமான பொருளாதாய நோக்கிலான  பொருளாதாரத் தேவைகளுக்கான உடனடி பிரதிபலிப்பாக உருவாகவில்லை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார் என்பது தெளிவு. அவரது சமகாலத்திய மார்க்சிய எழுத்தாளர்கள் ஒரு சிலர் இத்தகைய இயக்கவியல் ரீதியான நுட்பங்களைக் காணத் தவறிவிட்டனர். அதன் விளைவாக அறிவியல் (மற்றும் தொழில்நுட்பம்) என்பது ஏதோவொருவகையில் ஒரு வர்க்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று எனவும், இயற்கை உலகத்தின் புறநிலையான தடைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முதலாளித்துவம் தனக்குத் தேவைப்படுகின்ற அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை வெளியே வரவழைக்கிறது என்று வாதிடும் அளவிற்கு இந்தத் தவறான புரிதல் நீண்டிருந்தது.

அறிவியலும் தொழில்நுட்பமும் சமூகத் தன்மையினை தீர்மானிப்பவையாக இருக்கின்றன என்போருக்கு தொழில்நுட்பம் குறித்த மார்க்சின் ஆய்வு எந்தவிதமான உதவியையும் செய்வதாக இருக்கவில்லை. தத்துவத்தின் வறுமை என்ற நூலில் “கைகளினால் இயக்கப்படும் இயந்திரம் நிலப்பிரபுவைக் கொண்ட ஒரு சமூகத்தை உங்களுக்குத் தருகிறது என்றால், நீராவியினால் இயக்கப்படும் இயந்திரம் முதலாளியுடன் கூடிய ஒரு சமூகத்தைத் தருகிறது” என்ற இந்தப் பொன்மொழியை வழங்கியபோது, நீராவி ஆலை என்பது முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுடன் ஒன்றிணைந்தது என்றோ, நீராவி ஆலையின் வளர்ச்சி என்பது முதலாளித்துவ சமூகத்தின் தன்மையை தீர்மானிக்கிறது  என்றோ அவர் கூறவில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் பல்வேறு மட்டங்கள், பல்வேறு உற்பத்தி உறவுகளின் தனித்தன்மையாக, இன்னும் சொல்லவேண்டுமெனில், புதியதொரு யுகத்திற்கான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை சுட்டிக் காட்டுவதாக அமைகின்றன. தொழில்நுட்பத்தின் தன்மையே சமூகத்தின் தன்மையை தீர்மானிக்கிறது என்று மார்க்ஸ் குறிப்பிடவில்லை என்பதையும் இங்கே சுட்டிக் காட்டவேண்டும்.

முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டு தொழில்நுட்பத்தைப் பயிலும் பல தலைமுறை அறிஞர்களுக்கு  மார்க்ஸ் நிச்சயமாக ஊக்கமளித்து வந்தார். எனினும் தொழில்நுட்பத்தோடு உறவு கொள்ளும் தொழிலாளி வர்க்கம் குறித்த மார்க்சின் சித்தரிப்பு முதலாளித்துவ அறிஞர்களுக்கும், மார்க்சின் அணுகுமுறைக்கும் இடையே இருந்த வேறுபாட்டை முற்றிலும் தெளிவாக எடுத்துக் காட்டியது. அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது எவ்வகையிலும் சாதகமானது மட்டுமேயல்ல என்பதிலும் மார்க்ஸ் தெளிவாக இருந்தார். நேரடியாக அறிவியல் இல்லை எனினும் நிச்சயமாக தொழில்நுட்பமானது தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் சுரண்டும் தன்மையுள்ள பிடிப்பு மேலும் தீவிரமாவதற்கான வழியாக விளங்குகிறது. இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்தே மூலதனத்தின் பிடிப்பு இறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது என்று மார்க்ஸ் வாதிட்டார். உற்பத்தியின் குறிப்பிட்ட கட்டம் என்பதற்கு மாறாக “மூலதனத்தால் உழைப்பானது உண்மையிலேயே உள்விழுங்கப்படுவது” என்று மார்க்ஸ் குறிப்பிட்ட  “மூலதனம் உழைப்பை முறையாக உள்ளிழுத்துக் கொள்கின்ற” காலம் என அவர் குறிப்பிட்டார். இந்தக் கட்டத்தை  எட்டியபிறகு மூலதனமானது உழைப்பினை முழுமையாக தன் பிடிக்குள் கொண்டு வருகிறது. உழைப்பின் சொந்த முயற்சியின் பயனானது ஒரு பௌதீக சக்தியாக மாறி தொழிலாளர்களை எதிர்கொள்கிறது. இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் தொழிலாளர்கள் அந்நியமாகும் போக்கு முழுமையடைகிறது. ஒரு புறத்தில் அறிவியல் அதன் முன்னேற்றத்தின்போது மனித இனத்தின் நலனைத் தீர்மானிப்பதில் தனது உண்மையான திறனை வெளிப்படுத்துகிறது. எனினும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள், அதுவும் ஒரு சக்தியாக, தொழில்நுட்பத்தின் மூலம் ‘மண்ணையும் உழைப்பையும்’ இடையறாது சுரண்டுவதற்கு உதவுகிறது. அது தொழிலாக இருந்தாலும் சரி, விவசாயமாக இருந்தாலும் சரி, அல்லது மனித உடலை பேணுவதாக இருந்தாலும் சரி, உற்பத்தி உறவுகளை முழுமையாக மாற்றுவதன் மூலமே அறிவியலின் உண்மையான திறனை முழுமையாகப் பெற முடியும்.
எனினும் நாம் முன்பு துவக்கத்தில் குறிப்பிட்ட எங்கெல்ஸ் வெளியிட்ட கருத்தை நினைவு கூரும்போது அறிவியல் என்ற வார்த்தையை மார்க்ஸ் பயன்படுத்தியது சமூக, இயற்கை அறிவியல்களின் செயல்களங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகும். “அரசியல் பொருளாதாரத்தின் அறிவியல்” என்ற சொற்றொடரைப் போன்ற இடங்களில் இயற்கை அறிவியல்களை குறிப்பிடும்போது பயண்படுத்தும் ‘அறிவியல்’ என்ற வார்த்தையையே மார்க்ஸ் பயன்படுத்துவதை நாம் தெளிவாகவே காண முடிகிறது.

இந்த இரண்டுக்கும் இடையிலான வேற்றுமையை மார்க்ஸ் எங்குமே பல வார்த்தைகளின் மூலம் தெளிவாகத் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், அவரது சம காலத்திலும் அவரது காலத்திற்கு முன்பும் வாழ்ந்த செறிவுமிக்க அரசியல் பொருளாதார நிபுணர்கள் பற்றிய அவரது தொடர்ச்சியான விமர்சனங்கள் இதிலுள்ள வேறுபாடுகளை பலவகையிலும் சுட்டிக் காட்டுவதாக அமைகின்றன. இவை அனைத்திலும் மிக முக்கியமானதாக நிற்பது சமூகத்தை ஆய்வு செய்வதில் செல்வாக்கு செலுத்துகின்ற, அதன் விளைவாக சமூக அறிவியல்களின் உள்ளடக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற வர்க்க அடிப்படையிலான வேற்றுமை உணர்வாகும். இயற்கை அறிவியல்களைப் பொறுத்தவரையில் அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சியின் துவக்க கட்டங்களில் மாயையிலிருந்து யதார்த்தத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்கு மிகவும் அதீதமான முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மார்க்ஸ் மிக அழகாக விவரித்ததைப் போல, அறிவியலின் நோக்கம் என்பது ஒரு பொருளின் தோற்றத்திற்குக் கீழே பொதிந்துள்ள சாரத்தைக் கண்டறிவதே ஆகும். அரசியல் பொருளாதாரத் துறையிலும் கூட மூலதனம் நூலில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளிலும் இதுவே மிகவும் குறிப்பான இலக்காக இருந்தது. எனினும் அதனினும் முக்கியமான வகையில் இயற்கை அறிவியல்களைப் பொறுத்தவரையில் எதெல்லாம் மாயையாக உள்ளனவோ அவை சமூக அறிவியல் என்று வரும்போது மாயையாக மட்டுமில்லாமல், சித்தாந்தமாகவும் அமைகின்றன என்பதையும் மார்க்ஸ் கண்டறிந்திருந்தார். தவறான கருத்தோட்டங்களைக் கொண்ட கட்டமைப்பையே பெரிதும் நம்புவது அல்லது அதன் அடிப்படையில் சமூக உலகத்தை புரிந்து கொள்வதென்பது சித்தாந்தமாகும்; அல்லது போலியான உணர்வுநிலை என்ற அறிவியலுக்கு நேர் எதிரான நிலையாகும். தனிநபர்களாலும், குழுக்களாலும், வர்க்கங்களாலும் சித்தாந்தம்  ஏற்றுக் கொள்ளப்பட்டு அறிவியல் ஒதுக்கித் தள்ளப்படுவது ஏன் என்பதற்கான ஆணிவேர் வர்க்கரீதியான சார்பில்தான் அடங்கியுள்ளது. எனவே சமூகம் குறித்த அறிவியலும் கூட, ஏனைய அறிவியல்களில் இருந்து அது ஏன், எப்படி வேறுபடுகிறது; சமூகத்தில் உள்ள பல்வேறுபட்ட வர்க்கங்களின் கண்ணோட்டத்திலிருந்து பல்வேறுபட்ட சித்தாந்தங்கள் உருவாவதற்கு எது வழிவகுக்கிறது என்பதற்கான விளக்கங்களை வழங்குவதற்கும் சித்தாந்தம் குறித்த கோட்பாட்டைக் கொண்டதாகவும் அது அமைய நேர்கிறது.
இயற்கை அறிவியல்கள் இத்தகைய பிரச்சனைகள் எதனாலும் பாதிக்கப்படவே இல்லை என்று நாம் இங்கே வாதிடவில்லை. அவர்களது காலத்திலேயே, டார்வினின் உயிரின் தோற்றம் குறித்த கொள்கைக்குக் கிடைத்த வரவேற்பில் மார்க்சும் எங்கெல்சும் இதனை குறிப்பாகக் கண்டறிந்திருந்தனர்.

மார்க்சும் எங்கெல்சும் தங்களது கடிதப் போக்குவரவுகளில் அவர்களுக்கேயுரிய வகையில் மிகுந்த மகிழ்ச்சியோடு இது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டபோது, விஞ்ஞானிகள் டார்வினின் படைப்பை விளக்கும்போது எவ்வாறு தங்களது சொந்த வர்க்க சார்பு கண்ணோட்டத்துடனேயே அதைப் படித்திருக்கிறார்கள் என்பது குறித்தும், நேற்றுவரையில் இயற்கையில் ஒத்திசைவு நிலவுவது பற்றியே பேசிக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் திடீரென போட்டியும் போராட்டமுமே இயற்கையின் செயல்பாட்டின் அடிப்படையாக அமைகின்றன என்று பேசத் துவங்கியதைப் பற்றியும்  விரிவாகவே  குறிப்பிட்டுள்ளனர். இதற்கு சார்புநிலை குழப்பத்திற்குள் ஆழ்ந்து போவதென்றோ, அறிவியல் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று அறிவிக்கவோ, அல்லது முதலாளித்துவ  சமூகத்தில் அறிவியல்கள் அனைத்துமே முதலாளித்துவ சித்தாந்தத்தை அடிப்படையாகக்  கொண்டவைதான் என்றோ பொருளல்ல. டார்வினோ அல்லது அவரது சக விஞ்ஞானிகளோ அதை விளக்குவதைப் பற்றி குழப்பமடைந்தவர்களாகவே இருந்தாலும் கூட, டார்வினின் உயிரினங்களின் தோற்றம் குறித்த கொள்கை என்பது அறிவியலேதான். இந்த அறிவியல் மேலும் வளர்வதன் மூலமே இத்தகைய குழப்பங்களுக்குத் தீர்வு காண முடியும்.

எனினும் சமூக அறிவியல்களில் இந்தப் பிரச்சனை வேறுவகையில் எழுப்பப்படுகிறது. சமூகத்தில் உள்ள மேலாதிக்க வர்க்கத்தின் கண்ணோட்டம் அல்லது வர்க்க ரீதியான சார்பு ஆகியவற்றில் இருந்தே சித்தாந்தம் என்பது தோன்றுகின்ற அதே நேரத்தில் தற்போதைய உற்பத்தி முறையை தாண்டிச் செல்லும் வகையில், இப்போது நிலவுகின்ற சமூக, பொருளாதார அமைப்பை எவ்வாறு மாற்ற முடியும் என விழைகின்ற வர்க்கத்தைச் சார்ந்ததாகவே அறிவியல் உள்ளது. மார்க்சைப் பொறுத்தவரையில் ஒரு சித்தாந்தம் என்ற வகையில் முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடு தொடர்ந்து ‘கொச்சையானதாக’ மாறும்வகையில் தரமிறங்கிக் கொண்டே இருக்கிறது. அதாவது, வெளிப்புறத் தோற்றத்தையும் தாண்டி அதன் சாரத்தை தேடுவதை அது கைவிட்டு விடுகிறது என்பதே இதன் பொருளாகும். மாறாக, தற்போது நிலவுகின்ற பொருளாதார, சமூக, அரசியல் அமைப்பினை மாற்றுவதிலேயே தனது ஆழ்ந்த சுயநலத்தைக் கொண்டுள்ள சுரண்டப்படும் வர்க்கத்தினால்தான் அத்தகைய மாற்றத்திற்கான அவசியத்தை தன்னுள்ளே கொண்டுள்ள உண்மையான அறிவியல் போக்கினை மேற்கொள்ள முடியும். மார்க்சிய சிந்தனையின் வரலாறு நெடுகிலுமே, குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில், சமூக சிந்தனையின் வர்க்க அடிப்படைகள் என்ற கேள்வியும், இத்தகைய சிந்தனையில் ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தின் மேலாதிக்கம் ஆகிய விமர்சனமற்ற வகையிலும், தவறான வகையிலும், இயற்கை அறிவியல்கள், சமூக அறிவியல்கள் ஆகியவற்றுக்கிடையே நிலவுகின்ற குறிப்பான வேறுபாடுகள், மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோர் நன்றாக உணர்ந்திருந்த வேறுபாடுகள் ஆகியவை குறித்துக் கவலைப்படாமல் அவை இயற்கை அறிவியல்களுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டன.

எனினும் இயற்கை, சமூகம் ஆகிய இரண்டு உலகுகளிலுமே விரவியிருந்த அறிவியல் குறித்த மார்க்சின் கருத்தோட்டத்தின் உண்மையான திறவுகோல், கடந்த பல ஆண்டுகளாகவே அவரது உலகக் கண்ணோட்டம் என அடையாளப்படுத்தப்பட்ட பொருள்முதல்வாத, இயக்கவியல் தத்துவ நிலைபாடே ஆகும். ஹெகலின் தத்துவத்துடனான அவரது தொடக்க கால பரிச்சியத்தில் இருந்து துவங்கி, பின்னர் அதைத் தீவிரமாக விமர்சிப்பவராக மாறிய போதிலும், ஹெகலின் இயக்கவியலில் இருந்து அவர் பெரும் ஊக்கம் பெற்றார். ஃபாயர் பாக்கினால் அவர் பெரிதும் கவரப்பட்ட போதிலும் , குறிப்பாக மூலதனம் நூலை எழுதுவதற்கான தயாரிப்பு வேலைகளின் போதும், அந்த நூலை எழுதும் காலத்திலும் அவர் திரும்பிச் சென்று, அதை பொருள்முதல்வாத அடிப்படையில் திருத்தியமைக்கத் துவங்கினார். ஃபாயர்பாக்கின் இயந்திரத் தனமான கண்ணோட்டம், அதைப் போன்றே ஹெகல் அடிக்கடி கருத்துமுதல் வாதத்தில்  சென்று விழுவது (பொருளுலகம் ஒரு குறிப்பிட்ட வகையில் சிந்தனையோடு இணைந்திருப்பது; அதில் சிந்தனைக்கே முக்கியத்துவம் தரப்படுவது ஆகியவை) ஆகிய இரண்டையுமே மார்க்ஸ் மிகுந்த உறுதியோடு தவிர்த்தார். எனினும் அவரது க்ரண்ட்ரைஸ் நூலின் காலத்திலும், மூலதனம் நூலை எழுதிய காலத்திலும் மார்க்சின் பொருள்முதல்வாத இயக்கவியல் என்பது இவை இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரெதிராக நிறுத்துவதாகவோ அல்லது இந்த இரண்டின் ஏதாவதொரு  அம்சத்தை மற்றொன்றோடு முறைப்படி இணைப்பது என்பதாகவோ இருக்கவில்லை என்பது தெளிவாகும். அது உள்ளீடாக ஒன்றுபட்ட ஓர் உலகக் கண்ணோட்டமே ஆகும். அதில் இயக்கவியல் என்பது பொருள்முதல் வாதத்தின் இன்றியமையாத அம்சமாகவும், பொருள்முதல்வாதம் என்பது இயக்கவியலின் இன்றியமையாத அம்சமாகவும் விளங்குகின்றன. எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில் தன் எழுத்துக்களில் இதனை விளக்குவதாக மார்க்ஸ் உறுதியளித்திருந்த போதிலும், வருந்தத்தக்கவகையில் அவர் இந்தக் கருத்தாக்கத்தை எழுத்துபூர்வமாக எடுத்துரைக்கவில்லை. எனினும் இந்தப் பொருள்முதல்வாத இயக்கவியலானது இயற்கை, சமூகம், அதன் தர்க்கநியதி ஆகியவை குறித்த ஆய்வை உள்ளடக்கியது என்ற கருத்து மூலதனம் நூலில் சிறப்பாகச் செயல்படுவதை நாம் தெளிவாகக் காண முடியும்.

இந்தப் பின்னணியில்தான் இந்தக் குறிப்பின் துவக்கத்தில் நாம் மேற்கோள் காட்டியிருந்த மார்க்சின் சாதனைகள் டார்வினின் சாதனைகளுக்கு இணையானது என்ற எங்கெல்சின் ஒப்பீட்டின் முக்கியத்துவம் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. இந்த இரண்டு கோட்பாடுகளிலுமே முக்கியமான இயக்கவியல் சார்ந்த சொற்றொடர் என்பது மேம்பாடு என்பதாகும். அரசியல் பொருளாதாரத்தை மேற்கோளாக எடுத்துக் கொண்டு, அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான பங்களிப்பு என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் அரசியல் பொருளாதார வகைமுறை என்ற தலைப்பிலான பிரிவில் மார்க்ஸ் இதை மிகத் தெளிவாக விளக்கியிருந்தார்.

மேம்பாடு என்ற வார்த்தையானது வளர்ச்சி, சேகரிப்பு, அதிகரித்து வரும் பன்முகத் தன்மை ஆகிய புரிதல்களை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அரசியல் பொருளாதாரம் மற்றும் உயிரியல் ரீதியான பரிணாமம் ஆகிய இரண்டிலுமே இது உண்மையாகும். எனினும் இன்னும் ஆழமாகச் செல்வோமெனில், இந்த இரண்டு விசயங்களிலும் இந்த மேம்பாடு என்பது மறு உற்பத்தி என்ற செயல்முறையிலிருந்தே, ஒன்றில் உற்பத்தி- விநியோகம் என்ற சுழற்சியின் மூலமும், மற்றொன்றில் மிக எளிமையான உயிரியல் மறு உற்பத்தியின் மூலமும், உருவாகிறது. என்றாலும் இந்த மறு உற்பத்தி என்பது இயக்கவியலின் மிக முக்கியமான ஆழமான புரிதலாக,  அதன் சாரம், தோற்றம் ஆகியவற்றின் ஒற்றுமையின் வெளிப்பாடாக அல்லது உருவாக்கமாக அமைகிறது. எனவே முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், உற்பத்தி, விநியோகம் என்ற எளிதான, விரிவடைந்த மறு உற்பத்தியிலிருந்து மூலதன சேகரிப்பு உருவாகிறது. அதைப் போன்றே உயிரியல் உலகத்தின் பன்முகத்தன்மை மற்றும் வேறுபாட்டுத் தன்மை ஆகியவற்றின் உருவாக்கம் என்பது உயிரியல் ரீதியான மறு உற்பத்தி செயல்முறையின் மீது சுற்றுச் சூழலின் ஊடாடலில் இருந்து எழுவதாகும். இந்த இரண்டு விசயங்களிலுமே இன்றியமையாமை மற்றும் வாய்ப்பு ஆகியவற்றின் இயக்கவியல் ரீதியான இணைப்பு இந்த மறு உற்பத்தி சுழற்சியின் மூலமாகவே பெறப்படுகிறது. முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் மூலதனக் குவிப்பு ஆகியவை குறித்த மார்க்சின் கண்ணோட்டம், உயிரினங்களின்  தோற்றம் குறித்த டார்வினின் விளக்கங்கள் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் குறித்த நெருக்கமான ஆய்வு “உயிரினங்களின்  தோற்றம்” என்ற நூலை படித்தபிறகு மார்க்ஸ் “நமது கண்ணோட்டத்தினை அடிப்படையாகக்  கொண்டு இயற்கை அறிவியல் குறித்து எழுதப்பட்டுள்ள நூல் இது” என்று எங்கெல்சிற்கு ஏன் எழுதினார் என்பது குறித்த நமது புரிதலை மேலும் ஆழப்படுத்த உதவும்.

“இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையை கொண்டுசெலுத்தும் இயங்கியல் குறித்த சிறப்பு விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்” என்ற எங்கெல்சின் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் -எங்கெல்ஸ் ஆகியோரின் பொருள்முதல்வாத இயக்கவியல் கண்ணோட்டம் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கே இயங்கியல் விதி என்பதன் சரியான பொருள் என்ன? முதலாளித்துவ உற்பத்தி முறையை வென்றெடுப்பதன் இன்றியமையாமை குறித்த மார்க்சின் கண்ணோட்டத்தில்  முற்கணிப்பு அல்லது தவிர்க்கவியலாதன்மை குறித்த சார்பு தென்படுகிறது பலரும் விளக்கம் அளிக்க முனைந்து வந்துள்ளனர். இங்குள்ள எங்கெல்சின் கூற்று கூட இதன் மற்றொரு வெளிப்பாடுதான் என்று கூட எவரொருவரும் சந்தேகப்படலாம். எனினும் இந்தக் கூற்றின் வெளிப்படையான தோற்றத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இயக்கவியல் குறித்த இந்த இருவரின் உறுதிப்பாட்டை எவரொருவரும் ஏற்றுக் கொள்வார்களேயானால், இந்த இயங்கியல் விதி என்பது மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையேயுள்ள குறிப்பிட்ட முரண்பாட்டைக் குறிக்கிறது என்பதும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒன்றுக்கொன்று எதிரான இந்த இரண்டின் ஒற்றுமையையுமே குறிக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

மூலதனம் நூலை மிகுந்த கவனத்தோடு படிப்போமானால் இதை மிக எளிதாக உறுதிப்படுத்திக் கொண்டு விடலாம். பொருள்முதல்வாத இயக்கவியலில் இயக்கம் என்பது முரண்பாடாகும். அது இயந்திர ரீதியான இயக்கமாக (அங்கே இருப்பது, அதே நேரத்தில் அங்கே இல்லாமல் இருப்பது) இருந்தாலும் சரி, அல்லது மேலும் பொதுவான அர்த்தத்திலான இயக்கமாக இருந்தாலும் சரி. எனினும் ஒரு முரண்பாட்டில் உள்ள எதிரெதிர் அம்சங்களின் ஒற்றுமை என்ற குறிப்பிட்ட தன்மை மிகத் திட்டவட்டமாக குறிப்பிடப்படவில்லையெனில் முரண்பாடென்பது தொடர்ந்து சாரமான அரூபமான கருத்தாகவே நீடிக்கிறது.  மூலதனம், உழைப்பு ஆகியவற்றைப் போன்ற, எதிரெதிரான அம்சங்கள் தாங்களாகவே சுய சிந்தனையில் செயல்படுவதற்கான திறனைக் கொண்டிருக்கும் நிலையில், முற்கணிப்பு அல்லது தவிர்க்க இயலாதன்மை என்ற எதுவும் இருக்க முடியாது.
மூலதனம் நூல் வெளியான 150வது ஆண்டு, போல்செவிக் புரட்சியின் 100வது ஆண்டு, மார்க்சின் 200வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் ஆண்டு என்ற முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் சிறப்பான இத்தருணத்தில் அறிவியல் குறித்த மார்க்சின் கண்ணோட்டத்தை, அதன் ஆழமான இயக்கவியல் பொருளில் புரிந்து கொள்வது என்பது சோசலிசத்திற்கான போராட்டத்தின்  தவிர்க்கமுடியாத அம்சமாகவே தொடர்ந்து நீடிக்கிறது.

தமிழில்: வீ.பா. கணேசன்

கார்ல் மார்க்ஸ் 200: தத்துவ வாசிப்பு

என்.குணசேகரன்

மனித சமூக வரலாற்றின் உயிர்நாடியான ஒரு உண்மையை கம்யூனிஸ்ட் அறிக்கை கொண்டுள்ளது.

“இது வரை இருந்து வரும் சமூகத்தின் வரலாறு அனைத்தும், வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” இந்த பொன்னான வரிகள் ஒரு புதிய வரலாற்றுப் பார்வையைக் கொண்டுள்ளது. முதலாவதாக, சமூகத்தை வர்க்கங்களின் தொகுதி என்று அணுகும் முறையை இது வழங்குகிறது. அடுத்து, வர்க்கங் களுக்கிடையே எழும் முரண்பாடுகளினால் நடக்கும் போராட்டங்கள்தான், வரலாற்றின் உந்து சக்தி என்ற புதிய வரலாற்று வெளிச்சத்தை நமக்கு வழங்குகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு, மார்க்சியத்தின் மகத்து வமாகும். வர்க்கங்களிடையே நடக்கும் போராட்டம் உற்பத்தி மற்றும் பொருளியல் தளத்தில் மட்டும் நடப்பதல்ல. அரசியல், சட்டம், பண்பாடு என பல தளங்களில் நடைபெறுகிறது.அதில் முக்கியமான தளம் தத்துவம். பல சந்தர்ப்பங்களில் நேரடிக் காட்சியாக இது தெரிவதில்லை. ஆனால் சமூகத் தில் நடக்கும் வர்க்கப் போராட்டங்கள் வலுவான தாக்கத்தை தத்துவத்தில் ஏற்படுத்துகின்றன.

தத்துவம் – அறிமுகம்
தத்துவச் சிந்தனை மிகவும் பழமையானது. பண்டைய கிரேக்கத்திலும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தத்துவ விவாதங்கள் நடந்து வந்து உள்ளன. ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதற்கான தேடலை ஒருவர் மேற்கொண் டால், அவரை தத்துவவாதி என்று அழைப்ப துண்டு.

philosophy  என்ற ஆங்கில சொல் இரண்டு கிரேக்க சொற்களைக் கொண்டது. philo என்பதற்கு நேசித்தல் என்றும் sophia என்பதற்கு அறிவு என்றும் பொருள்படும். அறிவை நேசித்தல் என்ற பொருள் கொண்டதாக தத்துவம் என்ற துறை புரிந்துகொள்ளப்பட்டது.
மனிதர்கள் பகுத்தறிவு கொண்ட ஒரு உயிரினம். பகுத்து அறியும் ஆற்றல் உள்ளதால், அவர்கள் எப்போதும் அறிவுத் தேடல் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். மனித இனத்தின் இந்த அறிவுத் தேடல் தேவையை நிறைவேற்றுவதற்கு தத்துவத் துறை பயன்பட்டு வந்துள்ளது.
தனது வாழ்க்கையையும் தனது இருப்பையும் பற்றி, அறிந்து கொள்ளவும், தான் வாழும் உலகமும் அதைச் சுற்றியுள்ள இயற்கையையும் பற்றி அறிந்து கொள்ளவும் மனிதர்கள் இடையறாது ஆர்வம் கொண்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் உருவாகும் அறிவே தத்துவம்.
இயற்கை, சமூகம், மனிதர்கள் என்ற பரிமாணங் களில் தத்துவ செயல்பாடு அமைந்துள்ளது. தத்துவா சிரியர்கள் இயற்கை, உலகம், பிரபஞ்சம் ஆகியவற்றின் இருப்பு பற்றியும் மனிதர்கள் உள்ளடங்கிய சமூகத்தின் இருப்பு பற்றியும் சிந்தித்து வந்துள்ளனர்.

மார்க்சியத்தின் வரையறை
தத்துவம் அனைத்து அறிவியல் துறைகளுக் கும் தாய் போன்று விளங்கியது. இயற்கை அறிவியல், பௌதிகம் போன்ற துறைகளில் புதிதாக சேர்ந்திடும் அறிவுப் பங்களிப்பு அனைத்தும் தத்துவமாகவே பார்க்கப்பட்டது. 1729-ம் ஆண்டில் நியூட்டன் எழுதிய நூலின் தலைப்பு,” இயற்கைத் தத்துவத்தின் கணிதக் கோட்பாடுகள்”. அன்று பௌதிகம், கணிதம், வானவி யல் போன்ற அனைத்தும் தத்துவ அறிவின் பிரிவு களாகவே கருதப்பட்டன.
தத்துவம் பற்றி பல பார்வைகளும், வரையறை களும் நிலவி வந்த சூழலில் மார்க்சியத்தின் வருகை ஒரு புதிய தடத்தினை உருவாக்கியது.
எங்கெல்ஸ் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை பற்றி எழுதுகிற போது குறிப்பிடுகிறார்.

“எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப்படைக் கேள்வி, இருத்தலுக்கும், சிந்தனைக்கும் இடையே யான உறவு பற்றியதுதான்’’
அதாவது, புற உலகு சார்ந்த பொருட்களுக் கும், அதனையொட்டி எழுகிற மனித சிந்தனைக் கும் உள்ள உறவு குறித்து தத்துவங்களும் தத்து வவியலாளர்களும் தொடர்ந்து சிந்தித்து வந்துள்ளனர்.
இது எப்போது துவங்கியது? இதற்கும் எங்கெல்ஸ் ஒரு சுவாரசியமான விளக்கத்தை தருகிறார்:

“தங்களது உடல் அமைப்பு பற்றி, எந்த அறிவும் இல்லாத ஆதிகால மனிதர்கள், தாங்கள் கண்ட கனவுகளில் வந்த ஆவி கற்பனை உருவங்களின் தாக்கத்தால், தங்கள் எண்ணங்களும் உணர்வு களும் உடலின் செயல்பாடுகள் அல்ல; உடலில் இருக்கும் ஆன்மாதான் அவற்றுக்குக் காரணம்; அது மரணத்தின்போது, உடலை விட்டு வெளியேறி விடுகிறது என்று கருதினர். அன்றிலிருந்து மனிதர் கள் தங்கள் ஆன்மாவிற்கும் புற உலகத்திற்குமான உறவு பற்றி ஆராயத் துவங்கினர்.” இந்த அற்புத சித்தரிப்பு, தத்துவத் துறையின் துவக்கத்தை எளிமை யாக எடுத்துரைக்கிறது.
இந்தக் காலங்களுக்குப் பிறகுதான் தத்துவ சண்டைகள் துவங்கின. தத்துவக் களத்தில் போரிடும் இரு முகாம்களை எங்கெல்ஸ் விளக்குகிறார்.
ஆன்மா, புற உலகு உறவு பற்றி “…பதிலளித்த தத்துவவாதிகள் இருகூறாகப் பிரிந்தனர். ஆன் மாவை இயற்கைக்கு முதன்மையாக கருதியவர் கள் கருத்துமுதல்வாத முகாமாகப் பிரிந்தனர். இயற்கையை பிரதானமாக முதன்மைப்படுத்திய வர்கள் பொருள்முதல்வாத முகாமாக இயங்கினர்.”
மார்க்சியத்தின் இந்த வரையறை அடிப்படை யில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் பொருள் முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். இவ்வாறு, தத்துவத்தில் அதுவரை நீடித்து வந்த குழப்பங்களுக்கு எல்லாம் மார்க்சிய தத்துவம் தீர்வு கண்டது. இந்த புதிய பார்வை, தத்துவ வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

கருத்து முதல் வாதம்
பல்கலைக்கழக தத்துவப் பாடங்களில் கருத்து முதல்வாதம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப் படுவதில்லை. இந்த தத்துவ முறைக்கு பல சொற் கள் பயன்படுத்தப்படுகின்றன. மீமெய்யியல் (அநவயயீhலளiஉள) என்பது உள்ளிட்டு பலவாறு சொற் கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. தமிழில் அப்பாலைத் தத்துவம் என்ற சொற்றொடர் பயன்பட்டு வந்துள்ளது.
புலன்கள் உணரும் பொருட்களுக்கு அப்பால், புலன்களால் உணர முடியாதவற்றை விவாதிக் கும் தத்துவமுறை என்பதால் இது அப்பாலைத் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு தூண் இருக்கிறது என்றால் சாதாரணமாக அது எந்த மூலப்பொருட் களால் ஆனது என்று விளக்கம் கூறலாம். ஆனால் அப்பாலைத் தத்துவம் அந்த தூணுக்குள் உள்ள ‘மறைபொருளைப்’ பற்றி பேசுகிறது. இறுதியாக, “தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்” என்று அது முடிவு கூறும். அதாவது கடவுள்தான் எல்லாம் என்று இறுதியாக வந்தடையும் தத்துவ முறை அது.

இந்த அப்பாலைத் தத்துவம் அரிஸ்டாட்டில் காலத்திலும், அதற்கு இணையாக அதே காலங் களில் இந்தியாவிலும் பெரும் செல்வாக்குடன் தத்துவத் துறையில் செயல்பட்டது.

மேற்கண்ட எடுத்துக்காட்டில், தூண் கட்டப் படுகிற மூலப்பொருட்களும், தூணின் வடிவமும் மாறலாம்; ஆனால், ’மறைபொருளாக’ உள்ள ஒன்று எப்போதும் மாறுதலுக்கு உள்ளாவதில்லை, அது நிரந்தரமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த அநவயயீhலளiஉள என்ற சொல்லுக்கு பிந்தைய காலங்களில் மாறாநிலை தத்துவம் என்று அழைக்கிற வழக்கம் ஏற்பட்டது.

சமூகத்தில் எடுத்துக்காட்டு கூற வேண்டுமானால், சாகாவரம் பெற்ற, மாறாத, மாற்ற முடியாத சமூகம் முதலாளித்துவ சமுகமே என்கிற பார்வையைக் குறிப்பிடலாம்.

பொருட்கள், சமூக நிகழ்வுகள் அனைத்தும் மாறாதவை என்ற பார்வை கொண்டது மாறா நிலைத் தத்துவமாகும். இதற்கு நேர் எதிரான தத்துவ முறை, இயக்கவியல் எனப்படும். மார்க் சிற்கு முந்தைய இயக்கவியலானது, கருத்து முதல்வாத குழப்பங்களுடன் இருந்தது. அதனைப் பொருள்முதல்வாதத்துடன் இணைத்து இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவ முறையினை மார்க்சும், எங்கெல்சும் படைத்தனர்.

கிழக்கு,மேற்கு தத்துவங்கள்
தத்துவங்களை மேற்கத்திய தத்துவம், கிழக்கு தத்துவம் என வகைப்படுத்தி பயில்கின்றனர். ஆனால் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னைகளில் பிர தேசம், நாடு வித்தியாசங்கள் இருப்பதில்லை. மனித சிந்தனைக்கும் இயற்கைக்குமான தொடர்பு குறித்து, எல்லாத் தத்துவங்களும் ஒரு நிலைபாடு எடுத்து விளக்குகின்றன. எங்கெல்ஸ் குறிப் பிட்டது போன்று இயற்கையா? சிந்தனையா? என்ற கேள்விக்கு விடை கண்டதில், எது மூல முதலானது என்பதனையொட்டி, இரு பிரிவு களாக கிழக்கு, மேற்கத்திய தத்துவங்களும் வகைப்படுத்தப்படுகின்றன.

தத்துவங்களின் கால வரிசையை ஆராய்கிற போது மனித நாகரிகங்களின் வளர்ச்சியோடு இணைந்ததாக தத்துவங்கள் தழைத்திருக்கின்றன. இது மேற்கு, கிழக்கு உள்ளிட்டு உலகத் தத்துவங் கள் அனைத்துக்கும் பொருந்தும். இந்திய தத்து வத்தில் வேதங்கள் தோன்றியதாக கணிக்கப்படும் காலத்திலிருந்தே பொருள் உருவாவது பொருளி லிருந்துதான் போன்ற துவக்க கால பொருள் முதல்வாத தத்துவக் கருத்துக்களும் தோன்ற ஆரம்பித்தன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற தத்துவ முறையாக சார்வாகம் அல்லது உலகாயதம் எனப்படும் இந்திய பொருள் முதல்வாத தத்துவம் வளர்ந்தது. இந்த உலகு, மனிதர்கள் எல்லாம் காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம் ஆகியவற்றிலிருந்து தோன்றியதாக இந்தியப் பொருள்முதல்வாதம் கருதியது.

இதே காலங்களில் கிரேக்கத்தில் தேல்ஸ் என்ற தத்துவவாதி வாழ்ந்திருக்கிறார். அவர் தண்ணீர் தான் மூலாதாரப் பொருள் என்றும் அதிலிருந்து, உலகமும், பிரபஞ்சத்தின் தோற்றமும் நேர்ந்ததாக பொருள்முதல்வாத நிலையினைக் கொண்ட தத்துவத்தை உருவாக்கியவர். அவருக்குப் பிறகு காற்றுதான் முதன்மையானது என்ற தத்துவ நிலைபாட்டைக் கொண்ட அநேக்சிமினஸ் வாழ்ந் திருக்கிறார். இவ்வாறு கிழக்கிலும், மேற்கிலும் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் வளர்ந்து வந்துள்ளன.

இந்திய சமூகத்தில் நிலவுடைமை சமூகம் நிலைபெற்று, ஆளுகின்ற வர்க்கங்கள் நிலப் பிரபுத்துவ சக்திகளாக வலுப்பெற்ற நிலை, நால் வருண சாதிய அமைப்பு இறுக்கமாக வேரூன்றிய சூழல் ஆகியவற்றால், பொருள்முதல்வாதம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
மனித சமூக வளர்ச்சி ஏற்பட்ட சூழலில் ஆன்மீக தத்துவங்களும் கருத்துமுதல் வாத தத்துவங்களும் மேலாதிக்கம் செலுத்தத் துவங்கின. சமூகம் வர்க்கங்களாக பிரிந்து, தொடர்ந்து வந்த வர்க்கப் போராட்டத்தில் நிலவுடைமை சமூகம் பரிணமித் தது. இந்த சூழலில்தான் கருத்துமுதல்வாதம் ஆதிக்கம் செலுத்தியது.

ஆக, மேலாதிக்கம் செலுத்தும் சொத்துடைமை வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக் கும் நடைபெறும் வர்க்கப் போராட்டம் தத்துவத் துறையில் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள் முதல் வாதத்திற்குமான போராட்டமாக நடை பெற்று வந்துள்ளது. இதனை தத்துவ வரலாறு முழுவதும் காண முடியும்.

மதமும் தத்துவமும்
மதங்களின் தோற்றம், வளர்ச்சிக்கும் தத்துவ வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இயற்கையின் இயக்கங்களின் மீது ஏற்பட்ட மனித உணர்வுகள், சிந்தனைகள், மத வழிபாட்டு முறைகளாகவும் தத்துவ விளக்கங்களாகவும் பரிணமித்து வந்துள்ளன. பல தத்துவங்களில் மத நம்பிக்கை எது, தத்துவக் கருத்து எது என்று பிரித்து தெரிந்துகொள்ள இயலாத அளவிற்கு இணைந்துள்ளன.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் மதத்தை யும் தத்துவத்தையும் பிரித்து பார்ப்பது மட்டு மல்லாது, மதம் உருவானதற்கான சமூகச் சூழல், பொருளாதாரக் காரணிகளை ஆராயவும் கற்றுக் கொடுக்கிறது.
இந்தியத் தத்துவம் மதம் சார்ந்தது என்றும் ஆன்மீகத் தன்மை கொண்டது என்றதுமான கருத்துக்கள் இன்றளவும் ஆழமாக வேரூன்றி வந்துள்ளன. இந்தியாவின் குடியரசுத் தலைவ ராக இருந்த தத்துவ ஆசிரியரான டாக்டர் ராதா கிருஷ்ணன் “இந்திய தத்துவம் என்பது சாரம் சத்தில் ஆன்மீக தத்துவம்” என்று எழுதியுள்ளார். அதாவது இந்திய தத்துவத்தில் கடவுள் மறுப்புக் கொள்கைகள் எதுவும் இல்லை என்று அடிப் படையற்ற கருத்து சொல்லப்பட்டு வந்துள்ளது. இதனை உடைத்தெறிந்த பெருமை தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்களையே சாரும். இந்தியத் தத்துவத்தில் தொன்மைக்காலமாக நிலைத்திருந்த நாத்திக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்து, இந்திய தத்துவம் ஆன்மீக தத்துவமே என்ற வாதத்தின் பொய்மையை தோலுரித்துக் காட்டினார் அவர்.

தத்துவ இயக்கத்தின் அடிப்படை
பல்வேறுபட்ட தத்துவ சிந்தனைகள் உருவா வதற்கு எது அடிப்படை? இந்தக் கேள்விக்கான விடையினை மார்க்சியத்தில்தான் பெற முடியும். குறிப்பிட்ட மக்கள் சமூகத்தில் நிலவும் சமூக உற்பத்தி நிலைமைகள்தான் குறிப்பிட்ட தத்துவப் போக்கு தோன்றிட அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

எடுத்துக்காட்டாக இந்தியாவில் பௌத்த தத்துவம் தோன்றிய வரலாற்றைக் குறிப்பிடலாம். மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் இதனை கீழ்கண்டவாறு விவரிகின்றார்:

“வட இந்தியாவில் பேரரசுகள் காலத்தில், வேள்விகளையும், வேதமுறைகளையும் எதிர்த்து, சமணமும், பௌத்தமும் இயக்கம் கண்டன. சாதி அடிப்படையிலான சனாதன அமைப்பு தொலை தூர வர்த்தக வளர்ச்சிக்கு தடையாக இருந்தன. தொலைதூர வர்த்தகம் வளர சமணப் பள்ளி களும் மடங்களும் பேருதவி புரிந்தன… பல்வேறு சமூகக் குழுக்களை ஏற்றுக் கொள்ளும் சமத்துவக் கொள்கை கொண்ட பௌத்தமும் சமணமும் இயல்பாகவே வர்த்தக வளர்ச்சிக்கு உதவின.”

சமூகத்தில் நிலவுடைமையோடு சேர்ந்து வணி கப் பொருளாதாரம் வளரத் துவங்கிய காலத்தில் பௌத்தம் வளரத் துவங்கியது. ஏற்கனவே வேளாண்மை உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட மக்கள் ஆன்மிக தத்துவப் பிரிவுகள் மற்றும் வேதங்களின் பெயரால் அடிமைகள் போன்று நடத்தப்பட்டு வந்தனர். அவ்வாறு வாழ்ந்த நிலையில் வணிக வளர்ச்சித் தேவைகளின் விளை வாக உருவான பௌத்தம் அடக்கப்பட்ட மக்க ளின் குரலாக உருவெடுத்தது.

மேலை நாடுகளிலும் இப்படிப்பட்ட தத்துவ வெளிப்பாடுகளை காணலாம். ஐரோப்பிய சமூ கத்தில் 15-ம் நூற்றாண்டுகளில் நகரங்களும் வணி கமும் தொழிற்சாலைகளும் வேகமாக வளரத் துவங்கின. நிலப்பிரபுத்துவ சமூக அமைப் பிலிருந்து முதலாளித்துவ சமுகமாக மாறும் கட்டமாக அது இருந்தது. அறிவியல் வளர்ச்சி யும் இந்த நிகழ்வுப்போக்கிற்கு உறுதுணையாக அமைந்தது.

இந்த சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு, புதிதாக ஆளும் வர்க்கமாக உருவெடுத்த முதலாளித்துவ வர்க்கங்களின் தேவைகளை பிரதிபலிப்பதாக அன்றைய தத்துவ வளர்ச்சி ஏற்பட்டது. திதராட் உள்ளிட்ட பிரெஞ்சு தத்துவவாதிகள், மார்க் சுக்கு முந்தைய காண்ட், ஹெகெல் போன்ற தத்துவவாதிகளை குறிப்பிடலாம். அறிவியல் வளர்ச்சி ஏற்பட்ட சூழலில் இவர்களில் பலர் பொருள்முதல்வாதிகளாக இருந்தனர்.

எனவே தத்துவ வரலாறு படிப்பவர்கள் மார்க்சின் கீழ்க்கண்ட கூற்றினை ஆழமாக உணர வேண்டும்: “…பொருளாதார வாழ்க்கையின் உற்பத்திமுறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க் கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை. அவர் களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர் களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது… ”

சமூக வாழ்க்கை நிலையில் பொருளாதார உற்பத்தி முறை முக்கியமானது. அதுவே அறிவுலக வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று மார்க்ஸ் கூறுகிறபோது, தத்துவமும் அதில் அடக்கம். தத்துவமும் உற்பத்தி முறை இயக்கத்திற்கு ஏற்ற தாக இயங்குகிறது. உற்பத்தியில் கட்டுப்பாடு கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் தத்துவம் பயன்படுகிறது.

ஆனால் இதனை இயந்திரகதியில் பார்ப் பதை மார்க்சியம் ஏற்கவில்லை. தத்துவ நிலை பாடுகளை உன்னிப்பாக ஆராய வேண்டும் என்பதுடன் அதன் பின்னணியாக உள்ள உற்பத்தி முறை மற்றும் சமூக சூழலை கருத்தில் கொள்ள வேண்டுமென மார்க்சியம் வழிகாட்டுகிறது.

தத்துவத்தின் இலக்கு
பொருளியல் துறையில் நிகழும் மாற்றங்கள் – தத்துவத் துறை இயக்கம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தாக்கம் செலுத்துகின்றன என்பதனை மறந்திடக் கூடாது. பாட்டாளி வர்க் கத்திற்கு சுரண்டலிலிருந்து விடுதலை பெறும் போராட்டத்தினை ஊக்குவிக்கும் முக்கிய காரணி யாக முற்போக்கான தத்துவ வளர்ச்சி திகழ்கிறது.

சமூக உருவாக்கத்துடன் இணைத்து தத்துவ வரலாற்றை அறிதல் அவசியம். தொன்மைக் காலம் சமூக ஏற்றத் தாழ்வுகளின் துவக்க காலம். அதிலிருந்து தொடங்கி, இன்று வரை, உற்பத்தி உபரியைக் கையகப்படுத்தும் அதிகாரமும் வலிமையும் கொண்டோர் அறிவுத் தளத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். எனவே தத்துவமும் ஒடுக்குவோரின் குரல் ஒரு புறமும், ஒடுக்கப்பட் டோரின் குரல் மறுபுறமும் என இரு வகைப் போக்குகள் கொண்டதாக இருந்துள்ளது.

இந்நிலையில் தத்துவத்தின் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?
“தத்துவஞானிகள் உலகை பல்வேறு வகை களில் வெளிப்படுத்தி விளக்கியுள்ளனர்; ஆனால் மையமான பிரச்னை என்னவென்றால், உலகை மாற்றுவதுதான்.” என்பது கார்ல் மார்க்சின் கூற்று. மார்க்சிய தத்துவமான வரலாற்றியல், இயக்க வியல் பொருள்முதல்வாதம் இந்த நோக்கத் துடன் செயலாற்றுகிறது.

நடைமுறை வாழ்க்கையிலிருந்து விலகிய, அந்நியப்பட்ட ஒரு துறையாக இருந்த தத்துவத்தை நிஜ உலகில் மனிதர்கள் நடத்தும் போராட்டத்தோடு இணைத்தவர் காரல் மார்க்ஸ். மனிதம் மேம்படு வதற்கு தத்துவம் கருவியாக பயன்பட, வழி காட்டும் தத்துவமாக மார்க்சியம் விளங்குகிறது. இதனால், மார்க்சியம் இதர தத்துவங்களிலிருந்து மேம்பட்டு நிற்கிறது.

சமகால சவால்கள்

சமூகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத் தும் தேவையில் நின்று, கடந்த காலத் தத்துவங் களை கற்று உணர்ந்தால், எதிர்காலத் தத்துவப் புரிதல் புதிய திசையில் பயணிக்கும். சுரண்டப் படும் மக்களுக்கு உன்னத வாழ்வு மலர அது உதவிடும். மானுடத்தின் பல பிரச்னைகளை பல பரிமாணங்களில் கற்றிட தத்துவம் துணை நிற்கிறது. தெளிவாக அணுகிடவும், மோதிக் கொள்ளும் பல கருத்துக்களை ஆராய்வதற்கான வழிமுறைகளையும் அது நமக்கு கற்றுத் தருவதால் தத்துவம் பயில்வது அவசியமானது.

இந்தியாவில், இன்றைய நிலைமைகளை எதிர்கொள்ளவும், தத்துவம் தேவை. இன்று, முக்கியமான கேள்வி இது: இன்றைய ஆர்.எஸ். எஸ் சங்பரிவாரங்களின் இந்துத்துவத்தைதத்து வப் பார்வையில் எப்படி புரிந்து கொள்வது?

முதலாவதாக நம்பிக்கை என்பதனை இந்துத்துவம் முன்னிறுத்துகிறது. நம்பிக்கை என்று சொல்கிறபோது மனிதர்களுக்கு அப்பாற் பட்ட சக்தி என்ற பொருளில் பயன்படுத்தப்படு கிறது. மனிதர்களால் எதுவும் செய்ய இயலாது என்கிற உணர்வும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த சக்தி கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்றும் பகுத்தறிவிற்கு அதில் இடமில்லை; அறிவியலுக்கு முற்றாக இடமில்லை என்ற கூறுகளும் இந்த நம்பிக்கை பரிமாணத்தில் அடங்கியிருக்கிறது.

இரண்டாவதாக நம்பிக்கை என்பதில் இந்துத் துவம் இந்து மத நம்பிக்கையை முன்னிறுத்து கிறது. இந்து மத நம்பிக்கை என்றால் அனைத்து இந்து மதப் பிரிவுகளையும் இந்துத்துவம் பிரதி பலிக்கவில்லை. இந்து மதத்திலேயே மிகவும் பிற்போக்கான மதக்கூறுகளை அடையாளப் படுத்தி சுவீகரித்துக் கொண்டது இந்துத்துவம். ஆனால், தங்களது பார்வையே உண்மையான இந்து மதம் என சித்தரித்து சாதாரண மத நம்பிக்கையாளர்களை அவர்கள் திரட்டுகின்றனர். அந்த திரட்டலுக்கு இதர மதங்கள்? மீது வெறுப்பை வளர்ப்பது, அவர்களது முக்கிய தந்திரம். இது, அரசியல் அதிகாரத்திற்கான திரட்டல். இது, ஜனநாயக விரோதமானது.

இந்திய தத்துவத்தில் பரிணமித்த பல கருத்தாக் கங்களில் மறைக்கப்பட்ட பல கூறுகள் உண்டு. இதற்கு,தொடக்க கால சிந்தனைகளான உபநிட தங்களின் சில பிரிவுகளில்,உலகினை ஆராய பொருள்முதல்வாத சாயலில் பகுத்தறிவைப் பயன்படுத்திய விதம், பிந்தைய போக்குகளான துவைதம், வசிஷ்டாத்வைதம் போன்ற பல சிந்தனை களில் அடங்கியிருந்த மனிதநேயம், பன்முக சிந்தனை களை மதிக்கும் போக்கு, போன்றவைகளைக் குறிப்பிடலாம். ஆனால், இந்த கூறுகள் அனைத் தையும் நிராகரிக்கும் சித்தாந்தப் பார்வை கொண்டது இந்துத்துவம். ஆக, இந்திய தத்துவம், இந்து மத நம்பிக்கை ஆகிய இரண்டிலும் மிக பிற்போக்கான போக்கினையே இந்துத்துவம் கொண்டுள்ளது.

எனவே இந்துத்துவத்தை தத்துவ நோக்கில் ஆராய்ந்தால், அது பொருளின் இருப்பையே முற்றாக மறுக்கும் தன்மை கொண்டது என்பதை அறிய முடியும். இதனால், இந்துத்துவத்தை அகநிலை கருத்துமுதல்வாதம் எனும் பிரிவில் தான் சேர்க்க வேண்டும். அதாவது, பொருளை மறுத்து, பொருளாயத உலகு மாயையானது என்ற கருத்தை அது விதைக்கிறது. ஒரு சக்தி அல்லது கடவுள் என்ற பிம்பமே உண்மையானது என்ற நிலைபாட்டை அது கொண்டுள்ளது. உண்மையில் கடவுள் என்ற கருத்தாக்கத்தை அனைத்து சக்தியும் படைத்த தனிநபர் அல்லது தனிநபர் கூட்டமே மக்கள் மேலாண்மைக்கு உகந்தது என்ற உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதனால் தான் நரேந்திர மோடியின் பிம்பம் சாதாரண மனிதர்களிலிருந்து மேம்பட்ட தெய் வீக சக்தி கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது.

எனவே தத்துவத் தளத்திலிருந்தும் இந்துத்து வாவை எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கை என்று அவர்கள் முன்னிறுத்துவதை பகுத்தறிவு, அறிவியல் சார்ந்த பொருள்முதல்வாத கருத்து களை கொண்டு கருத்துரீதியான தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய தத்துவத்தில் முற்போக்கு கூறுகளை உயர்த்திப் பிடிப்பது அவசியம். ஆனால் இந்திய தத்துவம் உருப்பெற்ற வரலாறு முழுவதும் வர்க்க சமுதாயம் வளர்ந்து வந்த வரலாற்றோடு இணைந்தது. இந்த நிலையில் உழைக்கும் வர்க்கங்களின் வர்க்கப் போராட்ட வீரியத்தின் விளைவாக எழுந்த சிந்தனை கீற்றுக்களாக அவற்றை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பழைமையை உயர்த்திப் பிடிப்பதில் எச்சரிக்கை தேவை. பல சந்தர்ப்பங்களில் இது இந்துத்துவத்திற்கு பயன் பட்டுவிடும் நிலை ஏற்படலாம். ஏனென்றால், பழைமையும், பிற்போக்குத்தனங்களும் இந்துத்து வாவின் செயல்பாட்டு தளங்களாக உள்ளது.

அறிவியலோடு தத்துவம்
உலக, பிரபஞ்ச இரகசியங்களை இறைக்கருத்தில் தேடும் போக்கு முடிவில்லாமல் தொடர்கிறது. இந்தியாவில் பொருளின் இருப்பையே மறுத்து, அனைத்தும் மாயை, பொருளே இல்லை அனைத் தும் பிரம்மம் என்று வாதிட்ட அத்வைதம் இன்றும் பல வடிவங்களில் நீடிக்கிறது.
இதற்கு காரணம்? முதலாளித்துவ வர்க்க சமுதாயத்தில் தொடர்ந்து வரும் வர்க்கப் போராட்டம் தான். சுரண்டல் முறைக்கு முற்றுப்புள்ளி வைப் பதற்கு வழிதெரியாமல் பாட்டாளி வர்க்கம் உள்ள நிலையில், இறை கருத்தே மூல முதலானது என்ற தத்துவப் போக்கு தொடரும்.
பொருள்தான் முதலானது, பொருளின் பிரதிபலிப்பே சிந்தனை என்ற அடிப்படையி லிருந்து உலக, பிரபஞ்ச, இயற்கை இயக்கங்களை மார்க்சியம் விளக்குகிறது. அறிவியலோடு இணைந்த இந்த மார்க்சியம் சுரண்டல் முறையிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்ற உத்வேகத்தை அளிக்கிறது.

அறிவியலின் பல துறைகள் வளர்ச்சி பெற்ற நிலை யில் பிரபஞ்சத்தின் தோற்றம், உலகம், உயிர் தோற்றம் பற்றியெல்லாம் ஏராளமான பல கண்டு பிடிப்புக்கள் வெளிவந்த நிலையில் அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு தத்துவம் பயணிப்பது பயனற்றதாக அமைந்திடும். எனவே, அறிவியல் பார்வையுடன் இணைந்து தத்துவப் பிரச்னைகள் ஆராய்வது இன்றைய முக்கிய தேவை.

நிலவுகின்ற அனைத்தையும் குறித்த ஈவிரக்கமற்ற விமர்சனம் …

கார்ல் மார்க்ஸ் 200 – சில மேற்கோள்கள் …

ஓவியம்: கோ.ராமமூர்த்தி

மூலதனம் உயிரற்ற உழைப்பு ஆகும். அது ரத்தக்காட்டேரியைப் போல உயிருள்ள உழைப்பை உறிஞ்சியே வாழ்கிறது. எவ்வளவு அதிகமாக உழைப்பை உறிஞ்சுகிறதோ அவ்வளவு அதிகமாக வாழ்கிறது.

தொழிலாளி வேலை செய்யும் நேரம் என்பது முதலாளி அவரிடமிருந்து வாங்கியிருக்கும் உழைப்புச் சக்தியை நுகர்கிற காலம் ஆகும்.

– மூலதனம் தொகுதி 1, அத்தியாயம் 10 பிரிவு 1

உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு அதனோடு பொருந்தக்கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன.

பொருளாதாய வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வு அவர்களின் வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.

– அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை என்ற நூலில் முதல் பதிப்புக்கு எழுதிய கருத்துரையிலிருந்து

(வர்க்கங்கள் பற்றிய தனது கண்டுபிடிப்பை விளக்கும் கார்ல் மார்க்ஸ் குறிப்பிடும்போது)

நான் புதிதாக என்ன செய்தேன் என்றால் அது கீழ்க்கண்டவற்றை விளக்கியதுதான்: 1) வர்க்கங்கள் இருப்பதென்பது உற்பத்தியின் வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது 2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாகத் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும் 3) இந்தச் சர்வாதிகாரம் என்பது எல்லா வர்க்கங்களையும் ஒழிப்பதற்கும் வர்க்க பேதமற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவதற்கும் மாற்றமாக இருக்கிறது.

யோசிஃப் வெடமையருக்கு எழுதிய கடிதத்தில் (மார்ச் 5, 1852)

இப்போதைக்கு நாம் சாதித்தாக வேண்டியது மிகத் தெளிவானது. அதாவது நிலவுகின்றவை அனைத்தையும் பற்றிய ஈவிரக்கமற்ற விமர்சனத்தை நாம் செய்ய வேண்டும். அதிகார சக்திகளுடன் மோதும்போது எவ்வாறு சிறிதும் அஞ்சுவதில்லையோ அதே போலத் தான் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றியும் அஞ்சாத விமர்சனமாக இருக்கவேண்டும் எனும் பொருளில் அது ஈவிரக்கமற்றதாக இருக்கவேண்டும். எனவே நான் எந்தவொரு வறட்டுக் கோட்பாட்டுப் பதாகையையும் உயர்த்த விரும்பவில்லை மாறாக வறட்டுக் கோட்பாட்டாளர்கள் தங்கள் முன்மொழிவுகளை தங்களுக்குத் தாங்களே தெளிபடுத்திக்கொள்ள உதவ நாம் முயல வேண்டும்.

– கார்ல் மார்க்ஸ், அர்னால்ட் ருஜ்ஜுக்கு எழுதிய கடிதம் 1843

மூலதனத் திரட்சி உபரி மதிப்பை முன் தேவையாகக் கொண்டுள்ளது; உபரி மதிப்பு முதலாளித்துவ உற்பத்தியை முன் தேவையாகக் கொண்டுள்ளது; முதலாளித்துவ உற்பத்திச் சரக்கு உற்பத்தியாளர்களின் கரங்களில் மூலதனமும்உழைப்புச் சக்தியின் கணிசமான திரள்களும் முன்கூட்டியே இருப்பதை முந்தேவையாகக் கொண்டுள்ளது. எனவே இயக்கம் முழுவதும் ஒரு நச்சுவட்டத்தில் சுழல்வதாகத் தோன்றுகிறது. முதலாளித்துவ திரட்சிக்கு முன்னர் நிகழ்கிற ஒரு ஆதித் திரட்சியை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவாக அல்லாமல் அதன் துவக்கப்புள்ளியாக உள்ள ஒரு திரட்சியாக அனுமானம் செய்துகொள்வதன் மூலம் மட்டுமே நாம் இந்த நச்சு வட்டத்திலிருந்து விடுபட முடியும்…

ஆதித் திரட்சி என்று அழைக்கப்படுவதாவது, உற்பத்தியாளனை உற்பத்திச் சாதனங்களிடமிருந்து பிணையறுக்கும் ஒரு வரலாற்றுச் செய்முறையேயன்றி வேறொன்றுமில்லை. அது ஆதிகாலத்தியதாகத் தோன்றுவது ஏனென்றால், மூலதனத்தினுடையவும் அதனோடு இணையான உற்பத்தி முறையினிடமும் வரலாற்று முற்காலகட்டமாக அது அமைகிறது.

– மூலதனம் நூலின் முதல் பாகம் பகுதி 8 …

வர்க்கப் பகைமையின் மீது நிறுவப்பட்ட ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கம் இருப்பது அத்தியாவிசய நிபந்தனையாகும். எனவே, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலையானது, ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கும் உட்கிடக்கையை அவசியமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே முயன்று பெற்ற உற்பத்தி சக்திகளும், தொடர்ந்துவருகின்ற சமுதாய உறவுகளும் பிணைந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற நிலைமை ஏற்படுவது,  ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன்னைத் தானே விடுதலை செய்துகொள்வதற்கு அவசியமானதாகும். உற்பத்திக் கருவிகள் அனைத்தைக் காட்டிலும் ஆகப்பெரிய உற்பத்தி சக்தியானது புரட்சிகர வர்க்கமே ஆகும். பழைய சமுதாயத்தின் மார்புக்கூட்டுக்கள் உருவாக முடிந்த உற்பத்தி சக்திகள் அனைத்தும்  புரட்சிகரக் கூறுகளின் அமைப்பான ஒரு வர்க்கமாக அனுமானிக்கிறது.

– மெய்யறிவின் வறுமை, அத்தியாயம் இரண்டு, பிரிவு 4.

இதற்கு முந்தைய இயக்கங்கள் எல்லாம் சிறு எண்ணிக்கையிலானவரின் நலன்களுக்காக சிறு எண்ணிக்கையிலானவரால் நடத்தப்பட்ட இயக்கங்கள். பாட்டாளிவர்க்க இயக்கம் மிகப் பெரும்பான்மையினருக்காக மிகப் பெரும்பான்மையினர் நடத்தும் சுயேட்சையான இயக்கம். தற்கால சமுதாயத்தின் மிக அடிமட்ட அடுக்கான பாட்டாளிவர்க்கம், அதிகாரப்பூர்வமான சமுதாயத்தை உருவாக்கும் அடுக்குகளின் மேல்கட்டுமானம் முழுவதையும் தகர்த்தெறியாமல் தன்னை எழுந்து நிற்கச் செய்யவோ, நிமிர்ந்து நிற்கச் செய்யவோ முடியாது.

– கம்யூனிஸ்ட் அறிக்கை, பக்கம் 219 (எஸ்.வி.ராஜதுறை மொழியாக்கம்)

காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸ்

 

வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கார்ல் மார்க்ஸ் பிறந்தது 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி. 2017 ஆம்ஆண்டு மே 5 ஆம் தேதி 200 ஆவது பிறந்த நாள். எனவே மார்க்ஸின் இருநூறாம் பிறந்த நாள் மற்றும் 200 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம் இந்த ஆண்டு மே 5 இல் துவங்கி அடுத்த ஆண்டு மே 5 வரை நிகழும்.

நடப்பு ஆண்டிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மார்க்சின் மகத்தான படைப்பான மூலதனம் நூல் முதன் முதல் பிரசுரிக்கப்பட்டது 1867 இல். இப்பொழுது மூலதனம் நூல் வெளியிட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

நவீன உலகை ஜனநாயகப்படுத்தியதில் மார்க்சுக்கும் அவரது தத்துவத்தை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ற ஸ்தூலமான ஆய்வுகளையும் யுக்திகளையும் கண்டறிந்து மார்க்சீய தத்துவத்தையும், நடைமுறையையும் இணைத்து செழுமைப்படுத்திய லெனின், ஸ்டாலின், மாவோ, ஹோ சி மின், காஸ்ட்ரோ போன்ற ஆளுமைகளுக்கும் பெரும்பங்கு உண்டு.

நவீன சமூக அறிவியலின் சிற்பி

அறுபத்தி ஐந்து ஆண்டுகள் தான் மார்க்ஸ் வாழ்ந்தார். பிறந்தது மே 5, 1818. இறந்தது மார்ச் 14, 1883. அவர் பிறந்த பொழுது இங்கிலாந்து நாட்டில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு வேகமாக சமூகத்தில் ஆதிக்கம் செய்யும் நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. ஐரோப்பிய கண்டத்து நாடுகள் சற்று பின்தங்கியிருந்தன. இருப்பினும் அங்கும் முதலாளித்துவம் விரைவாகப் பரவும் என்பதை தனது ஆய்வுகள் மூலம் எடுத்துரைத்தார் மார்க்ஸ். சொல்லப்போனால், இன்று நாம் பேசும் உலகமயத்தைபற்றி 1847 இலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் பேசினார்.

அப்பொழுது அவருக்கு முப்பது வயது கூட நிறையவில்லை. அடுத்த இருபது ஆண்டுகளில் ஆழமான ஆய்வுகளை அயராமல் மேற்கொண்டு, 1867 இல் மூலதனம் என்ற உலகையே புரட்டிப் போட்ட மாபெரும் படைப்பை மார்க்ஸ் உருவாக்கி பிரசுரித்தார். இதில் பெரும்பகுதி லண்டனில் இருந்த பிரதான நூலகமான பிரிட்டிஷ் மியூசியத்தில் தனது நேரத்தை மார்க்ஸ் செலவழித்தார். ஆனாலும் புத்தகப்புழுவாகவோ, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சமூகம் பற்றிப் பேசும் ‘அறிவுஜீவி’யாகவோ மார்க்ஸ் ஆகவில்லை. மாறாக, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் எழுச்சி ஏற்பட்ட பல சமயங்களில் களத்தில் நின்றார். 1844 -1850 இத்தகைய பல மக்கள் எழுச்சிகளில் பங்கேற்று பல ஐரோப்பிய அரசுகளால் பல முறை நாடு கடத்தப்பட்டார். மூலதனம் எழுதும் மிகக் கடுமையான பணியில் ஈடுபட்டிருந்த பொழுதும் கூட தொழிலாளி வர்க்கத்தின் முதல் அகிலத்தை உருவாக்குவதில், 1864இல் அதன் முதல் மாநாட்டை லண்டன் நகரில் நடத்துவதில், அதற்கான முக்கிய ஆவணங்களை தயாரிப்பதில் மார்க்ஸ் மிகப்பெரிய பங்கு ஆற்றினார். மாநாட்டின் துவக்க உரையை மார்க்ஸ் தான் எழுதினார்.

மார்க்ஸ் மறைந்து 134 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் மார்க்ஸ் இன்றும் உலகில் மிகக் கணிசமான செல்வாக்கு பெற்ற சிந்தனையாளராக உள்ளார். முதலாளித்துவ சமூக-பொருளாதார அமைப்பு பற்றி அவர் முன்வைத்த கருத்துக்களும் ஆய்வுகளும் இன்றும் முக்கிய விவாதங்களுக்கு அடிநாதமாக திகழ்கின்றன. பொருளியல், வரலாற்றியல், தத்துவம், அரசியல் என்று அனைத்து முக்கிய சமூக அறிவியல் சார்ந்த துறைகளிலும் மார்க்ஸ் தனது ஆய்வுகள் மூலமும் படைப்புகள் மூலமும் மிக முக்கிய சிந்தனையாளராக இன்றுவரை திகழ்கிறார்.

மார்க்ஸ், தனது பேராசிரியராக இருந்த, அன்றைய ஐரோப்பிய அறிவு உலகில் கொடிகட்டிப் பறந்த ஜெர்மானிய தத்துவ பேரறிஞர் ஹெகெல் முன்வைத்த கருத்துமுதல்வாத தன்மையிலான இயக்கவியல் அணுகுமுறையை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் கருத்துமுதல்வாத தன்மையை நிராகரித்தார். பொருள்முதல்வாதத்தின் உண்மையை, அவசியத்தை நிலைநாட்டினார். அதே சமயம் ஹெகெல் முன்வைத்த இயக்கவியல் அணுகுமுறையை தலைகீழாக புரட்டிப்போட்டு, பொருள்முதல்வாத அடிப்படையில் இயக்கவியல் அணுகுமுறையை உருவாக்கினார். மெய்யியலில் மார்க்சின் மிக முக்கிய சாதனை என்று இதைக் கூறலாம். மார்க்ஸ் உருவாக்கிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற மெய்யியல் அணுகுமுறை மிகச்சரியானது என்று இன்றுவரை நிகழ்ந்துவரும் நவீன அறிவியல் வளர்ச்சி நமக்கு அறிவுறுத்துகிறது.

இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையை பயன்படுத்தி மானுட வரலாற்று வளர்ச்சியை ஆய்வு செய்து, மானுட உயிரினத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றிய அறிவியல் பூர்வ அணுகுமுறையான வரலாற்றியல் பொருள்முதல் வாதத்தை நிலைநாட்டினார். முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் தன்மையையும் செயல்பாட்டையும் நீண்ட, ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் இயக்க விதிகளை உலகிற்கு எடுத்துரைத்தார். முதலாளித்துவம் மானுட சமூகத்தின் உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதில் ஒரு முக்கிய வரலாற்றுப் பங்கு ஆற்றும் என்பதையும், அதே சமயம் தனது உள்முரண்பாடுகள் காரணமாக முதலாளித்துவம் மானுட சமூகத்தின் தொடர் வளர்ச்சிக்கு எதிரியாக அமையும் என்பதையும் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே முன்வைத்தார். முதலாளித்துவ அமைப்பை முடிவுக்குக் கொண்டுவந்து மானுடத்தை பொதுவுடைமை சமூகத்த்தை நோக்கிக் கொண்டு செல்லும் சக்தியாக நவீன தொழிலாளிவர்க்கம் ஆகப்பெரிய வரலாற்றுப்பணி ஆற்றும் என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் தனது மூலதனம் நூலிலும் அறிவுபூர்வமாகவும் கவித்துவமாகவும் மார்க்ஸ் விளக்கியுள்ளார்.

மார்க்ஸ்ஸின் மனித நேயம்

தனது பதின்பருவத்திலேயே – 17 வயதிலேயே – மானுடத்தின் மீதான தனது அக்கறையை, மானுடத்தை நேசிப்பவர் என்ற தனது தன்மையை, ஒரு இளைஞன் தனது தொழிலை தேர்வு செய்வது பற்றிய சிந்தனைகள்’ (Reflections of a young man on the choice of a Profession) என்ற அற்புதமான கட்டுரையில் மார்க்ஸ் வெளிப்படுத்தினார். அக்கட்டுரையின் இறுதியில் மறக்க முடியாத வரிகளில் அவர் கூறுகிறார்:

மானுடத்திற்காக நாம் சிறப்புற செயலாற்றிட பொருத்தமான ஒரு வாழ்க்கையை தேர்வு செய்தோமென்றால், எந்த சுமையும் நம்மை வீழ்த்தாது. ஏனெனில், அவை அனைத்தும் அனைத்து மக்களின் நலனுக்கான தியாகங்கள். இத்தகைய வாழ்க்கையில் குறுகிய சுயநலம் சார்ந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிப்பதற்குப் பதிலாக, நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் சொத்தாக அமையும். நமது நற்பணிகள் சத்தமின்றி, ஆனால் நிரந்தரமாக வேலைசெய்துகொண்டே இருக்கும். நமது மறைவிற்குப்பின் நம் சாம்பலின் மீது நன்மக்களின் கண்ணீர் சிந்தப்படும்.”

இவ்வரிகள் எழுதப்பட்டது 1835 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம்தேதிவாக்கில். அப்பொழுது மார்க்சின் வயது பதினேழு முடிந்து பதினெட்டு துவங்கிய சமயம்.

பின்னர், கூர்மையான அறிவியல் அணுகுமுறையில் உலகை ஆய்ந்து அவர் எழுதிய மூலதனம் நூலிலும் இந்த மனித நேயம் பிசகின்றித் தொடர்கிறது. தனது இளம் வயதிலேயே இவ்வாறு மனித நேயத்தை வெளிப்படுத்திய மார்க்ஸ் இதையொத்த கருத்தை 1867 இல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு மூலதனம் நூலை எழுதி முடித்து பிரசுரித்த தருவாயில் கூறுகிறார். சிக்ப்ரிட் மேயர் என்ற நண்பருக்கு 1867 ஏப்ரல் 30ஆம்தேதி மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் அவர் கூறுவதைப் பாருங்கள்:

நான் ஏன் உங்களுக்கு முன்பே கடிதம் எழுதவில்லை? ஏனெனில் ஒவ்வொரு தருணத்திலும் நான் மரணத்தின் விளிம்பில் இருந்தேன். எனவே என்னால் வேலை செய்ய முடிந்த ஒவ்வொரு நொடியையும் எனது (மூலதனம்) நூலை முடிப்பதற்கு பயன்படுத்த வேண்டியிருந்தது. எனது குடும்பம், எனது உடல்நலம், எனது மகிழ்ச்சி அனைத்தையும் மூலதனம் நூலை முடிக்க நான் அர்ப்பணித்தேன். இந்த விளக்கம் தங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.நடைமுறை’ சார் மனிதர்கள், அவர்களின் ‘மேன்மையான அறிவு’ இரண்டையும் கண்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது. நிச்சயமாக, ஒருவர் எருது போல் இருக்க விரும்பினால், அவர் மானுடத்தின் கஷ்டங்களை புறக்கணித்துவிட்டு தனது நலனை மட்டுமே கவனித்துக்கொள்ளலாம். ஆனால், (எனதுபார்வையில்) மூலதனம் நூலை கைப்பிரதி வடிவத்திலாவது முடிக்காமல் வெளியேறி இருந்தால் அதை நான் (செய்யவேண்டிய) நடைமுறைக்கு விரோதமானது என்றே கருதியிருப்பேன்.

மார்க்ஸ் ஏன் இன்றும் பேசப்படுகிறார்?

அறிவுத்தளத்தில், பல்கலைக்கழகங்களில், முதலாளித்துவ அறிவுஜீவிகள் பல வழிகளில் மார்க்ஸின் சமூக அறிவியல் சாதனைகளை, கண்டுபிடிப்புகளை ஏளனம் செய்யவும் புறக்கணிக்கவும் முயன்று வந்துள்ளனர். அந்த “திருப்பணி” இன்றும் தொடர்கிறது. பல்கலை பொருளாதாரப் பாடத்திட்டத்தில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் மார்க்ஸ் இடம் பெறுவதே இல்லை. அப்படி இடம் பெற்றால், பொருளாதார சிந்தனை வரலாறு என்ற பாடத்திட்டத்தில் ஒரு சிறிய குறிப்பிடத்தக்கவர் அல்லாத அறிஞராக சொல்லப்படுகிறார். இந்த நிலை 1991க்கு முன் நிலவியது என்றால், அதன் பின், அப்பொழுது சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு ஆளும் வர்க்க அறிவுஜீவிகளின் இறுமாப்பை மேலும் கூட்டியது. வரலாறு முடிந்துவிட்டது; சோசலிசத்தின் கதை முடிந்துவிட்டது; மானுட வரலாற்று வளர்ச்சியின் உச்ச கட்டம், இறுதிகட்டம் முதலாளித்துவம் தான் என்று அவர்கள் கொக்கரித்தனர். ஆனால் 2007ஆம் ஆண்டின் இறுதி கால்பகுதியில் தோன்றி இன்றுவரை தொடரும் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தீவிர மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை, முதலாளித்துவ உலகமயத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பு பேரலைகள் இவையெல்லாம் மார்க்சின் அவசியத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து, இன்னொரு சமயத்தில் மார்க்ஸ் கூறியதுபோல், முதலாளித்துவ அறிவுஜீவிகளின் மண்டைகளில் பேரொலியுடன் ஏறிக்கொண்டிருக்கிறது! போப்பாண்டவரில் துவங்கி நிதிமூலதன உலகின் உச்சத்தில் உலாவும் பெருந்தகைகளையும் மார்க்சை கவனிக்கவைத்துள்ளது. “முதலாளித்துவ உற்பத்தி அமைப்பில் நிகழும் மூலதனத் திரட்டலின் பொதுவிதி செல்வங்கள் ஒருபுறம் குவிவதும், பெரும் துயரங்கள் மறுபுறம் குவிவதும்தான்” என்று மார்க்ஸ் மூலதனம் நூலில் முன்வைத்த கருத்தை மறுக்க இயலாமல் பிக்கெட்டி உள்ளிட்ட அறிவுஜீவிகள் அதிகரித்துவரும் சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு பற்றி பேசிவருகின்றனர். உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் வளர்ந்தநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பாகிய OECD யும் இத்தகைய ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்காவிட்டால் பெரும் கலகம் வரும் என்று அறிக்கை விடும் காலம் இது. மார்க்ஸ்சும் மூலதனம் நூலும் சோசலிச தத்துவமும் இன்று முதலாளித்துவ அமைப்பை அச்சுறுத்தும் பூதமாக உருவாக்கி வருகின்றன! இச்சூழலில் மார்க்ஸின் முக்கிய சாதனைகளை நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

முதலாவதாக, மானுட சிந்தனை வளர்ச்சியில் தனது அடிப்படை பங்களிப்புகள் மூலம் புதிய தடத்தை மார்க்ஸ் பதித்தார். மனிதகுல வரலாற்று வளர்ச்சி மனித சமூகங்கள் தங்களை உற்பத்தி, மறு உற்பத்தி செய்த வழிகளை ஆய்வு செய்வதன் மூலம் அறிவியல் பூர்வமாக அறிந்துகொள்ளப்படலாம் என்பதை உலகுக்கு அவர் காட்டினார். இதன்மூலம் வரலாறு என்பது அரண்மனை சதிகள், ராஜாக்கள், அவர்களின் வம்சங்கள், அவர்களது வீர சாகசங்கள் என்ற புரிதலுக்கு சாவுமணி அடித்து வரலாறு ஒரு இயல் என்று தெளிவுபடுத்தினார். மானுட வரலாறு பற்றிய தனது ஆய்வில் மார்க்ஸ் மனிதர்களையும் அவர்களது உணர்வுபூர்வமான, நோக்கம் சார்ந்த உழைப்பையும் மையப்பொருளாக வைத்தார். மானுட உயிரினத்தின் பிரத்தியேகத்தன்மை தனது சிந்தனைபூர்வமான உற்பத்திசார் நடவடிக்கைகளால் இயற்கையை மாற்றி தனது தேவைகளை உற்பத்தி செய்துகொண்டதுதான் என்று அவர் நிரூபித்தார். இவ்வாறு செயல்பட்டு, மனிதர்கள் புதிய அறிவை தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருந்தனர். புதிய திறன்களை வளர்த்துக் கொண்டே இருந்தனர். இயற்கை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி மேலும் மேலும் அறிந்தனர். இந்த அறிவை பயன்படுத்தி சமூகத்தின் உற்பத்தி சக்தியை வளர்த்தனர். இத்தகைய ஓய்வற்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி எண்பதுதான் மானுட வரலாற்று வளர்ச்சியின் நிரந்தர அம்சம்.

மானுட வரலாற்று வளர்ச்சி தொடர்பாக மார்க்ஸ் வெளிக்கொணர்ந்த இரண்டாவது முக்கிய விஷயம் இதுதான்: உற்பத்தி எனும் நடவடிக்கையில் மனிதர்கள் இயற்கையோடு மட்டும் உறவுகொள்ளவில்லை. மனிதர்கள் பரஸ்பரம் ஒத்துழைப்பதும் அவசியமாகிறது. சமூகத்தில் உற்பத்தி தொடர்பான ஏற்பாடுகள், பல்வேறு மக்கட்பகுதியினர் அந்த ஏற்பாட்டில் ஆற்றும் பங்கு போன்றவற்றை மார்க்ஸ் உற்பத்தி உறவுகள் என்று குறிக்கிறார். மிக அதிக அளவு, உலகின் பல்வேறு நாடுகளையும் உள்ளடக்கி செயல்படும் முதலாளித்துவ அமைப்பிலும் சரி , முந்தைய அமைப்புகளிலும் சரி, மானுட சமூகங்கள் உற்பத்தியை சமூக நடவடிக்கையாகவே மேற்கொண்டிருக்கின்றன. நவீன முதலாளித்துவ உலகில் ‘தனி நபர்’ என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்தி, உற்பத்தியும் மனித வாழ்வும் எல்லாக் காலங்களிலும் சமூகம் சார்ந்தவையே என்ற உண்மை மறைக்கப்படுகிறது.

மூன்றாவதாக, மனித சமூகத்தின் உற்பத்தி சக்திகள் தொடர்ந்து தவிர்க்க முடியாமல் வளர்ந்துகொண்டே இருப்பதனால், இவை ஒரு கட்டத்தில் நிலவும் உற்பத்தி உறவுகள் என்ற கூட்டை/சட்டகத்தை உடைத்துக்கொண்டு, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்பதை மார்க்ஸ் விளக்கினார். இவ்வாறு வரலாற்றில் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமான உறவு குறிப்பிட்ட காலம் ஒற்றுமை மேலோங்கிய தன்மையிலும், பின்னர் முரண்பாடு முன்வரும் தன்மையிலும் அமையும் என்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். இதன் பொருள் மானுட வரலாற்று வளர்ச்சியில் உற்பத்தி அமைப்புகள் சாசுவதம் அல்ல; மாறாக அவை மாறிக்கொண்டே இருக்கும் என்பதும், உற்பத்தி சக்திகளின் இடையறா வளர்ச்சியின் காரணமாக புதிய உற்பத்தி அமைப்புகள் உருவாகும் என்பதும் ஆகும்.

நான்காவதாக மார்க்ஸ் சுட்டிக்காட்டியது, உற்பத்தி சக்திகள் வளர்ச்சி அடைவதனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மானுட சமூகம் தன் வழக்கமான மறுஉற்பத்தியை உறுதி செய்துகொள்வது மட்டுமல்லாமல் உபரி உற்பத்தியும் சாத்தியம் ஆகும் என்பதாகும். உபரி உற்பத்தி ஏற்படும் நிலைக்கு ஒரு சமூகம் வளர்ந்து விட்டால், அந்த சமூகத்தில் உழைக்கும் தகுதியுள்ள அனைவரும் உழைக்க வேண்டியதில்லை. உற்பத்தி அமைப்பை கைப்பற்ற முடிந்தால், பிறரை உழைக்க வைத்து அவர்களால் உருவாக்கப்படும் உபரி உற்பத்தியில் ஒருசாரார் உழைக்காமல் உயிர் வாழலாம் என்ற வாய்ப்பு ஏற்படுகிறது. வேறுவகையில் சொன்னால், உபரி உருவாகும் நிலையில் ஒரு சமூகம் இரண்டு அடிப்படை வர்க்கங்களாக பிரிந்து நிற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் உழைப்பது; அவர்களால் ஏற்படும் உபரி உற்பத்தியில் ஒரு சிறிய பகுதியினர் சௌகர்யமாக வாழ்வது என்பது சாத்தியமாகிறது. இத்தகைய வர்க்க சமூகம் இயல்பாக ஏற்பட்டு விடாது. உற்பத்தியின் மீதான ஆதிக்கம் ஒரு சிலர் கையில் வரும்பொழுது அவர்கள் பிறரை தங்களுக்காக உழைக்க வைக்க முடியும். உற்பத்திக் கருவிகள் ஒருபகுதியினரின் தனி சொத்தாக மாற்றப்பட்டு, பெரும்பகுதி மக்கள் இவற்றை இழந்து நிற்பதால் உடமையாளர்களிடம் அண்டி உழைத்துப் பிழைக்கும் நிலை ஏற்படுவது வர்க்க சமூகத்திற்கு அவசியம். இத்தகைய ஏற்றத்தாழ்வான சமூக ஏற்பாட்டை அமலாக்குவதற்கு வன்முறையும் தேவை. உழைக்க நிர்பந்திக்கப்படும் மக்கள் இந்த சமூக ஏற்பாட்டை நியாயம் என்றோ ஆண்டவன் செயல் என்றோ இன்ன பிற வாதங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வைப்பதும் அவசியம். வன்முறை மட்டுமே போதாது. உடைமையாளர்களையும் அவர்களின் சொத்தையும் நலனையும் பாதுகாக்கும் வன்முறை அமைப்பாக தான் ‘அரசு’ என்ற அமைப்பு வரலாற்றில் உருவகிறது. உழைப்பாளி மக்கள் இந்த ஏற்பாட்டை ஏற்க மதம், பண்பாடு, இலக்கியம் என்று பலதளங்களில் தத்துவ ஆயுதங்களும் நிறுவன ஆயுதங்களும் பயன்படுகின்றன.

வர்க்கப்போராட்டம்

மார்க்ஸ் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது; அதன்வழி உபரியும் ஏற்படும் வர்க்க சமூகங்களும் என்று விளக்கியதுடன் நின்றுவிடவில்லை. மானுட வரலாற்றில் உருவாகும் வர்க்க சமூகங்கள் இயற்கையின் படைப்பும் அல்ல; நிரந்தரமும் அல்ல என்பதை மார்க்ஸ் நிரூபித்தது அவருடைய ஆகப்பெரிய சாதனையாகும். ஒவ்வொரு வர்க்க சமூகமும் தன் வளர்ச்சியையும் அழிவையும் தன்னகத்தில் தாங்கியே வருகிறது என்பதை அவர் காட்டினார். இவ்வாறாக மானுடம் படிப்படியாக முன்னேறுவதற்கு வர்க்கப் போராட்டமே கருவியாக உள்ளது என்பதையும் மார்க்ஸ் விளக்கினார். மார்க்ஸின் தனிப்பட்ட பங்களிப்பு என்பது ஒவ்வொரு கட்டத்திலும் நிலவும் வர்க்க சமூகத்தை தூக்கி எறிந்து அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சமூகம் பயணிக்க முக்கிய சக்தியாக எந்த வர்க்கம் செயல்படும் என்பதை விளக்கியதாகும். இவ்வாறு மார்க்ஸ்–எங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து முதலாளித்துவ சமூகத்திற்கு மானுடம் பயணிக்கையில் முதலாளிவர்க்கம் வகிக்கும் புரட்சிகரப்பங்கை மறக்க முடியாத வரிகளில் சித்தரிக்கிறது. இன்னும் முக்கியமாக, பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வளரத்துவங்கி அடுத்த இருநூறு ஆண்டுகளில் உலகம் முழுவதும் முதலாளித்துவம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது அதன் நிரந்தரத் தன்மைக்கு சான்று அல்ல என்று மார்க்ஸ் அடித்துக் கூறினார். முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் தொழிலாளிவர்க்கம் அமைப்பு ரீதியான திரண்ட சக்தியாக உருவெடுக்கும் என்றும், இந்த வர்க்கம்தான் முதலாளித்துவ அமைப்பை வீழ்த்தி மானுடத்தை அடுத்த உயர்நிலை வளர்ச்சிக்கு – முதலில் சோசலிச சமூகத்திற்கும், பின்னர் அனைத்து வளங்களையும் அனைவருக்கும் சாத்தியமாக்கும் கம்யூனிச சமூகத்திற்கும் இட்டுச்செல்லும் திறன் கொண்ட வர்க்கம் என்பதை மார்க்ஸ் சிறப்பாக விளக்கினார்.

மார்க்ஸின் சமகால பொருத்தப்பாடு

சமகால முதலாளித்துவத்தின் தொடரும் நெருக்கடி மார்க்ஸின் சமகால பொருத்தப்பாட்டை காட்டுகிறது. முதலாளித்துவ வளர்ச்சி விதிகள் தொடர்பாக பல முக்கிய விஷயங்களை மார்க்ஸ் கூறியுள்ளார். முதலாளித்துவ வளர்ச்சி பெரும் அளவிலான உற்பத்திசாலைகளை உருவாக்கி மூலதனத்தை குவிக்கும். போட்டியில் பல முதலாளிகள் அழிந்து, மூலதனம் சிலர் கைகளில் மையப்படுத்தப்படும். ஏகபோகம் உருவாகும். முதலாளிகளுக்கிடையில் போட்டி, முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளிவர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக இயந்திர மயமாக்கல் வேகமாக நிகழும். இதனால் எல்லாக் காலங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் வேலையில்லா பட்டாளம் ஏற்படும். முதலாளித்துவ மூலதன சேர்க்கை செல்வங்களை ஒருசில ஏகபோக முதலாளிகளிடம் குவிக்கும். மறுமுனையில், உழைப்பாளி மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொள்வார்கள். இந்த முதலாளித்துவ மூலதன சேர்க்கையின் பொதுவிதி மீண்டும் மீண்டும் பொருளாதார மந்த நிலையையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்று மார்க்ஸ் மூலதனம் நூலில் விவரித்தார். கடந்த இருநூறு ஆண்டுகளின் வரலாறு மார்க்ஸ் கூறியதன் உண்மையை நிரூபித்துள்ளது. இன்றைய உலகில் இதை நாம் கடந்த பத்து ஆண்டுகளாக கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.2007 ஆண்டின் இறுதி பகுதியில் துவங்கிய மந்தநிலை ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக தொடர்கிறது.

மீண்டும் மீண்டும் சமகால முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்குவது மட்டுமே மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்களின் – அவரது முதலாளித்துவம் பற்றிய ஆய்வுகளின் – வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் – சமகால பொருத்தப்பாட்டிற்கு சான்றாக அமைகின்றன. ஆனால் இவை தவிர வேறு பல விஷயங்களிலும் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் நமக்கு சுற்றுச்சூழல் உள்ளிட்ட சமகாலப் பிரச்சினைகளில் வெளிச்சம் தருகின்றன. மூலதனம் நூலின் முதல் பாகத்தில் லாபவெறி அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவம் வேளாண்மையில் “சாதிக்கும்” முன்னேற்றம் உழைப்பாளியையும் அவரது மனவளத்தையும் சீர்குலைக்கின்றது என்பதை சுட்டிக் காட்டுகிறார். இன்று நாம் ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் தாக்குதலை எதிர்கொண்டுள்ளோம். ஏகாதிபத்தியம் வளரும் நாடுகளை மீண்டும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சித்துவருகிறது. சுற்றுச்சூழலுக்கும் நாம் வாழும் உலகிற்கும் பெரும் நாசத்தை – சீர்செய்ய இயலாத அளவிலான நாசத்தை – ஏற்படுத்திவருகிறது. இத்தகைய பின்னணியில், மார்க்சின் ஆய்வுகளும் கூற்றுகளும் நமக்கு வெளிச்சமும் உற்சாகமும் தருகின்றன. பண்பாடு தொடர்பாக, முதலாளித்துவ வாழ்க்கையில் ஏற்படும் அந்நியமாதல் தொடர்பாக, பாலின சமத்துவம் தொடர்பாக, காலனிய ஆதிக்கத்தின் கொடுமைகள் பற்றி, அவை இன்றைய மேலை நாடுகளின் வளர்ச்சியில் ஆற்றிய பங்குபற்றி என – இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் – பல பிரச்சினைகளில் மார்க்ஸ் எழுதியுள்ள நூல்களும் கட்டுரைகளும் நமக்கு, நமது களப்பணிகளுக்கு உதவும். எனவேதான் மார்க்சியம் கற்போம்; மார்க்சிடம் கற்போம் என்ற முழக்கம் சாலப்பொருத்தமாக உள்ளது.

வரலாறு பற்றிய நீள்பார்வை தேவை

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகம் முழுவதும் ஏகாதிபத்திய நாடுகளின் பிடியில் இருந்தது. முதலாளித்துவம் சர்வ வல்லமை படைத்ததாக கருதப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் 1830இல் துவங்கி உழைப்பாளி மக்கள் பங்கேற்ற பல ஜனநாயகப் போராட்டங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் கண்டு துவளாமல், 1871 பாரிஸ் கம்யூன் புரட்சி நடந்தது. ஏறத்தாழ 90 நாட்கள் பாரிஸ் நகரில் தொழிலாளி வர்க்க ஆட்சி தாக்குப் பிடித்தது. ஆனால் இறுதியில் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் தாக்குதலுக்கு அது இரையானது. 1905 இல் வெடித்த முதல் ரஷ்யப் புரட்சி அடக்கப்பட்டது முதல் உலக யுத்தம் துவங்கும் வரை சோசலிசம் ஒரு தத்துவமாகவே இருந்தது. அது எங்கும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. அடுத்த நாற்பது ஆண்டுகளில் உலகம் வேகமாக மாறியது. 1950 களின் பிற்பகுதியில் உலகமக்களில் மூன்றில் ஒருபங்கு மக்கள் சோசலிசநாடுகளில் வாழும் மகத்தான முன்னேற்றம் நிகழ்ந்தது. அதன்பின் 1990 களின் துவக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவையும் அதன் பின்விளைவுகளையும் நாம் இன்று எதிர்கொள்கிறோம். நமக்கு வரலாறு தொடர்பாக நீள்பார்வை தேவை.

வரலாறும் வரலாற்று சகாப்தங்களும் பத்தாண்டுகளிலும் நூறு ஆண்டுகளிலும் கூட அளவிட முடியாதவை. முதலாளித்துவ உற்பத்தி அமைப்புக்கு, உலகம் முழுவதும் பரவவும் ஆதிக்கம் செலுத்தவும் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. இவ்வளவுக்கும் இந்த அமைப்பு – லாப வெறியை அடிப்படையாக கொண்ட அமைப்பு – இயல்பாகவே விரிவாகும், ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டது. இன்று அது நீண்ட நெருக்கடியில் சிக்கியுள்ளது. வர்க்க சுரண்டலற்ற, தன்னைத்தானே உணர்வு பூர்வமாக நிர்வகித்துக்கொள்ளும் ஒரு சமூகத்தை அமைப்பது என்ற பயணத்தில் சில ஆரம்ப முயற்சிகள் கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சில முதலாளித்துவ எதிரிகளால் வீழ்த்தப்பட்டதில் சோர்வு அடைய வேண்டியதில்லை. இது ஒரு நீண்ட பயணம். அதிலும், சோசலிச நிர்மாணத்திற்கான ஆரம்ப புரட்சிகள் மிகவும் பின்தங்கிய நாடுகளில் நிகழ்ந்துள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவை உலகம் தழுவிய ஏகாதிபத்தய எதிர்முகாமை சந்திக்கவேண்டியிருந்தது. சோசலிச நாடுகளை, மானுடத்தின் அற்புத பரிசோதனைகளை முளையிலேயே கிள்ளி எறிய எல்லா யுக்திகளையும் ஆயுதங்களையும் ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டது. எனினும் மானுட விடுதலைக்கான, ஒரு அறிவியல்பூர்வமான, சமத்துவ சமூகம் நோக்கிய, சுரண்டலற்ற சமூகத்தை நோக்கிய பயணம் தொடர்கிறது. இதுவரை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும் தைரியத்துடனும் சோசலிசத்தை நிர்மாணிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. கடந்த கால அனுபவத்தில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், இதர மாபெரும் சோசலிச புரட்சியாளர்கள் நமக்கு அளித்துள்ள தத்துவார்த்த வளங்களையும் நடைமுறை அனுபவங்களையும் பயன்படுத்தி பயணத்தை தொடர்வோம்.

நம் முன் உள்ள போராட்டம் நீண்ட நெடிய ஒன்றுதான். குறுக்குவழிகள் இல்லை. ஆனால் இப்பயணத்தின் இறுதிப்பரிசு அனைத்து மானுடத்தின் விடுதலை. இதைவிட பெரிய இலக்கு இருக்க முடியாது. மார்க்சின் மனித நேயத்தையும் அவர் நமக்கு தந்துள்ள அற்புதமான இயக்கவியல் வரலாற்றியல் பொருள்முதல் வாதத்தையும் நமது ஆயுதங்களாகக் கொண்டு முன்னேறுவோம். இதுதான் நாம் மார்க்ஸ் என்ற மாமனிதனுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.