வரலாறு
-
வரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம் !
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு என்பது வீரத்தாலும், தியாகத்தாலும் எழுதப்பட்ட ஒன்று. ஒன்றிய பாஜக அரசு மதவெறி நோக்கில் இந்திய அரசியல் வரலாற்றை திருத்தி எழுத முயலும் சூழலில் உண்மையான இந்திய வரலாற்றை மக்கள் முன் வைப்பது அவசியம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது. விடுதலை போராட்டக் காலத்தில் துவங்கி நவீன இந்தியாவை உருவாக்குவது வரை கம்யூனிஸ்டுகளின் பங்கு பாத்திரம் அளவற்றது. அந்த வகையில் இந்திய வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதி… Continue reading
-
விடுதலை75: நவீன இந்தியாவின் அடிப்படைகளைக் காப்போம் !
இந்தியா ஒரு நவீன தேசமாக உருவானது. நம்மைப் பொறுத்தவரை இந்திய தேசியமானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாம் நடத்திய போராட்டத்தின் விளை பொருளே ஆகும். ஆங்கிலேயர்கள் இங்கே வருவதற்கு முன் இந்தியா ஒரு தேசமாக இருக்கவில்லை. சாம்ராஜ்ஜியங்களாக, பேரரசுகளாக, சிறு-குறு நில மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளாகவே அது இருந்தது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில்தான் இது ஒரு தேசமாக உருவெடுத்தது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும். Continue reading
-
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்துப் போராட்டங்கள் : தோற்றமும், இயக்கத்தின் மீதான தாக்கமும்
1957 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் இரட்டிப்பானது, இரண்டாவது மிகப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்தது. கேரளாவில் பெரும்பான்மையை வென்றது. தேர்தலுக்கு பின், கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க்கி “வெகுஜன கட்சியாக” கட்டமைக்க மத்தியக்குழு அழைப்பு விடுத்தது. அமிர்தசரஸ் நகரில் கட்சியின் ஐந்தாவது “சிறப்பு” மாநாடு 1958 ஏப்ரல் 6 முதல் 13 வரை நடைபெற்றது. “திரிபுவாத, பிரிவினைவாத போக்கிற்கு எதிராக போராடி, இந்திய நிலையை கருத்தில் கொண்டு, மார்க்சிய – லெனினியத்தை பொருத்தி, திட்டங்களை வகுக்க”… Continue reading
-
கம்யூனிஸ்ட் இயக்கம்: நூறாண்டுகள் கடக்கும் போராட்ட வரலாறு!
ஜி. ராமகிருஷ்ணன் “இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்தக் கட்டுரை கடந்த 100 ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார தளங்களில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்களை, தமிழ்நாட்டை மையப்படுத்தி விவரிக்க முயல்கிறது. உலகைக் குலுக்கிய ரஷ்ய புரட்சி 1917 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அக்காலகட்டத்தில் கல்கத்தாவிலிருந்து வெளியாகி வந்த ஒரு நாளிதழ் “ஜார்ஆட்சியின் வீழ்ச்சி இந்தியாவிலும் அந்நிய… Continue reading
-
நூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன?
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் உள்ள சாத்தியங்களையும், வாய்ப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்திரமோ, கசப்புணர்வோ உதவாது. திறந்த மனதுடன் சாத்தியங்களை ஆய்வு செய்வதன் வழியாகவே கம்யூனிஸ்டுகள் முன்னேற முடியும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, இந்திய மக்கள் நலன்களை பாதுகாக்க மிக மிக அவசியமாகும். நாடு, அநாகரீக நிலைமைக்கு பின் தள்ளப்படாமல் தடுப்பதில், கம்யூனிஸ்டுகள் தங்கள் கடமையை வீரியமாக ஆற்றிட வேண்டும். Continue reading
-
லெனின் 150: லெனினும் இந்திய விடுதலை போராட்டமும்
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜனநாயக புரட்சியில் விவசாயிகளின் பங்கு பற்றி லெனின் முன்வைத்த புரிதல் மார்க்சீயத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல் எனலாம். Continue reading
-
சிங்காரவேலர்: சமூக நீதியும் பொதுவுடைமையும்
“இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்” என்று “குடி அரசு” இதழில் வெளியான தலையங்கத்திற்காக 1933 டிசம்பர் 30 அன்று பெரியார் கைது செய்யப்பட்டார். ஒன்பது மாதக் கால சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் பெரியார் விடுதலையாகும்வரை எந்த கூட்டமும் நடத்துவதில்லை என்று செயற்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் ஜீவா போன்ற இளம் சுயமரியாதைக்காரர்கள் வேகமாக வேலை செய்தனர். மே தின கொண்டாட்டத்தை நடத்துமாறு அறிக்கை விடப்பட்டது. Continue reading
-
லெனின் 150: புதியதொரு சகாப்தம்
ஒட்டுமொத்த உலகமும் அனைத்து முதலாளித்துவ அமைப்பும் ஏகாதிபத்தியத்தால் ஒரே குடையின்கீழ் வந்து விட்டது. அதன் பலவீனமான கண்ணியில் தாக்குதல் தொடுத்தால் அதை உடைத்தெறிய முடியும் என்றார் லெனின். ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளின் விளைவே முதலாம் உலகப் போர் என்றும் அதன் விளைவாக ஜாரின் ஆளுகையில் இருந்த ரஷ்யா அத்தகைய பலவீனமான கண்ணியாக உள்ளது என்பதையும் லெனின் தான் முதலில் சுட்டிக் காட்டினார். Continue reading
-
பெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்
அவர் பார்வையில் பிராமணரல்லாதார் என்பவர் கலாச்சார அடிப்படையில் பிராமணர்களால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள்; பொருளாதார, அறிவுசார் வளங்கள் பெற தடுக்கப்பட்டவர்கள் என்பதேயாகும். சுயமரியாதையுடன், கண்ணியத்துடன் கூடிய ஒரு மனிதனாக மீண்டெழ இவையே உதவும். பிராமணீயம் பிராமணரல்லாதார் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தத்துவார்த்த அடிப்படையில் சாதி அமைப்பை ஆதரிக்கவும், நிலை நிறுத்தவும் உதவுகிறது. Continue reading
-
மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*
இக்கட்டுரை முதலில் “அடிமைப்படுத்தலின் மூன்று முக்கியமான வடிவங்கள்” என்னும் விரிவான நூலுக்கு ஒரு முன்னுரையாகத் திட்டமிடப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை; ஆகையால் முடிவில் எங்கெல்ஸ், அவர் எழுதிய முன்னுரைக்கு “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்” என்னும் தலைப்பைக் கொடுத்தார். மனித உடலமைப்பின் உருவாக்கத்தில் உழைப்பு மற்றும் கருவிகளின் உற்பத்தி வகித்த ஜீவாதாரமான பாத்திரத்தை எங்கெல்ஸ் ஆராய்கிறார்; நீண்ட வரலாற்றுப் போக்கின் விளைவாகக் குரங்கு குண ரீதியில் புதிய பிறவியாக, மனிதனாக எப்படி… Continue reading