23வது கட்சி காங்கிரஸ்: முடிவுகளும் – அறைகூவல்களும்!

மார்க்சிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது, இந்துத்துவா சக்திகளை தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்கான அடிப்படைத்தேவையாகும். அரசியல், கருத்தியல், பண்பாடு மற்றும் சமூக தளங்களில், நிலையான போராட்டத்தை நடத்திட வேண்டும். அதற்கான உறுதியான வழிமுறைகளை அரசியல் தீர்மானம் விவரிக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (1)

  (முற்போக்காளர்களும்,பொதுவான வாசகர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை ஆழமாக அறிந்து கொள்வதற்கு ஏற்றவாறு பல கோணங்களில் விளக்குவதற்காக இந்தத் தொடர் துவங்கப்படுகிறது. -ஆசிரியர் குழு ) ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு “திட்டம்” என்று அழைக்கப்படும்  ஆவணம் மிக அவசியமானது.திட்டம் இல்லாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இயங்க முடியாது.(இந்தியாவில் துவக்க காலங்களில் திட்டம் இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கியது உண்மையே.ஆனால் அந்த சூழல் வித்தியாசமானது.) கம்யூனிஸ்ட் கட்சி தான் அடைய வேண்டிய தொலைநோக்கு இலக்கு குறித்து தனது …

Continue reading கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (1)

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம் … 2

இடது ஜனநாயக அணியைக் கட்டிட வேண்டும் என்று தீர்மானம் விரிவாகக் கூறுகிறது. இது தேர்தலுக்கான அணி அல்ல. வர்க்க பலாபலனில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வர்க்க அணி. இந்தக் கட்சி சரியில்லை, அந்தக் கட்சி பரவாயில்லை என்பதல்ல பிரச்னை. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் திட்டம் என்ன, அதற்கு மாற்றாக இடது ஜனநாயக அணி வைக்கும் திட்டம் என்ன என்பது தான் முக்கியம்.