இலங்கை: நெருக்கடியும், படிப்பினைகளும் !

உலகமய, தாராளமய கொள்கைகளை கடைப்பிடித்த பல மூன்றாம் உலக நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. மக்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதால், உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடும் காலமாக இந்த காலம் இருந்து வருகிறது.

இலங்கைப் பிரச்சனை – ஒரு பார்வை

இலங்கையில் எல்டிடிஈ-யினருக்கும், இலங்கை ராணுவத்திற்கும் ஆயுத மோதல் துவங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இரண்டு பக்கமும் பல்லாயிரம் உயிர்கள் பலிவாங்கப்பட்டு விட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு பொருள் சேதம் நடந்துவிட்டது. இத்துடன் கடந்த சில ஆண்டுகளாக நார்வே தலைமையிலான சர்வ தேசக் குழுவின் முன்னிலையில் பேச்சு வார்த்தைகளும் நடந்துவிட்டது. எனினும் தீர்வு காணப்பட வில்லையே ஏன் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

இலங்கைப் பிரச்சனையும் இன்றைய உலக அரசியலும் ..

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துயரம், பாலஸ்தீனமா, இலங்கையா, காங்கோ, சூடான், உகாண்டா போன்ற ஆப்பிரிக்கக் கண்ட நாடுகளா? என்று கேட்டால், யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பண்பாட்டு பார்வை கொண்டவன் பதில் சொல்லத் திணறுவான்.