பேரிடரான காலகட்டம்

கடந்தகால, பாசிசத்திற்கும்,இன்றைய பாசிசத்திற்கும் என்ன வேறுபாடு? உலகில் பாசிச அச்சுறுத்தலை இன்று எவ்வாறு எதிர்கொள்வது? இதற்கான அழுத்தமான தத்துவ விளக்கங்களுடன் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இக்கட்டுரையை வடிவமைத்துள்ளார்.

  • அன்று ஏகாதிபத்தியங்களுக்குள் மூலதனத்தை திரட்டிட போட்டி மூண்டது.உலகை பங்கு போட்டுக் கொள்ளும் உக்கிரம் மேலோங்கியது.
  • மறுபுறம்,உலக மக்களிடையே வறுமை வேலையின்மை தாண்டவமாடியது.
  • இந்த நிலையில் பாசிசம் வேற்று இனத்தவரை எதிரியாக வகைப்படுத்தி கொலை வெறி கொண்டு வேட்டையாடியது.இந்த “வேற்று”இனத்தார் என்ற சித்தாந்தம், பாசிசம் அரசுகளை கைப்பற்றி அதிகாரத்திற்கு வரவும் உதவியது.
  • ஏகாதிபத்தியங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரம் பெற்று இரண்டாம் உலகப் போர் எனும் பேரழிவு ஏற்பட்டது.
  • போரின் அழிவையும் கொடூரத்தையும் சந்தித்த மக்கள் இதுகாறும் பாசிசத்தை ஒதுக்கியே வந்தனர்.
  • முதலாளித்துவமும் மக்களின்  ‘நலன் காக்கும்’அரசு என்ற வேடம் பூண்டது.சோவியத் தாக்கத்தினால் சில நன்மைகளையும் செய்தனர். கீன்ஸ் கொள்கை அடிப்படையிலும் இவை தொடர்ந்தன.
  • இதனால் பாசிசம் சிறிது அடங்கி இருந்தது.
  • ஆனால் நவீன தாராளமயம் நிலைமையை மாற்றியது.அரசு மக்கள் நலன் காக்கும் என்ற நிலையிலிருந்து விலகியது; முற்றாக, கார்ப்பரேட் மூலதன நலன் காக்கும் அரசுகளாக  மாறின.
  • முன்பு போன்று ஏகாதிபத்தியங்களுக்குள்  முரண்பாடு என்றில்லாமல்,அவர்கள்  கைகோர்த்து நடைபோடும் புதிய சூழல் உருவானது.நிதி மூலதனம் ஆதிக்கம் பெற்றுள்ளதால்,அது உலகை  கூறு போடாமல் வலுப்பெற்று வருவதால்,அந்த முரண்பாடு மட்டுப்பட்டுள்ளது.
  • நிதி மூலதனத்திற்கு  உலகை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் உதவிடாது.அந்த நோக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு,கூட்டாக சுரண்ட வேண்டும் என்பது மேலோங்கியுள்ளது.
  • அதே போன்று அரசு விலகி தனியார் ஆதிக்கம் செலுத்தும் சூழல்(நவீன தாராளமயம்) அதற்கு ஏற்புடையது.
  • இக்கொள்கைகளால்,பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றது.அதிலிருந்து மீள முடியாமல் முட்டுச்சந்தில் சிக்கி கொண்டு தப்பிச் செல்ல வழியேதும் இல்லாமல் உலக முதலாளித்துவம் உள்ள நிலை.
  • மறுபுறம், மீண்டும் “வேற்று” சித்தாந்தம் விஸ்வரூபமெடுக்கிறது.வேற்று இனத்தினர்; வேற்று மதத்தினர்  என ஏராளமான “வேற்று”க்களுடன் பாசிசம் தலை தூக்கி வருகிறது.
  • முன்பு போன்று ஆட்சிக்கு பாசிசம் வரக் கூடும்;அல்லது ஆட்சிக்கு வராமல் இருக்கலாம்.ஆனால் சமுக தளம், அரசியல் தளத்தை பாசிச சித்தாந்தம் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரும்.
  • முந்தைய பாசிசம் உலகப் போரில் முடிந்தது.இன்றைய பாசிசம் மனித இனத்தை அழிப்பதில் முடியும்.

எவ்வாறு பாசத்தை முறியடிப்பது.?

  • முதலில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பாசிச சக்திகள் வளர்ச்சி பெற்று வருவதற்கு உறுதுணையாக இருப்பது நவீன தாராளமயம் என்பதனை உணர்ந்து கொள்வது அவசியம்.
  • முதலாளித்துவ முறையை குறை காண்பதற்கு பதிலாக “வேற்று” கூட்டத்தினை எதிரிகளாக முன்வைத்து செய்யப்படும் மக்கள் திரட்டலை மக்கள்  அடையாளம் கண்டிட வேண்டும்.
  • இதனை இடதுசாரிகளே செய்திட இயலும்.

இதற்கு

  • பாசிச எதேச்சதிகாரத்தை ஜீரணிக்க முடியாத,
  • தற்போதைய ஜனநாயகம் நீடிக்க வேண்டுமென நினைக்கின்ற,
  • “வேற்றுமை”பாராட்டாமல் ஒற்றுமை நிலைப்பெற விரும்பும் சக்திகள்
  • அதாவது “லிபரல்” சக்திகள்
  • (இந்தியாவில் மதச்சார்பின்மை நெறி விரும்பும்  சக்திகள் உள்ளிட்டோர்)

திரட்ட வேண்டும்.

  • இந்த சக்திகளை இடதுசாரிகள் வென்றடைய வேண்டும்.தனக்கென்று (நவீன தாராளமயக் கொள்கைக்கு  நேர் எதிரான) இடது மாற்று பொருளாதார திட்டத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு லிபரல் வெகுமக்கள் இடதுசாரியினர் சக்திகளை திரட்ட வேண்டும்.இதற்கு அவர்களோடு நெருக்கம் கொள்ள வேண்டும்.

இந்த முடிவுகள் இன்றைய நிலை பற்றிய ஆழமான ஆய்வு அடிப்படையில், பிரபாத் பட்நாயக் வந்தடையும் முடிவுகள்.

(இந்த முன்னுரையை படித்த பிறகு பொறுமையுடன் அவரது கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்)

– என்.குணசேகரன்


ஆங்கிலத்தில் : >>>>>

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் கடந்த அரைநூற்றாண்டாக,  எல்லாவிடத்திலும் ஒரு முனைப்பான அரசியல் சக்தியாக பாசிசம் உருவகாமல் நின்றுவிட்டது. பல எதேச்சதிகார, கொலைபாதகமும் கொண்ட அரசாங்கங்கள், ராணுவ சர்வாதிகாரங்கள் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அமைந்திருந்திருக்கின்றன, அவை பெரும்பாலும் சி.ஐ.ஏ உதவியுடன் முற்போக்கு தேசியவாத அரசுகளுக்கு எதிராக வென்று அமையப்பெற்றன என்பதும், அவை அமெரிக்காவின் உத்தி ரீதியிலான ஒத்துழைப்பைப் பெற்றுவந்ததும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று. ஆனால், பாசிச அரசாட்சியிலிருந்து அவற்றை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பாசிச அரசாட்சியென்பது மிகப் பரிதாபகரமான நிலையில் உள்ள சிறுபான்மைக்கு எதிராக வெறுப்பை பரப்புவதன் மூலம் அரசியல் நோக்கம் கொண்ட வெகுமக்கள் திரட்டலைச் சார்ந்தது. சோசலிசத்திற்கும் தாராளவாதத்திற்கும் இடையிலான போட்டிதான் முக்கியமானது என, எனது தலைமுறையினரும், அடுத்தடுத்த பல தலைமுறையினரும் நம்பிவந்தோம்.

அடங்கிப்போயுள்ளதாக பாசிசம் காட்சியளிப்பதற்கு இரண்டு மையமான காரணிகளைக் காண்கிறேன். அதில் முதலாவது, மானுட வரலாற்றில் மனித குலத்தைச் சூறையாடும் வகையில், பாசிசம் திணித்த போர்களின் வழியே கட்டமைத்து எழுப்பிய கடும் வெறுப்பு; பாசிசம் என்ற சொல் பெரும் போர்களை திணிக்கும் உச்சகட்ட பகைமை என்பதற்கு நிகரான சொல்லாக மக்களின் மனங்களில் இடம்பெற்றது. இரண்டாவது உலகப்  போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில், பாசிச வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பெரும் எண்ணிக்கையிலான வேலையிழப்பு மற்றும் கொடிய வறுமை ஆகியவை கடந்துபோன வரலாறாகிவிட்டது;  சமூக ஜனநாயகம் என்ற பாதுகாப்புக் கவசத்தின் கீழ் முன்னேறிய நாடுகளில் கினீசின் ‘கிராக்கி மேலாண்மை’ அறிமுகப்படுத்தப்பட்டது: அது ‘முதலாளித்துவத்தின் பொற்காலம்’ என அழைக்கப்பட்டது, காலனியத்திற்கு பிறகான காலத்தில் மூன்றாம் உலக நாடுகளில் கொண்டுவரப்பட்ட சமூக, பொருளாதார துறைகளில் அரசுக்கட்டுப்பாடுக் கொள்கைகள், காலனியச் சுரண்டலின் கொடூரங்களுக்கு ஆளாகியிருந்த பெரும்பகுதி மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், மேம்பட்ட வாழ்க்கையையும் கொடுத்தன.

கடைசியாகக் குறிப்பிட்ட உண்மையை இப்போது ஏற்றுக்கொள்ள சிரமமாய் இருக்கலாம். ஆனால் இந்தியாவே அந்தக் கருத்தை உணர்த்தும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில், 1900 ஆண்டுகளில் குடிமக்களின் ஆண்டு உணவுதானிய உட்கொள்ளல் 200 கிலோ கிராம்களாக இருந்தது, 1945-46 ஆண்டுகளில் 136.8 கிலோ கிராம்களாக குறைந்தது, 1980களின் இறுதியில் அது 180 கிலோ கிராம்களாக உயர்ந்தது. (புதிய தாராளவாத ‘சீர்திருத்தங்களுக்கு’ பின் அது ஏறத்தாழ 165 ஆக குறைந்துவிட்டது). இந்தியாவின் வருமான வரி விபரங்களைக் கொண்டு, பிக்கட்டி மற்றும் சான்செல் ஆகியோர் செய்த கணக்கீட்டில், மக்கள் தொகையின் முதல் 1 விழுக்காடு பேர், 1930களில் வருமானத்தில் 21 விழுக்காட்டை பெற்றுவந்தனர். அது 1980களில் 6 விழுக்காடு என்பதாகக் குறைந்தது (2014 ஆம் ஆண்டுகளில் அது 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது)

முன்னேறிய மற்றும் வளர்ச்சிக் குறைந்த நாடுகளில் பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பின் மீது அரசுக்கட்டுப்பாட்டுக்கு முடிவுகட்டிய நவதாராளமயத்தின் வெற்றிக்குப் பிறகும் கூட, அமெரிக்காவின் நிகழ்ந்த டாட்காம் குமிழி (1997 – 2001 ஆண்டுகளில் இணையப் பயன்பாட்டின் மூலம் ஊகமாக ஏற்பட்ட பொருளாதாரப் பெருக்கம்)  மற்றும் வீட்டு வசதிக் குமிழி (housing bubble ) ஆகியவை உலகப் பொருளாதார நடவடிக்கைகளை சற்று மேல் நிலையிலேயே வைத்திருந்தன. எனினும் வீட்டு வசதிக் குமிழி உடைந்த நிலையில், உலகப் பொருளாதாரம் ஒரு நெடிய நெருக்கடிக் காலத்திற்குள் நுழைந்தது. தற்போதுள்ளதைப் போல இடையிடையே மீட்சி குறித்த பேச்சுகள் எழும்; ஆனால் யாரோ சொன்னதைப் போல, பந்து தரையில் குதித்துக் கொண்டிருப்பதோடு (analogy of a ball bumping along the floor )  ஒப்பிடும் வாதங்கள், பந்து தரையை நோக்கி வீழும்போது அதனோடு சேர்ந்தே நொறுங்கிவிடுகின்றன. இப்போதைய மீட்சியும் கூட தற்போது அமெரிக்க சந்தையின் வாங்கும் தன்மையில், அமெரிக்க மக்களின் செலவுத்திறைக் காட்டிலும் கூடுதலான அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது, எனவே அது அதிககாலம் நீடித்திருக்கக் கூடிய ஒன்றல்ல.

போர்களுக்கு இடையிலான காலகட்டத்தைப் போலவே இப்போதும், முதலாளித்துவ உலகத்தின் நெருக்கடி, உலகமெங்கும் பாசிச வளர்ச்சிக்கான புதிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. ஒருவர் இப்பிரச்சனை அத்தனை எளிதாகப் பார்க்கக் கூடாது; எடுத்துக்காடாக, ஜெர்மனியிலேயே ஏற்பட்டுள்ள  நெருக்கடி பல நாடுகளை பல நாடுகளை விடவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது, ஜெர்மனியில் வளரும் பாசிசத்தை உலக முதலாளித்துவ நெருக்கடி, அதனால் ஜெர்மனியில் உருவாகும் விளைவுகளோடு சேர்த்து விளக்கிப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு அமைப்பு இயங்கும் முறை மீது குற்றம் சாட்டாமல், ”மற்றவர்களை” (சிறுபான்மையினரை) குற்றம்சாட்டுவதன் அடிப்படையில் அரசியல் நோக்கத்துடன் வெகுமக்களைத் திரட்டுதல், இந்தியா உள்ளிட்டு பல நாடுகளில் பரவலாக வளர்ச்சி பெற்றிருப்பது தெளிவானது.

இதன் பொருள் பாசிச அரசு பல இடங்களில் அரசதிகாரத்திற்கு வந்தே தீரும் என்பதோ, அல்லது அவர்கள் அதிகாரத்திற்கு வரும் இடங்களில், பாசிச அரசை ஏற்படுத்தி, அதன் ஆட்சியை நிலைநாட்டுவதில் உறுதியாக வெற்றியடையும் என்பதாகவோ பொருள்கொள்ள வேண்டியதில்லை. ‘பாசிசத்தின் கீழ், அடுத்த அரசாங்கம் ஒன்று இருப்பதில்லை’ என்ற புகழ்பெற்ற மைக்கேல் கலெக்கியின் மேற்கோள், அவர் குறிப்பிட்ட அக்காலகட்டத்தில் இருந்ததைப் போலவே இன்றைய காலங்களிலும் உண்மையல்லாது போகலாம். ஆனால், தற்கால பாசிசம் இன்னும் சில காலத்திற்கு நீடித்திருக்கப் போகிறது என்பது நிச்சயமான உண்மை.

மேற்குறிப்பிட்ட வகையில் உலகப் போருக்கு பிறகான காலகட்டத்தில் பாசிசத்தை ஓரங்கட்டிய இரண்டு நிலைமைகளும் இப்போது இல்லை. தற்கால பாசிசம், போர்களின் மூலம் (மனிதகுலத்திற்கு அளவற்ற அழிவுகளை ஏற்படுத்துகிற அதே நேரத்தில்) தன்னைத்தானே அழித்துக்கொள்வதாக இல்லை. பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான போட்டி, அல்லது லெனின் பெயரிட்டு அழைத்த ‘ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான குரூரமான போட்டா போட்டி’ மட்டுப்பட்டிருப்பது வெளிப்படை, மேலும் அது அப்படியேதான் மட்டுப்பட்ட நிலையிலேயே தொடரும் என்றும் தெரிகிறது, இதற்கு முக்கியக் காரணம் நிதிமூலதனம் ஆகும். லெனின் காலத்தைப் போல அல்லாமல் அது இப்போது சர்வதேசம் தழுவியது, தனது எல்லைதாண்டிய கட்டற்ற சுற்றோட்டத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்திடும் என்கிற காரணத்தால் உலகை எந்த வகையிலும் தனித்தனி செல்வாக்கு மண்டலங்களாக பிரிப்பதற்கு அது எதிராக நிற்கிறது. டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக போர்முரசு கொட்டிவரும் போதிலும், உடனடியாக எந்தப் போரும் நிகழப்போவதாக இல்லை; இருப்பினும் சில கட்டுக்குள் உள்ள முரண்பாடுகள் வெடித்தாலும் கூட  இதனால் நேரடியாக பங்குபெறாத  பிற நாடுகளில் உள்ள பாசிச சக்திகள் செல்வாக்கு இழந்துவிடாது.

அதைப் போலவே, முதலாளித்துவத்தின் பொற்காலத்திற்கு திரும்புவது மட்டுமல்ல, நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்திற்கு செல்வது சாத்தியமில்லை என்பது கேள்விக்கிடமற்றதாகிவிட்டது; தாராளவாதிகளிடம் தற்போதைய நெருக்கடி நிலைக்கு நம்பத்தகுந்த தீர்வுகள் ஏதும் இல்லை. பெரும்பாலான தாராளவாதிகள், நெருக்கடி உள்ளது என்று அங்கீகரிப்பதில் கூட பாராமுகமாக உள்ளனர். தேர்தல் கால பரப்புரையில் டிரம்ப் நெருக்கடியைக் குறித்து பேசவேனும் செய்தார் என்பதுடன் அதற்கு ‘வெளியாட்களை’ குற்றம் சொல்லியதுடன், பகைமையைத் தூண்டவும் செய்தார், ஹிலாரி கிளிண்டன் அதுகுறித்து பேசவில்லை என்பதுடன், நெருக்கடி இருப்பதையே அவர் அங்கீகரிக்கவில்லை.

அரசு செலவினங்களின் வழியே கிராக்கியை ஊக்கப்படுத்துவது, அது ராணுவத் தேவைக்கான செலவாக இருந்தாலும் கூட, அது நிதிப்பற்றாக்குறையின் வழியாகவோ அல்லது முதலாளிகளின் மீது வரிபோடுவதன் மூலமாகவோ தான் கைகூடும் ( தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஏதாவதொரு வகையில் நுகர்வுக்காக செலவிடும் தொழிலாளிகள் மீது வரிபோடுவது , கிராக்கியை அதிகரிக்காது) அரசு செலவினங்களை உயர்த்துவதற்கான மேற்சொன்ன இரண்டு நிதி ஏற்பாடுகளும் நவதாரளமயக் கட்டமைப்பில் விலக்கப்பட்டவை, இந்த நடவடிக்கைகள் உலகமய நிதி வெறுப்புக்கு உள்ளான நடவடிக்கைகளாகும். அத்துடன் பாசிஸ்டுகள் மட்டுமல்லாது தாராளவாதிகளுக்கும் உலகமய நிதிமூலதனத்தின் மேலுள்ள அக்கறை எவ்விதத்திலும் குறைவானதல்ல. உண்மையில் அவர்கள் பாசிஸ்டுகளை விடவும், உலகமய நிதி மூலதனத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நவ தாராளமயத்திற்கு உறுதியாக இருப்பவர்கள். (இருப்பினும், பாசிஸ்டுகளை விட தாராளவாதிகள் நவீன தாராளமயத்தில் உறுதியாக இருப்பார்கள் என்பது இந்தியச் சூழலில் உண்மையானதல்ல, அதிகாரத்திலிருக்கும் வகுப்புவாத பாசிஸ்டுகள், ‘தாராளவாத’ காங்கிரசைப் போலவே நவ தாராளமயத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாக உள்ளனர்)

இப்படிப்பட்ட சூழலில் நாம், நவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது ‘தேர்தல் விளையாட்டுகளை’ விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக ‘பாசிசமயத்தை’ நோக்கி சீராக முன்னேறும்.

நவதாராள முதலாளித்துவத்திற்குள், பாசிசஇருப்புக்கு அணைபோடவோ ஓரங்கட்டவோ முடியாது. உலகப் பொருளாதாரத்தை நெருக்கடியில் மூழ்கடித்து, முட்டுச் சந்தில் தப்பிக்க இயலாமல் மாட்டிக் கொண்டிருக்கும் நவதாராளமயத்தின் தற்போதைய முதிர்ச்சிக் கட்டம் மனித குலத்திற்கு வழங்கியுள்ள ‘பரிசு’ பாசிசமாகும்.

பாசிசத்தின் இருப்பை தாண்டிச் செல்வதற்கான (transcending ) ஒரே வழி, நவதாராள முதலாளித்துவத்தை வீழ்த்தி முன்னேறுவதுதான். இடதுசாரிகளால் இதனை நிறைவேற்றி சோசலிச மாற்றை நோக்கி முன்னேற முடியும், ஆனால் அது தாராளவாதத்திற்கு உள்ள மக்கள் ஆதரவுத்தளத்தை வென்றெடுப்பதன் மூலமே கைகூடும். இதற்கு தாராளவாத அரசியல் சக்திகளை வென்றெடுக்கவேணுமென்ற புரிதல் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் மாற்றான, மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிற பொருளாதாரத் திட்டத்தை அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். இந்தப் பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, தற்போதைய உலகமயத்திடமிருந்து துண்டித்துக்கொள்வது மிகத் தேவை. கண்மூடித்தனமான மூலதன ஓட்டத்திற்கு விதிக்கவேண்டிய கட்டுப்பாடுகளைச் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இடதுசாரிகள் தங்களது ஆற்றல்மிகு பாத்திரத்தை பொருளாதார மற்றும் அரசியல் தயக்கங்கள் ஏதுமின்றி சாதித்திட வேண்டும்.

தமிழில்: இரா.சிந்தன்

“சுதந்திரச் சந்தையின் அதிர்ச்சி கோட்பாடு” லத்தீன் அமெரிக்க எதிர்ப்பலைகள்

கனடா நாட்டைச் சார்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர், ஊடக விமர்சகர் நவாமி ஃக்ளெய்ன் எழுதிய கட்டுரையின் தழுவல் சென்ற ஆண்டு (2007) இவர் எழுதி வெளியிட்ட “The Shock Doctrime – The rise of disaster Capitalism” என்ற புத்தகம் ஏகாதிபத்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடையே அதிர்ச்சி அலைகள் தோற்றுவித்திருக்கிறது என செய்திகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்தக்கட்டுரையும் அந்த புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கியது தான்.

ஈக்வாடர் நிமிர்ந்து கேட்டது

மாண்டா (ஈக்வடார்) வில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவதளம் விரைவில் மூடப்பட்டு விடும். அது தொடர்ந்து அங்கேயே இருக்கவேண்டுமானால் ஈக்வடாரின் இடதுசாரி சிந்தனைக் கொண்ட அதன் அதிபர் ரஃபேல் கொர்ரியா ஒரு நிபந்தனை விதித்தார். “அமெரிக்காவில் மியாமி என்னுமிடத்தில் ஒரு ராணுவதளம் வைத்துக் கொள்ள ஈக்வடாருக்கு அமெரிக்கா அனுமதி அளிக்க வேண்டும். ஒரு நாட்டின் மண்ணில் வெளிநாட்டு ராணுவவீரர்கள் இருப்பது சாத்தியமென்றால் ஈக்வடாருக்கு அமெரிக்க அந்த அனுமதி வழங்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே அமெரிக்கத் தளம் மூடப்படும்.

கொர்ரியாவின் இந்த நிபந்தனை வெறும் அமெரிக்க எதிர்ப்பில் எழுந்ததன்று. லத்தீன் அமெரிக்க நாடுகளின் பல அரசுகள் வெளியிலிருந்து பல நெருக்கடிகளையும் அதிர்ச்சி நடவடிக்கைகளையும் சந்திக்கின்றன. அவைகளினால் நொறுங்கிப் போகாமல் இருக்க எடுக்கும் முயற்சிகளின் பிரதிபலிப்பு தான் அது.

அதிர்ச்சி கோட்பாடு

இது ஒரு முக்கியமான வளர்ச்சிப் போக்காகும். கடந்த 35 ஆண்டுகளாக பன்னாட்டு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு தரும் வகையில் அதிரடி சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதற்கு ஒத்திசைவான அரசியல் மாற்றங்களை கொண்டு வர அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் பட்டது. விரிந்த அளவில் தனியார் மயம், சமூக தேவைகளுக்கான செலவீனங்களை குறைத்தல் போன்றவைகள் தான் அந்த அதிரடி நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்களாக இருந்தன. அரசினை வலுவிழக்கச் செய்யும் இந்த அதிர்ச்சி வைத்தியம் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. பொருளாதார ரீதியாக இந்த வைத்தியம் கொடுக்க ஆலோசனை வழங்குபவர் மில்டன் ஃப்ரெய்ட்மன் என்ற பொருளாதார பேராசிரியர். அவர் எழுதிய கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “உண்மையானதாகவோ அல்லது உணர்வின் வெளிப்பாடாகவோ எழும் நெருக்கடிகள் தான் மாற்றங்களை கொண்டு வரும். அம்மாதிரியான நெருக்கடி தோன்றுகிற போது அதைச்சுற்றி விரவிக் கிடக்கும் கருத்துக்களை சார்ந்து தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது”. இன்றைய முதலாளித்துவம் திறமையுடன் தயாரித்து அளிக்கும் நோய்த் தீர்க்கும் மருந்து இதைத்தான் நவோமி க்ளெய்ன் அதிர்ச்சிக் கோட்பாடு என்று குறிப்பிடுகிறார். “நெருக்கடிகளை பயன்படுத்து”. சந்தைப் பொருளாதார வெற்றி நடைபோட எந்த நெருக்கடியும், இயற்கைச் சீற்றத்தால் எழுந்த நெருக்கடியாக இருந்தாலும் சரி. இது தான் அந்த அதிர்ச்சி கோட்பாட்டின் மையக்கரு.

சோதனைக் களம்

லத்தீன் அமெரிக்கா இந்தக் கோட்பாட்டிற்கு சோதனைக் களமாக என்றும் இருந்திருக்கிறது. சிலியின் சோசலிஷ்ட் அதிபரான அல்லெண்டேயை படுகொலை செய்து விட்டு ஆட்சியினை கைப்பற்றினான். ராணுவதளபதி பினோசெட் அவனுக்கு நெருக்கடி நிலைமையினை எப்படி பயன்படுத்துவது ஆலோசனை வழங்குபவர் மில்டன் ஃப்ரெய்ட்மன் அல்லெண்டேயின் படுகொலை கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்த காலம்; நாடு மிகவும் ஆழமான பண வீக்கத்தில் மூழ்கியிருந்தது. அப்போது ஃபிரெய்ட்மென் வழங்கிய ஆலோசனைகள் வரிக்குறைப்பு (முதலாளிகளுக்கு) சுதந்திர வணிகம், சேவைத்துறையில் தனியார்மயம், சமூகச் செலவீனங்களில் வெட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தல், இவைகள் துரிதமான பொருளாதார மாற்றத்தைக் கொடுக்கும் என பினோசெட்டிற்க்கு ஃப்பெரய்ட்மன் ஆலோசனை வழங்கினார். முதலாளித்துவ உலகின் பொருளாதாரத்தில் இது ஒரு புரட்சி என்றெல்லாம் கூட வர்ணிக்கப்பட்டது. சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஃப்ரெய்ட்மன்னிடம் பயின்ற சீடர்கள் தான் பினோசேட்டிற்க்காக அந்தப் பணியினை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர்கள்.

பின்பு அர்ஜென்டினாவிலும் இது செயல்படுத்தப்பட்டது. இதற்கு அடக்குமுறை எந்திரங்கள் துணை தேவைப்பட்டது. அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலைகள் இந்தப் பொருளாதார புரட்சிக்கு எதிராக இயக்கம் காணும் செயல்வீரர்களை ஒடுக்க பயன்பட்டன.

70 மற்றும் 90 களில் லத்தீன் அமெரிக்காவில் சர்வாதிகார அமைப்புகள் வலுவற்ற ஜனநாயக அமைப்புகளுக்கு இடம் கொடுத்தன. அப்போது இந்த அதிர்ச்சி கோட்பாட்டிலிருந்து அது தப்பிக்க இயலவில்லை. மாறாக புதிய அதிர்ச்சிகள் தோன்றின. 80களின் துவக்கம் கடன் அதிர்ச்சி என்ற அதிர்ச்சி வைத்தியத்திற்கு தளம் அமைத்துக் கொடுத்தது. பண வீக்கம் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தின் மையப்பொருளாக உள்ள உற்பத்திப் பொருட்களின் (விவசாயப் பொருட்கள் உட்பட) விலை வீழ்ச்சியினை சந்தித்தது.

ஆனால் இன்று அங்கே புதிய நெருக்கடிகள் எழுவது தடுத்து நிறுத்தப்படுகின்றன. பழைய அதிர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் வீரியத்தை இழந்து வருகின்றன. இந்த நிகழ்வுகள் இக்கண்டத்திற்கு மாற்றத்தினை எதிர்கொள்ளும் தன்மையினை கொடுக்கிறது. அதிர்ச்சிக் கோட்பாட்டினை எதிர்க்கும் அமைப்பிற்கான ஒரு முன்மாதிரியினை உருவாக்கியிருக்கிறது.

ஃபிரய்ட்மென்தோல்வி

ஃபிரய்ட்மென் கட்டவிழ்த்து தறிகெட்டு செயல்படும் முதலாளித்துவத்தை சிலி அனுபவத்தின் அடிப்படையில் உலகம் பூராவும் பரப்ப விரும்பினார். ஆனால் லத்தீன் அமெரிக்காவில் அந்தவிருப்பம் சற்றே நிலை குலைந்து நிற்கிறது. அவர் மறைவு குறித்து வெளியான இரங்கல் செய்திகள் ஒரு சகாப்த முடிவினை சுட்டிக் காட்டிய செய்திகளாக இருந்தன. “சுதந்திரச் சந்தையில் சிங்கம் போல் உலவிய ஃப்ரெய்ட்மனின் மறைவு ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. அவருடைய தரத்திற்கு யாரும் இல்லை. அவர் உறுதியாகப் பற்றி நின்று பரப்பிய கொள்கைகள் தப்பிப் பிழைக்குமா? அதற்கு உறுதியான கவர்ச்சியான அறிவார்ந்த தலைமுறை ஒன்று உருவாக வேண்டும். அது அவ்வளவு எளிதானதல்ல” என்று அவரின் சீடர்களில் ஒருவரான டெரன்கார்கோரன் என்பவர் எழுதினார்.

அப்படி நிகழ்வதற்கான வாய்ப்பும் குறைவு தான் அமெரிக்காவில் ஃபிரெய்ட்மனின் அறிவுலக வாரிசுகள் பிற்போக்குத் தனத்தின் சிந்தனை ஊற்றுகளால் விளங்குபவர்கள். செப்டம்பர் 11, 2001ல் இரண்டு வர்த்தக கட்டிடங்கள் தாக்கப்பட்டன.  அதை பயன்படுத்தி யுத்த முயற்சிகள் (இராக் யுத்தம் உட்பட) மேற்கொள்ளப்பட்டன. உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகளில் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபம் கொழிக்கும் செயல்பாடுகளுக்கு ஆக்கம் கொடுக்கும் நடவடிக்கைகளாக மாற்றப்பட்டன. ஆனால் வரலாறு அதற்கான கொள்கை வகுத்தவர்களை ஒரு மூலையில் நிறுத்தி வைத்தது. அரசியல் ரீதியாக அவர்கள் கடைசியாக பெற்ற வெற்றி 1994ல் குடியரசு கட்சி அமெரிக்க காங்கிரசை கைப்பற்றியது தான். ஃப்ரெய்ட்மன் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன்பு ஜனநாயகக் கட்சியிடம் அதை மீண்டும் இழந்தார்கள். 2006ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு மூன்று காரணங்கள் வெளிப்பட்டன. முதலாவது, அரசியல் நிர்வாக அளவில் நிலவிப் லஞ்ச ஊழல், இரண்டாவது இராக் யுத்தம் மேற்கொள்ளப்பட்ட முறை, மூன்றாவது அமெரிக்க மக்களிடையே எழுந்த பொதுவான கருத்து – இதை அமெரிக்க ஆட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜிம்வெப் விளக்கினார். “அமெரிக்கா ஒரு வர்க்க அடிப்படையிலான அமைப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 19ம் நூற்றாண்டிற்கும் பிறகு அமெரிக்க மக்கள் சந்தித்திராத அனுபவம் இது”

இந்தத் திட்டம் பரிசோதனையாக துவக்கப்பட்ட லத்தீன் அமெரிக்காவில் தான் ஆழமான நெருக்கடியினை தோற்றுவித்தது. கம்யூனிசத்தைக் காட்டிலும் ஜனநாயக சோசலிசம் தான் மிகவும் சவால் மிகுந்தது என அமெரிக்கா கருதுகிறது. ஏனெனில் கம்யூனிசத்தை பழி சுமத்தி எதிர்கொள்ள வாய்ப்பான எதிரியாக நிறுத்தி விட முடியும். 60 மற்றும் 70களில் பல நாடுகளில் வெளிப்பட்ட பொருளாதார தேசியம் மற்றும் ஜனநாயக சோஷலிச கோட்பாடுகளை கம்யூனிச கோட்பாடுகளாகவே பாவித்து வசைமாரி பொழியப்பட்டது. அவைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மறைக்கப்பட்டன. அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்ட போது இது தெரிந்தது. சிலியின் அல்லெண்டே சோவியத் பாணி சர்வாதிகாரி என்றே உளவுத்துறையின் பிரச்சாரங்களில் குறிப்பிடப்பட்டார். ஆனால் அல்லெண்டேயின் வெற்றி குறித்து அமெரிக்காவின் கவலை அமெரிக்க வெளியுறவு செயலாளராக இருந்த ஹென்றி கிள்ளிங்கர் 1970ல் குடியரசுத் தலைவர் நிக்வனுக்கு எழுதிய குறிப்பில் தெரிந்தது.

“சிலியில் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் அரசு உலகின் பல பகுதிகளுக்கு குறிப்பாக இத்தாலியில், முன்னுதாரணமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதே மாதிரி அரசு அமைக்கப்படுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் உலக சக்திகளின் நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரும். நம்முடைய நிலையும் பாதிப்புக்கு உள்ளாகும்.” இதன் பொருள் என்ன? அல்லெண்டேயின் ஜனநாயக மாற்று பரவலான உலக நிகழ்வாக மாறுவதற்கு முன்பே அல்லெண்டேயின் அரசு அகற்றப்பட வேண்டும் என்பது தான் பொருள்.

ஆனால் அல்லெண்டே கனவாக முன்வைத்தது தோற்கடிக்கப்படவில்லை. அச்சமூட்டும் நடவடிக்கைகளால் தற்காலிகமாக பின் தள்ளப்பட்டது. பல ஆண்டுகள் அதிர்ச்சிப் பிறகு அந்த கருத்துக்கள் துடிப்போடு மீண்டும் அரசியல் அரங்கில் நுழைகின்றன. எது அப்படியே பரவும் என கிள்ளிங்கள் அச்சமடைந்தாரோ, அது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மாற்றங்களை தடுக்க முடியாது!

2001ம் ஆண்டிலிருந்து அப்படி வரும் மாற்றங்களை யாராலும் புறக்கணிக்க இயலாதவைகளாக உள்ளன. அர்ஜென்டைனாவின் மிகப்பிரலபமான பத்திரிகை நிருபர் ரொடால்ஃபோ வால்ஷ் சிகாகோ பொருளாதாரப் பள்ளியின் (ஃப்பெரய்ட்மனின் சீடர்கள் செயல்படுத்திய) பொருளாதாரம் அவர் நாட்டில் ஒரு ராணுவ ஆட்சியின் கீழ் 10களில் ஏற்றம் பெற்றது ஒரு தற்காலிகப் பின்னடைவே தவிர இடதுசாரி இயக்கத்திற்கான தோல்வி அல்ல என்று குறிப்பிடுகிறார். ராணுவம் தன் பயங்கரமான நடைமுறைகளின் மூலம் மக்களிடம் அச்சத்தை பரப்பியது. அதிர்ச்சியினை ஊட்டியது. ஆனால் வால்ஷ் அது நீடிக்கக்கூடியது அல்ல என்று எழுதினார். 20-30 ஆண்டுகளில் அந்த பயங்கரம் புறம் காணும் என்றும் எழுதினார். 1977ல் அர்ஜென்டைனாவின் ரகசிய ராணுவப் படை வால்ஷை ஒரு தெருவில் நேரடியாக சுட்டுக் கொன்றது. ஆனால் வால்ஷ் எழுதியது நடந்தது. அர்ஜென்டைனா மீண்டும் எழுந்தது. நம்பிக்கையினையும் உறுதியினையும் பெற்று எழுந்தது. பொருளாதார, சமூக சமத்துவம் பெற எழுந்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு 2001ல் சர்வதேச நிதி நிறுவனத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கெதிரான எதிர்ப்பு இயக்கம் வலுத்தது. அதன் விளைவு? மூன்று வாரத்தில் 5 குடியரசுத் தலைவர்கள் பதவி ஏற்று விலக நேரிட்டது.

மக்கள் பெற்ற உறுதியும், தைரியமும் லத்தீன் அமெரிக்காவின் மற்ற பகுதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியத்தின் சோதனைக் களமாக இருந்த மற்ற பகுதிகளுக்கும் பரவத் துவங்கியது. ராணுவ அடக்குமுறை இயந்திரங்களால் அவர்கள் மீது திணிக்கப்பட்ட அச்ச உணர்வு விலகியது. மூலதன வெளியேற்றம் மற்றும் நிதிக்கட்டுப்பாடுகள் முதலியவற்றின் தாக்கத்திலிருந்து வெளியே வந்து ஜனநாயக உரிமைகள் சந்தையின் மீதான கட்டுப்பாடு போன்ற கோரிக்கைகளை மக்களின் சார்பாக பல்வேறு இயக்கங்கள் முன் வைக்கத் துவங்கின. ஃப்ரெய்ட்மென் வைத்த கோட்பாட்டிற்கு ஆபத்தினை விளைவிக்கும் கோரிக்கைகள் இவை முதலாளித்துவமும் சுதந்திரமும் பிரிக்கமுடியாது இணைந்திருக்கும் அம்சங்கள் என்ற ஃப்ரெய்ட்மன்னின் கூற்றுக்கு விடப்பட்ட சவால்.

புதிய தாராளமயக் கொள்ளைகளுக்கு லத்தீன் அமெரிக்காவில் கடுமையான எதிர்ப்பினை உருவாக்கியவர்கள் பல நாடுகளில் நடந்த தேர்லில் வெற்றியடைந்து வருகிறார்கள். “21ம் நூற்றாண்டு சோஷலிசம்” என்ற கோஷத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்ட வெனிசுலாவின் சாவேஸ் 63சதவிகிதம் வாக்குகள் பெற்று 2006ம் ஆண்டு மூன்றாவது முறையாக வெற்றி பெற்றனர். புஷ் நிர்வாகம் சாவேஸின் வெனிசூலாவை ஒரு போலி ஜனநாயக நாடு என பிரச்சாரம் செய்தது. எனினும் ஒரு கருத்தக்கணிப்பில் பெரும்பான்மையான வெனிசுலா மக்கள் அதை நிராகரித்து அங்கு நிலவிய ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கையினை தெரிவித்தார்கள். உருகுவே நாட்டில் தனியார் மய நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் கருத்தை அறியும் முயற்சியில் அரசு பொறுப்பில் உள்ள இடதுசாரி ஆம்பிலியோ முன்னணி இறங்கியது. அங்கும் மக்கள் பெருவாரியாக தங்கள் ஆதரவினை அரசுக்க அளித்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் இந்த இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளும் வாஷிங்டன் கருத்திசைவுக்கு சவால் விடுக்கும் வகையில் செயல்படத் துவங்கின. அந்நாட்டு மக்களும் தங்கள் வாழ்நிலை உயர ஜனநாயகத்தின் வலிமை மீது தங்கள் நம்பிக்கையினை பதிவு செய்தார்கள்.

கைவிட்டுப்போனது

2001ல் அர்ஜென்டைனாவில் நடத்தப்பட்ட அதிர்ச்சி வைத்தியம் சிதறத் தொடங்கியவுடன் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தனியார் மய எதிர்ப்பு அரசாங்கங்களை உருவாக்கவோ அல்லது சீரழிக்கவோ செய்வதற்கு ஒரு தீர்மானகரமான அம்சமாக அக்கண்டத்தில் மாறியது. 2006ன் பிற்பகுதியில் அதுவே அதே தன்மையுடன் உள்ள தொடர்நிகழ்வுகளை கொண்டு வரும் முக்கிய விளைவாக இருந்தது. பிரேசிலில் லூலா மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனியார் மயக் கொள்கை பற்றிய கருத்துக்கணிப்பில் அதற்கு எதிராக நடத்திய கருத்துப்பிரச்சாரத்தின் அடிப்படையில் தான் அவர் வெற்றி அமைந்தது. ஒரு சோசலிஸ்டைப் போல் தோற்றமளிக்கும் சாகசத்தை அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் (நாட்டின் செல்வங்களை விற்பனை செய்ய வழி வகுத்த அரசியல் குழுவின் பிரதிநிதி) செய்தாலும், லூலா 61 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நிகரகுவாவில் மின்சார விநியோகம் மோசமாகி நாட்டை இருளில் மூழ்கடித்துக் கொண்டிருந்து. அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மின்சார நிறுவனத்தை மிட்ச் பெரும்புயலுக்குப் பிறகு யூனியன் ஃபெனாசா என்ற ஸ்பெயின் நாட்டு நிறுவனத்திற்கு விற்றுவிட்டதால் ஏற்பட்ட விளைவு அது. இதையே தன்னுடைய பிரச்சாரத்தின் மையக்கருத்தாக கொண்டு சென்ற டேனியல் ஆர்டேகா யூனியன் ஃபெனோசாவை இந்த நாட்டிற்கு யார் கொண்டு வந்தது? என்ற கேள்வியினை எழுப்பி காட்டுமிராண்டித் தனமான முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் பணக்காரர்களின் அரசு தான் அதை செய்தது. என்ற பதிலையும் மக்கள் முன் வைத்து தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஈக்வாடர் அறிவிப்பு

2006 நவம்பரில் ஈக்வடார் நாட்டின் அதிபர் தேர்தல் இதே தத்துவார்த்தப் போராட்டக் களத்தைச் சந்தித்தது. 43வயதான இடதுசாரி வேட்பாளர் ரஃபேல் கொர்ரியா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர் ஆல்வரோ நொபோ என்ற மிகப்பெரிய வாழைத் தோட்டங்களின் சொந்தக்காரர், பணம் படைத்தவர், நாங்கள் இதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்ற பாப் பாடலை தன் கோஷமாக வைத்து போட்டியிட்டார் கொர்ரியா மக்களைத் துயரத்தில் ஆழ்த்தும் அந்த அதிர்ச்சி தரும் புதிய தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்ற மக்களின் உணர்வினை பிரதிபலிக்கும் கோஷமாக அது இருந்தது. வெற்றி பெற்றவுடன் நான் ஃப்ரெய்ட்மன்னின் அபிமானி அல்ல என்று கொர்ரியா அறிவித்தார். பொலிவியா பொலிவு பெறுகிறது. இதற்கிடையில் பொலிவியாவின் ஈவோ மொரெலின் அதிபர் பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றது. எண்ணெய் – எரிவாயு  வயல்களை பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலிருந்து விடுவித்து தன் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார் மொரேலின்; அதனை தொடர்ந்து கனிமச் சுரங்கங்களை நாட்டுடமையாக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டார். சிலியில் பினோசெவின் கைதியாக இருந்த மிஷேல் பாஸ்லெ அந்நாட்டின் அதிபரானார். அவர் தலைமையில் சிலியின் பள்ளி மாணவர்கள் சிகாகோ பள்ளியினைச் சேர்ந்தவர்கள் வலிந்து புகுத்திய இரட்டை அடுக்கு கல்வி முறைக்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்பு அலைகளை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து தாமிர சுரங்கத் தொழிலாளர்கள் தங்களுடைய வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினார்கள். பல சுரங்கங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.

2006 டிசம்பரில், ஃபிரெய்ட்மன் இறந்து ஒரு மாத்திற்குப் பிறகு, பொலிவியாவின் கொச்சபம்பா நகரில் லத்தீன் அமெரிக்கத் தலைவர்கள் ஒன்று கூடினார்கள். அங்கே தான் சில ஆண்டுகளுக்குப் பின் தண்ணீர் விநியோகம் தனியார் மய தாக்குதலுக்கு உள்ளான போது மக்கள் கிளர்ந்தெழுந்து உயிர்பலிகொடுத்து அதை முறியடித்தனர். அதற்கான உரிமை பெற்றிருந்த பெக்டெல் என்ற பன்னாட்டு நிறுவனம் பொலிவியாவை விட்டே வெளியேற வேண்டிய நிலை வந்தது. திறந்து கிடக்கும் லத்தீன் அமெரிக்காவின் ரத்த நாளங்களை மூடுவேன்” என மொரெலன் சூளுரைத்தார். எடுயார்டா கலீனாவோ என்பவர் எழுதிய திறந்து கிடக்கும் லத்தீன் அமெரிக்காவின் ரத்த நாளங்கள் ஐந்து நூற்றாண்டுகளாக  கொள்கையடிக்கப்பட்ட ஒரு கண்டம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட வார்த்கைள் மிகவும் அற்புதமாக இலக்கிய நடையில் எழுதப்பட்ட உணர்ச்சி மிகு படைப்பு அது. இரக்கமற்ற முறையில் வன்முறை மூலம் சுரண்டப்பட்டு எப்படி வளமிக்க லத்தீன் அமெரிக்க கண்டம் ஏழ்மை தாண்டவமாடும் பகுதியாக உருமாற்றம் பெற்றது என்பதை விளக்கிச் சொல்லும் புத்தகம் அது. 1971ல் எழுதப்பட்டது. சிலியின் அல்லெண்டே படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. சிலி நாட்டின் தாமிரச் சுரங்கங்களை நாட்டுடமையாக்கும் உறுதியுடன் செயல்படத்துணிந்த அல்லெண்டேக்கு அமெரிக்க உளவுத்துறையும் பன்னாட்டு நிறுவனங்களும் கொடுத்த பரிசு  துத்தப்படுகொலை அதனைத் தொடர்ந்து தான் லத்தீன் அமெரிக்க நாடுகள் வெறித்தனமான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த நாடுகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள் அழிக்கப்பட்டன முடக்கப்பட்டன மற்றும் விற்கப்பட்டன.

சுதந்திரச்சந்தையின் அதிர்ச்சிக் கோட்பாடு – லத்தீன் அமெரிக்காவின் எதிர்ப்பலைகள்

சில ஆண்டுகளுக்கு முன் அப்படி கொடுமையான சிதைவுக்கு உள்ளான திட்டங்களை லத்தீன் அமெரிக்கா இன்று கையிலெடுக்கிறது. நம் அனைவருக்கும் தெரிந்த கொள்கை முடிவுகள் தான் அவை. பொருளாதாரத்தின் கேந்திரமான துறைகளை தேச உடமையாக்குதல், நிலச்சீர்த்திருத்தம், கல்வி, எழுத்தறிவு இயக்கம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்கான முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்றவைகள் தான் அந்த கொள்கை முடிவுகள். அவைகள் ஒன்றும் புரட்சிகரமான கருத்துக்கள் அல்ல. ஆனால் சமத்துவம் வேண்டி குற்ற உணர்வு ஏதுமின்றி செயல்படும் அரசின் கண்ணோட்டம் அந்தத் திட்டங்கள் மில்டன் ஃப்ரெய்ட்மானின் கூற்றுக்கு சரியான பதிலடியாகும். 1975ல் சிலியின் பினோசெப்பிற்கு ப்ரெய்ட்மன் எழுதினார். மற்றவர்கள் பணத்தில் நல்லது செய்ய முடியும் என்பது மிகவும் தவறானது என்பது என் கருத்து அரசு வருமானத்தில் மக்களுக்கு நன்மை செய்வது தவறு என்று அதற்கு பொருள் இதற்கு அடி விழுந்தது.

கடந்த கால புரட்சிகர வரலாற்றிலிருந்து வழிகாட்டுதலை பெற்றாலும் கூட, இன்றைய லத்தீன் அமெரிக்கா இயக்கங்கள் முந்தைய இயக்கங்களின் நேரடியான பிரதிபலிப்பல்ல. மிகவும் தெள்ளெனத் தெரிகிற வேறுபாடு யாதெனில், திடீர் ராணுவபுரட்சி வெளிநாட்டார் கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம், அமெரிக்காவில் பயிற்சி பெற்ற கொடுங்கோலர்கள் ஆட்சி மற்றும் கடன் நெருக்கடி நாணய வீழ்ச்சி ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் தான். மிகப்பெரிய அளவில் இடதுசாரி வேட்பாளர்களின் வெற்றி அலைகள் வீசிக் கொண்டிருக்கும் லத்தீன் அமெரிக்காவின் மக்கள் இயக்கங்கள் எழுகின்றன. அவை செயல்படும் வடிவங்கள் மேலே குறிப்பிட்ட தாக்குதல்களை தாக்குப்பிடித்து உள் வாங்கும் பகுதிகளோடு கட்டப்படுகின்றன. உதாரணமாக, 60களின் இயக்கங்களைப் போல் இன்றைய இயக்கங்கள் அவ்வளவு மையப்படுத்தப்பட்ட இயக்கங்கள் அல்ல; ஆகையால், சில தலைவர்களை அழித்து விடுவதின் மூலம் இந்த இயக்கங்களை நிலை குலைய செய்து விட முடியாது. வெனிசூலாவில் சாவேஸ் என்ற தனி நபரை போற்றுவது என்பது உண்டு. அரசு மட்டத்தில் அதிகாரத்தை மையப்படுத்துவதும் விவாதத்துக்குரிய ஒன்று தான்; ஆனால் அதே நேரத்தில் அந்நாட்டின் முற்போக்கான அமைப்பு வலைகள் பரவலாக்கப்பட்ட அதிகார வரம்புக்குள் செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான அருகருகே உள்ள வட்டார அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள் மூலம் சமூக அடித்தளத்திற்கு அதிகாரம் பரவலாக்கப்பட்டிருக்கிறது. பொலியாவில், ஈவா மொரலஸை அதிபர் பதவிக்கு உயர்த்திய அந்த நாட்டின் பழங்குடி மக்கள் இயக்கம் அதே முறையில் தான் செயல்படுகிறது. அது மொரெலசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கவில்லை என அறிவிக்கிறது. மக்கள் கொடுத்த ஜனநாயக தீர்ப்புக்கு உண்மையாக நடந்து கொள்ளும் வரையில் அந்த இயக்க அணிகள் அவருக்கு ஆதரவு அளிக்கும் இந்த வகையிலான அமைப்பு வலை தான். 2002ல் நடந்த கவிழ்ப்பு முயற்சியிலிருந்து சாவேஸை காப்பாற்றியது. வெனிசுலாப் புரட்சிக்கு சோதனை வந்த பொழுது, சாவேஸின் ஆதரவாளர்கள் தலைநகரமான காரகாணை சுற்றியுள்ள நகரப் பகுதிகளுக்கும் மற்றபகுதிகளுக்கும் விரவிச் சென்று சாவேஸை மீண்டும் பொறுப்பில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை மக்களிடம் கொண்டு போனார்கள் 70களில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்குக்கெதிராக இம்மாதிரியான பரவலாக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள் எதுவும் நடைபெறவில்லை.

எதிர்காலத்தில் தங்கள் பெற்ற ஜனநாயக வெற்றிகளை சீர்குலைக்கும் நோக்கோடு அமெரிக்க ஆதரவுடன் செயல்படுத்தப்படும் ராணுவ கவிழ்ப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள லத்தீன் அமெரிக்காவின் புதிய தலைவர்கள் துணிவோடு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். சாவேஸின் சமீபத்திய அறிவிப்பு ஒன்று இதை எடுத்துக்காட்டியது. தீவிர வலதுசாரி சக்திகள் பொலியாவின் சாண்டாக்குள் பகுதியில் மொரெலிசுக்கு எதிராக அச்சுறுத்தும் நடவடிக்கைகள் எடுத்தால், பொலிவிய ஜனநாயகத்தைக் காப்பாற்ற வெனிசுலாப் படைகள் உதவி செய்யும் என்று அறிவித்தார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் ஃபோர்ட் பென்னிங் என்னுமிடத்தில் ராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுவனம் இருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் பயிற்சிப் பெற லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்த நிறுவனத்திற்கு பயிற்சியாளர்களை அனுப்புவது உண்டு. எம்மாதிரியான பயிற்சிப் பெற்று அவர்கள் திரும்புவார்கள் என்பது உலகமறிந்த செய்தி. அப்படிப் பயிற்சி பெற்றவர்களைப் பயன்படுத்தி அமெரிக்கா படுகொலை மற்றும் அனைத்து சீர்குலைவு வேலைகளை செய்து கொண்டிருந்தது. இப்பொழுது ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. வெனிசுலா, கோன்டாரிகா, அர்ஜென்டைனா, உருகுவே மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டிலிருந்து இனி பயிற்சியாளர்களை அங்கே அனுப்பப் போவதில்லை என அறிவித்திருக்கின்றன. கடந்த காலத்தில், எதிர்புரட்சி தந்திரங்களிலும் அடக்குமுறை நடவடிக்கைகளிலும் பயிற்சி பெற்றவர் எல்சால்வாடரின் விவசாயிகள் மீறும் அர்ஜென்டைனாவின் மோட்டார் தொழிலாளர்கள் மீதும் நடத்திய தாக்குதலை அந்த நாடுகள் சந்திருக்கின்றன. ஈக்வடாரும், மான்டோ ராணுவத் தளத்தை மூடுவதோடு, அந்தப் பயிற்சி நிறுவனத்துடனான உறவினை துண்டித்துக் கொண்டது. இந்த மாற்றங்களின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திப்பார்க்க வேண்டிய அவசிய மில்லை. ஆனால், ராணுவம் தளங்களையும் பயிற்சி திட்டங்களையும் இழக்கும் போது அந்த கண்டத்தில் அதிர்ச்சிகளை கொடுக்கும் சக்தி அளிக்கப்பட்டு வருகிறது.
மாறிக் கொண்டே இருக்கும் சந்தை தரும் அதிர்ச்சிகளை சந்திப்பதற்கு லத்தீன் அமெரிக்காவின் புதிய தலைவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டை நிலை குலையச் செய்யும் ஓரிரண்டு அம்சங்கள் சமீபகாலத்தில் வெளிப்படுகின்றன. மிகவேகமாக மூலதனம் வந்து போவது ஒரு அம்சம் அல்லது விவசாய உற்பத்தி பண்டங்களின் திடீர் விலை வீழ்ச்சி விவசாயத்துறைக்கு வித்திடும் சீரழிவு லத்தீன் அமெரிக்காவில் பல நாடுகளில் இந்த அதிர்ச்சிகள் நிகழ்ந்திருக்கிறது. அதன் விளைவாக உயிரோட்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்த தொழிற்துறை நகரங்கள் நடமாட்டம் ஏதுமில்லாமல் அச்சமூட்டும் இடங்களாக மாறிவிட்டன. செழிப்புடன் உற்பத்தியில் இருந்த விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறியிருக்கின்றன. உலகமயமாக்கல் சிதைத்த சிதைவுகளை எடுத்து மீண்டும் ஒருங்கிணைக்கும் பிரதான கடமை தான் அங்கே எழுந்திருக்கும் புதிய இடதுசாரிகளின் முன் வைக்கப்பட்டிருக்கிறது. பிரேசிலில் நிலமற்ற மக்கள் இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த 15 லட்சம் விவசாயிகள் பயன்பாடு இல்லாத நிலங்களை எடுக்க நூற்றுக்கணக்கில் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கினார்கள். அர்ஜென்டைனாவில் மீட்கப்பட்ட நிறுவனங்கள் என்ற இயக்கத்தின் சார்பில் மூடப்பட்ட 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தொழிலாளிகளால் அவற்றிற்கு புத்துயிர் கொடுத்து ஜனநாயக முறையில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகளாக மாற்றினார்கள் இந்த கூட்டுறவு அமைப்புகள் முதலீட்டாளர்கள் திடீரென்று விலகிவிடும் அதிர்ச்சியை சந்திக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் முதலீட்டாளர்கள் எல்லாம் முன்பே ஓடிப்போய்விட்டனர். இந்த இரண்டு நிகழ்வுகளும் மேற்குறிப்பிட்ட இடதுசாரிகளின் கடமையினை சுட்டிக் காட்டும் நிகழ்வுகளாகும்.

சாவேஸ் வெனிசூலாவில் கூட்டுறவு அமைப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். அவைகள் வணிகத்தில் பரஸ்பரம் பங்கேற்கும் வகையில் பொருளாதார சலுகைகள் அளிக்கப்படுகின்றன. 2006ம் ஆண்டு முடியும் போது 1 லட்சம் கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்பட்டு 7லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. சுங்கச்சாவடிகள், நெடுஞ்சாலை பராமரிப்பு, சுகாதார நிலையங்கள் போன்ற அரசு மேற்கொள்ள வேண்டிய துணை அமைப்பு பணிகளை உள்ளூர் சமூகக்கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு அமைப்புகள் செய்து வருகின்றன. அரசுப் பணிகளை ஜனநாயகக் கட்டுப்பாடு ஏதுமின்றி தனித்தனியாக பிரித்து மிகப்பெரிய தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் செயல்பாட்டிலிருந்து இது வேறுபட்ட அணுகுமுறை என்பது தெளிவு. இந்த முறையில் மூலாதாரங்களை பயன்படுத்துவோர் அதை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் பெறுகின்றனர். குறைந்தப் பட்சம் அது கொள்கை அளவிலாவது வேலை வாய்ப்பை உருவாக்கி மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவையினை உணர்ந்து செயல்படும் தன்மை கொண்டதாக இருக்கும். சாவேஸை விமர்சிப்பவர்கள் இந்த நடவடிக்கைகளை வீணாண தேவையற்ற சலுகைகள் என்று விமர்சித்தார். ஹாலி பெர்ட்டன் என்ற அமெரிக்காவின் எண்ணெய் பன்னாட்டு நிறுவனம் அமெரிக்க அரசை கடந்த 6 ஆண்டுகளாக தன்னுடைய தேவைக்கேற்ப பணம் எடுக்கும் தானியங்கி இயந்திரமாக பயன்படுத்தி வருகிறது. இராக்கில் சில ஒப்பந்தப் பணிகளுக்காக அந்த நிறுவனம் பில்லியன் டாலர் எடுத்திருக்கிறது. ஈராக்கிலும் வளைகுடா பகுதியிலும் செய்ய வேண்டிய பணிகளுக்கு அந்தந்த நாட்டுத் தொழிலாளர்களை அமர்த்துவதில்லை அந்த நிறுவனம் அதன் தலைமையகத்தை துபாய்க்கு மாற்றி சில வரி மற்றும் சட்டச் சலுகைகளை பெற்றது. அதற்காக அமெரிக்க வரி செலுத்தும் மக்களுக்கு நன்றி செலுத்தக்கூட தயங்கவில்லை. இவர்களுக்கு சாவேஸின் மக்களுக்கு நன்மை தரும் மான்யங்கள் முற்போக்குத் தன்மை குறைந்ததாக தெரிவதில் ஆச்சரியமில்லை.

எதிர்காலத்தில் வரக்கூடிய அதிர்ச்சிகளிலிருந்தும் – அதிர்ச்சி கோட்பாட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ள லத்தீன் அமெரிக்கா கொண்டிருக்கும் நம்பிக்கை எதிலிருந்து பிறக்கிறது. அந்தப் பகுதியில் வாஷிங்டன் கட்டுப்பாட்டில் இயங்கும் நிதி நிறுவனங்களின் பிடியிலிருந்து விலகி அந்த கண்டத்தின் நாடுகள் சுதந்திரமாக செயல்படத் துவங்கியதிலிருந்தும், பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் தங்களிடையே உருவாக்கியிருக்கும் ஒற்றுமை பிணைப்பிலிருந்தும் பிறக்கிறது. அமெரிக்காவின் சுதந்திர வர்த்தக பகுதி என்ற கோட்பாட்டிற்கு சரியான பதிலடி அமைப்பாக எழுந்திருப்பதுதான் “அமெரிக்காவிற்கான பொலிவாரியான் மாற்று”(The Blivariam Alternative for America) வடக்கே அலாங்கா வடஅமெரிக்காவிலிருந்து தெற்கே டியர்ராடெல் ஃப்யூகோ (சிலி – தென் அமெரிக்கா) வரை இடையில் உள்ள பகுதியினை சுதந்திர வர்த்தக பூமியாக மாற்ற விரும்பிய மிகப் பெரிய நிறுவனங்களின் கனவு அந்த கண்டத்தில் புதை குழிக்குப் போய் கொண்டிருக்கிறது. பிரேசில் நாட்டின் சமூக ஆய்வாளர் எமிர்சாதர் கூறுவது போல், அந்த மாற்று (ALBA) கொடுக்கும் வாக்குறுதி உண்மையான நியாயமான வர்த்தகத்திற்கு சிறந்த உதாரணம் ஒவ்வொரு நாடும் எது அந்த நாட்டின் பிரதான உற்பத்திப் பொருளாக உற்பத்தி செய்ய வாய்ப்பு இருக்கிறதோ அதை கொடுக்க முன் வருகிறது. அதற்கு பதிலாக அந்த நாட்டிற்கு எது தேவையோ அதை உலகச் சந்தை விலைக்கு உட்படாமல் பெறுகிறது. பொலிவியா தன்னிடமுள்ள எரிவாயுவினை தள்ளுபடி விலைக்கு அளிக்கிறது. வெனிசூலா போதுமான மான்ய விலையில் ஏழை நாடுகளுக்கு எண்ணெய் வழங்குகிறது. மற்ற நாடுகளின் எண்ணெய் வளங்களை மேம்படுத்த தொழில் நுணுக்கங்களை பகிர்ந்து கொள்கிறது. கியூபா அந்த கண்டம் முழுமையும் இலவச மருத்துவ சேவையினை அளிப்பதோடு, கியூபாவின் மருத்துவ கல்வி நிலையங்களில் மற்ற நாடுகளின் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறது.

இது ஒரு வித்தியாசமான கல்வியறிவு பரிமாற்றம்; 50களின் மத்தியில் சிகாகோ பல்கலைக்கழகம் கொடுத்த கல்விப் பயிற்சியிலிருந்து மாறுபட்டது இது. சிகாகோ பள்ளியில் வளைந்து கொடுக்காத ஒரே தத்தவார்த்த படிப்பைத்தான் லத்தீன் அமெரிக்க மாணவர்கள் பெற்றார்கள். அப்படி கற்றதை ஒரே மாதிரியாக அந்த கண்டம் முழுமையும் செயல்படுத்தினார்கள். ஆனால் இந்த மாற்றின் பயன்தரத்தக்க அம்சம் யாதெனில் அது ஒரு பண்டமாற்று அமைப்பாக இருப்பதால் பரிவர்த்தனை பொருட்களின் உண்மையான மதிப்பின் அடிப்படையில் இருக்குமே தவிர நியூயார்க், லண்டன், சிகாகோ சந்தையில் வர்த்தகர்கள் தீர்மானிக்கும் விலையில் இருப்பதில்லை. ஆகவே அந்த முறை, லத்தீன் அமெரிக்காவை வாட்டிக் கொண்டிருந்த திடீரென்று மாறும் விலை வாசியின் தாக்கத்திலிருந்து பெருமளவு விடுதலை கொடுத்தது. மிகவும் கொந்தளிப்பான நிதிச்சூழலின் பின்னணியில், ஒப்பு நோக்கின் அமைதியான தெளிவான பொருளாதார வரையறுப்பை கொடுக்கக்கூடிய பகுதியை லத்தீன் அமெரிக்காவில் அது உருவாக்கியிருக்கிறது. உலகமய சூழலில் அது ஒரு செயற்கரிய செயலாகும்.

ஏதேனும் ஒரு நாடு பொருளாதாரப் பற்றாக்குறையினை சந்தித்தால் அது அதை சமாளிக்க அமெரிக்க நிதி ஆதாரங்களையோ சர்வதேச நிதி நிறுவனத்தையோ (IMF) நாட வேண்டிய அவசியமில்லை என நாடுகளிடையே ஏற்படும் இந்த இணக்கமான ஒருமைப்பாடு எடுத்துக்காட்டுகிறது. அது வரவேற்கத்தக்க நிகழ்வுதான், ஏனெனில் அமெரிக்க தேசியப் பாதுகாப்பிற்கான நீண்டகால கொள்கை அதைச் சார்ந்து அனைத்து நாடுகளும் இருக்க வேண்டி அந்த அதிர்ச்சிக் கோட்பாடுகள் தொடர வேண்டும் என வலியுறுத்துகிறது. ஒரு நாட்டில் நெருக்கடி தோன்றுமானல் பொருளாதார திசை வழியினை தேர்ந்தெடுத்திருப்பதற்கு அந்த நாடே பொறுப்பு என சர்வதேசநிதி நிறுவனம் வலியுறுத்த வேண்டும் மறு கவனத்திற்கு உள்ளாகியிருக்கும் சர்வதேச நிதி சம்பந்தப்பட்ட முடிவுகளில் அமைப்புகளையும் சந்தை ஒருங்கிணைப்பும் வலுப்படுத்தும் என்று மேற்குறிப்பிட்ட தேசியப் பாதுகாப்பு ஆவணம் கருத்து தெரிவிக்கிறது. நாடுகள் உதவி நாடி வாஷிங்டனை நோக்கிச் செல்லும் போதுதான் அந்தச் சந்தை ஒழுங்கு கட்டாயமாக திணிக்கப்படும். ஸ்டான்லி ஃபிஷ்னர் (சர்வதேச நிதி நிறுவனத்தின் முதல் துணை இயக்குனர் – சிகாகோ பள்ளி மாணவன்) ஆகிய பொருளாதார நெருக்கடி காலத்தில் சர்வதேச நிதி நிறுவனம் அதை உதவிக்கு அணுகினால் தான் உதவி முடியும். ஒரு நாட்டின் நிதி திவால் நிலையில் இருந்தால், உதவி நாட நிறைய இடங்கள் அதற்கு கிடையாது என்ற கூறினார். ஆனால் லத்தீன் அமெரிக்காவில் இன்று அப்படிப்பட்ட நிலை இல்லை. எண்ணெய் விலை உயர்வினால் வெனிசூலா வளரும் நாடுகளுக்கு உதவி அளிக்கும் முக்கிய நாடாக இருக்கிறது. அந்த நாடுகள் வாஷிங்டனை சுற்றி ஓடுவது என்பது முடிவுக்கு வந்து விடுகிறது. டிசம்பர் மாதத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்படும். உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்ற நிதி அமைப்புகளுக்கு மாற்றாக தென்னகத்தின் வங்கி (Bank of the South) என்ற வங்கி அமைப்பு துவக்கப்படும். உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்குவதையும் அந்நாடுகளின் பொருளாதார இணைப்பை கொண்டு வருவதும் அதன் பிரதான பணிகளாக இருக்கும்.

இப்பொழுது உதவிக்கு அந்த நாடுகள் சர்வதேச நிறுவனத்தை நாடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உதவி நாட வேறு இடங்கள் இருக்கின்றன. பல லத்தீன் அமெரிக்க நாடுகள் சர்வதேச நிதி நிறுவனத்தை புறக்கணிக்க துவங்கியிருக்கின்றன. கடன் வலையாய் அமெரிக்காவுடன் கட்டுண்டிருந்த பிரேசில் அந்த நிதி நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் எதிலும் புக தயாராக இல்லை. வெனிசூலா உலக வங்கி உட்பட அமைப்புகளிலிருந்து விலகுவது குறித்து அலோசித்து வருகிறது. அமெரிக்காவின் முன் மாதிரி மாணவன் எனக்கருதப்பட்ட அர்ஜண்டைனா இந்தப் போக்கினால் கவரப்பட்டு நிற்கிறது. 2007ம் ஆண்டில் நாட்டு நிலைமை பற்றி பேசிய அந்நாட்டின் அதிபர் நெஸ்டர் இர்ச்னா (அவர் மனைவி கிறிஸ்டினா இப்போது அதிபாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்) கடன் கொடுக்கும் வெளிநாட்டவர் கடனை அடைக்க சர்வதேச நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். நாங்கள் அவர்களுக்கு சொல்கிறோம். எங்கள் நாடு சுயாட்சி உரிமை பெற்ற நாடு நாங்கள் கடனை திருப்பிதர விரும்புகிறோம் ஆனால் எந்த கடுமையான நிலையிலும் அந்த நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று கூறினார்.அதன் விளைவாக 80களிலும், 90களிலும் அக்கண்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சர்வதேச நிதி நிறுவனம் இப்பொழுது அங்கே ஒரு சக்தியாக செயல்பட இயலவில்லை. 2005ல் அந்த நிதி நிறுவனத்தின் மொத்தக் கடனளிப்பதில் 80 சதவிகிதம் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குள்ளேயே இருந்தது. 2007ல் கடனில் லத்தீன் அமெரிக்காவின் பங்கு 1சதவிகிதம் தான் 2 வருடங்களில் தான் எவ்வளவு பெரிய மாற்றம்.
இந்த மாற்றம் லத்தீன் அமெரிக்காவையும் தாண்டிச் சென்றிருக்கிறது. மூன்றே ஆண்டுகளில் சர்வதேச நிதி நிறுவனத்தின் கடனளிப்பு 81 பில்லியன் டாலரிலிருந்து 11.8 பில்லியன் டாலராக குறைந்து விட்டது. அந்த கடன் ழுழுமையும் துருக்கிக்கு கொடுக்கப் பட்டது. எங்கெல்லாம் நெருக்கடிகளை லாபமீட்டும் நிகழ்வுகளாகத் சர்வதேச நிதி நிறுவனம் பயன்படுத்தியதோ அங்கே அது தீண்டத்தகாதவனாக மாறிப்போனது.
அதே நிலையற்ற தன்மையினை உலக வங்கியும் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கிறது. ஈக்வடாரின் அதிபர் கொர்ரியா வாங்கிய எல்லா கடன்களையும் நிறுத்திவைப்பதாகவும், ஈக்வடாரில் தங்கி இருக்கும் உலக வங்கியின் பிரதிநிதி தன் நாட்டுக்கு வேண்டாதவர் என சென்ற ஏப்ரல் மாதம் அறிவித்தார். இது வியப்பூட்டும் அசாதாரணமான நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கி ஈக்வடாருக்குக் கொடுத்த 100 மில்லியன் டாலர் கடனை பயன்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வணிகத்தில் கிடைத்த வருமானம் ஏழைகளுக்கும் போய்ச்சேர வகை செய்யும் ஒரு சட்டத்தை நிறைவேறவிடாமல் செய்ததை கொர்ரியா விளக்கினார். ஈக்வடார் ஒரு சுயாட்சி உரிமை கொண்ட நாடு. சர்வதேச அதிகார வர்க்கத்தின் பறித்தல் நடவடிக்கை முன் கை கூடி நிற்கப்போவதில்லை என கொர்ரியா அறிவித்தார். இதற்கிடையில் பொலிவியாவின் மொரேல்ஸ் உலகவங்கியின் நடுவர் நீதிமன்றத்திலிருந்து விலகும் என அறிவித்தார். ஏனெனில் இந்த மன்றம் தான் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை பறிக்கும் நடவடிக்கைகள் எனக் கூறி தேசிய அரசுகளின் பல நடவடிக்கைகளை எதிர்த்து வழிக்காட்ட பயன்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு லத்தீன் அமெரிக்கா, ஏன் உலகநாடுகள் கூட இந்த வழக்குகளில் வெற்றி பெறுவதில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் தான் வெற்றி பெறுகின்றன என்று மொரேலஸ் விளக்கிச் சொன்னார்.

மே மாதத்தில் உலக வங்கியின் தலைவர் பால் உல்ஃபோவிச் தன் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை வந்தது. அது ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியது. உலக வங்கியின் நம்பகத்தன்மைக்கு ஆழமான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.அதிலிருந்து அதை மீண்டெடுக்க வேண்டுமானால் வேறு வழியின்றி நம்பிக்கையற்ற சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையினை அது தெளிவுபடுத்தியது. அந்த நேரத்தில் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை உலக வங்கி அதிகாரிகள் வளரும் நாடுகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் போது அவர்கள் இன்றி நகைப்புக் குள்ளாகிறார்கள் என்று எழுதியது. இதோடு 2006ல் உலக வர்த்தக அமைப்பில் பேச்சு வார்த்தைகளில் ஏற்பட்ட முறிவினையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் உலகமயம் காலமாகி விட்டது. என்ற பிரகடனம் வெளியிடும் அளவிற்கு சிகாகோ பள்ளியின் பொருளாதாரத் தத்துவத்தை பொருளாதாரத்தின் தவிர்க்க பொறுத்து எனக்கூறி அதை திணிப்பதில் பெரும் பொறுப்பேற்ற இந்த மூன்று நிறுவனங்களும் (உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு) காணாமல் கரைந்து போகும் ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
புதிய தாராளமயக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு மிகவும் வளர்ந்த நிலையில் லத்தீன் அமெரிக்காவில் எழுவது பொருத்தமானது தான், ஏனெனில் அந்தப் பகுதி தான் அந்த கோட்பாட்டிற்கான முதல் சோதனை களமாக இருந்தது. அந்நாடுகளுக்கு உலகமயத் தாக்குதலைத்தாங்கும் உறுப்புகளை மீண்டும் புதுப்பிக்க நிறைய கால அவகாசமும் கிடைத்திருக்கிறது அதிர்ச்சி அரசியல் எப்படி செயல்படும் எனப் புரிந்து கொள்ளவும் பல முடிகிறது ஆண்டுகளாக ஒவ்வொரு நாட்டின் தெருக்களிலும் எதிர்ப்பு இயக்கங்கள் புதிய அரசியல் கூட்டுக்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவைகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதோடு அரசின் அதிகார கட்டமைப்பையே மாற்ற முனைகின்றன.

உணர்வுகளை பாதிக்கும் அதிர்ச்சிகள் தோன்றும் போது – சுனாமி, ஈராக் யுத்தம், பூகம்பங்கள் போன்ற அதிர்ச்சிகள் உட்பட – அவைகளைப் பயன்படுத்தி சுரண்டல் கொள்கையினை அமுல்படுத்துவது தான் அதிர்ச்சி கோட்பாட்டின் மையக் கருத்தாகும். எதிர்பாராத நேரத்தில் திடீர் தாக்குதலை நடத்தும் தந்திரத்தை அது உள்ளடக்கியது.

எதை அதிர்ச்சி என்று புரிந்து கொள்ளுகிறோம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கும் அவைகளை விளக்கிச் சொல்வதற்காக கிடைத்திருக்கும் தகவல்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்குமானால் அங்கே அந்த நிகழ்வுகள் அதிர்ச்சியினைக் கொடுக்கிறது. அப்படி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய ஒரு புதிய பார்வையினையும், விளக்கத்தையும் பெறுகிற போது, நமக்கு சரியான திசைவழி கிடைக்கிறது. உலகம் உய்ய ஒரு பாதை உருவாகிறது.

அதிர்ச்சிக் கோட்பாடு இயங்கும் முறை பற்றி கூட்டாகவும் ஆழமாகவும் புரிந்து கொண்டால், எந்த சமூக அமைப்பும் எதிர்பாரா அதிர்ச்சிக்கு உள்ளாகாது. அதிர்ச்சி எதிர்ப்பினை நிலை குலையச் செய்வதும் இயலாது