– ச.லெனின்
இந்தியாவின் 1 சதவீத பெருமுதலாளிகள் நாட்டின் 58.4 சதவீத சொத்துகளை வைத் துள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டு 34 சதவீ தமாக இருந்த இவர்களின் இந்த சொத்து மதிப்பு தற்போது 58 சதவீதத்தை கடந்துள்ளது. உலக சராசரி விகிதமே 50 சதவீதம் தான் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
அதே நேரம், ஏழ்மை நிலையில் உள்ள 70 சதவீத மக்களின் சொத்து மதிப்பு வெறும் 7 சதவீதம் தான் உள்ளது. இதில் குறிப்பிட வேண் டிய அம்சம் என்னவெனில் 2000 ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்தது இவர்களின் சொத்து மதிப்பு இடைப்பட்ட இக்கலத்தில் சரிபாதியாக சுரண்டப்பட்டுபட்டுள்ளது.
நாட்டின் முதல் 84 பெருமுதலாளிகளிடம் மட்டும் 248 பில்லியன் டாலர் சொத்து உள்ளது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் இது 2.1 ட்ரில்லி யனாக (ஒரு டிரில்லியன் என்பது பில்லியனின் ஆயிரம் மடங்கு) உயரும் என்றும் அது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகமாகும் என்று கணிக்கிறது ஆப்ஸ்போர்ம் அறிக்கை.
கடந்த இருபது ஆண்டுகளில் முதலாளி களின் வருமானம் 15 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துவந்துள்ளது. ஏழைகளின் வருமானமோ 15 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.
இந்திய அரசின் பொருளாதார நடவடிக்கை களின் வெளிப்பாடே இந்த சமமின்மையாகும். சுதந்திர இந்தியாவின் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவான அரசு கட்டுப் பாடுடைய அரசு முதலாளித்துவம் 1980 களில் முட்டுச் சந்திற்கு வந்து நின்றது. முதலாளித்துவ வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை திரட்டு வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யினால் ஏற்பட்ட கடன் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் தீவிர தாக்குதல்கள் இந்திய பெரு முதலாளிகளிடத்தில் குணாம்ச ரீதியான பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இது அரசின் பொருளாதார திட்டமிடல்களிலும் மாற்றங் களை மேற்கொள்ள செய்தது.1991 க்கு பிறகான புதிய பொருளாதார கொள்கை என்று அறியப் பட்ட நவீன தாராளமய கொள்கையை இந்திய பொருளாதாரம் தழுவியது. இது தொடர்ந்து நிலவி வந்த சமமின்மையை, ஏற்றத் தாழ்வை மேலும் அதிகபடுத் தியது. அதன் வெளிப்பாடே மேல நாம் பார்த்த புள்ளிவிபரங்கள்.
தாராளமயமாக்குதல் காரண மாக சமூக பொருளாதார பிராந் திய ஏற்றத்தாழ்வுகள் தீவிர மடைந்துள்ளன என்று நமது மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. இன்றைய சமூக பொருளாதார நிலைமைகள், நமது கட்சித் திட்டம் முவைத்துள்ள இக் கருத்தையே இன்றும் வழிமொழி யும் வண்ணம் உள்ளது.
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர் கிறது, இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி (ழுனுஞ) உயர்ந்துள்ளது என்று அரசு பல புள்ளி விபரங்களை கொடுத்தாலும், இது யாருக்கான வளர்ச்சி ? யாருக்கான லாபம் ? என்பதை ஏனைய பல புள்ளிவிபரங்கள் காட்டி கொடுத்து விடு கிறது. தொழிலாளர்கள், பெண்கள், ஒடுக்கப் படும் சமூக மக்கள், சிறுபான்மையினர், தலித்து கள் என அனைத்து பகுதி மக்கள் மீதும் கடுமை யான சமூக பொருளாதார தாக்குதல்களும், பெருமுதலாளிகளுக்கு சலுகைகளும், கரிசனம் மிக்க அணுகுமுறையும் அரசின் செயல் திட்ட மாக தொடர்கிறது.
15 வயதிலிருந்து 29 வயதிற்குட்பட்ட இளம் இந்தியர்களில் 30 சதவீதத்தினர் வேலையின்றி வீதியில் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் 1.36 லட்சம் வேலைகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழில் களிலேதான் அதிகப்படியான வேலைகள் இன்று உள்ளது. இதில் இன்னும் கொடுமை என்ன வெனில் அமைப்பு சார்ந்த தொழில்களிலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெருகிவருகின்றன .
பணியாற்றும் பெண்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே நிலையான பணிகளில் உள்ளனர். ஆண் செய்யும் அதே வேலையை பெண்கள் செய் தாலும் ஊதியத்தில் வேறுபாடு நிலவுகிறது. அதிகப்படியான பாலியல் பாகுபாடு பார்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய 145 நாடுகளில் 136 வது இடத்தில உள்ளது. பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் மீதான சமூக பொருளாதார ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதையே அரசின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மாநிலங்களுக்குக்கிடையே முதலீடுகளிலும், வளர்ச்சியிலும் பல்வேறு ஏற்றத்தாழ்வை தாராள மய கொள்கை உயர்த்தியுள்ளது. மேலும், மேலும் சலுகை எங்கு கிடைக்கிறதோ அங்கே தான் முதலீடு செய்வது என்பதும், முதலாளிகளுக்கு ஆதரவான அரசுகளின் செயல்பாடே நிறுவனத் தின் தொடர் இருப்புக்கான அடிப்படையாகவும் மாற்ற பட்டிருப்பது, மாநிலங்கள் முதலீடுகளை பெறுவதிலும், தக்கவைத்து கொள்வதிலும் சமமின்மையை உயர்த்தியுள்ளது.
2015-16 நிதியாண்டில் கூட இரண்டு லட்சம் கோடி வரை பொதுத்துறை நிறுவனங்கள் அரசுக்கு நிதி ஆதாரத்தினை வழங்கியுள்ள போதும், தனி யாருக்கு பொதுத்துறை நிறுவனங்களை அடி மாட்டு விலைக்கு விற்கவே அரசு தீவிரம் காட்டு கிறது. தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை விற்றும் வருகிறது. பொதுத்துறையை விற்பது என்பது பொருளாதார ரீதியான பாதிப்பு என்ப தோடு, சமூக ரீதியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட வைகளையும் சேர்த்தே பாதிப்புக்குள்ளாக்கு கிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதை கேட்கும் திறன் அற்றவர் காதில் ஊதும் சங்காகவே அரசு பாவிக்கிறது.
முதலாளிகளுக்கு ஆதரவான அரசின் விசு வாசம் என்பது, தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகள் நல சட்டமாக மாற்றும் வகையில் திருத்தங்களை மேற்கொள்கிறது. 15% தொழி லாளர்கள் ஆதரவு இருந்தால் தொழிற்சங்கள் அங்கீகரிக்க படலாம் என்பதை 30% உயர்த்தி யுள்ளது. 20 தொழிலாளர்கள் இருந்தால் தொழிற் சங்க உரிமை என்பதை மாற்றி 50 தொழிலாளர்கள் இருந்தால் தான் தொழிற்சங்க உரிமை என்கிறது.
விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 40000 விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளது. 1951 ல் ஒரு நபர் சராசரியாக 61கிராம் வரை பருப்பு உட்கொண்டு வந்த நிலை 2015-ல் 44 கிராமாக குறைந்துள்ளது. உணவு பாதுகாப்பு என்பதையே கேள்விக்குறியாக்கி யுள்ளது.
நாட்டின் மொத்த விவசாய கடனே 75,000 கோடி தான். அதே சமயம் அதானியின் நிறுவனத் தின் கடன் மட்டும் 72,000 கோடியாகும். மாணவர் களின் கல்வி கடனை வசூலிக்க அரசு வாங்கி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் கொடுத்து மாணவர்களின் கழுதை பிடிக்கிறது. பல கார்ப்பரேட் நிறுவனங்களோ தங்களின் வங்கி கடன்களை வராக்கடன் பட்டியலில் சேர்க்க வைக்கிறது.
பொதுத்துறை வங்கிகளில் தற்போதைய வராக் கடன் என்பது 6.8 லட்சம் கோடிகளாகும். இக்கடனில் 70% கடன் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடையதாகும். ரிசர்வ் வங்கியின் தகவல்படி கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 3.5 லட்சம் கோடி மோசமான கடன் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது கார்ப்பரேட் நிறுவங்கள் கட்டாத கடன்களுக்கு பதிலாக புதிதாக அவர்களுக்கு கடன் கொடுக்கப் பட்டு பழைய கடன்கள் வசூலிக்க பட்டதாக மாற்றப்படும். இப்புதிய கடன் கார்ப்பரேட் முதலாளிகளின் வசதிக்கு ஏற்ப தவணை முறை யில் மாற்றம், வட்டி குறைப்பு என பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும்.
சமீபத்தில் அதானியின் இரண்டு நிறுவனங் களுக்கு 15,000 கோடி வரை கடன் வழங்கப் பட்டது. அந்த இரண்டு நிறுவனங்களின் மொத்த வருமானமே அந்நிறுவத்திற்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியை கட்ட கூட போது மானதாக இல்லை. ஆனால் விவசாய கடனுக் கும், கல்விக்கடனுக்கும் சூரிட்டியும், சொத்து பத்திரமும் இல்லாமல் ஒன்றும் நடக்காது.
வங்கியில் இருப்பது யாருடைய பணம்? 60% மான பணம் சாதாரண குடியானவர்களின் சேமிப்பு பணம், 15% அரசின் பணம். சுமார் 75% மக்களின் பணமே வங்கியில் உள்ள போதும் அதன் பலன் கள் எல்லாம் பெருமுதலாளிகளுக்கும், நஷ்டங் கள் மட்டுமே மக்களுக்குமாக மாற்றபடுகிறது.
2015-16 நிதியாண்டில் மட்டும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ரூ 6.59 லட்சம் கோடி வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் நாடாளுமன்றத்தை கூட்டி நிகழ்த்தப்பட்ட சமீ பத்திய நள்ளிரவு கொள்ளையன சரக்கு மற்றும் சேவை வரியும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை மையப்படுத்தியதே. மாநில உரிமைகளை பறிப்பதும் கூட. பாதுகாப்பு துறை, ரயில்வே, தகவல் தொடர்பு, பெட்ரோலியம் என அரசின் கேந்திரமான அணைத்து தொழிலிலும் 100ர% அந்நிய நேரடி முதலீட்டை தற்போதைய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இது போன்ற அரசின் நடவடிக்கைகள் இருவேறு இந்தியாவிற்கிடையே தீவிரமான இடைவெளியை அதிகப்படுத்துகிறது. ஏழை இந்தியா மேலும் ஏழையாகவும், பணக்கார இந்தியா மேலும், மேலும் வசதி வாய்ப்புகளை பெற்று வளர்ச்சியுறவும் வழிவகை செய்கிறது.
மேற்கண்ட தகவல்களோடு கட்சி திட்டத்தின் அத்தியாயம் மூன்றில் உள்ள பத்திகள் 3.11 முதல் 3.14 வரையிலான அம்சங்களின் தற்கால பொருத் தப்பாடு சற்று புரிபடும். தாராளமயமாக்கலின் விளைவாக இந்திய சமூகத்தில் வளர்ந்துள்ள சமமின்மையை மேற்கண்ட புள்ளிவிபரங்கள் எடுத்துரைக்கும்.