‘ட்ரம்ப் திட்டம்’ என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால், அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்த இதழில் Leftword பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் விஜய் பிரசாத் பதிலளிக்கிறார். நேர்காணல் ஆர்.ப்ரசாந்த். தமிழில் வீ.பா.கணேசன்.

‘ட்ரம்ப் திட்டம்’ என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால், அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அல்லது திறமையற்றதொரு அதிபரின் குழப்பமான நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் அது என்பதாகவே பார்க்கிறீர்களா?

மேலோட்டமாகத் தெரிவதை விட ‘ட்ரம்ப் திட்டம்’ என்பது மிகவும் ஒழுங்கமைவான ஒன்று என்றே நான் கருதுகிறேன். திறமையற்ற வகையில் அவரது நடவடிக்கைகள் உள்ளன என்பது உண்மைதான். டிவிட்டரிலும் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார். அவர் என்ன செய்கிறார் என்பதை தொடர்ந்து கவனிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது என்பதோடு, அதில் ஒரு சில விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவும் உள்ளன. என்றாலும் ட்ரம்ப்-இன் மீது மட்டுமே நம் கவனத்தைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. முதலில் திட்டம் பற்றிப் பார்ப்போம்.

முதலாவதாக, தங்கள் வேலைகள் காணாமல் போய்விட்டன என்றும், தங்கள் எதிர்காலம் மறைந்து விட்டது என்ற எண்ணத்தோடு தாங்கள் அவமானப்படுத்தப் படுகிறோம் என்றும், தரம் தாழ்த்தப்படுகிறோம் என்றும் நினைத்துக் கொண்டிருந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த கருத்தால் உழைக்கும் தொழிலாளர்களில் ஒரு பிரிவினரை மிகச் சிறப்பான வகையில் ட்ரம்ப்பினால் நெருங்க முடிந்துள்ளது. அமெரிக்காவை மீண்டும் மிகச் சிறப்பானதாக ஆக்குவோம் என்ற கோஷம் அவர்களிடையே எதிரொலித்தது. ஏனெனில் அவர்களது அமெரிக்கா, அதாவது கருத்தால் உழைக்கும் தொழிலாளர்களின் அமெரிக்கா, மிக வேகமாக மறைந்து வருகிறது என்றே அவர்கள் கருதினார்கள். அது வெள்ளையர் பிரிவைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் அல்ல; 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஒபாமா அதிபராக இருந்தபோது தேநீர் விருந்து இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த கருத்தால் உழைக்கும் தொழிலாளர்கள்தான் ட்ரம்ப்பின் இயக்கத்திற்குள் பெருமளவிற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

இப்போது ட்ரம்ப் வெளிப்படுத்தும் பழமைவாதம் என்பது அமெரிக்காவை மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தும்படியான அமெரிக்காவின் பழைய பழமைவாதத்தைப் போன்றது அல்ல. அமெரிக்காவை மீண்டும் மிகச் சிறப்பானதாக ஆக்குவோம் என்பதன் பொருள் தனது தேச நலனுக்காக சர்வதேச மேடையில் அமெரிக்கா தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும். தீவிரமான வலதுசாரிகள் வாதாடுவதெல்லாம் பிரிட்டன், ப்ரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள தலைமை உலகமய நோக்கம் கொண்டதாக மாறியுள்ளது. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், இந்தத் தலைமை தங்கள் தேசிய நலன்களின் மீது கவனம் செலுத்துவதாக இல்லை என்பதே ஆகும். ஆண்டுதோறும் டவோஸ் நகரில் ஒன்று கூடும் உலகத்தின் மேல்தட்டுப் பிரிவினரின் நலன்களில்தான் அவர்கள் கவனம் செலுத்தி வந்தனர். உண்மையில் இந்த வாதத்தில் கொஞ்சம் உண்மையும் இருந்தது என்றும் கூறலாம். உண்மையில் டவோஸ் முதலாளிகளின் இந்த சர்வதேச நிர்வாகிகள் தங்களது நலன்களை கவனமாகவே பார்த்துக் கொண்டார்கள். டவோஸ் முதலாளிகளின் சார்பாகவே அவர்கள் உலக அமைப்பை நிர்வாகம் செய்து வந்தார்கள். இதற்கு மாறாக டவோஸ் முதலாளிகளின் சார்பாக இல்லாமல் அமெரிக்க முதலாளிகளின் சார்பாகவே உலக அமைப்பை நாம் நிர்வாகம் செய்ய வேண்டும் என்றுதான் ட்ரம்ப் சொல்கிறார். உலகளாவிய முதலாளிகளில் பெரும்பகுதியினர் அமெரிக்க முதலாளிகளாகவே இருக்கிறார்கள் என்பதாகவே இருந்தது. அவர்களின் திட்டத்தில் பெரும்பகுதி அமெரிக்க டாலர்-வால் ஸ்ட்ரீட் கூட்டணியால்தான் நடத்தப்படுகிறது. எனவே, ட்ரம்ப் சொல்வது என்னவென்றால், உலகப் பொருளாதார அமைப்பை நிர்வகிப்பதற்காக உலகளாவிய பொருளாதார நிகழ்ச்சி நிரல், உலகளாவிய மனித உரிமைகளுக்கான நிகழ்ச்சி நிரல் அதாவது மனித உரிமைகள் குறித்த ஜெனிவா ஒப்பந்தம் போன்றவற்றால் நாம் மிகவும் கட்டுண்டு கிடக்கிறோம். எனவே அமெரிக்க ராணுவம் மேலும் தீவிரமாக சண்டையிட வேண்டும்; மேலும் அதிகமான வன்முறையில் இறங்க வேண்டும்; அதே நேரத்தில் அமெரிக்க நிதித் துறை அமெரிக்காவில் நலன்களைப் பாதுகாப்பதற்கு மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். எனவே ‘முதலில் அமெரிக்கா’ என்ற இந்த நிலைபாடு என்பது நிச்சயமாக மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்பது அல்ல; மாறாக, அது மேலும் மேலும் அப்பட்டமான ஏகாதிபத்தியம் என்பதைத் தவிர வேறல்ல.

எனவே ‘ஹிலாரி ஒரு ஏகாதிபத்தியவாதி என்பதால் அவரை விட ட்ரம்ப் மேலானவர்’ என்று மக்கள் சொல்லும்போது குழப்பம்தான் ஏற்படுகிறது. ஹிலாரி ஏகாதிபத்தியவாதிதான். ஆனால் ட்ரம்ப் ஊக்கமருந்தால் உரமேற்றப்பட்ட ஏகாதிபத்தியவாதி. அவரது ஏகாதிபத்தியம் மேலும் மேலும் பராக்கிரமம் மிக்க ஏகாதிபத்தியம் என்றே கூறலாம். லிபியா, சிரியா, இராக் போன்ற நாடுகளின் கண்ணோட்டத்தின்படி தங்களின் மீது குண்டுகள் வந்து விழும்போது, அது நடுத்தரமான ஏகாதிபத்தியவாதி போட்டதா? அல்லது முரட்டுத் தனமான ஏகாதிபத்தியவாதி போட்டதா? என்பது முக்கியமில்லை. என்றாலும் கூட, ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இதிலுள்ள ஒருசில வேறுபாடுகளை நாம் கண்டறிவது மிகவும் முக்கியமாகும். ஹிலாரி அதிபராக இருந்திருந்தால் ஒரு விதமான உலகளாவிய கண்ணோட்டத்துடன்  ஆட்சி செய்திருப்பார்; உலகளாவிய முதலாளிகளின் நிர்வாகியாகவும் அவர் இருந்திருப்பார். உலகம் முழுவதிலும் இருந்து வரும் சமிக்ஞைகள் குறித்து ஓரளவிற்கு உணர்ச்சியை வெளிப்படுத்துபவராகவும் இருந்திருப்பார். ஆனால் ட்ரம்ப்-ஐப் பொறுத்தவரையில், இவை குறித்தெல்லாம் முற்றிலும் கவலைப்படாத ஒருவராகவே இருக்கிறார். அதனால்தான் அவர் ஐரோப்பாவிற்குச் சென்றபோது அவர்களது திட்டத்திற்காக ஜெர்மன் முதலாளிகளை, ப்ரெஞ்சு முதலாளிகளை மிரட்டுகிறார். அவர்களைக் கேலி செய்கிறார். அமெரிக்க முதலாளிகள்தான் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்றே அவர் நம்புகிறார். எனவே இந்த இரு ஏகாதிபத்தியங்களும் அதன் வகையில் அல்ல; அளவில்தான் வேறுபட்டவையாக இருக்கின்றன.

அமெரிக்க போர் முரசும், அல்லல்படும் சிரியாவின் மக்களும்

மீண்டும் அமெரிக்கா போர் முரசு கொட்டுகிறது. எண்ணெய் வள அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபர் ஐ.நா நெறிகளை மீறி வைத் திருக்கும் பேரழிவு ரசாயன ஆயுதங்களிலிருந்து உலக மக்களை காக்க படையெடுக்கப் போவதாக வும் மேலும் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங் களுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் ஒபாமா ஓசை எழுப்பியுள்ளார். இந்த போர்முரசின் நோக்கம் எந்த சோற்றாலும் மறைக்க முடியாத மலையாகும்.. தனது மேலாதிக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டதாக பயந்து ஆயுத பலத்தை உலகிற்கு காட்டவும் எண்ணெய் வள நாடுகளை கிடுக்கிப்பிடி போட்டுவைக் கவும் இந்த போர் முரசு கொட்டப்படுகிறது. ரசாயன ஆயுதங்கள் ஸ்டாக் வைத்திருப்பது குற்றமென்றால் முதல் குற்றவாளி அமெரிக்காதான். ராசாயன ஆயுதத்தை பயன்படுத்தி மக்களை கொன்ற முதல் குற்றவாளியும் அமெரிக்காதான்.40 ஆண்டுகள் கடந்த பிறகும் வியட்நாம் மக்களும் மண்ணும் காடுகளும் அமெரிக்க ராணுவம் வீசிய ரசாயன விஷத்திலிருந்து இன்னும் மீளவில்லை.. இப்பொழுதும் சிரியாவில் ரசாயன ஆயுதத்தை ஏவியதும் அமெரிக்காவின் உதவியுடன் செயல்படும் பயங்கர வாத குழுதான் என்று ஐ.நா நிபுணர்கள் குழு கண்டறிந்து விட்டது. வேதனை என்னவெனில் மேலை நாட்டு செய்தி சேகரிப்பு நிறுனங்கள் அமெரிக்காவும் அல்கொய்தாவும் கூட்டணி வைத்து  சிரியாவிறகுள் பயங்கர.த்தை விதைத்து மக்களை கடந்த இரண்டு வருடமாக அகதிகளாக ஆக்குவதை  பூசி மொழுகி காட்டுவதுதான்.

இன் னொரு பக்கம், ஐ.நா அகதிகளின் கமிஷனர் வேதனை தரும் புள்ளிவிவரத்தை உலக மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார். இரண்டேகால் கோடி மக்கள் தொகை கொண்ட சிரியாவில் ஆயுதம் தாங்கிய மோதல் தொடங்கியதிலிருந்து சுமார் 20 லடசம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அண்டைநாடுகளான லெபனா னில் 716,000, ஜோர்டன்னில் 515,000, துருக்கியில் 460,000, ஈராக்கில் 169,000, எகிப்தில் 111,000, சிரியா விற்குள் குடியிருப்பைவிட்டு வெளியேறியவர்கள் 42,50,000.இந்த புள்ளி விவரத்தை கொடுத்த ஐ.நா. அகதிகள் கமிஷனர், அண்டை நாடுகள் மட்டும் அகதிகளை பராமரிக்க இயலாது உலக நாடுகள் உதவ வேண்டுமென வேண்டுகோளும் விட்டுள்ளார். (ஆதாரம் யு. என். எச். ஆர்.சி)

அகதிகளில் பெரும் பகுதி 12 வயதிற்கும் குறைந்த குழந்தைகளே, ரத்தம் சிந்தும் காயங்களுடன் குழந்தைகளும், பெண்களும் ஆண்களும் உடுத்திய ஆடை தவிர வேறு எதுவுமில்லாமல் வருவது கல் நெஞ்சங்களையும் இளக்கிவிடும் என்று பத்திரிகை கள் எழுதுகின்றன.

சில மேலைநாட்டு தன்னார்வக் குழுக்களும் நிதி, பொருட்கள் திரட்டி உதவுகின்றன. பத்திரிகை களும் ஊடகங்களும் சிரிய மக்கள் படுகிற வேதனை களை படம் பிடித்து காட்டுகின்றன. வேதனை என்னவெனில் அமெரிக்க படையெடுப்பே சரியான தீர்வு என்ற கருத்தை பலப்படுத்துகிற முறையில் செய்திகள் வழங்கப்படுகின்றன. அதாவது அமெ ரிக்கா ஆயுதங்கள் கொடுத்து ஆதரிக்கிற பயங்கர வாத குழுக்களின் கொடுமைகளை தற்காப்பு நட வடிக்கை போல் பூசியே எழுதுகின்றன. அரசியல் தீர்வை முன் மொழியும் நாடுகளை சர்வாதிகாரி ஆசாத்திற்கு ஆதரவு தருபவைகள் என்று சித்தரித்து சிறுமைப்படுத்துகின்றன. உள்நாட்டு பயங்கரவாத குழுக்கள்,அரசின் அடக்குமுறை இவைகளிலிருந்து மக்களை காக்கும் அரசியல் தீர்வை பிரபல ஊட கங்கள் விவாதிப்பதே இல்லை.  வரலாறு கூறுவதென்ன?

முதல் உலக யுத்தம் நடக்கும் தருணத்தில் (1916). பிரிட்டனும் பிரான்சும் ரஷ்யாவும் வெற்றிவாகை சூட நேர்ந்தால் ஓட்டாமன் சாம்ராஜ்யத்தை பல நாடுகளாக பிரித்து பங்கு போட ஒரு ஒப்பந்தம் செய்து கொணடனர்.. அந்த ஒப்பந்தபடி ஒட்டாமன் சாம்ராஜ்யத்தின் (இன்றைய துருக்கி) பகுதியாக இருந்த ஆசியா மைனர் மற்றும் வட ஆப்பிரிக்க பகுதியை நாடுகளாக பிரித்து பிரிட்டனும், பிரான்சும் பங்கு போட்டுக்கொண்டனர். இதனை .அதிகாரப்பூர்வமாக ஆசியா மைனர் ஒப்பந்தம் என்று அழைப்பர். அந்த ஒப்பந்தப்படி சிரியா பிரான்சின் காலனியானது

முதலாம் உலகப் போர் முடிந்த தருவாயில் உருவான சோவியத் அரசு ஜார் மன்னன் காலத்திய ரஷ்ய காலனிகளுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கியது. 1916ல் காலனிகளை மறு பங்கீடு செய்து ரஷ்ய உட்பட ஏகாதிபத்தியவாதிகள் போட்ட ரகசிய ஒப்பந்தங்களை லெனின் வெளியிட்டு காலனிகளாக ஆன ஆசிய, ஆப்பிரிக்க மக்களிடையே விடுதலைக்கான போராட்டத்திற்கு விவேக மூட்டினார் அதன் விளைவாக பல நாடுகளில் விடுதலைப்போர் வீறு கொண்டு எழுந்தது. அக்காலத்தில் விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் ஆசானாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சோவியத் உதயமான பின் விடுதலை இயக்கங்களை முன்பு போல் காலனியவாதிகளால் நசுக்க முடிய வில்லை . அந்த வழியில் 1946ல் சிரியா விடுதலை பெற்ற நாடானது.

சிரியாவில் வாழ்கிற  மக்கள் பல பண்பாட்டுடன் வாழ்கிறவர்கள் குர்திஷ் மொழி பேசுகிற மக்கள், அர்மினியர்கள்  அசிரியன்கள் துருக்கர்கள், கிருத்து வர்கள், துருஸ், அலாவைத், ஷியா, அரபுசன்னிஸ். என்று வேற்றுமையில் ஒற்றுமையில் வாழ்பவர்கள். பல மதங்கள் அதன் உட்பிரிவுகள் உள்ள ஒரு நாட்டில் மதச்சார்பற்ற அரசாக இருந்தால்தான் அமைதியாக ஆளமுடியும் என்று கருதிய. விவேக முள்ள ஆட்சியாளரகள் மதச்சார்பற்ற ஆட்சியை கண்டனர். அந்த வகையில் சிரியாவிலும் அரசு மதச்சார்பற்றே இருந்துவருகிறது ஒட்டாமன் சாம் ராஜ்ய காலத்திலேயே மதச்சார்பற்ற அரசு என்ற கோட்பாடு பின்ப்பற்றபட்டதால் இது பண்பாட்டு அம்சமாக  அங்கு இருக்கிறது என்று வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த சிரியா இன்று மதவாத பயங்கர வாதக் குழுக்களின் போர்க்களமாக உள்ளது. விஷவாயு ஆயுதமாக்கப்பட்டு மக்கள் கொல்லப்படுகின்றனர், முடமாக்கப்படுகின்றனர்

இந்நிலையில் ரசாயன ஆயுத ஆபத்திலிருந்து உலக மக்களை காப்பாற்ற அமெரிக்கா படையெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. 5110 கடல் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சிரியாவை நோக்கி கடற்படையை அனுப்பி  ஆள் இல்லா விமானங்களையும் ஏவுகனைகளையும் ரசாயன ஆயுத கிடங்குகள் நோக்கி ஏவ எடுத்த அமெரிக்கா வின் முடிவு விவேகமானதா? ஏற்கனவே உள்நாட்டு கலவரத்தால் லட்சக்கணக்கில் அகதிகளாகி உள் நாட்டிலும் அண்டை நாடுகளிலும் குடி பெயர்ந்து அல்லலுறும் அம்மக்களை ஒபாமா ஏவப்போகும் டோரோன்சும், குருயிஸ் மிசைல்களும் காப்பாற்றுமா? சிரியாவில் உள்நாட்டு ஆயுத மோத லுக்கு காரணமென்ன? எது தீர்வு? இன்று அமெ ரிக்கா, இந்தியா உட்பட ஸ்டாக் வைத்திருக்கும் ரசாயன ஆயுதம் மற்றும் அது போன்ற பேரழிவு ஆயுதங்களை ஒழிக்கும் காலம் வருமா? இதற்கான பதிலை முடிந்தவரை தேடுவோம்.

கடந்த சில ஆண்டுகளாக அரபு நாடுகளில் மக்கள் எழுச்சியுற்று மக்களுக்கான ஜனநாயக அரசை நிறுவ முயற்சிப் பதையும் உள்நாட்டு சுரண்டும் கூட்டத்தில் ஒரு பகுதி மேலை நாடுகளின் உதவியுடனும் ராணுவ தளபதிகளின் ஆதரவுடனும் சுரண்டும் வர்க்கத்திற்கு  தில்லு முல்லு செய்ய வாய்ப்பளிக்கும் அரசிய லமைப்பை திணிக்க முயற்சிப்பதையும், இன்னொரு பகுதி பழமைவாத பார்வையோடு. இஸ்லாமிய அரசை நிறுவ முயற்சிப்பதையும். கண்டுவருகிறோம். இதே காட்சி இப்பொழுது சிரியாவிலும் அரங்கேறியுள்ளது  சிரியாவிலும் மக்களுக்கான ஜனநாயகத்திற்காக 2011ல் மக்கள் எழுச்சியுற்றனர். துவக்கத்தில் அதிபர் ஆசாத் ராணுவத்தை கொண்டு மக்களை அடக்க எடுத்த நடவடிக்கைகளே, அவரை சிக்கலில் தள்ளிவிட்டது. மக்கள் மீது சுட ஒரு பகுதி ராணுவம் மறுத்தது. மறுக்கும் ராணுவ வீரர்களை சுட்டுத்தள்ளவே ஒரு கட்டத்தில் ராணுவம் பிளவுபட்டு அரசை எதிர்த்தது. மக்கள் ஒதுங்க ஆயுதம் தாங்கிய மோதலாகிவிட்டது. ஆசாத்தின் அடக்கு முறை இரண்டு சக்திகளை உசுப்பிவிட்டது. அரபு நாடுகளிலே இஸ்லாமிய அரசை நிறுவ கனவு காணும் சாவூதி மன்னருக்கும் அவரது கூட்டாளி களுக்கும், சன்னி மத அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கும் அது வாய்ப்பு கொடுத்துவிட்டது.

இன்று அல்நுஸ்ரா பிரன்ட் என்ற பெயரில் அல்கொய்தா சவூதி மன்னரின் உதவியுடன் சிரியாவில் ஆசாத்தை எதிர்க்கும் ராணுவத்திற்கு உதவியாக இயங்குகிறது. இந்த அமைப்பு சன்னி மத பிரிவை சார்ந்த சகிப்புத் தன்மையற்ற தலிபன் பாணி பயங்கரவாத பிரிவாகும். இதற்கு எதிராக ஹிஸ்புல்லா அரசியல் இயக்கத்தின் ஆயுதம் தாங்கிய குழு அரபு நாடுகளில் உள்ளது. லெபனானில் அது ஆளும் அணியில் ஒன்று.. சிரியாவிற்குள். பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக  இதுவும் லெபனானில்லிருந்து வந்துள்ளது சிரியா என்ற போர்களத்தில்  அமெரிக்கா அல்கொய்தா அரபு மன்னரகள் ஒரு பக்கமும் இவர்களது ஆதிக்கத்தை எதிறகும் அரபு நாடுகளின் அரசியல் இயக்கங்கள் எதிர்ப்பக்கமும் மோதுகின்றன.  .

உலக அரசியலில் தங்கள் கொடி தவிர வேறு கொடிகளை பறக்கவிடக் கூடாது என்ற ஆவேசத்துடனும் நீண்ட கால திட்டத்துடனும் செயல்படும் முன்னாள் காலனியவாதிகளான பிரான்ஸ், பிரிட்டன் அமெரிக்கா தங்களுக்கு அனுசரனையான அரசாக சிரியாவில் அமைய தலையிடும் வேளை வந்துவிட்டதாகக் கருதி அவர்களும் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர். இதன் விளைவாக மக்கள் எழுச்சி சுருங்கி மக்கள் பங்கேற்க இயலாத ஆயுதங்கள் மட்டுமே மோதுகிற போர்க்களமாக சிரியா ஆனது. மக்கள் அகதிகளாகி வருகிறார்கள்..

நட்பு நாடுகளின் நிர்பந்தம் சர்வாதிகாரி ஆசாத்தை 2012 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்திட வைத்தது..  ஆசாத் தலைமையில்  தேசிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரிலும், ஆசாத் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட உருவான பாப்புலர் பிரண்ட் பார் சேன்ஞ் அன்ட் லிபரேஷன் எதிரணியும் போட்டியிட்டன.250 இடங்களுக்கு 7195 வேட்பாளர்கள் அதில் 710 பெண்கள் களத்தில் நின்றனர். 12 விதமான அரசியல் கட்சிகள் எதிரும், புதிருமாக இரண்டு அணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன.

ஒருபக்கம் தேர்தல் நடந்தாலும் ஆங்காங்கு பயங்கரவாதக் குழுக்களும் ஆசாத்தின் விசுவாச ராணுவமும் மோதி சிரியாவை போர்களமாக ஆக்குவது தொடர்ந்தது. இரு தரப்புமே தேர்தலை அமைதியான சூழ்நிலையில் நடத்தி மக்கள் விரும்புகிற ஆட்சியை  உருவாக்க விரும்பவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தேர்தலும் நடந்தது 14.8 மில்லியன் வாக்காளர்களில் 51.26 சத வாக்காளர்கள் வாக்களித்து ஆளும் கூட்டணி பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. எதிரணி தேர்தல் முடிவை ஏற்க மறுத்து. 19,மார்ச் 2013 அன்று  எதிரணியின் ஆயுதம் தாங்கிய பயங்கர வாத குழுக்கள் ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து கான் அன் அசால் நகரில் ராணுவத்தையும் மக்களை யும் கொல்லத் தொடங்கியது. அதே தேதியில் (19,மார்ச் 2013) ஆசாத் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு  புகார் அணுப்பி நிபுணர்களை அனுப்பி ஆய்வு செய்யக் கோருகிறார்..

அமெரிக்க ரசாயன ஆயுதங்களை ஸ்டாக் வைத்திருக்கும் ஆசாத் அரசுதான் மக்களை கொல்வதாக குற்றம் சாட்டி சிரியாமீது தாக்குதல் தொடுக்கப் போவதாக இப்பொழுது அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மூன்று நாடுகளும் ஆசாத்தை குற்றம் சாட்டியது. ஐ.நா.வின் பொதுச் செயலாளர்  எந்தெந்த இடங்களில் என்ன வகையான விஷவாயு? உயரிழப்பு, காயம்பட்டோர் இவைகள் பற்றி ஆய்வு செய்ய 21 பேர் கொண்ட நிபுணர் குழுவை அனுப்பினார். அது தயாரித்த அறிக்கையில் விஷவாயுவை ஏவியது யார் என்பதை முடிவு செய்யாது என்றும் தெரிவித்தார் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது  என்பதை கள ஆய்வு உறுதி செய்தாலும். அதனை ஏவியது யார் என்பதை ஐ.நா நிபுணர் குழு. தெறிவிக்கவில்லை. இதற்கிடையில் அமெரிக்கா ஆசாத் மீது குற்றம் சாட்டி ராணுவ தலையீட்டிற்கு முடிவு செய்துள்ளது. இதனை உலக நாடுகள் வேடிக்கை பார்க்க முடி யாது.. அதற்காக அமெரிக்காவின் படையெடுப்பை கண்டும் காணாமல் விடமுடியாது. அதனை உலக நாடுகள் தடுக்க வேண்டும்.. அமெரிக்காவின் படை யெடுப்பு திட்டத்தை எதிர்க்கும் சீனாவும், ரஷ்யாவும் கண்ணை மூடிக் கொண்டோ.அல்லது அரசியல் ஆதயத்திற்கோ ஆசாத்தை ஆதரிப்பதாக கூறுவது ஒரு பிரச்சார கற்பனையே…

கடந்தகால பிரச்சினைகளில் அந்த நாடுகள் எடுத்த நிலைபாட்டை உலகமறியும்.கடந்த காலத்தில் ஈராக் மீது ராணுவ நடவடிக்கை கூடாது என்று பாதுகாப்பு கவுன்சி லில் சீனாவும், ரஷ்யாவும் வீட்டோ செய்தது சரி என்பதை இன்று உலக மறியும்., லிபியாவில் கடாபி மக்கள் மீது விமானத்தாக்குதல் நடத்த முயற்சித்தால் அதனை தடுக்க நாட்டோ ராணுவத்தை அனுமதிக்க  ஏகமனதான தீர்மானம் நிறைவேற்ற இந்த இரு நாடுகளும் சம்மதித்தன. அதனை பிரெஞ்சு ராணுவம் தவறாகப் பயன்படுத்தி விமானத் தாக்குதல் நடத்தி மக்களை கொன்றதையும் உலகமறியும். அதனை இந்த நாடுகள் கண்டித்தன என்பதையும் உலகமறியும்.. அமெரிக்காவை சார்ந்து நிற்கவே விரும்பும் மன்மோகன் சிங் அரசு அமெரிக்க நடவடிக்கையை ஏற்கவில்லை என்பதை தெளிவாகவே கூறிவிட்டது..

இன்று பயங்கரவாத கும்பல் கள் சிரியாவை ரணகளமாக்குவதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் சவூதி அரேபியா, சிரியாவின் அண்டை நாடுகள் நினைத்தால் அங்கே அமைதியை கொண்டுவர முடியும். அமைதியான சூழலில் தேர்தலையும் நடத்த முடியும். ஆளுக்கொரு அரசியல் நோக்கத்திறகாக ஆட்சியை சிரிய மக்கள் கையில் கொடுக்க  இவர்கள் விரும்பவில்லை என் பதே உண்மை. இங்கே மக்கள் கையில் அதிகாரம் போகுமானால் பழமையான மதவாத அரசுகள் நிலவும் நாடுகளில் ஆயுதக்குழுக்களை நம்பாமல் சோவியத் பாணியில் மக்கள் ஆங்காங்கு தேர்தல் மூலம் நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி அதிகாரத்தை எடுத்துக் கொள்வர் என்ற பயமே இவர்களை ஆட்டிப்படைக்கிறது. டாலரைக் கொண்டும்,  எரி பொருள் எண்ணெய் வர்த்தக ஆதிக்கத்தைக் கொண்டும் உலகை ஆளும் முன்னாள் காலனிய வாதி களுக்கு அந்த மேலாண்மைக்கு ஆபத்து என்ற பயம் பிடித்தாட்டுகிறது. இந்த பயமே ஆளுக்கொரு பயங்கரவாத குழுக்களை பராமரிக்க தள்ளியுள்ளது.

ஆசிய கண்டத்தில் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பல நாடுகளில் மக்களுக்கான ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. அந்த வகையில் சிரியாவும் விதி விலக்கல்ல. உள் நாட்டில் பழமையான சுரண்டல் கும்பலும், மேலைநாட்டு உறவால் உருவான நவீன சுரண்டல் கும்பலும் மக்கள் கையில்  அதிகாரத்தை கொடுக்க தயாரில்லை. இந்த எதார்தத்தை முன்னாள் காலனியவாதி கள் பயன்படுத்தி பழைய சுரண்டலை தொடர எடுக்கிற முயற்சிகளே இன்றைய உலக அரசியலின் இழுபறி சக்தியாக உள்ளது.  எனவே ராணுவ நட வடிக்கை என்பதின் நோக்கம் வேறு… ஐரோப்பிய, அமெரிக்க பிரச்சாரகர்கள் அனைவரும்  யுத்தம் வருமா? வராதா? என்று தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கின்றனரே தவிர, ராணுவ நடவடிக் கையின் நோக்கத்தை விவாதிக்க மறுக்கின்றனர்.. ஒரு காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு  போர் என்பது ஒரு டானிக்காக இருந்தது.இப்பொழுது நிலைமை வேறு. அது டானிக்கா? விஷமா? என் பதை உறுதியாக சொல்ல முடியாது. எனவேதான் தர்ம சங்கடம்.

முஸ்லீம் உலகோடு நல்லிணக்கம் கண்டவர் என்பதற்காகவே நோபள் பரிசு பெற்ற ஒபாமாவிற்கு இதைவிட வேதனை தருவது வேறு எதுவும் இருக் காது என்று சிலர் எழுதுகினறனர். ஜனாதிபதி ஒபாமா தர்ம சங்கடத்தில் இருப்பதாக சொல்லப் படுகிறது. பெரும்பான்மை அமெரிக்க பாமரமக் களின் யுத்த எதிர்ப்புணர்வு அவரைத் தடுப்பதாகவும்.. மறுபக்கம் உலக அரசியலில் அமெரிக்காவின் மேலாண்மையை நிலைநாட்ட செனட்டர்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள். போர் தொடுக்கத் தள்ளுவதாகவும் எழுதுகினறன.. பிரிட்டனின் நாடாளுமன்றம் சிரியா மீது ராணுவ நடவடிக்கை கூடாது தடுத்துவிட்டது. பிரான்சிலும் நாடாளு மன்றத்தில் விவாதிக்காமல் ராணுவத்தை அனுப்பக் கூடாது என்ற குரல் எழுந்துள்ளது. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி என்ற வகையில் புஷ் போல் தான்தோன்றித்தனமாக முடிவெடுக்க அமெரிக்க அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. ஒபாமாவின் முடிவு எதுவாக வந்தாலும்  சிரியாவின் துயரம் நீங்க நெடுநாளாகும். பேரழிவு ஆயுதமில்லா உலகு, ஐ.நாவின் மூலம் தீர்வு தேடுவது என்பவைகளோடு அது இணை    க்கப்பட்டுள்ளது அதோடு அரபு நாடுகளை பிடித்தாட்டும் பழைய மற்றும் நவீன மூட நம்பிக்கைகள்  அகல்வதை பொறுத்துள்ளது.

வடகொரியாவின் அணுச்சோதனை!

பலமிக்க அமெரிக்காவின் ராணுவத்தளம் மற்றும் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் சுற்றி வளைத்து பொருளாதார, ராணுவ தாக்குதல் நடத்துகிற சூழல் வடகொரியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால், கடந்த அக்டோபர் 9 ம் தேதியன்று வடகொரியா அணுச் சோதனையை நடத்தியது. இந்தச் சோதனை உலகின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

முனனாள் சோவியத் யூனியனோடு வடகொரியா போட்டுள்ள ஒப்பந்தத்தில் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம் என்று உறுதியளித்திருந்தது. இது மீறப்பட்டுள்ள நிலையில் வடகொரியாவின் நட்பு நாடான சீனாவும் இச்சோதனை யை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தொழிலாளி வர்க்க நாடுகள் உலக ஒப்பந்தங்களை ஏற்று நடப்பது தான் கடந்த கால வரலாறு. ஏராளமான பிராந்திய மோதல்கள், கருத்து மோதல்கள் நிரம்பிய பகுதியாக இந்த வடகிழக்கு ஆசியா உள்ளது. இந்நிலையில் மேலும் அணு ஆயுதங்கள் அதிகரிப்பது ஆபத்தானது. அந்த வகையில் வடகொரிய அணுச் சோதனை கவலைக்குரிய நிகழ்வு; மிகவும் துரதிருஷ்டமான விளைவு.

அணு ஒப்பந்தங்கள் அணு ஆயுதங்களைக் குறைத்ததா?

அணு ஆயுதம் பயன்படுத்துவது குற்றம் என்பது சர்வதேச சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை ஒழிக்க அரசுகள் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் இறங்கின. நாட்டாமை செய்து உலகைச் சுரண்டி வரும் ஏகாதி பத்தியங்கள் இருக்கும் வரை, அணு ஆயுதங்களற்ற உலகம் சாத்தியமாகுமா? ஏகாதிபத்தியங்கள் தங்களது பொருளாதாரச் சுரண்டல் மேலாதிக்கத்தை மற்ற நாடுகள் மீது நிலை நிறுத்த, நிச்சயமாக ஆயுதங்கள் தேவை. அதிலும் சாதாரண ஆயுதங்களை விட பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தேவை. இதற்கு அவர்களுக்கு சரியான வழி, அணு ஆயுதத் தயாரிப்பு தான்.

இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களை விடாப்பிடியாக, உலக மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக தங்களிடம் சேர்த்து வைத்துள்ளன.

அமெரிக்காவும், சோவியத் யூனியனும் அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தின.  தற்போது அணு ஆயுதம் வைத்திருப்போர் வைத்திருக்கட்டும். ஆனால், புதிதாக யாரும் தயாரிக்க வேண்டியதில்லை என்கிற நிலைபாட்டில் போடப்பட்ட ஒப்பந்தம்  அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் (NPT – Non – Proliferation Treaty). இந்த நிலைபாட்டை இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகச் சரியாகவே எதிர்த்தன. பாரபட்சமான ஒப்பந்தம் என்றும், முற்றாக அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டுமே தவிர அணு ஆயுதம் கொண்ட நாடு,  அணு ஆயுதமில்லாத நாடு என்று இருவகையாகப் பிரித்து ஒரு அணுகு முறையை உருவாக்கிடக் கூடாது என்று இந்தியா கருதியது. இதனால் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஆக, இன்றைய உலகில் ஒப்பந்தங்கள் பல உருவானாலும், அணு ஆயுதங்களை ஒழிப்போம் என்ற முழக்கங்கள் விடாது ஒலித்தாலும், கொடூரங்களை நிகழ்த்தக் கூடிய அணு ஆயுதங்கள் இன்று உலகில் பலரிடம் உள்ளன என்பதே உண்மை.

உலகத்திற்கே ஆபத்தா?

இந்தப் பின்னணியில் வடகொரியா நடத்திய சோதனை பெரும் அச்சுறுத்தல் என்று பூதாகரமாக சித்தரிக்கப்படுகிறது. வட கொரியா அணுச்சோதனை செய்ததால் உலகமே இன்று ஆபத்தில் மூழ்கி இருப்பது போன்று பேசப்படுகிறது.

வடகொரிய அணுச்சோதனை, அளவுக்கு அதிகமாக ஊதிவிடப்படுகிறது. ஆனாலும், இந்தச் சோதனை பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய மக்களுக்குப் பாதகமான பல நிகழ்வுப் போக்குகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

முதன்மையாக, அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்க விழையும் லட்சியத்திற்கு வடகொரியச் சோதனை ஊறு விளைவித்துள்ளது. வடகொரியச் சோதனையின் விளைவாக பதட்டம் அதிகரித்துள்ளது. கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் நாடுகள் அச் சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. ஆனால், இதற்கு வடகொரியாவை மட்டுமே குறைசொல்ல முடியுமா? இந்த நிலைமைகளுக்கு உண்மையில் யார் காரணம்? நிச்சயமாக, அமெரிக்காவின் அடாவடித்தனமான ஆதிக்கப் போக்குதான், அடிப்படைக் காரணம். கொரியத் தீபகற்பத்தில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமெரிக்காவே முக்கிய காரணம்.

தீமைகளின் அச்சு – புஷ்ஷா? வடகொரியாவா?

2002 ம் ஆண்டு தீமைகளின் அச்சு என்று புஷ் குறிப்பிட்ட நாடுகள் இராக், இரான், வடகொரியா ஆகியன. பிறகு இராக் போருக்குப் பிறகு, சதாம் உசேனை வீழ்த்திய பிறகு, இராக்கினை அந்த பட்டியலிலிருந்து எடுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக சிரியாவை 2005 ம் ஆண்டிலிருந்து இணைத்து விட்டனர். ஆக, தீமைகளின் அச்சு நாடுகள் என்ற கொள்கை தொடருகிறது. இந்தக் கொள்கை அடிப்படையிலான ஆத்திரமூட்டல் மோதல் நடவடிக்கைகளை புஷ் நிர்வாகம் செய்து வந்துள்ளது. உலக வரலாற்றில் இல்லாத ஒரு அரக்கத்தனமான கொள்கையை புஷ் நிர்வாகம் தனது வெளியுறவு கொள்கையாக அறிவித்தது.

ஒரு நாடு தன்னைத் தாக்க முனைந்தால், பதிலடியாக யுத்தத்தில் இறங்குவதுதான் நாடுகளின் இயல்பான செயல்பாடாக இருந்து வந்துள்ளது. இதற்கு மாறாக ஒரு நாடு தன்னை தாக்கவில்லை என்றாலும் கூட, அது தாக்கக்கூடும் என்று முடிவுக்கு வந்து அந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பது என்ற வித்தியாசமான கொள்கையை புஷ் அறிவித்தார்.  இதற்குப் பெயர் “Pre Emptive War” என்பது.

இத்தகைய போர்களை தூண்டுகிற, அழிவை ஆராதிக்கிற கொள்கையை அதிபர் புஷ், துணை அதிபர் டிக் செனேய் ஆகியோர் கொண்ட வெறிக்கூட்டம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

இதன் விளைவாக பல நாடுகள் நிரந்தர அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடிபணியாத நாடுகள் மீது யுத்தம் நடத்தினர். இந்த நிலைதான் வடகொரியா தன்னை ஆயுத பாணியாக்கிக் கொள்ள காரணமாக அமைந்தது. தற்கால உலக அரசியல் உறவுகளை ஆய்வு செய்யும் எந்த ஒரு மாணவனும் இதனை ஏற்றுக் கொள்வான்.

புஷ் கூட்டம் வடகொரியாவை மட்டும் தீமைகளின் அச்சு என்று குறிப்பிட்டதோடு நிற்கவில்லை. அந்த நாட்டின் அதிபரான கிம் – ஜாங் – இல் லின் மீது பொய்யான அவதூறுகளைப் பொழிந்து வருகின்றனர். அவரை சுகவாசி, மனநோயாளி, ஆடம்பரப் பொருளின் பிரியர் என்றெல்லாம் தூற்றுகின்றனர். புஷ்கூட அவரை குள்ளன் என்றும், அதிக செல்லம் கொடுத்ததால் கெட்டுப் போன குழந்தை என்றெல்லாம் தரம் தாழ்ந்து வர்ணித்துள்ளார்.

உண்மையில், ஆசியாவிற்கு அணு ஆயுத ஆபத்து வடகொரியாவினால் மட்டும் ஏற்படவில்லை. அமெரிக்கா அவ்வப்போது இரான் மூலம் ஆசியாவிற்கு ஆபத்து, லிபியாவினால் அணு ஆபத்து, ஈராக்கினால் ஆபத்து என்று சொல்லியே ஆசியாக் கண்டத்தில் தனது தலையீட்டையும், செல்வாக்கையும் அதிகரித்து வந்துள்ளது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், இதுவரை அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை அழித்த ஒரே நாடு அமெரிக்காதான். ஆபத்து எனில், அது அமெரிக்காவினால் தான் ஆசியாவிற்கு ஏற்படும்.

வடகொரியச் சோதனை பற்றி பெரும் கூச்சல் எழுப்பு கிறவர்கள் அமெரிக்கா தான் உலகிலேயே அதிக அணுச்சோதனை செய்த  நாடு என்பதை மறக்க, மறைக்கப் பார்க்கின்றனர். அது மட்டுமல்லாது, ஆசியாவில் வடகொரியாவை விட இஸ்ரேல் மூலம் தான் அதிக அணு ஆபத்து உள்ளது. ஏனெனில் 200 க்கும் மேற்பட்ட பயங்கரமான அணு ஆயுதங்களைக் கொண்ட நாடு இஸ்ரேல். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களுக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். கொரிய தீபகற்பம் அணு ஆயுதங்களின் களமாக மாறுவது, தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல, ஆசியக் கண்டத்தின் பாதுகாப்பிற்கே ஆபத்தானது.

இதை வடகொரியா உணர்ந்திருக்கிறது. முற்றிலும் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பேச்சுவார்த்தை அவசியம் என்ற கொள்கை நிலைபாட்டிலிருந்து தான் இப்பிரச்சனையை வடகொரியா அணுகுகிறது. இதனை பாரபட்சமின்றி சிந்திக்கும் ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்கின்றனர்.

பேச்சுவார்த்தையை வெறுத்து ஒதுக்கும் புஷ்

2002 ம் ஆண்டு தீமைகளின் அச்சு நாடு என்று வடகொரியாவைக் குறிப்பிட்ட பிறகு பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடினார் புஷ். அது மட்டுமல்லாது ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் வேகம் பெற்றன. அமெரிக்கா, வடகொரியாவை ஆக்கிரமித்து, அச்சுறுத்தி வருகிற வரலாறு 1950 லிருந்து நடைபெற்று வருகிறது. எனினும், புஷ் நிர்வாகத்தின் கீழ் போர் வெறி அதிகரித்தது. இன்றைக்கும் கூட 40000 அமெரிக்கத் துருப்புகள் தென் கொரிய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அணு ஆயுதங்களும் தென்கொரியாவிடம் உள்ளன. தொடர்ந்து அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

புஷ் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு ஆளாயின. இதைவிட முக்கியமானது, அமெரிக்காவிலேயே புஷ் நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்துக் கண்டனக் குரல்கள் கடுமையாக எழுந்தன. அமெரிக்க அச்சுறுத்தலின் தன்மையை முழுவதும் உணர்ந்த பல ஆய்வாளர்கள் வடகொரியாவிற்கு வேறு வழியில்லாத சூழலில் வடகொரியா செய்தது நியாயமானது என வாதிடுகின்றனர்.

இடதுசாரி சிந்தனையாளரான நோம் சாம்ஸ்கி கூறினார்: அந்த பிராந்தியத்தில் அமெரிக்கா ஏராளமான அணு ஆயுதங்களை குவித்துள்ளது. இதனால் வடகொரியா அச்சுறுத் தலுக்கு ஆளாகியுள்ளது. எனவே, வடகொரியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.

முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், ஒரு நாட்டோடு பிரச்சனை இருக்கிறதென்றால், பேச்சுவார்த்தை நடத்திடாமல் இருப்பது முட்டாள்தனம் என்று புஷ்ஷைக் கண்டித்தார். ஜனநாயகக் கட்சியின் வளர்ந்து வரும் செல்வாக்கு மிக்க தலைவரான செனட்டர் பராக் ஓபமா (Barack Obama of Illinois) கூறினார்.

பனிப்போர் தீவிரமாக இருந்த காலத்தில் கூட-  அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்தையும் குறிவைத்து அணு ஏவுகணைகள் நிறுத்தப்பட்ட சூழலிலும் கூட, வெள்ளை மாளிகைக்கும், கிரெம்ளினுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது எனக் குறிப்பிட்டு வடகொரியாவோடு புஷ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கின்ற மூடத்தனத்தையும் எதிர்த்துள்ளார்.

எந்த முரண்பாடான பிரச்சனைகளையும் சுமுகமாக முடிக்காமல், பேச்சுவார்த்தையை அறவே வெறுக்கிற போக்கும், தான் சொல்வதையே மற்ற நாடுகள் ஏற்க வேண்டுமென்ற ஜனநாயக விரோதத் தன்மையும் கொண்டதாக புஷ் கூட்டம் இருந்து வந்துள்ளது.

இதோ அதற்கு ஓர் உதாரணம்.

சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜார்ஜ் புஷ்ஷிடம் பத்திரிக்கையாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர். அண்டை நாடுகளான இரானும், சிரியாவும் இராக்கில் அமைதி திரும்ப ஒத்துக்கொண்டால், அவர்களோடு சேர்ந்து செயல்பட அமெரிக்கா தயாராக இருக்கிறதா? இராக்கில் தற்போதுள்ள நிலையில் அண்டை நாடுகளின் ஒத்துழைப்பை, அறிவுள்ள யாரும் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால் புஷ் என்ன கூறினார்?

இந்தக் கேள்விக்குப் புஷ் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்.

இரானும், சிரியாவும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இராக்கிற்கு அவர்கள் உதவ வேண்டுமென்று உலகம் எதிர் பார்க்கிறது. இப்படி ஆணவத்தோடு கூறிவிட்டு, சரமாரியாக பல நிபந்தனைகளைப் போட்டு, தொடர்பில்லாத பல பிரச்சனைகளை இத்துடன் இணைக்கிறார் புஷ்.

இரானியர்கள் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பதை நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தான் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் அவர்களோடு பேசுவார்கள். பிறகு, அமெரிக்காவின் கடைக்கண் பார்வை கிடைக்க வேண்டுமென்றால், சிரியா என்னென்ன செய்ய வேண்டு மென்ற ஒரு பெரிய பட்டியலை புஷ் தெரிவித்தார். அத்துடன் லெபனான் அரசு இஸ்ரேல் தனது பிணைக் கைதிகளை திரும்பப் பெற ஹமாசினை நிர்பந்தப்படுத்த வேண்டும். ஹமாஸ், ஹிஸ்புல்லா இயக்கங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக சதி செய்வதை கைவிட வேண்டும். என்றெல்லாம் புஷ் அடுக்குகிறார். இப்படிப்பட்ட போக்கு, எந்த உலகப் பிரச்சனையையாவது தீர்த்திட உதவிடுமா? சட்டாம் பிள்ளைத் தனம், அதிகார ஆணவம் எல்லாம் சேர்ந்து இன்று உலகின் பல நாடுகளில் மோசமான விளைவுகளை உருவாக்கியுள்ளது. இதுவே அணு ஆயுதங்களைத் தயாரித்தால்தான் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற துரதிருஷ்டமான முடிவுக்கு வடகொரியாவைத் தள்ளியது.

வடகொரிய அணுப் பிரச்சனையைத் தீர்க்க ஆறு நாடுகள் கொண்ட ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா, வடகொரியா என்ற ஆறு நாடுகள் கொண்ட அமைப்பில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கைகள் இல்லை. உதாரணமாக 1994ம் ஆண்டு அமெரிக்கா அங்கீகரிக்கப் பட்ட வரையறை என்ற ஒப்பந்தத்தில் வடகொரியாவுடன் சேர்ந்து கையெழுத்திட்டது.

இதன்படி வடகொரியாவின் அணு கிராபைட் உலைகளுக்கு மாற்றாக லைட் வாட்டர் (Light Water) உலைகளை நிறுவ அமெரிக்கா ஒத்துக் கொண்டது. அதாவது, அணுசக்தி மூலம் மின் , எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வடகொரியாவிற்கு அமெரிக்கா உதவிட வேண்டுமென்றும், பதிலாக வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளை கைவிடுவது எனவும் முடிவாக்கப்பட்டது. ஆனால், தான் ஏற்றுக் கொண்ட  எந்த வாக்குறுதியையும், அமெரிக்கா நடைமுறைப்படுத்தவில்லை. இவை அனைத்தும் சேர்ந்துதான் தற்போதைய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தல் வரலாறு

அணு ஆயுத மிரட்டல் என்ற பாணத்தை வடகொரியா இப்போதுதான் கையிலெடுத்திருக்கிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்கா செய்து வருகிறது. கொரியப் போர் நடந்து கொண்டிருந்த போது அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென்னை ஒரு பத்திரிகை நிருபர், நீங்கள் இந்த யுத்தத்தில் அணு குண்டை பயன்படுத்துவீர்களா? என்று கேட்டனர். அதற்கு ட்ரூமென், எங்களிடம் இருக்கும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்றார். இப்படி அவர் பதிலளிக்கும் போது ஹிரோஷிமா, நாகாசாகி அழிவு ஏற்பட்டு ஐந்து ஆண்டு காலம்தான் முடிந்திருக்கிறது.

இதே போன்று 1953ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் இவ்வாறு கூறினார். வடகொரியா சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால், ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் அகற்றுவோம் என்றார்.

இதைவிட அதிர்ச்சியான ஒரு தகவல் தற்போது வெளி வந்துள்ளது. பின்கஸ் என்ற பத்திரிக்கையாளர் வாஷிங்டன் போஸ்டில் எழுதியுள்ளார். 1957ஆம் ஆண்டு முதல் இரண்டு கொரியாவையும் பிரிக்கும் இடத்தில் அணு ஆயுத வல்லமை கொண்ட ஏவுகணைகளை அமெரிக்கா நீண்ட காலமாக நிறுத்தியிருந்தது. கடுமையான நிர்ப்பந்தத்திற்குப் பிறகு 1970ஆம் ஆண்டில் தான் அதிபர் ஜிம்மி கார்ட்டர் அதனை விலக்கிக் கொண்டனர்.

ஆக, வடகொரியா அமெரிக்காவின் அரை நூற்றாண்டு அச்சுறுத்தலுக்கு ஆளான நாடு. இந்த வரலாறு தெரியாதவர்கள்தான் இன்று வடகொரிய அணுச் சோதனை மனித குலத்துக்கே அழிவு என்று எழுதி வருகின்றனர். வடகொரியா, அணு ஆயுத முயற்சிகளை கைவிட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இருந்திட முடியாது. ஆனால் இதற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல் ஆரவாரங்கள் முற்றாக கைவிடப்பட வேண்டும்.

தென்கொரியா மூலம் அச்சுறுத்தல்

தென் கொரியாவில், அமெரிக்க தலையீட்டிற்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெறுகிறது. அங்கு அமெரிக்கா தனது ராணுவ தளத்தை விரிவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தென்கொரியாவில் வலுவான ராணுவ தளம் என்பது வெறும் வடகொரியாவை மிரட்டுவதற்கு மட்டுமல்ல; அமெரிக்காவிற்கு பெரும் சவாலாகவும், உலகப் பொருளாதாரத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கம் வளராமல் தடுப்பதற்கும் வலுவான ராணுவ தளம் தென் கொரியாவில் இருப்பது அவசியம் என அமெரிக்கா கருதுகிறது.
ஏற்கெனவே வலுவான தளம் இருந்த போதிலும், மேலும் அதனை விரிவுபடுத்தி விரிவாக்கிட அமெரிக்கா முயற்சித்து வருகின்றது.

இதற்கென அங்குள்ள விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க முயற்சிகள் நடந்தது. உடனே விவசாயிகள் ஆர்ப்பரித்து எழுந்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த ஜூலை மாதம் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.

ஏற்கனவே உலக வர்த்தக நிறுவனம் மூலம் தென்கொரிய விவசாயிகளை அமெரிக்கா பழிவாங்கி வருகின்றது. இதனை யொட்டி பிரம்மாண்டமான போராட்டங்களும் நடைபெற்றன. தற்போது அமெரிக்க ராணுவதள விரிவாக்கம் கூடாது என்ற கோரிக்கையை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தியாவின் கண்டனம்

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வடகொரியா அணுச் சோதனையை கண்டித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டனர். இந்தச் சோதனை மூலம் வடகொரியா உலகிற்கு அளித்த வாக்குறுதிகளை மீறி விட்டதாக கண்டித்தார்.

1994ஆம் ஆண்டே அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டதாக வடகொரியா அறிவித்து விட்ட நிலையில், அணுச் சோதனை செய்வதன் மூலம் எந்த ஒப்பந்த வாக்குறுதிகளையும் அது மீறவில்லை. எனவே, இந்தியா இவ்வாறு கண்டிப்பது அர்த்தமற்றதாகும்.

வடகொரியாவின் அணுச்சோதனையை இந்தியா கண்டிப்பது வேடிக்கையானது. இரண்டு முறை அணு வெடிச் சோதனை நடத்திய நாடு இந்தியா. இந்திய நாட்டு மக்களிடம் நீண்ட காலமாக அணு ஆயுதமற்ற உலகம் என்ற லட்சியத்திற்கு பெரும் ஆதரவு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் அணு ஆயுதத் தயாரிப்பு சோதனையில் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் இந்திய ஆட்சியாளர்கள். எனவே, இந்தியாவிற்கு வடகொரியச் சோதனையை கண்டிக்க என்ன உரிமை இருக்கிறது? அமெரிக்கா கண்டிப்பதால், தானும் கண்டிக்க வேண்டும் என்று முனைகிறது இந்திய ஆளும் வர்க்கம்.

இந்திய ஆட்சியாளர்களுக்கு உள்ள பயம் என்னவென்றால், வடகொரிய சோதனை ஏற்படுத்தியுள்ள ஆரவாரத்தில், இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா கை கழுவி விட்டால் என்ன செய்வது என்பதுதான். இதனால்தான் அவசர அவசரமாக வடகொரியாவை கண்டித்தனர்.

பிறகு, அமெரிக்க ஆதரவு செயலாளர் நிக்கோலஸ் பார்ன்ஸ் இந்தியா, பாகிஸ்தான் செய்த அணுச் சோதனைகளோடு, வடகொரியச் சோதனையை ஒப்பிட முடியாது என்ற தத்துவ முத்தினை உதிர்த்தார். இது எப்படி என்றெல்லாம் தலையை பிய்த்து கொள்ளாமல் இந்திய அரசு நிம்மதிப் பெரு மூச்சு விட்டது.

தீர்வு என்ன?

அக்டோபர் 14ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் 1718 எண் கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன்படி எல்லா அரசாங்கங்களும் வடகொரியாவுடன் ஏவுகணை உள்ளிட்ட பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்குவதோ, விற்பதோ கூடாது. அதே போன்று சில பொருட்களின் வர்த்தகமும் தடை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட தடைகள் பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை. மாறாக, பதட்டத்தை மேலும் அதிகரிக்கவே செய்திடும்.

அமெரிக்கப் பத்திரிக்கைகளும், ஆளுகிற வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் வடகொரியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ராணுவத் தலையீடு உடன் தேவை என்றும் போர் வெறியோடு கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர்.

வடகொரியாவுடன் கடந்த பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்துள்ளது சீனா. எனவே, சீனா அமைதியாக இருக்கக் கூடாது; வடகொரியாவிற்கு அனுப்புகிற உணவு, மருந்து சப்ளை எல்லாவற்றையும் நிறுத்திட வேண்டுமென கூக்குரலிட்டனர் அமெரிக்கர்கள். இதே போன்று தான் இராக் மீது 1980 களில் உணவு மருந்து சப்ளைக்கு ஐ.நா. சபை மூலம் தடை விதித்தது அமெரிக்கா. அதனால் சொல்லொண்ணாக் கொடுமையை இராக்கின் சாதாரண பொதுமக்கள் அனுபவித்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் மடிந்து போயினர்.

இதே போன்ற கொடூரம், வடகொரியாவிலும் நிகழ வேண்டும் என்பது புஷ் கூட்டத்தினரின் ஆசை. ஆகையால், அவர்கள் சீனா விடம் நிர்பந்தம் செய்கின்றனர்.  ஆனால், சீனா அறிவுப் பூர்வமாகச் செயல்பட்டது.

முதலில் வடகொரியாவின் அணுச் சோதனையை கண்டித் தனர்.  பிறகு ஐ.நா. சபையில் கடும் பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா முயற்சித்த போது, அதைச் சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. இதர வீட்டோ நாடுகளைச் சேர்த்துக் கொண்டு இதை எதிர்த்தது. குறிப்பாக, ரஷ்யாவோடு கைகோர்த்து அமெரிக்க முயற்சியை தடுத்து நிறுத்தியது.

பிறகு அணு ஆயுத மூலப் பொருட்களுக்கும், சில குறிப்பிட்ட பொருட்களுக்கும் தடை என்று ஐ.நா. சபையில் முடிவு எடுக்கப்பட்டது. வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடருவது எனும் வகையில் சீன வெளியுறவு அமைச்சர் வடகொரியா சென்றார். வடகொரிய அதிபர் கிம் – ஜாங் – இல் லுடன் பேச்சுவார்த்தை நடத்தியது சீனக்குழு. தொடர்ந்து பலமுறை இத்தகைய தொடர்பு களை சீனா வடகொரியாவுடன் ஏற்படுத்திக் கொண்டது.

கடைசியாக, சீனாவின் கடும் முயற்சிக்கு வெற்றி கிட்டியது. வடகொரியா ஆறு நாடுகள் சேர்ந்து நடத்தி வந்த பேச்சுவார்த்தை தொடருவதற்கும் அதில் தாங்கள் கலந்து கொள்வதற்கும் சம்மதித்தது.

இந்தப் பிரச்சனைக்கு மிரட்டல், யுத்தம் ஆகிய வழிமுறை களைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டு மென்பது தான் ஜனநாயக எண்ணம் கொண்டோர் அனைவரின் விருப்பம். இந்தக் கோட்பாடே சிறந்தது என்பதற்கான எடுத்துக் காட்டாக, சீனாவின் முன்முயற்சியும், அதற்கான வெற்றியும் சான்றாக அமைந்தன.