ஜாரின் ரஷ்யா பல தேசிய இனங்களின் சிறை வீடாக இருந்தது. அதில் பிரதான தேசிய இனமாக இருந்த ரஷ்ய தேசிய இனம் இதர அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்கும் இனமாக இருந்தது.ஜாரின் ஆட்சியில், மாபெரும் ரஷ்ய ஆளும் வர்க்கம் இதர தேசிய இனங்களை காலனிகளாக்கி ஒடுக்குமுறைக்கு ஆட்படுத்தியது.
