மார்க்சிய நோக்கில்இயற்கை அறிவியலும் சமூக அறிவியலும்:ஒரு பொருத்தப்பாடு

சூழல் மற்றும் அதன் தேவைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் ஆற்றலையே தகுதியுடையது என்றார் டார்வின். அதாவது டைனோசர்கள் வலிமையுடையவைதான். ஆனால் அவை இயற்கைத் தேர்வில் மறைந்து போயின. அதேசமயம் சிறிய கரப்பான் பூச்சிக்கள் வெகுகாலமாக உயிர் வாழ்கின்றன. இங்கு தகுதியுடையது கரப்பான் பூச்சிதானே அன்றி டைனோசர்கள் அல்ல.

கடவுள் சிருஷ்டியா?

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் தோழர் ம.சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமையேற்றவர்; கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்; விஞ்ஞானப் பார்வையை தமிழ்மக்கள் பெறுவதற்காக ஏராளமான கட்டுரைகளை சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே எழுதியவர். புராணங்களையும், இதிகாசங்களையும் விமர்சித்தால் போதாது, விஞ்ஞான பார்வை மக்கள் பெறும்போதுதான் அறியாமை இருள் அகலும் என்று உறுதி காட்டியவர்; 71 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய கட்டுரையை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.