தமிழ்நாடு
-
திராவிட இயக்கம்: மாற்றைத் தேடும் மறு வாசிப்பு !
திராவிட இயக்கப் பற்றாளர்கள் எந்த நெருக்கடி வந்தாலும் அவற்றை முறியடித்து முன்னேறுவோம் என முழங்கிடலாம். ஆனால், ஒரு வரலாற்றுப் போக்கினை நாம் மறந்துவிடக்கூடாது. எந்தக் கருத்தியலும், அது சார்ந்த இயக்கங்களும் வரலாற்றில் ஒரே வடிவத்தில் மாறுதலுக்கு உட்படாமல் நீடித்ததில்லை. Continue reading
-
தமிழ் நாடு பட்ஜெட் 2022-23: தாராளமய தாக்கம் !
மாநில பட்ஜெட் பற்றிய பரிசீலனையை, ஒரு வரம்பிற்குள் தான் செய்ய முடியும். அதில் திராவிட மாடலை தேடுவதோ, அது இல்லை என்று சொல்வதோ, இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. நாம் சொல்வது என்னவென்றால், தமிழக நிதி அமைச்சர் ஒன்றிய அரசும் பதினைந்தாவது நிதி ஆணையமும் முன்வைக்கும் நெறிமுறைகளை தட்டிக் கேட்க வேண்டும்… Continue reading
-
இந்திய வர்க்கங்களின் நிலைமையில் மாற்றமும், கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியதும் !
கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து, இந்தியாவின் ஊரக மற்றும் நகர்ப்புற சூழலில் நவ-தாராளமய காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு தக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கும் பகுதிகள் சுருக்கமாக வழங்கப்படுகின்றன Continue reading
-
நூல் விமர்சனம்: திராவிட மாடல் (2021)
நூறு ஆண்டு கால திராவிட அரசியலையும், சமகால தாக்கத்தையும் ஒரு இயக்கத்தின் கீழ் இந்த புத்தகம் அளிக்கின்றது. இதன் மூலம் தமிழகம் கடந்த பத்து ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றம் அனைத்திற்கும் மொத்த திராவிட இயக்க வரலாற்றையும் காரணி ஆக்குகின்றது. ஆனால், சமூக மாற்றத்தை கொள்கையாக கொண்ட திராவிட இயக்கம், பரந்துபட்ட நில சீர்திருத்தத்திற்கு பல முறை வாக்குறுதி அளித்த போதும் அதை நிறைவேற்றாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. Continue reading
-
தமிழ்நாட்டு ஊரக வேளாண் குடும்பங்களின் நிலை என்ன?
கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடன் வாங்காமல் இருப்பது என்பது எளிதான விஷயமல்ல. சாகுபடிக்கும் இதர சுய உற்பத்தி நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக அவ்வுற்பத்தியில் சந்தை சார் இடுபொருட்கள் தேவை என்கிறபொழுது கணிசமான சொந்த மூலதனம் அல்லது வேறு வருமான மூலங்கள் இருந்தாலொழிய கடன் வாங்காமல் வேளாண் மற்றும் வேளாண்சார் தொழில்கள் செய்வது கடினம். Continue reading
-
சட்டமன்றத்தில் ஜீவா (சிங்கத்தின் கர்ஜனையும் குயிலின் கானமும்!)
தமிழகக் கம்யூனிச இயக்கத் தலைவர்களில் ஜீவா மிகவும் வித்தியாசமானவர். நாட்டின் சுதந்திரப் போராட்ட இயக்கம், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் – ஆகிய இரண்டிலும் ஒருங்கே கால் பதித்து, அவற்றை உள்வாங்கி, அவற்றினும் மேலெழுந்து மார்க்சியத்தின்பால் திரும்பியவர். கூடவே தமிழ் இலக்கியத்தைக் கற்றக் கரை தேர்ந்து, அதை அரசியல் மொழியாகப் பயன்படுத்தியவர். Continue reading