தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்… அரசியல் போராட்டமே!!!

எஸ். கண்ணன்

நவதாராளமயம் சிறுபான்மை பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும், பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இந்தியாவில் இடதுசாரி கட்சிகள் தவிர்த்து, அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் மேற்படி நவதாராளமய கொள்கைகளை ஆதரிக்கின்றன. அதேநேரம் தொழிற்சங்கம் என்ற முறையில் செங்கொடி சங்கங்கள் மட்டுமல்லாமல், முதலாளித்துவ கட்சிகளின் தொழிற்சங்கங்களும், சீர்திருத்த தலைமை கொண்ட தொழிற்சங்கங்களும் கூட, நவதாராளமய பொருளாதார கொள்கைகளின் தாக்குதலை எதிர்த்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏனென்றால், நவதாராளமய கொள்கை பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தை, கண்ணியமான வாழ்க்கை மற்றும் வேலையை அழித்து நாசம் செய்து வருகிறது. இது மேற்குறிப்பிட்ட முதலாளித்துவ கட்சிகளின் தொழிற்சங்க இயக்கங்களுக்கு, எதிர்ப்பு இயக்கத்தில் பங்கெடுக்கும் நிர்ப்பந்தம் அளிக்கிறது. 

ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரங்களில் ஒன்றான பி.எம்.எஸ்-உம் இதேபோல், கடந்த காலங்களில் நவதாராளமய பொருளாதார கொள்கைகளை எதிர்த்த போராட்டங்களின் கூட்டு நடவடிக்கைகளில் பங்கெடுத்தது. 2014இ ல் பாஜக தலைமையில் ஒன்றிய அரசு அமைக்கப்பட்ட பின், 2015 செப்டம்பர் 2 அன்று நடந்த அகில இந்திய வேலை நிறுத்தமாகும். அதில் துவக்கத்தில் பங்கெடுத்த பி.எம்.எஸ்., ஆர்.எஸ்.எஸ் அல்லது, பாஜக தலைமையின் உத்தரவைத் தொடர்ந்து போராட்ட நடவடிக்கைகளில் இருந்தும், வேலைநிறுத்த நடவடிக்கைகளில் இருந்தும் விலகியது. அதன் பின் நடைபெற்றுவரும் வேலை நிறுத்தங்களிலும் பங்கெடுக்கவில்லை. இதேபோல் மேற்படி நவதாராளமயம் என்ற கொள்கையை எதிர்க்காமல், சங் பரிவாரத்தின் மற்றொரு அமைப்பான சுதேசி ஜாக்ரான் மஞ்ச், இடதுசாரிகளை விடவும் அதிதீவிரமாக அந்நிய பொருள்களை எதிர்த்த போராட்டங்களில் ஈடுபட்டது. அது தற்போது அமைதியாகயைக் இருப்பது, சுதேசி ஜாக்ரான் மஞ்ச் மற்றும் பாஜக சங் பரிவார் அமைப்புகளின் போலித்தனத்தை வெளிப்படுத்த கூடியதாகும்.

அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்த போராட்டத்தில், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சொந்த அடையாளங்களை கடந்து, தொழிலாளி என்ற முறையில், தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் போராடுவது என்ற முடிவை விவசாயிகளும் அமலாக்கினர். இது வர்க்க அரசியலாக பிரதிபலித்தது. வர்க்க ஒற்றுமை மேம்பட்ட இந்த பின்னணியில் தான், நவதாராளமயத்தின் கொள்கைகளை எதிர்த்த, பொது வேலை நிறுத்தம் அகில இந்திய அளவில் நடந்தது. 1992இ ல் நடந்த பொது வேலை நிறுத்தமும், அதைத் தொடர்ந்த சில பொது வேலை நிறுத்தங்களும் வெற்றிகரமாக நடந்தது. இதில் பல இடதுசாரி வெகுமக்கள் அமைப்புகளும் பங்கேற்றன. இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து முழுஅடைப்பாக மாறி, முதலாளித்துவ கட்சிகளுக்கு நெருக்கடியாக அமைந்தது என்றால் மிகை அல்ல. அரசியல் மாற்றாகவும், இடதுசாரி தொழிற்சங்கம் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் மேற்படி கூட்டு நடவடிக்கைகள், நிர்பந்தத்தை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாகவே, முதலாளித்துவ கட்சிகளின் தொழிற்சங்கங்களும் அகில இந்திய பொது வேலை நிறுத்தங்களில் பங்கெடுத்தன.

பொது வேலைநிறுத்தங்கள் என்ன சாதித்தன?

முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை, தொழிலாளி வர்க்கம் அந்தந்த வளர்ச்சிக்கு ஏற்ப நடத்தியுள்ளது. வேலை நேர குறைப்பு உள்ளிட்ட, பல உரிமைகளை வென்றிட உதவியது. 1838 – 1848 காலங்களில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் தொழிலாளர் மீதான வேலை நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்கள் நடந்தன. பிரிட்டிஷ் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்த போராட்டங்கள், புரட்சிகர சக்திகளின் முன்னெடுப்பால் நடந்தது என அரசியல் ஆய்வாளர்கள் இன்றளவும் கூறுகின்றனர். இந்த வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்கள் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 10 மணி நேரமாக வரையறை செய்தது. 

வேலைநேரத்தை குறைக்கும் போராட்டம் தீவிரமாகும் போது, கூலி குறைக்கப்படுவதும் நடக்கிறது. அன்றைய ரஷ்யாவில் லெனின் இது குறித்து விவாதித்து உள்ளார். 1885 முதல் 1900 வரை மிக அதிகமான வேலை நிறுத்தங்களை தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். ஜார் மன்னனின் ஆட்சியும், முதலாளித்துவ வளர்ச்சியும் தொழிலாளர் மீது நடத்திய தாக்குதல்களே இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம், என கூறுகிறார். குறிப்பாக, முதலாளித்துவத்தின் மூலதனம் மேலும் மேலும் அதிகரிப்பது என்பது, தொழிலாளருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கூலி அளிக்கப்படாததால் ஏற்படுகிறது. கூலியை குறைக்க முதலாளித்துவ அரசுகள், முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்களை இயற்றுகின்றன. இந்த பின்னணியில் தொழிலாளர்களின் போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும், தனிப்பட்ட ஆலை முதலாளிகளுக்கு எதிரான ஒன்றாக மட்டும் இல்லாமல், முதலாளிகளைப் பாதுகாக்கும் அரசுக்கு எதிரான உணர்வாகவும் வளர்ச்சி பெறுகிறது. 

உணர்வு ரீதியிலான மேற்படி வளர்ச்சி, தொழிலாளர்களுக்கு, தனிப்பட்ட முதலாளிகளை கேள்வி கேட்கும் வலிமை, தனி ஒரு நபருரூக்கு இல்லை. அவ்வாறு கேட்டால். வேலையில் இருந்து வெளியேற்றப்படுவோம், என்ற நிலையில் தான் தொழிலாளி சங்கமாக ஒன்றிணைனைகிறார். அந்த ஒன்றிணைனைவு, தொழிற்சங்கங்களின் ஒற்றுமையாகவும், தொடர்ந்து வர்க்க ஒற்றுமையாகவும், வலுப்பெறுவதைக் காணமுடிகிறது. இந்த வர்க்க ஒற்றுமையே, பொது வேலை நிறுத்தங்களுக்கு அனைத்து தொழிலாளர்களையும், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துச் செல்கிறது. 

இந்தியாவில் நவதாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, தொழிற்சங்கங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள, இந்த ஒற்றுமை முக்கியமான ஒன்றாகும். தலைமை மட்டத்தில் உள்ள, இந்த கொள்கை சார்ந்த உணர்வு, தொழிலாளர் மட்டத்திலும் பிரதிபலிக்க செய்ய வேண்டியுள்ளது. அதை செய்வதே உண்மையான வர்க்க உணர்வாகவும், கொள்கை மாற்றத்தினை வலியுறுத்தும் உணர்வாகவும் வளர்ச்சி பெறும். 

கொரோரானா பெரும் தொற்றும் சுரண்டல் கொள்ளை அதிகரிப்பும்: 

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார பாதிப்பு, கொரோரானா பொது முடக்கம் காராணமாக ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பொது முடக்க காலத்திலும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மருந்து உற்பத்தி நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆகியோர் பொது மக்களுக்கு சேவை என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்டி உள்ளது. இதை ஆக்ஸ்ஃபேம் போன்ற அமைப்புகளே உறுதி செய்துள்ளன. அதாவது, அரசு தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தடுப்பூசி உற்பத்தி செய்த 9 நிறுவனங்கள், ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ளனர். இந்தியாவில் 142 பேர் பில்லியனர்கள் (ரூ7,500 கோடிக்கும் மேல் சொத்துடையவர்கள்) உருவாகியுள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 53 லட்சம் கோடி. இது போல் உலக அளவிலும் நிலைமை உருவாகியுள்ளது. 

அன்று படைபலத்தில் வலிமை பெற்ற மன்னர்கள் உலகை ஆட்சி செய்ய முயற்சித்தது போல், இன்று பணபலத்தில் வலிமையானோர், உலகை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டோராக மாறியுள்ளதை பார்க்க முடிகிறது. ஏங்கெல்ஸ், “எங்கெல்லாம் பெருவீத கார்ப்பரேட் தொழில்கள் பட்டறை தொழில்களை இல்லாமல் செய்ததோ, அங்கு முதலாளி வர்க்கம் செல்வம் மற்றும் அதிகாரத்தின் காரணமாக உயர்ந்த நிலைக்கு வந்து, அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டுள்ளது”, எனக் கூறுகிறார். பெரும்பான்மை மக்கள், மேற்குறிப்பிட்ட சில நூறு பேரின் தயவில் வாழும் சூழலை உருவாக்குகின்றனர், எனவும் விளக்குகிறார். இப்போது இந்த உண்மை நிலையை நம் சமகாலத்தில் காண முடிகிறது.  

எனவே தான் கடந்த காலங்களை விட அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடைபெறுருவது உலகின் பல நாடுகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அமெரிக்காவில் அமேசான், வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் தொழிற்சங்கம் அமைத்தலை விரும்பவில்லை. நிர்வாகங்களுக்கு எதிரான போராட்டங்கள் கூடுதல் கவனத்தை ஈர்த்து, வலிமையாக நடைபெறுகின்றன. சங்கம் வைத்த தொழிலாளர்களை பழிவாங்குவது, வேலை நீக்கம் செய்வது போன்ற ஜனநாயக விரோத,  சட்ட விரோத செயல்கள் முன் எப்போதையும் விட அதிகளவில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களால் அம்பலமாகின்றன. 

இந்தியாவை பொறுருத்த அளவில், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் உரிமைகளற்ற, நாகரீகமான வேலை வாய்ப்பை நாசம் செய்து, ஒப்பந்தம், பயிற்சி என்ற பெயரில் பெரும் கொள்ளையை கார்ப்பரேட்டுகள் அரங்கேற்ற, பாஜக ஆட்சி சட்டங்களை மாற்றி வருகிறது. பாஜகவின் செயல்கள் அனைத்தும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சிந்தாந்தத்தில் இருந்து வெளிப்படுவதாகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் மாதவ சிங் கோல்வாக்கர், எழுதிய பஞ்ச் ஆப் தாட்ஸ் எனும் நூல், அவர்களின் நோக்கத்தை தெளிவு படுத்துகிறது. இன்றைய நவதாராளமய கொள்கைகள் அமலாக்கத்தின் தீவிரம், அன்று எழுதப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். அதாவது, ஒரு முதலாளி லாப நோக்கமில்லாமல் எப்படி செயல்படுவார்?. அதற்காக தொழிலாளி சுரண்டப்படுவது நியாயமே. தொழிலாளர் உரிமை என்ற பெயரில் பல, முழக்கங்கள் முன் வைப்பது, ஏற்க முடியாதது. சமூகத்தில் கடந்த கால மோதல்களை மறைக்கவே வர்க்கம் என்ற பெயரில் முழக்கங்கள் வைக்கப் படுகிறது, என எழுதப்பட்டுள்ளது. 

மேற்படி கோல்வாக்கர் எழுத்துகளுக்கும், இன்றைய பாஜக அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்குமான தொடர்பை நன்கறிய முடியும். உலகில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் கார்ப்பரேட் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான மோதலாக வலுப்பெற்று வருகிறது. அங்கு உள்ள வலதுசாரி, இடதுசாரி கொள்கைகளுக்கு இடையிலான முரண் தீவிரம் பெற்று இருப்பதை காண முடிகிறது. பாஜக சமூக மோதலை தீவிரப் படுத்தி, கார்ப்பரேட் மூலதனத்திற்கு உதவி செய்கிறது. சமூக பதட்டத்தை தணினிக்கவும், மூலதன சுரண்டலுக்கு எதிராகவும், தொழிலாளர்களை சிந்திக்கவும், செயல்படுத்தவும் வேலைநிறுத்தம் என்ற ஒன்றுபட்ட உணர்வு மிக அவசிய தேவையாக உள்ளது. 

தொழிலாளர் – விவசாயி ஒற்றுமை:

கடந்த நவம்பர் 26, 2020 நடந்த 20 வது அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அன்று, விவசாய சங்கங்களும் தலைநகர் டில்லியை முற்றுகை இடுவது என முடிவெடுத்தது. அதன் படி டில்லிக்கு செல்லும் சாலைகள் முற்றுகை இடப்பட்டது. தொடர்ந்து நடந்த அரசின் தாக்குதல்களும், போராட்டக் காரர்களின் எதிர்வினையும், அவர்களுக்கு ஆதரவான தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு போராட்டமும், மதசார்பற்ற ஜனநாயக இயக்கங்களின் தொடர் நிர்ப்பந்தம் காரணமாக, ஓராண்டு கழித்து மாபெரும் வெற்றியை பெற்றது. பாஜக தலைமையிலான மோடி அரசு, முதல் முறையாக வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெறுவது என முடிவெடுத்தது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய மாநாட்டில் முன் மொழிய இருக்கும் அரசியல் தீர்மானத்தின் நகல், இது குறித்து விவாதிக்கிறது. நீடித்து நடந்த விவசாயிகள் போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. 2018ஆ ம் ஆண்டில் நடந்த தொழிலாளர், விவசாயி, விவசாயத் தொழிலாளர்களின் கூட்டு பேரணி டில்லியில் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது, எனக் கூறுகிறது. கோவிட் பாதிப்பு காலத்தில், இந்திய மற்றும் சர்வதேச பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக பாஜகவின் சட்ட திருத்த நடவடிக்கைகள் கொதித்தெழும் போராட்டமாக விவசாயி மற்றும் தொழிலாளர்களிடம் உருவாக, மேற்படி கூட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள் அடித்தளம் அமைத்து கொடுத்தது. 

பொருளாதார கோரிக்கைகளுக்கான வேலைநிறுத்தங்களில் துவங்கி, பொருளாதார கொள்கைகளை எதிர்க்கும் போராட்டங்கள் அதிகரிப்பது, ஆளும் வர்க்க எதிர்ப்பு நடவடிக்கையே ஆகும். இது ஒரு அரசியல் போராட்டமே ஆகும். எனவே தான், மார்க்சிஸ்ட் கட்சி அதன் அறிக்கைகளில் இது போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், இப்போராட்டங்களின் வெற்றிக்கு களத்தில் அளப்பரிய பணிகளைச் செய்கிறது. ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சிக்கும், பின் புரட்சியின் வெற்றிக்கும் அரசியல் வேலைநிறுத்தங்கள் பங்களிப்பு செய்த விவரங்களை, லெனின் எழுதிய வேலைநிறுத்தங்கள் பற்றி என்ற கட்டுரை குறிப்பிடுகிறது. 

மார்க்சிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் நகல் தீர்மானம், “பெரும் பணக்காரர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், சிறு, குறு உற்பத்தியாளர்களுக்குமான முரண்பாடு வலுப்பெற்றுள்ளது. பணக்கார விவசாயிகள் உள்ளிட்டு, பாஜக ஆட்சியின் நவதாராளமய ஆதரவு சட்ட திருத்தங்களை எதிர்த்த, விவசாயிகளின் ஆதரவு போராட்டத்தை ஆதரிக்கும் நிலை உருவானது” எனக் கூறுகிறது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மேற்படி சட்டத் திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைனைந்து ஈடுபட்டது, பெரும் வர்க்க ஒற்றுமைக்கான வாய்ப்புகளின் வெளிப்பாடாகும்.

பேராசிரியர் பிரபாத் பட்நாயக் விவசாயிகளின் போராட்டம், தொழிலாளர் ஆதரவு நடவடிக்கைகளை மட்டும் உருவாக்கவில்லை. கூடவே, சமூக நல்லிணக்க வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்தது, எனக் கூறுகிறார். குறிப்பாக சிறு, குறு நில உடமை வர்க்கமாக உள்ள சாதியினருக்கும், உடமையற்ற ஒடுக்கப்பட்ட சாதியினராக உள்ள தொழிலாளர்களுக்கும் இடையில்  உருவான போராட்ட ஒற்றுமை, வர்க்க அரசியலுக்கான அடிப்படை, என அவர் எழுதியுள்ளது, முக்கியமான படிப்பினை ஆகும். 

இந்தியாவை பொறுருத்த அளவில், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக 1982 ஜனவரி 19 இல் முதல் அகில இந்திய வேலை நிறுத்தத்தை இடதுசாரி தொழிற்சங்கங்களும்ள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்களும் இணைந்து அறைகூவல் விடுத்தன. அன்றைய வேலை நிறுத்தம் மிக சிறப்பாக நடந்தது. அன்றும் விவசாயிகள் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஆதரித்து, சாலை மறியல் உள்ளிட்ட நடவவ்டிக்கைகளில் இறங்கினர். ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தின் ஆப்பூர் மற்றும் மன்னார்குடி ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு காரணமாக விவசாய சங்கத்தின் தோழர்கள், நாகூரான், அஞ்சான், ஞானசேகரன் ஆகியோர் படுகொலையானார்கள். நாடு முழுவதும் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியானார்கள்.  அந்த நிகழ்வு நடந்து 40 ஆண்டுகள் முடிந்துள்ளது. தொழிலாளர் விவசாயிகள் ஒற்றுமை முன்னை விட அதிகமாக தேவைப் படும் காலமாக உள்ளது. 

இப்போது, இந்தியாவில் தேசிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக 21வது பொது வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்துள்ளன. தொழிலாளர்கள் தங்களின் தனிப்பட்ட கூலி உயர்வு, வேறு பிரச்சனைகளுக்காக, தனி சங்கமாக நடத்திய போராட்டங்களில் இருந்து மாறுபட்டதாக பொது வேலை நிறுத்தம் உள்ளது. பொது கோரிக்கைகள் ஏற்கனவே கூறியபடி, அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. இதை ஓரளவு அறிந்து தான் வேலை நிறுத்தங்களில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அரசியல் உணர்வு மேம்படுகிறது, என்ற லெனினின் அனுபவம் உண்மையாகிறது. அன்றைய ரஷ்யாவில் ஒரு அரசியல் முழக்கத்துடன் வேலை நிறுத்தங்கள் நடந்தது. ஆனால் இந்தியாவின் சூழலில் பல அரசியல் அமைப்புகளின், தொழிற்சங்க தலைவர்களும், இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிக்கின்றனர், என்பது மாறுபட்ட அனுபவம் ஆகும். தொழிற்சங்கங்களின் இந்த ஒற்றுமை, வர்க்க ஒற்றுமையாக மாறுவதற்கான பங்களிப்பே, கொள்கை மாற்றத்திற்கான வேலை நிறுத்தமாக மாறும். அதை நோக்கி பயணிப்பதே கம்யூனிஸ்டுகளின் பணியாகும். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினத்தின் ஐம்பதாம் ஆண்டு

சீத்தாராம் யெச்சூரி

தமிழில்: ச. வீரமணி

மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்று சாதனை படைத்த நவம்பர் 7 ஆம் தேதியன்றுதான் 1964 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமான முறையில் தன் அமைப்பை அதனுடைய 7ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புரட்சி திட்டத்துடன் அறிவித்தது.

1920 இல் தாஸ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. அதனையே கட்சி தொடங்கிய நாளாக எடுத்துக் கொண்டுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன் பயணத்தைத் தொடர்கிறது. அதனால்தான் 1964 இல் இந்திய புரட்சி இயக்கத்தின் உண்மையான வாரிசு என்ற முறையிலும், புரட்சியின் முன்னணிப் படை என்ற முறையிலும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அமைப்பு அகில இந்திய மாநாட்டையே 7ஆவது அகில இந்திய மாநாடு என்று எண்ணிட்டது. இவ்வாறு, 2014 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட 94 ஆம் ஆண்டு தினமாகும்.

1982 ஜனவரி, 11 ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் – ஸ்தாபன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“ஒரு சரியான அரசியல் தத்துவார்த்த நிலைப்பாட்டிற்காக, 1955-62 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற உள்கட்சிப் போராட்டம், கட்சி பிளவுபடுவதிலும் 1963-64 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவதிலும் முடிந்தது. அரசியல் நிலைப்பாடு, தத்துவார்த்த நிலைபாடு, தேசிய நிலை மற்றும் சர்வதேசிய நிலை எனப் பல்வேறு பிரச்சனைகளிலும் வித்தியாசங்கள் கூர்மையாக முன்வந்து, இரு தரப்பினரையும் பிரித்தது.’’

மேலும், அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்திய அரசு குறித்தும் இந்திய அரசாங்கம் குறித்தும் முற்றிலும் வெவ்வேறான இரு மதிப்பீடுகள் இரு வெவ்வேறான திட்டங்கள் மற்றும் அரசியல் நடைமுறை உத்திகளைப் பின்பற்ற வேண்டியதற்கு இட்டுச் சென்றன. அவை பிந்தைய ஆண்டுகளில் வெளிப்படுத்தப்பட்டன.’’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டின் 20 ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடிய சமயத்தில், பி.டி.ரணதிவே, பீப்பிள்ஸ் டெமாக்ரசி (நவம்பர் 7, 1984) இதழுக்காக எழுதிய சிறப்புக் கட்டுரையில் கூறியிருந்ததாவது:

“புதிய இந்திய அரசு மற்றும் அரசாங்கத்தின் வர்க்கக் குணாம்சம் என்ன என்பது குறித்தும்,   புரட்சியில் உழைக்கும் வர்க்கத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் உள்ளார்ந்த மதிப்பீடு சம்பந்தமாக கேந்திரமான கேள்வி எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசானது, பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படக்கூடிய, அந்நிய நிதி மூலதனத்துக்கு உடந்தையாக இருந்து ஒத்து செயல்படுகிற முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசு என்றே அரசின் வர்க்கக் குணாம்சம் குறித்து வரையறுத்தது.”

இதன் பொருள், மக்கள் ஜனநாயக அரசைக் கட்டுவதற்காக, அதிகாரத்திற்கான போராட்டத்தில், அரசு மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாத வகையில் போராட வேண்டும் என்பதாகும். எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் மேற்கு வங்கத்தில் அரைப் பாசிசத் தாக்குதல், கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கொடூரமான பிரச்சாரம் ஆகியவற்றையும் துணிவுடன் எதிர்த்து நின்று அரசாங்கத்திற்கு எதிராக உறுதியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரி மற்றும் வெகுஜன இயக்கத்திற்கு எதிராக ஏவப்பட்ட ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொண்டு, இத்தனை ஆண்டு காலமும் எதிர்ப்புத் தீப்பந்தத்தை, சில சமயங்களில் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் கைவிட்ட சமயங்களிலும் கூட, தனியாகவும், உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது.

“இந்திய அரசின் குணம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்படி புரிந்து கொண்டது? அது ஒட்டுமொத்தத்தில் பெரிய மற்றும் பெரிதல்லாத முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற அரசு என்று அதனைப் புரிந்து கொண்டது. எதார்த்தத்தில் அரசும் அரசாங்கமும் பெரிதல்லாத முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்டது என்றே பொருளாகும்.’’

புரட்சியின் ஜனநாயகக் கட்டம் சம்பந்தமாக வித்தியாசம் இல்லை என்ற போதிலும், அரசின் வர்க்க குணம், இந்திய முதலாளிகளின் இரட்டைத் தன்மை கொண்ட குணம் மற்றும் அதன் விளைவாக நாம் மிகச்சரியான முறையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை உத்தி குறித்த பிரச்சனைகளிலும், கூர்மையான அளவில் வித்தியாசங்கள் இருந்தன.

இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளை வைத்தே, இப்பிரச்சனைகள் பலவற்றைக் குறித்து ஏராளமாக எழுத முடியும். ஏற்கனவே பலவற்றைக் குறித்து எழுதி இருக்கிறோம். கடந்த ஐம்பதாண்டுகளில் இப்பிரச்சனைகள் குறித்து நிறையவே எழுதி இருக்கிறோம்.   இன்றைய சூழ்நிலையிலும் மிகவும் முக்கியமாகத் தொடரும் சில தத்துவார்த்த அடித்தளங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதற்கான வரையறை மற்றும் அதனைத் தொடர்ந்து அது நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் சக்திகளில் எழுச்சியுடன் முன்னேறிச் சென்றது குறித்தும் கவனம் செலுத்திட விரும்புகிறேன்.

ஆயினும், இந்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்வதற்கு முன்பு, கட்சி ஆதரவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது பரிவு காட்டுவோர் அடிக்கடி எழுப்பும் சிலவற்றைக் குறித்து கருத்துக் கூறுவது அவசியமாகும். கம்யூனிஸ்ட் கட்சி பிரியாமலும் உடைபடாமலும் தவிர்க்கப்பட்டிருப்பின், கம்யூனிஸ்ட் இயக்கம் பதிவு செய்துள்ள முன்னேற்றம் இப்போதிருப்பதை விட மேலும் பன்மடங்கு கூடுதலாக இருந்திருக்கக் கூடும் என்பதே அவர்கள் மத்தியில் காணப்படும் உணர்வாகும்.

மேலே நாம் குறிப்பிட்ட பி.டி.ரணதிவேயின் கட்டுரையில் இதுகுறித்தும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதாவது:

“கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முட்டாள்தனமான முறையில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டிருப்பின் அது கிரிமினல்தனமான ஒன்றேயாகும். சரியானதொரு நிலைப்பாட்டிற்கு எதிராக இவ்வாறு கட்சியை உடைப்பதில் ஈடுபடுவோர், மக்களிடமிருந்து தனிமைப்படுவார்கள். அவர்கள் தங்கள் தவறான போக்கைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் ஓர் அரசியல் சக்தியாக இருப்பதிலிருந்து துடைத்தெறியப்பட்டு விடுவார்கள். அதே சமயத்தில், கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் தலைமை தவறான நிலைப்பாட்டைத் தொடரும்போது, தன்னுடைய தவறான நிலைப்பாட்டைத் திருத்திக் கொள்ள மறுக்கும்போது, வர்க்க சமரசப் பாதையிலேயே கட்சி முழுவதையும் கொண்டு செல்வதற்கான உறுதியைக் காட்டுகிறபோது, கட்சிக்குள் மோதல்களும் பிளவுகளும் அடிக்கடி நிகழும். அத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக எழும் தீய விளைவுகளை நடைமுறையில் பார்க்கலாம்.’’

பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடே மிகவும் சரியான நிலைப்பாடு என்று உறுதி செய்ததுடன், நாட்டில் இடதுசாரி சக்திகளில் தலைமை தாங்கும் பாத்திரத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் 50 ஆம் ஆண்டு தினத்தை அனுசரிக்கக்கூடிய தருணத்தில் சமீபத்திய தேர்தல்களில் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் அதன்மீது தொடுத்திடும் தாக்குதல்கள் குறித்தும் கையாள்வது அவசியமாகும். 1964 ஏப்ரல் 11 இல் அன்றைக்கு இருந்த ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து 32 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, அதன் பின்னர் சில நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தது தொடர்பாக, இப்போது சில ஏடுகள் கிண்டலாகக் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இது குறித்துக் கையாள்வதும் அவசியம்.

ஒரு முன்னணி மலையாள நாளிதழ், இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறது. “கொள்கைகளும் தோல்விகளும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது.’’ (2014 ஏப்ரல் 12) என்று தலைப்பிட்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மிகவும் விரிவான முறையில் கதை புனைந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கதைகளை அது அளந்துவிட்டு, கடைசியாக அது மார்க்சிஸ்ட் கட்சி வர்க்கங்களின் இயற்கை குணம் மாற்றங்கள் அடைந்திருப்பதை கணக்கில் கொள்ளாததால் அதனால் முன்னேறிச் செல்ல முடியாமல் இருக்கிறது, என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவில் பொருளாதாரம் சம்பந்தமாக வெளியாகும் `இளஞ்சிவப்பு முன்னணி செய்தித் தாள்களில் ஒன்று தன்னுடைய தலையங்கத்தில், “வரலாற்றை எதிர் கொள்ளல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 50 ஆம் ஆண்டு விழாவைத் தொடங்குகையில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வது வரவேற்கத்தக்க ஒன்றுதான். உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைத்தான் துல்லியமாகக் கோருகிறது. புதிய சவால்களை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழைவு. ஆயினும் அந்நாளேடு தன் தலையங்கத்தில் மேலும் அடிக்கோடிட்டுக் கூறியிருப்பது என்ன தெரியுமா? “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனுடைய வரலாற்றில் மாபெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது. அதாவது, இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமற்ற ஒன்று என்கிற அச்சுறுத்தலை அது எதிர்கொண்டிருக்கிறது. ஏன்?… ஏனெனில், அதன் தலைமை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அது கண்டுகொள்ளவில்லை.’’

இவ்வாறு நம்மீது விமர்சனம் செய்துள்ளவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளின் சாராம்சத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, ஒன்றை அடிக்கோடிட்டுச் சொல்வது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது எப்போதுமே காலந்தோறும் மாறி வரும் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ற விதத்தில் தன் கொள்கைகளை கோட்பாடுகளை அமைத்து, அதன் அடிப்படையில்தான் கொள்கைகளை நடைமுறையில் பின்பற்றி வந்திருக்கிறது. மார்க்சிய லெனினியத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்பதே துல்லியமான நிலைமைகளின் துல்லியமான ஆய்வுதான். அதன் அடிப்படையில்தான் அது செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது. நிலைமைகள் தொடர்ச்சியாக மாறுவதால், அதற்கேற்ற விதத்தில் மார்க்சிய நுண்ணாய்வையும் மாற்ற வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுமேயானால், உண்மையில், நாம் மார்க்சியத்தையே – அதன் புரட்சிகர உள்ளடக்கத்தையும், அதனுடைய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுக் கோட்பாட்டையுமே – மறுதலித்தவர்களாகிறோம். மார்க்சியம் மிகவும் விஞ்ஞானப்பூர்வமானது என்பதையும், எனவே, ஓர் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானம் எப்போதுமே வறட்டுத்தனமின்றி இயல்பானதாகவும், இயற்கையானதாகவும், மெய்யானதாகவும் இருந்திடும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் உயர்த்திப் பிடித்தே வந்திருக்கிறது.

ஆம். இந்த அடிப்படையில், நம்முடைய சமூகக் கட்டமைப்பில் பல்வேறு வர்க்கங்களின் இயக்கத்தில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது, முழுமையாக முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் இன்னமும் மாறாத பல்வேறு சமூக அடுக்குகளைக் கொண்ட நம்முடைய அமைப்பின் மீது – அதாவது சாதிய அடுக்குகளும் மற்றும் அதன் தொடர்ச்சியாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்குமுறையை ஏவி, அதீதமான அளவில் ஆதிக்கம் செலுத்த முன்வருகையில், இது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இந்த விமர்சகர்கள் முன்வைக்கும் விஷயம் அப்படியானதல்ல. அவர்கள் கூறும் விமர்சனங்கள் வேறானவைகளாகும்.

நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் மேதைகள் இப்போது சொல்வது என்ன? காரல் மார்க்ஸ் காலத்தில் இருந்த முதலாளித்துவத்தின் கீழ் இருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சம் இன்றுள்ள தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடையாதாம். அன்றைக்கு இருந்ததுபோல் கரத்தால் உழைக்கும் தொழிலாளர்கள் (manual labour) அளவிலும் மற்றும் பல்வேறு வகையினர் கலந்து பணியாற்றுவதிலும் இன்றைக்குக் குறைந்துவிட்டார்களாம். எனவே, காரல் மார்க்சும் ஏங்கெல்சும் உலகை மாற்றிட, முதலாளித்துவத்தை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய, தங்களுடைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன்வைத்த, “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர,’’ என்கிற முழக்கம் இனிப் பொருந்தாதாம். ஏனெனில் தொழிலாளர் வர்க்கத்தில் பெரும்பகுதியினர் முதலாளித்துவ அமைப்பின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டார்களாம், முதலாளித்துவச் சுரண்டலின் அடிமைத்தளையிலிருந்து வெளியேறி அவர்கள் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறதாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இவ்வாறு விமர்சிப்பவர்கள் கூறவரும் கருத்து இதுதான்: “மார்க்ஸ் காலத்திலிருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணம் இன்றையதினம் மாறிவிட்டதால், நவீன தாராளமய உலகமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும் இன்றைய சூழ்நிலைக்கு மார்க்சியம் பொருந்தாது. இந்த `எதார்த்தத்தை’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுப்பதால், அக்கட்சியும் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே, இதுதான் அக்கட்சி இன்றைய தினம் எதிர்கொள்ளும் மாபெரும் சவாலாகும்.’’

ஆனால் உண்மை நிலைமை என்ன? உலக முதலாளித்துவம் கடந்த ஆறு ஆண்டு காலமாக தொடர்ந்து நெருக்கடிக்குள் சிக்கி வெளிவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மார்க்சியம் இன்றைக்கும் பொருத்தமுடையதே என்று உரத்தகுரலில் பிரகடனம் செய்கிறது. உலகப் பொருளாதாரத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய நெருக்கடியைப் புரிந்து கொள்ளவும் ஆய்வு செய்யவும் காரல் மார்க்சின் மூலதனத்தின் பிரதிகள் வேண்டும் என்று வாடிகனிலிருந்து தகைசான்ற போப் ஆணை பிறப்பித்தாரே, அது ஒன்றும் தற்செயலாக ஏற்பட்ட விபத்தல்ல.

ஆயினும், இன்றைய நெருக்கடிக்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டுமானால் மார்க்சியத்தை நன்கு கற்ற ஒருவராலேயே அதனைச் செய்திட முடியும். தொடர்ந்து இருந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், உண்மையில் அத்தகைய நெருக்கடிக்கான ஆணிவேர் எது என்பதையும், சர்வதேச நிதி மூலதனத்தின் உயர்வையும், இன்றைய உலக நாடுகள் பலவற்றிலும் நவீன தாராளமயப் பொருளாதார ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அது மேற்கொள்ளும் மேலாதிக்கப் பங்களிப்பினையும் மார்க்சியத்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டு விளக்கப்பட முடியும். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று அல்ல. எனினும் தன்னெழுச்சியாக நடைபெற்ற இந்த இயக்கத்தின் இறுதியில் சுயேச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்ன? இந்தக் கிளர்ச்சிகள் `அமைப்புக்குள் உள்ள கோளாறுக்கு எதிராக அல்ல, மாறாக இந்த அமைப்பே கோளாறானது அதாவது முதலாளித்துவ அமைப்பே கோளாறானது என்றும் அதற்கு எதிராகவே இது நடைபெற்றுள்ளது என்றும் முடிவுக்கு வந்தது. இதே மாதிரி புரட்சிகரமான முடிவுக்குத்தான் மார்க்சியமும் வருகிறது. இந்தக் கோளாறான அமைப்புமுறை தூக்கி எறியப்படும்போது மட்டுமே மனித சமூகம் ஒட்டுமொத்தமாக விடுதலை அடைய முடியும். ஆனால் நவீன தாராளமயக் கொள்கையை பூஜிப்போருக்கு இது வெறும் தெய்வ நிந்தனையாகவே தோன்றும். எனவேதான் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இன்றைய தினம் `பொருந்தாத, `பொருத்தமற்றதான கட்சியாக இகழ்ந்துரைக்கிறார்கள்.

மேலும், தொழிலாளர் வர்க்கத்தின் சேர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், கரத்தால் உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து, அந்த இடத்தை கருத்தால் உழைப்பவர்கள் நிரப்பியிருந்த போதிலும், (மனிதகுல நாகரிகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுகையில் இது சாத்தியமே) முதலாளித் துவத்தின் இயல்பான குணம் – அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் குணம் – அதன் முதுகெலும்பாகத் தொடர்ந்து இருந்து வருவது இன்றைக்கும் மாறாததோர் உண்மை அல்லவா? ஏனெனில், சுரண்டல் என்பது முதலாளித்துவ உற்பத்தியுடன் இணைபிரியா ஒன்றல்லவா? இது ஏன்? ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி நடைமுறையின் அடிப்படையே சுரண்டல்தான்.

உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பில், அந்தப் பொருளை உற்பத்தி செய்த தொழிலாளியின் பங்களிப்பு எப்போதுமே அவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தின் மதிப்பைவிட அதிகமாகத்தான் இருக்கும். இந்த வித்தியாசம்தான் முதலாளித்துவ உற்பத்தி முறையில், தொடர்ந்து உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது. இந்த உபரிமதிப்பைத்தான் முதலாளிகள் லாபம் என்ற பெயரில் தமதாக்கிக் கொள்கிறார்கள். எனவே, தொழிலாளி, `கருத்தால் உழைப்பவரா’ அல்லது `கரத்தால் உழைப்பவரா’ என்பதே இங்கே பிரச்சனை இல்லை. எவராயிருந்தாலும் அவரைச் சுரண்டுவது என்பதே முதலாளித்துவத்தின் குணம். எனவே, இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை முற்றிலுமாகத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, இத்தகைய சுரண்டலிலிருந்து, மனிதகுலத்திற்கு விடுதலை யைக் கொண்டு வர முடியும். இத்தகைய அறிவியல்பூர்வமான உண்மையை நவீன தாராள மயத்திற்கு வக்காலத்து வாங்கும் `மேதைகள்’ ஒப்புக் கொள்ள மனம் வராது, வெறுப்பார்கள். எனவேதான் அதனை மறைப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைய தினம் பொருத்தமற்றதாக மாறிவிட்டது என்று நம்மீது பாய்கிறார்கள்.

இத்தகைய விமர்சகர்களின் மற்றொரு வகையான செயல்பாடு என்பது, முதலாளித்துவ சுரண்டல் அமைப்பின் அடித்தளங்களைப் பாதிக்காத விதத்தில் பல்வேறு அரசு சாரா அமைப்புகள் நடத்தக்கூடிய இயக்கங்களை ஊக்குவிப்பதும் மற்றும் ஆதரிப்பதுமாகும். அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் அளித்த அளவுக்கு மீறிய விளம்பரம், ஆகியவற்றிலிருந்தே இதனை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் நடைபெற்ற அதேசமயத்தில்தான் இடதுசாரிக் கட்சிகள் அவர் முன்வைத்த அதே கோரிக்கைகளுக்காக பிரம்மாண்டமான முறையில் மக்கள் இயக்கங்களை நடத்தின. ஆனால் அவை குறித்து அநேகமாக எதையுமே அவை கூறவில்லை. அல்லது பெயரளவில் ஒரு சில நொடிகள் கூறும். காரணம் என்ன? ஏனெனில், இடதுசாரிக் கட்சிகளைப்போல அல்லாமல், முதலாளித்துவ அமைப்பின் அடித்தளங்களான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றின் மீது அவை கை வைப்பதில்லை. முதலாளித்துவத்திற்கு, அதனுடைய அடித்தளத்தின் மீது கைவைக்காமல் இயங்கும் அனைவருமே உன்னதமான வர்கள் தான், அவர்களை தூக்கி வைத்து அது கொண்டாடும். எனவேதான், அது, `ஊழலை ஒழிப்போம்’, `நேர்மையான அரசியல்’ போன்று இயக்கம் நடத்தும் அனைத்து அமைப்புகளையுமே அவை வரவேற்கும். ஆனால், அதே சமயத்தில், இடதுசாரிகளைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்பதில் அவை குறியாக இருக்கும். ஏனெனில், இடதுசாரிகள் இந்த அமைப்பையே கேள்விக்குறியாக்குவது தொடர்வதும், இந்த அமைப்புக்கு மாற்று ஏதும் இல்லை என்று கூறுவதை இடதுசாரிகள் ஏற்க மறுப்பதும்தான் காரணங்களாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை, இந்த முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று உண்டு என்றும், சோசலிச அமைப்பே அதற்கு மாற்று என்றும் பிரகடனம் செய்கிறது.

நம் வளர்ச்சியில் அக்கறையுடன் நம் கொள்கைகளையும் நம் செயல்பாடுகளையும் நடுநிலையுடன் விமர்சிப்பவர்களை நாம் வரவேற்கிறோம். ஆனால் அதே சமயத்தில், குழந்தை அழுக்காகிவிட்டதே என்று தண்ணீர் தொட்டிக்குள்ளே குழந்தையைத் தூக்கி எறிவது போன்று விமர்சிப்பவர்களுக்கு நாம் கூறும் பதில், அத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது என்பதும் அவற்றிற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதுமேயாகும்.

உலக முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையோரைத் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ள வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடுவித்திட முடியும் என்கிற சித்தாந்தம் மற்றும் தத்துவார்த்த அடித்தளங்களையும் அதேபோன்று அதன் நடைமுறைகளையும்தான் மார்க்சியமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது என்பது ஓர் அறநெறி சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. ஒரு விதத்தில் இது அறநெறி சார்ந்த விஷயமே என்ற போதிலும், முக்கியமாக அதனைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் விடுதலையை அளித்திட முடியும் என்கிற அறிவியல் உண்மையுமாகும்.

ஆயினும் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய குறிக்கோளை எய்தக் கூடிய விதத்தில் புரட்சிகர சக்திகள் மற்றும் இயக்கங்கள் வலுப்பெற்று வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே இதனை எய்திட முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ‘சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தில்’, இத்தகைய முயற்சிகளை வலுப்படுத்திடுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய துல்லியமான பிரச்சனைகள் என்ன வென்று குறிப்பிட்டிக்கிறது. “இந்திய நிலை மைகள்: சில துல்லியமான பிரச்சனைகள்’’ என்ற பிரிவில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்திய நிலைமைகளில், நம் பணி இந்த இடைப் பரிவர்த்தனை (transition) காலத்தில், நம்முடைய புரட்சிகர முன்னேற்றத்தை வலுப்படுத்திட நம் பணி, ஏகாதிபத் தியத்திற்கு ஆதரவாக சில சக்திகள் மாறியிருக்கக்கூடிய சூழ்நிலையில், நம்முடைய லட்சியக் குறிக்கோளை முன்னெடுத்துச் சென்றிட, இந்திய மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் மாற்றத்திற்காக வேலை செய்வதில் துல்லியமான முயற்சிகள் தேவை. இதற்கு, நாம் நம் சமூகத்தில் இன்றுள்ள துல்லியமான நிலைமைகளில் வர்க்கப் போராட்டத்தைக் கூர் மைப்படுத்தி வலுமிக்க மற்றும் வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிட வேண்டியது அவசியமாகும்.’’

நாடாளுமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கு அப்பால் உள்ள வடிவங்கள்: இந்தப் பணியை எய்திட, மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம் குறிப்பிடுவதாவது:

“மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும், அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு, அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களை கொண்டுவர பாடுபடுவர். எனினும், ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தர மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள முயல்வார்கள். எனவே, நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய திருப்பங்கள், திருகல்களையும் கவனத்தில் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற வகையில் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்.’’

இவ்வாறு நாடாளுமன்றப் பணியையும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயான பணியையும் நடைமுறையில் முறையாக இணைப்பது நடப்பு சூழ்நிலையில் கட்சிக்கு முன் உள்ள முக்கியமான பணியாகும். நம் கட்சித் திட்டம் கூறுவதாவது:

“இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடிவமாக இருந்தாலும், மக்களின் முன்னேற்றத்திற்கான ஓர் அங்கமாக உள்ளது. மக்கள் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அரசு விவகாரங்களில் ஓரளவு தலையிடுவதற்கும், ஜனநாயக மற்றும் சமூக வளர்ச்சிக்கான போராட்டங்களை நடத்துவதற் கும் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது.’’ (பத்தி 5.22)

ஆனாலும் பெரும் மூலதனத்தின் அதிகாரம் அதிகரித்திருப்பதும், அரசியலில் பெருமளவில் பணம் நுழைந்திருப்பதும், அரசியலில் கிரிமினல்மயம் அதிகரித்திருப்பதும் ஜனநாயக நடைமுறைகளைத் திரித்து, கீழறுத்து, வீழ்த்திக் கொண்டிருக்கிறது.

“(2010 ஆகஸ்ட் 7-10 தேதிகளில்) விஜயவாடாவில் நடைபெற்ற விரிவடைந்த மத்தியக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் சுட்டிக்காட்டி இருப்பதாவது:

“நாடாளுமன்ற ஜனநாயகமே நவீன தாராளமயத்தாலும், உலக நிதி மூலதனத்தின் தாக்கத்தாலும் அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியலில் பணம் மற்றும் கிரிமினல்மயம் மூலம் ஜனநாயகம் களங்கப்படுத் தப்படுவதுடன் ஜனநாயக உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பதும் இணைந்து கொண்டுள்ளன. ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் செய்வதற்கான உரிமைகள் நிர்வாக நடவடிக் கைகள் மூலமும், நீதித்துறை தலையீடுகள் மூலமும் கட்டுப்படுத்தப்படுகின்றன. கார்ப்பரேட் ஊடகங்களோ இவ்வாறு மக்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவது நியாயம்தான் என்கிற முறையில் கருத்துக்களைப் பரப்பிட, பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன”. (பத்தி 2.35)

“ஜனநாயக அமைப்பு மற்றும் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து விரிவாக்குவதற்கான போராட்டம் முதலாளித் துவ – நிலப்பிரபுத்துவ அரசுக்கெதிரான உழைக் கும் மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனை மக்கள் ஜனநாயகத்தின் கீழ் ஜனநாயகத்தின் உயர் வடிவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். நம் கட்சித் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

“மக்கள் நலனைப் பாதுகாக்க நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக விடப்பட்டுள்ள இத்தகைய மிரட்டல்களை முறியடிக்க வேண்டியது ஆகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளை நாடாளுமன்றத்திற்கு வெளியிலான நடவடிக்கைகளோடு இணைத்து, கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’’ (பத்தி 5.23)

“இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன், நாடாளுமன்ற அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை, வெகுஜன இயக்கங்களை வலுப்படுத்திடப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாற்றாக ஒரு வலுவான இயக்கத்தைக் கட்டக்கூடிய விதத்தில், நாடாளுமன்றப் பணி, நாடாளுமன்றத்திற்கு அப்பால் உள்ள நடவடிக்கைகளோடும், போராட்டங்களோடும் இணைக்கப்பட வேண்டும்.

“ஆயினும், நாடாளுமன்றப் பணியில் ஈடுபடும் சமயத்தில் கம்யூனிஸ்ட் நெறிமுறையிலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமான அளவில் வரலாம். அப்போதெல்லாம் அத்தகைய கம்யூனிஸ்ட் நெறிபிறழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடாது எச்சரிக்கையாக நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இத்தகைய போக்குகள் பல வடிவங்களில் வர முடியும். நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பே பல மாயைகளை உருவாக்கிடும். போராடவே வேண்டியதில்லை. அரசாங்கத்தின் ஆதரவுடன் அனைத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்கிற உணர்வு சர்வசாதாரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும். குறிப்பாக அரசு நம் ஆதரவில் இயங்கும்போது இப்போக்கு மக்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படும். இத்தகைய மாயைகளை போராடி முறியடித்திட வேண்டும். தங்கள் வர்க்க ஆட்சிக்கு மக்கள் பணிந்து செல்ல வேண்டும் என்பதுபோன்ற மாயைகளைப் பயன்படுத்தி ஆளும் வர்க்கங்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை தோலுரித்துக் காட்டிட வேண்டும். சுரண்டப்படும் மக்களை சரியான நடைமுறை உத்திகள் மூலம் தட்டி எழுப்பி, புரட்சி நடவடிக்கைக்குத் தயார்படுத்த வேண்டியது அவசியமாகும்.

“மேலும், அமைதியாகவே இடைப் பரிவர்த்தனை ஏற்படும் என்கிற மாயைகளும் வலுப்படும். இதனை நம் மேம்படுத்தப்பட்ட திட்டத்தில் சரி செய்திருக்கிறோம். கட்சியில் அவ்வப்போது முறையாக நாம் மேற்கொள்ளும் நெறிப்படுத்தும் இயக்கங்களில் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியதை வலியுறுத்தி வருகிறோம்.

“இன்றைய நடப்பு சூழ்நிலையில், இடது அதிதீவிரவாதத் திரிபை வெளிப்படுத்தும் மாவோயிசம் இந்திய மக்களின் புரட்சிகர வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தத்துவார்த்த சவால்களாக தொடர்ந்து இருந்து வருகிறது. அதன் புரிதல் தவறானது என்று மெய்ப்பிக்கப்பட்ட போதிலும், இந்திய ஆளும் வர்க்கங்களை தரகு முதலாளிகள்/அதிகாரவர்க்கத்தினர் என்று முத்திரை குத்துவதும், அரசுக்கு எதிராக உடனடி ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்கிற தந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதும் தொடர்கிறது. குறிப்பாக அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறி வைக்கிறது. அது முதலாளித்துவ பிற்போக்கு அரசியல் கட்சிகளுடனும், சக்திகளுடனும் சேர்ந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக கொலை பாதகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய இடது அதிதீவிரப் போக்கிற்கு எதிராகத் தத்துவார்த்தப் போராட்டங்களை வலுப்படுத்தி, அதனை அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் முறியடிக்க வேண்டியதும் அவசியம். சோசலிசத்திற்காக இந்திய மக்களின் போராட்டத்தை அறிவியல் பூர்வமாகவும் புரட்சி அடித்தளங்களின் கீழ் நின்று முன்னெடுத்துச் செல்வதற்கு இது மிகவும் முக்கியமாகும்.

“இத்தகைய திரிபுகளில் ஏதேனும் ஒன்றிற்கு இரையாவது, மக்களைத் திரட்டி வர்க்கப் போராட்டங்களை நடத்துவதை உதாசீனப்படுத்தி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை மட்டுமே சார்ந்திருக்கக்கூடிய திருத்தல்வாத வலைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடிய ஆபத்து ஏற்படும். மற்றொன்று, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே மறுதலிக்கும் இடது அதிதீவிர திரிபு என்னும் சிறுபருவக் கோளாறு வலைக்குள் நம்மைத் தள்ளிவிடக் கூடிய ஆபத்தினை ஏற்படுத்திடும். `அனைத்து நடைமுறை உத்திகளும் மற்றும் போர்த் தந்திரம் இல்லாமையும்’ (All tactics and no strategy) திருத்தல் வாதத்திற்கு இட்டுச் செல்லும். `அனைத்து போர்த் தந்திரங்கள் மற்றும் நடைமுறை உத்திகள் இல்லாமை’ அதிதீவிரவாதத்திற்கு இட்டுச் செல்லும். இவ்விரண்டிற்கும் எதிராக நாம் உறுதியுடன் போராடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அது துவக்கப்பட்ட காலத்திலிருந்தே, இந்திய புரட்சியை சரியான அரசியல் நிலைப்பாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்காக, மற்ற பல்வேறு பிரச்சனைகளுடன் இவ்விரு திரிபுகளுக்கு எதிராகவும் வலுவுடனும், உறுதியுடனும் போராடி வந்திருக்கிறது. இந்தப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதுடன் முடிந்துவிடவில்லை மற்றும் இந்திய புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் முடிந்திடாது.

“மார்க்சிய லெனினியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து விடுபட்டு அனைத்துத் திரிபுகளுக்கும் பலியாவதற்கு எதிராக மிகுந்த விழிப்புடனிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவம் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அவ்வாறு செய்யத் தவறியமைதான் சோவியத் யூனியனில் சோசலிசம் விழுங்கப்பட்டு, அதன் வடிவமும் உள்ளடக்கமும் 21 ஆவது நூற்றாண்டில் கூட மீளவும் நிறுவமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.

தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணி: இந்தியாவின் நிலைமைகளில் `அகக்காரணிகளை’ (‘subjective factor’) வலுப்படுத்துவது என்பது முக்கியமாக நம் போர்த்தந்திர லட்சியத்தை முன்னெடுத்துச் சென்றிட தொழிலாளர் – விவசாயிகள் வர்க்கக் கூட்டணியை வலுப்படுத்துவதையே பெரிதும் சார்ந்திருக்கிறது. தற்போதைய நிலைமைகளில், வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக, இந்தக் கூட்டணியை எய்துவதில் உள்ள பலவீனங்களைக் களைவது அவசரத் தேவையாகும். நம்முடைய நாட்டில் புறச்சூழ்நிலை (objective situation) இத்தகைய முயற்சிக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. அக பலவீனங்கள் (subjective weaknesses) சமாளித்து கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமான மூலக்கூறு மிகவும் சுரண்டப்படும் பகுதியினராகவும், நம் விவசாயிகள் வர்க்கத்தில் புரட்சிகரமான பிரிவினராகவும் விளங்கும் விவசாயத் தொழிலாளர்கள் – ஏழை விவசா யிகள் ஒற்றுமையை உருவாக்குவதாகும்.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை: தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் இந்திய மக்களின் விடுதலையை எய்திட தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒரு கட்சி என்ற முறையில், வர்க்க ஒற்றுமையும், புரட்சிகர உணர்வும் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை, இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய விதத்தில் இதர சுரண்டப்படும் வர்க்கப் பிரிவினரை இணைத்துக் கொண்டு வர்க்கத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கக்கூடிய அளவிற்கு, வலுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

“ஆயினும் இந்தப் பணி ஏகாதிபத்திய உலகமயத்தின் தற்போதைய நிலைமைகளில் மிகவும் சிக்கலான ஒன்றாக மாறி இருக்கிறது. நவீன தாராளமய சீர்திருத்தங்கள் காரணமாக தொழிலாளர் வர்க்கத்தினரில் அதிகமான அளவில் அணிதிரட்டப்படாத பிரிவினராக மாறிக் கொண்டிருக்கின்றனர். முதலாளிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரக்கூடிய விதத்தில் நிரந்தர வேலைகளே கேசுவல் வேலையாகவும், ஒப்பந்த வேலையாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஆளும் வர்க்கங்கள் ஈட்டக்கூடிய அதே சமயத்தில் தொழிலாளர்கள் ஒற்றுமையையும் உடைத்து, சீர்குலைக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது. கேசுவல், தற்காலிக மற்றும் சுயவேலைவாய்ப்பு தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சவால்களை சமாளித்து முன்னேறவும், பெரும் திரளாக மாறியிருக்கும் முறைசாராத் தொழிலாளர்களை புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக்கூடிய வகையில் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திடவும், பொருத்தமான நடைமுறை உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.

“தொழிற்சங்க நடவடிக்கைகளின்போது பொருளாதாரவாதத்தை (economism) முறியடிக்கும் பணியையும் எப்போதும் புரட்சி இயக்கங்கள் மேற்கொண்டு வந்திருக்கின்றன. இது தொடர்பாக, சோசலிசத்திற்கான இருபதாம் நூற்றாண்டு போராட்டங்களின் அனுபவங்கள் கற்றுணரப்பட்டு, இன்றைய நிலைமைகளில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியம்.

அடையாள அரசியல்: முதலாளித்துவம் தோன்றுவதற்கு முன்னரேயே ஆளும் வர்க்கங்கள் அடையாள அரசியலைப் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இன உணர்வு போன்ற பல்வேறு அடையாளங்களை தங்கள் வர்க்க ஆட்சியைத் தூக்கி நிறுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பல்வேறு விதமான தேசியவாதங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சி பெற்ற யூத இனம், சமீப காலங்களில், இஸ்ரேல் அமைவதற்கு இட்டுச் சென்றுள்ளமை, இதுபோன்றவற்றுள் ஒன்று. சோவியத் யூனியன் தகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் அதனுடன் இணைந்திருந்த முந்தைய குடியரசுகள் பலவற்றில் இருந்த பிற்போக்கு சக்திகள் தங்கள் ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக அடையாளங்களைப் பயன்படுத்திக் கொண்டன. முந்தைய யுகோஸ்லேவியா இன்று இந்த அடிப்படையில்தான் சிதறுண்டு போயிருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தைப் பிளவுபடுத்திட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும், நம் நாட்டிலிருந்த ஆளும் வர்க்கங்களாலும் மத அடையாளங்கள் மிகவும் வலுவான முறையில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இன்றும் கூட சுரண்டப்படும் பிரிவினர் மத்தியில் உள்ள வர்க்க ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் விதத்தில் மதரீதியாகவும், சாதிய ரீதியாகவும் மக்கள் திரட்டப்படுவது தொடர்கிறது. இன்றைய நிலைமைகளில், முதலாளித்துவம் ஒரு பக்கத்தில் அடையாள அரசியலைப் பயன்படுத்திக் கொண்டு, வர்க்க ஒருமைப்பாட்டை சீர்குலைக்கிறது, மறுபக்கத்தில் அத்தகைய அடையாள அரசியலை மேம்படுத்தி, மக்களை அரசியலற்றவர்களாகவும் மாற்றுகிறது.

“மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தப் புனைவான, பின்நவீனத்துவம், அரசியலுக்கு பெரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது, அது மிகவும் “நுண்ணிய’’ ஒன்று அல்லது வட்டாரம் சார்ந்தது என்றும், அரசியல் என்பதை “வித்தியாசங்கள்’’ மற்றும் “அடையாளங்கள்’’ ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க முடியும் என்றும் விவாதிக்கிறது. இவ்வாறு, இது நடப்பு சூழ்நிலையில் ஒரு புதிய அடிப்படையை அடையாள அரசியலுக்கு அளிக்கிறது.

“அடையாள அரசியலில், பின் நவீனத்துவ ஆதரவாளர்கள் நடைமுறைப்படுத்துவது போன்று, இன்றைய சூழ்நிலைமைகளில் இனம், மதம், சாதி, பழங்குடி அல்லது பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் அடையாளங்கள் அரசியலுக்கும் அரசியல் ரீதியாக ஒன்றுதிரட்டுவதற்கும் அடிப்படைகளாக மிகவும் அதிகமான அளவில் மாறிக் கொண்டிருக்கிறது. வர்க்கம் என்பது அடையாளத்தின் ஒரு சிதறிய துண்டு என்றே கருதப்படுகிறது. இவ்வாறு அடையாள அரசியல் தொழிலாளர் வர்க்கத்தின் கருத்தாக்கத்தையே மறுதலிக்கிறது. இதன் இயற்கைத் தன்மையே, அடையாள அரசியல் ஒரு அடையாளத்தினரை பிறிதொரு அடையாளத்தினரிடமிருந்து ஒதுக்கி வைக்கிறது மற்றும் எல்லையை வரையறுக்கிறது. எங்கெல்லாம் அடையாள அரசியல் பிடிப்புடன் காணப்படுகிறதோ அங்கெல்லாம் அது மக்களை தனித்தனிக் குழுக்களாகப் பிரித்து, குழுக்களுக்கிடையே மோதலையும் போட்டியையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

“அடையாள அரசியல் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு கருத்தியல் ரீதியாகப் பொருத்தமான ஒன்று. அடையாளம் சிதறுண்டு போவதை சந்தையால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. உண்மையில், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், பல்வேறு வாழ்க்கைப் பாணிகள் கொண்டாடப்படுகின்றன, நுகர்வோர் சமூகத்தின் ஓர் அங்கம் என்ற முறையில் அவர்களைக் கவரக்கூடிய விதத்தில், நாகரிகங்களும், நாகரிக வடிவங்களும் உருவாக்கப்படுகின்றன. முன்னேற்றம் குறைவாகவுள்ள முதலாளித்துவ நாடுகளில் அடையாள அரசியல் உலக நிதி மூலதனம் ஊடுருவவும், சந்தையை அது கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் வசதிசெய்து தருகிறது. அடையாளக் குழுக்களுக்கிடையேயான “வித்தியாசம்’’, சந்தையின் ஒரே சீரான தன்மையையும் அதன் நடைமுறைகளையும் பாதிப்பதில்லை. அடையாள அரசியல் வர்க்க ஒற்றுமையை மறுதலிப்பதில் தலையிட்டு, மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களைக் கட்டுவதில் தடையாகச் செயல்படுகிறது. அடையாள அரசியல் சிவில் சமூகம் என்று அழைக்கப்படுகின்ற அரசு சாரா நிறுவனங்கள் மூலமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மிகவும் சாதுரியமாக மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய அரசு சாரா நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனித் தனியே துண்டு துண்டான பிரிவுகளாகச் செயல்பட்டு தனித்தனி அடையாளக் கருத்துக்களை சுமந்து செல்லும் கருத்தியல் வாகனங்களாக செயல்படுகின்றன.

சமூக ஒடுக்குமுறைக்கான போராட்டமும், சாதிய ரீதியில் திரட்டப்படுவதற்கு இருக்கின்ற பிரதிபலிப்பும்: சாதி, பழங்குடி போன்ற முறைகளில் அரசியல் ரீதியாகத் திரட்டப்படும் அடையாள அரசியல் சமூகத்தின் அனைத்து சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஒற்றுமையைக் கட்டி எழுப்பிட முயல்வோருக்கு மிகவும் ஆழமான சவாலாக முன்வந்துள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி சமூக ஒடுக்குமுறை மற்றும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக இயக்கங்களில் ஈடுபடும் அதேசமயத்தில், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆகியோருக்கு நிலம், ஊதியம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பிரச்சனைகளைத் துல்லியமாகக் கையிலெடுத்துப் போராட வேண்டும். வர்க்கப் பிரச்சனைகளையும், சமூகப் பிரச்சனைகளையும் ஒருசேர எடுத்துக் கொள்வதன் மூலம், பெருங்கேட்டினை உருவாக்கும் அடையாள அரசியலையும், சாதிய ரீதியிலாக மக்கள் திரட்டப்படுதலையும் வெற்றிகரமான முறையில் முறியடித்திட முடியும். எப்படி வர்க்கச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறை பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் இதனை வெற்றிகரமாகச் செய்திட முடியும்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு, சமூகத்தில் வர்க்க சுரண்டலும், சமூக ஒடுக்குமுறையும் இருக்கிறது என்பதை அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைந்திருக்கிறது. நம் நாட்டின் சமூகப் பொருளாதார அமைப்பில், முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ வர்க்கச் சுரண்டல் நடைபெறுவதுடன், சாதி, பழங்குடியினம், பாலினம் அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையில் பல்வேறு வடிவங்களும் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆளும் வர்க்கங்கள் வர்க்கச் சுரண்டலின் மூலம் உபரியை உறிஞ்சி எடுத்துக் கொள்வதுடன், தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர்கள் சமூக ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பாலினப் பிரச்சனை: சாதிய அமைப்பின் சமூக ஒடுக்குமுறையுடன் என்றென்றும் நிலவவரும் நிலப்பிரபுத்துவ சிந்தனை செல்வாக்கும் சேர்ந்து கொண்டு ஆணாதிக்க சித்தாந்தத்தின் குணக்கேடுகளை வலுவான முறையில் ஊட்டி வளர்க்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள் இதனை மேலும் ஊக்குவிக்கிறது. பாலின அடிப்படையிலான பாகுபாடு நிலப்பிரபுத்துவத்தின் பழமை சிந்தனை மட்டுமல்ல, வர்க்க அடிப்படையிலான சமூகத்தில் புரையோடியிருக்கிற சமூகக்கேடுமாகும். சமத்துவமற்ற முறையில் வேலைப் பிரிவினையும், குடும்பப் பொருளாதாரத்தில் பெண்கள் மீதான தாங்க முடியாத சுமைகளும் நவீன தாராளமயக் கொள்கைகளினால் மேலும் உக்கிரப்படுத்தப்பட்டிருப்பதுடன், அரசு தான் அளித்து வந்த சமூகப் பொறுப்புக்களிலிருந்து கழண்டு கொள்வதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாலின சமத்துவமின்மைக்கு எதிராகவும் மற்றும் அதனையொட்டி எழும் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி என்ற முறையில் வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் தேவையான அளவிற்கு சமூக உணர்வினை வளர்த்தெடுக்க, தொடர்ந்து செயலாற்றிட வேண்டும்.

வகுப்புவாதம்: இந்தப் பின்னணியில் பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டமும், சிறுபான்மை மத அடிப்படைவாதத்தின் அனைத்து விதமான வெளிப்பாடுகளும் பார்க்கப்பட வேண்டும். வகுப்புவாத சக்திகள், (ஆர்எஸ்எஸ் கொள்கையான ஒரு வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரம்’ போன்று) நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்கள் சீர்குலைக்கப்படுவது மற்றும் பலவீனப்படுத்தப்படுவதல்லாமல், நம் வர்க்க சேர்மானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு முக்கியமான முன்நிபந்தனையாக விளங்கும் ஜனநாயக உரிமைகளை செயல்படுத்துவதற்கு வசதி செய்து தரும் அடித்தளங்களையும், வர்க்க ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்வதற்கான நிலைமைகளையும் மக்கள் மத்தியில் மதவெறியூட்டி, அவர்களின் மதவுணர்வுகளை வெறித்தனமாக ஏற்றி, சிதைக்கின்றன. எனவே, வகுப்புவாதத்தை முறியடித்திட ஓர் உறுதியான போராட்டம் இல்லாமல், நம் நாட்டில் புரட்சியை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை.

தேசியவாதம்: நவீன தேசியவாதம் முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியுடனும் அது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக தேசிய உணர்வினைப் பயன்படுத்துவதுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில், தேசியவாதம், காலனியாதிக்க மற்றும் அரைக் காலனியாதிக்க நாடுகளில், காலனிய மற்றும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் எழுச்சி பெற்றது. ஏகாதிபத்தியத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் இக்காலனியாதிக்க நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு நீர்த்துப்போயின. இன்றைய ஏகாதிபத்திய உலகமயச் சூழலில், தேசிய இறையாண்மைக்கு எதிராக மிகவும் திட்டமிட்ட முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் அனைத்து நாடுகளில் உள்ள அரசுகளிடமும் தங்களுடைய கட்டளைக்கு தேசிய இறையாண்மை இணங்கிட வேண்டும் என்று கோருகிறது.

“எண்ணற்ற பிராந்திய மற்றும் இன அடையாளங்களின் அடிப்படையில் மக்கள் அணிதிரட்டப்படுவதன் மூலமாக புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.   தெலுங்கானா, டார்ஜிலிங் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தனி மாநிலங்களுக்கான இயக்கங்கள் இன்றைய தினம் உருவாகி இந்திய அரசின் மொழிவாரி மாநிலங்களின் அடித்தளங்களையே சீர்குலைப்பது மட்டுமல்ல, சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன.

“சர்வதேச நிதிமூலதனம், நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துவதற்காக, இன தேசியவாதத்தையும் ((ethnic nationalism), பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கிறது. மக்களை குறுகிய குழுவாத அடிப்படையில் பிரிப்பதற்கு வகை செய்யும் இத்தகைய பிற்போக்குத்தனமான இன தேசியவாதம் எதிர்த்து முறியடிக்கப் பட்டாக வேண்டும். மாறாக அம்மக்களின் ஜனநாயக அபிலாசைகளை அவர்கள் வென்றெடுத்திட முன்னின்று போராட வேண்டும். அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதேசமயத்தில், தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பது மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதம் ஆகியவை சுரண்டப்படும் வர்க்கங்களை ஒன்று திரட்டிடவும், ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்திடவும் ஒரு முக்கியமான அம்சமாகும்.

“இந்தியா போன்ற பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில், உலகில் வேறெந்த நாடுகளுடனும் ஒப்பிடமுடியாத அளவிற்கு, சமூக-கலாச்சாரப் பன்முகத்தன்மை கொண்டு நம் நாட்டில், இத்தகைய போக்குகளில் ஈடுபடுவதற்கான நாட்டம் எண்ணிலடங்காத வகையில் தொடர்கிறது. அவை சுரண்டும் வர்க்கங்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதுடன், நம் இறுதி லட்சியத்தை எய்துவதற்காக நாம் நம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதையும் பலவீனப்படுத்துகின்றன. வர்க்கப் பிரச்சனைகளின் மீது வெகுஜனப் போராட்டங்களை வலுவான முறையில் கட்டி எழுப்புவதன் மூலமும் அனைத்து சுரண்டப்பட்ட பிரிவினரின் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலமும் மட்டுமே இதனை எதிர்த்து முறியடித்திட முடியும். ஏற்கனவே மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்திருக்கக்கூடிய இந்திய மாநிலங்களை மாற்றி அமைப்பதற்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு எதிராக இத்தகைய புரிந்துணர்வின் அடிப்படையில்தான் நாம் நம் நடைமுறை உத்திகளை வகுத்திருக்கிறோம்.’’

எனவே, இன்றைய சூழ்நிலையின் கீழ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட ஐம்பதாம் ஆண்டு தினத்தைக் கொண்டாடக்கூடிய இந்த சமயத்தில், இந்திய புரட்சிக்கான “அகக் காரணிகளை’’ (“subjective factor”) வலுப்படுத்திட, அதாவது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர தத்துவார்த்தப் போராட்டத்தை வலுப்படுத்திட, மார்க்சிய லெனினியத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் தீர்மானகரமான தலையீட்டை ஏற்படுத்திட, வர்க்க சக்திகளின் தற்போதைய சேர்மானங்களில் மாற்றத்தைக் கொண்டுவந்து, நாட்டு மக்களின் அனைத்து சுரண்டப்படும் பிரிவினரையும் தொழிலாளர் வர்க்கத்தின் கீழ் ஒன்றுபடுத்திட, மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்கான புரட்சிகரமான தாக்குதலைத் தொடுத்திடவும், அதன் மூலம் சோசலிசத்திற்கான அடித்தளங்களை அமைத்திட, நம் உறுதியை இரட்டிப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

சோசலிசத்தின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விக்குப் பதில் இதுதான்:

“சோசலிசம் மட்டுமே எதிர்காலம்.’’ இல்லையேல், மனித நாகரிக முன்னேற்றம் என்னும் காலக் கடிகாரத்தில் எதிர்காலம் என்னும் முள் மீளவும் காட்டுமிராண்டித்தனம் என்னும் இருண்ட காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.

 

தேவை தீவிர வெகுமக்கள் இயக்கம்: நோக்கியா சொல்லும் பாடம்

உலகமயமாக்கலின் தீவிர அமலாக்கம் துவங்கி 20 ஆண்டுகள் முடிந்து விட்டது. 1990களின் துவக்கத்தில் மேற்படி நவதாராளமயக் கொள்கைகளின் முதல் கட்டத் தாக்குதலாக, விருப்ப ஓய்வுத் திட்டம் இருந்தது. அன்றைக்கு பணி ஓய்விற்கு மேலும் 10 ஆண்டுகள் இருந்த நிலையில், விருப்ப ஓய்வுத் திட்டத்தை, அரசுப் பொதுத் துறை நிறுவனங்களில் அறிமுகம் செய்த போது, இடதுசாரிகளின் எதிர்ப்பிற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை. மாறாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை வேறு எந்த வடிவில் உருவாக்குவது, என வினா தொடுத்தனர். இன்று தலைகீழ் மாற்றம் உருவாகியுள்ளது. பணி ஓய்விற்கு 10 ஆண்டுகள் இருந்த நிலையில் விருப்ப ஓய்வு என்பது, பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் முடிந்தாலே விருப்ப ஓய்வு என்பதாக, வளர்ச்சி பெற்று உள்ளது. 50 வயது நிரம்பியவர்களிடம் அமலான விருப்ப ஓய்வுத் திட்டம், 23 26 வயது இளைஞர்களிடம் அமலாகி வருகிறது. வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்து விவாதிக்க முடிந்த அரசுகளால், இத்தகைய விருப்ப ஓய்வுத் திட்டத்தைத் தடுக்கும் செயலில் இறங்க முடியவில்லை. தொழிலாளர்களுக்காகப் பரிந்து பேசும் உணர்வும் அற்ற நிலையில் அரசுகள் உள்ளன. உலகமயக் கொள்கைகளின் வளர்ச்சி என்பது, படிப்படியாக அரசுகள் தங்களின் இறையாண் மையை பன்னாட்டு முதலாளிகளிடம் இழந்து வருகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், மிக அன்மை தினங்கள் வரையிலும், வேலை வாய்ப்பிற்காக மூலதனத்திடம் வளைந்து கொடுப்பது அவசியம், என்றும், தேவைப்படின் இந்தியத் தொழிற் சங்கச் சட்டங்களின் வீரியத்தை குறைப்பது தவறல்ல, என்றும் நீட்டி முழங்கி வந்தார். இதன் மூலம் இந்தியத் தொழிலாளர் களை நிராயுதபாணியாக மாற்றும் நடவடிக்கை களிலும் இறங்கினார். அதற்கு பல மாநில அரசுகளும் துணை நின்று சேவகம் செய்தன. அதன் ஒரு பகுதி தான் நோக்கியா இந்தியா நிறுவனம் பெற்ற சலுகைகளும் ஆகும்.

நோக்கியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தமும்:

2005 ஆம் ஆண்டு அதிமுக அரசுடன் நோக்கியா செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான சிறப்புப் பொருளாதார மண்டலம் தான், நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகும். 1200 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் வழங்குவதாக புரிந்து உணர்வு ஒப்பந்தம் தெரிவிக் கிறது. மறைமுக வேலை வாய்ப்பு பட்டிலில் காண்ட்ராக்ட் தொழிலாளர் துவங்கி, நிறுவனம் அருகில் டீக்கடை நடத்தும் தொழிலாளர் வரை அடக்கம். நோக்கியா தனது உற்பத்தியை இந்தியாவில் துவக்கும் போது, கூடவே சில உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உருவாகும் என அறிவிக்கப் பட்டது. அந்த நிறுவ னங்களும் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. அப்படி ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி, சால்காம்ப், லைட் ஆன் மொபைல், ஆர்.ஆர். டொனால்டி போன்ற நிறுவனங்கள் உருவானது. இவைகளில் சுமார் 5000 தொழி லாளர்கள் நிரந்தரத் தன்மையிலும், 10000 ஆயிரத் திற்கும் மேல் காண்ட்ராக்ட் அடிப்படையிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். நோக்கியாவின் சந்தை விரிவாக்கம் பெற்றதைத் தொடர்ந்து, நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நோக்கியாவிற்குள் மட்டும் 5000 ஐத் தாண்டியது. பயிற்சி மற்றும் காண்ட்ராக்ட் அனைத்தும் சேர்ந்து சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் நோக்கியாவிற்குள் மட்டும் வேலை செய்தனர். எல்லாம் சேர்ந்து 22 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் மேற்குறிப்பிட்ட ஆலைகளில் பணிபுரிந்தனர்.

2005 ஏப்ரல் 29 அன்று, தமிழ் நாடு அரசு தொழில்துறை அரசாணை எண் 59ஐ வெளியிட்டது. அதில், நோக்கியா நிறுவனத்தின் கைபேசி, உலக அளவில் 32 சதம் சந்தையையும், இந்தியாவில் 50 சதம் சந்தையையும் கொண்டிருக் கிறது. இந்தியாவில் 675 கோடி ரூபாயில் துவங்கப் படும் உற்பத்தி துவக்க கட்டத்தில் 1200 நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும். இதற்காக சிப்காட் மூலம் 200 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்து ஏக்கர் ஒன்றுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு 99 வருட குத்தகைக்கு கொடுக்கப்படும், என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத் திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கிறது, எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. சில நாள்களிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் திருத்தம் செய்யப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 4.5 லட்சம் ரூபாய் என்றும், பத்திரப்பதிவு கட்டணம் 4 என்பதை 0 எனவும் மாற்றம் செய்து விற்றனர், என்பதை இறுதி செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அறியலாம். புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது சலுகைகளை ஒரு நிறுவனத்திற்கு உத்திரவாதம் செய்கிற ஏற்பாடு, என்பதை பொது மக்களோ, வேலை செய்யும் தொழிலாளர்களோ அறிந்திருக்க நியாயம் இல்லை. மின்சாரம், தண்ணீர், சாலை, ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம். இதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இதை எல்லாம் செய்வதற்கு நிறுவன உரிமையாளர்களும், அதிகமாக வருவாய் ஈட்டு பவர்களும், நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர் ஆகியோர், அரசுக்கு வரி செலுத்துவது மிக மிக அவசியம். அரசுகளோ கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல், நிறுவ னங்களிடம் இருந்து பெறு கிற வரிகளைத் தள்ளுபடி செய்து, நிறுவனங்களுக்கான உள்கட்டமைப்பை உறுதி செய்து கொடுத் துள்ளது. அதேநேரம் தொழிலாளர்களிடம் இருந்து வசூல் செய்கிற வரியை, நிறுவனங்கள் மூலம் பிடித்தம் செய்து கறாராகப் பெற்றுள்ளது.

குறிப்பாக மாநில அரசு தனது வரி வருவாய் பங்கினை, உயர்த்த மத்திய அரசுடன் போராடுகிற இதே காலத்தில் தான் வணிக வரி, விற்பனை வரி, ஆகியவற்றை 10 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டி யதில்லை என எழுதிக் கொடுத்துள்ளது. வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி ஆகிய வற்றில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து மேலும் ஊக்கமளிக்கிற வகையில், தொழிலாளர் குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பேசுகிறது.

தொழிலாளர் குறித்து 10 அம்சங்கள் புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் இடம் பெற்று உள்ளன. அதில் 6 வதாகக் குறிப்பிட்டுள்ள, தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தைக் கட்டுபடுத்தப் பொதுப் பயன்பாட்டு நிறுவனம் என அறிவிப்பது (The state shall declare the SEZ site to be a “Public Utility” to curb labour indiscipline) என்பதாகும். இந்த பூதத்தைக் காட்டி, நோக்கியா நிறுவனம் தொழிலாளர்களை மிரட்ட முடிந்துள்ளது. கைபேசி உற்பத்தி எந்த வகையில் பொதுப்பயன் பாட்டுக்கானது? இன்று வரை புரியாத புதிராக நீடித்து வருகிறது, இந்த கேள்வி. அரசு கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தைக் கட்டுப்படுத்துவதே பொதுப் பயன்பாடு என்பதாகும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வணிக தந்திரம் போல், கம்பெனி துவங்கினால் தொழிலாளர்களின் உரிமைகள் பறிப்பு இலவசம் என்று கூவி விற்றுள்ளது தமிழக அரசு.

உலகமயக் கொள்கை என்பது காலணி ஆதிக்க காலத்தில் இருந்து அமலாகி வருகிறது. அன்றைய உலகமயக் கொள்கை என்பது நேரடி காலணி ஆதிக்கம் எனக் கொண்டால் இன்றைய உலகமயக் கொள்கை நவ காலணியாதிக்கம் என்பதாக உள்ளது. அதாவது அன்று போல் நேரடி ஆட்சி அதிகாரம் என்பதாக இல்லாமல், சட்டத்தின் மூலம் மூலதனச் சுரண்டலை, இயற்கை வளச் சுரண்டலை உறுதி செய்வதற்கான கொள் கையாக உள்ளது. 1696ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியினர் வங்கா ளத்தின் ஹூக்ளி நதிக்கரையில் முதல் தொழிற் சாலையை உருவாக்கி உள்ளனர். அதோடு கூடவே சேர்ந்து பொருள் களுக்கான சேமிப்புக் கிடங்குகளும் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படிப்படியாக வளர்ந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அவுரங்க சீப் அரசிடம் இருந்து, வரிசெலுத்தாமல் விற்பனை களை விரிவாக்கம் செய்து கொள்வதற்கான உத்தரவையும் பெற்றுள்ளது. அப்போதே இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற ஏற்பாடுகள் விதைக்கப் பட்டுள்ளன. (ஆதாரம்: 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகம், மத்திய அரசு பாடத் திட்டம்) உலக மயமாக்கலுக்கான அடித்தளமாக இதை எடுத்துக் கொள்ள முடியும். முதலில் இடம் பின் சலுகை, அதன்பின் ஆதிக்கம் என்ற வரலாறை இன்றைய தலைமுறை நோக்கியா போன்ற நிறுவனங்கள் மூலம் அறிய முடியும்.

அமர்த்து பின் துரத்து கொள்கை:

உபரி மதிப்பு என்கிற லாபத்தின் பங்கு உழைப்பில் இருந்து வெளிப்படுகிறது, என்பது மார்க்சீயத்தின் கண்டுபிடிப்பு. இன்றைய நவீன முதலாளித்துவம் அதனுடைய, தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, வேலையாள்களின் எண்ணிக்கையை குறைப்பது, அதன் மூலம் உபரி மதிப்பை அதிகரிப்பது, என்ற தன்மையில் செயல் படுகிறது. அதோடு கூடவே நிரந்தர தன்மை கொண்ட, தொழிலாளர் எண்ணிக்கையையும் கட்டுக்குள் வைப்பது, உபரியை பன்மடங்கு உயர்த்த உதவி செய்யும் பேராயுதம், என்பதைக் கண்டறிந்து செயல்படுகிறது. இந்த தேவைக்காக முதலாளித்துவத்தின் கொள்கை அமர்த்து பின் துரத்து என்பதாகும். நோக்கியாவில் மட்டுமல்ல. தமிழகத்தில் பஞ்சாலைத் தொழிலில் அமலான, விருப்ப ஓய்வுத் திட்ட அனுபவம் மிக முக்கியமான உதாரணமாகும். 1990 களின் இறுதியில் கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் விருப்ப ஓய்வுத் திட்டம் தீவிரமாக அமலான காலம். இன்றைய நோக்கியாவைப் போல், 25 முதல் 28 வயது இளைஞர்களும் விருப்ப ஓய்வு என்ற பெயரில் வெளியேற்றப்பட்டனர். சில தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் இடதுசாரிகள் தவிர வேறு யாரும் குரல் கொடுக்கவோ, போராட்டங்கள் நடத்தவோ தயாரில்லை. பஞ்சாலைத் தொழில் நசிவைச் சந்தித்து வருகிறது, மீட்பதற்கு விருப்ப ஓய்வு தவிர சிறந்த அணுகுமுறை வேறு இல்லை, என்ற முதலாளித்துவத்தின் கூச்சல் அதிகரித்தது.

இன்று வரை பஞ்சாலைத் தொழில் நசிவைச் சந்திக்கவில்லை என்பதை நம்மால் உணர முடியும். சுமங்கலி, மாங்கல்யம் போன்ற பல்வேறு நாமகரணங்களில் கேம்ப் கூலி முறை அறிமுக மாகி, கடந்த 15 ஆண்டுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அநேகமாக பஞ்சாலைத் தொழிலில் நிரந்தர வேலை வாய்ப்புப் பறிக்கப் பட்டு விட்டது. சமூக பாதுகாப்பு என்ற அடிப் படையில் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை நிர்மூலமாக்கும் பணியை விருப்ப ஓய்வுத் திட்டம் வெற்றி கரமாக செய்து முடித்தது. சமூகவியல் அறிஞர்கள் சமூகவயமாதல் (Socialization) என்பதை விவாதிக்கிற போது, தொடர் பழக்க வழக்கம் முக்கியமானது எனக் குறிப்பிடுகின்றனர். இந்தக் கருத்தை இன்றைய முதலாளித்துவம் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் செயலாக்கி வருகிறது. குறிப்பிட்ட நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது, அங்கு வேலை இல்லை என்றால் வேறு நிறுவனங்களுக்குச் செல்வது, என்பதை இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளர்கள் பழக்கமாகக் கொண்டு உள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளைப் போல், சமூகப் பாதுகாப்பு குறித்தோ, முதுமையில் ஓய்வு மற்றும் ஓய்வூதியம் ஆகியவை குறித்தோ, இந்தியா போன்ற நாடுகளின் பெரும்பான்மையானத் தொழிலா ளர்கள் உணரவில்லை.

மாறாக ஆளும் வர்க்க சிந்தனைக்கு தொழிலாளர்கள் ஆட்பட்டு உள்ளனர். குறிப்பாக சோவியத் யூனியன் போன்ற கம்யூனிஸ்ட் நாடுகள் சந்த்தித்த அரசியல் வீழ்ச்சி, முதலாளித்துவத்திற்கு சாதகமாக மாறி விட்டது. எந்த ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்த்தையும் இன்றைய இளம் தொழிலாளி வர்க்கம் அனுப விக்கவில்லை. அதற்கான தியாகம், போராட்டம் ஆகியவைக் குறிந்தும் அறிந்திருக்கவில்லை. உலகமயமாக்கலின் மற்றொரு ஆதிக்கம், சிறிய நிறுவனங்களைப் பெரிய நிறுவனங்கள் விலை பேசி ஆக்கிரமிப்பது ஆகும். இது உலகில் பல நாடுகளில் சாதாரணமாக அமலாகி வருகிறது. ஒரு தொழிலில் ஆதிக்கம் செலுத்துகிற உற்பத்திப் பிரிவு யார் கையில் இருக்கிறதோ, அந்தப் பிரிவு உரிமையாளர் படிப்படியாக, இதர பிராண்ட் களின் உற்பத்தியை விலைக்கு வாங்கிவிட முடியும். இதற்கு சிறந்த உதாரணம் நோக்கியாவை, மைக்ரோசாஃப்ட் விலைக்கு வாங்கியது. இது போன்று நிறுவனங்கள் இணைகிற போது, வேலை இழப்பு தவிர்க்க முடியாது, என்ற கருத்தை மிக வலுவாக, முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்திடம் உளவியல் ரீதியில் ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய கருத்தாக்கம் அமர்த்து பின் துரத்து என்ற கொள்கைக்கு உதவி செய்யும், என்பது கவணிக்கத் தக்கது. பேரா. பிரபாத் பட்நாயக் கூறுகையில், முதலாளித்துவம் உருவாக்கி வளர்க்கும் கருத்தாக்கங்களில் மிக முக்கியமானது, வறுமையும், பெருந்துன்பமும் எல்லாக் காலங்களிலும் உள்ளது, அதை எதிர்த்து போராடுவதை விட, ஒவ்வொரு தொழிலாளியையும் தனக்கான தேவை என்ற சிந்தனை மூலம், தனிமைப் படுத்தி அதை சகித்துக் கொள்ளப் பழக்குவது எனக் குறிப்பிடுகிறார். வேலையில்லாப் பட்டாளம் என்ற ரிசர்வ் ஆர்மி, வேலையில் இருப்போரை தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது, என்ற மனநிலையுடன் வேலை செய்ய வைக்கிறது. எதிர்ப்புணர்வை மழுங்கச் செய்கிறது. இது முதலாளித்துவத்திற்கு சாதகமான நிலையை நீடித்துச் செல்ல உதவுகிறது, என்றும் பிரபாத் பட்நாயக் கூறுகிறார்.

இதையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிற போது, இந்தக் கருத்தாக்கங்கள் காரணமாக, சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் பலாபலன்கள் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மாறியுள்ளது. முன்னுக்கு வந்துள்ள உலகமய மாக்கலின் காலகட்டம் மூலதனத்தின் லாபத்தை மிக அதிக அளவில் உயர்த்துவதற்கான தேடலைத் தொடர அனுமதிக்கிறது, எனக் குறிப்பிடுகிறது. அரசுகளின் இயலாமை:

உலகமயக் கொள்கைகள் அமலாகத் துவங்கியபின் சந்தைக் கொள்கை தீவிரம் பெற்று இருப்பதைக் காண முடியும். சர்வதேச எல்லை களைக் கடந்ததாக சந்தை இருக்கிறது. எனவே சந்தைக்காக அரசுகள் பன்னாட்டு நிறுவனங் களிடம் தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்கும் போக்கும் வளரும் நாடுகளில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேச பொருளா தாரத்தை நிர்வகிப்பது அரசின் கடமை என்பதை விட, நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கக் கூடியதாக அரசு இருந்தால் போதும் என்ற வாதம் தற்போது முதலாளித்துவத்தால் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்க முடியும். வேலைவாய்ப்பை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டு, அங்குள்ள தொழிலாளர் உரிமைகளை எழுதி அடமானம் வைத்து விட்டபின், அரசு வேறு என்ன விதமான நிர்வாகத்தை மேற்கொள்ள முடியும்? எனவே தான் இக்காலத்தில் மிக அதிகமான தலையீடுகள் தொழிலாளர் போராட் டங்களில் இருந்துள்ளதைப் பார்க்க முடியும். அதே நேரத்தில் அரசுகள் வேலை வாய்ப்பை பாதுகாப்பதிலும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், வேடிக்கைப் பார்த்து இருப்பதையும் குறிப்பிட முடியும்.

வர்த்தக தாராளமயக் கொள்கை, உள்நாட்டு உற்பத்தியாளர்களை அகற்றி விட்டு வளர்முக நாடுகளில் தொழில் அழிவை ஏற்படுத்துகிறது. உற்பத்தியையும், தொழிற்துறை வணிக செயல் பாடுகளையும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் போது, வளரும் நாடுகளில் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது. வளரும் நாட்டின் உற்பத்தித் திறனுள்ள சொத்துக்களை, வெளிநாட்டின் பன்னாட்டு நிறுவனங்கள் வசப்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கிறது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் 20 வது அகில இந்திய மாநாட்டு தத்துவார்த்த தீர்மானங்கள் அறிக்கை குறிப்பிடுகிறது.

நோக்கியா நிறுவனம் தற்போது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்த நிகழ்வு மற்றும் மத்திய அரசுக்குத் தர வேண்டிய 21 ஆயிரம் கோடி வரி ஆகியவற்றை நீதிமன்றம் தலையீடு செய்து, குறிப்பிட்ட சதம் தொகையைச் செலுத்த வேண்டும் என உத்திரவிட்ட பின்னரும், அதைச் செலுத்தாமல், வேலைவாய்ப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது, மார்க்சிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்த நிலையைத்தான் வெளிப் படுத்துகிறது. தமிழ் நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நோக்கியா நிறுவனத்திற்கு வழங்கிய வரிச் சலுகைகளுக்குப் பின்னரும், குறைந்த பட்ச வரியை செலுத்த மறுத்து வருவதும் கூட, அரசுகளை பன்னாட்டு நிறுவனங்கள் மீறிச் செல்லும் ஆதிக்கம் கொண்டதாக இருப்பதை உணர முடியும். எனவே தொழிற்சங்க போராட் டங்களைக் கடந்த அரசியல் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. தொழிற்சங்களின் கூட்டுப் போராட்டம், வேலைநிறுத்தம் ஆகியவற்றைக் கடந்த தீவிர பிரச்சாரம் அரசியல் ரீதியில் தேவைப்படுகிறது. ஏனென்றால் இதைத் தவிர வேறு வழியில்லை, என்ற கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ள மனநிலையை மாற்ற அரசியல் பிரச்சாரமும், அரசியல் போராட்டமும் தான் தீர்வாக இருக்க முடியும். பலவீனப் பட்டுள்ள அரசுகளை, பெரும் மக்கள் திரள் மூலமான கூட்டு செயல்பாடுகள் மூலம் (வெகுமக்கள் அமைப்பு களின் கூட்டு செயல்பாடு) அம்பலப்படுத்தும் போது, உரிமைகளை நிலைநாட்டும் நடவடிக் கையில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் நோக்கியா அனுபவம் புதிய போராட்டத்திற்கான திசை வழியை நிர்மானித்துள்ளது.

குறிப்பாக ஒரு ஆலைத் தொழிலாளர்கள் 4 அல்லது 5 மாவட்டங்களில் குடியிருந்து பணிக்கு வரும் நிலையில், ஏரத்தாள சிதறிக் கிடக்கும் தொழிலாளர் கூட்டமாக, அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் உள்ள நிலையில் அதன் உதிரிபாக உற்பத்தி ஆலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், பல பன்னாட்டு மூலதனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கு கோரிக்கைகளாக, ஒன்று வேலை வாய்ப்பைப் பாதுகாப்பது. இரண்டு அரசு தனது சமூகக் கட்டுப்பாட்டை உறுதி செய்வது. மூன்று அந்நிய மூலதனத்திற்கான வரிச் சலுகைகளை வரைமுறைப்படுத்துவது. நான்கு மத்திய மாநில அரசுகள் நம்நாட்டின் இயற்கை வளம் மற்றும் மனிதவளத்தை முறை யாகப் பயன்படுத்த திட்டமிடுவது ஆகியவை ஆகும். இதற்கான தீவிரமான பிரச்சாரமும் அதைத் தொடர்ந்த போராட்டங்களும் உருவாகும் போது, நோக்கியா உதாரணங்களைத் தடுக்க முடியும். இளம் தலைமுறையின் எதிர் காலத்தைப் பாதுகாக்க முடியும். வலுவான எதிர்ப்பு இயக்கங்கள் உள்ள நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது, என்ற அனுபவத்தில் இருந்து இத்தேவையைத் தொழிலாளி வர்க்கம் உணர வேண்டும்.

சிங்காரவேலரின் அரசியல் உத்தி!

தமிழக சிந்தனை வரலாற்றுப் பாரம்பரியத்தில் எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தின் மேன்மை போற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதிகார பீடத்தில் இருந்து வந்துள்ள உடைமை வர்க்கங்களின் சிந்தனை மரபுகள் உழைப்புக்கும், உழைக்கும் வர்க்கப் பண்பாட்டுக்கும் மதிப்பளிப்பதில்லை. முரண்பட்ட இந்த இரண்டு போக்குகளும் தமிழக சிந்தனை மரபில் உண்டு.

20ம் நூற்றாண்டில் உழைப்பின் மேன்மை பேசுகிற இந்த சிந்தனை மரபின் தொடர்ச்சியாக புரட்சிகர சமூக மாற்றத்தில் தொழிலாளி வர்க்கத்தின் வல்லமையை உணருகிற கட்டம் உருவானது. 1908ல் வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்றவர்கள் இந்த கருத்தாக்கத்திற்கு வரத்துவங்கினர். இந்த கருத்தாக்கம் மேலும் வலுப்பெற 1917 ரஷியப் புரட்சியின் தாக்கம் முக்கிய பங்கு வகித்தது. எனினும், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வல்லமை எனும் கருத்தாக்கம் வெளியிலிருந்து இறக்குமதியான கருத்தாக்கமே என்கிற புரிதல் சரியானது அல்ல. தமிழக சிந்தனை மரபில் இருந்து வந்துள்ள உழைப்பின் மேன்மை போற்றும் கருத்தியலின் தொடர்ச்சியே தொழிலாளி வர்க்கம் புரட்சிகரமானது என்ற கருத்திற்கு இட்டுச்சென்றது. மார்க்சியம் இதற்கு அறிவியல் அடிப்படையை வழங்கியது.

இந்த வளர்ச்சிப் போக்கில், சிங்காரவேலரின் செயற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. உழைப்பாளி வர்க்கத்தின் அரசியலை, விடுதலை இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக மாற்றிய பெருமை சிங்காரவேலரையே சாரும். இதையொட்டிய அவரது படைப்பாற்றல் மிகுந்த முன்முயற்சிகளில் ஒன்றுதான் அவர் நிறுவிய தொழிலாளி – விவசாயிகள் கட்சி.

தொழிலாளர் சுயராஜ்ஜியம்

1920ம் ஆண்டுகளிலேயே தொழிலாளர் விவசாயி வர்க்கக் கூட்டணி பற்றிய சிந்தித்தவர் தோழர் சிங்காரவேலர். இந்த வர்க்கங்கள் இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்று தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள, ஒரு அரசியல் கட்சியை உருவாக்க முனைந்தார். அக்கட்சிக்கு ஹிந்துஸ்தான் தொழிலாளர் விவசாயி கட்சி எனப் பெயரிட்டார்.

இக்கட்சிக்கென்று, ஹிந்துஸ்தான் லேபர் கிஸான் கெஜட் என்ற பத்திரிகையை அவர் துவக்கினார். 1923ம் ஆண்டு மே தினமன்று கட்சி யின் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

தொழிலாளர், விவசாயிகள் கட்சியின் நோக்கம், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, பாட்டாளி வர்க்க அரசு அமைப்பது என்பதை சிங்காரவேலர் அந்த மேதினக் கூட்டத்தில் அறி வித்தார். இந்தியத் தொழிலாளரின் குறிக்கோள், தொழிலாளர் சுயராஜ்யமாக இருக்க வேண்டு மென்று அவர் முழங்கினார்.

சுயராஜ்ஜியத்தில் நிறைவான வாழ்க்கை நடத்தும் உரிமை தொழிலாளர்களுக்கும், விவ சாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். தொழிலாளி வர்க்கத்தலைமை கொண்ட அரசே உண்மையான சுயராஜ்ஜியம் என்று பொருள்பட, சுயராஜ்ஜியம் இன்றேல் வாழ்வில்லை; தொழிலாளி இன்றேல் சுயராஜ்ஜியமில்லை என்றும் அழுத்தமாகக் கூறினார். பிரிட்டிஷ் ஆட்சி அகன்று முதலாளித்துவ உடைமை வர்க்கங்களின் அரசு அமைவதற்கு பதிலாக, உழைப் பாளி வர்க்க அரசு அமைய வேண்டுமென்பது அன்றைய கம்யூனிஸ்டுகளின் இலட்சியப் பிரகடனம். இதன் செயல்வடிவமே சிங்காரவேலர் அமைத்த தொழிலாளர் – விவசாயிகள் கட்சி.

காங்கிரசோடு நட்புறவு ஒப்பந்தம்

பெரும்பான்மையான தொழிலாளர் விவ சாயிகள் தங்களது உரிமைகளை உணராது, முதலாளித்துவ வர்க்கங்களின் பின்னால் அணி திரள்கின்றனர். அவர்கள் ஒடுக்கும் வர்க்கங்களின் கட்சிகளுக்கு ஆதரவாகத் திரளுகிற நிலை நீடித்து வருகின்றது,

இப்பிரச்சனையைப் பற்றி 1920ம் ஆண்டு களிலேயே தீவிரமாக சிந்தித்தவர் தோழர் சிங்காரவேலர். தனது உழைப்பைச் சுரண்டுப வனுக்கு அடிபணியும் உழைப்பாளி வர்க்கங்களை எவ்வாறு சரியான வழிக்குக் கொண்டு வருவது? உழைப்பாளி வர்க்கங்கள் தங்கள் நலனையும், உரிமைகளையும் பாதுகாத்து முன்னேறுவதற்கு எத்தகு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? இவை அனைத்துக்கும் சிங்காரவேலர் தீர்வுகளை நாடினார்.

பெரியாரோடு இணைந்திருந்த சமயத்திலும், சிங்காரவேலர் சாதி ஒழிப்பு, சமய மூடநம்பிக்கை கள் எதிர்ப்பு உள்ளிட்ட சுயமரியாதைக் கருத்துக் களை இடைவிடாது எழுதி வந்தார். அதுமட்டு மல்லாது, ஐக்கிய முன்னணி உத்தியையும் அவர் கைவிடவில்லை.

சுயமரியாதைக்காரர்களிடம் சமதர்ம பிரச்சாரம்

சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கும், அவர்கள் மூலமாக மக்களுக்கும் சிங்காரவேலர் பொதுவுடைமைச் சமூகம் பற்றிய கருத்துக்களை பரவச் செய்தார். சுயமரியாதை இயக்கத்தவர்கள்,  ஜனநாயகம் எனும் பெயரில் முதலாளித்துவம் பேசுகிற பசப்பு வார்த்தைகளை நம்பிடக்கூடாது என்றார் சிங்காரவேலர்.

சுயமரியாதைக்காரர்களாகிய நாம், டிமாக்கிரஸி என்ற மோசத்தை இனியும் கையாளுவதா? என்று கேட்டுவிட்டு, … அல்லது சோவியத் முறையென்ற உண்மையான திட்டத் தைக் கையாளுவதா? என்று கேட்டு, சிந்திக்கத் தூண்டினார். சோவியத் முறை என்பது என்ன வென்ற விளக்கத்தையும் அளித்தார்.

… எந்தத் தொழிலை எவன் புரிகின்றானோ, எந்தெந்த நிலத்தை எவன் உழுது பயிரிடுகின்றா னோ அவன்தான் அவனுடைய ஆட்சியை நடத்த வேண்டும். அந்த அரசியலுக்கு அவனே உரிய வன்; மற்றவர்கள் யாருக்கும் எவ்வித ஆதிக்கமும் கொடுக்கலாகாது…

எந்த இயக்கங்களோடு ஒரு கம்யூனிஸ்டு உறவு கொண்டாலும், சமதர்ம சமுதாயம் எனும் இலட்சியத்திற்காக மக்களைத் திரட்டுவதில் உறுதியாக உழைக்க வேண்டுமென்பது சிங்கார வேலர் கற்றுத்தரும் பாடம்.

சிங்காரவேலர் படைத்த இரண்டு திட்டங்களும், தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றுத் தேவைகள். தமிழர்களின் பண்பாட்டு நிலைகள், கருத்தியல் உணர்வுகளின் வெளிப்பாடே இந்தத் திட்டங் கள். இந்தத் திட்டங்கள் சிங்காரவேலர் எனும் தனிப்பட்ட மனிதரின் மேதைமையால் எழுத்துக்களாக வடிவம் பெற்றிருக்கலாம். ஆனால் இந்தத் திட்டங்களின் தேவை தமிழ்ச்சமூகத்தில் இயல் பாக கருக்கொண்டிருந்தது.

சுயமரியாதையும், சமதர்மமும் செயல்பட்டது தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுத் தேவை. அது இடையில் தடைபட்டது. ஒரு சூழ்ச்சியின் விளைவே. ஆங்கிலேய ஏகாதிபத்தியமே இதில் முதல் குற்றவாளி.

ஒரு சமூகப் போராளி, ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கான சூழல் நிலவாத போது, நம் பிக்கையிழந்து சோர்ந்து போய்விடக் கூடாது. இந்த புரட்சிகரமற்ற சூழல், அவருக்கு புதிய பரிசோதனைகளை நிகழ்த்துவதற்கான சுதந்திரத் தைத் தருகிறது.

புதிய முயற்சிகளுக்கான கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. ஜெர்மானிய கம்யூனிஸ்ட் போராளி ரோசா லக்சம்பர்க், புரட்சிக்கான சரியான நேரத்திற்காக பொறுமையாகக் காத்திருப்பதில் பயனில்லை; ஒருவர் இவ்வாறு காத்திருந்தால், அந்த தருணம் வரவே வராது; பக்குவம் பெறாத முயற்சிகளாக இருப்பினும், அவற்றைத் துவக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த பக்குவமற்ற முயற்சிகளின் தோல்வி களில்தான் புரட்சிக்கான அகநிலை வாய்ப்புக்கள் உருவாகின்றன. இதனால்தான், மாவோ, தோல்விகளிலிருந்து (மீண்டும்) தோல்விக்கு, பிறகு இறுதி வெற்றிக்கு என்றார். இதையே இலக்கியவாதி சாமுவேல் பெக்கெட் கூறினார்: மீண்டும் முயற்சி செய்; மீண்டும் தோல்வியை பெற்றிடு; மேலான தோல்வியை மீண்டும் பெற்றிடு. .இந்த உறுதியை சிங்காரவேலர் வாழ் வில் காணலாம்.

சோவியத் புரட்சி போன்ற மாற்றம் நிகழ்கிற சூழல் நிலவிடாதபோது, சிங்காரவேலர் கம்யூனிச இலட்சியங்களுக்காக பாடுபட்டார். படைப் பாற்றல்மிக்க  பல முன்முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றில் தோல்வி பல கண்டாலும், மீண்டும் முயற்சிகளைத் தொடர்ந்தார். கம்யூனிஸ்டுகளின்  ஐக்கிய முன்னணி உத்திகளை இன் றைக்கும் தமிழகத்தில் பலர் பழித்தும், இழித்தும் எழுதி வருகின்றனர். இந்த எழுத்துக்களுக்கு அஞ்சியும், சங்கடப்பட்டும், சிங்காரவேலர்  காட் டிய பாதையில் தீரமுடன் நடைபோட முற் போக்காளர்கள் சிலரும் கூட தயங்குகின்றனர். ஆனால், மேலான தோல்வி கிட்டினும், சிங்கார வேலர் காட்டிய வழியே இறுதி வெற்றி பெறும்.

– சிங்காரவேலர் சிந்தனைக் கழகம் – அறக்கட்டளை – சிங்காரவேலர் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா மலரில் பிரசுரமானது

காலனிய இந்தியப் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்

முந்தைய வெளிநாட்டவர் படையெடுப்புகளின் போது படையெடுப்பாளர்கள் நாட்டை சூறையாடி கொள்ளையடித்து திரும்பிய போது பெரும்காயங்களை ஏற்படுத்தினர். இருப்பினும் தன் விடாமுயற்சியால் இந்தியா மீண்டும் பலம் பெற்றது; காயங்கள் ஆறின. படையெடுப்பாளர்கள் இந்தியாவிலேயே தங்கி ஆட்சியாளர்களான போது கூட அவர்களது ஆட்சி அன்றைய சூழலுக்கேற்றாற் போல் அமைந்திருந்ததே தவிர நாட்டின் செல்வங்கள் ஏதும் வெளியேறவில்லை. நாடு உற்பத்தி செய்த பொருட்கள் நாட்டிலேயே தங்கின. நாட்டிற்கான சேவையில் பெற்ற அறிவு, அனுபவம் அனைத்துமே மக்கள் வசமாகின. ஆனால் ஆங்கிலேயரைப் பொருத்தவரை பிரச் சனை நூதனமானதாகும். முதற்கட்டத்தில் போர் களின் மூலம் நாட்டின் மீது ஆங்கிலேயர் சுமத்திய கடன் பெரும்காயத்தை ஏற்படுத்தியது. உயிர்காக்கும் இரத்தத்தை தொடர்ந்து வெளியேற்றுவதன் மூலம் அடைந்த காயம் ஆறாத வாறு செய்கின்றனர். முன்னாள் படையெடுப் பாளர்கள் எல்லாம் இங்கும் அங்கும் வெட்டிய கசாப்புக்காரர்கள் என்றால், ஆங்கிலேயர்கள் நிபுணத்துவமிக்க கத்தியை இதயத்திற்குள்ளே பாய்ச்சுபவர்களாக உள்ளனர். காயம் வெளியே தெரியாத அளவிற்கு, நாகரிகம், வளர்ச்சி என பேசி அதை மூடிமறைக்கின்றனர்.

அனைத்துலகிற்கும் சவாலிட்டு இந்தியாவின் நுழைவாயிலில் காவலர்களாக நின்று கொண்டு, எத்தகைய செல்வத்தை காப்பதாகக் கூறுகிறார்களோ, அவற்றையே பின் கதவின் வழியே அபகரித்து எடுத்துச் செல்கிறார்கள். மேற்கூறிய தாதாபாய் நெளரோஜியின் கூற்று ஆங்கிலேயரது ஏகாதி பத்திய ஆட்சியின் தன்மை பற்றி அறிய உதவு கிறது. காலனி ஆதிக்கக் கொள்கை விவசாயி களையும், நெசவாளர்களையும் ஏழ்மைப்படுத்தி நாட்டை விட்டு ஒப்பந்தக் கூலிகளாக வெளி யேறச் செய்ததையும் அரசின் நிதி மற்றும் நில வரிக் கொள்கை கொடிய பஞ்சங்களுக்கு வழி வகுத்ததையும் இங்கு விவாதிக்கிறோம். மேலும் இங்கிலாந்து நலனுக்காக எத்தகைய சுரண்டற் கொள்கையை காலனி அரசு மேற்கொண்டது என்பதை இந்திய முதலாளி வர்க்கம் புரியத் தவறியபோது செல்வ வடிகால் கோட்பாடு மூலம் நெளரோஜி போன்ற தேசியவாதிகள் விளக்கியது எவ்வாறு பொருளாதார தேசிய எழுச்சிக்கு அடித்தளம் இட்டது என்பதையும் இக்கட்டுரையில் காண்கிறோம்.

1. ஏழ்மையாக்கப்பட்ட விவசாயிகள்:

ஐந்து நூற்றாண்டுகள் அரசாண்ட இஸ்லாமியர் ஆட்சியின்போது கிராமப்புற வாழ்க்கை சிறிதும் மாறவில்லை. ஆனால் ஆங்கிலேயர் அரசாட்சி தன்னிறைவு பெற்றிருந்த கிராமங்களை சிதைத்து மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியது. இந்திய மன்னர்கள் நிலத்திலிருந்து கிடைத்த விளைச்சலில் 1/6 பங்கு அல்லது 1/4 பங்கு என நிலவரியை விளைபொருளாகவே வசூலித்தனர். இதற்கு மாறாக ஆங்கிலேயர், விவசாயி நிலத்தை பயிர் செய்தாலும் அல்லது தரிசாகப் போட்டிருந்தாலும், அந்நிலம் தரக்கூடிய விளைச்சலின் அடிப்படையில் நிலவரி யைக் கணக்கிட்டு ரொக்கமாக வசூலித்தனர். இத னால் பருவமழை பொய்த்த காலத்தில் நிலத்தை உழுது பயிரிடாத போதும் வாடகை போன்று நிலவரியை விவசாயி செலுத்த வேண்டியதிருந்தது. நடைமுறையில் இருந்த சித்ரவதைச் சட்டம் நிர்ணயித்திருந்த நிலவரியை பலவந்தமாக வசூ லிக்க வருவாய்த்துறை அலுவலர்கள் கையாண்ட சித்ரவதைகளை நியாயப்படுத்தின. இச்சட்டம் 1858ஆம் ஆண்டு பேரரசின் நேரடி ஆளுகைக் குள் இந்தியா கொண்டுவரப்பட்ட பின் ஒழிக்கப் பட்டது. இருப்பினும் நிலவரி கட்டத்தவறிய விவசாயிகளின் கால்நடைகள்,  வீட்டில் இருக்கும் தட்டு முட்டு சாமான்கள் ஆகியவற்றைப் பறி முதல் செய்யவும், நிலத்திலிருந்து அவர்களை வெளியேற்றவும் வருவாய்த்துறைக்கு முழு அதி காரம் வழங்கப்பட்டது. 1

அதிகாரிகளின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க விவசாயிகள் வட்டிக் கடைக்காரர்களிடமிருந்து அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாயினர். அரசு வழங்கிய கடன்  மூன்று சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே போதுமானதாயிருந்தது. மீதமுள்ள 97 சதவீதமானவர்கள் வட்டிக் கடைக்காரர்களையே நம்பி இருக்க வேண்டியிருந்தது. இந்த வட்டிக் கடைக்காரர்கள் வருடத்திற்கு 37.5 சதவீதம் முதல் 56.25 சதவீதம் வரை வட்டிவாங்கினர். 2

1853 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி 7 சதவீதமான விவசாயிகள் மட்டுமே வட்டிக் கடைக்காரர்களிடம் செல்லாமல் வரி செலுத்த முடிந்தது. மீதமுள்ளோரில் 49 சதவீதத்தினர் விளைந்த பயிர்களை அடமானம் வைத்தும், 34 சதவீதத்தினர் அறுவடை முடிவடைந்த உடனேயே பயிர்களை விற்றும் நிலவரி செலுத்தினர். 3

ஆங்கிலேயர் வருகைக்கு முன் வட்டிக்கடைக் காரர்கள் நஷ்ட பயத்துடன்தான் கடன் கொடுத்து வந்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் கடன் திரும்பாவிட்டால் கடன் கொடுத்தவர்கள் அடமானத்திலிருந்த சொத்தை அபகரித்துக் கொள்ளும்  உரிமையை சட்ட ரீதியாகப் பெற்றனர். இதனால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பலர் நிலத்தை இழந்து நிலமற்ற விவசாயத் தொழிலாளர் ஆயினர். மேலும் நிலம் வேளாண் வகுப்பைச் சாராதவர் கைக்கு பெரும் அளவில் மாற இது வழிவகுத்தது. 4

கந்து வட்டிக் கொடுமை பணக்கார விவசாயிகளைக் கூட விட்டுவைக்கவில்லை. பருத்தி சாகுபடிக்காகப் பெற்றிருந்த  கடனைத் திரும்பச் செலுத்த முடியாது தங்களது நிலத்தை இழக்கும் சூழலில் பம்பாய் மாகாணத்தில் புனே, அகமது நகர் மாவட்டத்தில் 1875 இல் வசதியான விவசாயிகள் வட்டிக் கடைக்காரர்களைத் தாக்கியபோது அது தக்காண கலவரத்திற்கு இட்டுச் சென்றது.

காலனி ஆதிக்கக் கோட்பாடு கச்சாப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவித்து சந்தை வேளாண்மையை வளர்த்தது. இதனால் விளைவிக்கும் பயிர்கள் நுகர்வதற்கு என்பதுபோய் விற்பனைக்கு என மாறியது. புதிய நிலவரிக் கொள்கையால் விவசாயிகள் செலுத்த வேண்டியிருந்த சுமைமிக்க நிலவரி அவர்களை பணப்பயிர்களைப் பயிரிடத் தூண்டின. பணப் பயிர்களான பருத்தி, நிலக்கடலை, கரும்பு, புகையிலை போன்றவை உணவு தானியங்களை விட அதிக வருவாயைத் தருவதாயிருந்தன.

ஐரோப்பிய வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வற்புறுத்துதலால் இந்தியக் கடலோர நகரங்கள் நீராவிக் கப்பல்கள் மூலம் இங்கிலாந்துடனும், உட்பகுதிகள் இருப்புப் பாதைகளின் மூலம் துறைமுகங்களோடும் இணைக்கப்பட்டிருந்ததால் இந்தியா உலகச் சந்தைக்கு தன் உற்பத்திப் பொருட்களை அனுப்ப முடிந்தது.

ஆனால் ஏற்றுமதிக்கான பணப் பயிர்களை விளைவிக்க நீர்ப்பாசன வசதி ஏதும் செய்து கொடுக்க காலனி அரசு முன்வரவில்லை. முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இந்தியா வந்து பதின்மூன்று ஆண்டுகள் சுற்றுப் பயணம் செய்த அரபு நாட்டு அறிஞர் அல்பர்னி கங்கை கண்ட சோழபுரம் ஏரியைப் பார்த்துவிட்டு இதுபோன்ற ஏரியை எம்மக்கள் நினைத்துப் பார்க்கவே முடியாது. பிறகு எப்படிக் கட்ட முடியும்! என அதிசயித்தார். இந்திய மன்னர்கள் அந்த அளவிற்கு நீர்ப்பாசனத்தின் முக்கியத் துவத்தை உணர்ந்து பல நீர்த் தேக்கங்களை கட்டி வைத்திருந்தனர். இருந்த நீர்த் தேக்கங்களைக் கூட பராமரிக்க எத்தகையதோர் ஏற்பாட்டையும் ஆங்கிலேயர் செய்யவில்லை.

1854 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் நிலவரி வசூலில் ஒரு சதவீதம் மட்டுமே நீர்ப்பாசனத்திற்கு செலவிடப்பட்டது. 5 காவிரி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா டெல்டா பகுதிகள் உருவாகக் காரணமாயிருந்த ஆர்தர்காட்டன் ரயில் போக்குவரத்தை விட நீர்ப்பாசனத்திற்கு முன்னுரிமை வழங்கக்கூறிய ஆலோசனையை காலனி அரசு நிராகரித்தது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ந்து நேர்ந்த கோரப் பஞ்சங்களினால்தான் சில அணைக்கட்டுகள் கட்டும் திட்டங்களை ஆங்கிலேயர் மேற்கொண்டனர். புதிய அணைக்கட்டு நீர்பாய்ந்த பகுதிகளில் அல்லது பழைய நீர்த் தேக்கங்கள் புனரமைக்கப்பட்ட இடங்களில் விவசாயம் செய்தவர்களிடமிருந்து கூடுதல் தீர்வையை அரசு வசூலிக்கத் தயங்கவில்லை. 6  இதனால் கிராமப்புறக்கடன் அதிகரித்தது. சென்னை மாகாணத்தில் 1895 ஆம் ஆண்டு கிராமப்புற கடன் 450 மில்லியன் ரூபாய் என பிரடரிக் நிக்கல்சன் மதிப்பிட்டார். 7

2. தலையிடாக் கொள்கையும் கோரப் பஞ்சங்களும்

ஆங்கிலேய ஆட்சி ஆரம்பமான ஆண்டாகிய 1765 லிருந்து 1900க்குள் இந்தியாவில் முப்பது பஞ்சங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றில் பதினெட்டு பிரிட்டிஷ் பேரரசின் கீழ் நாட்டு நிர்வாகம் கொண்டுவரப்பட்ட பிறகு (1858) நடந்தவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முப்பதாண்டுகளில் வெடித்த ஐந்து பெரும் பஞ்சங்களில் மூன்று  கொடியவை..

1876— 78 பஞ்சம் 36 மில்லியன் மக்கள் உயிரைக் குடித்தது.

1896– 97 பஞ்சத்தின்போது 96 மில்லியன் மக்கள் மாண்டனர்.

1899— 1900 பஞ்சம் 60 மில்லியன் உயிர்களை பறித்திருந்தது. 8

பதினேழாம் நூற்றாண்டில் குஜராத் மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் ஏற்பட்ட வறட்சி, அதனால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை, விவசாயிகளையும் கைவினைஞர்களையும் கிராமங்களை விட்டு வெளியேறச் செய்தபோது முகலாய ஆளுநர் எடுத்த நடவடிக்கை பற்றி அப்போதைய கிழக் கிந்தியக் கம்பெனி பிரதிநிதி பீட்டர் மன்டி பாராட்டி எழுதியுள்ளார். இலாப நோக்கில் விலையைக் கூட்டியவர்கள், கலப்படம் செய்தவர்கள் அப்போது கடுமையாகத் தண்டிக்கப்பட்டதாகவும், பேரரசர் ஷாஜகான் அரசு செலவில் இலவச உணவு அனைவர்க்கும் வழங்க ஏற்பாடு செய்ததாகவும் கூறுகிறார். 9

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரசின் தலையிடாக் கொள்கையே பஞ்சக் கோட்பாட்டையும் தீர்மானித்தது. மோசமான பருவமழை மற்றும் போர்களின் விளைவாக பற்றாக்குறை ஏற்படலாம். ஆனால் வேறு எந்தக் காரணத்தையும் விட பற்றாக்குறை ஏற்படுத்தும் பாதிப்பைத் தடுக்க அரசு நடத்தும் வன்முறை மூலமே பஞ்சம் ஏற்படுகிறது என்ற ஆடம் ஸ்மித்தின் கோட்பாட்டை காலனி அரசு தீவிரமாகப் பின்பற்றியது. 10

பற்றாக்குறை மற்றும் பஞ்ச காலங்களில் உணவு தானியங்கள் போதுமான அளவிற்கு இருந்தும் நிவாரண நடவடிக்கைகள் ஏதும் எடுக்காது தலையிடாக் கொள்கையை காலனி அரசு கடைப்பிடித்திருக்கிறது என்பதற்கு போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. 1873 ஆம் ஆண்டு வங்காளத்தில் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்ததைக் கேள்வியுற்ற வங்காள ஆளுநர் லெப்டினன்ட் ஜி. கேம்ப்பெல் இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதியாவதைத் தடுத்திடுமாறு வைசிராய் நார்த் புரூக்கிடம் வேண்டினார். ஏற்றுமதியைத் தடை செய்து வர்த்தகத்தை தடம் புரளச் செய்யக் கூடாது எனக்கூறி ஆளுநரின் கோரிக்கையை வைசிராய் நிராகரித்தார். தனது நிலைக்கான நியாயத்தை அவர் இவ்வாறு விளக்கினார். ஏற்றுமதியில் வங்காள அரிசி ஆறில் ஒரு பங்காகிய உயர்தர அரிசி சாதாரண மக்களின் நுகர்வுக்கானதல்ல… சாகுபடியாளர் குறைந்த விலையிலான உணவை வாங்குவதற்கு அவை உதவுகின்றன. மீதமுள்ளவை சாதாரண அரிசி. அவை இலங்கை, மொரீசியஸ், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற பேரரசின் காலனிகளில் வாழக்கூடிய வங்காளத் தொழிலாளர்கள் சாப்பிடுவதற்கு அனுப்பப்படுவதால் அதில் தலையிடக்கூடாது. 11

பஞ்சங்களின்போது சந்தையில் பொருட்கள் கிடைத்தபோதிலும் மக்களுக்கு வாங்கும் திறன் இல்லாததாலேயே அவர்கள் பட்டினியால் இறந்தனர் என ஐரோப்பிய பாதிரிகள் பலர் பதிவு செய்துள்ளனர்.

1876— 78 பஞ்சத்திற்குப்பின் 1881இல் விசாரணைக்காக அமைக்கப்பட்ட குழு, பஞ்சத்தின்போது 5.1 மில்லியன் டன் உணவு தானியங்கள் இருப்பில் இருந்ததாகத் தெரிவித்துள்ளது.

1898 ஆம் ஆண்டு பஞ்சத்தின்போது அமைக்கப்பட்ட விசாரணைக்குழு மற்றொரு உண்மையையும் வெளிக் கொணர்ந்தது. 12

இந்தியாவில் பற்றாக்குறையின்போதும் பஞ்சத்தின் போதும், உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்திற்கு ஏற்றாற்போல் விவசாயத் தொழிலாளர்கள் ஊதியம் உயர்வதில்லை; மாறாக விவசாயப் பணிக்கான ஆட்குறைப்பால் வழக்கமானதைவிட குறைந்த ஊதியத்திற்கு பணி செய்ய போட்டி ஏற்படுகிறது.

3. வருமானத்தை இழந்த நெசவாளர்கள்:

ஆசிய சமுதாயங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இந்தியா பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு தொழில் வளம் மிக்க நாடு. ஜவுளி மற்றும் உலோகப் பொருட்கள் உற்பத்தியில் அது முன்னணி வகித்தது. பருத்தி சாகுபடி நாட்டின் பெரும்பகுதிகளில் பரவலாக நடை பெற்று வந்தது. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன் இந்திய பருத்தித் துணிகள், குறிப்பாக கேலி கிளாத், டாக்கா மஸ்லின், காஷ்மீர் சால்வை போன்றவற்றிற்கு இங்கிலாந்தில் அதிகக் கிராக்கி இருந்தது. இங்கிலாந்தில் உற்பத்தியான பருத்தித் துணிகளோடு கேலி கிளாத் போட்டி போட்டதால் இந்தியாவிலிருந்து அத்துணியை இறக்குமதி செய்தவர் மற்றும் விற்பனைக்காக இருப்பு வைத்திருந்தோர் மீது 200 பவுண்டு வரை அபராதம் விதிக்கலாம் என ஆங்கிலேய பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டிருந்தது. 13

1813 ஆம் ஆண்டில் கூட இந்திய நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறி ஆடைகள் தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியானதாக ராய் சௌத்ரி குறிப்பிடுகிறார். அமியகுமார் பக்சி தான் ஆய்வு செய்த பீஹார் பகுதியில் (1809- 13) கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி 18 சதவீதத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதாகக் கூறுகிறார். 14

இங்கிலாந்தில் தொழிற்புரட்சிக்கு முன் இருந்த உட்கட்டுமானம் மற்றும் தொழில்நுட்பம் இந்தியாவிலும் இருந்தன. இந்தியாவில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தில் இருந்த தாமஸ் மன்றோ இங்கிலாந்தைப் போன்று இந்தியாவும் பண்டக சாலை வர்த்தகர்களின் தேசம் எனக்குறிப்பிட்டுள்ளார். எனவே கண்டுபிடித்திருந்த புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தி மற்றொரு தொழிற் புரட்சியை ஆங்கிலேயர் இந்தியாவில் நடத்திக் காட்டியிருக்கலாம். மாறாக இங்கிலாந்து ஆலைகளில் நெய்யப்பட்ட ஆடைகளைப் பெருமளவில் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய அனுமதித்ததன் மூலம் இந்திய நெசவுத் தொழிலை திட்டமிட்டு அவர்கள் அழித்தனர். மான்செஸ்டர், லங்காசயர் ஆலைகளில் தயாரிக்கப்பட்ட துணிகள் இந்திய கைத்தறித் துணிகளை விட அதிக நேர்த்தியானவையாகவும், நீடித்து உழைப்பவையாகவும், இருபது சதவீதம் விலை குறைவாகவும் இருந்தன. 15 எனவே இந்திய நெசவாளர் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை  இல்லாது போயிற்று. பொருளாதார ரீதியாக அதுவரை சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த கைவினைஞர்கள் குடும்ப வருமானத்தை இழந்ததால் பட்டினிச் சாவிலிருந்து தப்பிக்க, ஏற்கெனவே நிலங்களை இழந்து விவசாயத் தொழிலாளர் அந்தஸ்துக்குள்ளாகியிருந்தோர் அடியைப் பின்பற்றி நாட்டை விட்டு வெளியேறத் துணிந்தனர். 16

1815 ஆம் ஆண்டு சென்னை ஆளுநர் இலங்கை காப்பித் தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்களை அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை வேண்டிய போது, அந்த மாவட்டத்து மக்கள் மலிவான வாழ்க்கையிலான சொந்த மண்ணை விட்டு வெளியேற விருப்பமற்றவர்கள் எனவும், இலங்கை அரசு பிரத்தியேக ஊக்கத் திட்டங்களின் மூலமே அவர்களை தாய்நாட்டை விட்டு வெளியேறச் செய்ய முடியும் எனவும் கடிதம் எழுதினார். 17 ஆனால் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் காலனி அரசின் நிலவரிக் கொள்கையால் ஏற்பட்ட இரு பஞ்சங்கள் (1833 1843) மற்றும் அரசின் தலையிடாக் கொள்கை எத்தகைய ஊக்க நடவடிக்கையும் இல்லாமலேயே மக்களை வெளிநாடுகளுக்குக் குடியேறச் செய்தது.

1843 முதல் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் சென்னையிலிருந்து இலங்கைக்கு 14,46,407 நபர்கள் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்றிருந்தனர். 18

4. தோட்டத் தொழிலாளர், ஆதிவாசிகள் மற்றும் ஆலைத் தொழிலாளர் நிலை:

ஆங்கிலேயர் மலைச்சரிவில் காப்பி, தேயிலை, சணல் போன்றவற்றை சாகுபடி செய்யும் முறையை அறிமுகப்படுத்தினர். 1857 இல் சாகுபடி தொடங்கியிருந்தது. காப்பி பயிரிடுவதற்காக பல இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் காப்பி பயிரிடுவதற்காக 500 ஏக்கர் பரப்புள்ள அடர்ந்த காட்டை அழித்ததாகவும், ஆயினும் அங்கு காப்பி விளையவில்லை எனவும் ஹெச்.ஆர். பேட் (திருநெல்வேலி வரலாற்றுக் களஞ்சியத்தின் ஆசிரியர்) குறிப்பிடுகிறார். ஒரு வகை இலைநோய் தாக்கியதால் தென்  இந்தியாவில் காப்பி சாகுபடியைக் கைவிட நேர்ந்தது. ஆயினும் தேயிலை சாகுபடி செழிப்பாக நடந்தது. 1907க்குள் இந்தியாவில் 5,36,000 ஏக்கர் நிலம் தேயிலை சாகுபடிக்குள் கொண்டுவரப்பட்டது.

1858 இல் ஏற்றுமதியான தேயிலை, காப்பி, சணல் ஆகியவற்றின் மதிப்பு அரைமில்லியன் பவுண்டு ஆகும். 1907 இல் இது 32 மில்லியனாக உயர்ந்திருந்தது. 19

வங்காளத்தில் உருவாக்கப்பட்ட ஜமீன்களிலிருந்து பழங்குடியினர் வெளியேற்றப்பட்டிருந்ததால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருந்த `கோல்கள் 1831லும், `சந்தாலியர்கள் 1855லும் பெருங்கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சிகள் அரசின் இரும்புக்கரங்களால் ஒடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் காடுகள் சிலவற்றை தங்கள் ஏகாதிபத்திய நலனுக்காக பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து 1865 ஆம் ஆண்டைய வனப்பாதுகாப்புச் சட்டத்தை ஆங்கிலேயர் அமல்படுத்தி நிலைமையை மேலும் மோசமாக்கினர். பூர்வீகமாக அக்காடுகளில் வாழ்ந்து வந்திருந்த ஆதிவாசிகள் தொடர்ந்து கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாகக் கூறி அரசு 1878 இல் குற்றப் பரம்பரைச் சட்டம் நிறைவேற்றி அவர்களை காவல்துறை நிர்ணயித்த கிராமங்களில் முடக்க முனைந்தது. இதற்கு எதிராக பில்  முண்டா போன்ற ஆதிவாசி (1899)  இனத் தவர்கள் தொடர்ந்து காலனி அரசுக்கு எதிராகப் போரிட்டனர். 20

பருத்தி, சணல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டதால் இந்தியாவில் ஜவுளி மற்றும் சணல் ஆலைகள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டன. மும்பையில் முதல் பஞ்சாலை 1854 ஆம் ஆண்டு இந்தியர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது. லங்காசயர், மான்செஸ்டர் நகரங்கள் வசதி படைத்தவர்க்கான மெல்லிய ரகங்களை உற்பத்தி செய்தபோது இந்திய நூற்பாலைகள் சாமானிய ருக்கான முரட்டு ரகத்தில் கவனம் செலுத்தியதால் முரண்பாடு ஏதும் ஏற்படவில்லை. அகமதாபாத்தில் நூற்பாலைகள் அனைத்தும் 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் இந்தியர்களால் நடத்தப்பட்டன.

முதல் சணல் ஆலை கல்கத்தாவில் 1855 இல் தோன்றியது வட்டிக் கடையில் சம்பாதித்த பணத்தை மார்வாரிகளில் சிலர் சணல் ஆலை களில் முதலீடு செய்திருந்தனர். 21

அதிகரித்துவந்த ஆலைகளால் ஆலைத் தொழிலாளர் எண் ணிக்கை பெருகியது. 1881, 1891 மற்றும் 1901 ஆகிய ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைச் சட்டங்கள் தொழிலாளர் பணி மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்திட உதவவில்லை. மாறாக அச்சட்டங்களில் இருந்த பாதுகாப்பு சரத்துக்கள் ஆலை அதிபர்களை தொழிற்சாலை வளாகத்தில் அதிக முதலீடு செய்ய கட்டாயப்படுத்தின. மேலும் அவை மலிவான உழைப்பின் மூலம் பெற்ற ஆதாயம் இங்கிலாந்திலிருந்து இறக்குமதியான ஜவுளிகளுக்கு இந்திய பருத்தி நூல் ஆடைகள் சவாலாக இல்லாமல் ஆக்குவதற்கும் உதவின. எனவே புறக்கணிக்கப்பட்ட ஆலைத் தொழிலாளர் நலனில் ஜி.சுப்ரமணி ஐயர் போன்ற தேசியவாதிகளும், அவர் போன்ற தேசியவாதிகள் நடத்திய நாளி தழ்களுமே அக்கறை செலுத்தின.

5. காலனி அரசின் வரிவிதித்தல் மற்றும் நிதிக்கொள்கை:

காலனி அரசுக்கு வேண்டிய நிதியில் பாதி நிலவரி மூலம் கிடைத்தது. மீதமுள்ள பாதி அபின், உப்பு மீதான வரி,  வருமானவரி மற்றும் முத்திரைவரி போன்றவற்றிலிருந்து வந்தன. கிடைத்த வருமானத்தில் 33 சதவீதம் இராணுவத்திற்கும் (பின்னர் காவல்துறைக்கும் சேர்த்து), 22 சதவீதம் சிவில் நிர்வாகத்திற்கும் செலவழிந்தன. எஞ்சியிருந்ததில்தான் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் போன்ற பொதுப்பணிகளுக்கு செலவிடப்பட்டது. 22

கட்டுப்பாடற்ற வாணிபக் கொள்கையை 1833 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றியதால் ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள் மீது அதிக வரி விதிக்க முடியவில்லை.

1865 ஆம் ஆண்டு வரவு  செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டபோது சார்லஸ் டிராவல்யன் (கல்கத்தா அரசுப் பணியில் இருந்த உயர் அதிகாரி), தேயிலை, காப்பி, சணல், தோல் மற்றும் கம்பளி மீது ஏற்றுமதி வரி போட முயன்ற செயல் ஐரோப்பிய வர்த்தகர்களிடையே ஆத்திரத்தை மூட்டியது. இலண்டனில் இருந்த  பேரரசின் அரசுச் செயலர் இவ்வரிக்கு ஒப்புதல் தர மறுத் தது மட்டுமின்றி அந்த ஆண்டு முடிவதற்குள் டிராவல்யனை இங்கிலாந்திற்கு திரும்ப அழைத் துக் கொண்டார். 23

1875 ஆம் ஆண்டு மான்செஸ்டர் வர்த்தக சபை இந்தியாவில் இறக்குமதியான பருத்தி ஆடைகளின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரியது. ஐரோப்பிய  வர்த்தகர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சென்னை வர்த்தக சபை அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பேரரசின் இந்திய அரசுச் செயலர் இறக்குமதி வரி தொடர்ந்தால் கன்சர்வேடிவ் கட்சியினர் லங்காஷயரில் பதினான்கு பாராளுமன்ற இடங்களை இழப்பர் என வைசிராய் லிட்டனுக்கு எழுதினார். எனவே அரசு அதிகாரிகளின் எதிர்ப்பார்ப்பையும் மீறி, கட்டுப்பாடற்ற வர்த்தக கோட்பாட்டின் அடிப்படையில் பருத்தி நூல் ஆடைகளின் மீதான இறக்குமதி வரியை லிட்டன் ரத்து செய்தார். 24

இங்கிலாந்திலிருந்து இந்தியாவில் இறக்கு மதியான பொருட்கள் மீது மூன்று சதவீத வரி விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் ஆங்கிலேயர் ஜெர்மனியில் இறக்குமதி செய்த பொருட்களுக்கு இருபத்தைந்து சதவீதமும், அமெரிக்காவில் இறக்குமதியானதற்கு ஏழுபத்து மூன்று சதவீத மும் சுங்கவரி செலுத்த வேண்டியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 25

திட்டமிடுதலில் ஏற்றுமதி இறக்குமதி சமநிலைக் கோட்பாட்டை எப்போதும் பின்பற்றியதாக காலனி ஆட்சியாளர்கள் அறிவித்த போதிலும், தாய்நாட்டுக் கட்டணம் என்ற பெயரில் கீழ்க்கண்ட வகையறாக்கள் இங்கிலாந்திற்கு வடிகாலாகின. 26

கம்பெனி பங்குதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இலாபம். சேமிப்பு மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளது சம்பளம், ஐரோப்பிய வர்த்தகர், தோட்ட உரிமையாளர்கள் அனுப்பி வைத்த தொகை. பிரிட்டிஷ் இந்தியாவில் சிவில், இராணுவப் பதவிகளில் பணியாற்றியோர் ஓய்வு ஊதியம். இலண்டனில் இந்திய அரசுச் செயலர் சம்பளம், அலுவலகச் செலவு மற்றும் அங்கு பணியாற்றிய ஊழியர்க்கான  சம்பளம் மற்றும் ஓய்வூதியம். போர்கள் மற்றும் இரயில் போக்குவரத்து போன்றவற்றிற்கு வாங்கியிருந்த கடன், அதன் மீதான வட்டி. பண்டக சாலைப் பொருட் கள்,  இராணுவத் தளவாடங்கள் மற்றும் இருப்புப் பாதைக்கான உபகரணங்கள் வாங்கியதில் ஆன செலவு.

1837 இல் 130 மில்லியன் பவுண்டுகளாக இருந்த இந்தியாவின் கடன் 1900 இல் 220 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்ததாகவும் இதில் 18 சதவீதமான கடன் போர்களுக்காக (ஆப்கானிஸ்தான் மற்றும் பர்மா மீது ஆங்கிலேயர் தொடுத்தது) பெற்ற கடன் என்று ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. 27 1908 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்தக்கடன் 246,034,071 பவுண்டு எனவும் இதில் இரயில் போக்குவரத்திற்காக வாங்கியது 177 1/2 மில்லியன் பவுண்டு எனவும் அரசு அறிக்கை ஒன்று கூறியது. 28

இங்கிலாந்தில் தேக்க நிலையிலிருந்த மூலதனத்திற்கு ஒரு வடிகால் கொடுப்பதற்காக இந்தியாவில் இரயில் போக்குவரத்திற்கான மூலதனம் அங்கிருந்த தனியார் முதலாளிகளிடமிருந்து பெறப்பட்டது. அவ்வாறு செய்திருந்த முதலீட்டிற்கு ஐந்து சதவீத வட்டியை ஸ்டெர்லிங்கில் (பிரிட்டிஷ் நாணயத்தில்) கொடுக்க உத்திரவாதம் செய்யப்பட்டிருந்தது. இதனால் நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டம் 250 மில்லியன் பவுண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 29

இங்கிலாந்தின் இராணுவ எண்ணிக்கையை விட இந்தியாவின் இராணுவ எண்ணிக்கை 1885 இல் இரு மடங்காக இருந்தது. இந்திய இராணுவத்திற்கான செலவு காலனி அரசாட்சியின்போது ஆண்டொண்டிற்கு 20 மில்லியன் பவுண்டு ஆனது. 30 காலனி அரசாட்சியின் நிதிக் கொள்கை பரிமாற்றச் சமநிலையை பாதித்தது. இந்தியா தாய்நாட்டுக் கட்டணம் கட்ட வேண்டியிருந்ததால் வர்த்தக பரிமாற்றச் சமநிலையைக் காக்க நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பைவிட அதிகமாக இருக்க வேண்டும். ஓர் ஆய்வின்படி இந்தியாவில் ஏற்றுமதியின் மதிப்பு இறக்குமதி மதிப்பைவிட 50 முதல் 60 கோடி ரூபாய் அதிகம் இருக்க வேண்டும் என  கண்டறியப்பட்டுள்ளது. 31

எனவே இந்தியா ஏற்றுமதியான பருத்தி, சணல், தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் போக தாய்நாட்டுக் கட்டணத்தை செலுத்த பல நேரங்களில் விலைமதிப்பில்லா தங்கத்தையே இங்கிலாந்திற்கு அனுப்பியது. பொருளாதார ஸ்திரத்திற்கு உத்தரவாதமான தங்கம் நாட்டை விட்டு வெளியேறியதால் இந்தியா ஓட்டாண்டியானதாக தேசியவாதிகள் கருதினர். 32

மேலும் எப்போதெல்லாம் இங்கிலாந்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் இந்திய ரூபாயை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றதன் மூலம் காலங்காலமாக இந்தியக் குடும்பங்கள் வைத்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி சாமான்களை சந்தைக்கு விற்பனைக்கு வர காலனி அரசு நிர்பந்தித்தது. இறக்குமதியை ஊக்குவிக்க இந்திய ரூபாயின் மதிப்பை செயற்கையாக உயர்த்தியும் தன் கைவண்ணத்தைக் காட்டியது. 33

6. நெளரோஜியும் அவரது வடிகால் கோட்பாடும்:

தீவிரவாதிகளாகக் கருதப்பட்டவர்கள் மட்டுமே தேசியவாதிகள், நாட்டின் அமைதி, சட்டம், ஒழுங்கு, நீதி ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சியின் பிராப்தம் என பிதற்றுபவர்கள் ஆங்கிலேயர் விசுவாசிகள்; ஆங்கிலேயருக்குச் சமமாக நிர்வாகத்தில் பங்கு பெறவும், சட்ட மன்றத்திற்குள் நுழைந்து காலனி ஆதிக்கக் கொள் கையின் எதிர்மறை விளைவுகளை சுட்டிக்காட்ட விழைந்தவர்கள் மிதவாதிகள் என பொதுவாழ்விற்கு வந்திருந்த உயர்தர மற்றும் நடுத்தர வகுப்பினரை மூன்று வகையாகப் பிரிக்கிறார் அரவிந்தர். (34)

ஆங்கிலேயர் ஆட்சியில் அதிகரித்து வந்த ஏழ்மையை இத்தேசம் முதலில் உணர்வது அவசியம்; அப்போதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என ஓங்கி குரல் கொடுத்தவரும், அந்நியர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதே இந்திய அரசியலின் தலையாயக் கோட்பாடாக இருக்க வேண்டும் என்பதை அறிவித்தவருமான தாதாபாய் நெளரோஜி மிதவாதியாக இருக்க முடியாது (35)  என்கிறார் அதே அரவிந்தர்.

ஏழை மக்களின் துயரங்கள் பற்றி மனசாட்சி கொண்ட ஆங்கிலேய சிவில், இராணுவ அதிகாரிகள் விட்டுச் சென்ற குறிப்புகள், ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதியவற்றைத் தொகுத்து 1901 ஆம் ஆண்டு இந்தியாவில் ஏழ்மையும் பிரிட்டானியர் தன்மை அற்ற ஆட்சியும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. 36 நெளரோஜி வங்காளம் மற்றும் பீஹார் மாகாணங்களின் நிலை குறித்த 1806 -1814 ஆண்டுகளுக்கான புள்ளி விவரங்கள் அடங்கிய இந்தியா இல்ல. ஆவணங்களை ஆராய்ந்ததக்காண ஆணையர்களில் ஒருவரான மான்ட்கோமரி மார்ட்டின் கிழக்கு இந்தியா பத்திரிகையில் எழுதியதை ஆரம்பகால ஆங்கிலேயரது சுரண்டலை விளக்க மேற்கோள் காட்டுகிறார்.

நூதனமாக பளிச்சென்று தெரிந்த இரு விவசாயங்களை இங்கு குறிப்பிடுவதைத் தவிர்க்க முடியாது. ஒன்று ஆய்வுக்குட்படுத்திய பிரதேசங்களின் செல்வ வளம்; இரண்டாவது அங்கு வசிக்கும் மக்களின் ஏழ்மை, முப்பது ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மூன்று மில்லியன் பவுண்டு பன்னிரெண்டு சதவீத வட்டி விகிதத்தில் 723,900,000 பவுண்டு ஆகும். ஓர் தொழிலாளியின் ஊதியம் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பென்ஸ் என இருந்தபோது, இத்தகைய செல்வ அபகரிப்பு கடுமையான விளைவை இந்தியாவில் ஏற்படுத் தும். 37

1840 இல் குஜராத்திற்கு பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதியாக திரும்பியிருந்த கிபர்ன் பருத்தி வேளாண்மை பற்றிய விசாரணைக்காக அமைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து நாட்டு மக்கள் அவைக்குழுவிடம் விவரித்தவற்றை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் ஏற்பட்ட சீரழிவை விளக்க நெளரோஜி எடுத்துரைக்கிறார். 38

இந்தியர்களிடையே பணம் படைத்த வர்க்கத்தினரை அதிகமாகக் காண முடியவில்லை. நாட்டை நாம் முதலில் கைப்பற்றியபோது நிலப்பிரபுத்துவ வகுப்பைச் சார்ந்தவர்கள் பகட்டான வண்டிகள், குதிரைகள், சேவகர்களுடன் அழகான ஆடம்பர ஆடைகளில் காணப்பட்டனர். ஆனால் தற்பொழுது அவை ஏதும் காணப்படவில்லை. தாங்கள் ஒரு காலத்தில் பணம் வைத்திருந்ததாகவும், தற்பொழுது அனைத்தையும் இழந்து நிர்க்கதியாய் நிற்பதாகவும் புகார் செய்கின்றனர்.

1851 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த பிரசுரம் ஒன்றில் விவரிக்கப்பட்டிருந்த குஜராத்தின் அழிவு பற்றிய தகவலை ஆதாரமாகக் கொண்டு கம்பெனி  நிர்வாகப் பணியில் இருந்த ராபர்ட் நைட் என்பவர் பதிவு செய்திருந்ததையும் நெளரோஜி குறிப்பிடுகிறார்.

நாங்கள் 1807 இல் குஜராத்திற்கு வந்தபோது வசதியாயிருந்த பல குடும்பங்கள் இன்று மேலாடை கூட இல்லாமல் உள்ளனர். பணமாக நாம் தாலுக்தாரர்களிடமிருந்து கோருவது, முன்னர் அவர்கள் செலுத்திய தொகையைவிட, எத்தகைய பிரதி பலனும் இல்லாது, மூன்று மடங்கு அதிகம் இருந்தது. அழிவைத் தரும் அதிக வட்டிக்கு வாங்கும் கடன் அவர்களது நிலத்தையும் கிராமங்களையும் எடுத்துக் கொள்ளும் உரிமையை கடன் கொடுத்தவர்கள் கோரமுடிந்ததால் அவர்கள் மேலும் மேலும் மீளமுடியாத அளவிற்கு கடனில் மூழ்குகின்றனர். 39

காலனி ஆட்சியாளர்கள் உருவாக்கியிருந்த நிர்வாக அமைப்பை கவனமாக ஆராய்ந்த நெளரோஜி அதிகச் சம்பளம் பெற்ற ஐரோப் பியர்களுக்குப் பதிலாக இந்தியர்களை அப்பதவிகளில் அமர்த்தியிருந்தால், நிர்வாகச் செலவில் நான்கில் ஒரு பங்கைக் குறைத்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். இராணுவம், காவல்துறை மற்றும் கடனுக்கு செலுத்திய வட்டி என்ற முறையில் அரசு செலவழித்ததை வளர்ச்சிக்குப் பயன்படாத தேவையற்றவை எனக் கருதினார். இரயில்வே, பொதுப் பணித்துறை மற்றும் தந்தி ஆகியவற்றின் மீதான உட்கட்டுமான செலவினங்களைக்கூட பேரரசைப் பாதுகாப்பதற்கான யுத்தியாகவே கருதினார். 40

ஒரு சிறைக் கைதிக்கு செலவழிக்கப்படும் தொகையின் அடிப்படையில் ஓர் மனிதன் உயிர் வாழத்தேவை என்னென்ன என்பதைக் கணக்கிட்ட நெளரோஜி, ஓர் குற்றவாளி பெறுகின்ற உணவு, உடை வாங்க தேவையானவற்றிற்குக்கூட நல்ல பருவமழை பெய்த காலத்தில் கிடைத்த விளைச்சல் போதுமானதாக இருக்காது. அப்படி இருக்க, சமயச் சடங்குகளுக்கும், சந்தோச, துக்க காரியங்களுக்கான செலவுகளுக்கும், பருவமழை பொய்த்த காலத்திற்கான தேவைக்கும் ஓர் விவசாயி என்ன செய்ய முடியும்? என வினவினார். 41

ஆங்கிலேயர் ஆட்சி ஏழ்மைக்கு அல்ல வளர்ச்சிக்கு வழிவகுத்தது என அரசின்  தனிநபர் வரு மானப் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, வாதிடும் சில அறிவு ஜீவிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய ஒரு விவரத்தையும் தாதாபாய் நெளரோஜி ஒருங்கிணைந்த மாகாணத்தின் அரசு அதிகாரி ஏ.எல். ஹல்சி கருத்தின் மூலம் அன்றே தெரிவித்திருக்கிறார்.

பார்த்திராத யாரும் நம்ப முடியாத அளவிற்கு இந்த மாவட்டத்தின் சாகுபடியாளர்களின் ஏழ்மை இருந்தது. இது மிகைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படலாம். இதற்கு ஆதாரமாக புள்ளி விவரங்களைத் தர முடியாது. ஆயினும் இது தான் நான் நேரில் கண்டு அறிந்தது. 42

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பொருளாதாரத்தின் தன்மை, இந்திய மக்களிடம் காணப்பட்ட ஏழ்மை பற்றி விளக்குவதற்கு நெளரோஜியின் வடிகால் கோட்பாடு பெரிதும் உதவியது. எதையும் கைமாறாகப் பெறாமல் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு செல்வம் சென்றிட காலனிய கட்டமைப்பு உதவிற்று என்பதை அவரது வடிகால் கோட்பாடு விளக்கிற்று. கடந்த ஆண்டுகளில் கொண்டு செல்லப்பட்ட மாபெரும் செல்வம் இந்தியாவிலும் இந்தியர்களின் சட்டைப் பைகளிலும்  இருந்திருக்குமானால், எத்தகையதோர் பலனை இந்தியா அடைந்திருக்கக்கூடும் என்பதை உணர்வதன் மூலம் தான் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பை அறிய முடியும் என்றார்.

நெளரோஜியைத் தொடர்ந்து செல்வ வடிகால் கோட்பாட்டை பொதுத் தளத்தில் வலியுறுத்தி வந்த ஆர்.சி. தத் (முன்னாள் ஐ.சி.எஸ். அதிகாரி) கணிப்பின் படி விக்டோரியா மகாராணியார் கடைசி பத்து ஆண்டு ஆட்சிகாலத்தின்போது (1891 –1901) 647 மில்லியன் பவுண்டாக இருந்த மொத்தவரு வாயில் 159 மில்லியன் பவுண்டு இங்கிலாந்திற்கு வடிகாலானது. இது மொத்த வருமானத்தில் 1/4 பங்கு. 43   இந்த செல்வ இழப்பை ஒரு நேரத்தில் அடித்துச் செல்லப்பட்ட கொள்ளைக்கு சமமாகக் கருத முடியாது.

அதைவிட மோசமானது. 11 ஆம் நூற்றாண்டின் ஆப்கானிய மன்னன் கஜினி முகமதுவின் கொள்ளையும் கூட 18 ஆவது படை யெடுப்போடு நின்றது. ஆனால் ஆங்கிலேயரது காலனிய செல்வ அதிகரிப்பிற்கு முடிவே இல்லாததுபோல் தோன்றுகிறது என வருந்தினார் நெளரோஜி. 44

இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் எழுச்சியும், வளர்ச்சியும், பிபன் சந்திராபேராசிரியர் பிபன் சந்திரா தனது முனைவர் பட்டத்திற்காக தில்லி பல்கலைக் கழகத்திற்கு 1963 இல் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை, இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கை, 1880– 1905, மக்கள் வெளியீட்டகத்தால் 1966 இல் இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் எழுச்சியும், வளர்ச்சியும் என்ற நூலாக வெளியிடப்பட்டது. அதன் பிறகு பல்வேறு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட மறுபதிப்பு செய்யப்பட்ட இந்நூல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கான பொருளாதார அடித்தளம் மற்றும் சுதந்திர தேசப் பொருளாதாரத்திற்கான தேசியவாதிகளின் மாற்றுத் திட்டத்தின் தோற்றம் பற்றியதோர் புரிதலுக்கான முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது.

தெரிந்தெடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் (1880 – 1905) பிபன் தன் ஆய்வு மூலம் வெளிக் கொணர்ந்த விசயங்கள் மூன்று. ஒன்று, வணிகம், தொழில், நிதித்துறை ஆகியவற்றின் மூலம் நடை பெற்ற மூவகைப் பொருளாதாரச் சுரண்டல்களை தேசியவாதிகள் கண்டறிந்து இந்தியப் பொருளாதாரம் ஆங்கிலேயர் பொருளாதார நலனுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதாலேயே ஏகாதிபத்திய ஆட்சி தொடர்கிறது என்பதைப் புரிந்தனர்.

இரண்டு, கச்சாப் பொருட்கள் உற்பத்தி செய்யவும், ஆங்கிலேயரின் உற்பத்தி பொருட்களை விற்கவும் இந்தியாவை சந்தையாக மாற்றிடும் காலனி பொருளாதார அம்சங்களை வளர்த்திடும் அந்நிய ஆட்சியாளர்களின் எண்ணங்களையும், நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்த்தனர். மூன்று, அவ்வாறு எதிர்க்குரல் கொடுத்தபோது முன்வைத்த அனைத்து தேசியவாதிகளின் கோரிக்கைகளும் ஓர் சுதந்திர இந்தியாவில் தீர்மானிக்கப்படும் தேசிய பொருளாதாரக் கொள்கைக்கான விருப்பம் வேர் விடுவதற்கு உதவின.

இந்நூல் இந்திய தேசிய இயக்கத்தின் முன்னோடிகளான தாதாபாய் நெளரோஜி, கோகலே, திலகர், ஜி. சுப்ரமணிய ஐயர் போன்றோரின் அரசியல் நேர்மை, அறிவுத் திறமை மற்றும் இந்து, சுதேசமித்திரன், அம்ரித் பசார் பத்ரிகா, பெங்காலி, இந்து பேட்ரியாட் போன்ற பத்திரிகைகளின் தேசபக்தியையும் அறிய பெரிதும் உதவுகிறது.

இந்நூலை தமிழ் வாசகர்களுக்கும், இளம் ஆய்வாளர்களுக்கும் கிடைத்திட பாரதி புத்தகாலயம் எடுத்திட்ட முயற்சி பாராட்டுதற்குரியது. பிபன் சந்திரா ஆய்வைத் தொடங்கிய ஆண்டிற்கு (1880) முன்னால் நடந்த நிகழ்வுகளை வாசகர்கள் புரிதலுக்காக சுருக்கமாக எழுதித் தருமாறு பணித்த பாரதி புத்தகாலய நிர்வாகி நண்பர் நாகராஜனுக்கு எனது நன்றி.

துணை நூற்பட்டியல்

  1. Daniel Thorner and Alice  Thorner, Land and Labour in India (Bombay Asia Publishing House 1962), p. 54.
  2. K.A. Manikumar, A Colonial Economy in the Great Depression: Madras, 1929-37 (Chennai: Orient Longman, 2003), p. 44.
  3. A. Sarada Raju, Economic Condition in the Madras Presidency, 1800-1850 (Madras: University of Madras,1941), p. 51.
  4. K.A. Manikumar, “Economic Drain and British Colonialism’’, Historiographer (Nagercoil, 1995), p. 210.
  5. Neil Charlesworth, British Rule and the Indian Economy, 1850-1914(London: Macmillan, 1982), p. 59.
  6. Manikumar, A Colonial Economy in the Great Depression, p. 48.
  7. மேலது, பப. 44-45.
  8. Burton Stein, A History of India (New Delhi: Oxford University, 1998), p. 262.
  9. Burton Stein, A History of India, p. 260.
  10. Elizabeth Manak, ‘‘Formulation of Agricultural Policy in Imperial India, 1872-1929”: A Case Study in the Madras Presidency  (Hawai: University of Hawai 1979), p.19.
  11. Sunanda Sen, Colonies and the Empire (Calcutta: Orient Longman, 1992), p.172.
  12. மேலது., பப. 173-_74.
  13. Manikumar, “Economic Drain and British Colonialism,” pp. 2-10.
  14. Charlesworth, British Rule and Indian Economy, pp. 33-35.
  15. Manikumar, ‘‘Economic Drain and British Colonialism,” pp. 2-10.
  16. Dharma Kumar, Land and Caste in South India (New Delhi: Manohar, 1992), p. 28.
  17. மேலது., ப. 129.
  18. Buchannan, The Development of Capitalistic Enterprise in India (London:Frank Cass 1966), pp. 66-67.
  19. Refer Ranajit Guha’s, Peasant Insurgency in Colonial India & Ramachandra Guha’s, A Fissured Land.
  20. D.H. Buchannan, Development of Capitalistic Enterprise in India, p.465
  21. Burton Stein, History of India, p. 257.
  22. Sabyasachi Battacharya, Financial Foundation of the British Raj (Simla: Indian Institution of Advance Study, 1971), pp. XXXXIII-IX.
  23. R. Tirumalai, The Voice of an Enterprise (Madras: Macmillan, 1986), p. 70.
  24. மேலது.
  25. விரிவான விளக்கத்திற்கு‍ மணிக்குமாரின் 1930களில் தமிழகம் புத்தகத்தை படிக்கவும் (அலைகள் பதிப்பகம், 2006)
  26. Neil Charlesworth, British Rule and Indian Economy, p. 53.
  27. Memorandum on Some of the Results of Indian Administration During Past Fifty Years of British Rule in India (Calcutta: Government Printing Press, 1911), pp. 45-46.
  28. Buchannan, Development of Capitalistic Enterprise in India, p. 184.
  29. E.A. Horne, The Political System of British India with special reference to the Recent Constitutional Changes (Oxford: Clarendon Press, 1922), p. 34
  30. Manikumar, “Economic Drain and British Colonialism,” pp. 2-10.
  31. Manikumar, A Colonial Economy in the Great Depression, pp. 128-129.
  32. For further details read G. Balachandran’s John Bullion’s Empire: Britain’s Gold Problem and India Between the Wars (London:Curzon), 1996.
  33. Buchannan, Development of Capitalistic Enterprise in India, pp. 150-200.
  34. Sri Aurobindo, On Nationalism: Selected Writings and Speeches (Pondicherry, 1996), pp. 101-102.
  35. மேலது.
  36. அதே ஆண்டில் இந்திய பஞ்சநிவாரண நிதிச் செயலராய் இருந்த வில்லியம் டிக்பி செல்வம் கொழிக்கும் பிரிட்டிஷ் இந்தியா என்று‍ கிண்டலான தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.
  37. Naoroji, Poverty and Un-British Rule in India (Delhi: Government of India, 1962),
  38. மேலது., ப. 42.
  39. மேலது, பப. 42-43.
  40. S. Ambirajan, “Naoroji in the History of Economic Thought”, Research in the History of Economic Thought and Methodology, Vol.16, 1998,  p. 167.
  41. மேலது., ப. 159.
  42. Naorojini, Poverty and Un-British Rule in India, p. 44.
  43. Charlesworth, British Rule and Indian Economy, p. 53.
  44. S. Ambirajan, ‘‘Naoroji in the History of Economic Thought”, p. 166.

குடியரசின் மாண்புகளைப் பாதுகாப்போம்! மக்கள் நலன்களை முன்னேற்றுவோம்!

பிரகாஷ் காரத்

தமிழில். சி.சுப்பாராவ்

1950ல் குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது சுதந்திர இந்தியாவின் முக்கியமான சாதனையாகும், ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன், அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை தனது குடிமக்களுக்கு ஜாதி, மத, இன, பால் பேதமின்றி சம உரிமை அளிக்கும் ஜனநாயகக் குடியரசாக அறிவித்தது. இப்போது நினைத்துப் பார்த்தால், வயது வந்தோருக்கான வாக்குரிமையுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயக முறையை உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் மிகப் பெரிய சாதனைதான் என்று தெரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் சொல் அமைப்பிலும், செயல்படும் முறைகளிலும், பல தடைகளும் எல்லைகளும் கொண்டதாக  இருந்தாலும் கூட, சாமானியனும் அரசியலில் ஈடுபட அது வழி வகுத்தது. பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய இந்திய அரசுச்சட்டம் 1935 ன் படி, வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், நியமன உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப் பட்ட அரசியலமைப்புச் சட்டமானது, 1947ல் அதிகாரத்திற்கு வந்த ஆளும் வர்க்கத்தின் முத்திரையைப் பெற்றதில் வியப்பில்லை. எனினும், தேச விடுதலைப் போராட்டத்தின் போது மக்களிடையே இருந்த எதிர்பார்ப்புகளையும் அது முன்னெடுத்துச் சென்றது.

இவற்றில் சில வழிகாட்டும் கொள்கைகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகள் மக்களின் சில குடி உரிமைகளைப் பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளன. அதே நேரத்தில், வழிகாட்டும் கொள்கைகளை நீதிபூர்வமாக நடைமுறைப்படுத்தும் கட்டாயமில்லை. நடைமுறையில் பல அடிப்படை உரிமைகள் மீறப்படுவதும், அவை அணுக முடியாத உயரத்தில் இருப்பதும் மக்களின் வாழ்பனுபவமாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததன் முக்கியக் காரணம் இந்திய அரசின்  அடிப்படைத் தன்மையில் – அதன் நிலப்பிரபுத்துவ, பூர்ஷ்வாத் தன்மையில் உள்ளது. அரசியல் ஜனநாயகம் ஒரு புறமாகவும், செல்வக்குவிப்பும், பொருளாதார ஆதாரங்கள் குவிப்பும் மறுபுறமாகவும் முரண்பட்ட நிலையை உருவாக்குகின்றன.

பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் தான் ஒரு கட்டமைப்பைத் தந்துள்ளது. இந்த முறையை ஏற்றுக் கொண்டுள்ள பல முன்னாள் – காலனி நாடுகளைக் காட்டிலும், இங்கு அது உயர்வாக இயங்குகிறது. ராணுவம், அதிகார வர்க்கம் ஆகியவற்றை அரசியல் கட்டுப்பாட்டில் வைக்கவும், ஓரளவு சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றை இது அளித்துள்ளது.

இந்தியா போன்ற ஒரு வளர்ந்து வரும் முதலாளித்துவ நாட்டில் ஜனநாயக முறை பெற்று இருக்கும் அடிப்படை குறுகியதாக இருந்தாலும், அதற்கும் தடைகள் இருந்தாலும் அவைகளை மீறி, பாரளுமன்ற ஜனநாயகம் தன் ஜீவனை, உயிர்ப்பை பல அண்டுகளாகக் காப்பாற்றி வருவது பாராட்டுக்குரியது. சுதந்திரத்திலிருந்து இன்று வரை ஜனநாயகத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளனவே தவிர குறையவில்லை. அனைத்து மட்டத் தேர்தல்களிலும், சாதாரண மக்கள் உற்சாகத்தோடு பங்கேற்கிறார்கள். கிராமப்புற ஏழைகளும், ஒடுக்கப்பட்டோரும் தேர்தல்களை, சந்தேகக் கண்ணோடு பார்ப்பதில்லை. மாறாக, பல இடங்களில், கிராமப்புறங்களில், வன்முறை மூலம், நிலப்பிரபு / ஆதிக்க ஜாதியினர் ஏழைகளை, தலித்துகளை வாக்களிக்க விடாமல் தடுப்பதைப் பார்க்கிறோம். உட்கட்சி ஜனநாயகத்தைத் தம் கட்சிக்குள் கொண்டு வருவதில் பல கட்சிகள் தோல்வியடைந்தாலும், அது ஒட்டு மொத்தமாக கட்சி அரசியல் முறையின் சிதைவில் முடியவில்லை. கட்சி அரசியல் முறையின் உயிரோட்டத்திற்குச் சாட்சியாக, அரசியல் கட்சிகள் பல்கிப் பெருகி வருகின்றன. நாட்டின் அரசியலை இருகட்சி முறைக்கு மாற்ற நினைத்தவர்களின் ஆசையில் மண் விழுந்தது.

பல குறைபாடுகளும், எல்லைகளும் இருந்தாலும், குடியரசு அரசியலமைப்பு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஒரு அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது. ஜனநாயகத்தில் வெகுஜனப் பங்கேற்பை ஏற்படுத்தி, அரசியல் சட்டப் பூர்வ மதிப்பை அளித்துள்ளது. இது 1950 களில் தோன்றிய அரசியல் முறையின் சாதகமான அம்சமாகும்.

ஆனால், இவைகளால் ஜனநாயக முறையின் ஆபத்தான குறைபாடுகளையும், அது சந்திக்கும் சவால்களையும் மறைக்க முடியவில்லை. நவீன தாராளமயக் கொள்கைகள், தடையில்லாத தனியார் மயம் என்று போய்க்கொண்டிருக்கும் இன்றைய முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில், பொருளாதார அமைப்பின் வர்க்கப் படிநிலையிலிருந்து அரசியல் ஜனநாயகம் சிறிது சிறிதாக விலகி வருகிறது. அரசியலமைப்பின் சிற்பி.டாக்டர்.அம்பேத்கர் இப்பிரச்சனை குறித்து சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக, பொருளாதார ஜனநாயகம் இல்லாத இடத்தில் அரசியல் ஜனநாயகம் வெற்றி பெற இயலாது என்பதை புரிந்து கொள்ளத் தவறும் இரண்டாவது தவறான தத்துவப் பார்வை, பாராளுமன்ற ஜனநாயகத்தை பலகீனப்படுத்திவிடும் ஊறு உள்ளது. சுதந்திர இந்தியாவில் முன்பு எப்போதையும் விட இப்போது இருப்பவர் – இல்லாதவர்களிடையே உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது. பெரும்பாலோருக்கும் பயனளிக்கவில்லை என வெளிப்படையாகத் தெரிந்த போதிலும் கூட, அத்தகைய பொருளாதார வளர்ச்சி போற்றப் படுகிறது. அரசியலமைப்பின் வழிகாட்டும் கொள்கைகளில் கூறப்பட்டுள்ள வேலைவாய்ப்பு உரிமை, கல்வி, உழைப்போர்க்கு வாழ்வதற்கேற்ற ஊதியம், குழந்தைகளுக்கு இலவசக்கட்டாயக்கல்வி என்ற பல்வேறு வாக்குறுதிகளிலிருந்து அரசு பின்வாங்குவது தற்போது அதிகமாகியுள்ளது.

குறைபாடுகளும், சவால்களும்

சமூகத்தில் சமத்துவம் நிலவுவதாக காட்டும் தோற்றத்தைக் கூட ஏற்படுத்த இயலாமல் குடியரசு தோல்வியடைந்துள்ளது தெளிவு. அரசியலமைப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள கண்துடைப்பு நடவடிக்கையாக இடஒதுக்கீடு  ஆகிவிட்ட நிலையில், தலித்துகள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். 8.4 கோடி ஆதிவாசிகள் நிலப்பிரபுத்துவ – லேவாதேவி – காண்டிராக்டர்களின் வட்டாரத்தால் கடுமையாகச் சுரண்டப்படுகின்றார்கள். இதற்கும் மேலாக, அவர்களது நிலம், வாழ்க்கை, வாழிடம் அனைத்தையும் பிடுங்கும் இடையறாத தாரளமய, தனியார்மயத்திற்கு அவர்கள் இரையாகிறார்கள். ஆதிவாசிகளின் மீதான உட்சபட்சத் தாக்குதலை கலிங்கா நகர் படுகொலையில் பார்த்தோம். குடியரசாகி ஐம்பத்திஆறு ஆண்டுகளான பின்னும், அரசு மக்களுக்கு எழுத்தறிவே தரவில்லை யெனும் போது, 14 வயது வரைக்கும் கட்டாயமான, இலவசக்கல்வி குறித்து நாம் பேச முடியுமா? மக்கள் தொகையில் முப்பத்தி ஐந்து சதம் கல்வியறி வில்லாதவர்கள் தான்.

மற்ற உலக நாடுகளோடு ஒப்பிட முடியாத அளவு கோரமான வறுமை இந்தியாவில் நிலவுகிறது. பசி, ஊட்டச்சத்துக்குறைவு, நோய்கள் என இது தொடர்பான பிரச்சனைகள் ஏராளம். முழுமுதல் அடிப்படையான தோல்வி வறுமை ஒழிப்பில் தான்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்படும் தாரளமய, தனியார்மயக் கொள்கைகள் ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோதப் போக்கை நாட்டில் பரப்பியுள்ளன. தாரளமய சித்தாந்தங்களின் விளைவாக ஜனநாயகத்தின் மீது புதுத் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன. உழைக்கும் வர்க்கத்தைக் தட்டி வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. 1990 களில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அப்பட்டமான மதவாதத்தின் வளர்ச்சி; வலது சாரி சர்வாதிகாரத்தை நோக்கிய சாய்வு என்று கொள்ளலாம். பா.ஜ.க. வும் அதன் தலைவர் திரு.எல்.கே.அத்வானியும் தற்போதுள்ள பாராளுமன்ற ஆட்சி முறையை மாற்றி ஜனாதிபதி ஆட்சி முறை ஏற்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்ததில் வியப்பொன்றும் இல்லை. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதில் சில கட்டுப்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே கல்வித் தகுதிகள், இவைபற்றியெல்லாம் பல வதந்திகள் உலவுகின்றன. இவை ஏதோ சில தனிநபர்கள் அல்லது அரசியல் கட்சிகள் கூறுவதாக நினைப்பது தவறு. இவை சர்வதேச நிதி மூலதனத்தைத் தேடும் மிகப் பெரிய பண முதலைகளின் ஜனநாயக விரோதக் கொள்கைகள்.

இது போன்ற கொள்கைகளை நாட்டின் மிக உயரிய நீதி அமைப்பும் வெளியிடுகிறது. மக்களின் கூட்டுப் போராட்ட உரிமைகளை அது சகித்துக் கொள்வதில்லை. ஹர்த்தால்கள், பந்த்கள் தடை செய்யப்படுகின்றன. கூட்டங்கள் நடத்துவது, கண்டம் தெரிவிப்பது போன்ற நடவடிக்கைகளுக்குப் பல கட்டுப்பாடுகள். மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுப்பது இப்படி தொழிலாளர்கள் குறித்த பழமைவாதப் போக்கை உச்ச நிதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் காணலாம். அரசியலிலும், பொருளாதாரத்தில் மட்டும் வலதுசாரிச் சிந்தனைகள் தோன்றுகின்ற நிலையைத் தாண்டி, தற்போது நிலவும் பழக்க வழக்கங்களை நிலைபெறச் செய்வது, ஜாதிய வெறுப்புணர்வுகளை மங்கவிடாமல் வளர்ப்பது, விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவிற்கும் பொருந்தாத விஷயங்களை தலைமேல் வைத்துக் கொண்டாடுவது – இவைகளும் தான் இன்றைய நிலவரமாக உள்ளது. சுதந்திரம் அடைந்த புதிதில், ஜனநாயக நெறிகளையும், விஞ்ஞானப் பூர்வமான அணுகுமுறையையும் பாதுகாக்கப்போவதாக ஆளும் பூர்ஷ்வா வர்க்கம் அன்று பேசியதற்கும், இப்போது நடப்பதற்கும் சம்பந்தமே இல்லை. பா.ஜ.க. ஆட்சியில், அனைத்துத் துறைகளிலும் மதவாதமும், சமூகக் கட்டுப்பெட்டித் தனமும் ஊடுருவின. இன்றும் அதில் பெரும்பகுதி நேராக்கப்படாமலேயே உள்ளது.

அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழலால், அரசாங்க அமைப்பின் எல்லாத் துறைகளும் சீரழிந்துவிட்டன. அரசியல் கட்சிகள் உரிமை கொண்டாடும் அம்சமாக ஊழல் ஆகிவிட்டது. இதுவரை அதிகார பீடத்தில் ஏறாத அரசியல் கட்சி, ஜாதிச் செல்வாக்கில் ஆட்சிக்கு வரும் போது மக்கள் ஏற்றுக் கொள்வது அதிகரித்துள்ளது. வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள், நலப்பணிகள் மக்களைச் சென்று அடையாததன் முக்கியக் காரணம் மேல்மட்ட அதிகாரிகள், பூர்ஷ்வா அரசியல் வாதிகள் ஆகியோர் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது தான்.

எனினும், இத்தகைய எல்லா பாதகமான அம்சங்களும், பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடவில்லை. பூர்ஷ்வா வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் வடிவமாக இருந்தாலும் கூட, இன்றைய பாராளுமன்ற அமைப்பு மக்களின் முன்னேற்றத்தையும், பிரதிநிதித்துவப்படுத்துகிறது.. அது மக்களுக்குத் தங்கள் நலன்களைப் பாதுகாக்க சில வாய்ப்புக்களைத் தருகிறது. ஓரளவு அரசின் செயல்பாடுகளில் மக்களால் தலையிட முடிகிறது. சமூக முன்னேற்றத்திற்கும், ஜனநாயக முன்னேற்றத் திற்குமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வழி வகுக்கிறது.

இறையாண்மையின் வீழ்ச்சி

குடியரசின் இறையாண்மைத் கோட்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றொரு ஆபத்தான விஷயமாகும். குடியரசாகிப் பல ஆண்டு களுக்கு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் சுயேச்சையான செயல்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் பெருமை சேர்ப்பதாக இருந்தது. 1991 ல் தாராளமயக் கொள்கைகள் வந்தபோது, அணிசேராக் கொள்கையை கைவிட முன்வைப்பப்பட்ட வாதங்கள் இறுதியில் சுயேட்சையான அயலுறவுக் கொள்கையை கைவிட வழிவகுத்தது. ஆறாண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் போது, அமெரிக்காவின் இயல்பான துணையாக இருப்பது தான் நமது குறிக்கோள் என்ற ரீதியில் செயல்பட்ட போது இது அதிர்ச்சி தருகிற முறையில் வெளிப்பட்டது. பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம், நமது பொருளாதாரக் கொள்கைகளில் அமெரிக்கா மற்றும் சர்வதேச நிதி மூலதனங்களின் தாக்கம் ஆகியன வெளியுறவுக் கொள்கைகளில் மேலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.  சுயேட்சையான வெளிநாட்டுக் கொள்கை, பல துருவ உலக உறவை பலப்படுத்துவது என்று வாக்குறுதி அளித்த ஐக்கிய முற்போக்கு அணி அரசு இப்பொழுது ஆளும் வர்க்கங்களின் நிலைபாடான அமெரிக்வின் அரசியல் பங்காளியாக இருப்பது என்ற நிலைபாட்டை உறுதி செய்து வருகிறது. இந்திய – அமெரிக்க ராணுவ ஒப்பந்தமும், ஜூலை 2005 ல் பிரதமர் வாஷிங்டனில் அளித்த கூட்டு அறிக்கையும் சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை தேய்ந்து போனதைத்தான் காட்டுகின்றன. கடந்த செப்டம்பரில் ஈரான் அணுசக்தி விஷயத்தில் சர்வதேச அணுசக்தி குழுமத்தில் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது இந்தியாவின் அமெரிக்க சார்புக்கு முக்கியமான அடையாளமாகும்.

இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் கோரிக்கைகளை முன்வைப்பதில் தயக்கம் காட்டாமல் அமெரிக்கா நடந்து கொள்கிறது. வடகிழக்கில் குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் புலனாய்வு செய்ய அமெரிக்க உள்நாட்டு புலனாய்வு அமைப்பை அனுப்புவதாக அமெரிக்கத் தூதரால்  சொல்ல முடிகிறது.  இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி மூலதனத்தை உயர்த்தாமல் நம்பிக்கைத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டவும் முடிகிறது. ஈரான் – இந்தியா – பாகிஸ்தான் கூட்டு முயற்சியாக எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தக் கூடாது என அமெரிக்கா எச்சரிக்கவும் முடிகிறது. முன்னாள் இருந்த பா,ஜ,க, தலைமையிலான அரசும் சரி, இப்பொழுது ஐக்கிய முற்போக்கு அணியும் சரி, அமெரிக்காவுடன் இணைந்து, அமெரிக்காவின் ஜனநாயகத்தைப் பரப்புவது என்ற போர்வையில், அதன் மேலாதிக் கத்தை திணிக்கும் முயற்சிக்கு  உதவுவதில் எந்தத் தவறும் இருப்பதாகக் கருதவில்லை. இன்றைய அரசியல் அமைப்பில் வெளிப்படும் அனைத்து ஜனநாயக விரோதப் போக்குகளையும் சி.பி.எம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மதச்சார்பின்மையை உள்ளடக்கிய ஜனநாயக நெறிகளைப் பாதுகாப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மதவாத ஆபத்தை எதிர்த்து, நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க, அரசியல் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நாட்டின் அரசியலில், இடதுசாரிகள் தான் மாற்று என்பதை உணர்த்த இன்னும் அதிகமான பணிகள் செய்ய வேண்டும்.

பாராளுமன்ற ஜனநாயக முறையை வலுப்படுத்த, தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம். பணபலம் மற்றும் அடியாள் பலத்தைக் கட்டுப்படுத்த தேர்தல்களில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Representation) அடிப்படையான தேவையாகும். தேர்தல் செலவிற்கு என நிர்ணயிக்கப்பட்ட தொகையில் அனைத்து செலவீனங் களையும் அடக்கும் விதமாக சட்டங்கள் கடுமைக்கப்பட வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்கான அனைத்துப் பொருட்களை யும் அரசே தரும் விதமாக சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

1994 ல் ஒன்பது பேர் அடங்கிய உச்ச நீதி மன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் மதச்சார்பின்மை தான் அரசியலமைப்பின் ஆதாரம் என்றும், அதன் பொருள் அரசில் மதம் தலையிடுவதும், மதத்தில் அரசு தலையிடுவதும் இன்றி, இரண்டும் தனித்தனியாக இருப்பது என்று வரையறுத்தது. இந்த வரையறை அரசியமைப்பில் தெளிவாக இடம் பெற வேண்டும்.

இன்றைய நிலையில், பொருளாதாரக் கொள்கைகளின் மோசமான போக்கை எதிர்த்து இடதுசாரிகளும், சி.பி.எம்.மும் போராட வேண்டும். வர்க்கப் பிரச்சனைகளான நிலச் சீர்திருத்தம், கூலி, வேலை வாய்ப்பு, பொதுத்துறை பாதுகாப்பு, உழைக்கும் மக்களைப் பாதிக்கும் தாரளமயத்தை எதிர்த்துப் போராட்டம். இவையனைத்தும், வர்க்கப் போராட்டத்தையும், வெகுஜன இயக்கத்தையும் விரிவு படுத்த அடித்தளமாக அமைய வேண்டும். பெண்ணுரிமை, தலித்துகள், ஆதிவாசிகள் முன்னேற்றம், சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் உரிமையைப் பாதுகாக்கும் அனைத்துப் போராட்டங்களையும் இடதுசாரிகள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். மதவாத விஷத்திற்குப் புத்துயிர் அளிக்க பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி செய்யும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க சார்பு நிலையை எதிர்ப்பது, குடியரசு, இறையாண்மை மாட்சியைப் பாதுகாப்பதில் சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை அவசியம் என்பதை நிறுவுவது, நமது போராட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த இருபது மாதங்களாக ஆட்சியில் இருக்கும் சூழலில் இப்பணிகள் அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். ஐ.மு.கூ. அரசை மக்கள் நலப் பணிகளைச் செய்ய வலியுறுத்தும் அனைத்து வேலைகளையும் தற்போது நடந்து வருகின்றன. இப்பாதையில் மேலும் நடைபோட செப்.29 வேலை நிறுத்தம் நமக்கு உத்வேகம் அளித்துள்ளது. இந்தியர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைக்க மாட்டார்கள் என்பதை அறிவிக்க, எதிர்வரும் அமெரிக்க அதிபர் புஷ் வருகிற நேரம் இடதுசாரிகளுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் கிடைத்த அருமையான வாய்ப்பாகும்.

நெகிழ்வான தொழிலாளர் சந்தை: உண்மையும் புரட்டும்!

தோழர்: ஜோதிபாசு

தமிழில்: ஹேமா

(ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜோதிபாசு  ஆற்றிய வி.வி.கிரி நினைவு சொற்பொழிவு)

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பட்டாச்சார்யா அவர்களே.!  தொழிலாளர் – பொருளாதார இந்திய சமூக கழகத்தின் தலைவர் பேராசிரியர் பாப்லோ அவர்களே! மாநாட்டு தலைவர் பேராசிரியர் பட்நாயக் அவர்களே! பிரதி நிதிகளே!  தொழிலாளர் பொருளாதார இந்திய சமூக கழகத்தின் 47-வது மாநாட்டை துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். கடந்த காலங்களில் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த வி.வி.கிரி. அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்வி அமைப்பின் மாநாட்டை துவக்கி வைப்பதில் பெருமிதப்படுகிறேன்.

தொழிலாளர் நலனுக்காக, உயர்வுக்காக தன் வாழ்நாளில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார் வி.வி.கிரி என்பதை நன்கு அறிவேன். அவர் எனக்கு மிகவும் பழக்கமானவர். அவர்கள் துவக்கிய இந்த கழகம் தனது ஆய்வு அறிவை, தகவல்களை, இந்திய தொழிலாளி வர்க்க மேம்பாட்டிற்கு பயன்படுத்த தொடர்ந்து முயல்வதை பாராட்டுகிறேன்.

தொழிலாளி வர்க்கத்திற்கு இப்படியான ஆய்வு – கல்வி கழகங்களின் துணை தேவை என்று தொழிற்சங்கவாதியான நான் உணர்கிறேன். இந்த ஆய்வு அமைப்புகள் எவ்விதத்திலும் ஒருதலை பட்சமாக செயல்படவேண்டியதில்லை. நேர்மையான ஆய்வு பணியை, விஞ்ஞான பூர்வமான முறையில், எந்த உள்நோக்கமின்றி சார்பற்று செய்ய வேண்டிய தேவை உள்ளது.  நேர்மையான விஞ்ஞான கருத்துக்கள் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கு உகந்த நண்பனாகும். தவறான பார்வையாலோ, அறியாமையாலோ, உள்நோக்கத்துடனே அல்லது முதலாளிவர்க்கத்தின் நலன் காக்க திட்டமிட்டே உருவாக்கப்படும் பொய்யான கருத்துக்கள், தத்துவங்கள் – தொழிலாளர்கள் தங்கள் துயர நிலையிலிருந்து விடுபடுவதற்கு பெரும் தடையாகி வழிமறிக்கின்றன. வரலாறு முழுவதும் இப்பொய்யான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. இதை விளக்க மூன்று உதாரணங்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி ஆரம்பகட்டத்தில் தொழிலாளர்களுக்கு கொடுந்துயரங்களை கொண்டு வந்து சேர்த்தது. இதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். சொற்ப கூலிக்காக மிக மிக நீண்ட நேரங்கள் மனிதாபி மானமற்ற சூழலில் சுரங்கங்களிலும், தொழிற்சாலைகளிலும் உயிரை தேய்த்து உழைக்க வேண்டியிருந்தது. காரல் மார்க்ஸ் அவர்களின் உன்னத படைப்பான மூலதனம் நூலில் இந்நிலைமைகள் குறித்து தொழிற்சாலை ஆய்வாளர் அறிக்கை குறிப்புகளை மேற்கோள் காட்டி விளக்குகிறார். ஏங்கெல்ஸின் இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை  என்ற நூலில் தொழிலாளர்கள்  சுரண்டப்பட்ட துயர நிலையை, நம் மனம் அதிர்ச்சிகொள்ள எடுத்துரைக்கிறார்.

இந்த நிலையில்தான் சில சீர்திருத்தவாதிகள் குறிப்பாக உடைமை வர்க்க மேல்தட்டிலிருந்து வந்தவர்கள், 19-ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் தொழிலாளரின் உழைப்பு நிலையை சட்டங்களால் மேம்படுத்த முயன்றனர். வேலை நேரத்தை குறைப்பது என்பது இச்சீர்திருத்தவாதிகளின் முக்கிய முயற்சியாக இருந்தது. இதன் விளைவாக வந்த 10 மணிநேர வேலை மசோதா இதில் முக்கிய தடம் பதித்தது.  அதுவரை அதிகபட்ச வேலைநேரம் சட்டபூர்வமாக 11 மணி நேரமாக இருந்தது.

சரியாக இந்த கட்டத்தில்தான் அரசியல் பொருளாதாரத்தின் முதல் பேராசிரியரான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் நாசா சீனியர் ஒரு தத்துவத்தை முன்வைத்தார். எல்லா முதலாளிகளும் தங்கள் லாபத்தை ஒரு வேலை நாளின் இறுதி மணி நேரத்திலிருந்துதான் பெறமுடியும் என்றும் இதர நேர உழைப்பு பொருள் மதிப்பு கூட்டலுக்கே செல்கிறது – அதுவும் தொழிலாளர்களுக்கு ஊதியம் செலுத்த செலவழித்துவிடுகிறது என்றும் முன்மொழிந்தார். தொழிலாளர்களின் வேலை நேரத்தில் ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டாலும் கூட லாபத்தை  ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என்று சொல்லிய தத்துவம் இது. எனவே, தொழிலாளர்கள் வேலைநேர குறைப்பை நியாயமற்றது என வாதாடியது. லாபம் அழிந்தால், தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள் நலிவுற்று. வேலையிழப்பை ஏற்படுத்தி மேலும் தொழிலாளர்களை துயரத்தில் தள்ளும் என்றது இத்தத்துவம். காரல் மார்க்ஸ் இதை தொழிலாளி வர்க்கத்திற்கு  எதிரான தத்துவம் என கடுமையாக தாக்கினார்.  சீனியரின் கடைசி நேரம் என்று மார்க்ஸ் பயன்படுத்திய கண்டன வாக்கியம், ஆளும் வர்க்க நலன் காக்கும் அனைத்து தவறான கட்டுக்கதை தத்துவங்களுக்குமான குறியீடாகி உள்ளது. தொழிலாளர்களின் விடுதலைக்கு எதிரான பொய் தத்துவங்களுக்கான ஓர் நல்ல உதாரணம் இத்தத்துவம். தங்களுக் கெதிரான சுரண்டல் வேலை சூழலிலிருந்து மீள எதுவும் செய்யாமலிருப்பதே தொழிலாளர்களுக்கு நல்லது என்று போதிக்கும் தத்துவ வகை இது.  ஒரு மணிநேரம்  என்று நாசா சீனியர் குறிப்பிடுவதும், கணக்கிட்டு சொல்வதாக கதைவிடுவதும் அவரின்  கற்பனை கதையே தவிர வேறொன்றுமில்லை என்பதால் இத்தத்துவம் சாயமிழந்து நிற்கிறது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைக்கும் சட்டம் வருவதை தடுக்க கிளப்பிவிட்ட  வெறும் புரளியே இது.

இத்தத்துவத்தின் படி பார்த்தால், கடைசி ஒரு மணி நேர உழைப்பில் தான் உபரி மதிப்பு  1/10 என்ற விகிதத்தில் உருவாகுவதாகவோ அல்லது மதிப்பு கூட்டலில் லாப விகிதம் வெறும் 9 சதமே என்பதோ நம்பும்படி இல்லை. இது முதலாளித்துவ நாடுகள் இதுவரை கண்டிருக்கும் லாபவிகிதத்தை விட மிகமிக குறைவான கணக்கீடாக உள்ளது. ஆனால், நல்லவேளையாக  சீனியரின் இத்தத்துவம் மிகுந்த கவனிப்பு பெறாததால் தொழிலாளர் வேலைநேர குறைப்பை இதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எனது  இரண்டாவது உதாரணம் ஜான் ஸ்டுவர்ட் மில்லின் தத்துவம் பற்றியது. இவர் தொழிற்சங்க நடவடிக்கைகளால் கூலி உயர்வு பெற இயலவே இயலாது என்றார். 19-ம் நூற்றாண்டின் மிக சிறந்த அறிவு ஜீவியான இவரின் இக்கருத்து எந்த உள்நோக்கத் துடனோ அல்லது அநீதியான நோக்கங்களுக்கோ சொல்லப் பட்டதாக நாம் கருத முடியாது. ஆனால் இவரின் கூலி நிதி தத்துவம் மிக தவறானது. இத்தத்துவம் பின்வருமாறு சொன்னது. பொருளாதாரத்தில் எந்த நேரத்தை எடுத்துக் கொண்டாலும்,  கூலி நிதி என்று ஒன்று உள்ளது. இது தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரித்து தரப்படவேண்டியது. ஆனால், தொழிற்சங்க நடவடிக் கையால் ஏதாவது ஒரு குழு தொழிலாளர்கள் கூலி உயர்வு பெற்றால் அது இதர தொழிலாளர்களை பாதிக்கும். அவர்களின் நிதியை பறித்துக் கொள்வதாகும் என்றது.

இது தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கத்தில் திரளுவதற்கு எதிரான மனநிலையை உருவாக்கும் தவறான தத்துவம். முதலாளிகள் ஒரு குழு தொழிலாளர்களிடம் தாங்கள் இழப்பதை, வேறுகுழு தொழிலாளர்கள் மீது சுமத்தும் பாரத்தால் சரி செய்து கொள்ள முயல்வார்கள் என்பது சாதாரணமாக நடைபெறுவதுதான். ஆனால், இது ஸ்டுவர்ட் மில்லின் தத்துவ முடிவிலிருந்து மாறானதாகும். திரட்டப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையால் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் முதலாளிகளிடம் எப்பயனையும் எக்காலத்திலும் அடைய முடியாது என்பது இவரின் தவறான முடிவாகும்.

ஜான் ஸ்டுவர்ட் மில்லின் சிஷ்யர் சிட்டிசன் வெஸ்டன் என்பவர் இத்தத்துவத்தை லண்டனில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில்  முன்வைத்தார். மார்க்ஸ் இது தவறானது என கண்டித்தும் தனது பிரபலமான கூலி மதிப்பு லாபம்  என்ற பிரசுரத்தில் எழுதினார். லாபத்தை குறைத்து கொள்வதால், தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை ஏற்படுத்த தொழிற்சங்க நடவடிக்கையால் முடியும் என்று எடுத்துக்காட்டினார். ஸ்டுவர்ட்  மில் சொல்வதுபோல் தொழிற்சங்க நடவடிக்கையால் லாப விகிதத்தை ஒன்றும் செய்ய முடியாது என்பது சரி என்று வைத்துக் கொண்டால், பின் ஏன் முதலாளிகள் தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறார்கள் ? என்ற கேள்வி பதிலற்று நிற்குமே. மில்லின் இத்தத்துவம் கேள்விக் குள்ளாக்கப்படாமல் மறுக்கப்படாமல் போயிருந்தால், அவர்களின் அறிவு ஜீவி திறன் காரணமாக அப்படியே ஏற்கப்பட்டு தொழிற்சங்க இயக்கத்திற்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும். எனது மூன்றாவது உதாரணம் டேவிட் ரிக்கார்டோவின் கருத்தை பற்றியது. இயந்திரமயமாக்கலால் தொழிலாளர்கள் வெளியேற்றப் பட மாட்டார்கள் என்பது அவரின் முன்மொழிவு. பின்னாளில் இதில் இவர் சிறிது மாற்றிக் கொண்டார். இயந்திர அறிமுகத்தின் குறுகிய கால அளவில் இது வேலையிழப்பை ஏற்படுத்தினாலும், நீண்ட கால அளவில் இது பொருளாதார  உயர்வுக்கு வழி செய்து, வேலைவாய்ப்பு விகிதத்தை உச்சிக்கு கொண்டு செல்லும். இதனால், ஆரம்பத்தில் வேலையிழப் போரைவிட பல மடங்கு அதிகமானவர் கள் வேலை பெறுவர் என்பது அவர் கணிப்பு.

மார்க்ஸ் சொன்னதுபோல் ரிக்கார்டோ சிறந்த பொருளாதார நிபுணர்தான். ஆனால், மார்க்ஸ் சொன்னதுபோல் இவர் தத்துவம் முற்றிலும் பிழையானது. மார்க்ஸ் கூர்மையான விமர்சனங்களை இதன்மீது வைத்தார். இயந்திரமயமாக்கலை ஒரு கட்டத்தில் மட்டுமே நடப்பதாக பார்த்ததின் விளைவே  இத்தவறான கருத்து. வேலையிழப்பு, பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த தேவையின் மீது  பாதிப்பு ஏற்படுத்தாத சூழலில் இயந்திர மயமாக்கலை புரிந்துகொள்வதில் ஏற்பட்ட பிழையே இதற்கு காரணம்.

ரிக்கார்டோவின் இத்தத்துவமும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக நின்றது. இயந்திரமயமாக்கலால் வேலையிழக்கும் தொழிலாளர்கள் கொதித்து  எழுந்து அணிதிரளும் உணர்வை மழுங்கடிப்பதாக இருக்கிறது. இதற்கெதிரான காரல் மார்க்ஸின் விமர்சனம் சரியானதே என்பது வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி என்பது தற்காலத்தில் பரவலாக தூக்கிபிடிக்கப்படுவது காட்டுகிறது. அதிவேக தொழில்நுட்ப முன்னேற்றத்தால் நவீன இயந்திரங்கள் புகுத்தப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழப்பது தொழிலாளர் தேவையை அதிகரிக்காது என்று தற்காலத்தில் கண்மூடித்தனமாக ஏற்கப்படுவது, ரிக்கார்டளிவின் தத்துவத்திற்கு ஒத்ததல்ல.

இத்தவறான தத்துவ உதாரணங்களை நான் குறிப்பிடுவதற்கு காரணம் தொழிலாளர்கள் இயக்கத்திற்கு சரியான தத்துவங்களின் தேவை எவ்வளவு முக்கியமானது என்று உணர்த்துதலே. இச்சரியான தத்துவங்கள் விஞ்ஞானபூர்வமான தெளிவான விவாதங்கள் மூலமே உருவாக்கமுடியும். இத்தகைய விவாதங்கள் நடைபெற தொழிலாளர் பொருளாதார சமூக கழகம் தன்விவாத அரங்குகள் மூலம் முக்கிய பங்காற்ற முடியும் என்பது உண்மை. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான தவறான விஞ்ஞான பூர்வமற்ற கருத்துக்கள் பரப்பப்படும் சூழலில் இந்தியாவில் இன்று அத்தகைய விவாதங்கள் மிகவும் அவசியம். உதாரணமாக அரசாங்கம் நெகிழ்வான தொழிலாளர் சந்தை என்பதை புகுத்துவதில் குறியாக உள்நது. இதில் விருப்பப் பட்டால் வேலைக்கு வைப்பது,  இல்லையயன்றால் வேலையிலிருந்து தூக்கியெறிவது என்ற முதலாளிகளின் சுதந்திரமும் உள்ளடங்கு மாம்.  நெகிழ்வான தொழிலாளர் சந்தையின் நோக்கம் என்ன? என்பது நமக்கு எளிதில் புரிகிறது பொருளாதாரத்தில் உபரி மதிப்பை உயர்த்துவது, வருமான பங்கீட்டை கூலியிலிருந்து லாபத்திற்கு திசை திருப்புவது என்பவை அதன் நோக்கங்கள்.

இந்த உயர்லாபத்தால் பொருளாதார உயர்வு ஏற்பட்டு அதனால் தொழிலாளர்க்கான தேவை கூடி, ரிக்கார்டோ இயந்திர அறிமுகத்துக்கு சொன்னதுபோல் நன்மை பயக்கும் என்பதால் நெகிழ்வான தொழிலாளர் சந்தை தேவை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த அனுமானங்கள் அனைத்தும் செல்லாதவை, தவறானவை.

வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியின் அனுபவத்தை நாம் பார்த்துவிட்டோம். உயர் வளர்ச்சி – தொழிலாளர் வேலைவாய்ப்பாக மாறவில்லை மாறாக, கூலியிலிருந்து லாபத்திற்கு நகர்தல் நடந்தது. உயர் வளர்ச்சியை கொடுப்பதற்கு பதில், எதிர் விளைவாய் பொருளா தாரத்தில் தேவையை குறைத்து, வளர்ச்சி விகிதத்தை குறைத்தது.

நெகிழ்வான தொழிலாளர் சந்தையின் பக்தர்கள், கூலியிலிருந்து லாபத்திற்கு நகர்வதால், சர்வதேச சந்தையில் முதலாளிகளால் தங்கள் பொருட்களின் விலையை குறைத்து போட்டியிட முடியும். இதனால், ஏற்றுமதி பெருகும் என்று சொல்கிறார்கள். ஆனால், ஏற்றுமதி அளவை நிர்ணயிக்கும் காரணிகள் சிக்கலானவை, கூலி விகிதம், தொழிலாளர் திறனோடு ஒப்பிடுகையில் முக்கிய காரணியல்ல, குறைவாக கூலி இருப்பதுதான் ஏற்றுமதியை அதிகப்படுத்தும் என்றால் இந்திய கூலி நிலைமையை பார்க்கையில் என்றோ நாம் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளை சர்வதேச சந்தையில் வீழ்த்தியிருக்க முடியுமே ! நடக்கவில்லையே !

நெகிழ்வான தொழிலாளர் சந்தையால் ஏற்றுமதி ஊக்கம் பெறும்  என்ற அனுமானபடியே பார்த்தாலும் ஏற்றுமதி பெரிய அளவிற்கு உயராது என தெரிகிறது. முன்பு நான் குறிப்பிட்டது போன்ற வருமான மறுபங்கீட்டின் காரணமாக ஏற்பட்டுள்ள தேவை சரிவை ஈடுகட்டும் அளவிற்கு ஏற்றுமதி உயர்வு ஏற்படும் என்று நம்ப வாய்ப்பேயில்லை. எந்த உண்மையும் அற்ற இந்த அனுமான அடிப்படையிலான கருத்து தொழிலாளர்களின் வாழ்வின் மீது வேலை நிலையின் மீது தாக்குதல் நடத்தவே  துணைபோகும்.

எல்லா நாடுகளிலும் நெகிழ்வான தொழிலாளர் சந்தை பின்பற்றப்படும் பொழுது  நாம் மட்டும் அறிமுகப்படுத்தவில்லை யென்றால் நாம் சந்தை போட்டியில் பின்தங்கிவிடுவோம் என்று வாதங்கள் முன்வைக்கப்படுகிறது. எல்லா நாடுகளிலும் இது பின்பற்றப்படும் என்றால், இதனால் விளையும் நன்மைகள் வேறுநாட்டிற்கு இல்லா தனிசிறப்பு என்று சொல்லப்படுபவை யாருக்கும் பயன்தராமல் தானே போகும் ? எல்லா நாட்டிலும் அமலாகும்பொழுது வாதம் அடிபடுகிறது. எல்லா நாட்டு தொழிலாளியும் கூலி மற்றும் வேலைவாய்ப்பில் மேலும் சரிவை சந்திக்கவே நேரும்.

இத்தத்துவ குழப்பங்களில் தொழிலாளி வர்க்கம் சிக்கிக் கொள்ளாமல், முதலாளித்துவ போட்டி விளையாட்டில், கூலியை மிக குறைந்த மட்டத்திற்கு கொண்டு வரும் முயற்சியை, ஒவ்வொரு நாட்டு தொழிலாளியும் எதிர்க்க வேண்டும். இதற்கு காரணமான கொள்கைகளை முறியடிக்க வேண்டும். இந்த போராட்டம் ஒருங்கிணைப்பட்டதாக இருக்க வேண்டும். ஒருங்கிணைக்கப் படவில்லையென்றாலும் ஒவ்வொரு நாட்டு தொழிலாளியும், நெகிழ்வான தொழிலாளர் சந்தை விளைவால் கூலி குறைக்கப் பட்ட நாட்டிலிருந்து வரும் போட்டியை எதிர்க்கவேண்டும். தற்காப்பு முறையாக கருதி நெகிழ்வான தொழிலாளர் சந்தையை தானும் ஏற்றுக் கொள்ளுதல் என்ற நிலைக்கு போகக் கூடாது.

பிரச்சனைகளை சரியாக புரிந்துகொள்ளாத தவறான கொள்கை களுக்கு விதையிடும் தத்துவங்களை தோலுரித்துக்காட்டும் விவாதங்கள் இதுபோன்ற மேடைகளில் நடைபெற வேண்டும். எனவே, மிகுந்த மகிழ்ச்சியுடன் இம்மாநாட்டை நான் துவக்கி   வைக்கிறேன். இம்மாநாட்டு விவாதங்கள், முடிவுகள் நாட்டிற்கும், நம் தொழிலாளி வர்க்கத்திற்கும் மிகுந்த பலன் விளைவிக்கும் என்று நம்புகிறேன்.