அமெரிக்க போர் முரசும், அல்லல்படும் சிரியாவின் மக்களும்

மீண்டும் அமெரிக்கா போர் முரசு கொட்டு கிறது. எண்ணெய் வள அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபர் ஐ.நா நெறிகளை மீறி வைத் திருக்கும் பேரழிவு ரசாயன ஆயுதங்களிலிருந்து உலக மக்களை காக்க படையெடுக்கப் போவதாக வும் மேலும் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங் களுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் ஒபாமா ஓசை எழுப்பியுள்ளார். இந்த போர்முரசின் நோக்கம் எந்த சோற்றாலும் மறைக்க முடியாத மலையாகும்.. தனது மேலாதிக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டதாக பயந்து ஆயுத பலத்தை உலகிற்கு காட்டவும் எண் ணெய் வள நாடுகளை கிடுக்கிப்பிடி போட்டுவைக் கவும் இந்த போர் முரசு கொட்டப்படுகிறது. ரசாயன ஆயுதங்கள் ஸ்டாக் வைத்திருப்பது குற்ற மென்றால் முதல் குற்றவாளி அமெரிக்காதான். ராசாயன ஆயுதத்தை பயன்படுத்தி மக்களை கொன்ற முதல் குற்றவாளியும் அமெரிக்காதான்.40 ஆண்டுகள் கடந்த பிறகும் வியட்நாம் மக்களும் மண்ணும் காடுகளும் அமெரிக்க ராணுவம் வீசிய ரசாயன விஷத்திலிருந்து இன்னும் மீளவில்லை.. இப்பொழுதும் சிரியாவில் ரசாயன ஆயுதத்தை ஏவியதும் அமெரிக்காவின் உதவியுடன் செயல்படும் பயங்கர வாத குழுதான் என்று ஐ.நா நிபுணர்கள் குழு கண்டறிந்து விட்டது. வேதனை என்னவெனில் மேலை நாட்டு செய்தி சேகரிப்பு நிறுனங்கள் அமெரிக்காவும் அல்கொய்தாவும் கூட்டணி வைத்து சிரியாவிறகுள் பயங்கர.த்தை விதைத்து மக்களை கடந்த இரண்டு வருடமாக அகதிகளாக ஆக்குவதை பூசி மொழுகி காட்டுவதுதான்.

நாணய மாற்றுதலை – தறிகெட்டு அலையவிடலாமா?

நாணய மாற்றுதலில் (மணி - கன்வெர்ட்டபிலிட்டி) தாராள மயத்தை முழுமையாகப் புகுத்த மீண்டும் ஒரு முயற்சி நடக்கிறது. இதனை ஒட்டி ஒரு சூடான சர்ச்சை அரசாங்க மேல்மட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சைகளில் பங்கு பெறுவோர் அமைச்சர்கள், மேல்மட்ட அதிகாரிகள், அரசிடம் சம்பளம் பெறும் நிபுணர்கள், வங்கிகளின் தலைமைப் பீடங்கள், இவர்களோடு எல்லா வகையிலும், நெருக்கமாக குடும்பப் பாசத்தோடு இருக்கும் பெரு முதலாளிகளிடம் சேவகம் செய்யவே பிறப்பெடுத்த கொழுத்த சம்பளம் பெறும் மூளைகள் இவர்கள் எல்லாம் ஒரு பக்கமாக நிற்கிறார்கள்.

வறுமை வரலாறாகுமா?

மனிதாபிமானம் கொண்ட எவரும் இந்த பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்திற்கு எல்லைகள் கிடையாது; விளைவுகள் பற்றிய சிந்தனை கிடையாது; நோக்கங்கள் நிறைவேற வேண்டும் என்பதைக் காட்டிலும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதோடு, அது தன் வேலையை முடித்துக் கொள்கிறது.