போர் என்பது எப்படியாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், அது மனித உயிர்களைப் பலி வாங்குகிறது. அரும்பாடுபட்டு உருவாக்கிய உற்பத்தி சாதனங்களும் வளங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்படுகின்றன. போரில் ஈடுபடும் தேசங்களில், உழைக்கும் மக்களே கடும் இழப்புக்கு ஆளாகின்றனர். இது வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த இரு தேச உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் போர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நின்று போர்களை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.
Tag: மார்க்சிஸ்ட்
2022-23 ஒன்றிய ‘பட்ஜெட்’ : ஒரு மதிப்பீடு !
வரிப்பகிர்வு மூலமும், வேறு வகைகளிலும் மாநிலங்களுடன் ஒன்றிய அரசு வளங்களை பகிர்கிறது.பொதுவாக, ஒன்றிய அரசுகள் இப்பகிர்வுகள் வாயிலாக தங்களது அதிகாரத்தை செலுத்த முனைகின்றன. பாஜக ஆட்சியில் இந்த முனைவு பெரிதும் அதிகரித்துள்ளது. அனைத்து அதிகாரங்களையும் மாநிலங்களிடமிருந்து பறித்து, மையப்படுத்துவது என்பது பாஜக அரசின் அணுகுமுறையாக இருந்துவருகிறது.

இந்திய வர்க்கங்களின் நிலைமையில் மாற்றமும், கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியதும் !
கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து, இந்தியாவின் ஊரக மற்றும் நகர்ப்புற சூழலில் நவ-தாராளமய காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு தக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கும் பகுதிகள் சுருக்கமாக வழங்கப்படுகின்றன

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நகல் தீர்மானம் சொல்வது என்ன?
2022 ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள, நமது கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் தீர்மானத்தின் நகலினை தற்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ளது. (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய மாநாடு, கொரோனா பாதிப்பினால் 4 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ளது) நகல் தீர்மானத்தை படிக்க உதவியாக ஒரு சுருக்கமான அறிமுகம் வழங்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்
ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது.

அலங்கார ஊர்திகளை ஒன்றிய அரசு ஒதுக்கியது ஏன்?
சாதி, மத வேற்றுமை இல்லாமல் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று அறைகூவல் விடுத்த நாராயணகுரு, 'மனிதர்களுக்கு ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்' என்ற புதிய கொள்கையை நிறுவினார். அப்படியே அவர் சங்கராச்சாரி நடைமுறைப்படுத்திய சாதி வேற்றுமையை எதிர்த்தும் வந்தார். சாதி, மதம் தொடர்பான ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகள், உலகமெங்கும் எழுந்துவந்த மனித நேயம், ஜனநாயகம், சமத்துவம் போன்ற புதிய முழக்கங்களுக்கும், அளவுகோல்களுக்கும் ஏற்றதாக இருந்தது. சங்கராச்சாரியாரின் நால்வருண போதனைகள், ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகளுக்கு ஒருபோதும் ஈடாகாது.

மார்க்சிய தத்துவ போராட்டத்தை முன்னெடுக்கும் வழிமுறைகள் !
மக்களிடத்தில் அரசியல் தத்துவார்த்த இயக்கம் நடத்துவது மிகவும் முக்கியமானதாகும். கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த புரிதலை உயர்த்துவது அணிகளுக்கு ஊக்கம் கொடுத்து கட்சிக்கு வலிவும் பொலிவும் கொடுக்கும்.
விவசாயிகளின் போராட்டமும் அதன் வர்க்க அடித்தளமும்
இவ்வரசு வீழ்த்த முடியாத சக்தியல்ல; ஒன்றிணைந்த போராட்டத்தால் அதை முறியடிக்க முடியும் என்கிற உணர்வு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. அனைத்து விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய பொருட்களுக்கு போதுமான கொள்முதல் விலை, விவசாய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் அமைப்பு ரீதியான அடிப்படை மாற்றங்கள் உள்ளிட்டவைகளுக்கான போராட்டம் தொடரும் என்பது தெளிவு.
ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய விவசாயிகள் !
ஏகாதிபத்தியமானது, உலகின் அனைத்து உணவு வளங்களையும்,ஆதார வளங்களையும் வளைத்துப்போட விரும்புவதைப் போலவே, கச்சா எண்ணை வளங்களை கட்டுப்படுத்த விரும்புவதைப் போலவே, உலகம் முழுவதும், நிலப் பயன்பாட்டின் முறைகளைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது. குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் இதைச் செய்ய விரும்புகிறது.
India at 75 – Rural Economy & The Historic Farmers Protest ! – Prabath Patnaik
இந்திய விடுதலையின் 75 வது ஆண்டை ஒட்டி, ஒவ்வொரு மாதமும் மார்க்சிஸ்ட் இதழின் சார்பில் சிறப்பு கருத்தரங்கள் நடத்தப்படுகிறது. இந்த மாதம் நாம் நடத்தவுள்ள கருத்தரங்கில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் பங்கேற்று பேசவுள்ளார். நிகழ்வில் பங்கேற்கவுள்ளோர் முன் பதிவு செய்திட கேட்டுக்கொள்கிறோம்.