இப்படி மூலதனத்தின் சேர்மானத்தை எதற்காக ஆய்வு செய்ய வேண்டும்? இது தொழில் நுட்ப பயன்பாட்டின் அளவை, பங்களிப்பை பற்றிய குறியீடு என்பதே அதன் முக்கியத்துவம். ஒரு பெரும் தொழிலில் இயந்திரங்கள் பயன்பாடு அதிகம் இருக்கும். சிறு தொழில்களில் இயந்திர பயன்பாடு குறைவாக இருக்கும்.
Tag: மூலதனம்

தாமஸ் பிக்கெட்டின் மூலதனமும், கார்ல் மார்க்சும்
பணபுழக்கத்தை நெறிப்படுத்துவதின் மூலம் ஜனநாயக மாண்புகளை காக்கமுடியும் என்பதே இந்த புத்தகத்தின் ஜீவநாடியாகும். மார்க்சிய பொருளாதார கோட்பாடுகளுக்கு இது ஒரு சவாலாகும். கீழ்கண்ட காரணங்களால் இதனை மார்க்சிஸ்டுகள் படிப்பது அவசியம்.

நவீன தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல்
மனிதர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். சமூகம் மனிதர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு தாங்கிப் பிடிக்கப்படுகிறது. சமூகம் பொருள் அமைவின் ஒரு மட்டம் ஆகும். சமூகத்தில் தகவல் தொடர்பு என்பது மனிதர்களின் சமூக இடைச் செயல்முறையாகும்.
‘மூலதனம்’, ‘ஏகாதிபத்தியம்’ : சிதைபடும் கோட்பாடுகள்!
கருத்தியல் தளத்தில், உருவமற்ற “கோட்பாட்டு பிரச்சினையை” உருவம் கொண்டதொரு “ஸ்தூலமான பிரச்சினையாக” அதாவது, பன்னாட்டுக் கார்ப்பரேஷன் என்ற தளத்திற்கு மாற்றுவது என்பது, வெறும் தளமாற்றமாக இராது.

வெல்வதற்கோர் பொன்னுலகம்
‘கம்யூனிஸ்ட் பிரகடனம்’ பற்றிய இந்த நூல், அதன் நூற்றைம்பதாம் ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி வெளியிடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பிரகடனத்தின் நூற்றைம்பது ஆண்டு நிறைவு விழா உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்டது. மகத்தானதொரு ஆவணமாகிய கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை மறுமதிப்பீடு செய்வதற்கு, மார்க்சியத் தத்துவத்தின் சமகால நிலைமை பற்றி விமர்சனப் பூர்வமான முறையில் கூர்மையாகப் பரிசீலிப்பதற்கு, 21 ஆம் நூற்றாண்டுக்குள் நுழையும் வேளை யில் உழைப்பாளி வர்க்க இயக்கம் பயணிக்க வேண்டிய புதிய திசைவழிகளை …

தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்துவோம், அவர்களின் வர்க்க உணர்வை மேம்படுத்துவோம்!
“தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ், இந்திய மக்கள், விடுதலையை எய்திட உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற முறையில், மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, சுரண்டப்படும் மக்கள் அனைவருக்கும் தலைமையேற்று முன்னேறிச் செல்லக்கூடிய விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமையையும், புரட்சிகர உணர்வையும், வலிமையையும் உயர்த்த வேண்டியது அவசியம்.”
சுதந்திர இந்தியாவில் மூலதனத்தின் ஆதிக்கமும் திட்டமிடலும்
இந்த கருத்துத் தாளில் இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகான முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 1950 முதல் 1966 வரையிலான காலகட்டத்தில் முதலாளித்துவ ஒருங்கிணைப்பு மற்றும் அதன் பல்வேறு செயல் உத்திகள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது; அதே காலகட்டத்தில் சமூக உறவுகளின் கட்டமைப்பில் அது எத்தகைய உறவினைக் கொண்டிருந்தது என்பன போன்ற விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன.

தகர் நிலையில் உலக நிதி மூலதனம்!
336 பக்கங்களைக் கொண்ட தகர் நிலையில் உலக நிதிமூலதனம் என்ற நூல் மேலை நாட்டு பொருளாதார கோட்பாடுகளின் நச்சுத் தன்மையை புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த நூல் பொதுவாக இன்றைய பொருளாதார பிரச்சனைகளை புரிந்து கொள்ள விரும்புவோருக்கும், வாழ்நாள் சேமிப்பை கவர்ச்சிகரமான முதலீடு என்று ஏமாறாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவோருக்கும், நாட்டுப் பற்றுள்ள பத்திரிகை துறையினருக்கும் உதவும் தகவல் களஞ்சியமாகும்.

லாபம் லாபம் லாபம்..
முதலாளியின் மூலதனமும், தொழிலாளி யின் உழைப்பும் சேர்ந்து உருவாக்கிய பொருளின் விற்பனையில் கிடைக்கும் லாபம் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கான நியாயமான போராட்டங்களே தொழிலாளர்களின் போராட்டங்கள் என்று, வறுமையையும் ஏழ்மையையும் பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியா சென் கூறியுள்ளார்.