இந்திய வர்க்கங்களின் நிலைமையில் மாற்றமும், கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியதும் !

கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து, இந்தியாவின் ஊரக மற்றும் நகர்ப்புற சூழலில் நவ-தாராளமய காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு தக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கும் பகுதிகள் சுருக்கமாக வழங்கப்படுகின்றன

இந்தியாவின் சமகால வேளாண் நெருக்கடி!

இந்தியா விடுதலை அடைந்த பொழுது விவசாயம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. நிலப்பிரபுத்துவச் சுரண்டலும் அதன் மீது தொடர்ந்த காலனீயச் சுரண்டலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. 1900 முதல் 1950 வரையிலான ஐம்பது ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு அரை சதவிகிதம் என்ற அளவில், கிட்டத்தட்ட தேக்க நிலையில் இருந்தது.