மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


May 26, 2024

  • இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கம்: வரலாற்று ஆய்வு

    பேரா. மாலினிபட்டாச்சார்யா படைப்பாற்றல் மிக்க பொழுதுபோக்கு நடவடிக்கைகள் எனும் குறிப்பிட்ட பொருளில் ‘பண்பாடு’ என்ற சொல்லை இங்கு நாம் பயன்படுத்துகிறோம். இத்தகைய செயல்பாடுகள் தொடர்பான ஒரு ‘இயக்கம்’ பற்றி பேசுவது, அவை தனிமனித உள்ளத்தில் தனிப்பட்ட ஓர் முறையில் உருவான ஒன்றல்ல; அவற்றின் உருவாக்கம் சமூகம் சார்ந்தது, அரசியல் – கருத்தியல் அம்சத்தை உள்ளடக்கியது என்ற பொருளில்தான். பண்பாட்டு அரசியலுக்கு எப்போதும் இடமுண்டு.  இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தில் நாம் ஏன் ஆர்வம் செலுத்துகிறோம்? ஏனெனில், கம்யூனிஸ்டுகள் இப்பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள். இதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள்.  கருத்தியல் போர்  இந்திய முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தின் தொடக்க கால அரசியல், சாதியப் படிநிலை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்தும், கல்வியறிவு பெறவும் 19ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற உரிமைகளுக்கான சமூகச் சீர்திருத்த இயக்கங்களில் வேர்கொண்டுள்ளது. ஆதிக்கப் பண்பாட்டுக்கு எதிரான விமர்சன பூர்வமான எதிர்ப்பாக இது விளங்கியது. தொன்மைக்காலம் தொட்டு ஆதிக்கப் பண்பாட்டுக்கு எதிரான மாற்றுக் கருத்தும், பன்முகத்தன்மை கொண்ட பார்வையும் முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால், காலனி ஆதிக்கமும், நவீன மேலைய சிந்தனையுடன் தொடர்புடைய மேட்டுக்குடி வர்க்கங்களில் ஒரு பகுதியினரிடம் உருவான தேசிய அடையாளத்துக்கான தேடலும் 19ஆம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்களுக்கு ஒரு புதிய தன்மையை அளித்தது. அவை வழி வழியாக வரும் விவாதங்களின் பகுதி என்று கூறலாமா? அல்லது ‘சுதேசி நவீனத்துவம்’ என்ற சொல்லாடலில் அழைக்கலாமா?  1930, 40களின் பண்பாட்டு இயக்கம், இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில் வெகுமக்கள் இயக்கமாக மாறிய விடுதலைப் போராட்டத்துடன் மிக நெருக்கமான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள், விவசாயிகளின் பரந்துபட்ட போராட்டங்கள் வலுப்பெற்று காலனி ஆதிக்க எதிர்ப்பு எழுச்சிக்கு புதிய பரிமாணங்களை கொடுத்தன. ரஷ்யப் புரட்சி, ஐரோப்பாவில் பாசிசத்தின் எழுச்சி, இரண்டு உலகப்போர்கள் போன்ற சர்வதேச நிகழ்வுகளின் தாக்கம் கூடுதலாக இருந்தது. இந்தப் பின்னணியில் சம உரிமை, சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் நல்லிணக்கத்தை நிலை நாட்டும் சுதந்திர நவீனக் குடியரசு பற்றிய உண்மையான பார்வை ஏற்கனவே உருப்பெற்றிருந்தது. இப்பார்வை வெறும் கருத்தியல் சார்ந்ததாக மட்டுமல்லாமல், சமூகப் போராட்டங்களிலும், படைப்பாக்கம், விமர்சன இலக்கியம் , இதழியல், நாடகம், பாடல்கள், காட்சிக் கலைகள், பின்னாளில் திரைப்பட ஊடகம் போன்றவை மூலம் பன்மடங்காக வெளிப்பட்ட புதிய போக்குகளில் தெளிவாகத் தெரிந்தது. அதேசமயத்தில் சுதந்திரப் போராட்டத்திற்குள் வர்க்கம் ,சாதி, வகுப்புவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆழமான பிளவுகளும் ஏற்பட்டன. விடுதலையின் நோக்கத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்போம் என பிற்போக்குச் சக்திகள் அச்சுறுத்தின. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும் , சிறிது காலத்துக்குப் பிறகு உருப்பெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பும் இக்காலத்தில் பிறந்து, விடுதலைப் போராட்டத்திலிருந்த இந்த எதிரெதிர் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தின. கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தவரை,… Continue reading