இன்றைய அரசியலும் மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும் மாற்றும்

டி.கே. ரங்கராஜன் (மத்தியக் குழு உறுப்பினர்) இந்திய அரசியலில் ஒரு வலதுசாரி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் உண்மையான பொருள் என்ன? இதனை எவ்வாறு புரிந்து கொள்வது? இத்தகைய ஆபத்தான அரசியல் வளர்ச்சி போக்கை தடுப்பதற்கு ஒரு வர்க்க கட்சி என்ற முறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடுகள் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையின் மையமான அம்சமாகும். இந்துத்துவா…

முழுவதும் படிக்க …

விவசாயிகளின் போராட்டமும் அதன் வர்க்க அடித்தளமும்

இவ்வரசு வீழ்த்த முடியாத சக்தியல்ல; ஒன்றிணைந்த போராட்டத்தால் அதை முறியடிக்க முடியும் என்கிற உணர்வு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. அனைத்து விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய பொருட்களுக்கு போதுமான கொள்முதல் விலை, விவசாய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் அமைப்பு ரீதியான அடிப்படை மாற்றங்கள் உள்ளிட்டவைகளுக்கான போராட்டம் தொடரும் என்பது தெளிவு.

முழுவதும் படிக்க …

தமிழ்நாட்டு ஊரக வேளாண் குடும்பங்களின் நிலை என்ன?

கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடன் வாங்காமல் இருப்பது என்பது எளிதான விஷயமல்ல. சாகுபடிக்கும் இதர சுய உற்பத்தி நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக அவ்வுற்பத்தியில் சந்தை சார் இடுபொருட்கள் தேவை என்கிறபொழுது கணிசமான சொந்த மூலதனம் அல்லது வேறு வருமான மூலங்கள் இருந்தாலொழிய கடன் வாங்காமல் வேளாண் மற்றும் வேளாண்சார் தொழில்கள் செய்வது கடினம். 

முழுவதும் படிக்க …

கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு

(கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து) ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் அடிப்படையாகவும், அதன் உள்வாழ்வை வழிநடத்துவதாகவும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகள் உள்ளன. ஜனநாயக மத்தியத்துவத்தின் பொருள், உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையிலான மையப்படுத்தப்பட்ட தலைமை என்பதாகும். கட்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து பிரச்சனைகள், அதன் கொள்கைகள்,  பணிகள் மீது கட்சி அமைப்புகளில் சுதந்திரமான, வெளிப்படையான விவாதங்களை நடத்துவது உட்கட்சி ஜனநாயகத்தின் சாரமாக…

முழுவதும் படிக்க …

ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய விவசாயிகள் !

ஏகாதிபத்தியமானது, உலகின் அனைத்து உணவு வளங்களையும்,ஆதார வளங்களையும் வளைத்துப்போட விரும்புவதைப் போலவே, கச்சா எண்ணை வளங்களை கட்டுப்படுத்த விரும்புவதைப் போலவே, உலகம் முழுவதும், நிலப் பயன்பாட்டின் முறைகளைக் கட்டுப்படுத்தவும்  விரும்புகிறது. குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் இதைச் செய்ய விரும்புகிறது.

முழுவதும் படிக்க …

India at 75 – Rural Economy & The Historic Farmers Protest ! – Prabath Patnaik

இந்திய விடுதலையின் 75 வது ஆண்டை ஒட்டி, ஒவ்வொரு மாதமும் மார்க்சிஸ்ட் இதழின் சார்பில் சிறப்பு கருத்தரங்கள் நடத்தப்படுகிறது. இந்த மாதம் நாம் நடத்தவுள்ள கருத்தரங்கில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் பங்கேற்று பேசவுள்ளார். நிகழ்வில் பங்கேற்கவுள்ளோர் முன் பதிவு செய்திட கேட்டுக்கொள்கிறோம்.

முழுவதும் படிக்க …

வழிகாட்டும் கேரளம் : கூட்டுறவின் மூலம் ஒரு மாற்று !

ஆசிக் அலி, அங்சுமன் சர்மா (ஜாகோபின் இதழில்வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) இந்திய பொருளாதாரத்தினை, நவ-தாராளமய திசை வழியில், செலுத்திய கடந்த 30 ஆண்டுகளில் வேளாண் சமூகங்களும், ஊரக ஏழைகளும் அதன் கடுமையான உடன் விளைவுகளை எதிர்கொண்டுவருகிறார்கள். நமது நாட்டை ஆளும் கோமான்கள், தாராள வர்த்தக கொள்கைகளை திணித்ததுடன், வேளாண்துறைக்கான அரசு செலவினங்களையும்,மனியங்களையும் குறைத்தார்கள் மேலும்…

முழுவதும் படிக்க …

காலத்தின் தேவையே பகத்சிங்கை வளர்ந்தெடுத்தது

வரலாற்றை தனிநபர்கள் படைப்பதில்லை; ஆனால் வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பங்கு முக்கியமானதாகும். வரலாற்றைத் தனிநபர்கள் படைக்கிறார்கள் என்பது முதலாளித்துவ சிந்தனை போக்காகும். அத்தகைய முதலாளித்துவ கல்வி முறைதான் இந்திய விடுதலை உள்ளிட்ட எல்லா வரலாறுகளையும் யாரோ ஒருவர் சாதித்தது போல் கட்டமைத்துள்ளது. உண்மையில் வரலாற்றை மக்களே படைக்கிறார்கள். உலகில் நடைபெற்ற அத்துணை சமூக மாற்றங்களும் மக்களால் படைக்கப்பட்டதே அன்றி தனிநபர்களால் அல்ல என்பதை மக்கள் வரலாறு சொல்லுகிறது. மார்க்சியம் மக்களின் வரலாற்றைப் பேசுகிறது. பகத்சிங்கும் அதையே கூறுகிறார்.

முழுவதும் படிக்க …

ஒரு புரட்சிகரக் கட்சிக்கான உறுப்பினர்களின் தரம் !

கட்சி உறுப்பினர்களின் தரத்தைக் கணக்கில் கொள்ளாமல் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பை மட்டும்  கணக்கிட்டு, அதுதான் கட்சி விரிவாக்கம் என்று விளக்கிவிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் அரசியல், ஸ்தாபன உணர்வு மட்டத்தை உயர்த்துவதும், உறுப்பினர் தரத்தை உயர்த்துவதுமே முக்கியமான கடமையாகும்.

முழுவதும் படிக்க …

வரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம் !

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு என்பது வீரத்தாலும், தியாகத்தாலும் எழுதப்பட்ட ஒன்று. ஒன்றிய பாஜக அரசு மதவெறி நோக்கில் இந்திய அரசியல் வரலாற்றை திருத்தி எழுத முயலும் சூழலில் உண்மையான இந்திய வரலாற்றை மக்கள் முன் வைப்பது அவசியம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது. விடுதலை போராட்டக் காலத்தில் துவங்கி நவீன இந்தியாவை உருவாக்குவது வரை கம்யூனிஸ்டுகளின் பங்கு பாத்திரம் அளவற்றது. அந்த வகையில் இந்திய வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதி கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு.

முழுவதும் படிக்க …

இந்திய வரலாற்றில் இஸ்லாம்

இந்திய சமூகம் ஒருபோதும் மாறாத, தேக்கமான ஒரு சமூகமாக இருந்ததில்லை; இப்போதும் அப்படி இல்லை. 4,600 ஆண்டு காலத்தில், நம்பிக்கை மற்றும் சமூக  நடைமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று நாம் எப்படி இருக்கிறோம், நாம் எதை செயல்படுத்துகிறோம் என்பதெல்லாம் இந்த மாற்றங்களிலிருந்து உருவானதே ஆகும். ஆகவே, நமது நல்வாழ்வை உறுதி செய்யும் என்று நாம் நம்புகின்ற விதிகளுக்கு இணங்க விரும்பினால், ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, தொலைதூர கடந்த காலத்திலிருந்தோ அல்லது சமீபத்திய கடந்த காலத்திலிருந்தோ  சட்டபூர்வமான தன்மையை நாம் தேடிக் கொண்டிருக்க மாட்டோம்.

முழுவதும் படிக்க …

கலாச்சார அரங்கில் கம்யூனிஸ்டுகளின் கடமைகள் !

”கொள்கையின் கடமையும், அறிவியலின் நோக்கமும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் உண்மையான போராட்டத்திற்குச் செய்யப்படும் ஓர் உதவி என்று இங்கு வரையறுக்கப்படுவது உண்மையல்லவா?” என்று லெனின் கேட்டார். (லெனின் தொகுப்பு நூல்கள், தொகுதி 1, பக். 327-8) ‘கொள்கை’, ‘அறிவியல்’ ஆகிய இரண்டுமே கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வதன் ஒரு பகுதியாகவே அமைகின்றன.

முழுவதும் படிக்க …

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.


the point however is to change it …

Karl Marx, the Manifesto of the Communist Party


  1. மிகவும் பயனுள்ள ஆய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் வழங்கியுள்ள கட்டுரை எம் போன்ற ஊழியர்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது வரவேற்கிறோம். நன்றி


Marxist அமெரிக்கா அரசியல் இடதுசாரி இடது ஜனநாயக அணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியா உலகமயம் எங்கெல்ஸ் ஏகாதிபத்தியம் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கார்ல் மார்க்ஸ் கியூபா கொரோனா சமூகம் சாதி சிந்தன் சிபிஐ சிபிஐ(எம்) சீனா செய்திகள் சோசலிசம் ஜி.ராமகிருஷ்ணன் தமிழகம் தீர்மானம் நிகழ்வுகள் பாஜக பிரகாஷ் காரத் பிரபாத் பட்நாயக் பொருளாதாரம் மதச்சார்பின்மை மாநாடு மார்க்சியம் மார்க்சிஸ்ட் மார்க்சிஸ்ட் இதழ் மார்க்சிஸ்ட் கட்சி மார்க்ஸ் மூலதனம் ரஷ்யா லெனின் வரலாறு வர்க்கம் வெங்கடேஷ் ஆத்ரேயா